Thursday, September 05, 2013

மிஸ் ஜோதி டீச்சர் & பாஸ்கரின் மரண தருணங்கள் - சிறுகதை - சி.பி.செந்தில் குமார்

பாஸ்கர்  சாரை  முதன் முதலா எனக்கு ஹிந்தி  ட்யூஷன் செண்ட்டர்ல  தான் அறிமுகம், ஹிந்தி மொழியை  கத்துக்கனும்னோ  , வடக்கே வேலை பார்க்க   தேசிய  மொழி அவசியம்னோ அந்த  மொழியை நான் கத்துக்க   ட்ரை பண்ணலை , நமக்குத்தெரிஞ்ச மூணே மொழி   தமிழ் மொழி  ,மேத்ஸ் க்ரூப்  தேன்மொழி ,  கனிமொழி . ஊர்ல  கில்லி விளையாடறவன் , கோலி விளையாடறவன், வாழ்க்கைல நொந்தவன், பொண்டாட்டியைப்பிரிஞ்சு வந்தவன்    எல்லாம்  திடீர்னு   ஹிந்தி பண்டிட்  பரமேஸ்ஜி கிட்டே ஹிந்தி  டியூஷன் போகும்போது  மைல்டா டவுட்  வந்து  விசாரிச்சேன் . அவருக்கு ஒரு பொண்ணு இருக்காம் . கேரளத்துப்பெண்  குட்டி அல்லே.


 நாமளும் மாநிறம்  , நம்ம ஊர்ல இருக்கும் ஃபிகர்களும்மாநிறம்.அதனால கலரா  ஒரு ஃபிகர்  குடி வந்தா காலரா வந்து படுத்துக்கிடப்பவன் கூட எந்திரிச்சு  உக்காந்துக்குவானே.நாமும்   ஃபிகரை பார்க்கும்  சாக்கில் டியூஷன் போவோம்னு கிளம்பினேன் . அங்கே அறிமுகம் ஆனவர் தான் இந்த பாஸ்கர் .


 இவர் அமரர் சுஜாதாவின்  தீவிர  ரசிகர்.  நான் அப்போதான் பாலகுமாரனிலிருந்து   சுஜாதாவுக்கு மாறிட்டு இருந்த  நேரம் .பாஸ்கர்  வீட்டில்  ஒருஅலமாரி  நிறைய   சுஜாதா புக்ஸா  குவிஞ்சு  கிடக்கும் .  என் கிட்டே இருக்கும்  பால குமாரன் நாவல் எல்லாம்  அவருக்கு குடுத்துட்டு  அவர் கிட்டே  இருக்கும்  சுஜாதா நாவல் எல்லாம் நான் வங்கிட்டுவந்து  படிப்பேன். 



 ஆரம்பத்தில்   இலக்கியம்  , நாட்டு நடப்பு , அரசியல் அக்கிரமங்கள் பத்தி   பேசிட்டு   இருந்தவர் கொஞ்சம் கொஞ்சமா   பர்சனல்  லைஃப் பத்தி  பேச  ஆரம்பிச்சார்  . 


எங்க ஊர்ல  மணி டாக்டர் மணி டாக்டர்னு ஒருத்தர்  இருந்தார் . ஆக்சுவலா  அவர் ஒரு கம்பவுண்டர் தான் . ஏதோ ஒருடாக்டர்  கிட்டே கம்பவுண்டரா   இருந்து   டைரக்டா அவரே பிரமொஷன் தனக்குத்தானே குடுத்துட்டு டாக்டர் ஆகிட்டார் . இதுல என்ன காமெடின்னா   அவர் ஊர்ல ராசியான டாக்டர் ஆனது தான். 

 அந்த டாக்டர்க்கு  ஒரு பொண்ணு, பேரு  கீதா. ரொம்ப அமைதியான டைப்பாம்.சாந்தின்னே  பேர் வெச்சிருக்கலாம்.டெய்லி சாயங்காலம்   ஆஃபீஸ்ல இருந்து  அவர் வந்ததும்  கிரி வீட்டுக்கு  வந்துடுவார். கேரம் போர்டு , செஸ் போர்டுடன்   ஒரு கூட்டம் தயாரா இருக்கும்.  8 டூ 9 கேம் , 9 டூ 10  அரட்டை  கச்சேரிநடக்கும் . போலீஸ்  ஸ்டேஷனுக்கு   எதிரே  ஒரு திண்ணை இருக்கும் , அங்கே  உக்காந்து தான்  அரட்டை.


ஈரோடு  கோ ஆப்டெக்ஸ் ல ப்ரிண்ட்டிங்க் செக்‌ஷன்  மேனேஜர்.சென்னிமலைல  சென் டெக்ஸ்,சென்கோப்டெக்ஸ் , சென் குமார் டெக்ஸ், ஜீவாடெக்ஸ் , அண்ணா  டெக்ஸ்னு  ஏகப்பட்ட சொசயிட்டி  இருக்கும். இங்கே  இருக்கும் மக்களுக்கு வாழ்வாதாரம்   நெசவுதான்.ஜக்காடு பெட்ஷீட்  ,போர்வை உற்பத்திக்கு பேர் போன ஊர்  . இந்தியா முழுக்க  இருந்து  வியாபாரிகள்  சென்னிமலை பெட்ஷீட்டை  ஈரோட்ல வந்து வாங்கிட்டுபோவாங்க . வாரா வாரம்  திங்கள், செவ்வாய் குடோன் வியாபாரம் மட்டும் 5கோடிக்கு ஆகுமாம்.


பொங்கல்  டைம் ல இலவச  வேட்டி சேலைக்கு   அரசு  சார்பா  சொசயிட்டில  குவாலிட்டிகண்ட்ரோல் ல ஏகப்பட்ட ஊழல் நடக்குதுன்னு புலம்புவாரு. அதாவது   ஒரு  சொசயிட்டில   தயாராகும்  வேட்டியை, சேலையை பார்த்து  ஓக்கே  பண்ண     5   ரூபா கமிஷன் .இந்த  சைடு பிஸ்னெசில்  பல  சொசயிட்டி  மேனேஜர்கள்   ஏகப்பட்ட பணம்  சம்பாதிச்சதாகவும்  அவரையும் லஞ்சம்  வாங்கச்சொல்லி  பிரஷர்  குடுப்பதாகவும் புலம்புவார் .


 இருக்கும்  வரை நேர்மையாக  இருக்க விரும்புவதாவும்  , அப்படி இருக்க முடியலைனா  வேலையை ரிசைன்  பண்ணிட விரும்புவதாவும் அடிக்கடி  சொல்வார்   . தனியார்  வேலைக்கே  நாய் படாத பாடு படும்  இந்தக்காலத்துல   ஒரு செண்ட்ரல்  கவர்மெண்ட் ஸ்டாஃப்  இப்படி  சொன்னதும்  எனக்குஅவர் மேல மரியாதை  கூடிப் போச்சு.


அவர் ஒருஆதர்ஷ புருஷனா   என் கண்ணுக்கு  தெரிய ஆரம்பிச்சார்.அவர்  எது சொன்னாலும்  அதுல   ஒரு  அர்த்தம் இருக்கும்  என  எண்ண  வெச்சார்.


பொது வாழ்க்கைல  ஒரு  மேனேஜரா , நண்பர்கள் வட்டாரத்துல   ஒருஜாலிமேனா   உலா வந்தவர்   பர்சனல் லைஃப்ல மட்டும்  சராசரியாத்தான்  இருந்தார் . இது  என்னை  கொஞ்சம்  உறுத்துச்சு .


கீதா  பாஸ்கரின்  தெய்வீகக்காதலி என தெரிஞ்ச  பிறகு    அவர் கிட்டே  கீதா பற்றிய  சம்பவங்களை ஆர்வமா கேட்க ஆரம்பிச்சுட்டேன் . வழக்கம்  போல  காதலியின் அப்பா  காதலுக்கு எதிர்ப்பு , காதலி  அப்பாவுக்கு பயந்த டைப்பு , சாப்ட் டைப் ப்ளாப்ளா ..

பரஸ்பரம்  நாங்க   2 பேரும்  ஒருவரை  ஒருவர்  விரும்பினாலும்  யாரும்  வெளிப்படையா   ஐ லவ் யூ சொல்லிக்கலை  அப்டினுஅடிக்கடி சொல்வார். இந்த காதல் கதையோட  க்ளைமாக்ஸ் சீக்கிரமா  முடிவுக்கு  வந்துச்சு. கீதாவுக்கு   வேற பக்கம் மாப்ளை பார்த்து மேரேஜ் பண்ணி வெச்சுட்டாங்க


 பாஸ்கர்   சரக்கு அடிக்கும் பழக்கமோ, தம்  அடிக்கும் பழக்கமோ  இல்லாதவர். அதனால   அவர் எப்படி சோகத்தை மறக்கப்போறார்னு  நாங்க எல்லாம் கவலைப்பட்டுட்டேஇருந்தோம்.


6 மாசம்  அமைதியா  எந்த ஒரு சம்பவமும் இல்லாம போச்சு . ஹிந்தி  டியூஷன் ல   ஜோதின்னு ஒரு பொண்ணு  படிக்க சேர்ந்தது . ஜோதிக்கு   ஆரம்பத்துல இருந்தே  பரமேஸ்ஜிக்கு போட்டியா  ஒரு ஹிந்தி டியூஷன்  செண்ட்டர் நடத்தனும்னு  ஒரு ஆர்வம் , வெறி இருந்துச்சு .  பிராத்மிக் , மத்யமா, ராஷ்ட்ரபாஷா , பிரவேஷிகா,அப்டினு    மொத்தம்  8 எக்சாம் டக்டக்னு  6  மாசத்துக்கு   ஒரு எக்சாம் எழுதி பாஸ் ஆகிடுச்சு . நாங்க எல்லாம்   வருசம்   ஒரு எக்சாம் தான் எழுதுனோம்


 அதாவ்து  8 வருசம் நாங்க படிச்சதை   ஜோதி  4  வருஷத்துல படிச்சு   ஹிந்தி பண்டிட் ஆகிடுச்சு .ஊர்ல எல்லாரும்  பிரமிச்சுட்டாங்க  . 30  வருசமா   அந்த  ஊர்ல   ஹிந்தி பண்டிட்னா பரமேஷ் ஜி தான் அப்டினு ஒரு பேர்  இருந்தது. அதை நாலே வருசத்துல  தூக்கி சாப்ட்டுட்டு ஹிந்தி   டியூசன்   தனியா  நடத்துச்சு


பரமேஷ் ஜி க்கு  ஒரு பொண்ணு இருக்குன்னு  சொன்னேனே  அந்த பொண்ணை சைட் அடிக்க வந்தவங்க ,  கரெக்ட் பண்ண  ட்ரை பண்ணி தோத்தவங்க    கொஞ்சம்  பேர்  ஜோதி கிட்டே  ஹிந்தி  படிக்க போனாங்க .


