Monday, October 15, 2012

அம்மா! உன் ஆணைப்படி மின் வெட்டு, எல்லாம் கண் கட்டு


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmnrqnQ0-s4poaYUN9lBz9lFYJV6W4TcTZOYbicJQkXBW5H7hF0OjKETaR-56vlaexavETegGMnoz6n3UIjZtlOFQk_Wp3CR6GIn9DGLe9KjeKgscWAsC5OsKchAVwRd1PK8yW0xkJFjzV/s1600/426897_320639244652607_1940552083_n.jpgதமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்

 

கோவை. சா.காந்தி,
9
அக்டோபர் 2012
தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு
தொடர்புக்கு: 9443003111

 


தமிழகத்தின்
மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.

 

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.

 

மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.

 

1.தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக. இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்

 


இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.

 

2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது.

 


வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும்.

 


வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும்.

 

இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.

 


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.

 


இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச்மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

 


ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.

 


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.

 


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.

 

ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.

 


ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.

 


இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.

 


கூடங்குளத்தில் உள்ள வி.வி..ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும்.

 

எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.

 

இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும்.

 

இதில், கம்பி இழப்பான 22% கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது. எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.

 

…………..கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும்.

மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினைமின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.

 


மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.

 


2012
மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.

 


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.

 

பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:

 

சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 

மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

 


• 31
பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

 


பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

 


உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

 


திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள்
ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.

 


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.

 

இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது.

 


அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை.இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

 

பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

 

இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.

 

அன்புடன்

கோவை. சா.காந்தி,

9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111
http://www.vikatan.com/news/images/minvettu_toon.jpg




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuWc200fSRKq_y3ZZt3HVhAMN1oSe6cmuml4ijhFC3HkyHj2GzgUnbHj6PIFc4AlfHYOVYsv2HTIVkiQ7tUKOyy_O1jb1hO3QS-YTI26vZ6mt66TNRz5mA0KnU5171HPbWwlxj9yN28H0W/s400/power_cut_Secrets.jpg
http://img.dinamalar.com/data/large/ECART_1303669261.jpg





http://dc150.4shared.com/doc/5Zb_imOV/preview_html_m3e149585.gif

தேவதைமாதிரி பக்கா பிகரா இருந்தா என்ன பண்ணனும்?

டுடே டைம் பாஸ் @ டி வி
1. நடிக்க வந்திருக்கா விட்டால், டாக்ஸி டிரைவர் ஆகியிருந்திருப்பேன்: அமிதாப் . # அடடா, நீங்க ஓட்டறது போய் நாங்க ஓட்ட வேண்டியது ஆகிடுச்சு 





--------------------



2. பொதுவாக பெண் சொல்வது - என்னை மத்த பொண்ணுங்க மாதிரி நினைக்காதீங்க 



---------------------


3. முதல் பாவம் அபிலாஷாவின் முதல் இரவில் அவர் கணவர் -


 ஹூம், டோட்டல் தமிழ் நாடே தியேட்டர்ல பார்த்த படத்தை நான் ஹோம் தியேட்டர்ல பார்க்கனுமா? 



-----------------------


4. பேஷண்ட்டை பார்க்க ஹாஸ்பிடல் போகும்போதுதான் சேரநன்னாட்டிளம்பெண்கள்   பலர் நர்ஸாக இருப்பது தெரிகிறது 




--------------------


5.  கற்பழிப்பை தடுக்க வயதுக்குவந்த பெண்களுக்கு சீக்கிரம் திருமணம் நடத்தவேண்டும்-சவுதாலா# ஓஹோ, மேரேஜ் ஆன பெண்களை ரேப் பண்ண மாட்டாங்களா?



