Thursday, July 26, 2012

நிபந்தனை - சுஜாதா - சிறுகதை -சைக்கலாஜிக்கல் த்ரில்லர்

ஒன்பது மணிக்கே வெயில் கொளுத்திற்று. கசகசவென்று வியர்வை முதுகுக்குள், மார்பில் எல்லாம் சின்னச் சின்ன ஊசிகளாகக் குத்தியது. ஈஸ்வரிக்குப் பட்டுப்புடவை ஏன் உடுத்திக்கொண்டு வந்தோம் என்றிருந்தது.


பெரிய யானை ஒன்று முனிசிபாலிட்டி குழாயில் சமர்த்தாகத் தண்ணீர் பிடித்து முதுகில் ஆரவாரமாக வாரி இறைத்துக்கொண்டு இருந்தது. யானைப்பாகன் பீடி குடித்துக்கொண்டு இருந்தான். எதிரே கட்டை குட்டையாகக் கோபுரம் தெரிந்தது. அருகே தெப்பக்குளம். அதற்கு எதிர்ப்புறத்தில் பழங்காலத்து மரக் கட்டடத்தின் உச்சாணியில் இருந்த விநோத கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு பத்துப் பதினைந்து பேர் ஒன்பது அடிக்கக் காத்திருந்தார்கள். மணியடிக்கும்போது இரண்டு பொம்மை ஆடுகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளுமாம். மஹாராஜா செயலாக இருந்தபோது வாங்கிப் போட்ட கடிகாரம். இப்போது மஹாராஜாவே அந்தப் பதினைந்து பேரில் ஒருவராக இருந்தால் ஆச்சர்யப்படக் கூடாது என்று சோமசுந்தரம் எண்ணினான்.


”கோயிலுக்குப் போயிரலாமே முதல்ல” என்றாள் ஈஸ்வரி.

”இத பார்… எனக்குப் பசிக்குது. காலைல எழுந்து ஒரு காபி சாப்பிட்டது. ஒண்ணு ரெண்டு பிளேட் இட்லி தின்னாத்தான் வண்டி ஓடும்.”


”எங்க வந்தாலும் சாப்பாடுதான் உங்களுக்கு.”

”என்ன செய்யறது. வேளைக்கு வேளை செய்து போட்டு என்னைக் கெடுத்துவெச்சிருக்க.”

சோமசுந்தரம் காரை அந்தக் கட்டட நிழலில் நிறுத்தினான். மூஞ்சியைப் பார்த்து சுமார் என்று சொல்லக்கூடிய ஓர் ஓட்டலில் நுழைந்தார்கள். கல்லாவில் ஊதுபத்திப் பட்டைகள் அடுக்கியிருந்தன. பத்திரிகைகளின் இந்த வார அட்டைப் படப் பெண்மணி கேரளத்துத் தேங்காய்களை நினைவுபடுத்தினாள். குலைகுலையாகச் செக்கச் சிவந்த வாழைப் பழங்கள் தொங்கின. மரவள்ளியும் பலாவும் வறுவலாகப் பாலிதீன் பைகளில் அடங்கியிருந்தன. கமல்ஹாசனுக்குக் கீழே மலையாளத்தில் நண்டு நண்டாக ஏதோ எழுதியிருந்தது.


”எந்தா வேண்ட?” என்றான். காதில் பென்சில்.

”எனக்கு மலையாளம் தெரியாது. தமிழ்தான்.”

”சாரமில்லா… பரயு…”

”என்னத்தைப் பரயறது. ஈஸ்வரி, நீ என்ன சாப்பிடற?”

”எனக்கு ஒண்ணும் வேண்டாம். சாமி கும்பிட்டுட்டு அப்புறம் சாப்பிடலாம்னு இருக்கேன்.”

”சரியாப்போச்சு, மறுபடி ஓட்டலுக்கு வரணுமா?”

”ஏன்? வந்தா என்ன?” என்றாள் சற்று அழுத்தமாக.

”ஓ.கே! ஓ.கே!”

”சின்னப் புள்ளைலேர்ந்து எங்க அப்பாம்மா கத்துக்கொடுத்திருக்காங்க, சாமி கும்பிட்டுட்டுச் சாப்பிடணும்னு. உங்களுக்கு அது மூடநம்பிக்கையா இருக்கலாம். வேணா…”

”சேச்சே. இந்தச் சின்ன விஷயத்துக்குச் சண்டையைத் துவங்காதே. சரி… ஏம்ப்பா எனக்கு முதல்ல மூணு இட்லி, வடை. அப்புறம் பச்சைத்தண்ணி; பச்சைவெள்ளம். சுக்கைப் போட்டுக் காய்ச்சி மஞ்சளா ஒரு வெள்ளம் கொண்டுவெப்பிங்களே… அது வேண்டா. கேட்டோ?” என்றான்.

கணவனின் மலையாள முயற்சிகளில் சிரிப்பு வந்தது ஈஸ்வரிக்கு. கோபம் போய்விட்டது.

”முணக்குன்னா கோபமா?” என்றான்.

”பின்ன என்னவாம். நான் எது சொன்னாலும் அதுக்கு எதிராச் சொன்னா?”

”சரி! இன்னிக்கு ஒரு பிராமிஸ். நீ என்ன சொன்னாலும் சரி சரி. மறுப்பே தெரிவிக்க மாட்டேன். வெளியூர்ல ஓட்டல்ல வந்து எதுக்காகச் சண்டை போடணும்?”