 ஜோதி   கிட்டே ஹிந்தி படிக்க போனவங்கள்ல வெங்கடேஷ்னு  ஒருத்தன்  எப்போ பாரு   சிரிச்சு சிரிச்சு  ஜோதி  கிட்டே பேசிட்டுஇருப்பான் . எல்லாரும்   ஜோதி - வெங்கடேஷ்  கிசுகிசுவை ஊர் பூரா பரப்பிட்டு   இருந்தாங்க.


 ஊரை விட்டு ஓடிப்போகும்   ஜோடி  மாசம் ஒண்ணாவது எங்க ஊர்ல  இருக்கும்.இந்த ஜோடி   எப்போ போகப்போகுதோ அப்டினு பேசிட்டு இருக்கும்போது   ஒரு எதிர்பாராத   திருப்பம். ஜோதி  சாமார்த்தியமா   பாஸ்கர் சார்க்கு  வலை வீசி அவரை  லவ் மேரேஜ் பண்ணிக்குச்சு. இது எல்லாருக்கும்   அதிர்ச்சி


 ஏன்னா   பாஸ்கர்  ஆல்ரெடி   கீதா காதல் நிறைவேறாத  சோகத்துல   இருந்தவர் . அவர் இன்னொரு காதலை 4 வருசத்துல  ஏத்துக்குவார்னோ , மேரேஜ் பண்ணிக்குவார்னோ  யாரும் நினைச்சுக்கூட பார்க்கலை .


பாஸ்கர்  மேரேஜ்க்குப்பின்    நண்பர்கள் வட்டாரத்துடன்  கலந்து பழகுவதை குறைக்க  ஆரம்பிச்சார். இது எல்லா வீட்லயும் நடப்பதுதான்.நட்பு  என்பது மேரேஜாகும் முன்  ஒரு  மாதிரி, மேரேஜ்க்குப்பின் வேற மாதிரி தான்  இருக்கும்


மேரேஜ் ஆகி 6 மாசம் கழிச்சு  ஒரு  நாள்  பாஸ்கர்  என்கிட்டே  தனியா சில  மேட்டர் பேசினார் . அவர் சொன்னசில  விஷயங்கள்  எனக்கு அதிர்ச்சியா இருந்தது


 ஜோதி பொசசிவ்  டைப்.  கீதா  ஃபோட்டோவை வீட்ல  எங்கயாவது பார்த்தாக்கூட ஜோதியால தாங்கிக்க   முடியலை.  அழுதுஆர்ப்பாட்டம்  பண்ணுவாங்க.   நெருக்கமான தருணங்களில் இப்போ யாரை  நினைச்சுட்டு இருக்கீங்க ?  என கேட்டு டார்ச்சர் பண்ணுவாங்களாம்.கிட்டத்தட்ட  புரியாத புதிர் ரகுவரன் மாதிரி.


 இதெல்லாத்துக்கும்   சிகரம்  வெச்சமாதிரி   ஜோதி கிட்டே இன்னொரு  கெட்ட பழக்கம்   இருந்திருக்கு .ஜோதி  3 மாசம் முழுகாம இருந்திருக்காங்க. பாஸ்கர்   ஜோதி   எதுகேட்டாலும் வாங்கித்தரும்  மனோநிலைல தான்  இருக்கார் .  அவர் அட்டாச்மெண்ட்டைபயன் படுத்தி ஜோதி  பாஸ்கரை மிரட்ட ஆரம்பிச்சிருக்கார்


 அவர்  டியூட்டி ல  இருக்கும்போது திடீர் திடீர் -னுபோன் பண்ணி  உடனே  கிளம்பி வா.வயிறு  வலிக்குது. வர்லைன்னா  தற்கொலை பண்ணிக்குவேன் அப்டினு மிரட்டுவது. இவர்  அவசர அவசரமா லீவ்  போட்டுட்டு வந்தா  “ நீ என் மேல பாசம் வெச்சிருக்கியா?ன்னு டெஸ்ட் பண்ணினேன் “  என சொல்வது .

இந்த  மாதிரி   3   டைம்  ஜோதி பண்ணி இருக்கு . 7வது மாசம். ஜோதி அவங்கம்மா  வீட்டுக்கு போறேன் -னு கேட்டிருக்கு . பாஸ்கர் “வேணாம், இங்கேயே  இரு, எங்கம்மா  பக்கத்து வீட்ல தான் இருக்காங்க , உங்க வீட்டுக்குப்போனா   நான்  உன்னைப்பார்க்க அடிக்கடி வரமுடியாது, உங்கம்மாவும் உன்னை நல்லா பார்த்துக்க  முடியாது “ அப்படினு  சொல்லி இருக்கார்


 எந்தப்பொண்ணுக்கும்  அவங்கவங்க அம்மா வீட்டுக்குப்போறது  ஒரு ஏக்கமாவும்  , வரமாகவும் இருக்கும் , என்னதான் அம்மா வீட்ல  வறுமை , புருஷன் வீட்ல செல்வம்  பொங்குதுன்னாலும் ,மாசமா இருக்கும்போது  அம்மா  வீட்டுக்கு  ஏங்குவது   இயல்பு.


ஜோதி  இந்ததடவை   பாஸ்கருக்கு ஃபோன் பண்ணி “ நான்   20தூக்க மாத்திரை  சாப்பிட்டுட்டேன் , நீங்க  உடனே வந்து என்னை  எங்கம்மா வீட்டுக்கு   கூட்டிட்டுப்  போங்க  அப்டினு  சொல்லி இருக்கு .  இவர்   ஏதோகோபத்துல   ஆஃபீஸ்லயே  இருந்துட்டார் . எப்பவும்  போல  இதுவும்  ஒரு மிரட்டல் வகையறா அப்டினு நினைச்சுட்டாராம்


 ஆனா  வயிறுவலி  தாளாம  ஜோதி  அழுது  புரண்டதை பார்த்து பக்கத்து  வீட்டு  ஆளுங்க ஹாஸ்பிடலில்  அட்மிட் பண்ணியது கேள்விப்பட்டு அடிச்சு பிடிச்சு ஊருக்கு வந்தார்.


 ஆனா அவர் ஜோதியை உயிரோட பார்க்க முடியலை. கர்ப்பத்தில் உள்ள  7  மாசக்கரு, ஜோதி  இரண்டு பேரும் அநியாயமா இரந்துட்டாங்க.


 சுடுகாட்டில்  பாஸ்கர்  மண்ணில்  விழுந்து அழுது  புரண்டதை என் வாழ்நாளில் மறக்கவே  முடியாது.  மாசமா  இருக்கும் பொண்ணு  செத்துட்டா   புதைக்கும் முன்  கர்ப்பிணியின்   வயிற்றை கத்தியால்  ஒரு கீறு  கிறிட்டுதான் புதைக்கனுமாம் , அது ஒரு ஐதீகம் ( குழந்தை இந்த உலக காற்றை  சுவாசிக்கனுமாம் ) . அப்படி   ஜோதி வயிற்றை  கத்தியில்  கீறக்கூட   அவர் ஒத்துக்கலை. அவ்வளவு  உயிரா  இருந்தாரு .


 பாஸ்கரின் வாழ்க்கைல  2 வது  பெரிய சோகம் . ஆள் அடிச்சுப்  போட்ட  மாதிரி ஆகிட்டாரு. கண்  கொண்டு பார்க்க முடியலை ,நமக்கு மிகவும் அந்நியோன்யமான  பழக்கத்தில் இருப்பவங்க உற்சாகமா இருக்கறப்ப கூடவே இருந்த நாம் அவங்க  பயங்கரசோகத்தில்  இருக்கும்போது  எப்படி அதை எதிர்கொள்வதுன்னே  நமக்குத்தெரியாது.


  ஒரு வருஷம்  இப்படியே  சோக மயமா போச்சு. பாஸ்கரின்  முதல் காதலி  கீதாவையோ , 2 வது காதலி  ஜோதியையோ அவர்  வீட்டில் ஏத்துக்கலை.  அதனால ஜோதியின் மரணம் பாஸ்கர்  வீட்டில் எந்த பெரிய பாதிப்பையும்   ஏற்படுத்தலை .


 ஈரோட்டுக்கு அருகே  இருக்கும் பள்ளிபாளையம் கற ஊர்ல  ஒரு  ஏழைப்பொண்ணா  சொந்தத்துல பார்த்து கல்யாணம் பண்ணிவெச்சுட்டாங்க. பாஸ்கரின்  பிடிவாதத்துக்கு  இடையே  எப்படியோ அவரை சம்மதிக்க  வெச்சு  இந்த  மேரேஜ்  நடந்தது  .


 3 வருஷம்  தாம்பத்ய  வாழ்க்கைல பாஸ்கருக்கு  2 பொண்ணுங்க பிறந்தது. மேரேஜ்க்குப்பின்  பாஸ்கர்  வீட்டுக்கு அடிக்கடி போக   முடியாவிட்டாலும்  வாரம் ஒரு முறை சண்டே அன்னைக்கு போவேன் .


