Skip to content

Thursday, September 26, 2013

2014 INDIA PM நரேந்திர மோடி @ திருச்சி

தமிழக மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு மீது மோடி தாக்கு



மத்திய அரசின் பலவீனத்தின் காரணமாக, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாக நீடிப்பதாக, பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.


திருச்சியில் இன்று நடந்த பாஜக மாநாட்டில் கலந்துகொண்டு அவர் பேசுகையில், குஜராத் மீனவர்கள் அவ்வப்போது பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு இன்னலுக்கு ஆளாகின்றனர். அதைப் போலவே, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


இந்த இரு மாநில மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன்பிடிக்கச் செல்கின்றனர். ஆனால், அவர்கள் அண்டை நாட்டுப் படையினரால் துன்புறுத்தப்படுகிறார்கள். இந்த அவல நிலைக்கு, மத்திய அரசின் பலவீனமே காரணம். நாட்டின் குடிமக்களுக்காக நடவடிக்கை எடுக்க வலுவற்ற மத்திய அரசை தமிழக மக்கள் தூக்கி எறிய வேண்டும்.


கடந்த கால வரலாற்றில், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் தமிழக மீனவர்கள் பெருமளவில் இலங்கைப் படையினரால் துன்பத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள்” என்றார் மோடி.




பிரதமருக்குக் கண்டனம்...


ஜம்முவில் இன்று காலை நிகழ்த்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலைச் சுட்டிக்காட்டிய மோடி, "சொந்த நாட்டு மீனவர்களை அண்டைநாட்டுப் படையினர் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லையில் தீவிரவாதிகளால் நம் படையினர் கொல்லப்படுகிறார்கள். அண்டை நாடுகளால், சொந்த நாட்டு மக்களுக்கு இவ்வாறாக மிகப் பெரிய அளவில் இன்னல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கிற வேளையில், அதே அண்டை நாட்டின் பிரதமருடன் வெளிநாட்டிலே உணவருந்திருக்கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?


பிரதமர் மன்மோகன் சிங் எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார். இந்த நாட்டின் கெளரவத்துக்கா? பாதுகாப்புக்கா? அல்லது வேறு நிர்பந்தங்களுக்காக பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்துவதற்கா? எதற்கு முன்னுரிமை கொடுக்க விரும்புகிறார்?" என்றவர், பாகிஸ்தான் பிரதமருடன் பேச்சு நடத்தக் கூடாது என வலியுறுத்தினார்.


மேலும், "நாட்டில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில், அந்த நாட்டின் அரசைத் தூக்கி எறிய வேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது" என்றார்.


பொருளாதார வீழ்ச்சி...


ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை மேற்கோள்காட்டி, நாட்டின் பொருளாதர நிலை குறித்துப் பேசியவர், "இந்த ஆட்சி தொடர்ந்து இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆட்சி இருக்குமானால், இளைஞர்கள் வேலைவாய்ப்பற்று வீதியிலே இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்று நம் நாட்டின் பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள்.


மத்திய அரசின் கொள்கை காரணமாக, தொழிலதிபர்கள், நிறுவனங்கள், இங்குள்ள பெல் நிறுவனம் என அனைத்துத் தரப்பும் பிரச்சினையில் இருக்கிறது. ஆனால், முதல் 50 இடங்களில் உள்ள பணக்காரர்களுக்கு மட்டுமே மத்திய அரசு சாதகமாக இருந்து வருகிறது. சிறுதொழில் செய்பவர்களுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது.


ஆதார் அட்டை



ஆதார் அட்டை விஷயத்தில் இந்த அரசு ஆனந்த கூத்தாடும் வேளையில், அந்த அட்டை கட்டாயம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆதார் அட்டைக்கு ஆன செலவையும், அதன் பின்னணியையும் பகிரங்கப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
ஆதார் அட்டை தொடர்பாக, உச்ச நீதிமன்றம் கேட்டுள்ள கேள்விகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரிடம் கேட்டிருக்கிறேன். ஆதார் அட்டை கொடுப்பதால், மாநிலத்தின் பாதுகாப்புக்கே பிரச்சினை என்று சொன்னேன். ஆனால், இப்போதுதான் உச்ச நீதிமன்றம் உத்தரவால் மத்திய அரசுக்கு புரிந்திருக்கிறது.



அரசியல் ஆதாயத்துக்காகவும் நாடகத்துக்காகவும் ஆதார் அட்டை வடிவில் நாட்டின் பல கோடி ரூபாய் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது" என்றார் மோடி.


மக்களைப் பிளவுபடுத்தும் காங்கிரஸ்



காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீட்டி, அதைச் செயல்படுத்தி வருகிறது. அக்கட்சியிடம் மக்களைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.



இந்த நாட்டில் உள்ள மக்கள் ஒருமைப்பாட்டுக்காக போராடிக்கொண்டிருக்கும் வேளையில், ஜம்மு காஷ்மீருக்கென தனிச் சட்டம் என்பது போன்ற மக்கள் விரோதச் செயல்களை காங்கிரஸ் செய்து வந்திருக்கிறது.



இதேபோல், நதிநீர் பிரச்சினையைக் கொண்டு மாநிலங்களுக்கு இடையில் மோதல் போக்கை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் இந்தப் பிரிவினை காங்கிரஸ், நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாதிரியான பிளவு மனப்பான்மை உள்ள காங்கிரஸ், நகர மக்களுக்கும் கிராம மக்களும் இடையே வேறுபாட்டை உண்டாக்கி இருக்கிறது" என்றார் மோடி.


thanx - the hindu


DINAMALAR  READERS  COMMENTS

1. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் என்று அதிகார பூர்வமாக அறிவிக்க பட்ட பிறகு, மோடி இன்று முதல் முறையாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய வருகிறார்..... 1. இதுவரை 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடுகடலில் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.. தொடர்ந்து அவர்களை சிங்கள கடற்படை தாக்குவதும் , படகு மற்றும் மீன்களை பிடுங்கி அவர்களை சிறையில் அடைப்பது பற்றியும், பாஜக அரசு அமைந்தால், சிங்கள அரசின் மீது என்ன நடவடிக்கை எடுப்போம் என்று பேசுவாரா ??? 2. தமிழ் ஈழம் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமெனில் தமிழ் ஈழமே தீர்வு என்றும் அதற்கு அம்மக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு, தமிழக சட்டமன்றத்தில் மசோதாவை முன்மொழிந்தது... இதை பற்றி பேசுவாரா ??? 3. மத்திய காங்கிரஸ் அரசால் தொடர்ந்து வஞ்சிகபட்டு , உரிமைகள் மறுக்கப்பட்டு , தேவைகள் அலைகழிக்க பட்டு, மாற்றான் தாய் மனபான்மையுடன் நடத்தப்படும் தமிழகத்தின் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றி பேசுவாரா ??? இன்று என்ன பேச போகிறார் மோடி ??? தமிழர்களின் நலன்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார் ??? காங்கிரஸ் , பாஜக இரண்டும் வேறு வேறு என்று எப்படி தமிழர்களுக்கு உணர்த்த போகிறார் ??? தமிழக முதல்வரின் நிர்வாக திறனை பற்றி என்ன சொல்ல போகிறார் ??? நமது கேள்விக்கான விடையை எதிர் நோக்கி... காத்திருப்போம்...


