Friday, August 23, 2013

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 23 8 2013 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

 
1. தேசிங்குராஜா - எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் வழங்க ஒலிம்பியா மூவிஸ் தயாரிக்கும் படம் தேசிங்குராஜா. இதில் நாயகனாக விமல், நாயகியாக பிந்து மாதவி நடிக்கின்றனர். சூரி, சார்லி, சிங்கம்புலி, சிங்கமுத்து, ரவிமரியா, சாம்ஸ், ஆடுகளம் நரேன் வி.ஞானவேல், வடிவுக்கரசி, அப்பத்தா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி எஸ்.எழில் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராகிறது என்றார் அவர்.

இந்த படத்துக்காக சமீபத்தில் அம்மாடி அம்மாடி அய்யோடி அய்யோடி நெருங்கி ஒரு தடவை பார்க்கவா என்ற பாடல் காட்சி பதினைந்து லட்சம் ரூபாய் செலவில் பழகுடோன் அரங்கு அமைத்து படமாக்கப்பட்டது. இதில் விமல், பிந்து மாதவி பங்கேற்று நடனம் ஆடினார்கள். பத்து நாட்கள் இக்காட்சி படமாக்கப்பட்டது.

வசனம்: ராஜசேகர், ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி, இசை: இமான், பாடல் : யுகபாரதி, எடிட்டிங்: கோபி கிருஷ்ணா, நடனம்: தினேஷ், தினகா, பிருந்தா, ஸ்டண்ட்: திலீப் சுப்பராயன், தயாரிப்பு மேற்பார்வை: சங்கரதாஸ், தயாரிப்பு நிர்வாகம்: ராஜா. 


வெற்றி இயக்குனர் எழில் புதிதாக இயக்கும் படத்திற்கு தேசிங்குராஜா என்று பெயர் சூட்டியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி போன்ற நல்ல படங்களை இயக்கியவர் டைரக்டர் எழில். இவர் கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து மனம் கொத்திப் பறவை என்ற படத்தை இயக்கினார்.

இந்நிலையில், இயக்குனர் எழில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அப்படத்திற்கு தேசிங்கு ராஜா என பெயரிட்டிருக்கின்றனர். விமல், பிந்து மாதவி ஆகியோர் நடிக்கின்றனர். மனம் கொத்திப் பறவை படத்திற்கு இசையமைத்த டி.இமான் இப்படத்திற்கு இசை


ஏறக்குறைய ஒரே நேரத்தில் அறிமுகமானவர்கள் விமலும், விதார்த்தும். களவாணி, வாகை சூட வா என்று விமலின் பயணம் உயரே போன போது விதார்த்தின் கேரியர் குளறுபடிகள் நிறைந்ததாக இருந்தது. தனி ஹீரோவாக இன்னமும் தடுமாறிக் கொண்டுதான் இருக்கிறார் விதார்த்.

சிவ கார்த்திகேயன் வந்த பிறகு விமலின் நிலைமை விதார்த்தை போல மோசமானது. கேடி பில்லா கில்லாடி ரங்காவில் இரண்டு பேரும்தான் நடித்தார்கள். விமல் அப்படியே இருக்க, சிவ கார்த்திகேயன் மேலும் மேலும் உயர்ந்து இரண்டு கோடி சம்பளத்தை எட்டியிருக்கிறார்.

விமல் தனது கேரியர் லிஃப்டுக்கு நம்பியிருப்பது எழிலின் தேசிங்குராஜா படத்தைதான். பிந்து மாதவிக்கும் இந்தப் படம்தான் இப்போதைய ஒரே நம்பிக்கை.

காமெடியை மையமாக வைத்துதான் தேசிங்குராஜாவை எழில் இயக்கியிருக்கிறார். விமல் இதில் எம்‌ஜிஆர் ரசிகராக வருகிறார். அவருடன் பிந்து மாதவியும் தன் பங்குக்கு காமெடி செய்திருக்கிறார். உடன், சூ‌ரி. தேசிங்குராஜாவின் பாடல்கள் பரவலான வரவேற்பை பெற்றுள்ளதால் படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள்.


IN ERODE - AANOOR,VSP , ROYAL,SEENIVAASAA 


2. மெட்ராஸ் கபே --படத்திற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு
மெட்ராஸ் கபே படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க, மதுரை ஐகோர்ட் கிளை மறுத்து விட்டது.


ஐகோர்ட் வழக்கறிஞர் ஸ்டாலின், தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  ‘’மெட்ராஸ் கபே' படம், ஆக., 23ல் வெளியாகிறது. இதில் முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை சம்பவம், இலங்கையில் இந்திய அமைதிப்படையின் நடவடிக்கை மற்றும் அவர்களை தமிழர்கள் அவமதித்ததாகவும், தமிழர்களை பயங்கரவாதிகள் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. 


காமன்வெல்த் மாநாடு துவங்குவதற்கு முன், இலங்கை அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தவும், தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபடவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். படம் வெளியானால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கும். இப்படத்திற்கு மத்திய, மாநில திரைப்பட தணிக்கை வாரியம் அளித்த சான்றை ரத்து செய்யவும், திரையிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


நீதிபதிகள், எஸ்.ராஜேஸ்வரன், டி.மதிவாணன் கொண்ட, "பெஞ்ச்' முன், மனு விசாரணைக்கு வந்தது.

  தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், இந்தியில் தயாரித்த, மெட்ராஸ் கபே' படத்திற்கு தணிக்கை வாரியம் சான்றளித்துள்ளது.
தமிழில் தயாரித்துள்ள படத்திற்கு தணிக்கைச்சான்று வழங்கவில்லை. மனுதாரர் அச்சப்படும், ஆட்சேபி க்கும் அளவிற்கு காட்சிகள் இல்லை. ஒரு குறுநாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சம்பவத் திற்கும், படத்திற்கும் சம்பந்தமில்லை' என்றார்.


கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல' என்றார்.

தற்போதைய சூழ்நிலையில், படத்திற்கு எவ்வித இடைக்காலத் தடையும் விதிக்கத் தேவையில்லை. மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், டி.ஜி.பி., பதில் மனு செய்ய வேண்டும். விசாரணை செப்., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நோ ரிலீஸ் இன்  தமிழ் நாடு 

 
3. களிமண்ணு -(மலையாளம் )  -நித்யாமேனன்  -ன் பிரசவக்காட்சி படமாக்கப்பட்டு சர்ச்சையைக்கிளப்பியப்டம் , பாசிட்டிவ் ரிசல்ட்ஸ் வந்திருக்கு. அவார்டு கன்ஃபர்மாம்



களிமண்ணு

வெளியாவதற்கு முன்பே, பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்திய படம் இது. ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சியை படமாக்கி, இதில் சேர்த்துள்ளதால், கேரளாவில், இந்த படத்தை வெளியிடுவதற்கு, பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும், தணிக்கை வாரியம், இந்த படத்துக்கு அனுமதி அளித்து விட்டதால், இன்னும் சில நாட்களில், இந்த படம் வெளியாகவுள்ளது. பிரசவத்துக்கு முன்னும், பிரசவத்துக்கு பின்னும், ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான், இந்த படம். மகாபாரத கதையை மையமாக வைத்தும், இந்த படத்தின் முக்கியமான காட்சிகள், சில படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்வேதா மேனன் ஜோடியாக, பிஜு மேனன் நடித்துள்ளார். பிலெஸ்ஸி என்ற இயக்குனர், இந்த படத்தை இயக்கியுள்ளார்

Thursday, August 22, 2013

தலைவா - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஃபாரீன்ல இருக்கார். ஹீரோயினைப்பார்த்ததும்  லவ் வந்துடுது. பாப்பாவுக்கும் அவர்  மேல லவ் தான் , ஆனா பாருங்க ஒரு வெட்கம் , தயக்கம் . இந்த பொண்ணுங்களுக்கு  பசங்களை சுத்தி அடிச்சு காய விடறதுல அலாதி ஆனந்தம் . ஆல்ரெடி  தனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு அள்ளி விடுது. பாப்பாவோட டிராமாவை  ஹீரோ  கண்டு பிடிச்சு கலாய்க்கறாரு. இப்படி ஜாலியா  6 ரீல் போகுது ஆட்டம் பாட்டம் காதல் , காமெடின்னு.


