Tuesday, September 24, 2013

NORTH 24 KAATHAM - சினிமா விமர்சனம்

தினமலர் விமர்சனம்

ஆமென் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு பஹாத் பாசில், சுப்ரமணியபுரம் சுவாதியுடன் இணைந்துள்ள படம் தான் நார்த் 24 காதம்.

கதைச்சுருக்கம் - ஹரி கிருஷ்ணன் (பஹாத் பாசில்) மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஐ.டி.என்ஜினியர். ரிசர்வ்டாகவும், சில தருணங்களில் மேனியாக் போலவும் நடந்துகொள்ளும் இவர் தன்னுடன் வேலை பார்க்கும் சக ஊழியர்களால் வெறுக்கப்படுகிறார். வேலையை ரிசைன் செய்யலாம் என முடிவெடுக்கும் பஹாத், இவரின் வெளியேற்றம் பலருக்கு சந்தோஷம் தருவதை உணர்ந்து முடிவினை மாற்றிக் கொள்கிறார். எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு மீட்டிங்கிற்காக ரயிலில் செல்கிறார்.


ரயிலில் உடன் பயணித்த வயதான வாத்தியார் (நெடுமுடி வேணு (இந்தியனில் போலீஸ் கிருஷ்ணசாமியாக, அந்நியனில் விக்ரமின் தந்தையாக வந்திருப்பாரே!!) கை பேசியில் ஒரு செய்தியை கேட்டு அதிர்ச்சியடைகிறார். தன் மனைவி சீரியஸாக இருக்கும் செய்தியை அறிந்த வேணு அடுத்த ஸ்டேஷனில் இறங்கி திரும்பிப் போக முடிவெடுக்கிறார்.


அர்த்த நிசியில் இவரின் தள்ளாடிய நிலையை பார்த்து இவருக்கு உதவுகிறார் சுப்ரமணியபுரம் சுவாதி. இருவரும் அடுத்த ஸ்டேஷனில் இறங்குகின்றனர். அவசரத்தில் நெடுமுடி வேணு கைப்பேசியை தவறவிடுகிறார். அதில் ஒரு ரிங்டோன் அடிக்க, பஹாத் பாசில் போனை எடுக்கிறார். அப்போது அதில் வந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடையும் பஹாத் ரயிலிலிருந்து இறங்கி நெடுமுடி வேணுவிற்கு உதவ முன்வருகிறார். மூவரும் இணைந்து கோழிக்கோடு செல்ல முடிவெடுக்கின்றனர். இப்பயணத்தில் வரும் நிகழ்வுகள் பஹாத் பாசிலின் நடவடிக்கையை மாற்றியமைப்பது தான் மீதிக் கதை.

கதை மிகவும் சாதாரண ரகம் தான். கிளைமாக்ஸ் கூட இப்படித்தான் நடக்கும் என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். ஆனால், இப்படம் நம்மைக் கவர்வது கதையால் அல்ல, அதைக் கொண்டு சென்ற விதத்தால் தான். டூயட்டிற்கென்று தனியாக பாடல் வைக்கப்படவில்லை. படத்தில் கதாபாத்திரங்களோடு இணைந்து பின்னணி இசையும் பாடல்களும் பிரயாணித்துக் கொண்டே இருந்தது.

ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் மிக நேர்த்தியாக கையாளப்பட்ட விதம், படத்தை ஒரு ஆல்பம் போல் தோன்ற வைத்துள்ளது. முதல் பாதி வரை ஸ்வாரஸ்யமாக செல்லும் திரைக்கதை இரண்டாம் பாதியில் ஆட்டம் கண்டது. ஏனெனில் பெரிதாக எவ்வித மாற்றமுமில்லை. ஏதோ நிமிடத்தை கடப்பதற்கென்றே வைக்கப்பட்ட தருணங்களாய்த் தோன்றின. 


தமிழனென்றாலே உதவும் தன்மை கொண்டவன் என்று தொடர்ந்து மலையாளப் படங்களில் சித்தரிக்கப்படுவது பெருமிதம் தரக் கூடியவையாய் அமைந்துள்ளது.

தாத்தாவாக நெடுமுடி வேணு, நாராயணி அலைஸ் நாணியாக சுப்ரமணியபுரம் சுவாதியின் நடிப்பு அளவாக, அழகாக அமைந்துள்ளது. எல்லாவற்றையும் தாண்டி இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் நாயகன் பஹாத் பாசில். இவர் முழுமையாக படத்தை தன் தோளில் சுமந்து செல்கிறார். இவருடைய கண்கள் பேசுவது போல் மலையாளத்தில் வேறு எந்த நடிகரின் கண்ணும் பேசுவது இல்லை. ஐ.டி அம்பி (அந்நியன்) போல் அமைந்திருந்த ஹரிகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் சென்சூரி அடிக்கிறார்.

மொத்தத்தில் - நார்த் 24 காதம் சாதாரண கதை, அளவான, ஆழமான நடிப்பால் மிக அழகாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
thanx - dinamalar
  • நடிகர் : பஹாத் பாசில்
  • நடிகை : சுவாதி
  • இயக்குனர் :அனில் ராதாகிருஷ்ணன் மேனன்

என் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரனும்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1. டியர்.வரலட்சுமி நோன்பு இருக்கனும்.



இதை ஏன் என் கிட்டே சொல்றே? சரத்குமார்க்கு போன் போட்டு சொல்லு.





--------------------------



2. டியர்.என்னை கட்டிக்கிட்டா உன் எதிர்காலம் பெட்டரா இருக்கும்.



ம்ஹூம் ஒரே தியேட்டர்மயமா தான் இருக்கும்.



----------------------

3. மேடம் .எதுக்கு மறுபடி வரச்சொன்னீங்க? அரசியல் எண்ணம் இல்லைனு அறிக்கை விட்டாச்சே?,




ஜெ - ஜில்லா ட்ரென்ட் ல வந்துடுச்சாம்.படம் வரனுமா? வேணாமா?




---------------------


4. நடிகை - சார்.சேலை கட்டி மட்டும் தான் நடிப்பேன்.சாரி.




 டைரக்டர் - விளையாடாதேம்மா.உங்க கேரக்டர் ஏவாள் து




----------------------


5. ஹோட்டல் ஹால் ல சாப்ட்டா  60 ரூபா.ஏ சி ரூம்ல சாப்டா 90 ரூபா.



சார் பார்சல் சாப்பாடு குடுங்க.எங்க வீட்ல போய் சாப்டுக்கறேன.30ரூபா ஓக்கே?



---------------------------




6. மேடம்.இடை தேர்தல்ல ஜெயிச்சதுக்கு என்ன காரணம்?



இது என்ன கேள்வி? இடை அழகு தான் காரணம்


-------------------------


7. மிஸ்.உங்களைப்பார்த்ததும் எனக்குள்ளே ஏதோ ரசவாதம் நடக்குது.