2. இந்தியாவில் உள்ள கட்சிகளில் ஜனநாயக முறையை ஓரளவுக்காவது பின்பற்றுவது BJP யும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தான்.மற்றவை எல்லாம் மன்னராட்சி,பரம்பரை ஆட்சியாக மாறி விட்டன. கட்சியிலுள்ளவர்களும் கொத்தடிமைகளாக தான் செயல் பட்டு கொண்டிருக்கின்றனர்..இவர்கள் மாற வேண்டும் அல்லது நாம் மாற்ற வேண்டும்.நாம் என்ன செய்கிறோம்.நம் கட்சி தலைவர் சொல்லி விட்டால் கண்ணை மூடி கொண்டு ஓடுகிறோம். அவர் எதை செய்தாலும் ஆதரித்து சப்பை கட்டு கட்டுகிறோம். தவறு யார் செய்தாலும் தவறு தான் என்ன செய்வது,எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று சமாதான படுத்தி கொள்வதிலும் பயனில்லை.இன்று BJP யும் MODI யும் நல்லது செய்வார்கள் என்று நம்புகிறோம்.அதற்கு காரணம் சென்ற முறை வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடந்த ஆட்சி மற்றும் ஐந்து மாநிலங்களில் இப்பொழுது அவர்கள் தலைமையில் நடை பெறும் ஆட்சி.எனவே இப்பொழுது பிஜேபி யை ஆதரிப்போம்.


//மதம்,மொழி,பாகுபாடின்றி மோடி செயல்பட்டால் //// < இந்த வரியே தவறு. என் இந்தக்கேள்வியை மற்ற கட்சிகளை பார்த்து கேட்கவில்லை? இட ஒதுக்கீட்டு கொள்கையில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு சாதகமாக ஆந்திராவில் செயல்பட்டபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது கையாலாகாத காங்கிரஸ் பற்றி என்ன சொல்லுவீர்கள். காஸ்மீர் அகதிகளாக டெல்லியில் வாழும் காஷ்மீரி பண்டிட்களுக்கு எதுவுமே செய்யாத, செய்ய நினைக்காத கையாலாகாத காங்கிரஸ் பற்றி பேசுவீர்களா? இவ்வளவுக்கும் நேரு குடும்பமும் காஷ்மீரி பண்டிட் குடும்பம்தான்....


இங்கே கருத்து சொல்லும் எல்லோருக்கும் America தமிழின் சார்பாக ஒரு வேண்டுகோள். மோடியுடன் கூட்டு வைக்க அம்மாவிடம் ஒரு விண்ணப்பம் செய்யவும். இதை Facebook அல்லது வேறு வழியில் ஒரு இயக்கமாக தொடங்கி 'ஜயா' விடம் சொல்லவும். நம்மால் நினைத்தால் முடியும். நாங்களும் எங்கள் தாய்நாட்டுக்கு திரும்பும் நேரம் வராதா என்ற எங்கள் கனவு நினைவாகும். இதை


நேற்றிலிருந்து தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பாரதிய ஜனதா/மோடி ஆதரவாளர்கள் அதிர்ப்தியில் உள்ளனர். அதற்கு காரணம் மோடிக்கு அட்வைஸ் கொடுத்த இல கணேசன் பற்றிய செய்தி. திமுவுடனும் கூட்டணிக்கு தயார் என்றால் பிஜேபிக்கு அழிவு காலம் தான். திமுகவுடன் பிஜேபி கூட்டணி என்று வந்துவிட்டால் பிஜேபியின் வாக்கு கண்டிப்பாக சரிவது நிச்சயம். மோடியால் திமுகவுக்கு சற்று வாக்குகள் கூடுமே தவிர, தற்போதுள்ள நிலையில் பிஜேபி கடும் நஷ்டத்தை சந்திக்கும். இல கணேசன் ராங் அட்வைஸ் கொடுக்க கூடாது. தற்போதுள்ள சூழ்நிலையில் மோடியா ஜெயாவா என்றால் திமுக மோடி அருகில் இருந்தால் மக்கள் ஜெயா பக்கம் தான் நிற்பார்கள்.


6  திரு மோடி, அவர்களே... தமிழுக்கும் தமிழர்க்கும் நன்மை செய்பவர். பிறப்பால் தமிழனாக இல்லாவிட்டாலும் தமிழர்கள் அவனை தமிழனாகவே ஏற்றுக்கொள்வார்கள். இன்று உங்களை விட்டால் எங்களுக்கு ஆதரவில்லை. தமிழர்கள் இந்தியாவிற்கு நன்றியுடன் இருப்பதை உணர்ந்து எங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு கொணர்ந்தால் பாஜக தமிழகத்தில் நிலைபெருவதொடு இந்தியாவின் வருங்கால வளர்ச்சியை கருதி உங்களயே பிரதமராக்க என்றென்றும் பாடுபடுவோம். சொன்னதை செய்வான் தமிழன் நம்புங்கள்.


கோயமுத்தூரு கிச்சு.....மோடிக்கு என்றுமே அதிமுக ஆதரவளிக்க தயாராய் உள்ளது. அது பிஜேபி எப்படி திமுகவிடம் நடந்து கொள்கிறது என்பதை பொறுத்து உள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பிஜேபி ஆதரவாளர்கள் முதலில் அம்மா சப்போர்ட்டர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிஜேபி எப்போது திமுக என்ற சாக்கடையில் சங்கமிக்கிறதோ அன்றே பிஜேபி ஆதரவாளர்கள் வாக்கு அம்மா கட்சிக்கு சென்றுவிடும். காரணம் திமுக மேல் அவ்வளவு வெறுப்பில் மக்கள் உள்ளனர். தொடர்ந்து 14 வருடமாக மத்திய மாநில அரசுகளில் பங்கேற்று திமுக சாதித்தது என்ன ??? அவுங்க சொத்து பட்டியல் ஏறி அடுத்தவன் குழிக்குள் போனது தான் மிச்சம். அரசியலில் யாராவது சந்நியாசி உண்டா....


பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரம் மோடி அவர்களே வருக வருக. கூட்டணி ஆட்சி அமைத்து வரலாறு காணாத வகையில் கூட்டுக்கொள்ளை அடித்த நிலையை தாங்கள் மாற்ற வேண்டும். இந்திய இறையான்மை கேலி கூத்து ஆக்கப்பட்டு இருப்பதை மாற்ற வேண்டும். ஓட்டுக்காக சிறுபான்மை சிறுபான்மை என்று சொல்லியே, சிறு பான்மை பெரும்பான்மை இரண்டையும் ஒரு சேர உருக்குலைத்த செயலை மாற்றி ஆக வேண்டும். இந்தியா நம் தாய் நாடு என்ற உணர்வே இல்லாத சில ஜென்மங்களை திருத்த வேண்டும். மொத்தத்தில் இன்று முதல் புதிய பாரதம் உதயமாக தங்கள் வருகை சிறப்பாக அமையட்டும். வாழ்க பாரதம்.


ஓட்டுக்காக சிறுபான்மை மக்களுக்கு எல்லாத்தையும் இந்த அரசு அள்ளி கொடுத்துவிட்ட மாதிரி எழுதி இருக்கிறார்.அரசு வேலை வாய்ப்பில் சிறுபான்மையினர் பாதிக்கு மேல் இருப்பார்களா? அல்லது நிறைய சலுகைகள் வழங்கப்பட்டு எல்லா சிறுபான்மயினரும் வசதி வாய்ப்போடு இருக்கிறார்களா? எந்த அர்த்தத்தில் சிறுபான்மையினரை வம்புக்கு இழுக்குறீர்கள். உண்மை நிலை என்னவென்றால் அரசு அமைத்த சச்சார் கமிட்டியின் அறிக்கைபடி பின்தங்கிய வகுப்பாரை விட சிறுபான்மையினர்தான் பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ளார்கள் என்று கூறுகிறது.குதிரை கீழே தள்ளியதும் இல்லாமல் குழியும் பறித்த கதையாக உள்ளது உங்கள் அறிக்கை..


10  மோடியை பற்றி தெரியாதவர்களுக்கு அல்லது தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு ........... எதுவெல்லாம் சாத்தியமோ அதுவெல்லாம் சாத்தியமல்ல என்று தொடர்ந்து இந்தியர்களாகிய நாம் நம்பவைக்கப்பட்டு வருகிறோம். அந்தப் பட்டியல் மிக நீளமானது. குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? முடியவே முடியாது நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதே அதை எப்படித் தீர்க்கமுடியும்? எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா? அது எப்படி முடியும்? 


