Showing posts with label EVIL DEAD (2013)- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label EVIL DEAD (2013)- சினிமா விமர்சனம். Show all posts

Thursday, August 22, 2013

EVIL DEAD (2013)- சினிமா விமர்சனம்

இப்ப பழைய படங்களை எல்லாம் டைட்டில் கூட மாத்தாம ரீமேக் பண்ணி  ரிலீஸ் பண்றது லேட்டஸ்ட் டிரெண்ட்.தமிழ்ல நிறைய உதாரணங்கள் (தில்லு முல்லு) ஹாலிவுட் மட்டும் இதுக்கு விதி விலக்கு இல்ல.1981 ல வெளிவந்து சக்கை போடு போட்ட ஈவில் டெட் படம் சில நாட்களுக்கு முன்னாடி ரீமேக் ஆகி வெளி வந்துச்சு. படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். பின்ன ஈவில் டெட் படம்னா சும்மாவா? அந்த காலத்துலையே மிரட்டிய படமாச்சே. இப்ப புது தொழில்நுட்பங்களோட உதவியால நல்லா வரும்-னு ஒரு நினைப்பு தான்.
ஆனால் சொதப்பல். இருந்தாலும் முடிஞ்ச அளவு மிரட்டி இருக்காங்க.

அதே கதை.... நாலு பேர் ஒரு காட்டுக்கு ஜாலியா இருக்க போறாங்க..(ஐ மீன் ரிலாக்ஸ் பண்ண போறாங்க) அங்க போயும் ஒரு அறிவு ஜீவி ஒரு புத்தகத்தை தவறுதலா படிக்குது.அது பேய எழுப்பற மந்திரங்கள் உள்ள புக். படிச்ச உடனே பேய்ங்க எல்லாம் ஏதோ மிலிட்டரி ஆர்டர் கொடுத்த மாறி வரிசையா வந்து எல்லாத்தையும் கொல்லுதுங்க. அதுங்க கிட்ட இருந்து இந்த நாலு மனுஷ பேய்ங்களாம் தப்பிச்சுதா என்பதை வெண்  திரையில் காண்க.



 இதுல கொஞ்சம் சேஞ்சுக்காக பேய் வர்றதுக்கான காரணம் ப்ளஸ் நாலு பேரும் ஏன் அந்த வீட்டுக்கு போறாங்க அப்டீங்கறதுக்கும் ஒரு லாஜிக் காரணம் வச்சுருக்காங்க(அப்டியே  ஏ எல்; விஜய் மாதிரி  எடுக்காம கொஞ்சம் மாத்தி எடுக்கறாங்களாம்) . பழைய படத்தையும் இந்த படத்தையும் ஆராய்ச்சி பண்ணி பார்த்தா இந்த ரீமேக் படம் எல்லா விதத்துலயும் மைனஸ்.அருவெறுக்கத்தக்க காட்சிகள் அதிகம். ஹாலிவுட்டுக்கு ஓ.கே ஆனா தமிழ்நட்டுக்கு சரி வராது.

பழைய படத்துல ஹீரோ நடிப்பு பாரட்டும் படி இருக்கும். அவர்ட்ட இருந்த ஹியுமர் கலந்த ரியாக்‌ஷன் இதில் மிஸ்ஸிங்.இதுல.ஹீரோயின் முக்கிய கேர்க்டர். மேலே இருக்கற பாப்பா தான் பேய்(ப்ப்ப்ப்பா... யார்ரா இந்த பொண்ணு?....)



இயக்குநர் பாராட்டு பெரும் இடங்கள்:


1.தனது சொந்த மகளை பேய் பிடித்ததால் அவளை உயிரோடு எரிக்கும் காட்சியில் திடீரென தன் குரலை மாற்றி பேசும்இடம்.

2.பேய் படத்துக்கான லொக்கேஷன் அதிலும்  கதைக்கான லொக்கேஷன் மற்றும் காட்சிஅமைப்பு.

3.செலவு அதிகம் ஆகாமல் ஒரே வீட்டில் படத்தை முடித்தது. (விசு , வி சேகர்  சிஷ்யர் போல )

4.டைட்டிலை வைத்தே பப்ளிசிட்டி  தேடிக் கொண்டது.

5.சேற்றில் இருந்து திடீரென பேய் வரும் காட்சி.( ஹி ஹிஹி )

6.அந்த இருண்ட வெளிச்சத்திலும் (!!!) அனைத்தையும் தெளிவாக பதிவு செய்தது.

7.திரும்பி செல்ல முயலும் போது வெள்ளம் பெருக்கெடுத்து அக்கரைக்கு செல்ல முடியாமல் இருக்கும் போது பேய் சிரிக்கும் காட்சி.

இயக்குநரிடம் தாறுமாறான கேள்விகள்:

1. பேய் எழுப்பறதுக்கு மந்திரம் இருக்கற மாதிரி தூங்க வைக்கவும் மந்திரம் இருக்கனுமே? (தாலாட்டு மாதிரி... ஒரு வேளை இரண்டாவது பாகத்துக்கு அஸ்திவாரம் போட்டுடீங்களா?...ஐயோ சாமி நா இல்ல....)

2.பேய் ஏன் யார் மேலையாவது எதையாவது வாமிட்  பண்ணிட்டே இருக்குது. (டைப்பாய்டு காய்ச்சலா? மாசமா இருக்கா? பேயையே மாசமாக்கின அமாவாசை யாரு? )

3.பேயோட வேலை என்ன?... கொல்றது. அத விட்டுட்டு ஏன் இரண்டு தடவை கில்மா பண்னப் பாக்குது? (விரல் விட்டு எண்ணிட்டு இருந்தேன்.ஆனா கண்ணை மூடிக்கிட்டேன் )

4.பேய் வாந்தி எடுக்குதோ இல்லயோ ஒரு கட்டத்துல ஆடியன்ஸ் வாந்தி எடுக்க ஆரம்பிச்சர்றாங்க. கேமரா ஆங்கிள் அப்பிடியா வைப்பாங்க ?

5.நாக்கை பிளப்பது, தன் கையை தானே அறுத்து எறிவது, கை நசுங்கி அதை அப்படியே எடுப்பது... இவ்ளோ டீட்டெய்லா காட்டனுமா? இதென்ன பிட்டுப்படமா?

6. கடைசி காட்சி ஒரே இரத்த வெள்ளம். பழைய படத்திலும் வன்முறை இருந்துச்சு இந்த அளவு இல்ல.

7. ஒரு கட்டத்தில் போதும் போதும் என்றாகிவிட்டது.ஒரே கட்டடத்தில் எடுத்தா அப்படித்தான் போல




திகில் பட ரசிகர்கள் மட்டுமே பார்க்கலாம். பெண்களும்,குழந்தைகளும் தவிர்க்க வேண்டிய படம்.மீறினால் வாழ்க்கையை வெறுப்பது உறுதி.

டிஸ்கி- இந்தப்படத்தை  வெட்டியாக உட்கார்ந்து பார்த்து விமர்சனம் டைப்பியது என் அக்கா பையன் கார்த்திக் . எடிட்டிங்க் , டைரக்‌ஷன் மேற்பார்வை , ஸ்டில்ஸ் செலக்‌ஷன் மட்டும் நான் ( இவனுக்கு மனசுக்குள்ளே ஸ்ரீராம்னு நினைப்பு )