ஹீரோவோட அப்பாவை நேர்ல பார்த்து சம்பந்தம்  பேசனும்னு  பாப்பாவோட அப்பா சொல்றாரு. ஹீரோவோட அப்பா இந்தியாவில்  மும்பைல இருக்கார். அவர் ரொம்ப  பிசி, நாமளே போய்ப்பார்ப்போம்னு கிளம்பறாங்க .அங்கே போய்ப்பார்த்தா   ஹீரோவோட அப்பா  ஒரு தாதா. 

இந்த இடத்துல  2 ட்விஸ்ட்ஸ்  வருது .இடைவேளை


அதுக்குப்பின்  இயக்குநருக்கு வேலை   பஞ்சாமிர்தம் பண்றதுதான் . அதாவது  ஆல்ரெடி  ஹிட் ஆன பாட்ஷா,நாயகன் ,தளபதி,தேவர்மகன்,சர்கார்,பிஸ்னெஸ்மேன்,புன்னகைமன்னன் 7 படங்களிலில் இருந்தும் காட்சிகளை  உருவி கதம்பம் ஆக்குவதுதான் .





இளைய தளபதியின் லைஃப் கேரியரில்  இது  ஒரு முக்கியமான படம் . அப்பா பேச்சை  ஆராயாமல் கேட்டு விடக்கூடாது என்ற ப்டிப்பினை , அரசியல்வாதிகளுடன்  மோதும் முன்  பின் விளைவுகளுக்குத்தயாராக  இருக்கனும் என்ற   இரு பாடங்களைக்கற்றுக்குடுத்த  படம் 


விஜய் சச்சின்  படத்துக்குப்பின்  மிக அழகாக ,ஸ்டைலிஸாக   தோற்றம் அளித்த படம்  இதுதான். பிரமாதமாக இருக்கிறார்.  ஓப்பனிங்க் சாங்கில் அவர் நடன ஸ்டெப் பிரமாதம் . கலக்கிட்டார்.  சாம் ஆண்டர்சனை நக்கல் அடிக்கும் காட்சி ,அமலாபால் கால் வாரும் காட்சி, களில் அவர் எள்ளல்கள்  கொடி கட்டிப்பறக்கிறது . 


இடைவேளைக்குப்பின்  வரும் காட்சிகளில் விஜய் -ன்  அண்டர்ப்ளே ஆக்டிங்க் சூப்பர். தளபதி தளபதி எங்கள்  த்ளபதி பாடல் காட்சிக்கு அவர் காட்டி இருக்கும் பாடிலேங்குவேஜ் , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் அபாரம் .


வாங்கண்ணா வணக்க்ங்கண்ணா  பாட்டுக்கான நடனம்  செம செம .அந்தப்பாட்டுக்கு  தியேட்டரில்  செம ரெஸ்பான்ஸ் .விஜய் அனுபவித்து ஆடி இருக்கிறார். 

யார் இந்த சாலையொரம் பாடல் காட்சியில்  விஜய் -ன் நடன ஸ்டெப்கள் ரசிக்க  வைத்தது.மின்னலைப்பிடித்து  மின்னலைப்பிடித்து  பாடல் காட்சிக்குப்பின் இந்தப்பாட்டில் தான் அவர் நடனம் அபாரம்


சந்தானம்  கவுண்ட்டர் டய்லாக்ஸில்  அப்ளாஸ் அள்ளுகிறார்.  சைக்கிள் கேப்பில்  விஜயையே 2 இடங்களில் ஓட்டுகிறார். .அது புரியாமல் விஜய்  ரசிகர்களே கை தட்டுகிறார்கள் 


சத்யராஜ்  அனுபவம் மிக்க  நடிப்பு . 


அமலாபால்  ஹீரோயின் . சிந்து சமவெளியில்  சீம்பால் மாதிரி  தள தள என இருந்தவர்  இதில்  பால் காரன் கை பட்டு தண்ணீர்  மிக்ஸ் பண்ணிய பால் மாதிரி நீர்த்துப்போய்  இருக்கிறார். இவர்  முகத்தில்  அட்ராக்‌ஷன்  மிஸ்சிங்க். 


ஹோட்டல்ல   பொங்கல் ஸ்டாக் இல்லைன்னு ஃபீலிங்க்ல இருக்கும்போது  வெஜ்டபுள் ஃப்ரைட் ரைஸ் இருக்குன்னு சொல்ற மாதிரி அமலா பால் டொக்கானா என்ன நான் இருக்கேன் என்பது மாதிரி  புதுமுகம் ராகினி ,  ரோஸ்மில்க் குடித்து வளர்ந்த  ரோசா மாதிரி ஒரு முகம் . வெல்வெட்டு உதடுகள் , கடிக்கத்தூண்டும் கமர்கட் கன்னங்கள்  . லோ கட்டில் பவனி வரும்  காட்சிகள் அழகு




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்  


1, அமலாபாலுக்கு சந்தானம் நூல்  விடும் காட்சிகள்  , சாம் ஆண்டர்சன் காட்சிகள்  கலக்கல் 
2. எதிர்பாராத இடைவேளை ட்விஸ்ட் 


3. விஜய் -ன்   டிரஸ் கோடு ரசிகர்களிடையே பல நாட்கள் பேசப்படும் , நீட் 


4. வில்லன் , ஹீரோ இருவரும் ஒருவருக்கு ஒரே டைமில் ஃபோன் போடுவது , விஜய்க்கு லைன் கிடைத்ததும் அவரை  வில்லன் டிரேஸ் அவுட் பண்ணாமல்  இருக்க ஐடியா செய்வது பர பரப்பான நிமிடங்கள்







இயக்குநரிடம்  சில கேள்விகள் , திரைக்கதையில்  சில ஆலோசனைகள்


1, படத்தின் நீளம் ரொம்ப ஓவர் . 3 மணி நேரம் எல்லாம்  நம்மாளுங்க உக்காந்திருக்கவேஎ முடியாது .பின் பாதியில்  அரை மணி நெர ட்ரிமிங்க் அவசியம்


2. தன் அப்பா தன்னை இந்தியாவுக்கு வரவே விடமாடேங்கறார் என்பது ஹீரோவுக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லையா? 