 அப்போ நான் கவனிச்ச ஒரு விஷயம்   பாஸ்கர்  தன்  ம்னைவியை மத்தவங்க முன்னால் அடிக்கடி   மட்டம் தட்டற பழக்கம் வெச்சிருக்கார். அவர் மனைவிக்கு படிப்பு கம்மி, வசதியும் இல்லை. இதை  4 பேர்  முன்னால அடிக்கடி  சொல்லிக்காட்டி கிண்டல்செய்வது . ஹெரால்ட்ராபின்சன் , வைரமுத்து, அகதாகிறிஸ்டி பத்தி  உனக்கு என்ன   தெரியும்? னு கேட்டு டார்ச்சர் பண்ணுவது அப்டினு ஏதோ எனக்கு நெருடலாவே   இருந்துச்சு



 திடீர்னு  பாஸ்கர்க்கு உடல் நலக்குறைவு  ஏற்பட்டுச்சு. அவர்   ஒரு  சுகர் பேஷண்ட்  என்பதும் , அடிக்கடி  பிரசர்  மாத்திரையும் சாப்பிடுபவர் என்பதும் பின்னர் தான் தெரிய வந்தது . வி ஆர்  எஸ்  வாங்கிட்டு வீட்டுக்கு வந்துட்டார் .


எனக்கு ஒரு விஷயம்  புரியலை. எதுக்காக  வி ஆர் எஸ் வாங்கனும்? மெடிக்கல் லீவ் போட்டுட்டு  6 மாசம் கழிச்சு   பின்  மீண்டும் டியூட்டிக்கு  போலாமே?


பாஸ்கர்  அடிக்கடி  கேரம் விளையாட   கிரி வீட்டுக்கு வருவார்னுசொன்னேனே   அவர்  ஒரு நாள் ஃபோன் பண்ணி  “ பாஸ்கர் இறந்துட்டார்”னு  சொன்னார். எனக்கு   செம ஷாக்.


திடீர்னு அவர் இறந்தது  எனக்கு பெரும் அதிர்ச்சியா   இருந்தது . நமக்கு  நெருக்கமான நபர் இறந்தா நம்மை ஒரு வெறுமை சூழும் . அது என்னை அப்படியே   ஆக்ரமிச்ட்டே இருந்துச்சு.


 தகவல்   கிடைச்சு   பஸ் பிடிச்சு   வர்றதுக்குள்ளே பாஸ்கரை  எரிச்சுட்டாங்க. கடைசி கடைசியா  அவர்  முகத்தைக்கூட பார்க்க  முடியாம போச்சு.


சுடுகாட்டிலிருந்து  வெளியே   வந்து  கிரியிடம்   அழாதகுறையாய்  பேசிட்டு  இருந்தேன் . அவர்  சொன்ன சில தகவல்கள் எனக்கு புதிராய் இருந்துச்சு



பாஸ்கர்க்கு ஆஃபீசில் ஏதோ   ஒரு பெண்ணுடன் கனெக்‌ஷனாம். அந்தப் பொண்ணோட  அடிக்கடி  திருப்பூர்  , ஊத்துக்குளின்னு சுத்துவாராம் . ஆபீஸ் வேலையா   2 பேரும்   கேமப் அடிக்கும்போது  கனெக்‌ஷன் ஆகிடுச்சாம் .பெண்கள் விஷயத்தில்  அவர் வீக் என்பதை என்னால்  ஜீரணிக்கவே  முடியலை. அதுவும்  இன்னொரு தகவலைஅவர் சொன்னதும் எனக்கு ஹார்ட் அட்டாக்கே   வந்துடுச்சு .


 பாஸ்கர்க்கு எய்ட்ஸ். அதனால் தான் அவர் உருக் குலைஞ்சு போய் இருந்தார் .கடைசி காலத்துல   அவருக்கு மனைவியிடம்  உரிய மரியாதை  கிடைக்கலை . பணிவிடை  செய்ய   ரொம்ப சங்கடப்பட்டுட்டு  செய்யுமாம் . 

கிரி கண் முன்னாலயே  பாஸ்கரை   அவர் மனைவி அலட்சியமா நடத்துச்சாம். அவர்   இறப்பே  கூட  சந்தேகத்துக்கு உரியதுதான் . அப்டினு ஒரு  குண்டைத்தூக்கி போட்டார் .


 அவர் கிட்டே நான் புலம்பினேன் . அவர் வாழ்க்கைல   எதையும் அனுபவிக்கவே இல்லை , ஜோதி  , கீதா என2 காதல்  தோல்வி என்றேன்.


 அப்போதான்   கிரி  இன்னொரு குண்டைத்தூக்கிப்போட்டார். ஜோதிக்கு   வெங்கடேஷ் அப்டினுஒரு  பையன்   கூடகனெக்‌ஷனாம். அவங்க   2 பேரும்  ஒண்ணா  இருந்ததை  ஒரு டைம்  நேர்ல பாஸ்கர் பார்த்துட்டாராம்   . திட்டம்  போட்டு  கொலை தான் பண்ணி  இருக்கனும் . மாசமா இருக்கும்  பொண்ணு  தற்கொலை செஞ்சா  ஏன் போஸ்ட் மார்ட்டம் பண்ணவே இல்லை ? அவசர அவசரமா பாடியை   எடுக்க்னும்? வழக்கமா புதைக்கும்  வழக்கம்  உள்ளவங்க   ஜோதியை  ஏன்  எரிக்கனும் ? என்றார்.


 சரி , பாஸ்கரை   எரிச்சாங்களா?  புதைச்சாங்களா?


 எரிச்சுட்டாங்க






Lakshmana Sami S's photo.



மேத்ஸ் மிஸ் சினிமா எடுத்தா டைட்டில் என்ன வா இருக் கும் ?

இது இருளல்ல அது ஒளியல்ல
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் ...
அட உலகை ரசிக்க வேண்டும் நான்
உன் போன்ற ........ணோடு. My click in Andaman Islands On Aug 29,2013
இது இருளல்ல அது ஒளியல்ல 
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் ...
அட உலகை ரசிக்க வேண்டும் நான் 
உன் போன்ற ........ணோடு. My click in Andaman Islands On Aug 29,2013
1. அன்பே! இரு மாநிலங்களுக்கும் பொது தலைநகராக ஐதராபாத் இருப்பது போல் உனக்கும் ,உன் தங்கைக்கும் பொது தலைவனாக நான் ஏன் இருக்கக்கூடாது?



----------------------



2. என்னோடு வாழ வந்தவளா? என்னை ஆள வந்தவளா? நீ!




----------------------------




3. மரணச்செய்தியை உறுதிப்படுத்தாமல் பிரசுரித்த ஊடகங்கள் மீது கனகா தரப்பு வழக்கு தொடுத்தால் கோடிக்கணக்கில் நஷ்ட ஈடு உண்டு்.மருத்துவச்செலவு்



--------------------------


4. ஆனந்தம் இன்று ஆரம்பம்.மெல்ல சிரித்தால் என்ன ? # அஜித் பட ப்ரமோ சாங்க்



-------------------------


5. ஒரு ராம பக்தை தன் அதி தீவிர பக்தியில் ராமர் உருவ டாலரை செயினில் கோர்த்து அணிந்துள்ளார் # செயின் நீளம் 20 செமீ ;-)))



--------------------------


ahaa .. enna azagu..


6. இரந்து நிற்பவர்களுக்கு காசாக ,பணமாகத்தருவதை விட ஒரு வேளை உணவை உங்கள் கையால் அளித்துப்பாருங்கள்




-----------------------


7. ஆடம்பர பங்களாக்களில் கிடைக்கும் டைனிங் டேபிள் உபசரிப்பை விட குடிசையில் தரப்படும் ஒரு டம்ளர் மோர் என் உள்ளத்தை குளிர்விக்கிறது



-------------------------


8. என் இணையே! நீ என் மீது வைத்திருக்கும் அன்புக்கு இல்லை ஈடு இணையே!


-------------------------


9. சந்தர்ப்ப சூழலால் வெளியே சொல்ல இயலாத சூழல் இருக்குமே தவிர நாம் அன்பு கொண்ட உள்ளத்துக்கு நம் மீதும் அன்பு நிச்சயம் இருக்கும்




-------------------------


10. வளர்மதி ,வளர்ஜோதி னு குழந்தையா இருக்கும்போது பேர் ஓக்கே.வளர்ந்த பின்னும் அதே பேரா ?




--------------------------


இது ஒரு ஓவியம் ... நம்ப முடிகிறதா ... என்னே கலை நயம் ....
இது ஒரு ஓவியம் ... நம்ப முடிகிறதா ... என்னே கலை நயம் ....


11. மேத்ஸ் மிஸ் சினிம எடுத்தா டைட்டில் லைப் ஆப் 22/7



--------------------------



12. மாடர்ன் உலகில் செவ் வாய் உள்ள பெண் பிள்ளை பிழைக்கும்



------------------------


13. poor photography = ஏழை ஒளிப்பதிவு # ச சு



-------------------------


14. வஞ்சி எனறு அழைத்தேன் அன்பாக.வஞ்சிப் பாய் என எதிர் பார்க்கவில்லை




------------------------


15. உன் கூந்தலைப்பிடித்து இழுத்தபோது சவுரி கையோடு வந்ததிலிருந்து உன்னிடம் எதையும் பிடித்து இழுக்க தயக்கமாகவும் பயமாகவுமே இருக்கிறது




-------------------


Awesome!!! Create yours @ http://tinyurl.com/mvh4a3y
Awesome!!! Create yours  @ http://tinyurl.com/mvh4a3y


16. ஹோட்டல் கண்ணாடிக்கதவுகளில் இழு வாசகம் பார்க்கும்போதெல்லாம் உன்னை வம்பிழுத்த நினைவுகள்



-------------------------



17. மெது வாய் உன் கிட் டே வந் தேன்.என்னைத்தள்ளி விட் TOY



------------------------


18. இனிமே சரக்கு அடிக்க மாட்டேன்.னு நண்பன் சொன்னாக்கூட வா.சரக்கு அடிச்சு அதைக்கொண்டாலாம்னு சொல்றவன் தான் டாஸ்மாக் தமிழன்


----------------------------

19. உன் பெயர் பெரிதாக இருந்தால் சுருக்கிக்கூப்பிடலாம் செல்லமாய்.ஆல்ரெடி சின்னது.அதையும் எப்படி சுருக்க?





