Showing posts with label தலைவா - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label தலைவா - சினிமா விமர்சனம். Show all posts

Thursday, August 22, 2013

தலைவா - சினிமா விமர்சனம்

 

ஹீரோ ஃபாரீன்ல இருக்கார். ஹீரோயினைப்பார்த்ததும்  லவ் வந்துடுது. பாப்பாவுக்கும் அவர்  மேல லவ் தான் , ஆனா பாருங்க ஒரு வெட்கம் , தயக்கம் . இந்த பொண்ணுங்களுக்கு  பசங்களை சுத்தி அடிச்சு காய விடறதுல அலாதி ஆனந்தம் . ஆல்ரெடி  தனக்கு மேரேஜ் ஆகிடுச்சுன்னு அள்ளி விடுது. பாப்பாவோட டிராமாவை  ஹீரோ  கண்டு பிடிச்சு கலாய்க்கறாரு. இப்படி ஜாலியா  6 ரீல் போகுது ஆட்டம் பாட்டம் காதல் , காமெடின்னு.


ஹீரோவோட அப்பாவை நேர்ல பார்த்து சம்பந்தம்  பேசனும்னு  பாப்பாவோட அப்பா சொல்றாரு. ஹீரோவோட அப்பா இந்தியாவில்  மும்பைல இருக்கார். அவர் ரொம்ப  பிசி, நாமளே போய்ப்பார்ப்போம்னு கிளம்பறாங்க .அங்கே போய்ப்பார்த்தா   ஹீரோவோட அப்பா  ஒரு தாதா. 

இந்த இடத்துல  2 ட்விஸ்ட்ஸ்  வருது .இடைவேளை


அதுக்குப்பின்  இயக்குநருக்கு வேலை   பஞ்சாமிர்தம் பண்றதுதான் . அதாவது  ஆல்ரெடி  ஹிட் ஆன பாட்ஷா,நாயகன் ,தளபதி,தேவர்மகன்,சர்கார்,பிஸ்னெஸ்மேன்,புன்னகைமன்னன் 7 படங்களிலில் இருந்தும் காட்சிகளை  உருவி கதம்பம் ஆக்குவதுதான் .





இளைய தளபதியின் லைஃப் கேரியரில்  இது  ஒரு முக்கியமான படம் . அப்பா பேச்சை  ஆராயாமல் கேட்டு விடக்கூடாது என்ற ப்டிப்பினை , அரசியல்வாதிகளுடன்  மோதும் முன்  பின் விளைவுகளுக்குத்தயாராக  இருக்கனும் என்ற   இரு பாடங்களைக்கற்றுக்குடுத்த  படம் 


விஜய் சச்சின்  படத்துக்குப்பின்  மிக அழகாக ,ஸ்டைலிஸாக   தோற்றம் அளித்த படம்  இதுதான். பிரமாதமாக இருக்கிறார்.  ஓப்பனிங்க் சாங்கில் அவர் நடன ஸ்டெப் பிரமாதம் . கலக்கிட்டார்.  சாம் ஆண்டர்சனை நக்கல் அடிக்கும் காட்சி ,அமலாபால் கால் வாரும் காட்சி, களில் அவர் எள்ளல்கள்  கொடி கட்டிப்பறக்கிறது . 


இடைவேளைக்குப்பின்  வரும் காட்சிகளில் விஜய் -ன்  அண்டர்ப்ளே ஆக்டிங்க் சூப்பர். தளபதி தளபதி எங்கள்  த்ளபதி பாடல் காட்சிக்கு அவர் காட்டி இருக்கும் பாடிலேங்குவேஜ் , ஃபேஸ் எக்ஸ்பிரஷன் அபாரம் .


வாங்கண்ணா வணக்க்ங்கண்ணா  பாட்டுக்கான நடனம்  செம செம .அந்தப்பாட்டுக்கு  தியேட்டரில்  செம ரெஸ்பான்ஸ் .விஜய் அனுபவித்து ஆடி இருக்கிறார். 

யார் இந்த சாலையொரம் பாடல் காட்சியில்  விஜய் -ன் நடன ஸ்டெப்கள் ரசிக்க  வைத்தது.மின்னலைப்பிடித்து  மின்னலைப்பிடித்து  பாடல் காட்சிக்குப்பின் இந்தப்பாட்டில் தான் அவர் நடனம் அபாரம்


சந்தானம்  கவுண்ட்டர் டய்லாக்ஸில்  அப்ளாஸ் அள்ளுகிறார்.  சைக்கிள் கேப்பில்  விஜயையே 2 இடங்களில் ஓட்டுகிறார். .அது புரியாமல் விஜய்  ரசிகர்களே கை தட்டுகிறார்கள் 


சத்யராஜ்  அனுபவம் மிக்க  நடிப்பு . 