-----------------------




6. பெண்ணின் பலம் இளிச்சவாய புருஷன், பலவீனம் விபரமான மாமியார்



----------------------


7. விஜய் பேரு,துப்பாக்கி டைட்டில் ,ட்ரெண்ட்ல வந்தாச்சு.இன்னும் கரண்ட் தான் வர்ல:-)



--------------------------

8. குத்தடி குத்தடி ஷைலக்கா குனிஞ்சு குத்தடி ஷைலக்கா பந்தலிலே பாவக்கா தொங்குதடி லோலாக்கா இப்பவே பறிச்சுக்கலாமா வீட்டுக்காரன் பார்க்கறாண்டி போன பின்னே பறிச்சுக்கலாம் # நாட்டுப்புறப்பாட்டு




-----------------------

9.  லேடி வக்கீலிடம் வாய்தா கேட்டேன்.கொடுத்தார்.பெற்றேன்.இனித்தது # வாய் தா



--------------------


10.  காதலுக்கும் கள்ளக்காதலுக்கும் உள்ள வித்தியாசம், துப்பாக்கிக்கும் கள்ளத்துப்பாக்கிக்கும் உள்ள  வித்தியாசத்தைப்போன்றது.




--------------------





11. பஸ்ஸில் முன்பக்க முதல் சீட்டில் அமர்ந்து கொண்டால் க்ளோஸப்பில் பல தர்ம தரிசனம் காணலாம்# சைட்டாலஜி்



---------------



12. விஜய் நடிச்ச பகவதி ,கீதை யை பார்த்திருந்தா பகவத் கீதை எழுத ஆள் இருந்திருக்காது.சேகர் செத்திருப்பான்




---------------------


13. என்னை விட்டு ஓடிப்போக முடியுமா? நான் நாயைப்போல பின்னாலயே ஓடி வருவேன் தெரியுமா?




---------------------


14. இன்று மாலை தான் ட்விட்டர விட்டு செல்ல வேண்டும். ஒரு வாரமாக வீட்டுக்கு சரியாக நேரம் செலவிட முடியவில்லை!!




--------------------


15. மக்கள் குறை கேட்கிறார் - டி.ராஜேந்தர்.# உங்க முன்னாள் மருமக இந்நாள் மருமகள் ஆக வாய்ப்பு உண்டா?



--------------------





16. அவள் ஒரு மே நகை என் அபிமான நயன் தார கை சிவரஞ்சிதா சிவரஞ்சிதா




--------------------------


17. வில்லி உன் ஆணைப்படி சமையல் செய்தேன்.நான் பொரியல் செய்தேன்.ஒரு காரம் அது குறையாமலே புது சுவைதான் நீங்காமலே ஏழு பிறப்பும் நீயே ஓ பி அடிக்க




--------------------------


18. மனம் விரும்புதே மச்சினி உனை .உறங்காமலே ,கிறங்காமலே குரங்காகுதே மனம்



---------------------


19. டியர்.நான் தான் உங்க முதல் காதலியா ?


ஆமா ,2012 ல



--------------------


20. மெட்ராஸ் ஐ தாக்கி இருக்குன்னு உன் சம்சாரத்திடம் சொன்னால் பதறாமல் ", என்னை விட்டுட்டு எப்போ மெட்ராஸ் போனீங்க என்பார் :-)




------------------------





21. அன்பே.சனியின் ஆதிக்கம் ஏழரை ஆண்டுகள் தான்.சள்ளை உன் ஆதிக்கம் ஏழேழு ஜென்மம் வரைக்கும் போல



------------------------


22. புருஷன் பேச்சை கேட்கறாங்க்ளோ இல்லையோ இந்த பொண்டாட்டிங்க புருஷனின் செல்போன் பேச்சை ஒட்டு கேட்கறாங்க



--------------------


23. நாடு முழுவதும் சட்டரீதியாக சுமார் 10,000 ஆயிரம் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்பு #,அதுல பாதி சம்சாரங்க புருஷன் பேச்ச ஒட்டு கேட்டதா இருக்கும்



---------------------------


24. நான் உன்னை கடைக்கண்ணால் பார்த்தேன்.கடன் காரி நீ நகைக்கடையை பார்த்தாய்


------------------


25. அன்பே திமுக ஆட்சி போல் உங்கப்பா.அதிமுக ஆட்சி போல் உங்கம்மா.2ம் விளங்கலை :-)


---------------------

 


26. அன்பே நாம் இருவரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர் போல் ஒன்றாகவே என்றும் இருப்போமா ?



டேய் லூசு.நீ என் தம்பி முறை ஆகிடுவே




-------------------


27. இந்தக்காலத்துல பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்குன்னா

1 செல்போன்ல லவ்வருக்கு sms


2,ட்வீட்ஸ் போடுதுனு அர்த்தம்.




