Thursday, November 29, 2012

கலைஞர் , ஜெ , டாக்டர் ராம்தாஸ் மூவருக்கும் ஓ பக்கங்கள் ஞாநியின் காரசார கடிதங்கள்

பக்கங்கள்

இரண்டு கடிதங்கள்!

ஞாநி

கடிதம் 1:
அன்புள்ள கலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும்
வணக்கம்.
இதற்கு முன்பு உங்கள் இருவருக்கும் தனித்தனியே கடிதங்கள் எழுதியிருக்கிறேன். இருவருக்குமாக ஒரே கடிதம் எழுதுவது இதுவே முதல்முறை. முந்தைய கடிதங்களை நீங்கள் பொருட்படுத்தாதது போல இதையும் அலட்சியம் செய்வது உங்கள் விருப்பம். எனினும் எழுதுவது என் கடமை.
தீபாவளியை இருவரும் அவரவர் வழியில் கொண்டாடி மகிழ்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும் எப்படி அன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்தது என்பதை கீழ்வரும் செய்திகளிலிருந்து அறிந்து மகிழும்படி கேட்டுக் கொள்கிறேன்.
மயிலாடுதுறை பொறையாறு அருகே இரண்டு காவலர்கள் குடிபோதையில் ஒரு காரை உடைத்து நொறுக்கினார்கள்.
கோவை அருகே குடிபோதையில் ஒரு காவலர் தம்மேல் அதி காரியைக் கண்டபடி திட்டினார்.
தர்மபுரியில் ரோந்துப் பணியில் இருந்த ஒரு காவல் அதிகாரி குடிபோதையில் தள்ளாடினார்.

அரசின் காவலர்கள் இப்படி முன்மாதிரிகளாகக் கொண்டாடும்போது குடிமக்கள் பின்தங்கியிருக்க முடியுமா?
ராயபுரத்தில் குடி போதையில் இருந்த ஒரு கணவன், உடல் சோர்ந்து படுத்திருந்த கர்ப்பிணி மனைவியை எழுப்பி தோசை தரச் சொன்னதும் அவள் உடனே தராததால், கழுத்தை நெரித்துக் கொன்றான். கொருக்குப் பேட்டையில் குடித்துக் கொண்டிருந்த இரு நண்பர்களில் ஒருவன் தரையில் வைத்திருந்த மதுக் கோப்பையைத் தவறுதலாக இடறி அது கொட்டி விட்டதால் எரிச்சலடைந்த மற்றொரு நண்பன் அவனைக் கத்தியால் குத்திக் கொன்றான்.
இவையெல்லாம் ஒன்றுமே இல்லை.
சேலம் ஆத்தூரில் ஐந்து நண்பர்கள் குடித்துவிட்டுப் பெரும் போதையில் இரண்டு பைக்குகளில் தாறுமாறாக சாலையில் சென்றார்கள். அவசர காலத்தில் உயிர்காக்க உதவும் ஆம்புலன்ஸ் வண்டியின் டிரைவரான அரசு ஊழியர் சண்முக சுந்தரம் என்பவர் அதே சாலையில் தன் டூவீலரில் வந்தார். குடிகார இளைஞர்களை நிதானமாக வண்டி ஓட்டும்படி சொன்னார். ஆத்திரமடைந்த ஐவரும், சண்முகசுந்தரத்தை சாலையிலேயே இழுத்துப் போட்டு அடித்து உதைத்துக் கொன்றே விட்டார்கள். அதில் ஒருவன் கல்லூரி மாணவன்! சண்முக சுந்தரத்துக்கு பள்ளிப்படிப்பு படிக்கும் இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இந்தத் தீபாவளி அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்த செய்திகளில் எப்படி பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் மது குடித்துவிட்டு பள்ளிக்கு வந்து தள்ளாடுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தின. பள்ளி வளாகத்துக்குள்ளேயே கும்பலாக உட்கார்ந்து படித்துக் கொண்டு அல்ல, குடித்துக் கொண்டு இருந்த மாணவர்களைக் கண்டித்த ஆசிரியரை அவர்கள் தாக்கிய செய்தியையும் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
எட்டாம் வகுப்பு வரை படித்தும் தமிழையோ ஆங்கிலத்தையோ எழுத்துக் கூட்டிக் கூடப் படிக்க சிரமப்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருப்பதாக ஓர் ஆய்வு ஒரு பக்கமும், 10வது, 11வது வகுப்பு மாணவர்கள் மத்தியிலேயே மது அடிமைத்தனம் உருவாகிவிட்டதாக இன்னொரு ஆய்வும் தெரிவித்ததை நீங்கள் இருவரும் படித்தீர்களா என்று தெரியவில்லை.
மேலே சொன்ன எந்த நிகழ்ச்சியின் போதும் நீங்கள் இருவரும் ஒரு அறிக்கை கூட வெளியிட்டதில்லை. எதெதற்கோ அறிக்கை வெளியிட்டு அறிக்கைப் போரே நடத்துபவர்கள் நீங்கள். தமிழகமே இப்படி மது அடிமைத்தனத்தால் சீரழிவதைப் பற்றி உங்கள் இருவரிடமிருந்தும் ஒரு அறிக்கை கூட வந்ததில்லை.

ஏனென்றால் இந்தச் சீரழிவுக்குப் பொறுப்பேற்க வேண்டியவர்களே நீங்கள்தான். உங்களில் ஒருவர்தான் 35 வருட காலம் தமிழகத்தில் இருந்த மதுவிலக்கை நீக்கி அடுத்த 40 வருட காலமாக பல தலைமுறைகளுக்கு மதுவைப் பழக்கிக் கொள்ள வழிவகுத்தவர். உங்களில் இன்னொருவர்தான் பள்ளிக் கூடங்களை தனியாரை நடத்த விட்டுவிட்டு, மதுக்கடைகளை அரசாங்கம் நடத்தும் புரட்சியைச் செய்தவர்.
இதன் விளைவுகளில் ஒரு சிறு துளியைத்தான் மேலே பட்டியலிட்டேன். இன்றைய தமிழகத்தில் 18 வயது முதல் 35 வயது வரையிலான இளைஞர்களில் பாதி பேருக்கு மேல் குடிகாரர்களாகிவிட்டார்கள். தமிழகத்தில் இருக்கும் சுமார் மூன்று கோடி குடும்பங்களில் வீட்டுக்கு ஒரு மது அடிமை இல்லாத குடும்பமே இல்லை என்ற நிலை படுவேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது.


 மதுவால் சீரழியும் காவலர்கள் பற்றியோ ஆசிரியர்கள் பற்றியோ வெளியான செய்திகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் இன்னமும் செய்தியாகாமல் தப்பித்துக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான குடிகாரர்கள் இருக்கிறார்கள். ஒரு சமூகத்தில் காவலர்களும் ஆசிரியர்களுமே குடிபோதைக்கு அடிமையானால், அந்தச் சமூகம் இன்னும் எவ்வளவு உள்ளுக்குள்ளேயே அழுகிக் கிடக்கும் என்று யூகிக்கலாம். தினசரி சுமார் 2 கோடி தமிழர்களேனும் மது குடித்து மதி இழப்பதை சாத்தியப் படுத்தியிருக்கிறீர்கள்.