3. தாதா சத்யராஜ்  அமலாபால் & கோ-வை சந்திக்க  வரும்போது அவர்களைப்பற்றி எந்த வித விசாரனையும் வெச்சுக்கலையே? 



4. தலைவா என எல்லாரும் கொண்டாடும்,  அளவுக்கு விஜய் என்ன செய்தார்? எல்லாம் தற்செயலாக நடப்பதுதானே? 



5. அமலாபால் காதல்  டிராமா என வெறுக்கும் விஜய் , தன் தந்தையின் சாவுக்கு காரணமானவர் அமலாபால் என்ற கோபத்தில்  இருக்கும் விஜய் பின் எந்தப்புள்ளியில் அவரை ஏற்றுக்கொள்கிறார்? 


6. அப்பாவைக்கொன்னவங்களைப்பழி வாங்கும் சாதாக்கதைக்கு எதுக்கு இத்தனை பில்டப் ? 



7. அவ்வளவு பெரிய தலைமைப்பொறுப்பில்  இருப்பவர் தண்ணி அடிக்கலாமா?  முன் மாதிரியாக இருக்க வேணாமா? 


8. விஜய் தாதா ஆவது ஓக்கே , அந்த டிரஸ் கோடு  எதுக்கு? அவர் அப்பா சத்யராஜ் சொல்லித்தந்ததா? எஸ் ஏ சி சொல்லித்தந்ததா?



9 . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  தேவையில்லாத திணிப்பு 



10 . பின் நடு முதுகில்  ஆழமான குத்து வாங்கிய பின்னும்  ஹீரோ 28 பேரை வீழ்த்துவது  ஓவர்


 


மனம் கவர்ந்த  வசனங்கள்


1.  நான்  செய்யற  எந்தக்காரியமும்  என் பையனோட  வாழ்க்கைல  இடைஞ்சலா  இருந்துடக்கூடாது


2. நாம   ஒரு விஷயத்துல  இறங்கிட்டா   விளைவு  வெற்றியாத்தான்  இருக்கனும்


3.  இப்போ  உடனே   எனக்கு   தண்ணி  வரனும்



உடனே   தண்ணி  வரனும்னா   ஒரு  கிலோ வெங்காயம் வாங்கி உரி



4.  உனக்கு ஏண்டா  டான்ஸ்னாலே  பிடிக்காது ?

 ஏன்னா  எனக்கு  டான்ஸ்  வராது



5. உனக்கு ஏண்டா  காதலியே இல்லை?

 எங்கடா? இப்பவெல்லாம்   10 வயசுலயே  ரிசர்வ் பண்ணி வெச்சுக்கரானுங்க, அதுக்கு கீழே இறங்கி வர மனசு இடம்  கொடுக்க மாட்டேங்குது



6.  புருஷன்  குடிச்சுட்டு வந்தாலும் கதவைத்திறக்கறவங்க  தமிழ்ப்பொண்டாட்டிங்க , பொண்டாட்டியே   குடிச்சுட்டு வந்து கதவை தட்டுனா   ஃபாரீன் பொண்டாட்டிங்க . அதான்  ஐ லைக் தமிழ் சம்சாரம்ஸ்




7.  இந்த  யூ  ட்யூப்பும்  , ஊர்க்கிழவியும்  ஒண்ணுதான் .ஒரு விஷயம்  கிடைச்சா போதும் , ஊர் பூரா பரப்பிடுவாங்க 



8.  பிளாக் காபி  சூப்பர்


 டேய், அது  ரசம்



9.  அமலாபால்  - ஐ லவ் யூ  கேள்விப்பட்டிருக்கேன்  , வீ லவ் யூ - இப்போதான்  கேள்விப்படறேன்



10. யாருப்பா   இவன் ? பவர் ஸ்டார்  தம்பி புவர் ஸ்டார் மாதிரி  இருக்கான் ?





11.  படுத்துட்டு ஆடறது  , உக்காந்துட்டு ஆடறது  , உடம்பை  வளைச்சுட்டு ஆடறது  இப்டி ஏண்டா  இம்சை பண்றே?



12. அடுத்தவன்  பட்டா போட்ட இடத்துல  நீ  ஏண்டா கொட்டாய் போடப்பார்க்கறே?


13. அடுத்தவன்  ஃபோன்ல ஐ எஸ் டி கால் பண்றது தப்பு டா செல்லம்


14.  என் கூடவே வந்துடுங்க


 இது  ஒரு வழிப்பாதை , திரும்புனா  உயிர் தான் வரும் 



15. நம்மால மத்தவங்க  வாழ்ந்ததாத்தான்  இருக்கனும் , செத்ததா  இருக்கக்கூடாது



16. தலைவன்கறது நாமா  தேடிப்போகும்  விஷயம்  இல்லை , நம்மைத்தேடி வரும் விஷயம்



17.  ஏதோ  மீட்டிங்க்னு சொன்னே? பீடா கடைக்காரனுங்க  கூட எல்லாம் பேசிட்டு  இருக்கான் ?



18 . ஒரு தடவை  கைல கத்தி வந்துட்டா  1 காக்கும்   2 அழிக்கும்  ஆனா  கத்தியை விட முடியாது



 19.  தலைவன் தலைவன்னு சொல்லி  ஒரு கூட்டமே அவனை தலைல தூக்கி வெச்சுக்கிட்டு  கொண்டாடுது


20. இவங்களுக்கு என்னால என்ன  கொடுக்கமுடியும்னுதோணல  , ஆனா  இருப்பதை  கொடுப்பேன்





 21.  எப்படி  தப்பிச்சேன் பார்த்தியா?



 இதுக்கு மாட்டியே இருக்கலாம் 


22.  போல்  போல்  எதுவா  இருந்தாலும் என் கிட்டேயே போல் . நான் விஷ்வாவை  விட  மேல்  ( ஹிந்தில போல் = சொல்லு )



23.  இந்த டிரஸ் ல நீ வைஜயந்தி ஐ பி எஸ் ல வர்ற டிஸ்கோ சாந்தி மாதிரி சாரி  விஜய சாந்தி மாதிரி  இருக்கே


24.  அரசியல்ல  எல்லாமே நமக்கு சாதகமா நடக்காது  , நடப்பதை நமக்குசாதகமா  ஆக்கிக்கனும்



 25. அவ டிஎஸ்பின்னு என் ஈ எஸ் பி சொல்லுது




26.  எல்லாத்தொழிலுக்கும் தலைவன்னு  ஒருத்தன்  இருப்பான்

27. சரக்கு ஃபாரீனா  இருந்தாலும் சம்சாரம் தமிழ் நாடா இருக்கனும் 


28. என் சமையல் பார்த்தா எல்லார் வாயிலும் எச்சில் ஊறும் 


 எதுக்கு?து-ன்னு காரித்துப்பவா?


29. தமிழ் நாட்டிலேயே தண்ணி இல்லை, ஆனா நீங்க ஆஸ்திரேலியாவுக்கே தண்ணீர் கொண்டாந்துட்டீங்க  


30. டான்ஸ்ங்கற பேர்ல  தரையைக்கூட்டிட்டு இருப்பே



31. பொண்ணுங்க  நம்ம பின்னால வரனும்னா  அவங்க ஹேண்ட் பேக்கை திருடிட்டுதான்  ஓடனும் 


32. நாளைக்கு எங்க வீட்டுக்கு வர்றப்ப்போ சாப்பிடாம வந்துடுங்க 


 ஏன்? பிளட் டெஸ்ட் எடுக்கப்போறீங்களா? 


