Friday, May 17, 2013

எருமைச் சீமாட்டி - பெருமாள் முருகன் - சிறுகதை

எருமைச் சீமாட்டி
ம்மாவின் கத்தல் சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்துவிட்டார்கள். கோடை நிலவின் குளிர் ஒளியில் வாசலில் கட்டில் போட்டுப் படுத்திருந்தார்கள். ''அம்மா... என்னம்மா... என்னம்மா...'' என்று பெரியவன் உலுக்கிக் கேட்ட தும் அழத் தொடங்கினார். ''எருமப் பித்துப் புடிச்சுக் கத்துறாடா உங்கம்மா'' என்று சலிப்போடு சொல்லிவிட்டு, அப்பா அவர் கட்டிலில் போய் உட்கார்ந்து பீடியைப் பற்றவைத்தார். அம்மாவின் முகத்தை நிமிர்த்தி, ''அழுவாத சொல்லும்மா... எதுனா கனாக் கண்டயா'' என்றான் பெரியவன். சின்னவனும் பயந்து அழ ஆரம்பித் தான். அவனை வாரித் தன்னோடு சேர்த்துக்கொண்ட அம்மா, ''எருமச் சீமாட்டி வந்து கத்திக் கூப்ட்டாடா'' என்றாள்.
''ஆமா... எரும வந்து கூப்ட்டா, எமன் வந்து கூப்ட்டான்னு அர்த்தம். அது வாலப் புடிச்சுக்கிட்டே போய்ச் சேரு சீக்கிரம்'' என்று முனகியபடி எச்சிலைக் காறித் துப்பினார் அப்பா. நள்ளிரவில் தூக்கம் முற்றா கக் கலைந்துவிட்ட எரிச்சல் அவருக்கு. இடையில் விழிப்பு வந்து விட்டால், மறுபடியும் அவ்வளவு சீக்கிரம் அவருக்குத் தூக்கம் வராது.
''கெழட்டெரும நெனப்புலயே இருந்திருப்ப... அதான் அப்பிடிக் கெனா வந்திருக்கு'' என்று சமாதானம் சொன்னான் பெரியவன்.
''இல்லடா... கூப்ட்டாடா. தீனி போடச் சொல்லிக் கேக்குற குரல்லயே கூப்ட்டா...'' என்று அழுத்திச் சொன்னாள் அம்மா.
கிழட்டெருமையை விற்று ஒரு வாரமாகிவிட்டது. வாங்கிய ஏவாரி வெள்ளிக்கிழமை பொழுதிருக்கவே பிடித்துச் சென்றுவிட்டார். அப் போது அம்மா வீட்டில் இல்லை. ஏதோ வேலை யாகக் காட்டுப் பக்கம் போவதுபோல மத்தியா னம் கிளம்பியவள் வரவேயில்லை. கயிற்றில் கோத்திருந்த திருகாணியைக் கழற்றிக்கொண்டு எருமையைப் பிடித்து ஏவாரி கையில் கொடுத் தார் அப்பா. மறுநாள் சனிக்கிழமை. மணியனூர் மாட்டுச் சந்தை. எருமையைச் சந்தைக்கு அனுப்புவதன் வேதனை அப்பன் முகத்திலும் தெரிந்தது. வீட்டு மனுஷி அது. ஆனால், என்ன செய்வது?
கல்யாணமாகி வந்தபோது அம்மா தன்னோடு சீராகக் கொண்டுவந்தார். அப்போது ஒரு வருஷக் கன்றுக்குட்டி. மேல் முழுக்கச் செம்பட்டை மயிர்கள் படர்ந்திருக்கும். வயிறு மட்டும் தாழி போலப் பெருத்திருக்கும். தீனியில் கெட்டி. எதைப் போட்டாலும் தின்றுவிடும். இங்கே வந்து அம்மா பட்ட கஷ்டங்கள், சந்தோஷங்கள் எல்லாம் அதற்குத் தெரியும். அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆசை ஆசையாகப் பேசுவார் அம்மா. ''இவ எரும இல்லடா... என்னயக் காப்பாத்த வந்த சீமாட்டி'' என்பாள். ''என்ன குடுத்துக் காப்பத்துனா?'' என்றால், அம்மாவுக்கு முகம் இறுகிவிடும். அப்படிக் கேட்டவர்களைத் தண்டிப்பது மாதிரி கொஞ்ச நேரம் எதுவும் பேச மாட்டார். அப்புறம் பேச ஆரம்பித்தால், பெருவேகக் காற்று சுழன்றடிக்கும்.
''எல்லாம் குடுத்தவ அவதான். இவ இருக்கறப்ப ஒண்ணும் கொண்டுவராதவனு என்னய ஆராச்சும் ஒரு வார்த்த பேச முடியுமா? தன் கன்னுவளுக்குப் பாலு குடுத்தாளோ இல்லயோ, என் பசவளுக்கு அவதான் இன்னைக்கு வரைக்கும் பாலு குடுக் கறா. அவளாலதான் பட்டி பெருகுச்சு. வரத் தரயாக் கெடந்த கட்டுத்தர நெறஞ்சுச்சு. இந்தக் குடிய ஒசத்தினது அவதான். என் தாயா நின்னு என்ன யத் தாங்கறவதான் இந்தச் சீமாட்டி'' என்று ஆவேசத்தோடு பேசிவிட்டு அழுவாள். எந்தப் பேச்சையும் அழுகையில்தான் அம்மா முடிப்பார்.
''சிந்தித் தடவித் தடவி செவுரு முழுக்கச் சளி ஒழுவிக் கூரையெல்லாம் ஊளமூக்காக் கெடக்குது. எங்கிருந்துதான் வருமோ இவளுக்கு. பன மரத்துப் பாள ஊறறாப்பல'' என்று அப்பன் பேசும் ஏகடியத்தைச் சட்டைசெய்ய மாட்டார் அம்மா.
''எம் பாரத்த மூக்கச் சிந்தித்தான் கொறைக் கோணும். சீமாட்டி மட்டும் எங்கூட வல்லீனா, இங்கயா இருந்திருப்பன். எப்பவோ வாழாவெட்டியா எங்கூருக்குப் போயி, அங்க மூக்கச் சிந்திக்கிட்டு இருந்திருப்பன்...'' என்பார்.
வந்த இடத்துக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அது. அம்மாவைப் போலவே, கன்று ஈன்ற பின் நாலாம் மாதம் பயிராகிவிடும். சினை உறுதியான பின் பாலுக்கு நிற்காமல் உதைத்துக்கொண்டு போயிற்று என்னும் பேச்சே இல்லை. அடுத்த கன்று ஈனும் வரைக்கும்கூடப் பீய்ச்சிக்கொண்டே இருக்கும். ஏழாம் மாதம் முடிந்ததும் 'பாலு அப்பிடியே சீய்யாட்டம் வருது. ஆனாலும் நிக்கறா பாரு. சீமாட்டின்னாலும் எருமைங்கறது சரியாத்தான் இருக்கு...'' என்று செல்லமாகத் திட்டிக்கொண்டே பீய்ச்சாமல் நிறுத்திவிடுவார் அம்மா.
இதுவரைக்கும் வீட்டுக்குப் பால், தயிர், மோர், நெய் எல்லாம் அது கொடுத்ததுதான். மூன்று மாதம் கறவை இல்லாத சமயத்தில் தவித்துப்போவார்கள். அது தரும் பாலின் வாசம் பழக்க மானதில், வேறு கறவைகளின் பால் வாசனையே பிடிப்பது இல்லை. அம்மா வேறு எங்கு போய்ச் சாப்பிட்டாலும் பாலோ, தயிரோ வேண்டாம் என்று சொல்லிவிடுவார். ''சீமாட்டி பால் குடிச்ச வாயிக்கு மத்ததெல்லாம் காமாட்டி பாலுதான்'' என்பார்.
இதுவரைக்கும் அது ஈன்ற கன்றுகளில் மூன்று மட்டும் கிடா. மற்ற எல்லாமே கிடாரிதான். எல்லாக் கன்றுகளையும் வளர்ப்பார்கள். ஏதாவது ஒரு காரணத்தால் அவற்றை விற்க நேரும். ஆனால், ஒருபோதும் சீமாட்டியை விற்கும் எண்ணம் யாருக்கும் வந்தது இல்லை. இப்போது கட்டுத்தரையில் நிற்பவை எல்லாம் அதன் வர்க் கம்தான். இளம் வர்க்கம் பெருகப் பெருகச் சீமாட்டியை அம்மாவைத் தவிர எல்லாரும் 'கெழட்டெரும’ என்று சொன்னார்கள். ஆனால், அம்மா ஒருபோதும் அப்படிச் சொன்னது இல்லை. ''சொல்றவிய ஆருக்கும் வயசாவாமலா போயிரும்?'' என்பதோடு நிறுத்திக்கொள்வார்.
போன ஈற்றுச் சினையான பின் அது பட்ட பாட்டைக் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. வயிற்றுச் சுமையோடு படுத்து எழுவதற்குள் கண்களில் நீர் முட்டிக்கொண்டது. தீனி எடுத்துக் கடிக்க முடியவில்லை. பற்கள் சிதைந்துவிட்டன. கன்றுக்குச் சரியான ஆகாரம் போய்ச் சேரவில்லை. எலும்பும் தோலுமாகக் கன்றை ஈன்றுவிட்டு அதற்குப் பால் கொடுக்கக்கூட எழுந்து நிற்கவில்லை. சுடுதண்ணி வைத்துக் கழுவிவிட்டார் அம்மா. கம்பை வேக வைத்துத் தின்னக் கொடுத் தார். அருகில் உட்கார்ந்துகொண்டு கையில் எடுத்து எடுத்து ஊட்டினார். ''எங்காலம் முடியங்காட்டி அநாதயா வுட்டுட்டுப் போயிராத'' என்று அழுதார்.
ஒருவழியாக எழுந்து பால் கொடுப்பதற்குள் கன்று பசியால் நுரை தள்ளிவிட்டது. ஆனால், எருமை அடுத்த நான்கு மாதத்தில் சினைக்குக் கத்த ஆரம்பித்தது. ''கெழடாகியும் இன்னம் ஒடம்பு கேக்குதா உனக்கு'' என்று கோபத்துடன் திட்டியதோடு, இனிமேல் அது சினையாக வேண்டாம் என்று அம்மா முடிவுசெய்துவிட்டார். கிடா சேர்க்கக் கொண்டுபோகவில்லை. அது இரண்டு மூன்று நாள் கத்திக் கத்தி ஓய்ந்தது. ஆறேழு மாதங்களுக்குப் பின் மீண்டும் கத்தியது. அப்போது பாலும் குறைந்தது. அதை என்ன செய்வது என்று அம்மாவுக்குப் புரியவில்லை. ''வித்துர்லாம்'' என்று அப்பன் சொன்ன அன்றைக்கே அம்மா அழத் தொடங்கினார்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் இருவருக்கும் இதே பேச்சுதான். தினமும் முன்னிரவில் சண்டை தொடங்கி, அழுகை... அடி என்று ஓயும். ''கெழட்டு எருமயக் கட்டுத்தரயில வெச்சிக்கிட்டுப் பாவன பாக்க நம்மால முடியுமா?'' என்றார் அப்பா. பால் குறைந்துபோனதால் காலையில் மட்டும் பீய்ச்சினார் அம்மா. ஒரு படிக்கு வரும். பருத்திக்கொட்டைக் குழம்புபோல் இருக்கும். படிக்குப் படி எனச் சரியாகத் தண்ணீர் சேர்ப்பார். அப்பவும் தண்ணீர் கலந்த மாதிரியே தெரியாது.
கடைசியில் ஒரு படி பாலோடு ஏவாரிக்குவிற்று விட்டார் அப்பன். சனிச் சந்தைக்குப் போன எருமை கறிவெட்டுக்குப் போயிற்றோ, வத்தப்பால் பீய்ச்ச யாராவது வாங்கிப் போனார்களோ தெரிய வில்லை. அது போன பின் கட்டுத்தரை வெறுமை யாகக் கிடந்தது. கட்டுத்தரைப் பூவரசின் அடியில் போய் உட்கார்ந்து எங்கேயோ வெறித்துப் பார்த்திருப்பார் அம்மா. யாரிடமும் சரியான பேச்சு இல்லை. எதைக் கேட்டாலும் சட்டெனக் கண்ணீர் திரண்டுவிடும். இரவுத் தூக்கத்தில் திடீர் திடீரென்று இப்படிக் கத்திக்கொண்டு எழுவார். அப்புறம் அவரைச் சமாதானப்படுத்த வெகுநேரம் ஆகும்.
''நல்லா எங் காதுல கேட்டுது. நம்ம சீமாட்டிதான் கனச்சா'' என்றார் அம்மா.