போய்யா யோவ்.சாம்பார் மாதிரி இருந்துட்டு பேச்சைப்பாரு



---------------------


8. டாக்டர்.எனக்கும் என் மனைவிக்கும் தூக்கமே வர்றதில்ல.என்ன செய்ய?



 எதுவும் செய்யக்கூடாது.தனித்தனி ரூம்ல படுத்துப்பாருங்க


-----------------------


9. டியர்.பப்ளிக் ப்ளேஸ் ல கிஸ் அடிக்கறது தப்பில்லயா?



ம்.ஆனா நான் உன் உதட்லதானே கிஸ் குடுத்தேன்.அது உன்னோட பிரைவேட் ப்ளேஸ் தானே?


---------------------


10. டாக்டர்.டெய்லி ஒரு எடசு பக்கோடா சாப்பிடறேன்.உடம்புக்கு நல்லதா?




ஏம்மா அது வயிறா? இல்லை குடோனா?


---------------------




ஆலமர நிழலில் மயில்கள் இன்றும் சுற்றித்திரிகின்றன மதுரைப்பக்கம்.

பசுமை நடை சென்ற போது எடுத்த புகைப்படம்..

A banyan tree that has stood the test of times!

#BanyanTree #ஆலமரம் #மதுரை #பசுமைநடை #Greenwalk #Thiruvadhavur #திருவாதவூர்

11. ஏய் மிஸ்டர்.உங்க பேரே என் வாயில் நுழைய மாட்டேங்குது.



ம்.ஏன்னா நீங்க வாயில் சேலை கட்டி இருக்கீங்களே அதான்



---------------------


12. மேடம்.உங்க கணவருக்கு உங்க கிட்டே பிடிச்ச அம்சம் எது? பிடிக்காத அம்சம் எது?



இந்த மாதிரி நீங்க என் கிட்டே பேசறது அவருக்குப்பிடிக்காது





--------------------------


13. டைரக்டர் சார். மாறுபட்ட கோணத்துல எப்பிடி சிந்திக்கிறீங்க?



ஸ்டோரி டிஸ்கஷனை கும்பகோணம் ,அரக்கோணம் ,ல வெச்சுடுவேன்



----------------------


14. படத்தை 20 நிமிசம் ட்ரிம் பண்ணி ஒரு பைட் சீன் ஒரு பாட்டு சேத்தப்போறோம்



. அடடா அப்போ மறுபடி 20 நிமிசம் சேருமே?




----------------------


15. டாக்டர்.எடை குறைக்க முற்பட்டு ஒரு வாரம் கழித்து எடை பார்த்தால் 1/2 கிலோ ஏறியுள்ளேன்!



 அப்போ நெகடிவா ட்ரை பண்ணுங்க மேடம்



-----------------------


இந்த சிலை - திரு முட்டம் (கடலூர் மாவட்டம்) - கோவிலில் இருப்பதாக பார்த்தேன். கடலூர் மாவட்டத்தில் உள்ள மற்ற முக்கியமான கோவில்கள் பற்றிய தகவல்களை, கடலூர் & அருகில் உள்ள நண்பர்களும், மற்ற ஆன்மீக நண்பர்களும் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி நண்பர்களே.
இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ்ந்தவங்க கல்லுல நம் கலாச்சாரத்தை விட்டு போய்ட்டாங்க, நல்ல பாருங்க கூந்தல பின்னி பூக்கூட வச்சி இருக்காங்க...
கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டும் அல்ல, நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை..

இடம்:- திருமுட்டம், கடலூர் மாவட்டம்....

நாம போய் பாக்கத்தான் போறது இல்ல லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க.....

நன்றி:
- கிஷன்
Photo: இப்போம் இருக்குற நம்ம ஊரு புள்ளைங்களுக்கு தலையைப் பின்னத் தெரியாது.... அப்போ வாழ்ந்தவங்க கல்லுல நம் கலாச்சாரத்தை விட்டு போய்ட்டாங்க, நல்ல பாருங்க கூந்தல பின்னி பூக்கூட வச்சி இருக்காங்க...
கோவில்கள் வழிபாட்டு இடம் மட்டும் அல்ல, நம் வரலாற்றையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிப்பவை..

இடம்:- திருமுட்டம், கடலூர் மாவட்டம்....

நாம போய் பாக்கத்தான் போறது இல்ல லைக் பண்ணி ஷேர் பண்ணுங்க..... 

நன்றி:
- கிஷன்



16. டியர்.என் முகத்தை வர்ணிக்காம மத்ததை எல்லாம் வர்ணிக்கிறீங்களே ஏன் ?



 எனக்கு முகஸ்துதியும் மு க ஸ்துதியும் பிடிக்காது



---------------------------


17.டியர்.லவ் பண்றப்ப என்னை திருப்பதி லட்டுனு வர்ணிப்பீங்களே.இப்போ எப்டி இருக்கேன்?



 பூந்தி மாதிரி ;-)


-------------------------


18. மாப்ளை.நீங்க கேட்டபடி இலவம்பஞ்சு மெத்தை சீரா குடுத்துட்டேன்.



மெத்த மகிழ்ச்சி மாமா



-------------------------


19.மிஸ்.நான் வேலைக்குப்புதுசுங்கறதால என்ன டவுட்னாலும் உங்க கிட்டே கேட்கச்சொல்லி டேமேஜர் சொன்னார்.


 ம், கேளூங்க ‘


நம்ம ஆபீஸ் ல லேடி ஸ்டாfஸ் எத்தனை பேரு?



-----------------



20. டேமேஜர் - என் ரூம்க்குள்ளே வரும்போது கதவைத்தட்டிட்டுதான் வரனும்.புரிஞ்சுதா?


 ஓ! இப்போத்தான் புரிஞ்சது.ஓக்கே சார். ஓக்கே மிஸ்


----------------------



நாம் பார்க்கும் அற்புதமான
புகைப்படம் ஒவ்வொன்றின்
பின்னாலும் ஒரு புகைப்பட
கலைஞனின் உன்னதமான
உழைப்பு மறைந்திருக்கிறது!
Photo: நாம் பார்க்கும் அற்புதமான
புகைப்படம் ஒவ்வொன்றின்
பின்னாலும் ஒரு புகைப்பட
கலைஞனின் உன்னதமான
உழைப்பு மறைந்திருக்கிறது!
 

Monday, September 23, 2013

DABBA -( THE LUNCH BOX ) - சினிமா விமர்சனம்

தி லன்ச் பாக்ஸ் (இந்தி)

  • நடிகர் : இர்ஃபான் கான்
  • நடிகை : நிம்ரத் கவுர்
  • இயக்குனர் :ரித்தேஷ் பத்ரா
 

தினமலர் விமர்சனம் » தி லன்ச் பாக்ஸ் (இந்தி)

 
தினமலர் விமர்சனம்


சினிமா பசி எடுத்தவர்களுக்கு நிறைவான உணவு சாப்பிட்ட திருப்தியை இந்த லன்ச் பாக்ஸ் அளித்துள்ளது.