 அதன் விளைவுதான் இன்று தமிழகத்தில் எலெக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், ப்ளம்பர், மெக்கானிக், மேசன் என்று பல துறைகளிலும் மிகக் கடும் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஏழைப் பெண்கள் ஏழைமையால் படும் துயரம் போதாதென்று தம் வீட்டு ஆண்களின் போதையால் படும் கூடுதல் துயரம் சொல்லி மாளாது. நேரமிருந்தால் உங்கள் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்களிடமே மனம் விட்டுப் பேசிப் பாருங்கள். குடிப்பழக்கத்தால் சீரழியும் குடும்ப சோகங்களை அவர்கள் கொட்டித் தீர்ப்பார்கள்.


கடந்த இருபது வருடங்களில் நீங்கள் இருவரும் மாறிமாறி ஆட்சி நடத்தியதால் தமிழர்களுக்கு எந்தப் பெரிய லாபமும் ஏற்பட்டுவிடவில்லை. உங்களில் ஒருவர் வீட்டுப் பெண் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் புகார் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றதும், ஒரு பேரன் மோசடி வழக்கில் கைதாக பயந்து மாதக் கணக்கில் தலை மறைவாக ஒளிந்திருப்பதும், உங்களில் மற்றவர் தன் அன்புக்குரிய உடன் பிறவா சகோதரியுடன் சட்ட விரோத சொத்துக் குவிப்பு வழக்கில் வருடக்கணக்கில் நீதிமன்றப் படி ஏறி இறங்கிக் கொண்டிருப்பதும்தான் உங்கள் சாதனைகள். உங்கள் இருவரின் ஆட்சியில் ஏற்பட்ட நன்மைகளுடன் தீமைகளை ஒப்பிட்டு காஸ்ட்- பெனிஃபிட் ரேஷியோ பார்த்தால், தமிழர் பெற்றதை விட இழந்ததே அதிகம்.

உங்கள் இருவருக்கும் கொஞ்சமேனும் மனசாட்சி இன்னமும் மீதம் இருக்குமானால், தயவுசெய்து இந்த மது அவலத்துக்கு முற்றுப் புள்ளி வையுங்கள். ‘தமிழினத் தலைவர்அவர்களே, தமிழக அரசு பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால், அதை தி.மு. முழுமையாக ஆதரிக்கும். தி.மு. ஆட்சிக்கு வந்தாலும் மதுவிலக்கு தொடரும் என்று அறிக்கை வெளியிடுங்கள். ‘புரட்சித் தலைவிஅவர்களே, ஜனவரி 1 முதல் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்றும் அதை ஆதரிக்கும் தி.மு..வுக்கு நன்றி என்றும் அறிவியுங்கள்.

இதைச் செயத் தாமதமாகும் ஒவ்வொரு கணமும் தமிழகம், தமிழ் இனம் அவலப் பெருங்குழியில் வீழ்ந்து கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழர்களை அழிக்கும் பழி சிங்கள ராஜபட்சே மீதானது. ஆனால் இந்தியத் தமிழர்களைக் கத்தியின்றி ரத்தமின்றி மதுக் கோப்பைகளாலேயே அழிக்கும் பழியை நீங்கள் இருவர்தான் சுமக்கப் போகிறீர்கள்.
உங்கள் இருவராலும் தமிழகத்தில் மது விலக்கைக் செயல்படுத்த முடியாதென்றால், ஒரே ஒரு வேண்டுகோள்தான் எனக்கு மீதம் இருக்கிறது. தயவுசெய்து இருவரும் அரசியலை விட்டு வெளியேறுங்கள். அதுவே தமிழ் மக்களுக்கு நீங்கள் செய்யக் கூடிய மாபெரும் தொண்டாக இருக்கும்.
இன்றிரவு உறங்கப் போகும் முன்பு ஒரு தவறும் செய்யாத ஒரு சண்முகசுந்தரம் நடுத்தெருவில் உங்களால் ஊக்குவிக்கப்பட்ட குடிகாரர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை எண்ணிப் பாருங்கள். ஒவ்வொரு இரவிலும் அப்பாவின் கொடூர சாவைப் பற்றி எண்ணி தூக்கம் இழக்கும் அந்தக் குழந்தைகளை எண்ணிப் பாருங்கள். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூரண மதுவிலக்கு ஆதரவு அறிக்கையை எழுதி வெளியிட்டு பரிகாரம் தேடுங்கள்.
இன்னும் உங்கள் இருவர் மீதும் எஞ்சியிருக்கும் சொற்ப நம்பிக்கையுடன்,
ஞாநி
கடிதம் 2:
அன்புள்ள மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு,
வணக்கம். தர்மபுரியில் தலித்துகளுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு உடனடியாகத் தீர்வு தேடும் ஒரு முயற்சியாகவே இதை உங்களுக்கு எழுதுகிறேன்.
ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க .நா சபை தவறிவிட்டது; அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று சர்வதேசப் பார்வையுடன் அறிக்கை விடும் நீங்கள் அதற்கு முன் உள்ளூர் பார்வையில் தர்மபுரி தலித்துகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு யார் பொறுப்பு, என்ன பரிகாரம் என்பதைப் பேசியாக வேண்டும்.