''பேசாத படும்மா. எல்லாங் காத்தால பாத்துக்கலாம்'' என்று பெரியவன் அவளைப் பிடித்துச் சாய்த்துக் கட்டிலில் படுக்கவைத்தான்.
''இல்லடா... எனக்கு நல்லாக் கேட்டுது'' என்று முனகினார் அம்மா. எல்லாருக்கும் தூக்கம் வந்து கண் ணைச் செருகிய நேரத்தில் திரும்பவும் அம்மா கத்திக்கொண்டு எழுந்தார். ''அவதான்... எனக்கு நல்லாக் கேட்டுது. அவளேதான்...'' என்று பிதற்றினார்.
பெரியவனும் சின்னவனும் பிடிக் கப் பிடிக்கக் கையை உதறிக்கொண்டு கட்டுத்தரையை நோக்கி ஓடினார்.
''எருமப் பைத்தியம் புடிச்சே இவளக் கொண்டுட்டுப் போயிருமாட்டம்'' என்று சலித்து, மறுபடி பீடியைப் பற்றவைத்தார் அப்பா. அம்மாவின் பின்னாலேயே இருவரும் ஓடினார்கள். கட்டுத்தரைப் பூவரசின் அடியில் எருமை படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. மூன்று பேருமே அப்படியே நின்றுவிட்டார்கள்.
''அவதான்டா வந்துட்டா. என்னயத் தனியா வுட்டுட்டுப் போவ மாட்டா...'' என்றார் அம்மா மகிழ்ச்சிக் குரலில்.
அவர்களைப் பார்த்துச் சற்றே ஓங்கிய குரலில் கனைத்தது அது. கண்களை நன்றாகத் தேய்த்துவிட்டுக்கொண்டு பார்த்தபோதும் எருமை தெரிந் தது. அம்மா ஓடிப்போய் அதன் கழுத்தைக் கட்டிக்கொண்டார். அம்மாவை நக்கிக் கொடுத்தது. அப்பாவும் வந்துவிட்டார். எல்லாருக்கும் ஆச்சர் யம். அம்மா தீனியை அள்ளிக்கொண்டு வந்து போட்டார். அதைச் சீண்டவில்லை. வரும் வழியில் எங்கேயோ மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொண்டிருந்தது. சுகமாக அசை போட்டபடியே எல்லாரையும் பார்த்துக் கனைத்தது. தனக்குரிய இடத்தை வந்தடைந்துவிட்ட நிம்மதி அதன் கனைப்பில் தெரிந்தது.
பூவரசு மர நிழல் இருளில் அதன் கண்கள் மினுங்கின. அவர்களின் சத்தம் கேட்டுக் கொஞ்சம் தூரக் காடுகளில் குடியிருந்த ஆட்கள் எல்லாம் வந்துவிட்டனர். பல கன்றுகள் ஈன்ற எருமை எங்கோ விற்கப்பட்டு, வீடு தேடி வந்துவிட்டது சாதாரண விஷயமாக இல்லை. யார் வாங்கிப் போயிருப்பார்கள், எவ்வளவு தூரத்தில் இருந்து தடம் கண்டுபிடித்து வந்திருக்கும் எனப் பேசிக் கொண்டார்கள்.
கன்றுக் குட்டியாக இருந்தபோது இந்த ஊருக்கு வந்த எருமை ஊர் எல்லையைத் தாண்டிப் போன சந்தர்ப்பங்கள் குறைவு. பக்கத்து ஊர்க் கரடுகளுக்கு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பியிருக்கிறது. கிடா சேர்த்துவதற்காக இரண்டு ஊர்கள் தாண்டியிருக்கிற மணியாரர் வீடு வரை சில தடவையும் நகரத்துக் கால் நடை மருத்துவமனை வரை ஓரிரு முறையும் போனது உண்டு. கட்டுத் தரையும் மேட்டுக்காடுமே அது சுற்றிச் சுழன்ற இடங்கள்.
மணியனூர் சனிச் சந்தை பத்துக் கல் தொலைவு. அவ்வளவு தூரம் டெம்போ வைத்துதான் ஏவாரி ஏற்றிப்போனார். சந்தையில் இருந்து வாங்கி வந்தவர்கள் பக்கத்து ஊர்க்காரர்களாக இருப்பார்களோ? வாங்கிப்போனவர்கள் கயிற்றைக்கூட மாற்றவில்லை. திருகாணி கோத்திருந்தார்கள். கயிறு அறுபடவில்லை. இழுப்பில் அவிழ்த்துக்கொண்டிருக்கலாம். இழுத்து அவிழ்க்க எருமைக்கு வலுவில்லை. சரியாக முடிச்சிட்டுக் கட்டியிருக்க மாட்டார்கள்.
ஒரு வாரத்தில் வயிறு ஒட்டிப்போயிருந்தது. முகச் சோர்வு நிலவொளியில் தென்பட்டது. வண்டி, சந்தை, புதுக் கட்டுத்தரை என்று அலைந்தாலும் ஒருவழியாக வந்து சேர்ந்துவிட்ட ஆசுவாசத்தை அது உணர்வதை அசை போடல் காட்டியது. போன செல்வமெல்லாம் ஒருசேரத் திரும்பிவிட்ட மாதிரி அம்மா உணர்ந்தார். ''வாங்கினவங்க தேடிக்கிட்டு வருவாங்க'' என்று யாரோ சொன்னார்கள். அதைக் கேட்டதும் அம்மாவின் முகம் வாடிப்போயிற்று. அப்படி யாரும் வரக் கூடாது என்று நினைத்தாள்.
அடுத்த பத்து நாள் வரை ஒருவரும் வரவில்லை. வரத்தட்டுகளைக் கடிக்க முடியாது என்று சோகைகளை மட்டும் இணுக்கிச் சேர்த்து எருமைக்குத் தின்னக் கொடுத்தார் அம்மா. பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு குழந்தைக்கு ஊட்டுவதுபோல எடுத்து எடுத்து வாயில் வைத்தார். பெரியவனை விரட்டி எங்கெங்கோ அலைந்து தினமும் சிறுகூடை நிறையப் பச்சைப் புல் வெட்டி வரச் செய்தார். பச்சையைப் பால் மணக்கக் கொரித்துத் தின்றது. கொஞ்சம் தேறிய மாதிரி தெரிந்தது. அரைப்படி அளவாகக் குறைந்திருந்த பால் பழையபடி திரும்பியது. வீடு முழுக் கப் பழைய வாசனை வந்து சேர்ந்திருந்தது.
எருமையைத் தேடி இனி யாரும் வரப்போவது இல்லை என்று நினைத்திருந்தபோது, அந்தப் பதினோராவது நாள் எங்கிருந்தோ ஏழெட்டுப் பேர் சேர்ந்து வந்து கட்டுத்தரையில் நின்றுகொண் டார்கள்.
''சந்தயில வாங்கியாந்து கட்டுத்தரையில கட்டியிருந்த எருமய ராத்திரியோட ராத்திரியா களவாடிக்கிட்டு வந்துட்டா வுட்ருவமா? ஞாயத்தக் கேக்க எங்களுக்கும் நாலு பேரு இல்லாதயா போயிருவாங்க. திருட்டுப் பொழப்புக்கு நாண்டுகிட்டுச் சாவலாம். கொழந்தப் பாலுக்கு வேணுமின்னு வத்தக் கறவயாப் பாத்து இந்தக் கெழட்டெருமய வாங்கியாந்தம். இதப் போயித் திருடிக்கிட்டு வந்திருக்காங்களே!''
யாரையும் அவர்கள் பேசவே விடவில்லை. முந்தானையை வாயில் பொத்திக்கொண்டு அம்மா அழுதுகொண்டிருந்தார். எருமை எதையும் உணராமல் எல்லாரையும் உற்றுப் பார்த்தபடி நின்றது. அதனருகே போய்ப் பாதுகாவல்போலச் சின்னவன் நின்றுகொண்டான். அவனை மீறி யாரும் எருமைக்குப் பக்கத்தில் போய்விட முடியாதாம். பெரியவன் நகம் கடித்தபடி நடப்ப தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்பன் அப்போது இல்லை.
எருமை திருட்டுப்போய்விட்டது என்று முடிவு செய்து பத்து நாட்களாகவே ஆளாளுக்குச் சுற்று வட்டார ஊர்களுக்கு எல்லாம் போய் நோட்டம் பார்த்திருக்கிறார்கள். கள் குடிக்க வருபவர்போல ஒருவர் இந்தப் பக்கமும் வந்து கட்டுத்தரையில் எருமை நிற்பதைப் பார்த்துவிட்டார். தனியாள் கேட்டால் தட்டி அனுப்பிவிடுவார்கள் என்று, ஊருக்குப் போய் உடனே ஆட்களைக் கூட்டி வந்திருக்கிறார். கிடா மீசையோடு வெள்ளையும் சொள்ளையுமாக இருந்த ஒருவர் எவரையும் பேச விடாமல் அவரே பேசிக்கொண்டிருந்தார். பெரும் களவைக் கண்டுபிடித்துவிட்ட சாகசமும் அதைச் செய்தவர்களைத் தண்டிக்கும் உரிமை தனக்கு இருக்கும் திமிருமாக அவர் பேசினார்.
கண்களைத் துடைத்துக்கொண்ட அம்மா பெரியவனை அருகே அழைத்து, ''உங்கொப்பன் எங்காச்சும் காட்டுல கள்ளுக் குடிச்சுப்புட்டு உருண்டுகெடப்பான். எழுப்பிக் கூட்டியா...''என்று அனுப்பினார். அதற்குள் பக்கத்துக் காடுகளில் இருந்தெல்லாம் ஆட்கள் வந்து குழுமிவிட்டார்கள்.
''என்ன ஒரு தெகிரியம் இருந்தா, வூட்டுக்கிட்டக் கட்டியிருந்த எருமய உள்ள வந்து அவுத்துக்கிட்டு வந்திருப்பாங்க. எருமைக்கு முன்னால நிக்கறானே இந்தச் சின்னப் பயன்... இவன் மூஞ்சியப் பாத்தாலே திருட்டுக் கள தெரியுது'' என்றார் அவர்.
ராமக்கா பாட்டிதான் குரலெடுத்துப் பேசினார். ''அட... சும்மா தொறக்காத. ஆரு வூட்டுக்கு வந்து என்ன பேச்சுப் பேசற... கன்னுப் போட்டதுல இருந்து இந்தக் கட்டுத்தரயில இருக்கற எரும இது. ஊருக்கே தெரியும். என்னமோ அளக்கற. உன் எருமைங்கறதுக்கு என்ன அடையாளம்? சொல்லு பாப்பம்'' என்று பாட்டி எகிறியதும்தான் வழிக்கு வந்தார்கள்.
சனிச் சந்தையில் ஏவாரியிடத்தில் அவர்கள் வாங்கிய விவரம் தெரிந்தது. பழைய பாளையத்துக் காரர்கள். ஏழெட்டுக் கல் தொலைவு. சந்தையில் வாங்கிய எருமையை இந்த வழியாகத்தான் கொண்டுபோயிருக்கிறார்கள். எருமை தடம் பார்த்துக்கொண்டது. தானாகவே வந்து சேர்ந்துவிட்டது என்பதை அவர்கள் நம்பவில்லை. ஊரே சொல்லும்போது மறுக்கவும் முடியவில்லை.
''செரி... எருமய அவுத்துக் குடுக்கச் சொல்லுங்க. இன்னமே அவுத்துக்கிட்டு வராத பாத்துக்கறம்'' என்று அவர் இறங்கி வழிக்குவந்தார். சின்னவன் எருமையை நெருங்கி அதனோடு ஒட்டி நின்றுகொண்டான். கண்ணீரை முந்தானையில் துடைத்துக்கொண்டு அம்மா எழுந்தார். எல்லாரையும் பொதுவாகப் பார்த்துச் சத்தமாகப் பேசினார்.
''வித்த எரும என் கட்டுத்தரயத் தேடித் தானாவே வந்திருச்சு. நான் வளத்த சீமாட்டி அவ. என்னய வுட்டுப் போவ மாட்டேங்குறா. தேடி வந்து கட்டுத்தரயில நின்னவள வெரட்டி வுட மாட்டன். வாங்குன பணத்தத் திருப்பிக் குடுத்தர்றன். வாங்கிக் கிட்டுப் போவச் சொல்லுங்க. எருமதான் வேணுமின்னா, என் சவத்து மேல ஏறிப் போயிப் புடிச்சுக்கிட்டுப் போவட்டும்!''
பேச்சற்று எல்லாரும் அம்மாவையே பார்த்தார்கள்.