கரன் ஜோஹர், யூ.டி.வி, அனுராக் கஷ்யப் இப்படி பலரும் கூடி ஒரு படத்தை தயாரிக்கும் போது கண்டிப்பாக இது ஒரு நல்ல படமாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் மனதில் எழுகிறது. நவாஸிடின் சித்திக், இர்ஃபான் கான் இரண்டு நல்ல நடிகர்கள் அமர்க்களம் ஏதுமின்றி படகுப் பயணம் போல் பிரயாணிக்கும் அழகிய கதைக்களம். கலையம்சத்தில் ரசிகர்களை மூழ்கடிக்கும் ஒரு படைப்பு.

மும்பையில் மிகப் பிரபலமான டப்பாவாலா (உணவை வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு கொண்டு சேர்க்கும் தொழில்) கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் அமைக்கப்பட்டுள்ளது. கணவனுக்காக தினமும் விதவிதமாக உணவுகளை செய்து மதியம் டப்பாவாலா மூலம் கொடுத்து விடும் ஹவுஸ் வைஃப்.

எப்போதும் மிச்ச உணவுடன் வீட்டிற்குத் திரும்பும் டிபன் காரியர் ஒரு நாள் காலியாக வருகிறது. இன்று சமையலில் தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்று அவளுக்கு ஒரே சந்தோஷம். வீட்டிற்கு வந்த கணவனிடம் தன் கைப்பக்குவத்தைப் பற்றி கேட்கிறாள். அப்போது அவன் இவள் சமைக்காத ஆலு கோபி நன்றாக இருக்கிறது எனக் கூற அப்போதுதான் டப்பா மாறிவிட்டதை உணர்கிறாள்.
 


உணவை உண்ட அந்த முகம் தெரியாத நபருக்கு நான் சமைத்ததை முழுமையாக உண்டதற்கு நன்றி, காலி டப்பா அனுப்பியதற்கு நன்றி என்ற மடலை டப்பாவுடன் இணைத்து அனுப்புகிறாள். மாலை வந்து சேரும் அந்த டப்பாவில் இன்றைய உணவில் உப்பு அதிகம் என்ற குறுஞ்செய்தி வருகிறது. இதிலிருந்து இவ்விரு கதைமாந்தர்களுக்கு நட்பு, காதல் இவ்விரண்டையும் கடந்த ஒரு நேசம் அரும்புகிறது.  இதன் பின் இவ்விருவருக்கிடையே நடக்கின்ற அழகிய உரையாடல்களும், இருவரின் வாழ்க்கை, அதில் நடக்கும் நிகழ்வுகளின் பதிவு தான் இப்படம்.

இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு ஒரு படம் அனுப்பப்படும். அதற்காக போட்டியிட்ட படங்களுள் முக்கிய இடம்பெற்ற படம் லன்ச் பாக்ஸ். இப்படம் கண்டிப்பாக இந்தியாவின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் என்று பல பாலிவுட் திரையுலக ஜாம்பவான்கள் எதிர்பார்த்த ஒன்று. ஸன்டேஸ் பிலிம் பெஸ்டிவல் மேலும் பல சர்வதேச பிலிம் பெஸ்டிவல்களில் இப்படம் சக்கைப் போடு போட்டது தான் அதற்குக் காரணம்.

ரிடையர் ஆகப் போகும் அரசாங்க ஊழியராக இர்ஃபான் கான். கண்டிப்பாக இப்படத்தில் இவர் நடிக்கவில்லை - அக்கதாபாத்திரமாகவே பிஹேவ் செய்கிறார். நடை பாவனையாகட்டும், வாய்ஸ் மாடுலேஷன், முக பாவங்கள் இப்படி பல பிரிவுகளில் முழு தேர்ச்சி பெறுகிறார் இர்ஃபான். கண்டிப்பாக ஆக்டிங் கல்விக் கூடங்களில் லன்ச் பாக்ஸ் முக்கிய அங்கம் வகிக்கும்.
 
 


நவாஸிடின் சித்திக் கதாபாத்திரம் ஆர்ட் பிலிமிற்கும், கமர்ஷியல் பிலிமிற்கும் இடையே பாலம் வகுக்கச் செய்துள்ளது. பாராட்டு மரியாதைக்காக ஏங்கும் சராசரி மிடில் ஏஜ்  மனைவியாக நிம்ரத் கவுர் அசத்தியுள்ளார். மூவரின் நடிப்பும் படத்திற்கு ஓர் மாணிக்கக் கல்லாக அமைந்துள்ளது.

இம் மூன்று கதாபாத்திரங்களையும் தாண்டி நம்மை ரசிக்க வைப்பது நிம்ரத் கவுர்  மாடி வீட்டில் வாழும் முகம்  தெரியாத ஆன்ட்டி. படம் முழுக்க இவர் யார், என்ன தோற்றம் உடையவர் எதுவும் நமக்கு தெரியாது. ஆனால் இவரின் மன ஓட்டத்தை , கோபம், நையாண்டி  இவை யாவற்றையும் வெறும் குரலின் துணையால் வெளிப்படுத்தியிருப்பது இயக்குனர் ரிதேஷ் பத்ராவின் இணையில்லா சாதனை .

மாடியிலிருந்து அந்த பெண்மணி கூடையை ஆட்டும் போது அந்த கூடை படும் பாட்டை இயக்குனர் காட்டும் போதே அவள் கோபத்தில் இருப்பதை பார்வையாளனால்  உணர முடிகிறது. இல்லத்தரசி என்றால் அறியாமை கொண்டவராக காட்டிய இயக்குனரிடையே வாஷிங் மிஷினுக்கும் கையால் துவைப்பதற்கும் துணியை வகைப்படுத்தும் மனைவி, கணவன் சட்டையிலிருந்து வரும் சென்ட் வாடையை வைத்து அவன் கள்ள உறவு வைத்திருப்பதை  உணரும் போது   ரிதேஷ் பத்ரா சிலிர்க்க வைக்கிறார்.


எப்படி தான் முடியுமோ என எதிர்பார்க்க வைக்கும் கதை அப்பட்டமாக முடிவது லேசான எரிச்சலை தருகின்றது. இன்டர்நேஷனல் படங்கள் பலவற்றை பார்த்த தாக்கம் கிளைமாக்ஸில் மட்டும் ஜொலித்தது. ஆனால் அரங்கை விட்டு வெளியேறுகையில் கிளைமாக்ஸ் சரியான ஒன்று தான் என்றும் தோன்றியது.

சபலம் கொண்ட மனிதர்களால் அவர்கள் நினைத்த வாழ்க்கையை அமைக்க முடியாத ஒரு சூழலையும்?? அமைந்த வாழ்வில் அடையாத ஒரு ஏக்கத்தையும் லன்ச் பாக்ஸ் அழகாக வெளிப்படுத்துகிறது.