மின்சாரம் என்ன மரத்திலா விளைகிறது? விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? சாத்தியமே இல்லை. நதிகளை இணைக்க முடியுமா? நதிகளையாவது, இணைக்கிறதாவது? ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா? அதெல்லாம் நடக்காது. ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா? வாய்ப்பே இல்லை. அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில்? கனவிலும் சாத்தியமில்லை. ஆனால், மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.



 ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில். புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர். மக்களைக் கொண்டே, அவர்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை அடையச் செய்யும் நரேந்திர மோடி அரசின் சூத்திரங்களை நாம் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. அவை, நமது நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவுவதோடு, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உலகில் ஜொலிப்பது சாத்தியம்தான் என நம்மை நம்ப வைக்கிறது.



 இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நாம் ஒவ்வொருவரும் இருக்கிறோம்...சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.



 நரேந்திர மோடி சொல்வதைப் போல், நமது கனவுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யட்டும். வாருங்கள், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்ப்போம். குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இது பத்திரிக்கையில் பணம் கொடுத்துப் போடப்பட்ட விளம்பரம் அல்ல. அரசியல்வாதிகளின் பிதற்றலும் அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.



 அதுவும் மும்முனை மின் இணைப்பு. 2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும்மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் இருக்கலாம் அல்லது எளிதில் மின் இணைப்பு வழங்க முடியாத பகுதியில் இருக்கலாம்....இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை.




 யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையே இல்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பிற தொழிலுக்கு விவசாயிகள் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத்தின் பரப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கும் தடையில்லாத, தரமான மின்சாரம்....இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடி கிறது?



 எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது? எப்படி அவர்களால் கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிக்க முடிகிறது? எப்படி அவர்களுக்கு, திடீரென்று குஜராத்தை முன்னேற்றியே தீரவேண்டும் என்கிற உறுதி வந்துள்ளது? எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது? ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது? எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது? எப்படி அவர்களுக்கு, அரசு வேலையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது? அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான். நரேந்திர மோடி குஜராத்தை ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் கம்பெனிபோல் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். 



இது அவரது நுணுக்கமான, திடமான திட்டமிடலைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்....பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும். ..........இது ஒரு சிறிய தொகுப்பு தான்...இதே போன்று தான் குஜராத்தின் முன்னேற்றத்திற்கான ஒவ்வொரு திட்டமும் செயல் படுத்தப்படுகிறது...


THANX - DINAMALAR

ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’-இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லீ

ஆர்யா-நயன்தாரா மீண்டும் இணைந்து நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமா கிறார் அட்லீ. இயக்குனர் ஷங்கரின் உதவியாளர். ஒரு படத்தை மக்கள் மத்தியில் எப்படிப் பிரபலப்படுத்தலாம் என்பதில் ‘நிபுணர்’ என்று பெயர் வாங்கியிருக்கும் இவரைச் சந்தித் தோம்.


இயக்குனர் ஷங்கரிடம் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எப்படி அமைந்தது?


"மதுரையில் பிறந்து சென்னையில் படித்து வளர்ந்தவன் நான். பள்ளியில் படிக்கும்போதே டான்ஸ், ஸ்கிட் என கல்சுரல்ஸ் ஆர்வம் அதிகம். சினிமா என்று பள்ளிப்பருவத்திலேயே முடிவு செய்துவிட்டதால் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். அப்போது ‘தனிமரம்’, ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ ஆகிய இரண்டு குறும்படங்களை தயாரித்து, இயக்கினேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே உதவி இயக்குனராக சேர வாய்ப்பு தேட ஆரம்பித்தேன். இதற்காக ஷங்கர் சாரை சந்தித்து என் குறும் படங்களைக் கொடுத்தேன். அந்தக் குறும்படங்களைப் பார்த்த அவர் உடனடியாக என்னை உதவி யாளனாகச் சேர்த்துக் கொண்டார். அவரிடம் எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் வேலை செய்தேன்."


ராஜா ராணி உங்கள் வாழ்க்கையில் நடந்த கதையா?


"என் வாழ்க்கையில் கொஞ்சம். எனது நண்பர்கள் வாழ்க்கையில் கொஞ்சம், என்னைச் சுற்றி இருப்ப வர்கள் வாழ்க்கையில் கொஞ்சம் என்று என் கண் முன்னால் நடந்த விஷயங்களைத்தான் கதையாக்கி னேன். உறவினர்கள், நண்பர்கள் என்று அம்மா எந்த கல்யாணத்துக்குப் போனாலும் நானும் தொற்றிக் கொள்வேன். அப்படி ஒரு கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. இது நடந்த சில மாதங்கள் கழித்து "டேய் அட்லீ… அந்தப் பொண்ணு டைவர்ஸ் வாங்கிட்டு வந்துட்டாளம்ப்பா!" என்று ஒருவர் வேதனையோடு சொன்னது என்னை ரொம்பவும் பாதித்தது. நம்மைச் சுத்தி பெரிய பிரச்சனையா ‘காதலும், மணவிலக்கும்’ இருக்கு! அப்படி இருக்கும்போது கதைய எதுக்கு வெளியே தேடணும்னு இதையே எடுத்துகிட்டேன். இதை பிரச்சனையா பேசாம பொழுது போக்கு திரைக் கதைக்குள்ள பிரச்சனைய மறை முகமா பேசியிருக்கேன். ராஜா ராணி ஒரு ‘எமோஷனல் காமெடி எண்டெர்டெயினர்’



ஆர்யா- நயன்தாராவுக்கு கல்யாணம் என்று பத்திரிகை அடித்து விளம்பரம் பண்ணினது சீட்டிங் இல்லையா?



"கண்டிப்பா இல்லை! என்னதான் நாம காவியம் மாதிரி ஒரு படம் எடுத்தாலும் அது மக்கள்கிட்ட போய் சேரலன்னா இயக்குனர் உட்பட ஒரு 200 பேரோட உழைப்பு வேஸ்ட்! தயாரிப்பாளர் பணம் வேஸ்ட்! இந்தப் படத்தோட முதல் காட்சியே கல்யாணத்துலதான் ஆரம்பிக்குது. அதனாலதான் இந்த விளம்பர உத்தியை கையில எடுத்தேன். நயன் தாரா ஆர்யா இரண்டு பேர்கிட்டயும் அனுமதி வாங்கிட்டுதான் பண்ணி னோம். இப்போ பாருங்க அதுவே பரபரப்பாயிடுச்சு."


நயன்தாராவுக்கு தனிப்பட்ட வாழ்க் கையில ஏற்பட்ட காதல் தோல்விகள் அவர் நடிப்புல எதிரொலிச்சுருக்கா?


"ஷாக்கடிக்கிற கேள்வி. இதுக்கு கண்டிப்பா நான் பதில் சொல்ல விரும்புறேன். நான் திட்டமிட்டு இந்தப் படதுக்கு அவங்கள தேர்வு செய்யல. நயன்தாராவிடம் தமிழ்பொண்ணுக்குரிய எல்லா ஹோம்லியும் அவங்ககிட்ட இருக்கு! எல்லாருக்குமான கதைய சொல்லும்போது நயன்தாராதான் சரின்னு முடிவுபண்ணினேன். ஆனா எதிர்பாராம அவங்க நடிச்ச பல சோகக் காட்சிகள்ல நிஜ வாழ்க்கையில் அவங்க சந்திச்ச காதல் தோல்வியோட வலியை கண் முன்னால பார்த்தேன். ஒரு பொண்ணோட மனக்காயம் நிஜமாவே பதிவாகியிருக்கிற காட்சிகளை ரசிகர்களும் பார்க்கப் போறங்க!"


thanx - the hindu

நிமிர்ந்து நில் - லில் ஹீரோவும் நானே வில்லனும் நானே - ஜெயம் ரவி பேட்டி @ த ஹிந்து தமிழ்

 

ஜெயம்' படத்தில் அப்பாவியாய் பார்த்த ரவியா இது..? முறுக்கேறிய கைகள், ஒட்டிய வயிறு, சற்றே கறுத்துப் போயிருக்கும் முகம் என அப்படியே வடசென்னைவாசியாகவே தோற்றமளிக்கிறார் ‘ஜெயம்' ரவி. பேச்சில் நிதானமும், நம்பிக்கையும் நிறைந்திருக்கிறது. இனி, 'ஜெயம்' ரவியுடனான நம் மழைநாள் சந்திப்பிலிருந்து.. 