நன்றி - விகடன்

வழக்குப்போடுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னது ஒரு குத்தமா? ம்மா?

1. நதிகளை சுத்தப்படுத்த குஜராத் ஐகோர்ட் உத்தரவு #அரசிய்ல்வாதிங்க நதில குளிக்காம இருந்தாலே போதும்




--------


2. வன்முறையால் 500பஸ்கள் நாசம்,பா.ம.க விடம் இழப்பீடு பெற திட்டம்# சாதிக்கட்சிகளுக்கு சம்மட்டி அடி்



-------------


3. பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது—கர்நாடகாவில் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு #காங் னா காஸ்ட்லி ஊழல் .பிஜேபின்னா சீப் ஊழல்?



---------------------


4. ராம்தாஸ் - வழக்குப்போடுன்னு ஒரு பேச்சுக்கு சொன்னது ஒரு குத்தமா? ஜெ - என்னைப்பத்தி தெரிஞ்சும் அவ்ளவ் ஏத்தமா ?



-----------------


5.  இப்போது இருப்பதே அருமையான பிரதமர்தான் - பிரியங்கா! # ஆஹா! அருமை , பொறுமை , எருமை என்னா ரைமிங்கு



--------------------



6. அரசு மருத்துவமனைகளில் யோகா: ஜெயலலிதா அறிவிப்பு # யோகா மிஸ் நர்ஸ் ?



------------------------


7.  ஜாக்கெட் இல்லாமல் நடித்தார் பூஜா காந்தி # 23 வருசம் முன்னாலயே அந்த டார்கெட்டை முடிச்சாச்சு - ராதா(முதல் மரியாதை )


-------------------


8. எனக்கு இன்னும் திருமண வயசே ஆகல: நயன் கொஞ்சல்ஸ். # ஆனா அதுக்குள்ள 2 பேரை டைவர்ஸ் பண்ணீட்டீங்ளே?



---------------------


9. ரயில்வே ஊழலில் தொடர்புடைய யாரையும் விடமாட்டோம் : சிபிஐ இயக்குனர் # மிரட்டி மாமூல் கறந்துடுவீங்க



-----------------------


10. சிபிஐ யை பாதுகாக்க ஜூலை 10 திகதிக்குள் தனி சட்டம் இயற்ற வேண்டும் : உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கெடு - # சிபிஐ என்ன கன்னிப்பொண்ணா?




---------------------


11. தமிழகத்தில் பான் மசாலா- குட்காவுக்கு மீண்டும் தடை - # நியூஸ் ரீல் முகேஷ் கதையை இப்பொதான் பார்த்தேன் -ஜெ



----------------------


12. தலைவாவில் என் முழு உழைப்பை கொடுத்துள்ளேன்- விஜய் # FULL FORM ல இருக்காரு 


-------------------


13. முதல்வர் கனவோடுதான் கட்சியைத்தொடங்கினேன்-சீமான்# அதை நம்பித்தான் யா நானும் இருந்தேன் - விஜயலட்சுமி


--------------------


14. மேக்ஸிம் பத்திரிக்கையில் ஸ்ருதி கமல் படு கவர்ச்சிப்படம் # மேக்சிம் என்பதால் மேக்சி (ம)ம் கிளாமர்?


--------------


15. ஐ’ படத்தில் எமி செம ஹாட்! – ஷங்கர் வைத்த ஸ்பெஷல் ஷாட்!! # படத்துல சீன் பார்த்துட்டு எல்லாரும் " ஐ "ஜாலி னு குதிப்பாங்ளோ ?



-----------------



16. காங்கிரஸ், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது-தா.பா.ண்டியன் #அரசனும் ஆகாது.புருசன் கிட்டயும் பப்பு வேகாதுன்னா எப்டி?


-------------------


17. 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி விடுவிக்கப்படும் சூழ்நிலை - # தமிழ் இனத்தலைவர் "கை" தட்டி சிரிப்பாரோ?்



------------------


18. இசை, வெற்றி-தோல்விக்கு அப்பாற்பட்டது. # ஏ.ஆர். ரஹ்மான்! # நன்றி - S J சூர்யா (இவரது அடுத்த பட டைட்டில் - இசை )



----------------


19/ ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பாமக செயலாளர் தற்கொலை # மோசமான கட்சி .மோசமான முன் உதாரணம்



------------------



20. . இன்றைய தமிழ்சினிமாவில் நேர்மையானவர்கள் சூர்யா,அஜித் மட்டும்தான் இயக்குனர் மணிவண்ணன் # அப்புறம் ஏன் சத்யராஜை ஹீரோவாப்போட்டீங்க?

Thursday, May 16, 2013

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்

எம்.நாகராஜன், பொள்ளாச்சி. 

''கூடங்குளம் அணு உலைக்கு எதிரான உங்கள் போராட்டத்துக்குப் பாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. இனி, உங்கள் வியூகம் என்ன?''

''கூடங்குளம், கல்பாக்கம், நியூட்ரினோ போன்ற மக்களின் வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை அச்சுறுத்தும் திட்டங்களுக்கு நீதிமன்றங்களிலோ, நாடாளுமன்றங்களிலோ தீர்வு காண முடியாது. மக்கள் மன்றங்களில்தான் விடை காண வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். அதனால்தான் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம், எந்த நீதிமன்றத்தையும் அணுகவில்லை. சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் மூன்று அம்சங்களான தூய்மை, பொறுமை மற்றும் உறுதியுடன் தொடர்ந்து மக்கள் மன்றத்தில் பணியாற்றுவோம்.‘Slow and steady wins the race’
 என்ற பழமொழி  இன்றும் செயல்பாட்டில்தான் இருக்கிறது!''


கபிலன், ஃபேஸ்புக்.

 ''இதுவரை அணுஉலை விபத்தால் மொத்தம் 50 பேர் மட்டுமே இறந்திருப்பதாகச் சொல்கிறது அணு அமைப்புகளின் அறிக்கை. சமீபகால உதாரணமாக நீங்கள் சுட்டிக்காட்டும் ஜப்பானின் ஃபுகுஷிமா விபத்தில் ஓர் உயிரிழப்புகூட இல்லை என்கிறார்கள். அணுஉலை விபத்தி னால் பல லட்சம் மக்கள் உயிர் இழந்திருக்கிறார்கள் என்று பிரசாரம் செய்கிறீர்களே... அதற்கான ஆதாரங்களை அடுக்க முடியுமா?''


''அணுஉலை விபத்துகளால் நேரடியாகக் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு என்பது எல்லோருக்கும் தெரியும். மறைமுகமாகக் கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படுகிறவர்கள், இன்னும் கொல்லப்பட இருப்பவர்களின் எண்ணிக்கையை எந்த விஞ்ஞானமும், எந்தவிஞ்ஞானி யும் கணக்கிட முடியாது. விபத்துக்கு உள்ளாகாத நிலையிலும் அணுஉலை ஆபத்தானது என்பதுதான் எங்கள் வாதம். செர்னோஃபில், ஃபுகுஷிமா விபத்துகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்பற்றி ஐ.நா., உலக சுகாதார நிறுவனத்தின் பல அறிக்கைகளே உள்ளன. தயவுகூர்ந்து நீங்கள் அவற்றைப் படித்து நிதர்சனம் உணருங்கள்!''


பாலாஜி, தஞ்சாவூர்.

''உங்கள் போராட்டங்களில் ஏன் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அனுமதிக்க மறுக்கிறீர்கள்?''


''இது தவறான தகவல். உண்மையான பொதுவுடமைவாதிகள் அதிகம் கலந்துகொள்ளும் போராட்டம் எங்கள் போராட்டம். பல மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் இயக்கங்கள், சோஷலிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து கலந்துகொள்கின்றன, களமாடுகின்றன. சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த நல்லகண்ணு அய்யா, தோழர் சி.மகேந்திரன் கலந்துகொண்டிருக்கிறார்கள். சி.பி.எம். கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் கலந்துகொண்டார்கள். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தங்களை எதிர்க்கும் பெரிய கம்யூ னிஸ்ட் கட்சிகள், ரஷ்யா என்றதும் 
பழைய நினைப்பில் பதுங்குவதுதான் பிரச்னை!''


மா.மதிவாணன், திருவாரூர்.

''உங்கள் போராட்டத்தை வளர்த்தெடுக்க ஊடகங்களின் உதவி எந்த 
அளவுக்கு இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது?''

''அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் உண்மையாக, உறுதியாக தமது கடமையைச் செய்தன, செய்கின்றன. சாதாரண மக்களாகிய எங்களின் உண்மைத்தன்மையை, வாழ்வாதாரத்துக்காக நாங்கள் போராடுவதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். தொடர்ந்து நியாயமாகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாளிதழ்கள், தொலைக்காட்சி ஊடகங்கள் எங்களைக் கடுமையாக எதிர்க்கின்றன. அதனால் அவர்களின் நம்பகத்தன்மைதான் குறைந்திருக் கிறது!''


கி.சிவநாராயணன், மைசூர்.

''பெட்ரோல், நிலக்கரி, அணுஉலை என்று எல்லா எரிசக்திகளும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிப்பவை என்றால், எதுதான் தீங்கு விளைவிக்காத மாற்று எரிபொருள்? அதன் பயன்பாடு தமிழகத்தில் சாத்தியமா?''  


''காற்றும், கடல் அலையும், கதிரவன் ஒளியும், கழிவுகளும் என எத்தனையோ வழிகள் இருக்கின்றன. மையப்படுத்தப்படாத, தேவையின் அடிப்படையில் இயங்கும் (decentralized and demand - based) சிறு சிறு மின் நிலையங்களை நாடெங்கும் அமைப்பதுதான் நமக்கும், இயற்கைக்கும், எதிர்காலத்துக்கும் நன்மை பயக்கும். மையப்படுத்தப்பட்ட, விநியோகத் தின் அடிப்படையில் இயங்கும் (centralized and supply-based) மெகா மின் நிலையங்கள் ஊழலின் ஊற்றுக்கண்களாக, முறைகேடுகளின் முகாம்களாக, அழிவின் ஆதாரங்களாக விளங்கும். கூடங்குளம், இடிந்தகரை பகுதிக்கு ஒரு முறை வாருங்கள்; மேற்கண்ட இரண்டுக்குமே எடுத்துக்காட்டுகளைப் பார்ப்பீர்கள்!''


மெ.திலீப், சிதம்பரம்.

''துரதிர்ஷ்டவசமாக பிரதான அரசியல் கட்சிகள் எல்லாமே அணுஉலை தேவை என்று சொல்கின்றனவே? இதன் பின்னணி அரசியல் என்ன?''


''இது முழு உண்மையல்ல சகோதரா! மேற்கு வங்காள மாநிலம் புர்பா மேதினிப்பூர் மாவட்டம் ஹரிப்பூர் என்னும் இடத்தில் வரஇருந்த கூடங்குளம் போன்ற ரஷ்ய அணு உலைப் பூங்கா திட்டத்தை, திரிணமுல் காங்கிரஸ் கட்சிக் கடுமையாக எதிர்த்து முற்றிலுமாக நிறுத்திஇருக்கிறது. அதே போல, மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள பிரெஞ்சு அணுஉலையை சிவசேனா கட்சியும், சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. கூடங்குளம் அணுக் கழிவு கர்நாடக மாநிலம் கோலார் சுரங்கங்களில் புதைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த தும் காங்கிரஸ், பாரதிய ஜனதா போன்ற 'தேச பக்தர்கள்’ அதைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர். தேசத் துரோகிகளான எங்களை இரும்புக் கரம்கொண்டு அடக்க வேண்டும் என தமிழக மத்திய அமைச்சர் திரு. ஜி.கே.வாசன் கொக்கரித்துக்கொண்டிருக்கும்போது, கர்நாடக மத்திய அமைச்சர் திரு.வீரப்ப மொய்லி அந்த மாநில மக்களின் நலனுக்காக வாதிட்டுக்கொண்டிருந்தார். 'அணு சக்திதான் இந்திய எதிர்காலத்தின் ஒரே வழி’ என்று கூறித் திரியும் பிரதமர், தனது காங்கிரஸ் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் ஓர் அணுமின் நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை வெளியிடட்டுமே பார்ப்போம்! ஊருக்கு இளைத்த தமிழன் பிள்ளையார் கோயில் ஆண்டியாக்கப்படு கிறான். இதுதான் நிதர்சனம்!''

பி.கேசவன், சென்னை-91. 

''கடற்கரைப் பகுதிகளில் கடந்த 200 ஆண்டுகளாக பாதிரியார்களாலும், சர்ச்களாலும் செய்ய முடியாத ஒரு சீர்திருத்தத்தை இரண்டே ஆண்டுகளில் உங்களால் சாதிக்க முடிந்தது எப்படி?'' 


''மனதுக்கு உகந்தவரின் நிறைகளை மிகைப்படுத்துவதும், குறைகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதும், அவர் செய்யாத விஷயங்களைச் சாதனைகள் எனப் போற்றுவதும், செய்த சிறு செயல்களை அற்புதங்கள் என்று புளகாங்கிதமடைவதும் தமிழராகிய நமக்கே உரித்தான தனிநபர் துதியின் அம்சங்கள். சீர்திருத்தம் செய்ய வந்த தேவதூதன் அல்ல நான்; மகாகவி பாரதியார் சொன்னதுபோல, எனக்குத் தொழில் எழுத்து, கவிதை, நாட்டுக்கு உழைத்தல். அவ்வளவுதான்!''

புகழ்மணி, ஃபேஸ்புக்.

''ஓர் அரசாங்கம் என்பது அனைத்து மக்களின் நலன் சார்ந்துதானே செயல்பட வேண்டும். அப்படி இருக்கும்போது, நீங்கள் குறிப்பிட்ட பகுதி மக்களுக்காக ஒட்டுமொத்தமாக அரசை எதிர்ப்பது என்ன நியாயம்?'' 


''சரி... உங்கள் போக்கிலேயே வருகிறேன். நம் தமிழக அரசாங்கம் தமிழர்களின் நலன் சார்ந்துதானே இயங்க வேண்டும். இப்போது தமிழக மீனவ மக்களின் நலனை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்வோம். சுமார் 600 தமிழக மீனவர்கள் இதுவரை சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர் ஊனமுற்றிருக்கிறார்கள் கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்களால், ஏராளமான அனல் மின் நிலையங்களால், உண்டுறை இல்லங் களால், உல்லாச விடுதிகளால், லட்சக்கணக்கான மீனவர்கள் தொழில் இழப்பு, வருமான இழப்பு, நோய் நொடி எனத் துன்புறுவார்கள். இதுதான் அரசாங்கத்தின் மீனவர் நலன் சார்ந்த செயல் பாடா? தமிழக் கடற்கரையோரம் முழுக்க வசிக் கும் மீனவர்களின் உயிருக்கே இந்த அளவுதான் மதிப்பு என்றால், இடிந்தகரை என்ற சிறு நிலப் பகுதியில் வசிக்கும் மக்களின் நலனுக்கு என்ன மரியாதை இருந்துவிட முடியும்? கூடங்குளம் பகுதி மக்களுக்கு 500 கோடி ரூபாயில் ஊருக்கு வெளியே வீடு கட்டித் தருவார்களாம், நான்கு வழிச் சாலை அமைப்பார்களாம், உயர்தர மருத்துவமனை கட்டுவார்களாம். 'தின்று விளையாடி இன்புற்றி ருப்பவன்’ வாயில் மண்ணை வாரிப் போட்டுவிட்டு, ஓடுவதற்கு ரோடும், ஆசுவாசப்படுத்த ஆஸ்பத்திரியும் தருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா? அதனால்தான் போராடுகிறோம்!''



அடுத்த வாரம்...

'' 'எங்கள் போராட்டச் செலவுகளுக்கு வெளிநாட்டில் இருந்து பண உதவி எதுவும் வருவது இல்லை. மீனவ மற்றும் பீடித் தொழிலா ளர்கள் அளிக்கும் நன்கொடை மூலம் மட்டுமே எங்கள் போராட்டங்களை முன்னெடுக்கிறோம்’ என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் அளித்த வரவு-செலவு விவரங்களில் இருந்தே இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்... நன்கொடையாகப் பெற்ற பணம்: ரூபாய் 25,17,991. அதாவது மீனவ மற்றும் பீடித் தொழிலாளர் குடும்பங்கள் தலா 200 ரூபாய் கொடுத்ததாகச் சொல்லியிருக்கிறீர்கள். மொத்த செலவு: ரூபாய் 17,64,233. (டீசல், குடிநீர், ஒலிபெருக்கி வசதிகள் போன்ற செலவுகள்). இடிந்தகரையின் மொத்த மக்கள் தொகை 3,996. ஒரு குடும்பத்துக்கு மூன்று உறுப்பினர்கள் சராசரி என்று வைத்துக்கொண்டால்கூட மொத்தம் 1,332 குடும்பங்கள். ஆக, நீங்கள் வசூலித்த நன்கொடை - 1,332x200 = 2,66,400 என்பதாக இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் வசூல் கணக்கு காட்டியிருப்பது ரூபாய் 25,17,991. வித்தியாசம் உள்ள 22,51,591 எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தது?''


''ரஷ்யாவின் VVER 1,000 ரியாக்டர் என்பது அமெரிக்காவின் GE நிறுவனத்தின் Advanced boiling water reactor-க்கு இணையானது. இந்த இரு தொழில்நுட்பங்களுக்கு இடையில்தான் உலக அளவில் போட்டி நிலவுகிறது. இந்தியா நிறைய அணு உலைகளை நிறுவவிருக்கும் நாடு. ஆகையால், ஒரு VVER 1,000 வெற்றிபெற்றால், உலகச் சந்தையில் அமெரிக்காவின் அணு உலை வியாபாரம் பாதிக்கப்படும் என்பதாலேயே உதயகுமாரன் மூலம் அணு உலைத் தரகு வேலை பார்க்கப்படுகிறது என்கிறேன் நான். இந்தச் சந்தேகத்துக்கு உங்கள் விளக்கம் என்ன?''


''சார்... தமிழீழப் பிரச்னையாகட்டும்... நக்சலைட்கள் போராட்டமாகட்டும்... அஹிம்சை வழியில் ஆரம்பித்து ஒரு கட்டத்துக்குப் பிறகு ஆயுதப் போராட்டமாக மாறியது... அந்த நிலை கூடங்குளம் போராட்டத்துக்கும் ஏற்படுமா?''
                                                                                                                     - போராடுவோம்...


நன்றி - ஆனந்த விகடன்


டென் த் படிக்கும்போதே ( சினிமாவில்) இவ்வளவு பெரிய வளர்ச்சி எப்படி? - கும் கி லட்சுமி மேனன் பேட்டி

 
கதை கேட்காத ஹீரோயினின் கதை! 
க.ராஜீவ் காந்தி, படங்கள்: கே.ராஜசேகரன்
தாவணி, பாந்தமான பட்டுப் புடைவை, சாந்தமான சுடிதார் என 'ஹோம்லி ஏஞ்சல்’ என்று நாம் நினைத்திருக்க, சட்டென மாடர்ன் ஊஞ்சல் ஏறிவிட்டார் லட்சுமி மேனன். டாப்ஸ், ஜீன்ஸ் என்று பட்டையைக் கிளப்புகிறார் 'கும்கி’ அழகி!


''இப்போ பாவாடை-தாவணியைப் பொண்ணுங்களுக்கே பிடிக்க மாட்டேங்குது. விஷால், கௌதம் கார்த்திக்னு பேச்சிலர் ஹீரோக்களுடன் வேற நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இப்போ மாடர்னா... டிரெண்டியா இருக்கிறதுதானே சரி!'' என்று சிரிக்கும் லட்சுமியை, 'மஞ்சப்பை’ ஷூட்டிங்கில் பார்த்தேன்.  