மொத்தத்தில், ரிதேஷ் பத்ராவின் இயக்கத்தில் லன்ச் பாக்ஸ் சினிமா பித்தர்களின் பசியைத் தீர்க்கலாம்; இல்லை மேலும் கூட்டலாம். சர்வதேச அளவில் ஆதரவு பெற்ற ஒரு படத்திற்கு தோள்கள் தரவேண்டியது நம் கடமை..  
 
 
thanx - dinamalar

கன்னுக்குட்டிக் காதல்! - சுப்ரஜா -short story


கால் சென்டர். அது ஒரு பன்னாட்டு நிறுவனம். நான், இங்கு வேலைக்கு சேர்ந்து சரியாய் ஒரு ஆண்டு ஆகிறது. இது, ஏதோ டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போன்ற வானுயர்ந்த கட்டடங்கள் போல அல்ல.



மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். பிடித்தம் எல்லாம் போக கைக்கு வரும், 17 ஆயிரம் ரூபாயில் வீட்டுக்கு அனுப்பியது போக, ரூம் வாடகை, மெஸ் பீஸ் போக, மிச்சம், வார இறுதி நாட்களில், திப்பு சுல்தான் கோட்டையை பார்க்க வரும், டூரிஸ்டுகளை வேடிக்கைப் பார்க்கும் போது, வாங்கித் தின்னும் கடலைக்கே சரியாய் இருக்கும்.


திப்பு சுல்தான் கோட்டையிலிருந்து கூப்பிடும் தூரத்தில், பிரபல லேப்- டாப் கம்பெனி ஒன்றின் கால் சென்டர். அதில் தான் எனக்கு வேலை.
என் பெயர் குமார கிருஷ்ணன். ஆனால், கால் சென்டரில் என் பெயர் ஆன்ட்ரூஸ்.



ஒரு மாதம் தொடர்ந்து நைட் ஷிப்ட்.