‘ஜெயம்', ‘சந்தோஷ் சுப்பிரமணியம்' மாதிரி ரீமேக் படங்கள்ல நடிக்கிறது கியாரண்டி ஹிட். 'பேராண்மை', ‘பூலோகம்', ‘நிமிர்ந்து நில்' அப்படினு இப்ப நிறைய நேரடி தமிழ் படங்கள்ல தான் நடிக்கிறீங்க.. என்ன காரணம்?


 
முதல்ல ரீமேக் படங்கள் எல்லாம் கியாரண்டி ஹிட் அப்படினு யார் சார் சொன்னது?. 10 லட்ச ரூபாய் இருந்தா ஒரு படத்தை டப்பிங் பண்ணி ரிலீஸ் பண்ணலாம். ஆனா ரீமேக் உரிமை வாங்கி அதை தமிழுக்கு ஏற்றமாதிரி மாத்தி பண்றது சுலபமில்லை. அதுக்கும் நிறைய உழைப்பு தேவை. ரீமேக் படங்கள்ல நடிச்சுக்கிட்டே தான், ‘தாஸ்', ‘பேராண்மை','தாம் தூம்' படங்கள்ல நடிச்சேன். ரீமேக் படங்கள்ல நடிச்சா மக்களுக்கு உடனே தெரிய ஆரம்பிக்குது அவ்வளவு தான். 



'ஆதிபகவன்' படத்துக்காக நிறைய மெனக்கெட்டீங்க.. ஆனா படம் சரியா போகல.. வருத்தப்பட்டீங்களா?


 
ரொம்ப வருத்தப்பட்டேன். மத்த படங்களைவிட அந்த படத்துக்காக நான் உழைச்சது அதிகம். அதுக்காக படம் சரியா போகலயேனு வருத்தப்பட்டுகிட்டே இருந்தா, அடுத்தடுத்த படங்கள்ல நடிக்க முடியுமா?. ஒரு ஜெயிப்பு எல்லாத்தையும் மறக்க செய்யும். அதுக்காக தான் ஓட ஆரம்பிச்சுட்ட்டேன். 

 

'சாக்லேட் பாய்' ஜெயம் ரவி அதுக்குள்ள வில்லன் ஆகவேண்டிய அவசியம் என்ன?


 
உலகம் எங்கயோ போய்கிட்டு இருக்கு. நான் 25 வயசுல தான் ஐ-போன் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்ப 3 வயசு பசங்களே ஐ-போன்ல பிரிச்சு மேயறாங்க.. இப்ப இருக்க டிரெண்ட்டுக்கு ஏத்தமாதிரி எதாவது வித்தியாசமா ட்ரை பண்ணிக்கிட்டே இருக்கணும். 25 படங்கள்ல நடிச்சப்பறம் தான் வில்லனா நடிப்பேன்னு அடம்பிடிச்சுகிட்டு நின்னா, காணாம போயிருவோம். எந்த ஒரு வித்தியாசமான கேரக்டர் வந்தாலும் ஸ்கோர் பண்றது தான் இப்போதைக்கு பெஸ்ட்னு பட்டுது. நம்ம மனசு தானே சரியான வழிகாட்டி. வந்த வாய்ப்புகளை பயன்படுத்திகிட்டேன். 



‘பூலோகம்' படத்துல பாத்தீங்கன்னா பாக்ஸர், ‘நிமிர்ந்து நில்' படத்துல ரெண்டு ரோல்ல நடிக்கறேன். அதுல வில்லன் ரோல் ரொம்ப வித்தியாசமா இருக்கும். கண்டிப்பாக ரெண்டு படங்களையுமே மக்கள் ஏத்துக்குவாங்கனு நம்பறேன். 



உங்க வாரிசு ஆரவ் என்ன சொல்றார்? ஆரவ் கூட விளையாடற அளவுக்கு நேரம் இருக்கா? உங்க படங்களை பாக்க ஆரம்பிச்சாச்சா?


 
ஆரவ்வுக்குகு என்னோட டான்ஸ் தான் ரொம்ப பிடிக்கும். இப்போதைக்கு ‘பேராண்மை', ‘ஜெயம்' ரெண்டு படத்தையும் அடிக்கடி பாக்கறார். ‘ஆதிபகவன்' படத்துக்காக ரெண்டரை வருஷம் நடிச்சேன். அப்ப ஆரவ் கூட செலவழிக்க நிறைய நேரம் கிடைச்சுது. ஆரவ் கூட இருக்குறப்ப நேரம் போறதே தெரியாது. ஆரவ் வளர்ச்சியை ரொம்ப உற்சாகமாக பாத்துகிட்டு இருக்கேன். 



திரையுலக நண்பர்கள் கிட்ட ஜெயம் ரவிக்கு ரொம்ப நல்ல பேர்.. திரைக்கு வெளியே நண்பர்கள் இருக்காங்களா?


 
(சிரித்துக் கொண்டே..) என்ன இப்படி கேட்டுட்டீங்க.. என்னோட ஸ்கூல் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களே. இப்பக் கூட டெல்லியிலிருந்து என்னோட நண்பன் சென்னை வந்தான். உடனே நாங்க எல்லாம் சேர்ந்து ஒண்ணா சுத்து சுத்துனு சுத்தினோம். புருஷ், உப்பிலி, திலீப், சசி அப்படினு நாலு பேர் இருக்காங்க. என்னோட ப்ளஸ், மைனஸ் ரெண்டும் தெரிஞ்சவங்க. ரெண்டு பேர் சி.ஏ பண்ணிருக்காங்க, ரெண்டு பேர் ஐ.டில இருக்காங்க. இவங்களோட சேர்ந்து மாடி கிரிக்கெட், சென்னையை சுத்துறது அப்படினு ஜமாய் தான். 


 
'உனக்கும் எனக்கும்', 'சந்தோஷ் சுப்பிரமணியம்'னு படம் பண்ணிட்டிருந்த உங்கண்ணன் ராஜா, படார்னு விஜய் கூட கைகோத்து ‘வேலாயுதம்'னு மாஸ் கமர்ஷியல் பண்ண ஆரம்பிச்சுட்டாரு..மறுபடியும் படம் ரெண்டு பேரும் சேர்ந்து படம் ஆரம்பிக்கப் போறீங்க..


 
ஆமா. எப்போ படப்பிடிப்புனு ரொம்ப ஆவலா இருக்கேன். ஆனா, இந்த முறை ரீமேக் இல்லை. ரொம்ப நாளா எங்க அண்ணன் வைச்சிருந்த கதையை இப்போ எனக்காக இன்னும் கொஞ்சம் மெருக்கேத்தி இருக்கார். நயன்தாரா எனக்கு ஜோடியா நடிக்கிறாங்க. இது ‘வேலாயுதம்',‘சந்தோஷ் சுப்பிரமணியம்' ரெண்டும் சேர்ந்த ஒரு காக்டெய்ல் மாதிரி இருக்கும். 



வரவர உங்க படங்கள்ல ஹாலிவுட் வில்லன்களா நடிக்கிறாங்க.. 'பேராண்மை', இப்ப ‘பூலோகம்'னு ஹாலிவுட்டையே புரட்டி எடுக்கறீங்க?