 



''பத்தாவது எக்ஸாம் நல்லபடியா முடிஞ்சுதா?''


''எக்ஸாம் நல்லாதான் எழுதியிருக்கேன். ஆனாலும் ரிசல்ட்டை நினைச்சா, பக்பக்னு இருக்கு. நிறைய நாள் நான் ஸ்கூல் பக்கம் போகவே இல்லை. அதனால் கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டுப் படிச்சேன். நான் டென்த் பாஸ் பண்ணணும்னு எனக்காக வேண்டிக்கங்க ப்ளீஸ். பாஸ் பண்ணா, ப்ளஸ் ஒன் படிப்பேன். ஆனா, நிச்சயம் தமிழ் சினிமாவை விட்டு எங்கேயும் போக மாட்டேன். இது என் படிப்பு மேல் பிராமிஸ்!''




''ஹீரோயின்களில் லட்சுமி மேனன்தான் கேரக்டர்களைக் கச்சிதமா செலெக்ட் பண்றாங்கன்னு ஒரு பேர் இருக்கே... அவ்வளவு சினிமா தெரியுமா?''


''அப்படி எல்லாம் இல்லைங்க. உண்மையைச் சொல்லணும்னா 'கும்கி’, 'சுந்தரபாண்டியன்’ படங்களுக்கு நான் கதை கேக்கவே இல்லை. ஆனா, படங்கள் ஹிட் ஆகவும் அதையே ஒரு சென்ட்டிமென்ட்டா வெச்சுக்கிட்டேன். இப்போ எந்தப் படத்துக்கும் நான் கதை கேக்குறதே இல்லை!''  


''சினிமா என்ன கத்துக் கொடுத்துச்சு?''


''டெடிகேஷன்! சினிமாவோ வேற எந்த வேலையோ நமக்குக் கொடுத்த பொறுப்பை சின்சியரா முடிச்சுக் கொடுக்கணும். அதுக்கு நல்ல உதாரணம் சசிகுமார் சார். 'சுந்தரபாண்டியன்’ல அவருக்கு செம ஜாலி கேரக்டர். 


அதனால ஷாட் இல்லா தப்பவும் கேலி, கிண்டல் பண்ணிட்டு ஜாலியா இருந்தார். 'குட்டிப்புலி’ படத்துல அவருக்கு ரொம்ப சீரியஸ் ரோல். பொண்ணுங்ககிட்ட பேசக்கூடத் தயங்குற கேரக்டர். அதனால ஸ்பாட்லயும் அப்படியே உர்ருனு முறைச்சுக்கிட்டே இருப்பாரு. சின்ன 'ஹாய்... ஹலோ’கூடச் சொல்ல மாட்டார். அந்த டெடிகேஷன்தான் நான் சினிமாவில் கத்துக்கிட்டது!''

 



''சூர்யாவை ரொம்பப் பிடிக்கும்னு சொல்லியிருக்கீங்க?''


''ஆமா! சூர்யாவைப் பிடிக்காத கேர்ள்ஸ் யாராவது இருப்பாங்களா? சின்ன வயசுல இருந்தே அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கூட நடிக்கணும்னு ஆசை. அஜித் கூட நடிக்க சான்ஸ் கிடைச்சா, எனக்குச் சம்பளமே வேண்டாம்!''  


''சூர்யா பிடிக்கும்னு சொல்றீங்க... அதே சமயம் தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னும் சொல்றீங்க... என்னங்க லாஜிக்?''


''ஆமாங்க... நான் ஒரு மலையாளி. நான் எப்படி ஒரு தமிழ்ப் பையனைக் கல்யாணம் பண்ணிக்க முடியும்? ரெண்டு கல்ச்சருக்கும் வித்தியாசங்கள் இருக்கும்ல. தமிழ்ப் பசங்க என்னைக் காதலிக்கட்டும். ஆனா, நான் ஒரு மலையாளியைத்தான் கல்யாணம் பண்ணிப் பேன். அதில் நான் உறுதியா இருக்கேன்!''

நன்றி - விகடன் 



GO GOA GONE -சினிமா விமர்சனம்


 

ஒரு படத்தை அல்லது பல படங்களை கிண்டலடிக்கும் ஸ்பூஃப் படங்கள் சமீபத்திய இந்தியன் சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்துள்ளது. தமிழ் படங்களை, நாயக நாயகிகளை நையாண்டி செய்த `தமிழ் படம்`  இதற்கொரு நல்ல உதாரணம்.  மனித ரத்தத்தை இறையாய் பருகும் ஸோம்பீஸ்களை கிண்டலடித்துள்ள படம் தான் "கோ கோவா கான்". 

நடிகர் சைப் அலிகானின் தயாரிப்பில், ராஜ்-டி.கே (ராஜ் நிடி மொரு-கிருஷ்ணன் டி.கே) என இரு இயக்குனர்களின் கூட்டணியில் வெளிவந்துள்ள படம்.  ஒரே வீட்டில் சிகரெட் குடியுடன் குடித்தனம் செய்யும் மூன்று நண்பர்கள். ஆபீசிலே சக பெண்ணோடு உடலுறவு வைத்துக்கொள்ள முனையும் ஒரு நண்பனுக்கு வேலை போகிறது,


 காதலுக்காக கெட்ட பழக்கங்களை விட்டொழிக்கும் மற்றொரு நண்பனை ஏமாற்றும் காதலியின் துரோகம்.  வாழ்க்கையில் ஒரு மாற்றம் தேவை என இவ்விரு பிறவிகளும் யோசிக்க, வீட்டிற்குள் நுழையும் மூன்றாவது நண்பன் தனது வேலை விஷயமாக கோவா செல்லவிருக்கும் செய்தியை உறைக்கிறான். அவ்வளவுதான் பணிப் பயணம் உல்லாசப் பயணமாய் மாறுகிறது.

 


கோவாவிற்குச் சென்று கூத்தடிக்கும் நண்பர்களுக்கு அருகாமையில் உள்ள தனித்தீவில் ரஷ்யன் மாபியா நடத்தும் பார்ட்டியைப் பற்றித் தெரிய வர, இவர்கள் பயணம் தீவை நோக்கி நகர்கிறது.  தீவில் வினோத போதை மாத்திரை எடுத்துக் கொள்ளும் அனைவரும் காலை எழுந்து பார்க்கையில் ஸோம்பீஸ் என்கிற ரத்தக் காட்டேரிகளாக மாற, அவர்களிடம் மாட்டிக் கொள்ளும் மூன்று நண்பர்கள் கூடவே குளு குளு நாயகி. ‘ஐ கில் டெட் பீபிள்‘ என்று கூறி பெரிய துப்பாக்கிகளுடன் வந்திறங்கும் போரிஸின் (ஸைப் அலிகான்) துணையால் இந்த நால்வரும் எப்படி தீவிலிருந்து தப்பிக்கிறார்கள் என்பதுதான் மீதிக் கதை.

‘டெல்லி பெல்லி‘ பட வெற்றியின் தாக்கம், இரட்டைப் பொருளல்ல நேரடியாக கொச்சைப்படுத்தும் கெட்ட வார்த்தை நெடி படம் முழுவதும் திணித்துக் கிடக்க, பாட்டி முதல் பேத்தி வரை ஒருவரையும் பாரபட்சம் பார்க்காமல் திட்டும் வசனங்கள் முதற்பாதி முழுவதும், ஸைப் அலிகானின் வருகைக்குப் பின் ஸோம்பீஸின் வேட்டை என்று திகிலாக சூடுபிடிக்கும் என எண்ணினால் அதுவும் முதல்பாதியின் பிரதிபலிப்பாக இருப்பது ஏமாற்றம்.


 


கோவாவின் அழகையும் மறக்கடிக்கச் செய்யும் கதாநாயகி பூஜா குப்தாவின் அழகு.  கவர்ச்சிகரமான உடை அணிந்தும் கலாசாரம் கெடாமல், பெண்மைக்குரிய வரையறை மீறாமல் இவர் நடித்துள்ள விதம் சபாஷ்.  வசனகர்த்தா மற்றும் படத்தின் நாயகன் என டபுள் ரோலில் குனால் கேமு, வெகுளித்தனமான பார்வையுடன் விஷமத்தனம் செய்யும் வீர்தாஸ், ‘த்ரீ இடியட்ஸ்‘ ஓமி வைத்யாவை நினைவூட்டும் ஆனந்த் திவாரியும் மனதில் பதிகின்றனர். சச்சின் ஜிட்காரின் பின்னணியும், அறிந்தாம் கதக்கின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

போதைப் பவுடர் (கோக்கைன்) மேலே பட்டவுடன் ‘ஸாம்பீஸ்கள்‘ ஸ்தம்பித்துப் போவது, இல்லாத கோக்கு மாக்குத்தனம் எல்லாம் செய்து கடைசியில் நர்யகர்கள் நன்நெறி பேசுவது தான்  செம்ம காமெடி. தயாரிப்பாளர் என்பதால் ஸைப் அலிகானுக்கு சிறப்புத் தோற்றத்தைத் தாண்டி கொஞ்சம் அதிகமான ரோல் அளிக்கப்பட்டுள்ளது. இளைஞர் பட்டறையில் இவர் மட்டும் முதுமையாகத் தோன்றுகிறார். 


 


ஹாலிவுட்டில் ‘வேகஸ்‘ நகரமென்றாலே கப்பல், காஸினோ, சூது இவைகளைச் சுற்றியே படத்தின் களம் அமைந்திருக்கும். நம் நாட்டில் ‘கோவா‘ என்ற ஊர் வந்தாலே இயக்குனர்கள் மது, மாது, போதை போன்ற லாகிரி வஸ்துக்களை மையப் பொருளாக எடுத்துக் கொள்கின்றனர்.  இந்தப் படமும் இதற்கொரு விதிவிலக்கல்ல. என்ன.. இந்த அம்சங்களுடன் ஸாம்பீஸை இணைத்துள்ளனர் அது தான் புதுமை.

படம் முழுக்க விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் நகைச்சுவை எனக் கூறுவது மிகை.  படத்தில் தொய்வடையும் தருணங்கள் இல்லை போரடிக்காமல் நகர்கின்றது என்று கூறலாம்.

மொத்தத்தில் கோ கோவா கான் – போய் பார்க்கலாம் ஒரு முறை.

  • நடிகர் : சைப் அலிகான்
  • நடிகை : பூஜா குப்தா
  • இயக்குனர் :ராஜ்-டி.கே
 a

thanx - dinamalar

தம்பதிகளின் அகராதியில்......

இனிய காலை வணக்கம் நண்பர்களே....
1. நீ என்னுடன் பேசாமல் இருக்கும் பொழுதுகள் நான் யாருடனும் பேசாமல் இருக்கும் தருணங்கள்



----------------------


2. உன் அன்பின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க உன் பொசசிவ்னெசும் அதி கரிக்கிறது



--------------------------


3.  பெரும்பாலும் பூச்சரங்கள் டார்க் பச்சை நிற நூலில் கட்டப்படுகிறது # பூக்காம்புக்கு மேட்ச்க்கு மேட்ச்



-------------------------



4. இரண்டு கண்ணாடி விரியன் பாம்புகள் பின்னிப்பிணைந்தது போல் உன் ஒற்றைச்சடை



---------------------------


5. டவுன் பஸ்ஸில் முன்புறம் பெண்களுக்கான பக்கவாட்டு சீட் போட்டது பின் உள்ள அனைத்து ஆண்களுக்குமான சைட் சான்ஸ்



--------------------------




Photo: SHATH Photography..