அமலாபால்  ஹீரோயின் . சிந்து சமவெளியில்  சீம்பால் மாதிரி  தள தள என இருந்தவர்  இதில்  பால் காரன் கை பட்டு தண்ணீர்  மிக்ஸ் பண்ணிய பால் மாதிரி நீர்த்துப்போய்  இருக்கிறார். இவர்  முகத்தில்  அட்ராக்‌ஷன்  மிஸ்சிங்க். 


ஹோட்டல்ல   பொங்கல் ஸ்டாக் இல்லைன்னு ஃபீலிங்க்ல இருக்கும்போது  வெஜ்டபுள் ஃப்ரைட் ரைஸ் இருக்குன்னு சொல்ற மாதிரி அமலா பால் டொக்கானா என்ன நான் இருக்கேன் என்பது மாதிரி  புதுமுகம் ராகினி ,  ரோஸ்மில்க் குடித்து வளர்ந்த  ரோசா மாதிரி ஒரு முகம் . வெல்வெட்டு உதடுகள் , கடிக்கத்தூண்டும் கமர்கட் கன்னங்கள்  . லோ கட்டில் பவனி வரும்  காட்சிகள் அழகு




இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்  


1, அமலாபாலுக்கு சந்தானம் நூல்  விடும் காட்சிகள்  , சாம் ஆண்டர்சன் காட்சிகள்  கலக்கல் 
2. எதிர்பாராத இடைவேளை ட்விஸ்ட் 


3. விஜய் -ன்   டிரஸ் கோடு ரசிகர்களிடையே பல நாட்கள் பேசப்படும் , நீட் 


4. வில்லன் , ஹீரோ இருவரும் ஒருவருக்கு ஒரே டைமில் ஃபோன் போடுவது , விஜய்க்கு லைன் கிடைத்ததும் அவரை  வில்லன் டிரேஸ் அவுட் பண்ணாமல்  இருக்க ஐடியா செய்வது பர பரப்பான நிமிடங்கள்







இயக்குநரிடம்  சில கேள்விகள் , திரைக்கதையில்  சில ஆலோசனைகள்


1, படத்தின் நீளம் ரொம்ப ஓவர் . 3 மணி நேரம் எல்லாம்  நம்மாளுங்க உக்காந்திருக்கவேஎ முடியாது .பின் பாதியில்  அரை மணி நெர ட்ரிமிங்க் அவசியம்


2. தன் அப்பா தன்னை இந்தியாவுக்கு வரவே விடமாடேங்கறார் என்பது ஹீரோவுக்கு எந்த சந்தேகத்தையும் ஏற்படுத்தவில்லையா? 



3. தாதா சத்யராஜ்  அமலாபால் & கோ-வை சந்திக்க  வரும்போது அவர்களைப்பற்றி எந்த வித விசாரனையும் வெச்சுக்கலையே? 



4. தலைவா என எல்லாரும் கொண்டாடும்,  அளவுக்கு விஜய் என்ன செய்தார்? எல்லாம் தற்செயலாக நடப்பதுதானே? 



5. அமலாபால் காதல்  டிராமா என வெறுக்கும் விஜய் , தன் தந்தையின் சாவுக்கு காரணமானவர் அமலாபால் என்ற கோபத்தில்  இருக்கும் விஜய் பின் எந்தப்புள்ளியில் அவரை ஏற்றுக்கொள்கிறார்? 


6. அப்பாவைக்கொன்னவங்களைப்பழி வாங்கும் சாதாக்கதைக்கு எதுக்கு இத்தனை பில்டப் ? 



7. அவ்வளவு பெரிய தலைமைப்பொறுப்பில்  இருப்பவர் தண்ணி அடிக்கலாமா?  முன் மாதிரியாக இருக்க வேணாமா? 


8. விஜய் தாதா ஆவது ஓக்கே , அந்த டிரஸ் கோடு  எதுக்கு? அவர் அப்பா சத்யராஜ் சொல்லித்தந்ததா? எஸ் ஏ சி சொல்லித்தந்ததா?