 
எல்லாமே என்னோட இயக்குநர்கள் முடிவு தான். ‘பூலோகம்' படத்துக்காக நாதன் ஜோன்ஸ் கூட நடிச்சது ஒரு நல்ல அனுபவம். ஹாலிவுட் படங்கள்ல ஒரு நாளைக்கு 10 மணி நேரம் தான் வேலை செய்வாங்கன்னு நாதன் ஜோன்ஸ் சொன்னார். அவருக்கு இங்குள்ள WORKING STYLE ரொம்ப பிடிச்சிருக்கு. படத்தோட க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியை படமாக்கும்போது அவருக்கு கால்ல நல்லா அடிபட்டிருச்சு. அதக்கூட பெரிசா எடுத்துக்காம தொடர்ந்து நடிச்சு கொடுத்தார். இப்போதைக்கு நாதன் ஜோன்ஸ் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.! 


நன்றி - த ஹிந்து தமிழ்


ஆதார் அடையாள அட்டைக்கும் முதல் இரவுக்கும் என்னய்யா சம்பந்தம்?


உடைந்த பொம்மை 
குழந்தையாக்கிப்பார்க்கிறது
எல்லோரையும்..
Photo: உடைந்த பொம்மை 
குழந்தையாக்கிப்பார்க்கிறது
எல்லோரையும்..
1. மகாத்மா காந்தி செய்ததைத் தான் நாங்களும் செய்கிறோம்: சுப்ரமணியசுவாமி # டிரஸ்ஸிங் ல நான் காந்தி மாதிரின்னு டிஸ்கோ சாந்தி கூட சொல்லிக்கலாம்



------------------------



2 ரூ.3,000 கோடி ஊழல் : திமுக ஆட்சி மீது நாஞ்சில் சம்பத் திடுக் புகார்! # குறைத்து மதிப்பிட வேண்டாம்னு தமிழ் இனத்தலைவர் சொல்வார் பாருங்க



-------------------------


3 அமெரிக்காவுக்கு ஒபாமா. தமிழகத்துக்கு அம்மா.விவேக் காமெடி # பாங்காங் னா லேடி இந்தியான்னா மோடி .எதுகை மோனைன்னா எது வேணாலும் உளறலாம் போல



------------------------


4  சென்னை-சினிமா நூற்றாண்டு விழா- ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார் - # சி எம் உள்ளே வரும்போது இவரும் எழுந்து நிக்கனுமோ?


----------------------


5 தூக்குத் தண்டனையை எதிர்க்கிறேன்-மரணதண்டனையை வரவேற்கிறேன்-மு க #சிம்புவைக் காதலிக்கிறேன்.ஆனல் திருமணம் பத்தி இப்போ சொல்ல முடியாது -ஹன்சிகா



--------------------------




Photo: எழுதப்படிக்கத்தெரியாத அப்பாவும்
டிவித்திரைப்பார்த்து சரியாய் சொல்கிறார்
உத்தம புத்திரனென்ற படத்தின் பெயரை
தன் பிறப்புப்பற்றி குறைபட்டுக்கொள்ளும் அம்மாவும்
புதியாய் பிறக்கும் பூக்களை கண்டு கண்டு மகிழ்கிறாள்
இந்த ஆடையும் தனக்கு அழகாயில்லையென்று சொல்லும்போதெல்லாம்
கூடுதல் அழகாகிப்போகிறாள் தங்கை
இவ்வருட  தீபாவளிக்கு கேலக்ஸி டேப்பிற்காய்
தன் சேமிப்பைத்தொடங்கிவிட்டான் தம்பி
தன்னிடம் இல்லாதவொன்றில் 
இருக்குமொன்றைத் தேடத்தெரிந்தவர்
வாழ்வில் கிடைப்பதையெல்லாம்
கவிதையாக்குகிறார்கள்
முடியாதவர்கள் என்னைப்போன்று 
கவிதையில் செய்கிறார்கள்
ஆகமொத்தம்
வாழ்தல் இனிது
கவிதையைப்போல...


- ரேவா



6 வகுப்பு வாத வன்முறை பிரதமர் கவலை # இதுதான் சாக்குன்னு எல்லா ஸ்கூலையும் இடிச்சுடாதீங்க்.



-----------------------


7 திமுகவுடன் கூட்டணி கிடையாது-வை.கோ# மண்டபத்துக்குள்ளேயே விடலையாம்.பந்தில உக்கார மாட்டேன்னு அடம் பிடிச்சானாம்



------------------------


8 மது போதையில் பரிட்சை எழுத வந்த 20 மாணவர்கள் சஸ்பென்ட்# அரசுத்தேர்வில் அரசுக்கு வருமானத்தைப்பெருக்க அரசின் டாஸ்மாக் சரக்கை அடித்தது தவறா?்



--------------------------


9  ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை -் கோர்ட் # இந்தப்பொண்ணைத்தான் நீ மேரேஜ் பண்ணிக்கனும்.ஆனா முதல் இரவுக்குப்போகனும்னு கட்டாயம் இல்லை



-------------------------


10  அமெரிக்காவின் வளர்ச்சிக்கு ஒபாமா தமிழகத்திற்கு மாண்புமிகு அம்மா-விவேக்# 1000 பெரியார் வந்தாலும் தமிழனைத்திருத்தவே முடியாது்



---------------------------




Photo: இதுவே இறுதியாக இருக்கட்டுமென
எண்ணிக்கொள்கிறேன்
எண்ணிக்கை பிடித்து...

மெளனம் தான் என் வீடு
வார்த்தைகளின் வழி
நீ வந்து சேரும்
வழி
கொஞ்சம் தூரம் தான்.

சொற்களற்ற இப்பெரு நிலம்
உண்ட களைப்பை உனக்கு கொடுக்கலாம்
அல்லது
திரும்பிப்போதலில் சாத்தியத்தை விதைக்கலாம்
எதையாயினும்
எடுத்துசெல்

எதிர்ப்புக்காட்டாமலிருக்கத்தான்
எழுப்பிவைத்திருக்கிறேன்
இவ்வீட்டை
போகும்வழியில் எங்கேனும்
எதிர்படலாம் புதையுண்ட
என் சொற்கள்
அவற்றிடம் சொல்லிவிடு
தனித்திருக்கவே விரும்புகிறேன்
நான்....


-ரேவா



11  நூலகம் அருகே டாஸ்மாக்கடையை அகற்ற 5ம்வகுப்பு மாணவி மனு# 5ங்கிளாஸ் படிக்கும் மாணவிக்குத்தெரிஞ்சதுகூட ஆட்சியில் இருப்பவர்க்கு தெரியல ்



---------------------------


12  மலையாளத்தில் ரீமேக் ஆகுது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...! # டைட்டில் என்ன? நடுவுல கொஞ்ச ஓரத்துல மிஞ்ச?



--------------------------


13  இந்திய சினிமா 100 நிறைவு விழா : ஜெயலலிதா,க்கு விருது!! # நமக்கு நாமே திட்டம் மாதிரி



------------------------


14  மீண்டும் ஹரியுடன் இணைகிறாராம் சீயான் விக்ரம்! # சிங்கம் 2 வுக்குப்பின் சாமி 2 வா ? ரைட்டு






----------------------------






15  ராம்லீலா படத்தில் மத உணர்வுகளை காயப்படுத்துவது போன்ற காட்சிகள் இருப்பதால்  தீபிகா படுகோனே மீது வழக்கு # மலையாளத்தில் ராமரின் லீலைகள்?






-------------------------------



Photo: மழை தன் கணக்கை 
முட்டையிலிருந்தே ஆரம்பிக்கிறது.....





16 சேரன் ஹீரோவா நடிக்கிறது ரொம்ப ‘கடி’யா இருக்கு…” : டைரக்டர் வசந்தபாலன்  # ஹீரோயின் உதட்டை கடிச்சு வெச்சுட்டாரா? அவர் என்ன கமலா?