தர்மபுரி தலித் கிராமங்களில் தாக்குதல் செய்தவர்கள் எல்லாரும் உங்கள் சொந்தங்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை. தாக்குதலை ஆரம்பித்துவைத்தது ஒரு கலப்புத் திருமணம்தான். கடந்த காலத்தில் தலித் தலைவர் திருமாவளவனுடன் சேர்ந்து சுற்றுப்பயணம் சென்று வன்னியர்களுக்கும் தலித்துகளுக்கும் இடையே இருந்த பகையுணர்வை தணித்த நீங்கள் இப்போது ஏன் அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு முன்வரத் தயங்குகிறீர்கள்?
இந்த சாதி அரசியலால் வன்னியர்கள் அடையப்போகும் நன்மை என்ன? கடந்த காலத்தில் நீங்கள் மாறி மாறி திராவிடக் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்ததாலோ, உங்கள் மகனை மத்தியிலே அமைச்சராக சில வருடம் வைத்திருந்து அழகு பார்த்ததாலோ, வன்னிய சாதியினரின் வாழ்க்கையில் என்ன முன்னேற்றம் ஏற்பட்டது என்று விளக்க முடியுமா? உங்கள் அரசியல் பலத்துக்கு வன்னியர்களை பயன்படுத்தப் பார்த்தீர்களே தவிர, அதனால் வன்னியருக்கு விளைந்த நன்மை என்ன?
வன்னிய சமுதாயத்தையே குடிகாரர்களாக்கி அழிக்கப் பார்க்கிறார்கள் என்று உங்கள் கட்சிப் பிரமுகர் காடுவெட்டி குரு திராவிடக் கட்சிகள் மீது குற்றச்சாட்டை உங்கள் முன்னிலையிலேயே வைத்தார். சரியான குற்றச்சாட்டுதான். உங்கள் மீது எனக்கு இன்னமும் இருக்கும் நம்பிக்கைக்கும் மதிப்புக்கும் காரணம் நீங்கள் குடியை எதிர்ப்பதும், உங்கள் டி.வி.யில் இன்னும் பிடிவாதமாக வணிக சினிமாவை அனுமதிக்க மறுப்பதும்தான்.
வன்னியர் மட்டுமல்ல, எல்லா தமிழ் சாதிகளையும் குடி அழிக்கிறது. ஆனால் அதை ஊக்குவித்த திராவிட கட்சிகளுக்கு மாற்று அரசியலாக நீங்கள் முன்வைப்பது என்ன? சாதி அரசியல் தான்.
வன்னியர்களை திராவிடக் கட்சிகள் குடிகாரர்களாக்கியது. நீங்களோ வன்முறையாளர் களாய்க்குகிறீர்கள். குடி சீரழிக்கும். சாதிவெறி உயிர் கொல்லி. நீங்கள் அறிந்தோ அறியாமலோ ஊக்குவிக்கும் இந்த சாதி வெறி எதிர் வன்முறையைத் தூண்டினால் எஞ்சுவது அழிவுதான். வன்னியர் பெரிதும் வாழும் ஆற்காடு மாவட்டங்களில் பிரபலமான கூத்து மகாபாரத யுத்தத்தில் இறுதியில் எல்லாரும் அழிந்ததைத்தான் சொல்லிச் சொல்லி எச்சரிக்கிறது. அந்த அழிவை நோக்கி வன்னியரையும் தலித்துகளையும் தள்ளும் சாதி அரசியலைவிட திராவிட அரசியலே மேல் என்றுதான் சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொரு வன்னியரும் முடிவெடுப்பார்கள்.

சாதி அரசியல் உங்களையும் அடுத்த தேர்தலில் அழித்துவிடும். உங்கள் சொந்தங்களையும் நிரந்தரமாக யுத்த பூமியில் ரத்தம் சிந்தியே வாழச் செய்துவிடும். ஒரு வன்னிய அன்புமணி, மருத்துவம் படித்து நவீன மனிதனாக மாறியதுபோல ஒவ்வொரு வன்னிய இளைஞனும் மாற தேவைப்படுவது தமிழுணர்வும் மானுட நேயமும் தான்.
இன்னும் காலம் தாமதமாகி விடவில்லை. இந்த முட்டாள் தனங்களுக்கு நீங்கள் நினைத்தால் இப்போதே முற்றுப்புள்ளி வைக்கலாம். சாதி ஒழிப்புதான் உங்கள் உண்மையான நோக்கம் என்றால், நாயக்கன் கொட்டா கிராமத்து இளவரசனையும் திவ்யாவையும் அழைத்துப் பாராட்டுவிழா நடத்துங்கள். அந்தச் செய்தி ஒவ்வொரு வன்னியர் மனத்திலும் ஒவ்வொரு தலித் மனத்திலும் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தும்.
மறுபடியும் திருமாவை அழைத்துப் பேசுங்கள். இருவருமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுங்கள். மக்களிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள். எந்த வன்னியர்கள் தாக்குதலைச் செய்தார்களோ அவர்களைக் கொண்டே இடித்த வீடுகளைக் கட்டிக் கொடுக்கச் செய்யுங்கள். பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிக்கு நீங்கள் முன்னின்று நிதி திரட்டிக் கொடுங்கள். வன்னியராகக் குறுகாமல், தமிழராக நிமிருங்கள்.
இல்லையென்றால், தமிழின் பெயரால், தமிழரின் பெயரால் .நாவுக்கு அறிவுரை சொல்லும் தகுதியே உங்களுக்கு இல்லாமல் போய்விடும்.
சிந்தியுங்கள்.
அன்புடன்
ஞாநி
நன்றி - கல்கி

நாமக்கல் கலெக்டர் நாடே போற்றும் ந(வ)ல்லவர் ஆனது எப்படி?



          இந்தியாவின் ஆட்சி நிர்வாகப் பணியில் உள்ள அதிகாரிகள் ஆசியாவில் உள்ள மற்ற எந்த நாட்டைக் காட்டிலும் திறமை குறைந்தவர்களாக உள்ளனர் என ஹாங்காங்கை சார்ந்த அரசியல், பொருளாதார கன்சல்டன்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. திறமையற்ற அதிகாரிகள் உள்ள பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 9.21 புள்ளிகள் பெற்று இந்தியாதான் முதல் இடத்தில் உள்ளது. 



இதைத் தொடர்ந்து வியட்நாம் (8.54), இந்தோனேசியா (8.37), பிலிப்பைன்ஸ் (7.57), சீனா (7.11), ஆகிய நாடுகள் வருகின்றன. மேலும் ஆசிய நாடுகளின் அரசு அமைப்பு முறை, அதிகாரிகளின் செயல் பாடு குறித்து ஆய்வு செய்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தாங்கள் எடுக்கும் முடிவு எதிர்பார்த்த பலனை கொடுக்காதபோது அதற்குத் தார்மிக பொறுப்பேற்கும் மனப்பக்குவமும் இந்திய அதிகாரிகளுக்கு இல்லை. தங்களது முடிவு  தவறாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவதில்தான் முனைப்பு காட்டுகின்றனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஆக இந்தியா முழுமைக்கும் இந்த நிலைதான் தொடர்கிறது. இருந்தபோதிலும் சில நேர்மையான திறமைவாய்ந்த அதிகாரிகளும் உண்டு. இருப்பினும் ஒரு உண்மையான பொதுவுடமைவாதி, பகுத்தறிவுவாதிகளுக்கு எந்த அதிகாரிகளும் ஈடில்லை. ஏனெனில் இந்த இருவரும் அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து போராடுபவர்கள். சாதி,மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர்கள். இந்த இரண்டு கொள்கையும் கொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரியை பார்ப்பது மிக மிகக் கடினமான காரியம். ஆனால் அவர்களில் விதிவிலக் கானவர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.




நாமக்கல் மாவட்டத்தில் பிறந்த உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். பொறியியல் (எலக்ட்ரானிக்ஸ்) பட்டதாரி. 1995- இல் இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப்பெற்றார். 1997-இல் பரமக்குடியில் துணை ஆட்சியராக பணி யாற்றினார். பரமக்குடி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாதனை புரிந்தார். பின்பு DRDA திட்ட அலுவலர். 2001 -இல் தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சம்மேளன நிறுவனத்தின் (இன்ட்கோசர்வ்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பணியாற்றினார்.