--------------------


20. உன்னுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடாததற்கு காரணம் நான் உன்் மடியில் கை வைத்திருக்கையில் நீ என் இலையில் கை வைத்து காலி செய்து விடுவாய்



------------------------------

Maldives
Maldives

Wednesday, September 04, 2013

ஹாலிவுட் கிசுகிசு கார்னர்

ஹாலிவுட் போஸ்ட்

1 • சமீபத்தில் நியூயார்க்கில் ஆய்வு செய்யப்பட்ட ஹாலிவுட் சினிமா நடிகர்களின் சம்பளப்பட்டியலில், உலக நடிகர்களிலேயே அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டார். போதாதா...? ஆளாளுக்கு "அவர் நடிப்பு அப்படி... இல்லை இல்லை அவர் கவர்ச்சிக்குத்தான் அதிக சம்பளம்... அட அவர் நடந்தாலே பார்க்க படம் பிச்சுக்குமே... என்று ஏகப்பட்ட புகழுரைகள். அப்படித்தானே புகழ்வார்கள். இந்திய மதிப்பில் சுமார் 180 கோடி ரூபாய் சம்பளமாச்சே. முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களில் ஜெனிபர் லாரன்ஸ் (150 கோடி), கிறிஸ்டின் ஸ்டுவார்டு (125 கோடி) உள்ளனர். உலக நாயகிகள்!



  2. • பிரபல பாடகர் ஜஸ்டின் பீபரை பார்க்க, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது. அவருக்கு ரசிகர் கூட்டமும் அதிகம். கூட்டத்தைப் பார்க்க ஹோட்டல் பால்கனிக்கு வந்த பீபர், அவர்களைப் பார்த்து எச்சிலைத் துப்பிவிட்டாராம். இதில் ரசிகர் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ரசிகர்கள் கூச்சல் போட்டதைப் பார்த்து, பயந்துபோய் உள்ளே போய்விட்டராம். அதன் பிறகு ஒரு டிவி நிறுவனத்தை அழைத்து பேட்டி கொடுப்பதுபோல, "இன்று காலை நான் தூங்கி எழுந்து பார்த்தபோது நிறைய ரசிகர்கள் எனக்காக காத்திருந்ததைப் பார்த்தேன். உலகிலேயே சிறந்த ரசிகர்கள் இவர்கள்தான்' என்று ஐஸ் மலையையே இறக்கியிருக்கிறார். துப்புறது எச்சில்; பேச்சில் ஐஸ்ô?



3. • ஹாலிவுட்டில் குழந்தைகள் படங்கள்தான் வசூலை வாரிக் குவிக்கின்றன. அதிலும் குறிப்பாக அனிமேஷன் படங்கள்தான் இந்த லிஸ்டில் முன்னணி வகிக்கின்றன. "ஸ்மர்ஃப்ஸ்' என்ற படத்தின் முதல்பாகம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து தற்போது வந்துள்ள "ஸ்மர்ஃப்ஸ்-2' சக்கை போடு போட்டுள்ளது. சின்ன சின்ன உருவங்கள் செய்யும் சாகசங்கள் குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் கவர்ந்துவிட்டன. முதல் பாகம் கொடுத்த வசூலும் நம்பிக்கையும் இரண்டாம் பாகத்தில் தொடர்ந்திருப்பதில் சோனி பிக்சர்ஸýக்கு ஏக மகிழ்ச்சி.
 
 
 
 முதல் பாகத்தை இயக்கிய ராஜா கோஸ்நெல்தான் இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். அப்புறம் என்ன மூன்றாவது பாகத்துக்கு தயாராக வேண்டியதுதானே? 
 
 
 
4.• போதை மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்ட லின்ட்சே லோஹன், தற்போது மறு வாழ்வு மையத்தில் சீர்திருத்தப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறாராம். ஆனால் இப்படிப்பட்ட கறை தன் மீது விழுந்துவிட்டதே என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கும் லின்ட்சே லோஹன், எப்படியாவது அந்தக் கறையைத் துடைத்தெறிய வேண்டும் என்று நினைக்கிறார். தான் தாயானால் இதைச் சரி செய்துவிடலாம் என்று முடிவு செய்து, "யாராவது எனக்கு விந்தணுக்களை தானம் தரமுடியுமா?' இப்படி வலைதளத்தில் கேட்டிருக்கிறார். "ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு அதன் மூலம் குழந்தைப் பெற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை' என்று லின்ட்சே கூறினாலும், யாரும் அவரைத் திருமணம் செய்ய முன் வரவில்லை என்பதே உண்மையாம். ஒரு கறையைத் துடைக்க, இன்னொரு கறையா?   
 
 


5. • வார்னர் பிரதர்ஸ் "மேன் ஆஃப் ஸ்டீல்' படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருக்கிறது. சூப்பர்மேனுடன் பேட்மேனும் இந்தப் படத்தில் இணைய இருக்கிறார். ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. "பேட்மேன் பிகின்ஸ்", "த டார்க் நைட்", "த டார்க் நைட் ரைசஸ்" ஆகிய பாகங்களில் பேட்மேனாக நடித்த கிறிஸ்டியன் பேய்ல் இனிமேல் இந்தப் பாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால் படத்தின் இரண்டாம் பாகத்தின் கதைக்கு முன்னால் புதிய புதிய பேட்மேனை தேடியாக வேண்டுமாம். இரும்பு மனிதனாகத் தேடுங்க...



6.• மேகன் ஃபாக்ஸ், பிரைன் ஆஸ்டின் கிரின் இருவரும் ஹாலிவுட்டில் நல்ல காதல் ஜோடியாக வளம் வந்து, திருமணமும் செய்து கொண்டார்கள். இவர்களின் காதலுக்கு அடையாளமாக முதல் குழந்தை பிறந்தபோது, "என்னுடைய வாழ்நாளில் நான் விரும்பியது குழந்தையைதான். என்னுடைய வாழ்க்கையை குழந்தைக்காக அர்ப்பணிப்பேன்' என்று உணர்ச்சிவசப்பட்டார் மேகன். இப்படிச் சொல்லி ஒரு வருடம்கூட ஆகவில்லை. இன்னொரு குழந்தைக்குத் தாயாகிவிட்டார் மேகன். இந்த முறையும் உணர்ச்சி வசப்படல் தூக்கலாகவே இருந்தது. போதாக்குறைக்கு "இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்' என்று வேறு கூறிவருகிறார். ஏதேது..? இன்னொரு ஏஞ்சலினா ஜூலி ஆகிவிடுவார் போலிருக்கிறதே!
 
 நன் றி -தினமணி 


UNIVERSAL SOLDIER -DAY OF RECKONING - சினிமா விமர்சனம்

 

ஹீரோ கோமா ஸ்டேஜ்ல இருக்காரு. ஹாஸ்பிடல்ல அவர் கிட்டே ஸ்டேட்மெண்ட் வாங்க  எஃப் பி ஐ ( FBI) காத்திருக்கு . ஆனா அவருக்கு கொஞ்சம் கொஞ்சம் தான்  நினைவு  இருக்கு . நினைவு  தெரிஞ்ச வரை என்ன நடந்ததுன்னா  ஹீரோவுக்கு  ஒரே ஒரு சம்சாரம் , ஒரு பெண் குழந்தை . ஒரு நாள்  3 பேர் கொண்ட கும்பல்  அவர்  வீட்டுக்கு  வந்து  சிரியாவை சின்னாபின்னப்படுத்தும்,  அமெரிக்கா மாதிரி  அவர்  குடும்பத்தையே நிர்மூலம் ஆக்கிடுது .


 பழிக்குப்பழி வாங்கத்துடிக்கறார். தன் குடும்பத்தை சிதைச்சது யார்?னு கண்டு பிடிக்க விசாரனையில் இறங்கறார். அவருக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கு. 

 அதாவது கவர்மெண்ட்டே  இப்படி  ஒரு ஏற்பாட்டை பண்ணி  இருக்கு .  அவர்  நினைவில்  இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததா  மூளையில் பதிவு பண்ணி வைக்குது . உண்மையில் அப்படி  ஒரு சம்பவமே நடக்கலை . வெறும் பிம்பம் மட்டுமே அவர்  மூளைல பதிவாகி  இருக்கு . அதாவது பதிவு செய்யப்பட்டிருக்கு 


எதுக்காக கவர்மெண்ட் இப்படி பண்ணுச்சு ?  ஹீரோ  இதுக்கெல்லாம் எப்படி பதிலடி தர்றாரு? என்பதை எந்த அளவு வன்முறையும் , ரத்தமுமா சொல்ல முடியுமோ அந்த அளவு வல்கரா  சொல்லி  இருக்காங்க .





ஹீரோ Scott Adkins   ஆள் ஜம்முன்னு  இருக்கார் . ஜிம் பாடி . ஃபைட் சீன்ல கலக்கி எடுத்துட்டார் . பாடி லேங்குவேஜ் ல இன்னும்  சுறு சுறுப்பு காட்டி இருகலாம் . குழந்தையுடன்   கொஞ்சும் காட்சிகள் , மனைவியுடன் மகிழ்ந்திருக்கும் காட்சிகள் இன்னும் நல்லா சொல்லி இருக்கலாம். அப்போதான் அவங்க இறந்ததன் பாதிப்பு ஆடியன்சுக்கு  பாதிப்பா  உணர வைக்க முடியும் . 