33., மூவ்மெண்ட்ங்கற பேர்ல கால் முட்டி செத்த மாதிரி ஒரு ஸ்டெப் 


34. அடுத்தவன் ஆட்டோல  ஆயுத பூஜை போடறது தப்பும்மா 






படம் பார்த்தபோது , பார்த்த பின் போட்ட ட்வீட்ஸ்


1. டைம் டூ லீடு கேப்ஷனை எடுத்தா மட்டும் பத்தாது, ஹீரோ ( அவரோட ) கால் மேல கால் போட்டபடி தெனாவெட்டா அமர்ந்திருக்கும் ஸ்டில்லும் நீக்கனும்-ஜெ



2. ஜெ - தலைவா லேட்டா ரிலீஸ் ஆனதால 20 கோடி ரூபாய் நட்டம் ஆகி இருக்கும் எப்பூடி? OPS - தேர்தல் ல இதனால எத்தனை ஓட்டு குறையப்போகுதோ? # கற்பனை



3. விஜய் ரசிகையை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவரை மாதிரி ஆடத்தெரியுமா?ன்னு கேட்கும்.வம்பு.அஜித் ரசிகைனா சும்மா நடந்து காட்னாலே போதும்



4. சத்யராஜ் - நான் மும்பைல இருக்கேன்.என்னை பிடிக்க ஏன் ஆஸ்திரேலியா போறாங்க ? ஏ எல் விஜய் - ஓ சி ல எப்போதான் அதை எல்லாம் சுத்திப்பார்க்கறது?



5. டூ இன் ஒன் ,த்ரீ இன் ஒன் பார்த்திருப்பீங்க.7 இன் ஒன் பார்த்திருக்கீங்களா? # தலைவா



6. தலைவா ல விஜய் வெள்ளை சட்டை போட்டதால வீரம் ல அஜித்தும் வெள்ளைக்கு மாறிட்டார்னு யாரும் இன்னும் கிளம்பலையா?



7. DVD ஷாப்் -ஸார்.நீங்க கேட்ட பாட்ஷா,நாயகன் ,தளபதி,தேவர்மகன்,சர்கார்,பிஸ்னெஸ்மேன்,புன்னகைமன்னன் 7 ம் இந்தாங்க. 



 அப்டியே 7 1/2 யா தலைவா தாங்க 


8. ஏ எல் விஜய் - இனிமே பாரீன் படத்தைப்பார்த்து காப்பி அடிக்கறேன்னு ஒரு பயலும் சொல்லிடமுடியாது # பாட்ஷா,நாயகன் ,தேவர்மகன் ,சர்க்கார்



9. ஏ எல் விஜய் - இனிமே பாரீன் படத்தைப்பார்த்து காப்பி அடிக்கறேன்னு ஒரு பயலும் சொல்லிடமுடியாது # பாட்ஷா,நாயகன் ,தேவர்மகன் ,சர்க்கார்



10. ஒரு இயக்குநர் காதலிக்கும் நடிகையை நாயகி ஆக்கினால் நாயகனை ( படத்தில் கூட ) நெருங்க விடமாட்டார் இயக்குநர்




11. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ஓப்பனிங் சாங்காக வைத்திருக்கலாம்


12. தலைவா படத்தின் பிளஸ் விஜய்.மிகப்பெரிய மைனஸ் ஏ எல் விஜய்


13. சத்யராஜ்க்குப்பதிலாக கேப்டன் நடித்திருந்து ,பின் பாதியில் ட்ரிம் பண்ணி இருந்தால் பர பரப்பான படமாக தலைவா இருந்திருக்கும் ்



14. நீங்க பகுத்தறிவுவாதி தானே? சத்யராஜ் - ஆமா . எதுக்காக படம் பூரா மேல்மருவத்தூர் அம்மன் சிவப்பு சேலையை போர்த்திட்டு வர்றீங்க?



15. அமலாபால் - நான் உங்களுக்கு அம்மா வா வரலாமா ? விஜய் - இப்பவெல்லாம் அம்மான்னாலே அலர்ஜி எனக்கு.



16. தலைவா தியேட்டரில் டிக்கெட் கவுன்ட்டர் வாசலில் டைமிங்க் பஞ்ச் - இது ஒரு வழிப்பாதை.திரும்பி வர முடியாது.உசுரு மட்டும் தான் வரும்



17. எம் ஜி ஆர் - நீ அண்ணாவையே மிஞ்சிட்டே டயலாக்கை விஜய் யை பார்த்து  பேசுனதும் மேல் லோகத்துல இருக்கற அண்ணாவுக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு


18. அஜித் - கிரீடம் படத்தை எடுத்து என் பேரை ரிப்பேர் ஆக்கிட்டீங்க . ALவிஜய் - ஒண்ணும் கவலைப்படாதீங்க.விஜய் பேரையும் ரிப்பேர் பண்ணியாச்்



19. புதுமுக்ம் ராகிணி -விஜய் க்கு ஒரு டூயட் வைத்திருக்கலாம்.டைரக்டர் மிஸ்டு



20. சுறா ,வேட்டைக்காரன் லெவலுக்கு ரொம்ப மொக்கை இல்லை என்றாலும் தலைவா ஒரு தோல்விப்படமே





21. பின் பாதி திரைக்கதையில் நாயகன் ,தேவர் மகன் ,பிஸ்னெஸ்மேன் சாயல் இல்லாமல் மெனக்கெட்டு மெருகேற்றி இருந்தால் தலைவா ஹிட் ஆகி இருக்கும்


22. வழக்கமாக பெண்கள் கூட்டம் அள்ளும் விஜய் படத்துக்கு சிதம்பரம் லேனாவில் மாலை 7 மணி காட்சிக்கு 8 பெண்கள் மட்டுமே



23. 100 படங்களைத்தாண்டிய பின் ரஜினி தளபதி யும் ,கமல் நாயகனும் கொடுத்தார்கள். 50 படமே தாண்டிய விஜய்க்கு இவ்வளவு வெயிட்டான ரோல் இப்பவே எதற்கு?



24. விஜய் ரசிகர்களைத்தவிர பொதுஜனங்களை தலைவா ஈர்ப்பது கடினம்



25. விஜய் - அமலா பால் நடனப்பயிற்சியில் விஜய் ஸ்டெப் அழகு.ஆனால் புன்னகை மன்னன் படத்தில் ஆல்ரெடி வந்த தே.இசையும் அதே சாயல்



26. தளபதி தளபதி எங்கள் தளபதி பாடல் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது.நீரவ் ஷா வின் கேமரா டாப் ஆங்கிள் ஷாட்ஸ் ஆர் நைஸ்



27. வாங்கண்ணா வணக்கங்க்ணா பாடல் ல் விஜய் நடனம் ,அண்டர் ப்ளே ஆக்டிங் வென் விஷ்வா பாய் ரோல்் குட்



28. தலைவா விஜய் கட் அவுட்டைப்பார்த்தா " தாளிச்சுடறேன் வா" னு கூப்பிடற மாதிரி இருக்கு ;-))




 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 40  ( ஆனா ஆல்ரெடி 42 போட்டுட்டாங்க )