இரண்டு நாள் லீவ் போட்டு ஊரைச், சுற்றிப் பார்க்கலாம் என கிளம்பினேன்.
ஒரு நிமிடம்.
என்னைப் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்து கொண்டால் மிக நன்றாய் இருக்கும்.
சொந்த ஊர் கும்பகோணம்.
அங்கு, ஏ.ஆர்.ஆர்., பள்ளியில் படித்த போதும், எனக்கு காதல் வரவில்லை. ஆனால், டைரக்டர் பாலாவின், "சேது' படத்தின் படப்பிடிப்பு எங்கள் கல்லூரியில் நடந்து கொண்டிருந்த போது தான் அவளைப் பார்த்தேன். "லேடி பேர்ட்' சைக்கிளில் தோழியுடன். ஷூட்டிங் பார்க்க வந்து இருந்தாள்.
எந்த அரிதார பூச்சும் இல்லாத பளீர் முகம்.
கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றவள், பின், சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நகர, அவளை பின் தொடர ஆரம்பித்தேன்.
அந்த வெயில் நேரத்தின் சூடு கூட, என் மேல் உறைக்கவில்லை. அவளின் பாவாடையும், தாவணியும் அவள் மேல் நாகரிகத்தின் நிழல் இன்னும் விழவில்லை என்று சொன்னது.
நிகுநிகு என்ற உயரத்தில், கொஞ்சம் பூசினாற் போல உடல் வாகு.
அவளுடன் பேச வேண்டும் என்று, ஒரு உத்வேகம் எனக்கு. அருகில் போய், "என்னங்க...' என்றேன்.
சைக்கிளை நிறுத்தி, "என்ன?' என்றாள்.
"உங்க பேரு என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்றதும் முறைத்தாள்.
"ம்... பேரைத் தெரிஞ்சுக்கிட்டு, என்ன செய்யப் போறீங்க?'
" எல்லாம் ஒரு இது தான்...' இழுத்தேன்.
"இதுன்னா?'
"எப்படி சொல்றது... உங்களை எனக்குப் ரொம்ப பிடிச்சு இருக்கு. உங்ககிட்ட பேசணும் போல இருக்கு' என்றேன்.
"எல்லாருக்கும் தான் எல்லாரையும் பிடிக்குது...'
"விடுங்க... நீங்க சொல்லாட்டி வேற எப்படியாவது தெரிஞ்சுக்குறேன்...'
"அப்படியா... தெரிஞ்சுக்கிட்டு என்னை கூப்பிடுங்க. அப்ப பேசலாம்... வாடி' என்று, தன் தோழியுடன் சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்பி விட்டாள்.
காதல்ன்னா பொய் என்று நினைக்கும், அத்தனை பேரும் அந்தாண்டை ஓடிப் போய் விடுங்கள். ஒரு வாரம் சரியான அன்ன ஆகாரம் இன்றி, அவளைத் தேடி அலைந்தேன். கனவில் அவளுக்கு முத்தம் கொடுத்தும், இடுப்பை இரு புறமும் பிடித்து வருடிக் கொண்டும் இருந்தேன்.
அவளைத் தேடித் தேடி, களைத்து, ஒரு நாள் சக்கரப்பாணி கோவில் அருகே, எதேச்சையாக அவளைக் கண்டேன்.
என்னைப் பார்த்ததும், அவளிடம் ஒரு ஜெர்க். உடனே கோவிலுக்குள் நுழைந்து விட்டாள். பின்னாடியே போனேன்...
மாலை மங்கிய வேளை... கோவிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது.
ஆட்டுக்குட்டி மாதிரி அவள் பின்னாலயே போனேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நுழைந்தாள். நானும் நுழைந்தேன். ஆரத்தி, தீர்த்தம், துளசி கொடுக்கும் போது, "என்னம்மா வாதினி...எப்படி இருக்கே? உன்னோட அம்மாவை கோவில் பக்கமே காணோமே! என்ன ஆச்சு?' என்று கேட்டார் பட்டாச்சாரியார்.
"ஐயோ' என்கிற மாதிரி, என்னைப் பார்த்தவள், நாக்கை கடித்தபடியே பட்டாச்சாரியாரை பார்த்து, "அம்மாவுக்கு ஒரு வாரமா மூச்சு இழுப்பு' என்றாள்.
"சிரமம் பார்க்காம, காலையில கோவிலுக்கு வரச் சொல். தீர்த்தம், துளசி வாங்கிப் வாயில போட்டுக்கிட்டா எல்லாம் சரியாயிடும்...'
"நாளைக்கு வரணும்ன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க... '
உள்ளே சென்ற பட்டாச் சாரியார் சடாரியுடன் வந்தார்.
எங்களுக்கு சடாரி வைத்து முடித்ததும், அவள் பக்கம் திரும்பி பார்த்து, "போயிட்டு வாம்மா குழந்தே...' என்றவர் என்னை, "என்ன' என்பது போல் பார்த்தார்.
நான் நகர, அவள் வெளிப் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தாள். நானும் பின்னால் சுற்றினேன். மூன்றாவது சுற்று சுற்றும் வரை கொஞ்சம் கூட்டம் இருந்ததால், அவளிடம் பேச தயங்கினேன்.
அவள் நாலாவது சுற்று ஆரம்பித்ததும் கொஞ்சம் உயிர் வந்தது.
பின்னால் கொஞ்சம் மங்கலான வெளிச்சத்திற்கு வந்த போது, "வாதினி' என்றேன். மெல்ல நடந்து கொண்டே, "என்ன?' என்றாள்
"கொஞ்சம் நில்லேன், உங்கிட்ட பேசணும்...'
"என்ன?'
"பத்து நாளா, என் சட்டைப் பையிலேயே வச்சுகிட்டு, உன்னை தேடிட்டு இருக்கேன்...' சட்டென்று, அவள் கையில் திணித்து விட்டு, வேகமாய் வெளியே வந்து விட்டேன்.
சரியாய் அரை மணி நேரத்தில், ஒட்டு மொத்த அக்ரஹாரமும் எங்கள் வீட்டின் முன் தான் இருந்தது. நான், ஒரு லூசுப் பயல். அவர்களை பார்த்த பின் தான், என் காதல் கடிதத்தில், என் முகவரியை அடியில் தெளிவாக எழுதியது ஞாபகம் வந்தது. அப்புறம் என்ன, அடிதான். அப்பா வாத்தியார்... அவர் சொல்லிக் கொடுத்து, சரியாக படிக்காத பையன்களின் மேல் உள்ள கோபத்தை எல்லாம், என் மேல் தீர்த்துக் கொண்டார். அதன் பின் கல்லூரி முடித்து, சென்னையில் வேலையில் சேரும் வரை, வாதினி பற்றி நான் நினைக்கவில்லை, பார்க்கவில்லை. சென்னையிலிருந்து அப்படியே பெங்களூருக்கு வந்தாகிவிட்டது. வீட்டில் கல்யாணம் என்று பேச்சு எடுத்தாலே, என் மூளைக்குள், ந்யூக்ரான்கள் விழித்துக் கொள்ளும்.
"அப்புறம் பார்க்கலாம்...' என்று வாய் சொன்னாலும், மனதுக்குள் ஒரு அரக்கன் வந்து, "என் காதலை நிராகரித்து, என்னை போட்டு கொடுத்த வாதினி, நல்லாவே இருக்க மாட்டாள். அவள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை பார்த்த பின் தான், திருமணம் செய்து கொள்ள வேண்டும்...' என்று ஒரு வெறித்தனமான தீர்மானத்தை எடுத்துக் கொண்டிருந் தேன். இதற்கு காரணம், அந்த சம்பவம் நடந்த மறுவாரம், அவர்கள் குடும்பம் சொல்லி வைத்தாற் போல, டெம்போவில் எங்கோ கிளம்பி விட்டது.
இரண்டு நாள் லீவ் போட்டு ஊர் சுற்றலாம் என்று கிளம்பினேன் அல்லவா...
திப்பு சுல்தான் கோட்டைக்கு, போகலாம் என்று கிளம்பியவன், ஒரு டர்ன் அடித்து, தரியா தவுலத் பாக்கின் உள்ளே நுழைந்தேன்.
தரியா தவுலத் பாக், திப்பு சுல்தானின் கோடை வாசஸ்தலம். இக்கட்டடத்தை கட்ட ஆரம்பித்தது திப்புசுல்தானின் தந்தை ஹைதர் அலியாக இருந்தாலும், கட்டி முடித்தது திப்பு சுல்தான் தான்.
இந்த பிரதேசத்தில் முக்கிய சுற்றுலா ஸ்தலமாக புகழ் பெற்றுள்ள, இந்த அரண்மனை, 1959ல் தேசிய நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டதையும், தரியா தவுலத் பாக், இந்தோ-சராசனிக் கட்டடக்கலை பாணியில் கட்டப்பட்டது என்றும், பல முறை சுவர் குறிப்புகளிலிருந்து படித்து தெரிந்து கொண்டேன்.
ஒரு கட்டத்தில் திப்புவை எதிர்க்க முடியாத வெள்ளையர்கள், வஞ்சகமாக வெஸ்லி என்கிற தளபதி மூலம் கோட்டைக்குள் பின் புறமாய் புகுந்து, திப்புவை போட்டுத் தள்ளியது வேறு கதை. அரண்மனைக்கும், காவிரிக் கரைக்குமிருந்த ரகசிய வழி மூலம் வெள்ளையர்கள் அரண்மனைக்குள் நுழைந்துள்ளனர்.
அதை விடுங்கள்...
தரியா தவுலத்தில், ஓவியங்களைப் பார்த்து கொண்டிருந்த போது, அந்த தம்பதி கண்ணில் பட்டனர். தூரத்தில் இருந்து பார்க்கும் போதே, அவர்களின் செல்வ செழிப்பு தெரிந்தது. ஒரு சின்னப் பெண்ணும், அவர்களுடன் துள்ளி வந்தாள். ஆறேழு வயது இருக்கும்.
அவர்கள், சுவர்களின் ஓவியங்களைப் பார்த்தபடி, என் அருகில் வந்த போதுதான் கவனித்தேன். கொஞ்சம் பூசினாற் போல் இருந்த அவள், வாதினியே தான்.
அவள் கழுத்தில் இருந்த நகைகளும், அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியுமே, அவளின், "ஸ்டேட்டஸ்'சை சொன்னது. அவளின் கணவன் அழகாக இருந்தான். அவளை கும்பகோணத்திலோ, சுவாமி மலையிலோ, ஒரு கட்டு வீட்டில், ஒரு சராசரி கணவனுடன் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த எனக்கு, ஒரு மரண அடி. அவள் என்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்று மெல்ல நகர்ந்தேன்.
""ஹாய்...'' என்றாள்.
நான் நின்றேன்.
கணவனை அழைத்துக் கொண்டு, என் அருகில் வந்தாள்.
""ராகவ் நான் சொல்லலை, இவன் தான் என்னோட, "காப் லவர்!' முதன் முதல்ல காதல் கடிதம் கொடுத்தவன், உன் பேர் என்ன மறந்துட்டனே, ம்...''
""குமார கிருஷ்ணன்.''
""ம்... கிருஷ்ணன்... உன்னைப்பத்தி, இவர் கிட்ட சொல்லியிருக்கேன். நீ கோவில்ல எனக்கு லெட்டர் கொடுத்தது, லூசு மாதிரி முகவரியையும் சேர்த்து எழுதிக் கொடுத்தது.''
அவள் கணவன் தொடர்ந்தான்...
""இவங்க அப்பா அக்ரஹாரத்தையே திரட்டிட்டு, உங்க வீட்டுக்கு வந்தது... ப்ளா ப்ளா... என்னப் பண்றீங்க...ஆர்கியலாஜி டிபார்ட் மென்டுல சேர்ந்துட்டீங்களா?'" என்றான்.
என் கம்பெனி பற்றி சொன்னேன்...
""ஓ... நாங்க நியூ ஜெர்சியில இருக்கோம். ப்ளேஸ்மென்ட் சர்வீஸ் வச்சிருக்கார். இவ பொறந்தப்பவே இந்தியா வரணும்ன்னு நினைச்சேன். இப்ப இவளுக்கு ஆறு வயசு... "ஸ்வேதா, அங்கிளுக்கு ஹாய் சொல்லு...' என்றாள், லட்டு மாதிரி இருந்த குழந்தையிடம். அது தலையை பக்கவாட்டில் ஆட்டி, "நோ மாம்' என்றது.
""அவளுக்கு புது ஆசாமிங் களைப் பார்த்தா, எண்டர்டெயின் செய்யக் கூடாதுன்னு சொல்லி வளர்த்திருக்கோம்.''
அவர் தன் பர்சில் இருந்து, ஒரு கார்டை எடுத்து கொடுத்து, ""யூ.எஸ்., வந்தா போன் செய்யுங்க,'' என்றார்.
கடைசியில், அவர்கள் கிளம்பிய போது, கார் வரை சென்று வழியனுப்ப போனேன். அவள் கை ஆட்டிப் போனாள்.
தமிழ் சினிமா பார்த்து, நாம் காதலித்த பெண், நம்மை நிராகரித்ததால் பிச்சை எடுக்கும் ரேஞ்சுக்குதான் இருப்பாள் என்று, கற்பனை செய்து கொண்டிருந்த எனக்கு, இது ஒரு செருப்படி.
தரியா தவுலத் முன், குச்சி ஐஸ் பிடி போல உணர்ந்தேன். அங்கிருந்து, மொபைலில் அப்பாவுக்கு போன் போட்டேன்.
""என்னடா?''
""சீக்கிரம், ஏதாவது ஒரு கழுதையை பாருங்க... கல்யாணம் செய்துக்கிறேன்,'' என்றேன். 
***