இவரின் முயற்சியில் உலகின் முதல் எலக்ட்ரானிக் தேயிலை ஏலமுறை (ETAS- Electronic Tea Auction System )  கொண்டுவரப்பட்டது. அதேபோல முதன்முறையாக 50 டன் தேயிலை மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்து சாதனை நிகழ்த்தப்பட்டது. ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழும் பெற்று தந்தார். பின்பு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) இயக்குநர் பணி, 2004 சென்னை மாநகராட்சி டெபுடி கமிஷனர். அப்போது ஏற்பட்ட சுனாமியின் போது (இந்த வார்த்தை தமிழகத்தில் அப்போது அறிமுகப்படுத்தியவர் உதயசந்திரன்) பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களுக்கு மீட்பு குழுக் களை அனுப்பினார். 2005-06 தமிழ்நாடு மின்னனுக் கழகம் வரையறை (எல்காட்) மேலாண் இயக்குனர்.




அடுத்து 2007-08-இல் ஈரோடு மாவட்ட ஆட்சியர், அங்கு தொழில்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். பூவுலகின் நண்பர்களின் திட்டத்தை போன்ற இயற்கையான உணவு பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய உதவிபுரிந்தார். அதற்காக பசுமை அங்காடிகளை திறந்து வைத்தார். அதிகளவில் கல்வி கடன் பெற்றுதந்த (ஒரே வருடத்தில் 110 கோடி ரூபாய்) மாவட்ட ஆட்சியர் என பெயரெடுத்தார். பின் மாற்றலாகி மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி  னார். முதல் முறையாக தென் தமிழகத்தில் மதுரையில் தொழில் நுட்ப பூங்காவை கொண்டு வந்தார். பாப்பார்ப்பட்டி, கீரிப்பட்டி கிராமங்களில் உள்ளட்சி தேர்தலை நடத்தினார்.




பாப்பார்பட்டி, கீரிப்பட்டியில் 17 முறை தேர்தல் அறிவிக்கப்பட்டும் ஒரு தலித் பஞ்சாயத்துத் தலைவராக முடியாததற்கான முக்கிய காரணம் அரசின் கண்ணோட்டமே. அங்கு தலைவிரித்தாடும் அப்பட்டமான சாதி வெறியையும், தீண்டாமையையும் சட்டத்தின் துணை கொண்டு இல்லாது ஒழிக்கும் கடமை அரசுக்கு உண்டு என்பதை தனது கடமையாக எடுத்துக்கொண்டு அந்த கிராமங்களில் மிக சிறப்பாகவும் தைரியமாகவும் தேர்தலை நடத்திக் காட்டினார்.




மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த திரு. டி. ரங்கசாமி என்பவர் தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், சுற்றுலாத் துறைச் செயலாளர், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் ஆகியோரை இவ்வழக்கின் பிரதிவாதிகளாகச் சேர்த்திருந்தார் ரங்கசாமி. இவ்விளையாட்டில் ஈடுபடும் இளைஞர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதோடு காளைகளும் துன்புறுத்தப்படும் என்பதால் இவ்விளையாட்டு தடைசெய்யப்பட வேண்டும் என்பதே அவரது வாதம்.  அவரது மனுவை ஏற்று நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது.



இவ்விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனக் கோரி, உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கின் மூன்றாம் பிரதிவாதியான மதுரை மாவட்டத்தின் ஆட்சித் தலைவரான த. உதயச்சந்திரன் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக பிரச்சினை வராமல் போனது. 



அந்த மனுவில் "இது போன்ற வீர விளையாட்டுகள் சமூக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்தது. பண்பாட்டு ரீதியில் அவசியமானது.'



"இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டானது இந்து மதத்தோடு மட்டும் தொடர்புடையதாகக் கருதக்கூடியது அல்ல என்பதைத் தங்களுக்கு முன்வைக்கிறேன். கிறிஸ்தவர்களும் முகமதியர்களும் தங்களுடைய வழிபாட்டுத் தலங்களிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்தி வருவதால் ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் விளையாட்டாகவே இதனைக் கண்டுணரத் தங்களை வேண்டுகிறேன்.


உடனே தடை நீக்கப்பட்டது. முதல் முறையாக ஜல்லிக் கட்டில் மாடு களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் மதுரை ஆட்சியர் பணியிலிருந்து உதய சந்திரன் மாற்றப்பட்டபோது பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாப்பார்பட்டி, கீரிப்பட்டி ஊராட்சி தலைவர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். அடுத்து பெண்கள் மேம்பாடு துறையின் மேலாண் இயக்குநர். இவரது முயற்சியில் தமிழகமெங்கும் 5000 பெண்கள் சுய உதவிக் குழுக்கள் உருவாகின. பின்னர் அதுவே பல மடங்கு விரிவாக்கம் பெற்றது.



பின்பு அதிமுக அரசால் டி.என்.பி.எஸ்.சி செயலாளராக பணியிலமர்த்தப்பட்டார். தேர்வாணையத்தில் அவர் செய்த மாற்றம் இந்தியாவில் எந்த ஒரு மாநில தேர்வாணையமும் செய்யாதது. ஆன்லைன் விண்ணப்பம், நிரந்தர பதிவு எண், உடனடி விடைகள் வெளியீடு, ஆண்டு திட்டம், போன்ற மிகச் சிறந்த நடைமுறைகளை கொண்டுவந்தார். தரமான வினாத்தாள்கள், தமிழுக்கு முன்னுரிமை என சீரிய பணிகள் தொடர்ந்தன. இவை யெல்லாம் உங்களுக்கே தெரியும். இந்த பணியில் தேர்வாணைய தலைவரும் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார்.



ஆசிரியர் தேர்வு வாரியம், மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் போன்றவற்றில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. இவற்றின் மீது பல வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் உள்ளன. இவற்றிலிருந்து மாறுபட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மட்டுமே நேர்மையாக தேர்வுகளை நடத்திவருகின்றன. அதற்கு மிக முக்கிய காரணம் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., நட்ராஜ் ஐ.பி.எஸ். இந்த நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுபாட்டு அதிகாரியாக கரூர் மாவட்ட முன்னாள் ஆட்சியர் வெ.ஷோபனா ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டார்.


 இவர் சென்னையை சேர்ந்தவர். 2003-இல் ஐ.ஏ.எஸ் பணியில் சேர்ந்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் பணியில் இருந்தபோது அரசியல்வாதி போல செயல்பட்டு வந்ததாக பத்திரிக்கைகளால் விமர்சிக்கப்பட்டவர். சிறிதுகாலம் அவருக்கு பதவி தரப்படாமல் இருந்தது. தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்து நட்ராஜ் ஐ.பி.எஸ், தேர்வாணைய தலைவர் பதவியிலிருந்து ஓய்வுப் பெற இன்னும் சரியாக ஐந்து மாதங்களே உள்ளன.