வில்லனா சூப்பர் ஸ்டார்  ஜீன் கிளாடு வேண்டம் . இவர் ஹீரோவை விட செம எக்சசைஸ் பாடி .  ஃபைட் சீனில்  பொறி பறக்குது . 


 ஹீரோயின் , அந்த  குழ்ந்தை  எல்லாரும்  கச்சிதமான நடிப்பு . 


இன்னொரு  ஹீரோயின்  நம்ம ஊர்   இலியானாவுக்கே அக்கா மாதிரி  ரொம்ப ரொம்ப  மெல்லிய  தேகம் ,. அய்யோ பாவம் . காம்ப்ளான்  அவங்கம்மா குடுக்கவே இல்ல போல




இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  



1.  ஒரு ஆக்‌ஷன் படம் , சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி பேஸ் ல சொல்லப்பட்டாலும் மிக நிதானமான அணுகுமுறை திரைக்கதை ல தெரியுது . வெல்டன் . பொதுவா இந்த மாதிரி கதைல ட்ரீட்மெண்ட் ஃபாஸ்ட்டா  இருக்கனும்னு  நினைப்பாங்க . இவர் வித்தியாசமா  ஸ்லோவா சொல்லி இருக்கார்



2. படத்தில் 2 இடங்களில்   யூகிக்க முடியாத   திருப்பங்கள்      வருது . குட்



3.   வில்லன்  ஜீன் கிளாடு வேண்டம்க்கு அளிக்கப்பட்ட அதீத  முக்கியத்துவம் படத்துக்கு பிளஸ் பாயிண்ட் , கேப்டன் பிரபாகரன்  மன்சூர் அலிகான்  மாதிரி .காக்கிச்சட்டை சத்யராஜ் மாதிரி . ஒரு படத்தில்  வில்லன்  ரோல் பிரமாதமாக பேசப்பட்டால்  ஆட்டோமேட்டிக்காக் அது மக்கள் மனதில் தங்கி விடும் சாத்தியக்கூறுகள் அதிகம்  




இயக்குநரிடம்  சில  கேள்விகள்:



1. ஹீரோவுக்கு   எந்த பழைய நினைவுமே  வரவில்லை . முதன்  முதலாக   அவர் நுழையும் ஒரு வீட்டில்     எந்த இடத்தில்  எந்த சுவிட்ச் இருக்கு  என்பதை துக்ல்லியமாக  தெரிந்து வைத்திருப்பது எப்படி? 



2. சிவப்பு  கலர் கார் ஒன்றை  ஹீரோ அபேஸ் பண்ணி பல இடங்களுக்கு போறார் . அந்த கார்  ஓனர்  ஹீரோவை சத்தம் போடறார் . அவ்வளவுதான், அட்லீஸ்ட் போலீஸில்  கூட புகார் தர மாட்டாரா? எப்படியோ போய்ட்டு போகுதுன்னு அநாமத்தா விட அது என்ன சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரா?


3.  ஹீரோவுக்கு  ஒரு குழப்பம் . தன் மனைவி  , மக்ள்  கொல்லப்பட்டாங்களா? எல்லாம் டிராமாவா? அப்டின்னு . ஏன் அவர் கல்லறை போய் செக் பண்ண எந்த முயற்சியும் எடுக்கலை? 


4.  அரசாங்கம் ஏற்பாடு செஞ்ச ஹாஸ்பிடல்லயே ட்ரீட்மெண்ட் எடுக்கும்  ஹீரோ உண்மை  நிலவரம் அறிய  ஏன் வேற பிரைவேட்  ஹாஸ்பிடல் ல போய் தன்னை  செக் பண்ணிக்கலை ?



5.  கோபமாக   இருக்கும்  ஹீரோவை சந்திக்க வரும்  உயர் அதிகாரி  கையில் எந்த ஆயுதமோ , வேறு பாதுகாப்போ இல்லாம தனிமையில் அவரை சந்திச்சு சாவது எப்படி? 


6.   தேவைக்கு மேல   ரொம்ப ஓவரா  வன்முறை , ரத்தம்   எதுக்கு ?





மனம் கவர்ந்த வசனங்கள்


1. வாழ்த்திக்கொடுத்த சாபத்தை   வரமா மாத்திக்கிட்டோம் 


2. இங்கேயே  இரு . 10  நிமிஷத்துல நான்  வந்துடறேன்

 அப்படி வர்லைன்னா ?

 மறுபடி  ஒரு 10  நிமிஷம் இரு



3. ஞாபகங்கள் எப்பவும் நம்மை துன்புறுத்திட்டுத்தான்  இருக்கும்



ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-40



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =  2.5  / 5


சி பி கமெண்ட் - ஆக்‌ஷன்  , சயின்ஸ் ஃபிக்சன் ஸ்டோரி  விரும்பிகள் பார்க்கலாம் . பெண்கள் , மைனர்கள் , மாணவ , மாணவிகள் தவிர்ப்பது நல்லது . குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள்  அவசியம் தவிர்க்க வேண்டிய படம்



டிஸ்கி -  படத்துல  3  சீன்  இருக்கு , ஆனா  தியேட்டர்ல பார்த்தா   நோ யூஸ் , சிங்கம் ல அனுஷ்கா வுக்கு  கலர் கலரா என்னமோ அடிச்சு மறைச்ச மாதிரி  திரைல ஏதோ புள்ளி மாதிரி காட்டி மறைச்சுட்டாங்க , டிவிடி ல பாருங்க

சிக்னேச்சர் டீச்சர் சிக்குபம்

1.அன்பே! நீ சமையலை முடிக்கும் வரை நான் உண்ணா விரதம் இருக்க முடிவு




----------------------



2. அய்யனார் - அர்த்தம் மாறாமல் ஆங்கிலத்தில் சுருக்கி எழுதனும் = INR



--------------------



3. முன் தின இரவில் மழை வந்தால் காலையில் வாக்கிங் வரும் தம்பதிகள் யாரையும் காணமுடிவதில்லை



----------------------


4. சினிமா தியேட்டர்ல முன் சீட்டில் கால் வைக்காதீர் சிலைடு மாதிரி பஸ்ல பக் சீட்டில் கை வைக்காதீர் னும் எழுதிப்போடனும்




------------------


5. உணவு இல்லாமல் யாரும் படுக்க கூடாது-சோனியா# நைட் ஆனா பசியோட உக்காந்த வாக்குலயே தூங்கிடனும்?



-----------------------


6. கர்நாடகாவில் திவ்யா ஸ்பந்தனா எனும் குத்து ரம்யா எம் பி ஆனதால் நாட்டின் எதிர்காலம் திவ்யமாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


-----------------------


7. பயத்தமாவு தடவி முகத்தைக் கழுவுங்க பளிச்சுன்னு ஆகிடும்



 டாக்டர்.நான் எதுக்காக அந்த மாவைத்தடவிக்குடுக்கனும்?அது என்ன பூனைக்குட்டியா?





-------------------------


8. சிக்னேச்சர் டீச்சர் சிக்குபம் - என்னடா சொல்றே? சிம்பு மாதிரியே எழுதுவியா?எங்கே?எழுதிக்காட்டு. 



லொள் மாணவன் - ஹாய் ஹன்ஸ்.ஐ லவ் யூ


-------------------


9. அரிசியை ஊறவைக்கக்கூட அலாரம் வெச்சு எந்திரிக்க வேண்டியதா இருக்கு



-------------------


10. ஒரு பூனை தன் ஜோடிப்பூனை கிட்டே"உனக்கு அப்புறமா கிஸ் தர்றேன் கறதை எப்டி சொல்லும்? CAT( I)CH U LATER



---------------------



11. குடும்பவாழ்வில் பேராசைப்படாதே! பொது வாழ்வில் காராசைப்படாதே # நாஞ்சில் சர்பத் டைரியில் இருந்து



--------------


12. மோதிரம் அழகா இருக்கு என்றேன்.நீயே போட்டுக்கோ என கழட்டிக்கொடுத்தாள்.அடடே! நெக்லஸ் கூட பிரமாதம்



--------------------------


13/   சன்டே னா இந்த சம்சாரங்க எல்லாம் அவங்கவங்க அம்மா வீட்டுக்கு போய் டைம்க்கு சாப்ட்டுக்குவாங்க.புருசன் தனி ஆளா எல்லா வேலையும் செய்யனும்




-------------------


14. MGR பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்: விஜயகாந்த் # கருப்பு MGR் னு பட்டம் சூட்டிக்கிட்டது மட்டும் சீட்டிங் இல்லையா? -ஜெ





-----------------------



15. ஓபிஎஸ் - மேடம் இன்னைக்கு மூடு அவுட்டா இருக்காங்க.கேப்டனுக்கு 61 வது பிறந்தநாள்.விஜய்க்கு கல்யாண நாள்.




----------------------


16. எஸ் ஏ சி - என் பையன் இப்போ சி விஜய்.நாளை சி எம் விஜய்.



---------------------


17. ஜெ - மறுபடியும் எதுக்கு வந்திருக்கீங்க? விஜய் - இன்னைக்கு என் கல்யாண நாள்.கொண்டாடலாமா? ஏதும் அப்ஜெக்சன் இல்லையே?