--------------------

28. மாப்ளைக்கு பொண்ணை பிடிச்சிடுச்சு.எங்கே பொண்ணை நல்லதா 2 ட்வீட்ஸ் போடச்சொல்லுங்க .பார்ப்போம் #2020



--------------------


29./ செத்தாலும் வைகோவின் காலடியில் சாவேனே ஒழிய மதிமுவைவிட்டு போகமாட்டேன்:- நாஞ்சில் சம்பத் #,இப்டித்தான் ஒரு காலத்துல வைகோவும் கலைஞர்  பற்றி சொன்னாரு



-------------------

30. ஹூம்.காலைல எந்திரிச்சதும் கடலை போடனும்கறதை தமிழன்தான்யா கண்டுபிடிச்சான் :-)



--------------------





31. உங்களுக்கு ஒரு சிக்கல் வந்தா பெரும்பாலும் ஒரு பொண்ணாலதான் வந்திருக்கும்.ஏன்னா பொண்ணுங்கன்னாலே பிரச்சனை தான்


---------------------


32. எங்காவது ஏதோ ஒரு பொண்ணு தேவதைமாதிரி பக்கா பிகரா இருந்தா ஒண்ணு நீ புரபோஸ் பண்ணு அல்லது எனக்கு போன் பண்ணு :-)





-----------------------


33. பஸ்ல ரன்னிங்ல இறங்கறது ,காருலையே ரன்னிங்ல இறங்கறது கூட ஓக்கே, சிலர் காதல் ரன்னிங்க்ல இருக்கறப்பவே இறங்கிடறாங்க்ளே ?




----------------------






Friday, October 12, 2012

மாற்றான் - சினிமா விமர்சனம்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIpDjl6f40hGZPHKPdTi9s1sDrvmq8lI15fyePXbnhQZm10lKCn45lKwglrQB_yyInG4Gf0Ty3uDYqbF7Dpv63dpRWDGlQobrODRO4p0RLyLLY2rwazrDLoSalEkUIT62xF-uGiMqom-gk/s1600/Maatran+Audio+cover+Stills+(2).jpg

ஹீரோவோட அப்பா பெரிய  பேபி மில்க் பிராடக்ட் ஓனர். வெற்றிகரமா தொழில்ல முன்னேறியவர்.அவர் எப்படி மற்ற போட்டி கம்பெனிகளை எல்லாம் சர்வசாதாரணமா அடிச்சு முன்னேறுனார்ன்னு எல்லாருக்கும் ஒரு குழப்பம்.அப்போ ஒரு ஃபாரீன் லேடி பத்திரிக்கை ரிப்போர்ட்டர் என்ற போர்வையில்  அவர் கம்பெனிக்கு வந்து அவரை பேட்டி எடுக்கற சாக்குல  தொழில் ரகசியம் , அந்த பால் ஃபார்முலா ரகசியம் எல்லாம் தெரிஞ்சுக்கறா. 


இப்போ ஒரு திருப்பம். அந்த ஃபாரீன் லேடி பிரஸ் ரிப்போர்ட்டரும் இல்லை, போட்டி கம்பெனியும் இல்லை. ஃபாரீன் உளவாளி.ஹீரோவோட அப்பா தான் வில்லனே.

ஒலிம்பிக்ல  நடக்கும்  விளையாட்டு போட்டிகளில் யூ எஸ் பல தங்க பதக்கங்கள் வாங்க குறுக்கு வழியா ஊக்கமருந்து கண்டு பிடிக்கறார். சோதனைல யாராலும் கண்டு பிடிக்க முடியாத ஃபார்முலா . அந்த ஃபார்முலா சக்சஸ் ஆகி யு எஸ் அவரை கொண்டாடுது. அந்த ஃபார்முலாவை கொஞ்சம் சேஞ்ச் பண்ணி குழந்தைகளுக்கான பால் பவுடர்ல மிக்ஸ் பண்றாரு. 


 இதன் படி பசுக்கள்  2 மாதத்தில் வாழ்நாள்ல எவ்வளவு பால் கறக்க முடியுமோ அத்தனையும் கறக்கலாம். ஆனா பிற்காலத்துல இது ஆபத்து . ஒரு தலை முறையையே பாதிக்கும். சொந்த அப்பாவா இருந்தாலும் எப்படி பையன் அந்த சதியை முறியடிக்கறான் என்பதே கதை.. 