 தேர்வாணையத்தின் இத்தகைய சூழலில், உதயசந்திரன் பதவி மாற்றம் செய்யப்பட்டது  (இப்போது மீண்டும் இன்ட்கோசர்வ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அரசு நியமித்துள்ளது) பல கேள்விகள் நமக்கு எழுகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் சமச்சீர்கல்வி முறை கொண்டுவந்தது மட்டும் எப்படி சாதனையோ அப்படி அதிமுக ஆட்சியில் டி.என்.பி.எஸ்.சி சீர்திருத்தம் ஒரு சாதனையே.



ஆனால் ஊழலில் மூழ்கியிருந்த தேர்வாணையத்தை சுத்தப்படுத்தி இந்திய அளவில் சிறந்த அரசு பணியாளர் தேர்வாணையமாக மாற்றம் செய்து காட்டியவரை ஜெயலலிதா அரசு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களுக்காக மாற்றியுள்ளது. வி.ஏ.ஓ தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது, குரூப் 2 தேர்வுகள் முடிந்த நேரம், குரூப் 1 தேர்வு அறிவிக்கப்பட உள்ளது. ஆன்லைன் தேர்வுமுறை டெண்டர் அறிவிப்புடன் உள்ளது. இந்த பரபரப்பான நேரத்தில் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். மாற்றம் செய்யப் பட்டது மீண்டும் தேர்வாணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குரூப்-1 தேர்வு நியாயமாக நடக்குமா? தேர்வாணையம் ஊழலின்றி இயங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.



 மேலும் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ள [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். 
நன்றி - நக்கீரன் 

அன்னலட்சுமி .தனலட்சுமி , வர லட்சுமி

இனிய காலை வணக்கம் நண்பர்களே...
1.பஸ்ல ஒரு டீன் ஏஜ் ஸ்கூல் பொண்ணுஅழுதுட்டு இருக்கு.ஏன்னு 7 தடவை கேட்டபின் " விஜய் சாரை வில்லன் குத்திட்டான" குது.ஹூம்்



-----------------



2.  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது - மு.க.அழகிரி.# நீங்க வாழ்க்கை கொடுக்கப்போறீங்களா?


------------------------


3. லிங்குசாமி ஒரு பெரிய ஃப்ராட் - பிரபு சாலமன# ஈமு கோழி வித்தாரா?்


-------------------------


4. மூடு வர வைக்க என் கிட்டே ஒரு மந்திரம் இருக்கு, ஆனா அதை நான் சொல்ல மாட்டேன் . ம் ம் ஒரே மூடு மந்திரமா இருக்கே உன் பேச்சு



----------------------


5.  தி.மு.க வை அழிக்க அவதாரம் எடுத்துள்ளோம்_ராமதாஸ் #நாசர் எடுத்த அவதாரம்` , கமல் எடுத்த தசாவதாரமே எடுபடலை




-----------------------





6. ஜட்ஜ் - கருணை மனு பார்த்தேன்.துப்பாக்கி எடுத்தவன் துப்பாக்கியாலதான் சாகனும்.



கசாப் - அய்யய்யோ.வேணாம்ங்க.என்னை தூக்குலயே போட்டுடுங்க்


----------------------


7. நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்கும் மணமான மங்கைகளே! நெற்றிக்குங்குமத்துக்கு நேர் கோட்டில் நெற்றிவகிட்டுக்குங்குமம் வைக்க




--------------------



8. அன்றைய தின மகிழ்ச்சி ,கோபம் ,மனத்தாங்கல்கள் பொறுத்து மனைவியின் சமையல் ருசி மாறுபடும் தன்மையுள்ளது.அம்மாவின் சமையல் ருசி எப்போதும் ஒன்றே




--------------------------


9. பெண்களை கிண்டல் செய்தால் டிரை விங் லைசன்ஸ் ரத்து - ம பி சி எம் # பிகரை ஓட்டுனா பைக் ஓட்ட முடியாதா? அவ்




---------------------------


10. வீட்டில் மனைவியின் முகம் பூரிப்பாக இருந்தால் அன்றைய டிபன் பூரி ,கடுப்பா இருந்தா உப்புமா , சோம்பலா இருந்தா இட்லி



---------------------


11. ஒரு நடிகை சாதா காவடி எடுத்தாலே பால் காவடி எடுத்ததாத்தான் செய்தி வரும்.அவர் யார்? # அமலா பால் காவடி எடுத்தார்




-----------------------------


12. பரம்பரை பரம்பரையா பொண்ணுங்க கிட்டே வழியறவங்களை இந்திய வம்சா வழியல்னு சொல்லலாமா?:-)்



---------------------------


13. விஜய் ரசிகையான கனடா டாக்டர் கண்ணம்மா  இன்னும் தன் பேரை GUNணம்மான்னு ஏன் மாத்தலை ? :-))




-------------------



14. வாக்கிங் போகும் பெண்கள் பனியை சாக்காக வைத்து ஸ்வெட்டர் அணிவதை வன்மையாக கண்டிக்கிறேன் # ஒண்ணுமே தெரியல உலகத்துல.என்னமோ நடக்குது



----------------------------



15. ஏற்றி விட்ட ஏணிகளை மறக்காமல் இருப்பது எவ்ளவ் முக்கியமோ அதை விட முக்கியம் முடிந்தவரை பலருக்கு நாம் ஏணியாய் இருப்பது



---------------------



16. 2ஜி ஏலத்தில் மத்திய அரசு மிகப் பெரிய நாடகம் நடத்தியுள்ளது: -ஜெ # இயல் , இசை, நாடகம் தமிழர் வாழ்வில் கலந்தது - கலைஞர்



-------------------------


17. தொடை ஏழு வள்ளல்கள் 1. ரம்பா 2. லட்சுமிராய் 3. ரங்கீலா ஊர்மிளா 4. அஸ்கா அனுஷ்கா 5. காத்ரீனா கைஃப் 6. கரீனாகபூர் 7. ஜெனிலியா




----------------------------



18.  சல்மான் கான் எனக்கு அண்ணன் மாதிரி - காத்ரினா கைப் # ஆனா யாரும் எனக்கு தங்கச்சி மாதிரி இல்லை - சல்மான் கான் 



-------------------------


19. ஹிந்தி பூத் பேய்ப்பட ரீமேக்கில் அமலா பால் நடிச்சா பேப்பர் நியூஸ் - அமலா பால் பூத் 




----------------------


20. சாரி.சாதா ரவா உப்புமாதான் செஞ்சேன்.கோதுமை ரவா உப்புமா தான் வேணும்னா கூலிங் கிளாஸ் போட்டு சாப்பிடுங்க 




--------------------------


21. நான் உன் இன்மையை வெறுக்கிறேன், நீ என் அண்மையை # விளங்குன மாதிரிதான் போ 



--------------------------


22. நனைத்தது யாரோ நான் தானே.துவைப்பது தினமும் நான் தானே.நீ என்ன வெட்டி முறித்தாய்? என் உரிமையை தட்டிப்பறித்தாய்! 