9 . க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்  தேவையில்லாத திணிப்பு 



10 . பின் நடு முதுகில்  ஆழமான குத்து வாங்கிய பின்னும்  ஹீரோ 28 பேரை வீழ்த்துவது  ஓவர்


 


மனம் கவர்ந்த  வசனங்கள்


1.  நான்  செய்யற  எந்தக்காரியமும்  என் பையனோட  வாழ்க்கைல  இடைஞ்சலா  இருந்துடக்கூடாது


2. நாம   ஒரு விஷயத்துல  இறங்கிட்டா   விளைவு  வெற்றியாத்தான்  இருக்கனும்


3.  இப்போ  உடனே   எனக்கு   தண்ணி  வரனும்



உடனே   தண்ணி  வரனும்னா   ஒரு  கிலோ வெங்காயம் வாங்கி உரி



4.  உனக்கு ஏண்டா  டான்ஸ்னாலே  பிடிக்காது ?

 ஏன்னா  எனக்கு  டான்ஸ்  வராது



5. உனக்கு ஏண்டா  காதலியே இல்லை?

 எங்கடா? இப்பவெல்லாம்   10 வயசுலயே  ரிசர்வ் பண்ணி வெச்சுக்கரானுங்க, அதுக்கு கீழே இறங்கி வர மனசு இடம்  கொடுக்க மாட்டேங்குது



6.  புருஷன்  குடிச்சுட்டு வந்தாலும் கதவைத்திறக்கறவங்க  தமிழ்ப்பொண்டாட்டிங்க , பொண்டாட்டியே   குடிச்சுட்டு வந்து கதவை தட்டுனா   ஃபாரீன் பொண்டாட்டிங்க . அதான்  ஐ லைக் தமிழ் சம்சாரம்ஸ்




7.  இந்த  யூ  ட்யூப்பும்  , ஊர்க்கிழவியும்  ஒண்ணுதான் .ஒரு விஷயம்  கிடைச்சா போதும் , ஊர் பூரா பரப்பிடுவாங்க 



8.  பிளாக் காபி  சூப்பர்


 டேய், அது  ரசம்



9.  அமலாபால்  - ஐ லவ் யூ  கேள்விப்பட்டிருக்கேன்  , வீ லவ் யூ - இப்போதான்  கேள்விப்படறேன்



10. யாருப்பா   இவன் ? பவர் ஸ்டார்  தம்பி புவர் ஸ்டார் மாதிரி  இருக்கான் ?





11.  படுத்துட்டு ஆடறது  , உக்காந்துட்டு ஆடறது  , உடம்பை  வளைச்சுட்டு ஆடறது  இப்டி ஏண்டா  இம்சை பண்றே?



12. அடுத்தவன்  பட்டா போட்ட இடத்துல  நீ  ஏண்டா கொட்டாய் போடப்பார்க்கறே?


13. அடுத்தவன்  ஃபோன்ல ஐ எஸ் டி கால் பண்றது தப்பு டா செல்லம்


14.  என் கூடவே வந்துடுங்க


 இது  ஒரு வழிப்பாதை , திரும்புனா  உயிர் தான் வரும் 



15. நம்மால மத்தவங்க  வாழ்ந்ததாத்தான்  இருக்கனும் , செத்ததா  இருக்கக்கூடாது



16. தலைவன்கறது நாமா  தேடிப்போகும்  விஷயம்  இல்லை , நம்மைத்தேடி வரும் விஷயம்



17.  ஏதோ  மீட்டிங்க்னு சொன்னே? பீடா கடைக்காரனுங்க  கூட எல்லாம் பேசிட்டு  இருக்கான் ?



18 . ஒரு தடவை  கைல கத்தி வந்துட்டா  1 காக்கும்   2 அழிக்கும்  ஆனா  கத்தியை விட முடியாது



 19.  தலைவன் தலைவன்னு சொல்லி  ஒரு கூட்டமே அவனை தலைல தூக்கி வெச்சுக்கிட்டு  கொண்டாடுது


20. இவங்களுக்கு என்னால என்ன  கொடுக்கமுடியும்னுதோணல  , ஆனா  இருப்பதை  கொடுப்பேன்





 21.  எப்படி  தப்பிச்சேன் பார்த்தியா?



 இதுக்கு மாட்டியே இருக்கலாம் 


22.  போல்  போல்  எதுவா  இருந்தாலும் என் கிட்டேயே போல் . நான் விஷ்வாவை  விட  மேல்  ( ஹிந்தில போல் = சொல்லு )



23.  இந்த டிரஸ் ல நீ வைஜயந்தி ஐ பி எஸ் ல வர்ற டிஸ்கோ சாந்தி மாதிரி சாரி  விஜய சாந்தி மாதிரி  இருக்கே


24.  அரசியல்ல  எல்லாமே நமக்கு சாதகமா நடக்காது  , நடப்பதை நமக்குசாதகமா  ஆக்கிக்கனும்



 25. அவ டிஎஸ்பின்னு என் ஈ எஸ் பி சொல்லுது




26.  எல்லாத்தொழிலுக்கும் தலைவன்னு  ஒருத்தன்  இருப்பான்

27. சரக்கு ஃபாரீனா  இருந்தாலும் சம்சாரம் தமிழ் நாடா இருக்கனும் 


28. என் சமையல் பார்த்தா எல்லார் வாயிலும் எச்சில் ஊறும் 


 எதுக்கு?து-ன்னு காரித்துப்பவா?