சுப்ரஜா


thanx - varamalar

ஆண்ட்ரியா -அனிரூத் - மீண்டும் ஒரு கில்மா கதை

 

பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு எனது இசையில் ஆண்ட்ரியா பாடியது உண்மை தான் என்று தெரிவித்துள்ளார் அனிருத்.3 படத்தில் ஒய் திஸ் கொல வெறி பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலமானவர் அனிருத்.இவர் ஆண்ட்ரியாவுடன் லிப் டு லிப் முத்தம் கொடுத்த படம் வெளியானதில் ஏகப்பட்ட பரபரப்பு கிளம்பியது.இந்தப் படத்தை அனிருத்தே வெளியிட்டுவிட்டார் என செய்தி வெளியானதால் அனிருத்தை மீடியாவில் திட்டிவிட்டார் ஆண்ட்ரியா



.இனி எங்களுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தார்.ஆனால் இப்போது இருவரும் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.அதற்கு அடையாளமாக அனிருத் இசையில் மீண்டும் வணக்கம் சென்னை படத்தில் ஆண்ட்ரியா பாடியதாக செய்தி வெளியானது.இதுகுறித்து அனிருத் கூறுகையில், வணக்கம் சென்னை படத்தில் எனது இசையில் 'எங்கடி பொறந்த எங்கடி பொறந்த' என்ற பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார் என்பது உண்மைதான்.இந்த பாடலின் ஒரு பகுதிக்காக நான் மும்பையில் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தேன்.



அதே வேளையில் ஆண்ட்ரியாவுடன் எனது உதவியாளர் சென்னையில் ரெக்கார்டிங் செய்துகொண்டிருந்தார்.ஆகையால் நாங்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளார்

நன்றி -வெளிச்சம் http://velicham.tv/index.php/en/2013-07-31-12-05-11/item/2384-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D

 

.1டெல்லி பாலையியல் பலாத்கார வழக்கு -.தூக்கு தண்டனைக்கைதிகள் தண்டனைக்காலம் வரும் முன்னரே தற்கொலை செய்துகொள்ளலாம் என அவதானிக்கிறேன் # நாலில் இருவர்



-------------------------

2.ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின் படம். சிம்பு - ஹன்சிகா வேட்டை மன்னன் # இரண்டும் தனித்தனி செய்திகள்

-------------------------

3.டாஸ்மாக் 1236/-கோடி ரூபா வருமான வரி கட்டாம இருக்காங்களாம்...#டப்பு இல்லையா? மப்பு ஜாஸ்தியா?

----------------------

4.2014 தேர்தல் ல் மோடி pm வேட்பாளர் என BJP யால் அதிகாரபூர்வ அறிவிப்பு # அத்வானி கட்சியை விட்டு அத்துக்கிட்டு வா நீ னு இனி கிளம்புவானுங்களே

-----------------------

5.சாதிக் கலவரத்தை தூண்டும் குருபூசைகளை தடை செய்ய வேண்டும்=கோர்ட்# இதுதான் சாக்குன்னு காடுவெட்டிகுருவுக்கு லாக்கப்ல பூஜை போடாம விட்ராதீங்க்

------------------------- 




6.இளையராஜா வழியில் அனிரூத்தும் மக்கள் முன்னிலையில் மவுத் ஆர்கன் வாசிப்பார் அதிரடி அறிவிப்பு ரசிகர்கள் குதூகலம் #ஆண்ட்ரியா லிப் லாக் பேரவை

----------------------------

7.பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.15 தொகுதிகளை பிடிக்கும்-அன்புமணி#நீங்க ஒரு ஏழரை உங்கப்பா ஒரு ஏழரை.2 ஏழரையும் சேர்ந்தா 15?

-------------------------------

8.திருமணத்தில் கலந்து கொள்வதற்காக காலை உணவை தியாகம் செய்தேன் -கலைஞர் # தலைவா.உங்களை மாதிரி ஒரு தியாகியை இந்த ஜில்லா வுலயே பார்க்கமுடியாது

------------------------------

9.பெங்களூர் ஸ்ரீராமபுரத்தில் பரபரப்பு வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி கற்பழிப்பு மெக்கானிக் கைது # ஊர்ப்பேரையே கெடுத்துட்டானே

----------------------------

10.பெருங்கோடீஸ்வர பெண்கள்: இந்தியா முதலிடம்: இதர "பிரிக்ஸ்' நாடுகளை விஞ்சியது# கேடி இண்டியன் லேடீஸ் அண்ட் ஓட்டாண்டி ஜெண்ட்டில்மென்

-------------------------



11.விமானநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு #ஒப்படைக்கவா? விற்கவா?கமிஷன் பேசியாச்சா?