6. பலாச்சுளையை தேன் ல ஊற வெச்சு சாப்பிடறதைக்கண்டுபிடிச்சது யாரா வேணா இருக்கலாம்.ஆனா பலாக்கொட்டையை வேக வெச்சு கத்திரிக்கா குழம்புல போடறதை தமிழன்தான் கண்டுபிடிச்சிருப்பான்் 



-------------------------


7. யாருடன் கூட்டணி என இப்போது கூறமாட்டேன்: விஜயகாந்த் . # இவரு பெரிய நயன் தாரா.லவ்வர் யார்னு சொல்லமாட்டாராம்் .



-----------------------


8. கனகாம்பரப்பூ வெச்சிருக்கும் பிகர் என்பதால் தலைக்கனம் இல்லாத பொண்ணுனு சொல்லிட முடியாது



----------------------


9. குழந்தை தூங்கியாச்சா?னு கேட்டா தம்பதிகளின் அகராதியில் தூங்க வை என அர்த்தம் # மாமழை போற்றுதும் கடுங்குளிர் போற்றுதும்



--------------------


10. மேடம்.நீங்க டென்த் படிக்கற பொண்ணுனு என்னால நம்பவே முடில




. லட்சுமிமேனன் -,எதையும் மேலோட்டமாப்பார்த்துமுடிவுபண்ணக்கூடாது 



-----------------------


New Collections from Veny Beauty Saloon !
Telefone : 044 730 84 63


11. எல்லாத்தரப்பு ஆட்களுக்கும் பிடித்த மதம் அவரவர் காதலியின் சம் மதம் ்



------------------------


12. சிரசாசனம் செய்யும்போது சாப்பிடுவது போன்றதுதான் உன்னுடன் இருக்கும் தருணங்களில் நான் பேசுவது




----------------------

13. கள்ளுண்ணாமையை நான் எதிர்க்கிறேன் # உன் உதடு கள்



--------------------


14. பொதினா இலை ,கொத்துமல்லித்தழை வாசனை வரிசையில் என்னைக்கவர்ந்த வாசம் உன் அருகாமை நறுமணமே



-------------------


15. இரு குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி வேண்டும் என்று தான் அரசு சொல்லி இருக்கு.நம் இருவருக்கிடையே அல்ல



-----------------


Photo: மதிய உணவு தயார். :-)


16. கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என யாரும் சொல்லி விட முடியாது.உன்னுடன் ஒட்டியே நடக்கிறேனே?்



---------------------


17. நீ கண்ணியமாக சேலை உடுத்தி வரும்போது நான் உன் காதலனா?பக்தனா? என்ற சந்தேகம் எனக்கே வந்து விடுகிறது



-----------------------


18. நான் இதழியல் படித்தாலும் உன் இதழ் பற்றிய எந்த விபரங்களையும் இது வரை அறிய நீ விட்டதில்லை # லாக் ஆப் நாலெட்ஜ் இன் லிப்பாலஜி



-----------------------


19. மழையில் நனைந்த கூந்தலையும் ,நினைவில் நின்ற காதலனையும் காய வைப்பதில் உன்னை யாரும் மிஞ்சி விட முடியாது



--------------------



20. பூனைக்கு மணி கட்டுவது யார்? பூனம் (பான்டே) க்கு சேலை கட்டிவிடுவது யார்?



---------------------




21. நீ பெரிதாக என்னிடம் ஏதும் பேசி விடப்போவதில்லை.அதிகபட்சம் ம் ம் ஹூம் தான்.ஆனாலும் அதிலும் எனக்கு ஒரு கிறங்கடிக்கும் போதை கிடைச்சுடுது்



--------------------


22. வேலைப்பளுவில் உன்னை அலைபேசியில் அழைக்காமல் இருந்திருக்கலாம்.ஆனால் உன்னை நினைக்காமல் இருந்ததில்லை.



---------------------


23. மழை வரும் அறிகுறி.இன்னும் ஊடல் கொண்டு முகத்தை திருப்பிக்கொண்டிருந்தால் நீ காதல் தற்குறி



-----------------


24. மேடம்.நீங்க புதுசா யாரையோ லவ் பண்ணிட்டு இருக்கீங்களாமே ? 



யா யா யா யா யா யா ( 6 யா) 



----------------------


25. உன் நெற்றிக்குங்குமம் மழை நீரில் கரைந்து நாசி வழியே இறங்கி உதட்டை அடைந்திருக்கிறது.அய்யய்யோ ரத்தமா? என பொய்யாய் பதறலாமா? என ரிகர்சல் பார்த்துக்கொண்டிருக்கிறேன் 



-----------------------------



 
Photo: SHATH Photography..!
Janu & Anjay :)

Wednesday, May 15, 2013

பட்டத்து யானை - சந்தானம் ஹீரோ , விஷால் சைடு - இயக்குநர் பூபதி பாண்டியன். ஷாக் பேட்டி

சந்தானம் ஓனர்... விஷால் லேபர்! 
க.ராஜீவ் காந்தி
வழக்கமா ஒரு படத்தில் ஹீரோவின் வாழ்க்கையில் நடுநடுவே ரிலாக்ஸுக்காக, அப்பப்போ காமெடியன் வருவார். ஆனா, இந்தப் படத்தில் காமெடியன் வாழ்க் கையில் அப்பப்போ ஹீரோ வந்து ஆக்ஷன் பண்ணுவார். படத்தின் கதை முழுக்கவே சந்தானம் மேலேதான் டிராவல் பண்ணும். சந்தானத்தின் கதையின் நடுவில் புகுந்து தன் பிரச்னைகளைத் தீர்த்துக்குவார் விஷால். 80 சதவிகிதம் காமெடி, 20 சதவிகிதம்தான் ஆக்ஷன். நல்லா இருக்குல்ல இந்த ஃபார்முலா!'' - 'பட்டத்து யானை’ படத்தின் மேக்கிங்குறித்து நம்பிக்கை மிளிரப் பேசுகிறார் இயக்குநர் பூபதி பாண்டியன்.


''அப்போ படத்தின் ஹீரோ விஷாலா... சந்தானமா?''


''காரைக்குடியில் சமையல் கான்ட்ராக்டர் சந்தானம். அவருக்கு ஒரே தேதியில் ரெண்டு ஆர்டர் வருது. ஒண்ணு, ஏரியா ரவுடி வீட்டுக் கல்யாணம். இன்னொண்ணு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வீட்டுக் கல்யாணம். ரெண்டு ஆர்டரில் எதை எடுக்கிறதுனு சந்தானம் முழிச்சுட்டு இருக்கும்போது, ரவுடியை இன்ஸ்பெக்டர்கிட்ட மாட்டிவிட்டுரலாம்.


 இன்ஸ்பெக்டர் வீட்டு ஆர்டர் எடுத்துக்கலாம்னு விஷால் ஐடியா கொடுப்பார். ஆனா, கல்யாணம் நடக்கும் அன்னைக்குனு பார்த்து இன்ஸ்பெக்டருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்துடும். இப்போ ரவுடிகிட்ட வசமா மாட்டிக்குவார் சந்தானம். 'இப்படி மத்தவங்களை நம்பாம நாமளே திருச்சில சொந்தமா ஒரு ஹோட்டல் வைப்போம்’னு சொல்லி, சந்தானத்தை திருச்சிக்குக் கூட்டிட்டு வருவார் விஷால். 



அப்புறம் திருச்சியில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. க்ளைமாக்ஸ்ல ஒரு விருந்து சமைக்கிறார் சந்தானம். அதில் விஷாலைக் காலி பண்ணணும்னு சாப்பாட்டில் விஷத்தைக் கலந்துடுவார். அந்த அளவுக்கு விஷால் மேலே சந்தானம் ஏன் காண்டாகுறார்ங்கிறதுதான் கதையே. இதுக்கு நடுவில்தான் ஹீரோவோட காதல், அதில் வர்ற பிரச்னைகள், ஆக்ஷன் எல்லாமே இருக்கும்!


எப்பவும் என் படத்துல காமெடிக்குனு தனியா யாரையும் நடிக்கவைக்க மாட்டேன். ஹீரோ, ஹீரோயின், வில்லன் வரை எல்லாருமே காமெடி பண்ணுவாங்க. அப்படி இதில் படம் முழுக்க சந்தானம் காமெடி பண்றார். ஒரு ஹோட்டல் நடத்தணும்னா ஒரு ஓனர், நாலஞ்சு லேபர்ஸ் வேணும்ல. அப்படி இதில் ஓனர் சந்தானம். அவரோட லேபர்ஸ்தான் விஷால், ஜெகன், சபேஷ் கார்த்தி, சரித்ரன் நாலு பேரும்!''  


''அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா எதிர்பார்ப்புக்கு ஏத்த மாதிரி நடிக்கிறாங்களா?''


''அர்ஜுன் சார் பொண்ணுகிட்ட கரெக்ஷன்ஸ் சொன்னா எப்படி எடுத்துக்குவாங்கனு, ஆரம்பத்தில் சின்னத் தயக்கம் இருந்துச்சு. ஆனா, கேமரா முன்னாடி ஐஸ்வர்யாவுக்கு எந்தக் கூச்சமும் இல்லை. முதல் படம்னு சொல்ல முடியாத அளவுக்கு நடிக்கிறாங்க!''


'' 'வின்னர்’, 'கிரி’ படங்கள்ல வடிவேலுவுக்கு நீங்க தான் காமெடி எழுதினீங்க. தனுஷ§க்கு 'தேவதையைக் கண்டேன்’, 'திருவிளையாடல்’னு ரெண்டு ஹிட் படம் கொடுத்தீங்க. அவங்ககூட எல்லாம் டச்ல இருக்கீங்களா?''


''வடிவேலுகூடப் பேசிட்டுதான் இருக்கேன். அவரோட ரெண்டாவது ரவுண்ட் செம மிரட்டலா இருக்கும் பாருங்க. தனுஷ்கூட இடையில கொஞ்ச நாள் பேச முடியலை. இப்ப திரும்பப் பேசிக்க ஆரம்பிச்சுட்டோம். 'கொலவெறி’, இந்திப் படம்னு ரொம்பப் பெரிய ரேஞ்சுக்குப் போயிட்டார். சீக்கிரமே அவர்கூட ஒரு படம் பண்ண வாய்ப்பு வரும்னு நினைக்கிறேன்!''

 நன்றி - விகடன்

சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன் பேட்டி ( தேவயானியின் கணவர் )

அசோக் பில்லருக்கு அருகில் தேவயானி ஸ்டுடியோ.


கோபமாக இருந்தார் 'சோலார் ஸ்டார்’ ராஜகுமாரன்.  ''விகடன்ல ஏங்க 'திருமதி தமிழ்’ படத்துக்கு விமர்சனம் எழுதலை?'' என்றார் சீரியஸாக. ''அது வந்து சார்... பொதுநலன் கருதி அப்படி ஏதாவது ஒரு முடிவு எடுத்திருப்பாங்க... விசாரிச்சுட்டுச் சொல்றேன் சார்!'' என்று நான் ஜகா வாங்க, என்னை மேலும் கீழும் பார்த்தார். 