படத்தோட முதல் ஹீரோ எழுத்தாளர் சுபாதான். படத்தின் கதை வசனம் எல்லாம் அவர் தான். ஆனா டைட்டில்ல வசனத்துக்கு மட்டும் அங்கீகாரம் கொடுத்திருக்காங்க.. படத்துல ஏகப்பட்ட திருப்பங்கள் இருக்கு.. சுவராஸ்யம் கருதி அதெல்லாம் சொல்லலை,.,. படத்தின் முன் பாதி வேகம் பின் பாதில  அது மிஸ்சிங்க்... 


ஹீரோ சூர்யா ட்வின்ஸ்ஸா வரும்போது இரு மாறுபட்ட கேரக்டர்ஸ்க்கான வேறுபாட்டை வழக்கம் போல் நல்லா காட்டி இருந்தாலும் இடைவேளை டைம்ல இருந்துதான் அவர் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகுது..  சண்டைக்காட்சிகளில் பல இடங்களில் சாகசம் காட்டி இருக்கார். ஏழாம் அறிவு பாதிப்பு ஆங்காங்கே இருக்கு அவர் நடிப்பில் . குறிப்பாக சண்டைக்காட்சிகளில்// . ஆனால் ஏழாம் அறிவில் விட்டதை இதுல பிடிச்சுட்டார்னு சொல்லலாம்../ 


ஹீரோயின் கா ஜில்  வாவ் லால் சாரி காஜல் அகர் வால்.. ஒரு டன் கனகாம்பரப்பூக்களை ராட்சச மிக்சில அரைச்சு செய்யப்பட்ட மினியேச்சர்  பீட்ரூட் அல்வா அவர் உதடு. வாழை மரத்துக்கு ரோஸ் பவுடர் போட்டு விட்ட மாதிரி அவர் இடுப்பு ஐ மீன் இடை.. அவர் ஸ்லோ மோஷன்ல ஓடி வரும்போது பேக் கிரவுண்ட்ல  ”துள்ளி எழுந்தது காத்து சின்ன குயில் இசை கேட்டு”  பாட்டு நானா கற்பனை பண்ணிக்கிட்டேன்.. நடிப்பு சொல்லிக்கற அளவு இல்லைன்னாலும் ஜொள்ளிக்கற அளவு இருக்கு. இது போதாதா? தமிழ் நாட்டின் சி எம் ஆகவே ஆகலாம்..





இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள் 


1. ஸ்டக் ஆன் யூ ஆங்கிலப்பட காப்பின்னு படத்தோட  ஸ்டில் வெளியானதும் தகவல் பரவியதும் படத்தோட கதையை அவசர அவசரமா மாத்தி  சரியா செட் ஆகற மாதிரி செஞ்சது.


2. சாருலதா படத்தின் சாயல் அந்த ட்வின்ஸ் பிரிப்பு  , ஒருவர் உயிர் துறப்பு மேட்டர்ல இருந்தாலும் அது பெரிய அளவில் பாதிக்காதவாறு திரைக்கதை அமைத்தது.


3. ஒளிப்பதிவு . லொக்கேஷன்கள் கலக்கலாய் அமைச்சது. கோ படத்துல பாடல் காட்சிகள் எப்படி சிலாகிக்கப்பட்டனவோ அதே போல் அந்த ஒற்றைப்பாறை காட்சி , மலை அருவிகள் இயற்கைக்காட்சிகள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது


4. படத்துல ஏகப்பட்ட திருப்பு முனை காட்சிகள். சில யூகிக்க முடிந்தவை , சில எதிர்பாராதவை. ஒரு நாவல் ஆசிரியர் எழுத்தை நம்பினார் கை விடப்படார் என்ற பாசிட்டிவ் எண்ணத்தை நிலை நிறுத்தியது


5. படத்தின் கதை அனுமதித்தும் ஹீரோ டாமினேஷனோ பஞ்ச் டயலாக்சோ இல்லாமல் இது டைரக்டர் படம் என சொல்ல வைத்தது.


6. ஹீரோவுக்கு  ஹீரோயின் எட்டாக்கனி என்பதை யாரும் கண்டு பிடிக்காத முறையில் கேமரா கோணங்களை வைத்தது..