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =  2.75 / 5


சி பி கமெண்ட்   -தலைவா - முதல் பாதி கமர்ஷியல் கலக்கல் ,பின் பாதி அவியல் ,பொரியல் .விஜய் நடனம் ,டிரஸ்கோடு சூப்பர் ,திரைக்கதை சொதப்பல் - சிதம்பரம் லேனா திரை அரங்கில் படம் பார்த்தேன் 



EVIL DEAD (2013)- சினிமா விமர்சனம்

இப்ப பழைய படங்களை எல்லாம் டைட்டில் கூட மாத்தாம ரீமேக் பண்ணி  ரிலீஸ் பண்றது லேட்டஸ்ட் டிரெண்ட்.தமிழ்ல நிறைய உதாரணங்கள் (தில்லு முல்லு) ஹாலிவுட் மட்டும் இதுக்கு விதி விலக்கு இல்ல.1981 ல வெளிவந்து சக்கை போடு போட்ட ஈவில் டெட் படம் சில நாட்களுக்கு முன்னாடி ரீமேக் ஆகி வெளி வந்துச்சு. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். பின்ன ஈவில் டெட் படம்னா சும்மாவா? அந்த காலத்துலையே மிரட்டிய படமாச்சே. இப்ப புது தொழில்நுட்பங்களோட உதவியால நல்லா வரும்-னு ஒரு நினைப்பு தான்.
ஆனால் சொதப்பல். இருந்தாலும் முடிஞ்ச அளவு மிரட்டி இருக்காங்க.

அதே கதை.... நாலு பேர் ஒரு காட்டுக்கு ஜாலியா இருக்க போறாங்க..(ஐ மீன் ரிலாக்ஸ் பண்ண போறாங்க) அங்க போயும் ஒரு அறிவு ஜீவி ஒரு புத்தகத்தை தவறுதலா படிக்குது.அது பேய எழுப்பற மந்திரங்கள் உள்ள புக். படிச்ச உடனே பேய்ங்க எல்லாம் ஏதோ மிலிட்டரி ஆர்டர் கொடுத்த மாறி வரிசையா வந்து எல்லாத்தையும் கொல்லுதுங்க. அதுங்க கிட்ட இருந்து இந்த நாலு மனுஷ பேய்ங்களாம் தப்பிச்சுதா என்பதை வெண்  திரையில் காண்க.



 இதுல கொஞ்சம் சேஞ்சுக்காக பேய் வர்றதுக்கான காரணம் ப்ளஸ் நாலு பேரும் ஏன் அந்த வீட்டுக்கு போறாங்க அப்டீங்கறதுக்கும் ஒரு லாஜிக் காரணம் வச்சுருக்காங்க(அப்டியே  ஏ எல்; விஜய் மாதிரி  எடுக்காம கொஞ்சம் மாத்தி எடுக்கறாங்களாம்) . பழைய படத்தையும் இந்த படத்தையும் ஆராய்ச்சி பண்ணி பார்த்தா இந்த ரீமேக் படம் எல்லா விதத்துலயும் மைனஸ்.அருவெறுக்கத்தக்க காட்சிகள் அதிகம். ஹாலிவுட்டுக்கு ஓ.கே ஆனா தமிழ்நட்டுக்கு சரி வராது.

பழைய படத்துல ஹீரோ நடிப்பு பாரட்டும் படி இருக்கும். அவர்ட்ட இருந்த ஹியுமர் கலந்த ரியாக்‌ஷன் இதில் மிஸ்ஸிங்.இதுல.ஹீரோயின் முக்கிய கேர்க்டர். மேலே இருக்கற பாப்பா தான் பேய்(ப்ப்ப்ப்பா... யார்ரா இந்த பொண்ணு?....)



இயக்குநர் பாராட்டு பெரும் இடங்கள்:


1.தனது சொந்த மகளை பேய் பிடித்ததால் அவளை உயிரோடு எரிக்கும் காட்சியில் திடீரென தன் குரலை மாற்றி பேசும்இடம்.

2.பேய் படத்துக்கான லொக்கேஷன் அதிலும்  கதைக்கான லொக்கேஷன் மற்றும் காட்சிஅமைப்பு.

3.செலவு அதிகம் ஆகாமல் ஒரே வீட்டில் படத்தை முடித்தது. (விசு , வி சேகர்  சிஷ்யர் போல )

4.டைட்டிலை வைத்தே பப்ளிசிட்டி  தேடிக் கொண்டது.

5.சேற்றில் இருந்து திடீரென பேய் வரும் காட்சி.( ஹி ஹிஹி )

6.அந்த இருண்ட வெளிச்சத்திலும் (!!!) அனைத்தையும் தெளிவாக பதிவு செய்தது.

7.திரும்பி செல்ல முயலும் போது வெள்ளம் பெருக்கெடுத்து அக்கரைக்கு செல்ல முடியாமல் இருக்கும் போது பேய் சிரிக்கும் காட்சி.

இயக்குநரிடம் தாறுமாறான கேள்விகள்:

1. பேய் எழுப்பறதுக்கு மந்திரம் இருக்கற மாதிரி தூங்க வைக்கவும் மந்திரம் இருக்கனுமே? (தாலாட்டு மாதிரி... ஒரு வேளை இரண்டாவது பாகத்துக்கு அஸ்திவாரம் போட்டுடீங்களா?...ஐயோ சாமி நா இல்ல....)

2.பேய் ஏன் யார் மேலையாவது எதையாவது வாமிட்  பண்ணிட்டே இருக்குது. (டைப்பாய்டு காய்ச்சலா? மாசமா இருக்கா? பேயையே மாசமாக்கின அமாவாசை யாரு? )

3.பேயோட வேலை என்ன?... கொல்றது. அத விட்டுட்டு ஏன் இரண்டு தடவை கில்மா பண்னப் பாக்குது? (விரல் விட்டு எண்ணிட்டு இருந்தேன்.ஆனா கண்ணை மூடிக்கிட்டேன் )

4.பேய் வாந்தி எடுக்குதோ இல்லயோ ஒரு கட்டத்துல ஆடியன்ஸ் வாந்தி எடுக்க ஆரம்பிச்சர்றாங்க. கேமரா ஆங்கிள் அப்பிடியா வைப்பாங்க ?

5.நாக்கை பிளப்பது, தன் கையை தானே அறுத்து எறிவது, கை நசுங்கி அதை அப்படியே எடுப்பது... இவ்ளோ டீட்டெய்லா காட்டனுமா? இதென்ன பிட்டுப்படமா?

6. கடைசி காட்சி ஒரே இரத்த வெள்ளம். பழைய படத்திலும் வன்முறை இருந்துச்சு இந்த அளவு இல்ல.

7. ஒரு கட்டத்தில் போதும் போதும் என்றாகிவிட்டது.ஒரே கட்டடத்தில் எடுத்தா அப்படித்தான் போல




திகில் பட ரசிகர்கள் மட்டுமே பார்க்கலாம். பெண்களும்,குழந்தைகளும் தவிர்க்க வேண்டிய படம்.மீறினால் வாழ்க்கையை வெறுப்பது உறுதி.