-----------------------


17 ஒரு வார அரசுமுறைப் பயணமாக  பிரதமர் இன்று அமெரிக்கா பயணம்: # ஜனாதிபதிக்கு அடுத்து  ஊரான் ஊட்டுக்காசில் ஊர் சுற்றும் பதவி பிரதமருக்குத்தான்



-----------------------------


18 சுந்தர் சி இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடிக்கும் ”அரண்மனை” யில் ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா # பட ஷூட்டிங்க் ஸ்பாட்டுக்கு குஷ்பூ வருவாரா?




------------------------------


19 மோடி மேடைக்கு வரும்போது இன்ட்ரோ சாங்க் = நான் ஆளான தாமரை .ரொம்ப நாளாகத்தூங்கலை.போட்டிக்கு கூட யாரும் இல்லை.அத்வானி பற்றி பயமும் இல்ல



=======================



20 பிஜேபி க்கு இத்தனை கூட்டம் கூடுவது புரட்சித்தலைவியால ஜீரணிக்க முடியாதே.என்ன செய்யப்போறாரோ? # திருச்சி மோடி வருகை



==============================

Wednesday, September 25, 2013

GRAND MASTI - சினிமா விமர்சனம் ( ஆண்களுக்கான அஜால் குஜால் சினிமா) 42 +

தினமலர் விமர்சனம்

இந்த வருடத்தின் மஹா மட்டமான படங்களில் முக்கிய அங்கம் வகிக்கும் படம் தான் கிராண்ட் மஸ்தி. பெண்ணின் தேகத்தை கருவாக்கி, அதற்கு நகைச்சுவை எனும் போலி முகமூடியை அரிதாரமாக்கி, திரையரங்கை கழிப்பறையாய் மாற்றியுள்ள ஒரு குப்பை தான் இப்படம்.

மூன்று பால்ய (பாலிய) சிநேகிதர்கள் ரிதேஷ் தேஷ்முக், விவேக் ஓப்ராய், அஃப்தப் சிவதசனி மூவருக்கும் கலவியன்றி வேறெதிலும் பற்று கிடையாது. திருமணமான இம்மூவருக்கும் தாம்பத்திய வாழ்வில் திருப்தி அடையாமல் போகிறது. காலேஜ் ரீயூனியனுக்காக கூடும் இம்மூவர் அங்கு என்ன கசமுசா செய்கிறார்கள்?? என்பதுதான் மீதிக் கதை.

நாகரீகம் கருதி இக்கதை பற்றி இவ்வளவு குறிப்பை மட்டுமே குறிப்பிடுகிறோம். இதற்கு மேல் விவாதித்தால் மூன்றாம் தர பிட்டுப்படக் கதையை விவரிப்பது போல் தோன்றும்.  இப்படத்தை எப்படி மெயின் ஸ்ட்ரீம் சினிமா வகையில் ஒப்புக் கொண்டார்களோ தெரியவில்லை. அடல்ட்ஸ் காமெடி என்ற பெயரில் அபத்தக் காமெடி. சகிக்க முடியாத அகோரக் கற்பனை திரைக்கதையில்.


விவேக் ஓப்ராய் போன்ற நடிகர் ஏன் இதைப் போன்ற படத்தை ஏற்றுக் கொண்டு நடித்தார் என்று தெரியவில்லை. சாத்தியா, ரத்தச் சரித்திரம், கம்பெனி, ஓம்காரா இப்படி பல படங்களில் ரசிக்க வைத்த விவேக் ஓப்ராயின் நடிப்பு இந்த ஒரே படத்தின் மூலம் சூன்யம் ஆகியுள்ளது.

சான்ஸ் கிடைக்கவில்லை என்பதற்காக இப்படியா!!!  ரிதேஷ், அஃப்தப், விவேக் ஓப்ராய் மூவரின் நடிப்பு, நடிப்பென்ற வார்த்தைக்கே இழிபாடு செய்துள்ளது. ஏதோ மூன்றாம் தர படத்து கதாபாத்திரம் போல் ஹான் ஹும் என்று சிணுங்கிக் கொண்டே இருக்கிறார்கள். நெருடல்!!

நீலப்படம் எடுப்பது சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ள நம் நாட்டில் மெயின் ஸ்ட்ரீம் சினிமா என்ற போலி முகமூடி அணிந்து சினிமாவை கற்பழித்துள்ளனர். இந்தப் படம் வேறு 2100 திரையரங்குகளில் வெளிவந்து சக்கை போடு போடுவது பெரும் பீதியை வரவழைக்கிறது.


மொத்தத்தில்: ‘கிராண்டு மஸ்தி’ - ‘நாற்றம்’ - இழிபாடுள்ள ஒரு படைப்பு.
நன்றி - தினமலர்
  • நடிகர் : விவேக் ஓபுராய், ரிதேஷ் தேஷ்முக், அப்தப் சிவதசனி
  • நடிகை : ..
  • இயக்குனர் :இந்திர குமார்
 

மோடி திருச்சி வருகை: போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருச்சி மாநகர்- மக்கள் கருத்து

 
திருச்சி: நாளை நடக்க உள்ள, பா.ஜ.,வின், இளந்தாமரை மாநாட்டுக்கு, அக்கட்சியின், பிரதமர் வேட்பாளர் மோடி வருவதால், பலத்த பாதுகாப்பு வளையத்தில், திருச்சி மாநகரம் கொண்டு வரப்பட்டுள்ளது; மாநாடு நடக்கும் மைதானத்தை, குஜராத் உளவுத்துறை போலீசாரும் ஆய்வு செய்தனர்.

தமிழக, பா.ஜ., இளைஞரணி சார்பில், இளந்தாமரை மாநாடு, நாளை திருச்சி, "ஜி' கார்னர் மைதானத்தில் நடக்கிறது. மாநாட்டில், பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பங்கேற்கிறார். பா.ஜ., தேசிய தலைவர் ராஜ்நாத் சிங், இளைஞரணி தேசிய தலைவர் அனுராக்சிங் தாக்குர், தேசிய, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்கின்றனர். நேற்று காலை முதல், மாநாடு நடக்கும் மைதானம் முழுவதும், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநாட்டு திடல் உள்ளே செல்லும் அனைவரும், போலீசாரின் அனுமதிக்கு பின், அனுப்பப்படுகின்றனர். மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று காலை,11:30 மணிக்கு, குஜராத் மாநில டி.ஐ.ஜி., ராவ், மைதானத்தில் ஆய்வு நடத்தினார். மதியம், தமிழக போலீசார், மாநாட்டு மைதானத்தை பார்வையிட்டு, பாதுகாப்பு ஏற்பாடு குறித்து, ஆலோசனை நடத்தினர். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் தலைமையில், ஐந்து டி.ஐ.ஜி.,க்கள், 12 எஸ்.பி.,க்கள், ஏ.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள் என, மொத்தம், 4,500 போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். விமான நிலையம் முதல், மாநாடு மைதானம் வரை, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சுழலும் பலூன் கேமரா வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் முதல், மேடை வரை, 15க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் குழுக்கள், 24 மணி நேரமும், மோப்ப நாய்களுடன், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மோடி வருகையை ஒட்டி, திருச்சி மாநகரம், போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.க்
மோடிக்கு இல.கணேசன் யோசனை:

இளந்தாமரை மாநாட்டில், தி.மு.க.,வை விமர்சிக்க வேண்டாம்' என, மோடிக்கு, தமிழக பா.ஜ., மூத்த தலைவர் இல.கணேசன் யோசனை தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, திருச்சியில், வரும், 26ம் தேதி நடக்கும், இளந்தாமரை மாநாட்டிற்கு வருகிறார். அந்த மாநாட்டில், என்ன பேச வேண்டும் என்பது குறித்து,தமிழக பா.ஜ.,வின் முன்னணி தலைவர்களிடம், மோடி கருத்து கேட்டதாக கூறப்படுகிறது.இதற்கு, கட்சியின் மூத்த தலைவரான இல.கணேசன், தி.மு.க.,விற்கு எதிரான கருத்துகளை, கூட்டத்தில் முன்வைக்க வேண்டாம் என, மோடியிடம் கூறியிருப்பதாக, தகவல்வெளியாகி உள்ளது.