--------------------------



18. ஜெ - அரசியலுக்கு வரமாட்டேன்னு சொல்லவே இல்லைனு சொன்னீங்களாமே? விஜய். - அப்டி சொன்னதும்  நான் இல்லை.அப்டினு அடிச்சு விட்டுடறேன் மேடம்்




------------------------


19. ட்விட்டரில் இருப்பது போலி விஜய் - நடிகர் விஜய் # எங்களுக்கும் தெரியும்.அசல் அஜித் தான்




-----------------------


20. காதலியை சந்திக்க செல்கையில் மோதிரம் ,பிரேஸ்லெட் ,செயின் இவற்றை வீட்டிலேயே கழட்டி வைத்து விட்டுச்செல்வது ஆணுக்கு பாதுகாப்பு

Tuesday, September 03, 2013

சுவடுகள் - சினிமா விமர்சனம் ( தினமலர் விமர்சனம்)

 

தினமலர் விமர்சனம்

அமெரிக்க வாழ் ஈழத்தமிழரான ஜெய்பாலா, எழுதி, இயக்கி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உடை வடிவமைப்பு எல்லாம் செய்து தயாரித்தும் இருக்கும் ப(பா)டம் தான் ‘சுவடுகள்’ (எப்படி படம் எடுக்க கூடாது? என்பதற்கான ப(பா)டம்!) பத்தாண்டுகளுக்கு முன் மனிதர், மேற்படி காரியங்களை எல்லாம் செய்து இயக்கி, தயாரித்த ‘சுவடுகள்’ திரைப்படம் வெளிவரும் சுவடுகள் தெரியாமல் பெட்டியில் கிடக்க, அதை அமெரிக்கா சென்று மீண்டும் சம்பாதித்து வந்து ஒரு வழியாக ரிலீஸ் செய்திருக்கிறார் ஜெய்பாலா! அதற்காக வேண்டுமானால் அவரை பாராட்டலாம்! பத்து வருஷத்துக்கு முந்தைய ‘சிலந்தி’ நாயகி மோனிகாவை ரசிக்கலாம் என்பது ஆறுதல்!

மற்றபடி கதை என்று பார்த்தால் சுவடுகள் படத்தில் பெரிதாக எதுவுமில்லை. அப்பா, மோகன் ஷர்மாவின் தொழிலை அவருக்கு பின் ஏற்று நடத்துகிறார் ஜெய்பாலா! அப்பாவுக்கு வில்லனாக இருந்த மார்க்சாமி எனும் நடிகர் ராஜேஷ் இவருக்கும் வில்லனாகிறார். ராஜேஷின் உச்சபட்ச வில்லத்தனத்தால் அம்மா, மனைவி, குழந்தை எல்லோரையும் மறந்து தற்கொலைக்கு முயலுகிறார் ஜெய்பாலா! அங்கு பிரபல திரைக்கதை வசனகர்த்தா கலைஞானத்தின் கீதா உபதேசம் கேட்டு தற்கொலை முடிவிற்கு தற்கொலை செய்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறார். அவர் திரும்பியவுடன் ஊரே கூடி நின்று மகிழ்ச்சி கும்மியடித்து பாட்டு பாடுகிறது!




இந்தக்கதையை எப்படி, எப்படி எல்லாம் இழு இழு என இழுக்க முடியுமோ? அப்படியெல்லாம் இழுத்து படம் பண்ணியிருக்கிறார் ஜெய்பாலா! இந்த மனுஷருக்கு எம்.ஜி.ஆர்., ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் போல, எம்.ஜி.ஆர். காலத்து எம்.எஸ்.வி.யை இசையமைப்பாளராக்கி, கே.ஆர்.விஜயாவை அம்மாவாக்கி, சிவாஜி மாதிரி நடிக்கும் ராஜேஷை வில்லனாக்கி படம் பார்க்கும் ரசிகர்களை அம்போ - சிவசம்போ என்றாக்கி விடுகிறார்!




இவர் படத்தில் பெரிய பிஸினஸ்மேன் போல் பிஸினஸ் பிஸினஸ் என்கிறார். என்ன பிஸினஸ் செய்கிறார், ஏன் ராஜேஷ் எதிரியாகிறார், வங்கியில் செலுத்திய பணத்திற்கான ரசீது தொலைந்துவிட்டால் வாழ்க்கையே தொலைந்துவிடுமா என்ன! என்பதெல்லாம் படம் பார்க்கும் நமக்கு மட்டுமல்ல, ஜெய்பாலாவுக்கும் புரியாத புதிர் தான் போலும்... அப்பப்பா... தாங்கலடா சாமி! இவர் எம்.ஜி.ஆர்., ஆகும் முடிவை கைவிட்டு நம்பியராக முயன்றால் அடுத்தடுத்து வில்லனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வரலாம்!

ஆகமொத்தத்தில் ‘சுவடுகள்’ - இப்படி எல்லாம் படம் எடுக்கக்கூடாது என தடம் பதித்திருக்கும் ‘சு’வடு
thanx - dinamalar 



சும்மா நச்சுன்னு இருக்கு - சினிமா விமர்சனம்

பெரிய தொழில் அதிபரோட  பொண்ணு ஒரு பொறம்போக்கை லவ்வுது. அப்பாவின் சொத்துக்கள் வேண்டாம்னு உதறிட்டு அவன்  வீட்டுக்கு வருது. அந்த தத்தி “எனக்கு உன் மேல ரியல் லவ் எல்லாம் இல்லை , சொத்துக்குத்தான் ஆசைப்பட்டேன்னு உளறிடறான்.அவ  உடனே ஜெர்க் ஆகி நிக்கறா. அவன்   கூட  இருக்கும் ரவுடிங்க வேஸ்ட்டா போகக்கூடாது ,டேஸ்ட் பார்த்துடலாம்னு சொல்றாங்க . அவ ஓடறா , அவங்க  துரத்தறாங்க . இப்போ  ஹீரோ எண்ட்ரி 


ஃபைட்ல  அந்தப்பொண்ணு தலைல அடி பட்டு கோமா ஸ்டேஜ்க்கு போய்டறா.  ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்றாங்க .நர்ஸ்  ஹீரோவை அந்த பொண்ணோட  புருஷனா நினைச்சு ஃபார்ம்ல சைன் வாங்கறா.பொண்ணோட அப்பா  வர்றாரு . அவர் கிட்டேயும் அந்த பொய்யை ஹீரோ மெயிண்ட்டெயின் பண்றாரு .

அந்தப்பொண்ணுக்கு ஒரு தங்கச்சி .அதை  ஹீரோ லவ் பண்றாரு . அக்கா   புருஷன்கற நினைப்பு  எதுவும் இல்லாம அந்த கேனமும் ல்வ்வுக்கு ஓக்கே சொல்லுது 


ஊரார்க்கு அக்காவை  லவ்வற ஹீரோ  தனி டிராக்ல தங்கச்சியை லவ்விட்டு  இருக்கும்போது அக்காவுக்கு நினைவு  திரும்புது . என்ன ஆகுது? என்பது தான் மிச்ச மீதி மொக்கை கதை 

விஜயை கலாய்க்கும் காட்சி


நல்ல காமெடி ஸ்கோப் உள்ள கதையை அநியாயமா மொக்கை படம் ஆக்குவது எப்படி?ன்னு ஏ வெங்கடேஷ் கிட்டே எல்லாரும் கத்துக்கனும் .


ஹீரோ சட்டம்  ஒரு இருட்டறை ரீமேக்ல ஹீரோவா வந்த தமன் . மொக்கையான திரைக்கதை என்றாலும் இவரால்  முடிஞ்ச அளவுக்கு சமாளிச்சி நடிக்கறார். 2   ஹீரோயின்   இருந்தும்  இவருக்கு  ஒண்ணுல  கூட கெமிஸ்ட்ரியோ , பிசிக்ஸோ ஒர்க் அவுட் ஆகலை 



 நிஜ  ஹீரோ பவர் ஸ்டார் தான் . காமெடி  வில்லனா  வர்றார், இவர் விஜயை கலாய்த்து நடனம் ஆடுவது , ரஜினியை நக்கல் அடித்து பஞ்ச் டயலாக் பேசுவது எல்லாம் ஆரவாரம் . தியேட்டர் அல்லோலகல்லோலப்படுகிறது .ஆனால் பவர் ஸ்டார்  கொஞ்சம் நடிக்கவும் கத்துக்கனும் , சீக்கிரம் போர் அடிச்சுடும் 


ஹீரோயின்ஸ்   2 பேரு , அர்ச்சனா , விபா அப்டின்னு . 2ம்  தேறாது . 50 மார்க்  போடலாம். லோ பட்ஜெட் படம் இல்லையா? அதான்  சுமாரா இருந்தா போதும்னு  நினைச்சிருப்பாங்க போல 


ஈரோடு மகேஷ்  படத்துக்கு வசனம் . சந்தானம் மாதிரி  படம் பூரா   வர்றார் ஆனா  ஒரு சீனில்  கூட அவரால் ஆடியன்ஸ் கிட்டே கை தட்டல் வாங்க  முடியல . ரெண்டரை மணி  நேரம் ஓடும் படத்துல  தனக்கு கிடைச்ச நல்ல வாய்ப்பை  ஈரோடு  மகேஷ்  தவற விஒட்டுட்டார் . ஒரு வசனகர்த்தாவா வும் சரி , ஒரு காமெடியனாவும் சரி  வேஸ்ட்  பண்ணிட்டார்


இயக்குநர்  ஏ வெங்கடேஷ்  ஹீரோயின்க்கு அப்பாவா வரும் கேரக்டர்  ரோல் . ஓக்கே ரகம் . தம்பி   ராமைய்யா  , அழகர் சாமியின்  குதிரை நாயகன் அப்புக்குட்டி  , வெண்ணிற ஆடை மூர்த்தி என வீணடிக்கப்பட்ட கலைஞர்கள் பட்டியல்  நீளம் . 


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்  


1.,  ஸ்டார்  வேல்யூவுக்காக   பவர் ஸ்டாரை  புக் பண்ணியது   , கதைக்கு சம்பந்தமே இல்லைன்னாலும்  பவருக்கு பவர் ஃபுல் போர்ஷன் ஒதுக்கினது


2.  லோ பட்ஜெட் படம்னாலும்  , 3 ஹீரோயின்கள்  இருந்தும்  லோ லெவல்க்கு இறங்காம   3 பெரையும் கண்ணியமா  காட்டியது


3. பாடல்கள்  சொதப்பலா  இல்லாம சி செண்ட்டர் ஆடியன்சை கவரும் வகையில் படம் ஆக்கியது , பவர் ஸ்டாருக்கு  2 பாட்டு தந்தது


4. நினைத்ததை முடிப்பவன் நான் தான்  துணிச்சலை  வளர்த்தவன் நான் தான் பாட்டுக்கு பவரின் ஆட்டம் , விஜய்யை கலாய்த்து நடன ஸ்டெப்ஸ்  விஜய்  ரசிகர்களையே கவர்வது





இயக்குநரிடம்  சில  கேள்விகள்:


1.  நர்ஸ்   எந்த வித ஆதாரமும் இல்லாம எடுத்த எடுப்புல ஹீரோவை  அந்த பொண்ணோட  புருசன்னு எப்படி  நினைக்குது? பேஷண்ட்டுக்கு  நீங்க என்ன முறை வேணும்? அப்டினுதானே  வழக்கமா கேட்பாங்க ?