----------------

12. "வட தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை வானிலை மையம் எச்சரிக்கை# பொண்டாட்டி கிட்டே சண்டை போடாதீங்கய்யா.திண்ணை தான்

--------------------------

13.விஜய் படத்துக்கு அனிருத் இசை # இது தேவலை.டூ விட்ட ஆன்ட்ரியா கூட இப்போ பழம் விட்டு மவுத் ஆர்கன் வாசிப்பாரேன்னு நினைக்கறப்ப

---------------------------

14.அரசியலில் குதிப்பேன் - நமீதா அதிரடி # தலைவா மாதிரி தடை பண்ண அடுத்து பாப்பா கைல படம் ஏதும் இல்லைனு தைரியம்

------------------------

15.காசோலை மோசடி : பிரீத்தி ஜிந்தாவுக்கு பிணையில்லாத பிடிவாரண்ட் # நல்ல வேளை. ஒரு செக் மட்டும் மோசடி பண்ணாங்க

------------------------



16.பெங்களூரில் வாங்க ஆள் இல்லாத 60,000 வீடுகள். கவலையில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் # யானை விலை குதிரை விலை சொன்னா தேவல.பெட்ரோல் விலை சொன்னா?

----------------------------

17.நம் நாட்டில் கல்வி கற்று வெளிநாட்டு வேலைக்கு செல்வது முறையல்ல:- நீதிபதி.# பாரீன் போய் படிச்ட்டு இங்கே வந்து வேலைக்குப்போனா ஓக்கேவா?

-----------------------------

18.பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறோம். - சல்மான் குர்ஷித். # சானியா மிர்சாவைப்பார்க்கனும்னு சொல்லி இருப்பாரோ?

-------------------------

19.நானும் சரத்குமாரும் என்ன சாதாரண ஆட்களா? ராதாரவி ஆவேச பேட்டி # மாமனும் மச்சானும் மப்போட கிளம்பிட்டாங்க.எத்தன தலைங்க உருளப்போவுதோ?

---------------------------

20.ஆண்ட்ரியாவுடன் காதல்!..மனம் திறக்கிறார் அனிரூத் |# ஆண்ட்டியுடன் லவ்னு சொல்லுங்க.பொருத்தமா இருக்கும்.19 vs 36

---------------------------


.21.சினேகா குறித்து யாரும் பேஸ்புக்கில் அவதூறாகப் பதிய‌வில்லை : பிரசன்னா # இது தான் உங்க டக்கா? அவன் எரேஸ் பண்ணி இருப்பான் நேக்கா


----------------------------


Sunday, September 22, 2013

சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா , 21 9 13 to 24 9 13

திரைப்படங்களில் வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிளைத் தவிர்க்க வேண்டும் என்று திரைப்படத் துறையினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார்.


மேலும், திரைப்படத் துறைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தனது தலைமையிலான அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.


இந்திய சினிமா நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தை குத்துவிளக்கேற்றி, சென்னையில் சனிக்கிழமை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா ஆற்றிய உரை:


மனிதன் நாகரிகமடைந்து உருவாக்கிய படைப்புகளிலேயே உன்னதமான கலைப் படைப்பு சினிமா.


சினிமா கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இசை, இலக்கியம், ஓவியம், நாட்டியம், நாடகம் என பல கலைகள் மக்களின் மனதை மகிழ்விக்கவும், வளப்படுத்தவும், பலப்படுத்தவும் பயன்பட்டன.
இந்தக் கலைகளோடு அவ்வப்போது கண்டுபிடிக்கப்படும் நவீன அறிவியல் யுக்திகளும் சினிமாவில் பயன்படுத்தப்படுகின்றன.
அதனால் தான், வேறு எந்த கலை வடிவத்தையும் விட எளிதாக மக்களை ஈர்க்கும் வலிமை திரைப்படத்துக்கு இருக்கிறது.
நான் முதல்வராக பொறுப்பேற்கும் போதெல்லாம் திரைப்படத் துறையினருக்கு பல்வேறு சலுகைகளை அளித்திருக்கிறேன். குறைந்த முதலீட்டில் திரைப்படம் எடுக்கும் சிறு தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அந்தத் திரைப்படத்துக்கான மானியத் தொகை உயர்த்தப்பட்டது. அதனால் சிறு முதலீட்டுப் படங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
சுதந்திரமாகச் செயல்படும் திரைப்படத் துறை: தயாரிப்பாளர்களின் அலைச்சலைக் குறைக்கும் வகையில், ஒற்றைச் சாளர முறையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெயரில் விருது தோற்றுவிக்கப்பட்டது. திரைப்படத் தொழிலாளர்கள் பணிபுரியும்போது உயிரிழந்தாலோ, ஊனமுற்றாலோ, அவர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
பெண்களை உயர்வாக சித்திரிக்கும் கதையம்சம் கொண்ட திரைப்படங்களுக்கு அரசு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பாக திருட்டு வீடியோக்கள் எடுக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், காணொலித் திருட்டுத் தடுப்புப் பிரிவு எனும் தனிப்பிரிவு உருவாக்கப்பட்டது. திருட்டு விடியோ தொழிலில் ஈடுபட்டு குற்றம் இழைப்போரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வழிவகை செய்தது என அடுக்கிக் கொண்டே போகும் அளவுக்கு பல்வேறு திட்டங்கள் என் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக எனது ஆட்சியில் திரைப்படத் துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.
இளைய தலைமுறையிடம்... திரைப்படம் என்பது பல்வேறு கலைஞர்களின் கலைத் திறனை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்றாலும் நல்ல கருத்துகளை, முற்போக்கு சிந்தனைகளை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லும் வகையிலும், ஜாதி மற்றும் மத ரீதியிலான வகையில் பிறர் மனம் புண்படாமல் இருக்கும் வகையிலும், வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகளைத் தவிர்த்தும் படங்களை எடுக்க வேண்டும் என்று திரைப்படத் தயாரிப்பாளர்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். மேலும், திரைப்படத் துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் எனது தலைமையிலான அரசு நல்கும் என்றும் என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


சினிமா நூற்றாண்டு விழா: மால் தியேட்டர்களில் இலவச சினிமா

Indian cinema 100th Celebration : Free shows in Malls

இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் வருகிற 21ந் தேதி முதல் 24ந் தேதி வரை நடக்கிறது.


 இதையொட்டி விழாக் குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள மால் தியேட்டர்கள், மற்றும் பிரிவியூ தியேட்டர்களில் முக்கியமான, புகழ்பெற்ற சினிமாக்கள் பொதுமக்களுக்கு இலவசமாக திரையிடப்படுகிறது.


 சத்யம் தியேட்டரில் நடந்த விழாவில் இதனை நடிகை தேவயானி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சேம்பர் தலைவர் கல்யாண், செயலாளர் சுரேஷ், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 



சத்யம், அபிராமி, உட்லட்ஸ் ஃபோர் பிரேம் தியேட்டர்களில் 24ந் தேதி வரை பழைய திரைப்படங்களை இலவசமாக பார்க்கலாம்.