மேலும், ‘நம்மோடு கொள்கை ரீதியாக ஒத்துப் போனாலும், நடைமுறையில், அ.தி.மு.க., கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை. அதே நேரம், காங்கிரசுடன், கடைசி நேரத்தில் கூட, தி.மு.க.,விற்கு நெருடல் ஏ ற்படலாம்.அதனால், கடைசி நேரத்தில் கூட, நம்முடன், கூட்டணிக்கு வரலாம்.‘எனவே, முன்கூட்டியே, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்து, அந்த வாய்ப்பை கெடுக்க வேண்டாம்’ என, இல.கணேசன் யோசனை கூறியிருக்கிறார்.

நன்றி - தினமலர்


மக்கள் கருத்து 


1. அணைத்து மதத்தினரும் நம் இந்திய நாட்டுக்காக இம்முறை மோடியை ஆதரிக்க வேண்டும் . காங்கிரஸ் ஆட்சியில் நடுத்தர மக்களும் ஏழை மக்களும் பட்ட துன்பத்தை நினைவில் வைத்து இந்த ஒரு முறை மோடிக்கு வாய்ப்பளித்து பார்க்க வேண்டும் . 



2 அ.தி.மு.க வினர் மனதை மாற்றிக்கொண்டு, பா.ஜ வினருடன் கூட்டணி அமைக்க வேண்டும். வாக்குகள் சிதறினால், அது தானைய தலைவருக்கு தான் சாதகமாக அமையும். அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்காமல், கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும். 


3. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் மாலத்தீவு, மியான்மர் போன்ற குட்டி நாடெல்லாம் நம் நாட்டிடம் சவால் விடுகின்றன பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நாம் இழந்த அப்பாவி மக்கள் எத்தனை ஆயிரம் பேர் .?? தினந்தோறும் நடக்கும் துப்பாக்கி சண்டையில் நம் ராணுவ வீரகளை இழந்து கொண்டிருக்கிறோம் . ஆனால் நம் ராணுவ வீரர்களோ எங்களை இழிவாக பேசினாலும் பரவாயில்லை அரசியல் தலைவர்களையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பது எங்கள் கடமை என்று நமக்காக உயிர் தியாகம் செய்கிறார்கள் .ஆளும் கட்சியோ பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தவும் கிரிக்கெட் போட்டியை மீண்டும் தொடரவும் முயற்சி செய்து வருகிறார்கள்



 . மறு பக்கம் ஏகே அந்தோணி பாக் ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் என்று வக்காலத்து வாங்கி பேசுகிறார் .இது போன்று இன்னும் பல சம்பவங்கள் . இதை மனதில் வைத்து மீண்டும் ஒரு மும்பை தாக்குதல் நடக்காமல் இருக்க சீன ஆக்கிரமிப்பு, பாக் அத்துமீறல் போன்ற நிகழ்வுகளை தடுக்க ஒரே தீர்வு மோடி மட்டும் தான் . நம் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தெரியாத காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி மோடிக்கு மகுடம் சூட்டுவோம் .வாழ்க மோடி வாழ்க இந்தியா 


4  குஜராத்தை விட வளர்ந்த மாநிலம் மகாராஷ்டிரா ....இப்போ ஒரு புள்ளி விவரங்கள் வந்துள்ளது ...நாட்டின் GDP வளர்ச்சியில் குஜராத் மத்யப்ரதேசை கோவா சேர்த்து அவைகளின் பங்கு 27 சதவிகிதம் என்றால் காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிரா ,ஆந்திரா , ராஜஸ்தான் இவைகளின் பங்களிப்பு 37 சதவிகிதம் ...... 


5 பழைய பாஜக வை பற்றி சிந்தித்தால் நமக்கு வெறுப்பு தான் வரும் மோடி என்று நினைத்துப் பாருங்கள் குஜராத்தை போல் நம் இந்திய திருநாட்டை முன்னேற்றுவார் என்று நம்புவோம். 



6 ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பதில் கில்லாடிகள் அம்மாவும் , மோடியும்.....நியா நானா போட்டி வேறு....திமுக வுடன் என்ன திக வுடன் கூட கூட்டு வைப்பார்கள் ...


காங்கிரசில் உள்ளவர்களை போன்றே பா ஜ கவிலும் இல கணேசன் போன்றோர் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் போன்றோரால்தான் தேசீய கட்சிகள் தமிழகத்தில் வளர்ச்சி காணவே இல்லை. இல கணேசன் போன்றோரின் பேச்சை கேட்டு பா ஜ க திமுகவோடு கூட்டணி சேரவே சேராது..அப்படி ஓர் வேலை சேருமே என்றால் அதன் வளர்ச்சி அதோகதிதான். திமுகவுக்கு வெட்கமே இருக்காது..



எப்படியாவது கூட்டணிக்கு தவமிருக்கும்..அப்போது சிறுபான்மையினர் பற்றியெல்லாம் தலீவர் கவலைப்படவே மாட்டார் என்பதும் தமிழக மக்களுக்கு தெரியும். இல கணேசனின் இந்த சேவைக்கு நன்கு பாராட்டப்பட்டிருப்பார் கருணா அவர்களால். திமுகவோடு சேருகின்ற பட்சத்தில் பா ஜ க தொண்டர்களே சொந்த கட்சிக்கு எதிராக களமிறங்குவர் என்பதும் உறுதிதான்..இல கணேசன் தனது பங்கிற்கு செவ்வனவே கூவிவிட்டார்..கேட்பதற்கு மட்டும்தான் ஆளில்லை..பசு பசுவாக இருகும்பட்ச்சத்தில்தான் பசுவுக்கு மரியாதை..பன்றியோடு சேர்ந்து திரியும்போது அதன் மரியாதை..? இதற்கும் மேல் சொல்ல ஏதுமில்லை..வீண் முயற்சியில் தமிழகத்தில் அம்மா கட்சியை தவிர பிற கட்சிகளின் நிலை பரிதாபத்திற்கு உரியதே.. 


 8 பா ஜ க தேசியக் கட்சி தி மு க தேசிய விரோத கட்சி .மத்திய பதவியில் இருக்கும் வரைதான் தேசியம் விலகிவிட்டால் பிரிவினைவாதம் .பா ஜ க மீதும் அதன் தலைவர்கள் மீதும் எப்போதுமே நல்ல அபிப்பிராயமில்லாத கட்சி தி மு க . அப்படி இருக்க எல் ஜி இப்படி அபிப்பிராயப் படுவது அவ்வளவு நன்றாக இல்லை. 



9 திரு.இல.கணேசன் தமிழ் நாட்டில் பா.ஜ.க.வின் திரு மோடி அலையை குழிதோண்டி புதைத்து விடுவார் போல இருக்கிறது. தமிழ் நாட்டில் கருணாவுடன் கூட்டணிவைதால் அது தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் இந்திய முழுவதும் இவர்களின் ஒட்டு சதவிகிதம் சரிந்து விடும். இந்திய முழுவதும் 2G கொள்ளைக்கு கரணம் யார் என்று அனைவருக்கும் தெறியும். தமிழ் நாட்டில் ம.தி.மு.க., தே.மு.தி.க.மற்றும் பா.ஜ.க இவர்களின் கூட்டணி அமைதல் குறைந்தது 10 இடமாவது கிடைக்கும். கருணாவுடன் கூட்டணி வைத்தாள் இவர்கள் போண்டி தான் 


10 இந்துக்கள் ,முஸ்லிம்கள் ஏழை ,பணக்காரன் என்று ஜாதி மதம் பார்க்காமல் நம் அனைவரையும் காக்கும் ராணுவ வீரர்களுக்கே நம் நாட்டில் மரியாதை இல்லை எல்லையில் நம்மை காத்துக் கொண்டிருக்கும் வீரர்களை கேலி செய்யும் ஒரு ஆட்சி காங்கிரஸ் ஆட்சி தான் .காஷ்மீர் எல்லையில் சோனியா ராகுல் ஏகே அந்தோணியை அனுப்பினால் நம் வீரர்களின் நிலைமை என்னவென்று புரியும் . 