2. ஹீரோ , தம்பி ராமையா , ஈரோடு மகேஷ் 3 பேரும்   பேண்ட் , டி சர்ட் போட்டு  இன் பண்ணி தான் எப்பவும் நைட் டைம்ல தூங்கறாங்க , அது ஏன் ?  ஒரு சீனில்  நடு  இரவில்  எதோ சத்தம் கேட்டு 3 பேரும் எழுந்து ஓடி வர்றாங்க . அவ்ளோவ்  ஃபிரெஷா இண்ட்டர்வ்யூக்குப்போறவங்க மாதிரி  இருக்காங்க


3. ஹீரோயினுக்கு என்ன விதமான கோமான்னு டாக்டர் கூட கடைசி வரை சொல்லவே இல்லை . ஏதோ பெக்கூலியர் டைப் ஆஃப் கோமான்னு ஒரு டாக்டரே பொத்தாம்பொதுவா சொல்வாரா?




4. ஹீரோவுக்கு   25 லட்சம்   ரூபா தேவைப்படுது . அதை பல காட்சிகளில் மகேஷ் சொல்றார். ஆனா  மாமனார் வெங்கடேஷ் எவ்வளவு பணம் வேணும்னு  கேட்கும்போது 3 லட்சம் போதும்னு ஹீரோ சொல்றாரே, எப்படி?



5, ஹீரோ  தான்  ஒரு அநாதைன்னு தேவை இல்லாம ஏன் பொய் சொல்லி மாட்டிக்கனும் ? அம்மா  இருக்காங்க , ஆனா அவங்களூக்கு எங்க லவ் மேட்டர்  தெரியாதுன்னு  சொல்லி ஈசியா சமாளிச்சிருக்கலாமே?


6. கட்டிலுக்கு அடியே ஒரு டெட் பாடி  இருக்கு , அப்போ அங்கே வரும்  ஹீரோயின் ஏதோ துணியை  கீழே போட்டுடறா. அதை எடுக்க   சும்மா  குனிஞ்சா போதாதா?” முட்டி போட்டு உக்காரனுமா? தரையை சாணியால மெழுகுறவங்க தான் அப்படி உக்காருவாங்க


7. ஒரு சீன்ல  ரோட்டோரமா   ஹீரோயின்  கார் அருகில் நிக்கறா. கார் பிரேக் டவுன் ஆகிடுச்சுன்னு ஹீரோ கிட்டே சொல்றா. பிரேக்கே இல்லைன்ன எப்படி காரை  ஓரமா நிறுத்த முடியும் ? மரத்துல இடிச்சுத்தானே  நிறுத்த முடியும் ? அதுக்குப்பேசாம கார் பஞ்சர்னு சொல்லி இருக்கலாம்


8, ஹீரோ - ஹீரோயின் லவ் மலர்ந்த   டுபாக்கூர் கதைக்கு ஒரு புது சிச்சிவேஷன்  கூடவா  யோசிக்க முடியல? பாட்ஷா  ரஜினி - நக்மா கதையை அப்டியேவா சுடுவாங்க? கற்பனை வறட்சி?



9. ஹீரோ    தன் மச்சினி கிட்டே எந்த உணமையும் சொல்ல்லை. இதெல்லாம்  டிராமான்னு சொல்லலை , மேரேஜ்  பண்ணிக்கவே இல்லைன்னும் சொல்லலை, ஆனாலும்  ஹீரோவோட லவ்வை ஏத்துக்கறாரே எப்படி?





மனம் கவர்ந்த வசனங்கள்


1. LIFE ல FRAUD பண்ணுனா எதிர்காலம் BROAD டா இருக்கும்



2.  பவர் -நான்  எப்போ வருவேன் , எப்படி வருவேன்னு எனக்கே   தெரியாது.


3.  இந்த கதைல என்னவோ  இடிக்குதே ?

  உன்   தொப்பை தான் இடிக்குது



4. பவர் - நான் தாண்டா உனக்கு வில்லன்

 உன் பேர் என்ன?


 வில்லன் பேர் எல்லாம் சொல்ல மாட்டாண்டா



5.  அக்னி நட்சத்திரம்  கதை உங்க கதையை உல்டா பண்ணி  இருக்கு, நீங்க ஏன் மணிரத்னம் மேல கேஸ் போடக்கூடாது ?

 பவர் - நான் ஏன் அவர் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போடனும்?



6.  யூ ஆர் லுக்கிங்க் ஸோ ஸ்மார்ட்னு அவ சொன்னாளே?

 அவ ஆஸ்திரேலியாக்காரி , கங்காருன்னா ரொம்ப பிடிக்கும் , நீ பார்க்க கங்காரு மாதிரியே இருக்கியா அதான்


7.  இங்கே பாரு , நீ என்னை  ரிஜக்ட் பண்ணிட்டே , அதுக்குப்பின் என்னை
 திட்டும்  உரிமை உனக்கு கிடையாது


8. ஐ லவ்  யூ


 ஒரு நிமிஷம்  இரு .. தம்பி  இங்கே வா , நான் யாரு?

 அக்கா


 இவர் யாரு?

 பெரியப்பா

 பார்த்தியா , ஒரு பெரியப்பா  எப்படி அக்காவை லவ் பண்ண  முடியும் ?


9.   செஸ்  போர்டு முன்

 பாஸ்   , மூவ் பண்ணுங்க

 ஐயோ செஸ் போர்டை மூவ் பண்ணச்சொல்லலை . சிப்பாய் , ராணி ஏதாவது  மூவ் பண்ணுங்க


10.  வெ ஆ மூர்த்தி = இதென்ன  மசாஜ் கிளப்னு போர்டு போட்டிருக்கு , பிசையற இடம் ஆச்செ>?  இங்கே எதுக்கு வரச்சொன்னானுவ?



11. என்னை விட்டு எப்பவும்  ஒரு அடி தள்ளியே நில்லுன்னு எப்பவும்  சொல்வேன் , இப்போ சொல்றேன், என்னை விட்டு ஒரு நிமிஷம்  கூட தள்ளி நிக்கக்கூடாது , ஐ லவ் யூ




ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்-35



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - சுமார்

ரேட்டிங் =   2.25   / 5


சி பி கமெண்ட் -சும்மா நச்சுன்னு இருக்கு - படு மொக்கையா இருக்கு - விகடன் மார்க் -35 ரேட்டிங் 2.25 /5 பவர் ஸ்டார் ஓக்கே.ஈரோடு மகேஷ் வசனம் சொதப்பல், திரைக்கதை   மிக பலவீனம் , பவர் ஸ்டார் ரசிகர்கள் மட்டும் டி வி ல பார்க்கலாம்


முதல் இரவில் அஜித் ரசிகன் எப்படி விஜய் ரசிகையை கொஞ்சுவான்?

1. ஆபீஸ் டைம் ல லேடி ஸ்டாf கிட்டே பேசினா 50 ரூபா FINE.



ஒரு ஆள்ட்ட பேசுனாவே 50 ரூபாயா? எத்தனை பேர்ட்ட பேசுனாலும் அதே சார்ஜா சார்?



------------------------


2. டாக்டர்.வயிறு வலிக்குது.உள் காயம் இருக்கா னு பார்க்கனும்.



பெருங்காயம் சாப்ட்டீங்களா?



--------------------


3. ஹீரோ - ஹீரோயின் க்கு கெமிஸ்ட்ரி சரியா ஒர்க் அவுட் ஆகலையே ஏன்?



டைரக்டர் - ரொமான்ஸ் டெமோ வின் போது எனக்கும் ஹீரோயினுக்கும் பத்திக்கிச்சு



------------------------


4. ரிலீஸ் ஆன என் படத்துக்கு ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸ் எப்டி இருக்குனு பார்க்க வந்தேன்.



தியேட்டர் ஓனர் - வெயிட் பண்ணுங்க.ஆடியன்ஸ் வந்தா பார்ப்போம்



----------------------------


5. முதல் இரவில் அஜித் ரசிகன் - டியர்.நீ தள தளனு இருக்கே.



 மனைவி - ம்க்கும்.என்ன பிரயோஜனம்.எப்போ பாரு நீங்க தல தல னு இருக்கீங்களே?




--------------------------------


6. மேரேஜ் ஆன மேரியை ஸ்ரீமதி மேரினு கூப்டலாம்.திருமணமான ஸ்ரீமதியை எப்படி கூப்பிடுவீர்கள்?



 ஸ்ரீமதி ஹோல் ஸ்கொயர் னு



--------------------------


7. டியர்.உங்கப்பா வீட்டுக்கே போனா நான் என்ன பண்ண?



அப்பா ஷூட்டிங் போவாரு.அப்போ நீங்க வந்துடுங்க



----------------------------


8. சார்.இந்தப்படத்துல என்ன குறைனு சத்தியமா புரியலைங்க.