-----------------------


23. பக்தா! அன்னலட்சுமி .தனலட்சுமி இரண்டில் எது உன் இல்லத்தில் குடி கொள்ள விருப்பம். வர லட்சுமி தவிர யாரா இருந்தாலும் சரி சாமி 






-----------------------



24. சிம்பு அமலாபால் ஜோடி ஒரு படத்துல நடிச்சா அதுக்கு வைக்கப்படும் டைட்டில் சீம்பால்? 




----------------------


25. அஜித் - பைலட் லைசன்ஸ் வெச்சிருக்கும் ஒரே தமிழ் ஹீரோ நான்தான். விஜய் - நானும் அப்ளை பண்ணி இருக்கேன்.வந்துடும்.ஐ ஆம் வெயிட்டிங் :-) 




---------------------------



26. அந்த' எண்ணத்துடன் நெருங்கிய ரசிகருக்கு நயன்தாரா பளார்! # செருப்பால அடிச்சிருக்கனும்.நயன் கை என் கன்னத்துல பட்டுதுன்னு fb status போடுவான் 




----------------------


27. 21 12 2012 உலகம் அழியும் - செய்தி # ஹூம் ,நம்ம ராசி அப்படி.படம் ஹிட் ஆகியும் 100 வது நாள் விழா கொண்டாட முடியாதா?-விஜய் 





-------------------


 28. தோசைக்கு தொட்டுக்க சட்னி சாம்பார் வைக்க சோம்பல்பட்டா தயிரில் ஊறுகாய் போட்டு கலந்து அடிக்கவும் # டிப்ஸ்




-------------------


29. மிஸ் !தோசை போட்டோ ஷேப்பா சூப்பரா இருக்கே? நீங்க சுட்டதா ?



 ஹா ஹா நோ நோ கூகுள் இமேஜ் ல சுட்டது ;-))



--------------------


30. மிஸ் என்ன தோசை மஞ்ச கலர்'ல இருக்கு ??



மங்களகரமா இருக்கட்டும்னு சோடாமாவுக்குப்பதிலா மஞ்சளை அள்ளிக்கொட்டிட்டேன்



---------------------



31 டியர்.நீயா?நானா? ல நீங்க யார் பக்கம் ?



உன் பக்கம் தான் செல்லம் ( யார் கிட்டே? நாங்க எல்லாம் அப்பவே அப்படி )




---------------------------



32. எங்கம்மா சொல்றாங்க - இந்தப்புள்ளைங்க வாய்லயே சூடு வைக்கனும் # நீயா நானா




----------------



33. டாடி எனக்கு பாக்கெட் மணி ரூ 50,000 வேணும் .



பொழைக்கத்தெரியாத பய புள்ளே.உன் பாய் பிரண்ட்ஸ்ங்க எதுக்கு இருக்கானுங்க?




-------------------




34. வாய் உள்ள பிள்ளை பிழைச்சிக்கும்.ஜெயிச்சுடும் # முத்த நாயகன் கமல் பாறைகள்




------------------


35. சேலையை அயர்ன் பண்றது கூட கொஞ்சம் கஷ்டப்பட்டு பண்ணிடலாம், இந்த ஜாக்கெட்டெல்லாம் அயர்ன் பண்றது ரொம்ப கஷ்டப்பமப்பா




--------------------


36. நைட் டைம்ல பொண்டாட்டி “ என்னங்க” அப்டின்னு இழுத்தா ஆபத்து, நீங்க நைசா தூங்கிட்ட மாதிரி நடிச்சுட்டா எந்த செலவும் இருக்காது ;-)




--------------------


37. என்னடி? உன் லவ்வர் பரதேசி மாதிரி இருக்கான். பொறுத்திருந்து பார்டி, என்ன ஓட்டம் ஓடப்போறான்னு



--------------------


38. ராம் ஜெத்மலானி பாஜக-வில் இருந்து தற்காலிக நீக்கம்! # டெம்ப்ரவரியா துரத்திட்டாங்களா? அய்யோ பாவம்




------------------


39. புருஷன் - பொண்டாட்டி 2 பேரும் சேர்ந்து நீயா? நானா? பார்க்கலாம், தப்பில்லை. ஆனா அவங்களுக்குள்ள நீயா? நானா? பார்க்கக்கூடாது




------------------


40. பஸ்ஸில் ஒரு மிஸ்ஸிடம் - உங்களைப்பார்த்ததும் காதலில் விழுந்துட்டேன் .



 டேய் கஸ்மாலம், அதுக்கு ஏண்டா மேல வந்து விழறே? தள்ளி நில்டா பேமானி



-------------


41. உங்க பட பட்ஜெட் 60 கோடியா? எப்டி?



லாரி லாரியா ஆடியன்ஸ் கூட்டிட்டு வர வேணாம்?



-------------


42. தமிழகத்தில் நக்சலைட்ஸ்,மாவோயிஸ்டுகள் இல்லை-ஜெ# நக்ச”லைட்ஸ்” ஒழிக்கத்தான் கரண்ட் கட் பண்ணீங்களா? மேடம் அடடே!





------------------------


43. சத்ரியனாய் இரு... சாணக்யனாய் இரு... வீரனாய் இரு உனக்கு திருமணம் ஆகும் வரை




-----------------


44. கடவுளே!கருவூலம் ( மூலஸ்தானம் )எல்லாசன்னதிலயும் ஏன் இருட்டா இருக்கு?


 பக்தா! மின்வெட்டால் தமிழர்கள் கஷ்டப்படுவதை உலகத்துக்கு உணர்த்த




---------------


 45. மிஸ்டர் க்ளீன் அப்டினு உங்களுக்கு எப்படி பேரு வந்தது? ஆஃபீஸ்ல கறை படியாத கையா?



 ம்ஹூம் வீட்ல விளக்குமாறு பிடிச்ச கை


--------------------

Wednesday, November 28, 2012

புன்னகை - உலக இலக்கியம் - சிறுகதை - தமிழில் சுரா






         இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டுமென்று அவன் தீர்மானித்தான். "ஒஃபீலியாவின் நிலைமை மிகவும் மோசம்' என்று மட்டுமே தந்திச் செய்தியில் இருந்தது.

அந்தச் சூழ்நிலையில் புகைவண்டியின் அறைக்குள் படுத்து உறங்குவது என்பது நல்ல ஒரு விஷயமாகஇருக்காது என்று அவன் நினைத்தான். அதனால் மிகவும் களைப்பாக இருந்தா லும், இரவில் ஃப்ரான்ஸைச் சுற்றி வந்து கொண்டிருக்க, அவன் அந்த முதல் வகுப்பு பெட்டியில் வெறுமனே உட்கார்ந்தி ருந்தான்.

ஒஃபீலியாவின் அருகில்தான் அவன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவளுக்கு அவன் தேவைப்படவில்லை. அதனால் இங்கு இந்த புகைவண்டியின் அறைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிட்டது.