7. பேசிக் இன்ஸ்டிங்க்  ஹீரோயின் ஷெரன் ஸ்டோன்  சாயலில் ஒரு ஃபாரீன் லேடியை சிறப்பாக நடிக்க வைத்தது , கா”ஜில்” அகர்வால் தக்கபடி உபயோகித்தது


8. ஆர்மர் ஆஃப் காட் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை நினைவு படுத்தும் ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஒரு சபாஷ் .அந்த மரக்கிளை சீன் ஓக்கே.





 இயக்குநரிடம் சில கேள்விகள் 


1. படத்தோட ஓப்பனிங்க் சீன்லயே  ஹீரோ ஸ்லிப் ஆகி  கீழே விழுவது போல் அமங்கலமான  சீன் எதுக்கு? சூர்யா ர்சிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? கோடம்பாக்கம் செண்ட்டிமெண்ட் பார்க்குமே?



2. சூர்யாவோட அப்பா தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியில் பாத்ரூம் கதவை தாழ் போடாமல் இருப்பது ஏன்? தற்கொலை செய்பவர்கள் முதலில் செய்யும் காரியமே கதவை உள் பக்கம் தாழ் போடுவதுதானே? 


3. உண்ணாவிரதம் இருக்கும் தொழிலாளிகள் பாத்ரூமில் ஒளிச்சு வெச்சு சாப்பிடும் காட்சி உவ்வே + பல படங்களில் வந்தவை 


4. காஜில் அகர்வாலுக்கு அந்த  சோடா புட்டி கண்ணாடி பார்ட்டி செந்தமிழில் காதல் கடிதம் தருவது அந்நியன் அக்மார்க்  விக்ரம் ஸ்டைல். இதை சமாளிக்க ஹீரோயினே என்ன அந்நியன் ஸ்டைலா? என்ற வசனம் வேறு 



5. ஃபாரீன் லேடி  மில்க் கம்பெனிக்கு வந்து சர்வ சாதாரணமா டாக்குமெண்ட்சை ஃபோட்டோ எடுப்பது எப்படி? மேஜை டிராயர்க்கு லாக் எல்லாம் கிடையாதா? கோடிக்கணக்கான விலை மதிப்புள்ள ஃபார்முலாவை இப்படித்தான் அலட்சியமாய் தொறந்து போட்டுட்டு போவாங்களா? அது என்ன நமீதா ஜாக்கெட்டா? 


6. சூர்யாவோட அப்பா அந்த ஃபாரீன் லேடியை உளவாளின்னு கண்டு பிடிச்சதும் குஜராத் போகும்போது ஏன் தன் பசங்க கிட்டே அவ பற்றி எச்சரிக்கை  பண்ணலை? நான் இல்லாத சமயம் இவ வந்தா சேர்க்காதீங்க.. அப்டினு ஃபோட்டோ காட்டி இருக்கலாமே? அதே போல் கம்பெனி மேனேஜரிடம் அந்த ஃபாரீன் லேடி பற்றி எச்சரிக்கவே இல்லையே?


7. ஃபார்முலா சீக்ரெட் தந்த பின் மொத்தமா பணம் தராம அந்த ஃபாரீன் லேடி ஏன் தவணை முறைல பணம் தர்றா? கையில காசு வாயில தோசை ஃபார்முலாவை ஃபாலோ பண்ணலை , ஏன்? 





8. படத்தோட ஹீரோ சூர்யா என்ன ஷகீலாவா? அவர் குளிக்கறதை ஏன் விலா வாரியா காட்டனும்? ட்வின்ஸ் எவ்வளவு சிரமப்படறாங்க என்பதை காட்டத்தான் குழந்தையா இருந்தப்ப , சிறுவனா இருந்தப்போ காட்சிகள் வெச்சாச்சே? ஒரு வேளை கமல் மாதிரி பாடியை காட்டியே தான் ஆவேன்ன சூர்யா  அடம் பிடிச்சாரா?