 கேட்ச் த பாய்ண்ட்.ஆடியன்சுக்கும் புரியலை



------------------------


9. அடிக்கடி லிப் லிஸ் குடுக்கும் காதலனிடம் காதலி - டேய்.வாயை வெச்சுக்கிட்டு சும்மா இருடா டோய் ;-)

-------------------------

10.ஆகஸ்ட் 19: உலக புகைப்பட தினம்.இது தான் சாக்குன்னு பஸ் ஸ்டாப் ல நிக்கற பிகருங்களை எல்லாம் போட்டோ எடுத்து யாரும் மாட்டிக்காதீங்க

--------------------------

11.டிரஸ்ஸிங் சென்ஸ் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம் தலைவா விஜய். எளிமையா எப்படி உடை இருக்கனும் என்பதற்கு வீரம் அஜித்

------------------------------

12.உன் கண்ணில் படும் ஒவ்வொரு அழகிய சுடி யின் நினைவாக ஒரு செடி நடு.# மரம் வளர்ப்போம்

-----------------------------

13.டியர்.சொன்னா கேளு.தங்கக்கொலுசு போட்டுக்கிட்டா குடும்பத்துக்கு ஆகாது. அத்தான்.என் காலுக்கு எதுவும் ஆகிடாதே?

------------------------------

14.என் கிட்டே யாரும் பல்லை இளிச்சுக்கிட்டு என் எதிரே நிக்க முடியாதுன்னு சொல்ல முடியாத பெண் - லேடி டென்ட்டிஸ்ட்

-------------------------

15.பொறியல் சமைக்க சோம்பேறித்தனப்பட்ட ஏதோ ஒரு சம்சாரம் தான் அப்பளத்தைக்கண்டு பிடிச்சிருக்கனும்

-------------------------

16.மேரேஜ் ஆகியும் பொண்டாட்டிக்கு சமையல் தெரியலைன்னா ஹோட்டல்லயா டெய்லி சாப்பிட முடியும்? ஆண்களே! ஆதலால் சமையல் செய்வீர்

-----------------------

17.அழகென்ற ஜொள்ளுக்கு அமுதா.கும்மென்ற மனசுக்கு குமுதா.ஜம் மென்ற நடிப்புக்கு நமீதா.

--------------------

18.சென்ட் செயற்கை மணம் ,மல்லிகைப்பூ இயற்கை மணம்னு சர்ட் பாக்கெட்ல பூ போட்டு சுத்திட்டு இருந்தா பொண்டாட்டி கிட்டே மாத்து வாங்கனும்

-------------------------

19.நான் சின்னப்பையனா இருக்கும்போது கஜல் பாடல்கள்னா கஜோல் ,காஜல் அகர்வால் பாடுன பாடல்கள்னு நினைச்சேன்

------------------------

20.தீபிகா படுகோனேக்கு மேரேஜ் ஆனா அடுத்த நாள் காலைல அவர் புருசன் எப்படி எழுப்புவார்? தீபிகா எந்திரி கோனே

-------------------------

21.அத்தான்.நானே உங்களுக்கு பாயாசம் மாதிரி தானே? 




 சும்மா சமாளிக்காதே.நைட் வெச்ச ஒரு லிட்டர் பாயாசத்துல 1 டம்ளர் கூட எனக்கு வர்ல

--------------------

22.கோச்சடையான் னு பொதுவா சொன்னா எப்டி? கோ ஒத்தைச்சடையானா? கோ ரெட்டைச்சடையானா?

--------------------

23.அஜித் ன் வீ ரம் டைட்டிலுக்கு டாக்டர் அய்யா இன்னும் கண்டனம் தெரிவிக்கலையா? # மது எதிர்ப்பு

-----------------------

24.அரை மணி நேரம் பாத்திரத்தை தேய்க்கறதுக்கு 2 நிமிஷம் விரலை தேய்ச்சா நெயில் பாலிஷ் போய்டாது? ;-)

-----------------------

25.அன்பே! நீ என்ன பெரிய வெங்காயமா? தொட்டுப்பார்க்கக்கூட விட மாட்டேங்கறியே?

--------------------

26.மம்மி கிட்டே யாராவது போய் விஜய் யோட சொந்த டி வி தான் விஜய் டி வி னு கொளுத்திப்போட்ரனும் ;-)))

--------------------

27. அன்பே! நீ என்னிடம் சலிப்பாக உச் கொட்டுவது கூட எனக்கு இச் சத்தமாகக்கேட்கிறது

--------------------

28.வீரம் னா என்ன தெரியுமா ? எதிர்ல சி எம் மே இருந்தாலும் மனசுல பட்டதை பட்டவர்த்தனமாய் பேசுவது # வீரம் அஜித் பஞ்ச்

-----------------------

29. கைல டீ கிளாஸ் வெச்சிருந்தா எதிரியை ஆத்து ஆத்துனு ஆத்தப்போறேன்னு அர்த்தம் # வீரம் அஜித் பஞ்ச்

-----------------------

30. நாளிதழ்களின் பார்வையில் ஒரு கல்யாணம் பண்ணவன் கல்யாண மாப்பிள்ளை.பல கல்யாணம் பண்ணினவன் கல்யாண மன்னன்

Monday, September 02, 2013

காந்தாரி vs சம்சாரி

1. ராமர் மாதிரி புருசன் வேணும்னு எல்லா பொண்ணுங்களும் நினைக்கறாங்க , இதுல சோகம் என்னான்னா ஊர்ல நம்ம பயலுக எல்லாரும் கிருஷ்ணன்கதான்


----------------------


2.  பள்ளித்தோழிகள் யாரை இப்போ சந்தித்தாலும் " அவசியம் குடும்பத்தோட வீட்டுக்கு வரனும் கறாங்க.தனியா வரக்கூடாதுனு அர்த்தம் போல



-----------------------


3. காதலிக்கு கடன் கொடுத்தா அது திருப்பதி உண்டியல் ல போட்ட மாதிரி.நண்பனுக்கு கடன் கொடுத்தா எம் எல் எம் ல போட்ட இன்வெஸ்ட்மென்ட் மாதிரி



--------------------


4. விரல் நகக்கண்ணில் ஊசி ஏற்றியது போல வலி கண்டேன் உன் நிராகரிப்பில்


-------------------------


5. கிருஷ்ண ஜெயந்தி க்கு கோயிலுக்கு வந்த பெரும்பாலான பொண்ணுங்க ப்ளூ கலர் சேலை தான் கட்டிட்டு வர்றாங்க.இன்னைக்கு என்ன படம் பார்ப்பாங்களோ?


----------------------------


6. கோவிலில் பிரசாதம் வாங்கப்போகும்போது ஒரு டிபன் பாக்சும் கொண்டு போய்ட்டா பார்சல் கொண்டாந்துக்கலாம் # டிப்ஸ்



-------------------


7. லாட்ஜ் ல சிங்கிள் காட் ரூம்னா சிங்கிள் மீனிங் ,டபுள் காட் ரூம்னா டபுள் மீனிங் ட்வீட்சும் போடுவாங்க என்பதும் ஒரு வித மூட நம்பிக்கையே!்



---------------------


8. 2 பொண்டாட்டி கட்டுன சாமிகளை பொண்ணுங்க விழுந்து விழுந்து கும்பிடறாங்க.ஆனா 2 பொண்டாட்டி கட்டின ஆசாமிகளை ஏறி மிதிக்கறாங்க.



------------------------



9/ ஐயப்பா சாமியை அவமதிப்பது போல் இருப்பதால் ஷங்கரின் ஐ பட டைட்டிலுக்குத்தடைனு யாரும் இன்னும் கிளம்பலையா?




----------------------


10. கோபியர் கொஞ்சும் ரமணா = கோபிச்செட்டிபாளைய பிகர்கள் மனம் கவர்ந்த கேப்டன் # சபாஷ் துபாஷ்




------------------------



11.ஓட்டுப்பிச்சைக்காகவும் ,கூட்டணி சுயநலத்துக்காகவும் வாய் கூசாமல் புரட்டு பேசுவதில் வல்லமை கொண்டவர்கள் டாக்டர் அய்யாவும் மு க வும்்



--------------------



12. ஏகப்பட்ட MONEY இருக்கறதால மணிமேகலைனு சோனியாவை தமிழ் இனத்தலைவர் வாழ்த்தி இருப்பாரோ?



--------------------


13.  பசியைப் போக்கும் மணிமேகலையாகத் திகழ்கிறார் சோனியா -மு கருணாநிதி # ராகுல்,ப்ரியங்கா 2 பேருக்கும் சோறு போட்டதை சொல்றாரோ?



------------------------------



14. ஃபிகர் பேரு  டிம்ப்பிள் -னு  இருந்தா  டி-ன்னு கூப்ட்டாலும்  கோவிச்சுக்க முடியாது, சுருக்கி வரைஞ்சுட்டோம்னு சமாளிச்சுக்கலாம்






-----------------------------






15. சிறை மாதிரியே தெரியவில்லை. ஒரு ஆசிரமம் போன்று தான் இருந்தது.-பவர் ஸ்டார்  # அப்டியா? ரஞ்சிதா வகையறாக்கள் நடமாட்டம் எல்லாம் இருந்துதா?








-------------------------




16. தூய தமிழ் பேச விரும்பும் குடிகாரர்கள் கவனத்திற்கு- பீர் = வாற்கோதுமை கள்






-------------------------




17 சொப்பனத்தில் கூட உன் சொல் பேச்சு கேட்கும் சுந்தரன் நான்.


=---------------------------------


18. 6யா ,9 தாரா வை நினைவு வெச்சுக்கிட்டா அது தான் டாலர் ன் ரூபாய் மதிப்பு # 69 ரூபா .பை 24 மணி நேரமும் சினிமா சிந்தனையில் வாழ்வோர் சங்கம்


-----------------------------------


19. இந்தக்கால பொண்டாட்டிகளுக்கு காந்தாரி மாதிரி கண்ணை கறுப்புத்துணில கட்டி பின் கடைவீதி அழைத்துச்செல்வதே சம்சாரியின் பர்சுக்கு பாதுகாப்பு


---------------------------------


20. மீனவர்கள் விடுதலையில் மத்திய அரசு மவுனம்: ஜெ குற்றச்சாட்டு; பிரதமருக்கு கடிதம் # மவுனம் அதுல மட்டும்தானா?- பி எம் கேள்வி


-------------------------------------