டிஸ்கி- இந்தப்படத்தை  வெட்டியாக உட்கார்ந்து பார்த்து விமர்சனம் டைப்பியது என் அக்கா பையன் கார்த்திக் . எடிட்டிங்க் , டைரக்‌ஷன் மேற்பார்வை , ஸ்டில்ஸ் செலக்‌ஷன் மட்டும் நான் ( இவனுக்கு மனசுக்குள்ளே ஸ்ரீராம்னு நினைப்பு )


Wednesday, August 21, 2013

மெட்ராஸ் கபே - தடை? - ஐகோர்ட்

 

 

1. மெட்ராஸ் கபே படத்திற்கு தடை விதிக்க முடியாது - ஐகோர்ட்!!

Cant ban madras cafe movie says Madurai HC
 மெட்ராஸ் கபே படத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. இந்தி நடிகர் ஜான் ஆபிரஹாம் நடித்து, தயாரித்துள்ள படம் மெட்ராஸ் கபே. இப்படம் வருகிற ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் கதை இலங்கையில் நடந்த போரின் ஒரு பகுதி‌யை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழர்களை தவறாக சித்தரிப்பதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் கூறி இப்படத்தை தடை செய்ய தமிழக அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சமீபத்தில் தமிழ் அமைப்பினர் இப்படத்தை பார்த்து இந்த முடிவை எடுத்தனர். இதனால் தமிழகத்தில் இப்படம் வெளியாகுமா என்று சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே வக்கில் ஸ்டாலின் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில் இப்படத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை, இலங்கை தமிழர்களை தவறாக சித்தரித்து இருப்பது போன்று பல்வேறு சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும், இப்படம் வெளியானால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் என்றும், ஆகவே இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று தமது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ராஜேஸ்வரன் மற்றும் மதிவாணன் ஆகியோரது பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அதில் தற்போதைய சூழலில் படத்திற்கு விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இதுதொடர்பாக மத்திய தணிக்கை துறையினர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர். இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செப்டம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைப்பட்டது.



2. அரசியல், மதச்சாயம் பூசாதீர்கள் : ஜான் ஆபிரஹாம் வேண்டுகோள்!!

Madras Cafe doesnt call anyone terrorists: John Abraham
 பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் இந்தியில் தயாரித்துள்ள படம் மெட்ராஸ் கபே. இப்படம் இந்தியா முழுக்க இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. தமிழிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் கதை, இலங்கை பிரச்னையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது எனவும், அதில் இலங்கை தமிழர்களை தவறாக சித்திரித்துள்ளதாகவும் கூறி தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சி இருவாரங்களுக்கு முன்னர் போலீசில் புகார் கொடுத்தனர். மேலும் இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் தொடர்பாக சென்னை வந்திருந்த ஜான் ஆபிரஹாம் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசுகையில், இப்படத்திற்கு இலங்கை அதிபர் ராஜபக்ஷே ரகசியமாக பண உதவி செய்துள்ளதாக பொய்யான தகவல் வந்துள்ளது. அவர் எதுவும் உதவி செய்யவில்லை. இப்படத்தை நானும் எனது நண்பர்கள் சிலரும் சேர்ந்து தயாரித்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் இப்படத்தின் கதையை விரிவாக சொல்லியிருக்கிறோம். 1990களில் இலங்கையில் நடந்த ஒரு சம்பவத்தை கதையின் கருவாக கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளோம். இப்படத்தில் இலங்கை தமிழர்களை தவறாக எதுவும் சித்தரிக்கவில்லை. இது முழுக்க ஆக்ஷ்ன், திரில்லர் நிறைந்த ஒரு கமர்ஷியல் படமாகும். தேவையில்லாமல் இந்தபடத்திற்கு மதச்சாயமோ, அரசியல் சாயமோ பூச வேண்டாம். இந்த படத்திற்கு உங்களுடைய சப்போர்ட் ரொம்ப ரொம்ப தேவை என்று ‌கேட்டு கொண்டார். 



3. மெட்ராஸ் கபே சினிமாவுக்கு தடை கோரி ஐகோர்ட்டில் மனு

Petiion in Madurai HC to ban Madras cafe film
 "மெட்ராஸ் கபே படத்தை வெளியிட, தடை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில், மனு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் கிளையில், வக்கீல் எழிலரசு தாக்கல் செய்த மனு: "மெட்ராஸ் கபே சினிமா, சர்வதேச அளவில் வெளியாகிறது. இந்தி நடிகர், ஜான் ஆபிரகாம் கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின், "டிரைலர் சென்னையில், வெளியிட்டபோது, எதிர்த்து, போராட்டம் நடத்தியவர்கள் மீது, போலீசார் தடியடி நடித்தினர்.

"மெட்ராஸ் கபே படத்தில், இலங்கை தமிழர்களை, பயங்கரவாதிகள் போலவும், இந்திய அமைதிப்படை, இலங்கைக்கு சென்ற போது, தமிழர்கள் எதிராக இருந்ததாகவும், காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படத்திற்கு, இலங்கை அதிபர் ராஜபக்ஷே நிதி உதவி செய்துள்ளார். படம் வெளியானால், சட்டம் ஒழுங்கு பாதிக்கும். படத்திற்கு, தடை விதிக்கக்கோரி, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, தமிழக தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பினேன். படம் வெளியிட, தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, விரைவில் விசாரணைக்கு வருகிறது.


4. உலகம் முழுக்க மெட்ராஸ் கப‌ே படத்தை தடை செய்ய வேண்டும் - தமிழ் அமைப்பினர்!

Madras Cafe movie should banned all over world says Tamil associations
சர்ச்சைக்குரியதாக கருதப்படும் மெட்ராஸ் கபே படத்தை தமிழகம் மட்டுமல்லாது உலகில் எந்த நாட்டிலும் இப்படத்தை திரையிட அனுமதிக்க முடியாது எனவும், அப்படத்தை தடை செய்ய வேண்டும் என அப்படத்தை பார்த்த பின்பு வெளியே வந்த தமிழ் அமைப்பினர் கூறியுள்ளனர். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம், இந்தியில் நடித்து, தயாரித்துள்ள படம் ‌மெட்ராஸ் கபே. குர்ஜித் சிர்கார் டைரக்ட் செய்துள்ளார். வருகிற 23ந் தேதி தமிழிலும் டப் செய்யப்பட்டு இப்படம் வெளிவருகிறது. இந்தப்படம் விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நல்லவராக சித்தரிப்பதாகவும் கூறி சில தமிழ் அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம நடத்துவோம் என்றும் அறிவித்திருந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் கிளம்பிய எதிர்ப்பை தொடர்ந்து சென்னை வந்தபோது பேட்டியளித்த ஜான்ஆபிரஹாம் இப்படத்தை திரையிட்டு காட்ட சம்மதம் சொன்னார். அதன்படி இன்று இப்படம் தமிழ் அமைப்பினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான், டைரக்டர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலர் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நிறைய இருப்பதாகவும் அதனால் படத்தை தமிழகம் மட்டுமின்றி உலகில் எங்கும் இந்தபடத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறினார். மீறி படத்தை திரையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5. மெட்ராஸ் கபே - வை தமிழ் அமைப்பினர் நாளை பார்க்கிறார்கள்

Tamil association to see Madras Cafe film
ஜான் ஆபிரகாம் நடித்துள்ள புதிய இந்திப்படம் மெட்ராஸ் கபே. குர்ஜித் சிர்கார் டைரக்ட் செய்துள்ளார். வருகிற 23ந் தேதி தமிழிலும் டப் செய்யப்பட்டு படம் வெளிவருகிறது. இந்தப் படம் விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை நல்லவராக சித்தரிப்பதாகவும் கூறி சில தமிழ் அமைப்புகள் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. படத்தை திரையிடும் தியேட்டர்கள் முன்பு போராட்டம நடத்துவோம் என்றும் அறிவித்திருந்தன.