''எனக்கு முன்னாடி, பின்னாடி வந்த பல படங்களுக்கு விமர்சனம் எழுதிட்டீங்க. என் திருமதி தமிழுக்கு அந்தத் தகுதி இல்லைனு நினைக்கிறீங்களா?'' கோபக் குரலில் பேசிக்கொண்டே புரொஜெக்டரை இயக்கி 'திருமதி தமிழ்’ டிரெய்லரை ப்ளே செய்துவிட்டு, ''கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. வர்றேன்!'' என்று சென்றுவிட்டார்.


'திருமதி தமிழ்’ டிரெய்லர், பாடல்கள், சண்டைக் காட்சிகள் என்று ஸ்க்ரீனில் விரிய விரிய, அந்த ஏ.சி. அறையிலும் எனக்கு வியர்வை பெருக்கெடுத்தது. வாழ்க்கையில் அந்த 20 நிமிடங்களை என்னால் மறக்கவே முடியாது. என்னா அடி!


மிகச் சரியாக வீடியோ ஓடி முடிந்ததும் மீண்டும் என்ட்ரி கொடுத்தார் ராஜகுமாரன். ''பேட்டியை ஆரம்பிக்கலாமா?'' என்றபடி, அருகில் ஒரு டி.வி-யை வைத்து அதிலும் அதே சண்டைக் காட்சிகள், பாடல்கள், டிரெய்லர்களை ஓடவிட்டார். (ஓ காட்... மறுபடியுமா?)


''நான் ஒரு பெர்சன்ட்கூட ஜாலியான ஆள் கிடையாதுங்க. ரொம்ப சீரியஸாத்தான் பேசுவேன். அதனால ஜாலி பேட்டி, காமெடிப் பேட்டினு எதுவும் டிரை பண்ணாதீங்க!'' என்றார் கறாராக.


''இத்தனை வருஷம் கழிச்சு மறுபடியும் இயக்கம், தயாரிப்பு, நடிப்புனு ஏன் சார் இறங்கினீங்க?''



''நான் 26 வருஷமா சினிமாவில் இருக்கேன். அந்த ஒரு காரணம் போதுமே! ஆனாலும், 'ஏன்  நடிக்கிற... ஏன் இயக்குற... ஏன் சண்டை போடுற..?’னு கேட்டா, சினிமா என் தொழில், என் சுவாசம், என் மூச்சு சார்!''


''ஆனா, நீங்க என்ன சொன்னாலும் சோலார் ஸ்டார்னு உங்களுக்கு நீங்களே பட்டம் வெச்சுக்கிட்டது டூமச் சார்...''


''எல்லாரும் சொன்னாங்க... வெச்சுக்கிட்டேன். அதுக்கு என்ன அர்த்தம்னா, கரன்ட் இல்லைன்னாலும் பவர் இருக்கும்ல... அதுக்காகத்தான் அந்தப் பேர். மத்தபடி எனக்குப் பட்டம்கூட விடத் தெரியாது. எனக்கு எதுக்கு சார் பப்ளிசிட்டிப் பட்டம்?''


''தேசிய விருதெல்லாம் எப்ப சார் வாங்குவீங்க?''


''என் எல்லா படங்களும் மாநில அரசு விருது வாங்கியிருக்கு. ஆனா, தேசிய விருது பத்தி நான் என்ன சொல்ல? பார்க்கலாம்... என் அடுத்த படத்துலயே அதுக்கான வாய்ப்பு அமையலாம்!''


''எந்தத் தைரியத்துல சார் நீங்களே ஹீரோவா நடிக்கணும்னு முடிவுபண்ணீங்க?''


''இப்பவும் நடிக்கணும்னு எனக்கு ஆசையோ, லட்சியமோ இல்லை. ஆனா, 'திருமதி தமிழ்’ பட ஹீரோ கேரக்டரின் கனத்தைத் தாங்கக்கூடிய அளவுக்கு இங்கே யாரும் இல்லை. எல்லாரும் சொதப்பிடுவாங்க. அதான் என் படத்துல நானே நடிக்க வேண்டிய நிலைமை. நடிச்சுட்டேன்!''


''ஆனா, சி.என்.என்-ஐ.பி.என். வெளியிட்டிருக்கும் தலைசிறந்த 100 படங்களில் 'திருமதி தமிழ்’ இடம் பிடிக்கலையே?''


''அதுக்கு இரண்டு காரணம். ஒண்ணு, எனக்கு சி.என்.என்... அப்படின்னா என்னன்னுகூடத் தெரியாது. ரெண்டு, அதே மாதிரி அவங்களுக்கும் என்னைப் பத்தித் தெரியாம இருந்திருக்கலாம். 'திருமதி தமிழ்’ங்கிறது 20,000 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியில் இதுவரை சொல்லப்படாத ஒரு வார்த்தை. செந்தமிழ், நற்றமிழ், பிள்ளைத் தமிழ், கன்னித் தமிழ், இயல்தமிழ், இசைத் தமிழ்னு எவ்வளவோ பேர் சொல்றோம். ஆனா, ஏன் தமிழுக்குத் திலகமிட்டு 'திருமதி தமிழ்’னு சொல்லக் கூடாது? என்னைக் கேட்டால், இந்த டைட்டிலுக்கே தேசிய விருது கொடுக்கலாம்!''



''பக்கம் பக்கமா வசனம் பேசுறதெல்லாம் ஓல்டு ஃபேஷன். இப்போ ஃபேஷன் பஞ்ச்தான். நச்சுனு மூணு பஞ்ச் சொல்லுங்க சார்?''


''நச், இச், கச்... போதுமா?''


''ஒரு தயாரிப்பாளரா 'திருமதி தமிழ்’ படம் பார்த்துட்டு தேவயானி என்ன சொன்னாங்க?''


''அவங்களுக்குப் படம் ரொம்பப் பிடிச்சிருக்கு. 'ரொம்ப நல்ல படம்... இந்தப் படத்தை எடுத்ததுக்காக நாம பெருமைப்படணும்’னு சொன்னாங்க. என் நண்பர்களும் உறவினர்களும், 'எதுக்கு இப்படி சோஷியல் சப்ஜெக்ட் எடுத்தீங்க? உங்களுக்கு ஆக்‌ஷன் நல்லா வருதே. முழு நீள ஆக்‌ஷன் படமே எடுத்திருக்கலாமே?’னு கேட்டாங்க. அதையும் மைண்ட்ல வெச்சிருக்கேன்.


 என் ரெண்டு குழந்தைகளுக்கும் படம் ரொம்பப் பிடிச்சிருந்தது. தினமும் படத்தை வீட்டுல போட்டுப் பார்த்துட்டே இருக்காங்க. இப்படி நம்மளைச் சுத்தி இருக்கிறவங்களைச் சந்தோஷப்படுத்துற மாதிரி ஒரு மிகச் சிறந்த படம்  பண்ணினதுக்காக நான் பெருமைப்படுறேன் சார்!''


''சண்டையில் எவ்வளவோ ஸ்டைல், டிரெண்டெல்லாம் வந்திருச்சு. ஆனா, இன்னமும் உள்பனியன் போட்டுக்கிட்டு உருட்டுக்கட்டையோட சண்டை போடுறீங்களே... ஏன் சார்?''


''போன வாரம்தான் விஜய் உருட்டுக் கட்டையைக் கீழே போட்டார். இப்போ நான் அதைக் கையில் எடுத்திருக்கேன். உள்பனியன் கலாசாரம் நூறு வருஷம் ஆனாலும் மாறாது. ஹாலிவுட்லயே டாம் க்ரூஸ், ப்ரூஸ் வில்லிஸ்லாம் இன்னும் உள்பனியன் போட்டுக்கிட்டுதான் சண்டை போடுறாங்க. அதே மாதிரி கோலிவுட்ல இன்னும் 500 வருஷத்துக்கு உருட்டுக்கட்டையை யாராலும் அழிக்க முடியாது!''


''அடுத்த பட வேலை எல்லாம் ஆரம்பிச்சுட்டீங்களா?'' (ஒரு ஃபார்மாலிட்டிக்கு கேட்ட எனக்குக் காத்திருந்தது மெகா வோல்டேஜ் அதிர்ச்சி!)


''ஜோரா! 'உலக நாயகி’... இதுதான் டைட்டில். இது ஒரு உச்சகட்டக் காதல் படம். இதுக்கு மேல காதலே இருக்க முடியாதுங்கிற அளவுக்குத் தீவிரக் காதல் இருக்கும். அதுக்கு அடுத்தது 'ராவனேஷ்வரி ஐ.பி.எஸ்’னு பவர்ஃபுல் கேரக்டர்ல தேவயானி நடிக்கிற செம ஆக்‌ஷன் படம். இரண்டு படத்துக்கான வேலைகளும் நடந்துட்டு இருக்கு!''


''சூப்பர் சார்... ரஜினியை வெச்சு நீங்க படம் இயக்க ஒரு வாய்ப்பு வருதுனு வெச்சுக்குவோம். அந்தப் படத்தோட ஒன் லைன் சொல்லுங்க?''


''சூப்பர் ஸ்டாரும் சோலார் ஸ்டாரும் ஒண்ணா இணைஞ்சா... அது உலகளாவிய எதிர்பார்ப்பா இருக்குமே! வேண்டாங்க... எனக்கு இந்த மாதிரி சின்னச் சின்னதாப் படம் பண்றதே போதும். இருந்தாலும், நீங்க கேட்டதுக்காக ஒன்லைன் சொல்றேன்... சூரியன் பூமிக்கு வந்தா எப்படி இருக்கும்? அப்படி இருக்கும் படம்!''


அதற்கு மேல் என்ன பேசுவது?


''பேட்டியை முடிச்சுக்குவோம் சார்!'' என்றதும், ''அவ்வளவுதானா?'' என அதிர்ச்சி அடைந்தார். ''இன்னும் நிறையக் கேட்பீங்கனு எதிர்பார்த்தேன்!'' என்று முகம் சுளித்தார். ''சரி சார்... நீங்களே ஏதாச்சும் சொல்லுங்க?'' என்றேன்.


''என்கிட்ட கேக்க உங்ககிட்ட எதுவும் இல்லைன்னா, அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு? ஆனா, ஒண்ணு... நான் காமெடி பார்ட்டியோ ஜாலி பேர்வழியோ இல்லை. நான் ரொம்ப ரொம்ப சீரியஸானவன்!''


ரொம்ப நன்றி சார்!

நன்றி - விகடன்

இடிந்தகரை பெண்களும் போராட்டக் களத்தில் குதித்தது எப்படி? சுப.உதயகுமாரன் பேட்டி

விகடன் மேடை - சுப.உதயகுமாரன் பதில்கள்
வாசகர் கேள்விகள்... படம்: எல்.ராஜேந்திரன்
எஸ்.ரகுபதி, குரோம்பேட்டை. 


''உங்கள் அடுத்த நடவடிக்கை அரசியலா?''

 
''இப்போதே நாங்கள் அரசியலில்தான் இருக்கிறோம். மக்களின் வாழ்வுரிமைகளை, வாழ்வாதார உரிமைகளை, வருங்காலச் சந்ததிகளைக் காக்கும் அரசியலைவிட மேலான அரசியல் வேறென்ன இருக்கிறது?''


க.நாராயணன், செய்யாறு. 