மனதிற்குள் ஒரு கடுமையான சுமையை அவன் உணர்ந்தான். ஒரு "ட்யூம'ரைப் போல ஒன்று... அமைதியாக இருப்பதுதான் அதற்குச் சரியான மருந்து. அப்போது அவன் கௌரவமாகவே வாழ்க்கையைப் பார்த்துக்கொண்டிருந்தான். மிகவும் அழகாக சவரம் செய்யப்பட்ட அந்த முகத்தில் அருமையான, அடர்த்தியான புருவங்கள் இருந்திருந் தால், சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் சாயல் தெரிந்திருக்கும்.

இரவு வேளையில் அந்த புகைவண்டி நரகத்தைப் போல இருந்தது. எதுவுமே இயல்பாக இல்லை. மிகவும் அருகிலிருந்த இரண்டு ஆங்கிலேயர்கள் எப்போதோ இறந்துவிட்டிருந்தனர். ஒரு வேளை- அவனுக்கு முன்பே கூட அது நடந்திருக்கலாம்.

அவன் தனக்குள் தானே மரணமடைந்து கொண்டிருந் தான் அல்லவா?

முன்னாலிருந்த மலைகளின் பகுதிகளுக்கு நடுவில் வெண்மை நிறத்தில் புலர்காலைப் பொழுது முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அவனுடைய மனதில் ஒரு கவிதையின் வரிகள் தோன்றின.

"கவலையின் சாயலுடன் புலர்காலைப் பொழுது வர முதல் சாரல் மழைக் குளிர்!

அவளின் சாந்த கண்கள் அடைகின்றன...

அதில் அவள் காணும் புலர்காலைப் பொழுது வேறு!'

அவன் அனுபவித்த புறக்கணிப்பின் எந்தவொரு அடையாளமும் வெளியே தெரியவில்லை.

அவனுக்குள் முனிவரின் சஞ்சலமற்ற துன்பம் தெளிவாகத் தெரிந்தது.

அவன் இத்தாலியில் இருந்தான். அவனுக்கு அந்த நாட்டின்மீது ஈடுபாடு எதுவும் உண்டானதேயில்லை. ஒரு வகையான கவித்துவ உணர்வுடன் அவன் கடல், ஆலிவ் மரங்கள் ஆகியவற்றைப் பார்த்தான். தான் வேறு உணர்ச்சிகளுக்கு அடிமையாகி விடுவாமோ என்று அவன் நினைத்தான்.

ஒஃபீலியா பிரார்த்தனைக்காக தங்கிய நீல சகோதரிகளின் இல்லத்தை அவன் அடைந்தபோது, மீண்டும் இரவாகிவிட்டிருந்தது. அவன் மதர் சுப்பீரியருக்கு முன்னால் அழைத்துச் செல்லப்பட் டான். அவனுடைய நாசியையே பார்த்தவாறு நடந்து வந்த அந்த இல்லத்தின் தலைவி எதுவும் பேசாமல் அமைதியாக வணங்கினாள். தொடர்ந்து அவள்  ஃப்ரெஞ்ச் மொழியில் கூறினாள்:

""கூறுவதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், இன்று மதியம் அவள் மரணத்தைத் தழுவி விட்டாள்.''

அவன் அதிர்ச்சியடைந்தாலும், எந்தவித உணர்ச்சி யையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவன் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த இல்லத்தின் தலைவி தன்னுடைய வெண்மை யான, மென்மையான கரத்தை அவனுடைய கையில் அழுத்தியவாறு அவன் முகத்தையே உற்றுப் பார்த்தாள்.

""தைரியமாக இருக்க வேண்டும்.'' அந்தப் பெண் சொன்னாள்.

அவன் பின்னோக்கி நகர்ந்து நின்றான். ஒரு பெண் தன் அருகில் வந்து நிற்கும்போது, அவன் பயப் பட்டான். நல்ல ஆடைகளை அணிந்து நின்றிருந்த அந்தப் பெண்ணிடம் அளவற்ற பெண்மைத்தனம் வெளிப்பட்டது.

""சரி... நான் அவளைச் சற்று பார்க்கலாமா?''

அவன் மெதுவான குரலில் ஆங்கிலத்தில் கேட்டான்.

அந்த இல்லத்தின் தலைவி மணியை அடித்தாள். ஒரு இளம் பெண் துறவி அங்கு வந்து நின்றாள்.
அவளுடைய மூடுபனியைப் போன்ற நிர்மலமான கண்களில் குறும்புத்தனமான ஏதோ ஒன்று மறைந் திருப்பதைப்போல தோன்றியது. அவள் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டாள். அந்த இல்லத்தின் தலைவியின் வார்த்தைகளைக் கேட்டு, அவள் வணங்கினாள். இறுதி ஆறுதல் என்பதைப் போல அவன் அவளுக்கு நேராகத் தன் கையை நீட்டினான். அந்த இளம் கன்யாஸத்ரீ வெட்கத்துடன் தன்னுடைய இளம் தளிரைப் போன்ற கையை அவனுடைய கையில் வைத்தாள்- தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு கிளியைப்போல.

அளந்து பார்க்க முடியாத அந்த அமைதியின் ஆழத்திலும் அவன் சிந்தித்தான்.

"என்ன மென்மையான கை!'

குளிர்ச்சியான இடைவெளி வழியாக நடந்து அவள் ஒரு கதவைத் தட்டினாள். நடந்தபோது அவளுடைய பாவாடையின் அசையும் ஓசைகளை மட்டுமே அவன் கேட்டுக் கொண்டிருந்தான்.

கதவ திறக்கப்பட்டது. உயரமாக இருந்த அந்த அறையில் போடப்பட்டிருந்த ஒரு கட்டிலைச் சுற்றி ஏராளமான மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டி ருந்தன. அவன் மிகவும் அமைதியாக நின்றிருந்தான். கறுத்த, பழமையான முகத்தைக் கொண்ட ஒரு கன்யாஸ்த்ரீ மெழுகுவர்த்திக்கு அருகில் குனிந்து உட்கார்ந்திருந்தாள். அந்த கன்யாஸ்த்ரீ அழகான தோற்றத்தைக் கொண்டிருந்தாள். மார்பில் இணைத்து வைத்திருந்த வெண்மையான கைகளுக்கு மத்தியில் ஜெபமாலை தொங்கிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவளுக்குப் பின்னால் இருந்த கதவின் வழியாக அந்த இல்லத்தின் தலைவி உள்ளே வந்தாள். இப்போது- மூன்று கன்யாஸ்த்ரீகளுக்கு நடுவில் அவன். மதர் சுப்பீரியர் கவலையுடன் பிணத்தை மூடியிருந்த துணியை உயர்த்தி, முகத்தைப் பார்க்க அனுமதித்தாள்.

மரணமடைந்து, எந்தவித அசைவுமில்லாமல் கிடந்த தன் மனைவியை அவன் பார்த்தான். தன்னுடைய மனதிற்குள் ஒரு சிரிப்பு வெடிப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. அவனுடைய முகத்தில் ஒரு வினோதமான புன்னகை வெளிப்பட்டது.