9. ஃபாரீன் லேடி தன் ஹேண்ட் பேக்ல முக்கியமான ஆதார ஃபோட்டோக்களை அசால்ட்டா டேபிள்ல வெச்சுட்டு ஏதோ ஃபோன் வந்ததுன்னு அதை அப்படியே சூர்யா முன்னாடி வெச்சுட்டு அந்த பக்கம் போவது ஏன்? நானா இருந்தா அந்த பேக்கையும் கையில எடுத்துட்டு போய் இருப்பேன் 


10. தன் சொந்தக்குழந்தையை கொலை பண்ண முடிவு எடுக்கும் சொந்த அப்பா அதுக்கு ரொம்ப ஈசியான வழி 2 பேரும் தூங்கும்போது கொல்வதே. அதை விட்டுட்டு ட்வின்ஸ்ல ஒரு ஆள் விழிச்சிருக்கும்போது எந்த லூஸ் அப்பாவாவது  இன்னொரு குழந்தையை கொலை பண்ண ட்ரை பண்ணுவாரா? அந்த குழந்தை அம்மா கிட்டே சொல்லிடும்னு தெரியாதா? 


11. திருப்பத்துக்கு மேல் திருப்பம்  வேணும்கறதுக்காக க்ளைமாக்ஸ்ல சூர்யாவின் ”ராவணன்” ரகசியம் தேவையா? 


12. படத்துக்கு முக்கியமான காட்சியான ஃபாரீன் லேடி பென் ட்ரைவரை விழுங்குவது நம்ப்ற மாதிரியே இல்லையே? அதெப்பிடி தண்ணீர் இல்லாம ஒரு பென் டிரைவரை விழுங்க முடியும்? 


13. வில்லன் ஃபோன் நெம்பரை சூர்யா கண்டு பிடிச்சதும், மேனெஜர் கிட்டே  அந்த நெம்பரை சொல்லி ஃபோன் போடுங்க அப்டினு சொல்லும்போது வில்லன் டக்னு செல்லை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி இருக்கலாமே? ஏன் பேக்கு மாதிரி மாட்டிக்கறான்? டக்னு பேட்டரியை கழட்னாக்கூட போதுமே? 


14. மெடல் லேடி கிட்டே சூர்யா  ஹோட்டல்ல ஹால்ல எல்லாரும் பார்க்கும்போது லேப்டாப்பை ஓப்பன் பண்ணி அந்த ரகசியத்தை பற்றி டிஸ்கஸ் பண்றாரு. ஏன்? வில்லன் பார்க்கட்டும்னா? தனி ரூமுக்கு கூட்டிட்டு போய் செய்ய வேண்டியதுதானே? 


15.   காஜல் அகர்வால் லவ் பண்ணுன ஹீரோ சூர்யா ஆள் அவுட். அவரோட இதயத்தை பொருத்திய இன்னொரு சூர்யா தான் இப்போ உயிரோட . அதாவது நீ வருவாய் என படத்துல அஜித் கண்கள் ஆர் பார்த்திபன் கிட்டே பொருத்தப்பட்டதும் தேவயானிக்கு ஒரு குழப்பம் வருமே அந்த மாதிரி காஜல்க்கு நோ குழப்பம். எவனா இருந்தா எனக்கென்ன? சம்பளம் குடுத்தா சரி அப்டிங்கற மாதிரி லவ்வறது சரியா? கொஞ்சமாச்சும் தடுமாற்றம் , யோசனை வராதா? 


16. ஹீரோ அந்த மெடல் லேடி கிட்டே லேப் டாப் வெச்சு விளக்கிட்டு இருக்காரு. தத்தி வில்லன் மேனேஜர் விளக்கு பிடிச்ச மாதிரி வேடிக்கை பார்த்துட்டு இருக்காரு. மேலிடம் சொல்லித்தான் எதுவும் செய்வாரா? அவருக்குன்னு மூளை இல்லையா? அட்லீஸ்ட் அந்த ஆதாரத்தை லேப்டாப்பை பிடுங்கி இருக்கலாமே? 


17.தன் அப்பா தான் வில்லன்கற மேட்டர் தெரிஞ்சதும் சூர்யா ஏன் காஜல் கிட்டே அந்த மேட்டரை சொல்லலை?  ஆதாரம் அவ கிட்டே இருக்கு, அவ தன் அப்பா கிட்டேயே போய் குடுத்துட்டா என்ன பண்றதுன்னு யோசிக்க மாட்டாரா? ( அப்டித்தான் நடக்குது )

 


மனம் கவர்ந்த வசனங்கள் ( ரைட்டர் சுரேஷ் பாலா -சுபா)