''ஏதோ ஒரு நாட்டுக்குச் சென்று நீங்கள் வாழ்வதற்கு உங்களுக்கு அனுமதி அளித் தால், எந்த நாட்டைத் தேர்வு செய்வீர்கள்? ஏன்?''


''நார்வே. இயற்கையும், இனிமையும், ஜனநாயகமும், சமூக நீதியும் போற்றப்படும் நாடு. 1987-ம் ஆண்டு நான் அங்கே படித்த போது அப்போதைய பிரதமரின் கணவர் ஆஸ்லோ பல்கலைக்கழக வகுப்பில் எனக்கு ஆசிரியராக இருந்தார்.


 வெளியுறவுத் துறை அமைச்சரோடு மெட்ரோ ரயிலில் அரட்டை அடித்தபடியே பயணம் செய்ய முடிந்தது. அங்கு இருக்கும் ஒரே பிரச்னை என்ன வென்றால், கோடைக் காலத்தில் இருட்டே வராது. குளிர் காலத்தில் சூரியனே வராது. அதனால் என்ன, அங்குதான் ஈழத் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்களே... அது போதாதா?''


ம.ராஜா, கோயம்புத்தூர். 


''நீங்கள் வேண்டுமானால் நேரடியாக என்.ஜி.ஓ-க்களுடன் (அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்) தொடர்பு வைத் திருக்காமல் இருக்கலாம். ஆனால், கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் கணிசமானோர் என்.ஜி.ஓ-க்களாக இருக்கிறார்களே..?'' 


''எங்கள் போராட்டத்துக்கு எந்த உள் நாட்டு, வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமும் பணமோ, பொருட்களோ, வேறுவிதமான உதவி களோ செய்யவில்லை. நாங்களும் பெற முயற் சிக்கவில்லை. போராடும் மீனவ மக்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள் தரும் நன்கொடையில்தான் போராட்டம் நடக்கிறது. மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பல தொண்டு நிறுவனங்கள் கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாகச் சிந்திப்பதில், அவர்கள் பகுதிகளில் அணுசக்திக்கு எதிராகப் பரப்புரை செய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?''


எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டிவனம். 


''போராட்டத்தை வாபஸ் வாங்கவைக்க மறைமுகமான பேரங்கள் எதுவும் வந்தனவா?'' 


''விரும்பிய நாட்டுக்குச் சென்று பெரு வாழ்வு வாழ ஆவன செய்வதாக ஒரு நண்பர் மூலம் ஆசை காட்டப்பட்டது. 'என்ன வேண்டும் என்று கேட்டுச் சொல்லுங்கள்... நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்’ என்று பலர் என்

பெற்றோரிடமும் மனைவியிடமும் சென்று கேட்டார்கள். தூது வந்தவர்கள் விரும்பாத பதிலைத் 'தூ’வென்று வீட்டாரே சொல்லி அனுப்பிவிட்டதால், நான் தலையிட வேண்டிய நிலை எழவில்லை!''


இரா.அரி, கண்ணமங்கலம். 


''நீங்கள் இடிந்தகரை மக்களுக்காகப் போராடுவது நல்ல விஷயம். இதே போல தமிழ கத்தின் பிற பகுதி மக்களும் மின்வெட்டு, ஊழல், ஆற்று மணல் கொள்ளை என்று பலப்பல விதங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் இப்படியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்கிறீர்களா?'' 


''தங்களின் வாழ்வுரிமைகளும், வாழ்வாதார உரிமைகளும், வருங்காலச் சந்ததிகளும் பாதிக்கப்படும் அபாயத்தை உணர்ந்த எங்கள் பகுதி மீனவ மக்களும், மற்றவர் களும் போராடுகிறார்கள். நானும், நண்பர்களும் அவர்கள் சேவகர்களாகப் பணியாற்றுகிறோம். எங்கெல்லாம் மேற் கண்ட ஆபத்து எழுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் தன்னெழுச்சி யோடு முனைப்பாகப் போராடியே தீர வேண்டும். அப்படியான தருணங்களில் அவர்களுக்காக ஆதரவுக் குரல்களும் கரங்களும் இயல்பாகவே எழும்!''


கே.கலைவாணி, திருத்தணி. 


''அணு உலை பாதிப்பு உண்டாக்கும் என்பது உண்மைதான்... ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், வளர்ச்சி கொடுக்கும் வசதிகளை அனுபவிக்க, ஏதோ ஒரு வகையில் இழப்பு இருக்கத்தானே செய்யும். இப்போது நீங்களே கடைக்கோடி கிராமத்தில் அமர்ந்துகொண்டு சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் செய்துவருகிறீர்கள். அந்த இணைய இணைப்பு களுக்காக ஆழ்கடல் கேபிள்களைப் பதிப்பதால் கடல் சூழல் மாசுபடத்தானே செய்கிறது?''  



''கற்காலத்துக்குத் திரும்பச் செல்ல முடியாது என்பதை நானும் உணர்ந்தே இருக்கிறேன். எனவே, இழப்புகளை நம்மால் முடிந்த வரை குறைத்து... நீடித்த, நிலைத்த வளர்ச்சியை அடைய முயற்சிக்கலாமே? 'கடலில் கேபிள் போடுவதா, அணுக்கழிவைக் கொட்டுவதா?’ என்றால், கேபிள் போடுவோம் என்பதுதான் என் கட்சி. வாழ்க்கையின் விளிம்புநிலையில் நின்று உழலும் மீனவர்கள், விவசாயிகள், தலித் தொழிலாளர்கள் போன்றோர் இழப்புகளைச் சந்திக்க வேண்டும், டாட்டாக்களும், மிட்டல்களும், அம்பானிகளும் கோடி கோடியாகக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை அனுமதிக்கவே முடியாது. ஏனெனில், சொற்ப ஆயிரங்களில் இருக்கும் பணக்காரர்களுக்காக கோடிக்கணக்கான மக்கள்தொகையின் நலனை நாம் விட்டுக்கொடுக்க முடியாது!''


இராம.பாலசுப்ரமணியன், கொடுங்காலூர். 


''இந்தியாவில் பாலிதீன் பயன்பாடு அதிகம், அணைகள் ஏகம், மணல் வளம் சகட்டுமேனிக்குக் கொள்ளை அடிக்கப்படுகிறது, காற்று மாசுபடுதல் அதீதம், காடுகள் அழிக்கப்படுகின்றன... திரும்பிய திக்கெல்லாம் இயற்கை வளங்கள் சூறையாடப்படுகின்றன அல்லது மாசுபடுத்தப்படுகின்றன. இந்த நிலையில், அதிஅவசரமாக இயற்கையின் எந்த வளத்தைப் பாதுகாக்க நாம் போராட வேண்டும்... ஏன்?'' 


''நாம் வாழும் பகுதியின் இயற்கை வளங்கள்பற்றிய முழுத் தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமது பகுதியில் நடக்கும் இயற்கை வாழ்வாதாரச் சிதைப்பை, சீரழிப்பை, திருட்டை, வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த அணி திரள வேண்டும். அரசியல் கட்சிகளின், அரசியல்வாதிகளின் இயற்கை பாதுகாப்புக் கொள்கைகள்குறித்துக் கேள்விகள் எழுப்ப வேண்டும். அதிகாரிகளின் இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டும்.


 தகவல் அறியும் உரிமைச் சட்டம், பொதுநல வழக்கு, கருத்தரங்குகள், துண்டுப் பிரசுர விநியோகம், பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள் எனப் பல வழிகளில் தொடர்ந்து உழைக்க வேண்டும். பெண்கள், இளையோர், குழந்தைகள் மத்தியில் பரப்புரை செய்ய வேண்டும். இது நம் அனைவரின் தலையாய கடமையாகும்!''


எஸ்.ஏழுமலை, திருச்சி-3. 


''இடிந்தகரை பெண்களும் போராட்டக் களத்தில் மிகவும் தீவிரமாக நிற்கிறார்கள். அவர்களுக்குள் அந்தத் தீவிரத்தை எப்படி உண்டாக்கினீர்கள்?'' 


''அவர்கள்தான் என்னையும், நண்பர்களையும் தீவிரமிக்கவர்களாக மாற்றியிருக்கிறார்கள்!''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர். 


''அருந்ததி ராய், மேதா பட்கர் போன்றவர்களுடன் உங்கள் அமைப்புக்குத் தொடர்பு இருக்கிறதா? போராட்டத் திசைகுறித்த தகவல் தொடர்பு உரையாடல்கள் உங்களிடையே நிகழுமா?'' 


''இருவரோடும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. 2003-ம் ஆண்டு முதல் மேதா பட்கர் அவர்களை நாகர்கோவில் பொதுக்கூட்டம், கூடங்குளம் மாநாடு, இடிந்தகரைப் போராட்டம் எனப் பல முறை அழைத்து வந்திருக்கிறோம். அமெரிக்காவில் இருந்தபோதே அருந்ததி எனக்குப் பரிச்சயம். அவரும் எங்கள் போராட்டத்தின் போக்கைக் கவனித்தபடிதான் இருக்கிறார்!''


அந்தோணிசாமி பாட்ரி, ஃபேஸ்புக்.   


''வேறுபட்ட சிந்தனைகொண்ட மனிதர்களை, சுயநல எண்ணம் மிகுந்தவர் களை இந்தப் போராட்டத்தின் பொருட்டு எப்படி உங்களால் ஒருங் கிணைக்க முடிந்தது. அதன் ரகசியம் என்ன?''

 
''கோஷ்டி சண்டைக்கும், வேஷ்டிக் கிழிப்புக்கும் பெயர்போன வேறு யாரிடமோ கேட்க வேண்டிய கேள்வியை எனக்கு அனுப்பிவிட்டீர்களோ? எங்கள் மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் அனைவரும் ஒருமித்த சிந்தனையுடன் பொதுநல எண்ணம் மிகுந்தவர்களாக, சாதி, மதம், ஊர், தொழில், அரசியல் கடந்த ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். இது ஒன்றிணைந்து வந்த தமிழர் கூட்டம்; யாராலும் ஒருங்கிணைக்கப்பட்டது அல்ல!''


சு.அருளாளன், ஆரணி. 


''உங்கள் போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும்? உங்கள் மனதில் ஒரு எண்ணம் இருக்குமே... அதைச் சொல்லுங்கள்?'' 


''உண்மையைச் சொல்லட்டுமா? கூடங்குளம் அணுமின் நிலையம் நிரந்தரமாக இழுத்து மூடப்படும். இது உறுதி!''


- அடுத்த வாரம்...



''அணுசக்தியின் முக்கியத்துவம் பற்றி நாடாளுமன்றத்தில் பேசிய கனிமொழி கூட, கூடங்குளம் அணுஉலைகுறித்து வாய் திறக்க மறுக்கிறாரே?''


''நடுநிசியில் சாலையில் நடந்து வந்தாலே ஓர் இளைஞனைக் கைது செய்யும் நம் தமிழகக் காவல் துறை. ஆனால், எண்ணற்ற வழக்குகள் பதியப்பெற்ற உங்களை மட்டும் இத்தனை மாதங்களாகச் சுதந்திரமாக நடமாட விட்டிருப்பதன் மர்மம் என்ன?''


''தமிழகத்தில் சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் நிலவும் 16 மணி நேர மின்வெட்டுபற்றி தங்களுக்குக் கவலைஇல்லையா?''


- போராடுவோம்

நன்றி - விகடன்