29. தமிழ் நாட்டிலேயே தண்ணி இல்லை, ஆனா நீங்க ஆஸ்திரேலியாவுக்கே தண்ணீர் கொண்டாந்துட்டீங்க  


30. டான்ஸ்ங்கற பேர்ல  தரையைக்கூட்டிட்டு இருப்பே



31. பொண்ணுங்க  நம்ம பின்னால வரனும்னா  அவங்க ஹேண்ட் பேக்கை திருடிட்டுதான்  ஓடனும் 


32. நாளைக்கு எங்க வீட்டுக்கு வர்றப்ப்போ சாப்பிடாம வந்துடுங்க 


 ஏன்? பிளட் டெஸ்ட் எடுக்கப்போறீங்களா? 


33., மூவ்மெண்ட்ங்கற பேர்ல கால் முட்டி செத்த மாதிரி ஒரு ஸ்டெப் 


34. அடுத்தவன் ஆட்டோல  ஆயுத பூஜை போடறது தப்பும்மா 






படம் பார்த்தபோது , பார்த்த பின் போட்ட ட்வீட்ஸ்


1. டைம் டூ லீடு கேப்ஷனை எடுத்தா மட்டும் பத்தாது, ஹீரோ ( அவரோட ) கால் மேல கால் போட்டபடி தெனாவெட்டா அமர்ந்திருக்கும் ஸ்டில்லும் நீக்கனும்-ஜெ



2. ஜெ - தலைவா லேட்டா ரிலீஸ் ஆனதால 20 கோடி ரூபாய் நட்டம் ஆகி இருக்கும் எப்பூடி? OPS - தேர்தல் ல இதனால எத்தனை ஓட்டு குறையப்போகுதோ? # கற்பனை



3. விஜய் ரசிகையை மேரேஜ் பண்ணிக்கிட்டா அவரை மாதிரி ஆடத்தெரியுமா?ன்னு கேட்கும்.வம்பு.அஜித் ரசிகைனா சும்மா நடந்து காட்னாலே போதும்



4. சத்யராஜ் - நான் மும்பைல இருக்கேன்.என்னை பிடிக்க ஏன் ஆஸ்திரேலியா போறாங்க ? ஏ எல் விஜய் - ஓ சி ல எப்போதான் அதை எல்லாம் சுத்திப்பார்க்கறது?



5. டூ இன் ஒன் ,த்ரீ இன் ஒன் பார்த்திருப்பீங்க.7 இன் ஒன் பார்த்திருக்கீங்களா? # தலைவா



6. தலைவா ல விஜய் வெள்ளை சட்டை போட்டதால வீரம் ல அஜித்தும் வெள்ளைக்கு மாறிட்டார்னு யாரும் இன்னும் கிளம்பலையா?



7. DVD ஷாப்் -ஸார்.நீங்க கேட்ட பாட்ஷா,நாயகன் ,தளபதி,தேவர்மகன்,சர்கார்,பிஸ்னெஸ்மேன்,புன்னகைமன்னன் 7 ம் இந்தாங்க. 



 அப்டியே 7 1/2 யா தலைவா தாங்க 


8. ஏ எல் விஜய் - இனிமே பாரீன் படத்தைப்பார்த்து காப்பி அடிக்கறேன்னு ஒரு பயலும் சொல்லிடமுடியாது # பாட்ஷா,நாயகன் ,தேவர்மகன் ,சர்க்கார்



9. ஏ எல் விஜய் - இனிமே பாரீன் படத்தைப்பார்த்து காப்பி அடிக்கறேன்னு ஒரு பயலும் சொல்லிடமுடியாது # பாட்ஷா,நாயகன் ,தேவர்மகன் ,சர்க்கார்



10. ஒரு இயக்குநர் காதலிக்கும் நடிகையை நாயகி ஆக்கினால் நாயகனை ( படத்தில் கூட ) நெருங்க விடமாட்டார் இயக்குநர்