1.காதலிச்ச யாராலும் கவிதை எழுதாம இருக்க முடியாது .கலீல் ஜிப்ரான் கவிதை படிச்சவங்க யாரும் காதலிக்காம இருக்க முடியாது



2.  உங்க 2 பேருக்கும் கனவு ஒண்ணாதான் வருமா? இதயம் மட்டும்தான் ஒண்ணு ,மத்த ஆல் பார்ட்ஸ் தனித்தனி கி கி



3. போட்டின்னு வந்துட்டா டீல் பண்ணனும் ,பீல் பண்ணக்கூடாது



4. எனக்கு இதயம் இல்லாம இருக்கலாம் ,ஆனா மனசுல ஈரம் இல்லாம இல்ல


5. நீ அரியர்ஸ் வெச்சிருந்தியே , என்னாச்சு? என்ன கண்டிஷன்ல இருக்கு?


 கஜினிங்கறதை  இதுல காட்றான்



6. லேடி - 8 வயசுல இவன் என்ன பண்ணான் தெரியுமா?

 ஆண்ட்டி.இதெல்லாமா சொல்வாங்க?






7. காஜல் - நான் இப்போ மப்புல இருக்கறதால  எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியுது போல//


 நோ நோ. உங்களுக்கு நாலு நாலா தெரிஞ்சா தான் தப்பு


8. எனக்கு டயபடிஸ் இருக்கு.. நானும் பாத்ரூம் போகனும்



 எனக்கு லெக் பீஸ்




9. பாரதியார் யார்னு தெரியுமா?


 ஒரு கோப்பையிலே என் குடி இருப்பு  பாடுனவர் தானே?


 அது கண்ண தாசன்




10. ஏம்மா? நீ போஸ்ட் பெயிடா? ப்ரீ பெய்டா?


-------


 அய்யோ அம்மா.. விடும்மா என்னை மன்னிச்சுடு


 இப்போ உன் கனெக்‌ஷன் ஆஃப் பண்ணிட்டா பார்த்தியா?




11. இவன் தான் உன் லவ்வரா? எங்கே பிடிச்சே? 1 வாங்குனா 1 ஃப்ரி மாதிரி..



12. இது நீ கட்டிக்கப்போற பொண்ணா?



 ஆமா, எப்டி தெரியும்?




 கண்ல பார்த்தாலே அது தெரிஞ்சுடும்









எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 43

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - ஓக்கே


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgBd9rtjAch64_OPY7r3dxTmp4wvjCh1oVF3Eol1O2_gtK6IGI-TnomfDwuiEn-MP-qbjcajHBjMY3LNKb0-NROjsk-DzPEhHia7zxdmg-f_5dNaGnvRtlSlSDCHX9Sg-KuaauuTDd68TBU/s1600/kajal-agarwall19.jpg



சி.பி கமென்ட் - முன் பாதி வேகம் பின்பாதில இல்லைன்னாலும் இது கவனிக்கத்தக்க படமே. பெண்கள், சூர்யா ரசிகர்கள் என எல்லா தரப்பையும் கவரும். ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்


இந்தபடத்தில் பணி ஆற்றிய இயக்குநர், ஹீரோ , ஹீரோயின் பேட்டி மற்றும் பாடல் வரிகள் விபரமாய் படிக்க

http://www.adrasaka.com/2012/10/blog-post_9785.html



http://searchandhra.com/english/wp-content/uploads/2009/08/Kajal-Agarwal-Photo-Gallery-Latest-hot-7.jpg

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 12.10.2012 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

http://vettrinews.lk/admin/news/images/Suryafgj.jpg 

1.மாற்றான்  -விமர்சனம் -http://www.adrasaka.com/2012/10/blog-post_12.html


அயன்பட வெற்றிக் கூட்டணியான இயக்குனர் கே.வி.ஆனந்த்தும், சூர்யாவும், மீண்டும் கூட்டணி அமைத்துள்ள படம், மாற்றான்.  ஒட்டி பிறந்த இரட்டையர்கள் பற்றிச் சொல்லும் இப்படத்தில், "அமலன் - விமலன் என, இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் தோன்றுகிறார் சூர்யா. அவருக்கு ஜோடியாக, காஜல் அகர்வால் நடிக்கிறார்.