 11 இல கணேசன் ,எப்போதும் மு க ஆள்.அதனால் ,சென்ற முறை ,விருது நஹ்ரில்,வை கோ விற்கு ,எதிராக ,நடிகர் கார்த்திக் களம் இறக்கி,15,000 ஓட்டுகளை,பிரித்தார் ,மு க ஆலோசனையின் பேரில்.வை கோ தோற்ற வித்தியாசம் ,இந்த 15,000 ஓட்டுக்களே.


திருச்சி: பா.ஜ., சார்பில் திருச்சியில் நடக்கும், "இளந்தாமரை' மாநாட்டில், குண்டு துளைக்காத மேடையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி உரையாற்றுகிறார். இதற்காக மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.



தமிழக பா.ஜ., இளைஞரணி சார்பில், "இளந்தாமரை' மாநாடு, திருச்சி பொன்மலை, "ஜி' கார்னர் மைதானத்தில், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. மாநாட்டில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பேசுகிறார். மாநாட்டில், கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர்.


அத்வானி வருகை?

திருச்சி மாநாட்டுக்கு, கட்சியின் முக்கிய தலைவர் அத்வானியை அழைத்து வரவும், அக்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால், மோடிக்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநகர போலீசாரால், நான்கு சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநாட்டை மக்கள் மாநாடாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அக்கட்சியினர், மாநாட்டில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் வினியோகிக்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். ரயில்வே மைதானத்தில் மேடை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.


புல்லட் புரூப் கார்:

மாநாட்டுக்காக தனி விமானத்தில் திருச்சி வரும் மோடி, விமான நிலையத்திலிருந்து கார் மூலம் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அவர் பயணம் செய்ய, "புல்லட் புரூப்' கார் வரவழைக்கப்பட உள்ளது. அதேபோல, மேடையில் ஒருவர் மட்டும் நின்று பேசும் வகையில், குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. "புல்லட் புரூப் கார், மேடை ஆகியவை, 24ம் தேதி டில்லியிலிருந்து திருச்சிக்கு கொண்டு வரப்படும்' என, பாதுகாப்பு அதிகாரிகள் கூறினர்.

Tuesday, September 24, 2013

கே ஆர் விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யார் வெச்சிருக்காங்க?

இந்த மலையோட அமைப்பு எப்படி தெரியுது???? ,,, ஆச்சரியம் தான் 
Embedded image permalink
1.  கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டி கும்பல்: கமிஷனரிடம் நடிகை சிந்து புகார்! # சிந்து விடம் லந்து பண்ணிய கந்து பந்து க்கள்.எப்டி டைட்டில்?




--------------------------------




2. பிலிம் இன்ஸ்டிடியூட் எக்சாமில் மிஸ் - சித்தி க்ரியேட்டிவ் ஹெட் யாரு?

லொள் மாணவன் - ராதிகா எம் ஆர் ராதா பிரதாப் ரிச்சர்டு கேப்டன் சரத்




-----------------------------




3. சவுந்தர்யா ரஜினி அஸ்வின் பாணியில் நயன் ஒரு படம் இயக்கினால் = நயன் தாரா சிம்பு பிரபுதேவா ஆர்யா னு போட்டுக்குவாரா?



---------------------------


4. டிஜிட்டலில் ‘நினைத்தாலே இனிக்கும்’ ரீ- ரிலீஸ்.# படத்தின் உயிர்நாடியே ரஜினி சிகரெட் போட்டிதான்.ராம்தாஸ் பிரச்சனை பண்ணாம இருக்கனும்


-------------------------



5.துபாய் பல் டாக்டரை மணந்தார் நடிகர் பரத்... செப் 14-ல் சென்னையில் வரவேற்பு! # சீமான் ,பரத் னு ஆளாளுக்கு முதல் இரவு கொண்டாடறாங்க.ஹூம்


----------------------------




6. காங்கிரஸ் அரசின் திட்டங்களை பார்த்து வெளிநாட்டவர் அதிசயிக்கின்றனர்: ராகுல் காந்தி: # படு கேவலமா சிரிக்கறாங்கனு சொல்ல முடியுமா?


------------------------




7  திரிபுரா மாநிலத்தின் cm மானிக் சர்கார்தான் நாட்டின் மிகவும் ஏழையான CM # பணக்கார முன்னாள் முதல்வர் நம்ம தமிழ் இனத்தலைவர் தான்



------------------------------

8.  என்னை எல்லாரும் சின்ன சினேகான்னு சொல்றது சந்தோஷமாத்தான் இருக்கு - கிருஷ்ணவேணி பஞ்சாலை நந்தனா #  பிரசன்னா  அப்டி சொல்லாம  இருந்தா சரி




-------------------------


9  தீபாவளி ரேசில்  விஷால் -ன்  பாண்டியநாடு...!! #  போண்டி யாகாம இருந்தா சரி 


-------------------------


10. ரயில்வேயில் ரூ.17 ,000 கோடி ஊழல் :சி.ஏ.ஜி., அறிக்கையால் அம்பலம்   # அடடா, நாம மிஸ் பண்ணிட்டமே? - கலைஞர் மைண்ட் வாய்ஸ் 


-----------------



11 வறுமையில் வாடும் தன் ஆசிரியைக்கு உதவிய ரஜினி!! # வெரிகுட் , கோச்சடையான்  டீசர் நல்லாலைன்னாலும், டீச்சர் இப்போ நல்லாருக்காங்களே?



-------------------------

12  வில்லா -ன்னா தனி வீடு என அர்த்தம் - பீட்சா 2  தயாரிப்பாளர் # அப்போ டைட்டில் தனி வீடுன்னே வெச்சிருக்கலாமே? எதுக்கு வில்லா? அம்பா?ன்ட்டு?



-----------------------


13   கில்மா  தொழில் ல கைதாகும் பெண்களை தினத்தந்தில  அழகின்னு சொன்னா  கூட போற ஆண்கள் அழகன் தானே? ஏன் அப்டி சொல்றதில்லை?



----------------------



14  காதல் தோல்வி நடிகைகளின் அட்வைஸ் கேட்டு கடுப்பாகிய ஹன்சிகா! -செய்தி # நீங்க பேசாம மன்மதன் படம் பாருங்க





-----------------------


15  லதா ரஜினி - ஏங்க , ட்ரெய்லர்ல யார் யாரோ வர்றாங்க , உங்களை மட்டும் காணோமே? # கோச்சடையான்



-----------------------


16  ராணா, சுல்தான் த வாரியர், கோச்சடையான் மூணும் ஒண்ணு , இதை அறியாதவன் வாயில டீக்கடை பன்னு



--------------------------------


17. கடந்த 2 ஆண்டுகாலமாக தமிழ் சினிமா சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது- ஜெ # வாங்கம்மா , வணக்கங்கம்மா, என் புலம்பலைக்கேளுங்கம்மா -விஜய்


-------------------------


18. 63 வயசுக்கு ஜாலியாக இருக்கிறர் நரேந்திர மோடி- செய்தி # யாருடன் ?



---------------------


19 மக்களை நல்வழிப்படுத்துவதாகவே சினிமா இருக்க வேண்டும்..ஜெ # ஆமா மேடம், சினிமாக்காரங்கதான் நாடாளறாங்க ,அதுக்குக்கூட பரிகாரம் வேணும்


------------------------


20 சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்திருந்த ஒரே நடிகை கே. ஆர். விஜயா # விஜயா வெச்சிருந்த ஹெலிகாப்டரை இப்போ யாரு வெச்சிருக்கா?



-------------------------------