11. வாங்கண்ணா வணக்கங்கண்ணா ஓப்பனிங் சாங்காக வைத்திருக்கலாம்


12. தலைவா படத்தின் பிளஸ் விஜய்.மிகப்பெரிய மைனஸ் ஏ எல் விஜய்


13. சத்யராஜ்க்குப்பதிலாக கேப்டன் நடித்திருந்து ,பின் பாதியில் ட்ரிம் பண்ணி இருந்தால் பர பரப்பான படமாக தலைவா இருந்திருக்கும் ்



14. நீங்க பகுத்தறிவுவாதி தானே? சத்யராஜ் - ஆமா . எதுக்காக படம் பூரா மேல்மருவத்தூர் அம்மன் சிவப்பு சேலையை போர்த்திட்டு வர்றீங்க?



15. அமலாபால் - நான் உங்களுக்கு அம்மா வா வரலாமா ? விஜய் - இப்பவெல்லாம் அம்மான்னாலே அலர்ஜி எனக்கு.



16. தலைவா தியேட்டரில் டிக்கெட் கவுன்ட்டர் வாசலில் டைமிங்க் பஞ்ச் - இது ஒரு வழிப்பாதை.திரும்பி வர முடியாது.உசுரு மட்டும் தான் வரும்



17. எம் ஜி ஆர் - நீ அண்ணாவையே மிஞ்சிட்டே டயலாக்கை விஜய் யை பார்த்து  பேசுனதும் மேல் லோகத்துல இருக்கற அண்ணாவுக்கே ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு


18. அஜித் - கிரீடம் படத்தை எடுத்து என் பேரை ரிப்பேர் ஆக்கிட்டீங்க . ALவிஜய் - ஒண்ணும் கவலைப்படாதீங்க.விஜய் பேரையும் ரிப்பேர் பண்ணியாச்்



19. புதுமுக்ம் ராகிணி -விஜய் க்கு ஒரு டூயட் வைத்திருக்கலாம்.டைரக்டர் மிஸ்டு



20. சுறா ,வேட்டைக்காரன் லெவலுக்கு ரொம்ப மொக்கை இல்லை என்றாலும் தலைவா ஒரு தோல்விப்படமே





21. பின் பாதி திரைக்கதையில் நாயகன் ,தேவர் மகன் ,பிஸ்னெஸ்மேன் சாயல் இல்லாமல் மெனக்கெட்டு மெருகேற்றி இருந்தால் தலைவா ஹிட் ஆகி இருக்கும்


22. வழக்கமாக பெண்கள் கூட்டம் அள்ளும் விஜய் படத்துக்கு சிதம்பரம் லேனாவில் மாலை 7 மணி காட்சிக்கு 8 பெண்கள் மட்டுமே



23. 100 படங்களைத்தாண்டிய பின் ரஜினி தளபதி யும் ,கமல் நாயகனும் கொடுத்தார்கள். 50 படமே தாண்டிய விஜய்க்கு இவ்வளவு வெயிட்டான ரோல் இப்பவே எதற்கு?



24. விஜய் ரசிகர்களைத்தவிர பொதுஜனங்களை தலைவா ஈர்ப்பது கடினம்



25. விஜய் - அமலா பால் நடனப்பயிற்சியில் விஜய் ஸ்டெப் அழகு.ஆனால் புன்னகை மன்னன் படத்தில் ஆல்ரெடி வந்த தே.இசையும் அதே சாயல்



26. தளபதி தளபதி எங்கள் தளபதி பாடல் காட்சியில் அரங்கம் அதிர்ந்தது.நீரவ் ஷா வின் கேமரா டாப் ஆங்கிள் ஷாட்ஸ் ஆர் நைஸ்



27. வாங்கண்ணா வணக்கங்க்ணா பாடல் ல் விஜய் நடனம் ,அண்டர் ப்ளே ஆக்டிங் வென் விஷ்வா பாய் ரோல்் குட்



28. தலைவா விஜய் கட் அவுட்டைப்பார்த்தா " தாளிச்சுடறேன் வா" னு கூப்பிடற மாதிரி இருக்கு ;-))




 

ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க்- 40  ( ஆனா ஆல்ரெடி 42 போட்டுட்டாங்க )



 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் -ஓக்கே

ரேட்டிங் =  2.75 / 5


சி பி கமெண்ட்   -தலைவா - முதல் பாதி கமர்ஷியல் கலக்கல் ,பின் பாதி அவியல் ,பொரியல் .விஜய் நடனம் ,டிரஸ்கோடு சூப்பர் ,திரைக்கதை சொதப்பல் - சிதம்பரம் லேனா திரை அரங்கில் படம் பார்த்தேன்