 ஒரு ஆங்கில பத்திரிகையில் வெளி வந்த, ஒட்டி பிறந்த ரெட்டையர்களின் கதையைப் படித்த இயக்குனர் கே.வி.ஆனந்த், அதன் பாதிப்பில், "மாற்றான் கதையை உருவாக்கி, அதை நமது கலாசாரத்துக்கு தக்கபடி ஜிகினா வேலைப்பாடுகளைச் செய்து, சுவாரசியமான திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். "ஒரு உடம்பில் இரண்டு உருவம் என்ற புதுமையை தாங்கியிருப்பதால், "மாற்றான் படத்துக்கு  ரசிகர்கள் வட்டாரத்தில், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சூர்யாவின் மாற்றான் படத்தின் பெரும்பகுதி காட்சிகள், இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது.


இது படக்குழுவினரையும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


தமிழில் தயாராகும் முக்கிய படங்களின் பாடல்கள் அல்லது சில காட்சிகள் படம் வருவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியாகி பரபரப்பு கிளப்புவதுண்டு. சில நேரங்களில் விளம்பரத்துக்காக சம்பந்தப்பட்ட படங்களைச் சேர்ந்தவர்களே இந்த வேலையைச் செய்வதுண்டு.


படக்குழுவைச் சேர்ந்த யாரோ சிலர் திருட்டுத்தனமாக இந்த வேலையைச் செய்வதும் உண்டு.


ஆனால் மாற்றான் விஷயத்தில், படத்தின் முக்கிய காட்சிகள், பாடல்கள் அனைத்துமே வெளியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.


இது நிஜமாக இருந்தால், உண்மையிலேயே இயக்குநர் மற்றும் படக்குழுவினருக்கு இது பெரும் இழப்பாகும். இந்தப் படம் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது.


எனவே இது குறித்து சீரியஸான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர் மாற்றான் குழுவினர். ஆனால் வெளியில் இதுபற்றிய செய்தி பரவாமல் இருப்பதற்காக அமைதி காக்கின்றனர்.


ஈரோடு அபிராமி , ஆனூர் , லட்சுமி ரிலீஸ்

http://hindi.way2movies.com/wp-content/uploads/2012/10/Bhoot-Returns2.jpg


2.BHOOT RETURNS - Bhoot Returns movie is a sequel to the 2003 film Bhoot. The movie is based on the dramatic and horrifying changes in the life of a family when they come to stay in a new house.

Strange things happen and the little girl in the family feels the presence of someone called Shabbo. 


 review-http://www.adrasaka.com/2012/10/bhoot-returns.html



ஈரோடு ஸ்ரீகிருஷ்ணா ரிலீஸ் 

தூங்கிட்டு இருக்கற பொண்ணை எதுக்கு எழுப்பி விடறே?



http://www.teluguone.com/photos/uploads/Tamil%20Movies/Soundarya%20Tamil%20Movie%20Hot%20Stills/Soundarya_Tamil_Movie_Hot_Stills9.jpg

3. சவுந்தர்யா -இது ஏதோ தெலுங்கு கில்மா பட டப்பிங்க் போல, ஈரோடு அண்ணா ரிலீஸ்-review-
http://www.adrasaka.com/2012/10/18_16.html



http://movies.infoonlinepages.com/wp-content/uploads/2012/09/Damarukam-8.jpg

4. DAMAARUKAM -அஸ்கா அனுஷ்கா , நாகார்ஜூன் நடிச்ச தெலுங்கு படம் .
அஸ்கா அனுஷ்கா வின் டமாருகம் தெலுங்கு சினிமா டப்பா ஆக பிரார்த்திக்கிறேன்.அப்போதான் அவர் இங்கே குடி வருவாரு
அனுஷ்காவின் டமாருகம் கதை@ தினகரன்
 http://mimg.sulekha.com/hindi/aiyya/promos/home/aiyya.jpg
 5.AYYA -ராணி முகர்ஜியின் ஹிந்திப்படம், ஏக் துஜே கேலியேவை உல்டா பண்ணி இருப்பாங்க போல 
ராணி முகர்ஜி யின் அய்யா ஹிந்திப்பட கதை ஒன் லைன்



http://www.filmofilia.com/wp-content/uploads/2012/04/Seven-Psychopaths.jpg


6. SEVEN PSYCHOPATHS- நம்ம ஊர் வடிவேல் நாய் சேகர் மாதிரி ஒரு காமெடி கதையாம்