இந்த நிலையில் சென்னை வந்த ஜான் ஆபிரகாம், "இது இலங்கையில் நடந்த கலவரத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு கதை. வேறு யாரையும் குறைத்து மதிப்பிட்டோ, உயர்த்தியோ இந்தப் படம் எடுக்கப்பட வில்லை. சந்தேகம் இருந்தால் தமிழ் அமைப்புகளுக்கு படத்தை போட்டுக்காட்டத் தயார்" என்று அறிவித்திருந்தார்.

அதன்படி நாளை (ஆகஸ்ட் 18) படம் தமிழ் அமைப்பினர்களுக்கு போட்டுக்காட்ட அதன் தயாரிப்பாளர் ஏற்பாடு செய்து வருகிறார். சத்யம் தியேட்டர், அல்லது பிரசாத் லேப் தியேட்டரில் படம் திரையிடப்படும் என்று தெரிகிறது.

 thanx - dinamalar




6. மெட்ராஸ் கஃபே' படத்தை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது: நடிகர் ஜான் ஆபிரகாம் சொல்கிறார்

மெட்ராஸ் கஃபே" படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்றும், தணிக்கைக்குழுவை விட மேலானவர்கள் யாரும் கிடையாது என்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் கூறினார்.

நடிகர் ஜான் ஆபிரகாம் தயாரித்துள்ள "மெட்ராஸ் கஃபே" படத்தை சூஜித் சிர்கார் இயக்கி உள்ளார். வரும் 23ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. இலங்கை உள்நாட்டுப்போரில் 1980களின் பிற்பகுதியையும், 1990களின் தொடக்கத்தையும் கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முன்னோட்ட தொகுப்பு  ஏற்கனவே வெளியாகி உள்ளது.

ஒரு உணவு விடுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதால் இந்தப்படத்துக்கு மெட்ராஸ் கஃபே என பெயரிடப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் "கஃபே" எங்கே அமைந்துள்ளது என்பது படத்தில் காட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்து இந்திய அமைதிப்படை வலுக்கட்டாயமாக திரும்பப்பெறப்பட்ட பிறகு, "ரா" உளவு அமைப்பின் சார்பில் ரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட ராணுவ அதிகாரி பாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். இலங்கைக்கு போர் செய்திகளை சேகரிக்க சென்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் வேடத்தில் நடிகை நர்கீஸ் பக்ரி நடித்துள்ளார்.

இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டுப் போராடிய விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும், அதன் தலைவர் பிரபாகரனையும் கொச்சைப்படுத்தி இந்தப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்,  நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் தமிழர் அமைப்புக்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

இந்த எதிர்ப்பு குறித்து நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், "மெட்ராஸ் கஃபே" பட விவகாரத்தில், ஒவ்வொருவரின் கருத்தையும் மதிக்கிறேன். வைகோ, சீமான் ஆகியோரின் கருத்துக்களையும் மதிக்கிறேன். அதே நேரத்தில் அவர்களும் எங்கள் கருத்தை மதிக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.


இது ஜனநாயக நாடு. இந்தப் படத்தில் அடங்கியுள்ள கதைக்களத்துக்கு தணிக்கைக்குழு ஆட்சேபம் தெரிவிக்காமல், "யுஏ" சான்றிதழ் வழங்கி இருக்கிறது என்கிற பட்சத்தில், இந்தப் படத்தில் எதுவும் தவறாக இல்லை என்றே கருதுகிறேன். அவர்கள் போய் தங்கள் ஆட்சேபத்தை எழுப்பட்டும். அதை வரவேற்கிறேன். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் இந்தப் படத்தை நிச்சயம் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்ப்போம்" என்றார்.

படத்தின் இயக்குனர் சூஜித் சிர்கார் கூறுகையில், "எங்களுக்கு எதிராக போராட்டம் நடத்துகிற ஒரு அரசியல் கட்சி போல, நாங்கள் எந்தப் போராட்டத்தையும் தொடங்கி விட முடியாது. ஜனநாயக நாட்டில் பேச்சு சுதந்திரம் உண்டு. தணிக்கைக்குழுவுக்கு மேலாக யாரும் கிடையாது. ஜனாதிபதியோ, உச்ச நீதிமன்றமோ உத்தரவு பிறப்பிக்காதது வரை ஒரு படத்தை தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது" என்றார்.

THANX - VIKATAN NEWS

ஆரம்பம் படத்துக்கு தடை?? ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் !

1.கோடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? அங்கு தங்கியிருப்பது அப்படி என்ன பாதக செயலா?- ஜெ. # முதலாளின்னா கம்பெனிக்கு உள்ளே இருக்கனும் மேடம்




----------------------------------


2. பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்:கருத்து கணிப்பில் தகவல்! # ஆட்சிக்கு வந்ததும் எத்தனை ஹிந்திப்படங்களை தடை பண்ணுவாரோ?




-----------------------------


3. எனது 7 கேள்விகளுக்கு கலைஞர் பதில் தருவாரா?-ஜெ # 70 கேள்விக்குக்கூட பதில் சொல்லிடுவாரு.நீங்க பாட்டுக்கு ஏழரையைக்கூட்டிட்டா என்ன பண்ண?



---------------------------


4. ஊட்டி கிளைமேட்டை காட்ட படம் பூரா புகையை பேக் டிராப்பில் விட்டுட்டே இருக்கும் படங்கள்.1 சச்சின் 2 இதயத்தை திருடாதே 3. லேசா லேசா




----------------------


5. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி யில் இணைந்தார். # என்னமோ ஹன்சிகா சிம்பு கூட இணைஞ்ச மாதிரி பில்டப்



----------------------------


6. ஜெயா டி வி யில் விஜய் - வா வா என் தலைவா # சச்சின் . செம டைமிங் .மம்மி உள் குத்து



------------------



7. ரஜினி யின் வீரா ஹிட்.விக்ரம் ன் சாமி ஹிட். டி ஆர் ன் வீரா சாமி அட்டர் பிளாப் # நீதி - அடுத்தவங்களை காபி அடிக்கக்கூடாது



----------------------------


8. தலைவா ,ஜில்லா - 2ம் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் . ஆரம்பம் ,வீரம் - உதடுகள் ஒட்டி உறவாடும் உச்சரிப்பு



-------------------------


9. சேலத்தில் 30,000 தலைவா டிவிடிகள் பறிமுதல் # ஒரு ஊர்லயே இவ்வளவுன்னா தமிழ் நாடு பூரா எவ்ளவோ?இனி ரிலீஸ் பண்ணி என்ன யூஸ்?



-----------------------


10. இனி என் கால்ஷீட் வேண்டுமென்றால் படமும் பெரியதாக இருக்க வேண்டும், சம்பளமும் பெரியதாக தரவேண்டும்.- தபு # உங்க பேரு மட்டும்சிறுசா இருக்கே?