 ஆயிரத்தில் ஒருவன், கர்ணன், ரிக்ஷாக்காரன், அடிமைப்பெண், செம்மீன் (மலையாளம்), பங்காரத மனுஷ்ய (கன்டனம்), ஒலவும் திரவும் (மலையாளம்), சங்கொள்ளி ராயண்ணா (கன்னடம்) ஆகிய படங்களை சத்யம் திரையரங்கில் பார்க்கலாம். பாசமலர், நாடோடிமன்னன், சாட்டை, பருத்தி வீரன், அரவான், அடிமைப்பெண் (தமிழ்) மாயாபஜார், மகதீரா (தெலுங்கு), சத்திய ஹரிச்சந்திரா (கன்னடம்) ஆகியவை அபிராமியில் திரையிடப்படுகிறது. சிரித்து வாழ வேண்டும், ஆண்டவன் கட்ளை, சவாலே சமாளி, கலாட்டா கல்யாணம், ஆகியவற்றை உட்லண்ட்டிலும், பங்காரத மனுஷ்ய, பாண்டவ வனவாசம், சவுத்துக்குன்ன அம்மாயிலு, குண்டம்ம கதா (தெலுங்கு) காவ்ய மேளா தெலுங்கு, கௌரவம் (தமிழ்) ஆகியவற்றை ஃபோர் பிரேமிலும் காணலாம்.


thanx - dinamani, dinamalar


முதல் இரவில் இலியானா

அறிவு டிப்போவே இங்கதான் இருக்குது போல..... அடடடா என்ன ஒரு சிந்தனை......!
அறிவு டிப்போவே இங்கதான் இருக்குது போல..... அடடடா என்ன ஒரு சிந்தனை......!
1.நிருபர்- ஜில்லா பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணலையே,.ஏன்?



 விஜய்- ரஜினியே கோச்சடையான் ரிலீசை தள்ளி வெச்சுட்டார்,எதுக்கு வம்பு? # சும்மா


---------------------------


2. நிருபர் - ஜில்லா எப்ப ரிலீஸ்.. பொங்கலுக்கா, தீபாவளிக்கா ?



விஜய் - சி எம் மேடம் பொங்காம இருந்தா பொங்கலுக்கு


-------------------------


3. முதல் இரவில் இலியானா - அத்தான்.இந்தாங்க.பால்.சூடு ஆறுவதற்குள் குடிச்சுடுங்க.



 கணவர் - சொம்பு ரொம்ப சின்னதா இருக்கே? பத்துமா?



--------------------------


4.  ஜட்ஜ் - கோயில் உண்டியல் ல திருடுனியா?



கைதி -,யுவர் ஆனர்.அதெல்லாம் பழங்கதை.இப்போ நான் பேங்க் லாக்கர் ல மட்டும் தான் கை வைக்கறேன்



-------------------------------


5. உங்க வீட்டு ஆசாரத்தை ( ஹால்) ஏன் இடிக்கறீங்க?



ஆசாரம்னாலே பயமா இருக்கு # சாமியார் ஆசாரம் பாபு


-------------------------



6. எமன் - நான் உன் உயிரை எடுக்க வந்துள்ளேன்



. நான் - நீ என்ன என் சம்சாரமா?



-----------------------


7.சார்.ட்வின்ஸ் சிஸ்டர்ல ஒரு பெண்ணை மேரேஜ் பண்ணி இருக்கீங்க.ஏதும் குழப்பம் வந்துட்டா?



 நோ பிராப்ளம் டூ மீ.அவங்களுக்குத்தான் பிராபளம்



-----------------------------


8. ஜட்ஜ் - ஆவணங்கள் எப்படி மாயமாச்சு?,விசாரணை பண்ணீங்களா?



 S I = என் கொயரி பண்ண ஸ்பாட்டுக்குப்போனோம்.ஆபீசையே காணோம்.அதுவும் மாயமாகிடுச்சு



---------------------------


9.முதல் இரவில் மாப்ளை - டியர் .லைட்டை அணைக்கவா? உன்னை அணைக்கவா?



மணப்பெண் ( ட்விட்டர்) - வக்ரம் ப்ரோ


-----------------------



10. லேடி DR- சுவாமி.உங்களுக்கு ஆண்மைப்பரிசோதனை பண்ணச்சொல்லி கோர்ட் உத்தரவு போட்டிருக்கு.



ஆசராம் பாபு -ok dr.கதவு உள் பக்கம் தாழ் போட்டிருக்கு



---------------------------

 




11. அத்தான்.பட்டுப்புடவை பார்டர் சூப்பர்னு சொன்னீங்க .முந்தி டிசைன் பத்தி எதுவும் சொல்லலையே?



 சாரி. நான் எப்பவும் பார்டர கிராஸ் பண்ணமாட்டேன்



------------------------


12.சாமியார் - பெண்ணே! எதன் மேலும் ஆசைப்படக்கூடாது




.லேடி - கொஞ்சம் தள்ளி நின்னு பேசுய்யா.என் மேல படக்கூடாது



-----------------------------


13. உங்க (ஸ்பேர்)மொபைல் பேட்டரிய முடிந்தளவு குளிர்வா வைங்க பேட்டரி பவர் ரொம்ப நேரம் நீடிக்கும்.



ஓஹோ.பிரிட்ஜ்ல வெச்சுடலாமா?


-----------------------


14. சார்.6 ந்தேதி லீவ் வேணும்.ஒரு டெத் ஆகிடுச்சு.



டேமேஜர் -. யோவ்,அஞ்சலி செலுத்தப்போறியா? அஞ்சலியைப்பார்க்கப்போறியா? # மதகஜராஜா்



---------------------------


15. டியர்.பேரீச்சம்பழ ஜூஸ் குடிச்சியே?டேஸ்ட்டா இருந்துச்சா?



ம்ஹூம்.டேட்ஸா இருந்துச்சு



--------------------------





16. லேடி ஜட்ஜ் - ஆசிரமத்துல பல பெண்கள் வாழ்க்கைல விளையாடி இருக்கீங்க ஏன்?



ஆசிரமம் பாபு - பேசிக்கலி நான் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் யுவர் ஆனர்


--------------------------



17. அத்தான்.காலை ல 8 டூ நைட் 8 மட்டும் தான் என் கூட பேசனும்.மத்த டைம் கிட்டே கூட வரக்கூடாது.



ம்க்கும்.நீ என்ன பெட்ரோல் பங்க் ஓனரா?



--------------------------



18. டாக்டர்.நேத்து நைட் என்ன சாப்ட்டேன் கறதையே மறந்துடறேன்.



மேடம்.ஏதோ ஒரு வெரைட்டி சாப்ட்டா நினைவிருக்கும்




---------------------------



19. முதலாளி.சம்பளத்தை என் சர்ட் பாக்கெட்ல வெச்சிடுங்க.ஏன்னா ஏதாவது கோபம்னா என் கிட்டே கை நீட்டி சம்பளம் வாங்கறவன் தானே நீனு நக்கல் அடிப்பீங்க



----------------------



20 ஜட்ஜ் - எதுக்காக நகைக்கடைல 250 பவுன் நகையை கொள்ளை அடிச்சே?




கைதி - தங்கம் வாங்க வேணாம்னு பிரதமரே சொல்லிட்டாரே யுவர் ஆனர்


------------------------------