மூன்று கன்யாஸ்த்ரீகள், மெழுகுவர்த்தி வெளிச் சத்தில் ஒரு கிறிஸ்துமஸ் பூ மரத்தைப்போல தோன்றி னார்கள். அவனுடைய மென்மையான, பரிதாபமான உணர்ச்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார் கள். அந்த ஆறு கண்களும் பதைபதைப்புடன் இருந்தன. அந்த பதைபதைப்பு, பின்னர் கவலைக்கு இடம் தந்தது. அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், அந்த மூன்று கன்யாஸ்த்ரீகளையும் பார்த்தபோது, அவனுடைய முகத்தில் ஒரு புன்னகை உண்டானது. தொடர்ந்து அது நிரந்தரமானதாக ஆனது. அந்த மூன்று பெண்களின் முகங்களுக்கும் அந்த புன்னகை பரிமாறப்பட்டது- மூன்று மலர்கள் ஆழமாக விரிவதைப் போல. அந்த வெளிறிய இளம் பெண் துறவியிடம் புன்னகை, வேதனை நிறைந்த தாகவும் குறும்புத்தனத்தின் மென்மை கலந்ததாகவும் வெளிப்பட்டது. கறுத்த கன்யாஸ்த்ரீயின் முகத்தில் பக்தி நிறைந்திருந்தது. பக்குவப்பட்ட ஒரு பெண்ணின் நெற்றியாக அவளுடைய நெற்றி இருந்தது.

மதர் சுப்பீரியரின் இயல்பு குணம் அவனுடைய குணத்தைப் போலவே இருந்தது. அவள் சற்று புன்னகைக்க வலிய முயற்சித்தான். இளம் பெண் துறவிக்கு திடீரென்று அழ வேண்டும்போல தோன்றியது. இல்லத்தின் தலைவி அவளுடைய தோளில் தன் கையை வைத்து ஆறுதல் சொன்னாள். கறுத்த பெண் துறவியோ  மன சஞ்சலமடைந்து ஜெபமணியைப் பிடித்துக் கொண்டும், மறைமுகப் புன்னகையை நிறுத்தாமலும் இருந்தாள்.

அவன் தன் மனைவியின் பிணத்தையே பார்த்தான். மரணமடைந்த தன் மனைவி தன்னைப் பார்க்கிறாளா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதைப்போல. அவனுக்கு பயமும் இருந்தது.

அழகாகவும், இதயத்தைத் தொடக்கூடிய விதத்தி லும், மரணமடைந்த தன்னுடைய சிறிய நாசியை வெளியே நீட்டிக்கொண்டு, ஒரு குழந்தையின் பார்வையுடன் அவள் படுத்திருந்தாள். அவனுடைய புன்னகை மறைந்தது. அவன் ஒரு சாட்சியைப் போல பார்த்தான். அவன் அழவில்லை. அர்த்தமே இல்லாமல் வெறித்துப் பார்த்தான். அவ்வளவுதான்... தனக்காக இப்படியொரு தியாகம் உண்டாகும் என்று தனக்கு முன்கூட்டியே தெரியும் என்று அவன்  நினைத்தான்.

அவள் அந்த அளவிற்கு சோதனை முயற்சிகள் செய்யக் கூடியவளாகவும், அறிவாளியாகவும், குழந்தையைப் போன்றவளாகவும்,  கறாரான குணம் கொண்டவளாகவும் இருந்தாள். அவளுடைய மரணமும் அதே மாதிரி ஆகிவிட்டது. திடீரென்று அவனுக்கு மிகப் பெரிய வெற்றிடம் உண்டாகி விட்டதைப்போல இருந்தது.

அவர்களுக்கு திருமணம் நடைபெற்று பத்து வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. அவன் எந்தச் சமயத்திலும் முழுமையான சந்தோஷம் நிறைந்தவனாக இருந்ததில்லை- எந்தவொரு காரணத்தைக் கொண்டும். அவனுடைய மனைவி எப்போதும் தன் விருப்பப்படி செயல்படக் கூடியவளாக இருந்தாள். ஒஃபீலியா அவன்மீது அன்பு வைத்திருந்தாள். கண்டிப்பு நிறைந்தவளாக ஆனபோது, அவள் அவனை ஒதுக்கிவிட்டாள். அவள் கோப குணம் கொண்டவளாகவும் அலட்சிய குணம் கொண்டவளாக வும் மாறினாள். ஆறு முறை அவள் அவனைத் தேடி திரும்பி வந்தாள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குழந்தைகள் வேண்டும் என்பது அவனுடைய விருப்பமாக இருந்தது. குழந்தைகள் இல்லாமல் போனதற்காக அவன் கவலைப்பட்டான்.

இனி அவள் அவனைத் தேடி எந்தச் சமயத்திலும் திரும்பி வரப்போவதில்லை. இந்த முறை அவள் போனது- இறுதியான போக்கு. ஒரேயடியாகப் போய்விட்டாள்.

அவள் யார்?

அவன் அந்த மூன்று பெண்களின்மீதும் தன்னுடைய பார்வையைத் திருப்பினான். அவன் சிரித்தான்.

அவன் வெளியே வர முயற்சித்தான். அந்தப் புன்னகை தன்னுடைய உதட்டிலிருந்து மறையவில்லை என்பதை அப்போதும் அவன் கவனித்தான்.

""பாவம்...'' இரக்கத்துடன் அந்த இல்லத்தின் தலைவி சொன்னாள்.

""பாவம் ஒஃபீலியா... அவளுக்கு இவை அனைத்தும் தெரியும்.''

அவர்கள் மூவரும் மரணமடைந்த பெண்ணுக்காக பிரார்த்தனை செய்தார்கள். மெழுகுவர்த்திகளை கீழே அழுத்தி அணைத்தார்கள். கறுத்த பெண் துறவி தன்னு டைய புனித நூலுடன் மீண்டும் அமர்ந்தாள். மற்ற இரண்டு பெண்களும் இடைவெளியில் நடந்தார்கள். அன்னப் பறவைகள்நதியில் நீந்துவதைப் போல அவர்கள் அமைதியாக நடந்து சென்றார்கள். தனியாக முன்னால் நடந்து சென்று கொண்டிருக்கும் அந்த மனிதனை அவர்கள் பார்த்தார்கள். அவர்கள் வேகமாக நடந்தார்கள்.

""மன்னித்து விடுங்கள், மதிப்பிற்குரிய பெண்களே! நான் என்னுடைய தொப்பியை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்.'' அவன் சொன்னான்.

எதையோ தேடுவதைப்போல அவன் பதைபதைப்பு டன் தன் கைகளை முன்னால் நீட்டி அசைத்தான். இப்போது அவனுடைய முகத்தில் புன்னகை இல்லை. கடுமையான விரக்தி மட்டும்...