------------------------------



11. பெரும்பாலான ஆண்கள் தாங்கள் கட்டி இருக்கும் சம்சாரமே உலகத்தரம் வாய்ந்ததுன்னு நினைச்சுக்கறாங்க



-----------------------


12. ஆகஸ்ட் 12: சர்வதேச இளைஞர் தினம் .ஆகஸ்ட் 15- மேரேஜ் ஆகாத ஆண்கள் தினம்



-----------------------



13. பெரும்பாலும் பொண்ணுங்களுக்கு 20 வயசுக்குள்ளே மேரேஜ் ஆகிடுது.ஆண்களுக்கு 30 ஆகிடுது.இந்த 10 வருச கேப் நமக்கு சாபம்தான்




--------------------------


14. கிரானைட் வெட்டி எடுத்ததில்
அரசுக்கு ரூ.327 கோடி நஷ்டம் 3 பேர் மீது புதிய வழக்கு பதிவு# வெட்டாம தோசைக்கரணடியை விட்டு எடுத்திருக்கனுமோ?




---------------------------


15. ஹலோ ரயில்வே மினிஸ்டர்.டிடிஆர் னா ஆண்கள் மட்டும் தானா ? - இவண் பெண்கள் உரிமைக்கு குரல் கொடுப்போர் சங்கம்



--------------------------------------



16. ஆயுதக்கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளதால் ஆ”ரம்பம்” படத்துக்கு தடை - ஜெ அவசர அறிவிப்பு # கற்பனை



-------------------------



17. உதட்டு முத்தம் கொடுத்து விதார்த்தை திணறடித்த மனீஷா யாதவ்! # யாதவ குலப்பெண் லிப் கிஸ் அடிக்கலாமா?ன்னு டாக்டர் அய்யா இன்னும் கிளம்பலயா?




-----------------------------


18. 'தலைவா ' அப்படின்னு படமா ? எனக்கு தெரியாதே ! - சரத்குமார் !# போயஸ் னு ஒரு தோட்டம் இருக்கு தெரியுமா?




------------------------


19. என் முன்னேற்றத்தில் நீ காட்டும் அக்கறை ,என் மீது நீ செலுத்தும் அன்பு உன் மீதான என் காதலை ஆழப்படுத்துகிறது




------------------------


20. காவி = கேரட் ,வெள்ளை = முள்ளங்கி ,பச்சை = மிளகாய் என க்ரியேட்டிவிட்டியுடன் தேசியக்கொடி கோலம் பார்த்தேன்.இயற்கை ,தேசம் ் இணைந்திருப்போம்



--------------------------------

Tuesday, August 20, 2013

விஜய் ரசிகர்களின் பேவரைட் சாங் எதுவாக இருக்கும் ?

1. ஆ "கெஸ்ட் " மாசம்.கேர்ள் பிரண்ட்ஸ் வீட்டுக்குப்போய் இதான் சாக்குன்னு டேரா அடிச்சுடனும்




------------------



2. என் உதடுகள் ஒவ்வொரு உச்சரிப்பிலும் நம் காதலையே சார்ந்திருக்கும்.உன் உதடுகள் ஒவ்வொரு நச்சரிப்பிலும் என் பர்சை பதம் பார்க்கும்




---------------------



3. கொஞ்சுவதில் பெண்ணை ஆணால் மிஞ்சி விட முடியாது.நிராகரிப்பில் ,தூக்கி எறிவதில் கிட்டே கூட நெருங்கி விட முடியாது




-----------------------



4. இன்று டாப் ஸி பன் பிறந்த நாள் .எனவே இன்று ஒரு நாள் மட்டும் மேலே மட்டும் பார்த்து பன் மட்டுமே சாப்பிட முடிவு - ஈரோடு டாப்சி நற்பனி இயக்கம்


----------------------


5. மறதி கெட்டது. ம ரதி நல்லது



----------------



6. இந்த பொண்டாட்டிங்க எப்பவும் இப்டித்தான்.சின்ன விஷயத்தை பெருசு பண்ணுவாங்க ;-)



--------------------


7./ சுடிதார் பூராவும் கண்ணாடி போட்ட பிகரைப்பார்த்ததும் மனதில் தோன்றிய கேள்வி - டபுள் சைடு கிளாஸ் சுடி மாடல் கிடைக்கலை?




-----------------------


8. அன்பே! தனி தெலுங்கானா அமைப்பதும் ,நம்மைப்பிரிப்பதும் இப்போதைக்கு வெற்றி பெற்றாலும் அது நீடிக்காது



----------------



9. சார்.இந்த பஸ் பாண்டிச்சேரி போகுதா? புதுச்சேரி போகுதா? புதுவை போகுதா? னு கேட்டு கண்டக்டரையே குழப்பிவிடுபவனே தமிழன்




---------------------------


10. வர வர உன் இம்சை அதிகமாகி விட்டது.என்னை பிடிக்குமா? விலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று " என்னிடம் என்னென்ன பிடிக்கும் ஏன்?' என ஆகி விட்டது



--------------------------


11. விஜய் ரசிகர்களின் பேவரைட் சாங் - வா வா என் தலைவா!,வந்து விடு என் தலைவா



-----------------------



12. அன்பே!,நீ என்னை தொட ர்ந்தாய்.நான் உன்னை தொட ர்ந் தேன். மியூசிக்கல் சேர் போல் ஆனது நம் காதல்




------------------------



13. 5 நிமிடம் காவேரி தாக்குதலில் ( யானைக்குட்டி) தடுமாறிய தலைவியே! பல காலமாய் காவேரியின் வறட்சித்தாக்குதலில் நிலை குலைந்திருப்பதை அறிவீரோ?



-------------------------


14.  அன்பே,என்னை .என் குடும்பத்தை பிடிக்கவில்லை என்றாய்.எல்லாரையும் ஒரேயடியாய் வெறுக்க நீ ஒன்றும் கனகா இல்லை




---------------



15. புது இசை அமைப்பாளர்கள் 10 படங்களுக்கு இசை அமைக்க 100 படங்களை காப்பி அடிக்கையில் இளையராஜா 900 படங்களை அநாயசமாய்த்தாண்டி விட்டாரே?



-----------------------


16. உன் டி பி யை  ( ஃபோட்டோவை ) பார்த்தேன்.ஒரே ஒரு ஜிமிக்கிதான் உருப்படியாய் உன்னிடம் உள்ள சொத்து என்பதை உணர்ந்தேன் ;-)




---------------------



17. பவுடர் அடிக்கும் பஃப்பை காணவில்லை.தேடுவதற்கு நேரம் இல்லை.உன் உள்ளங்கையை கடனாககொடுத்தால் (பவுடர் )அடித்து விட்டு திருப்பித்தந்துவிடுவேன்



-----------------------


18.  நீ எங்கு சென்றாலும் உன் பின் வர ஆசை.ஆனா ஆபிஸ்ல சம்பளம் தரமாட்டாங்களே!




----------------------------


19. உன்னை எனக்குப்பிடித்ததில் ஆச்சரியம் இல்லை.உன் குடும்பத்தினரையும் எனக்குப்பிடிக்கிறதே எப்படி ?


---------------------------


20. ஆபரணம் ஏதும் அணியாத ஆரணங்கே!




------------------------