சாப்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, ஈஸ்வரி அந்த அம்மாளைப் பார்த்தாள். பிராமண மாது. நாற்பது இருக்கலாம். கிழிந்த நார்ப்பட்டில் ஜாதிக்கட்டு; ரவிக்கையில் ஒட்டு; நெற்றியில் வெறுமை. நரை இழையோடிய தலை ஒரு சின்னத் தேங்காய் போல இருந்தது. அவர்களை அணுகி சன்னமாகப் பிச்சை எடுத்தாள். தயக்கமாகக் கை நீட்டி ஹாஸ்யமில்லாமல் சிரித்து மெல்லிய குரலில், ”அம்மா மஹாலட்சுமி, ஏதாவது காசு தாய
ேன்” என்றாள். பற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சோழிகள்.

அவள் ஒரு காலத்தில் செல்வாக்காக இருந்து நொடித்துப்போய் பிச்சை எடுக்க வந்திருக்க வேண்டும் என்பது அவள் தோற்றத்திலும் கூசிக் குறுகிய தயக்கத்திலும் வெளிப்பட்டது.

சோமசுந்தரம் அவளுக்கு நாலணா கொடுத்தான்.
அவள் அதை வாங்கிப் பார்த்து, ”நாலணா போறாதுப்பா. குழந்தை பசியாக் கிடக்கிறாள். நானும் பட்டினி” என்றாள்.

”எவ்வளவு தரணும்கறிங்க பாட்டி?” ‘பாட்டி’ என்று அழைத்தது அசம்பாவிதமாக இருந்தாலும் ‘மாமி’ என்று அழைத்துத் தனக்கு ஒரு அவசியமில்லாத பிராமணத்தன்மையை வரவழைத்துக்கொள்ள சோமசுந்தரம் விரும்பவில்லை.

”ஒரு ரூபா கொடுத்தா எதிர்த்தாப்ல காபி கிளப்பில் ஒரு முழுச் சாப்பாடு கிடைக்கும். நானும் என் பெண்ணும் சாப்பிடலாமாக்கும்” அவள் தமிழில் மலையாள உச்சரிப்புத் தென்பட்டது. பாலக்காடாக இருக்கலாம்.


”இத பாருங்க… உங்களுக்கு ஒரு ரூபா கொடுத்தா உங்க வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்துபோயிடப் போறதில்லை. கொடுக்கிறத வாங்கிட்டுப் போங்க பெரியம்மா! வேற மூணு நாலு ஆளுங்ககிட்ட கேட்டா ஒரு ரூபா. அவ்வளவுதான்!” என்று சோமசுந்தரம் நடந்தான். ஈஸ்வரி சற்றுத் தயங்கினாள்.

”அம்மா மகாலட்சுமி; ஜகதீஸ்வரி; பூவும் பொட்டுமா அழகாத் தங்கமாட்டமா இருக்கியே. உனக்குத் தங்க விக்கிரகம் மாதிரி ஒரு புள்ளை பொறந்து எல்லாரும் செழிப்பா இருப்பீங்க. ஒரு ரூபா கொடுத்துட்டுப் போம்மா ராஜாத்தி.”

கணவன் அங்கிருந்து, ”அவகூட என்ன பேச்சு? வா வா!” என்று அவசரப்படுத்தினான். ஒரு கடைக்குள் நுழைந்தான். ”தொந்தரவு பண்ணாதிங்கம்மா, போங்க!” என்று ஈஸ்வரி நடக்க, அந்தப் பெண்மணி தொடர்ந்து கடைவாசல் வரைக்கும் நீட்டிய கையுடன் வந்தாள்.

கடைக்குள் ஆயிரம் உதவாக்கரை சாமான்கள் இருந்தன. எத்தனைவிதமான மர யானைகள். மரம் இழுக்கும் யானை, சேவிக்கும் யானை, ஏன்… யானை மேல் யானையைக்கூட விட்டுவைக்கவில்லை.

”என்ன, போனாளா?”

”இல்லீங்க. பாவம் அய்யர் சாதி.”

”ஆமா! அய்யர் சாதிதான். அதுக்குன்னு ஜாஸ்தி பணம் குடுக்கணும்கறியா? பிச்சைலேகூட வர்ணாச்சரம தர்மமா? இந்த யானை என்ன விலைங்க?”

”சட், அது வேண்டாங்க. புத்தி போவுது பாரு!”

”விலை கேட்டேன்! திருவனந்தபுரத்துக்கு வந்ததுக்கு ஞாபகமா யானை வாங்கிட்டுப் போக வேண்டாமா?”

”அது நல்லா இருக்குதில்ல?” என்று நீண்ட சதுரப்பாயின் மேல் தத்ரூபமாக ஒரு யானை வரையப்பட்டிருந்ததைக் காட்டினாள். ”ஹாலில் அலங்காரமா தொங்கவிடலாம். என்னப்பா விலை?”

பதினெட்டு ரூபாய் கொடுத்து அதை வாங்கிச் சுருட்டிக்கொண்டு கடைக்கு வெளியே வரும்போது, அந்த அம்மாள் இன்னும் நின்றிருந்தாள். அதே அரைக்கை நீட்டல். அதே அசட்டுச் சிரிப்பு. ஏழ்மையின் தங்க மெடல்கள். ஈஸ்வரிக்குக் குற்ற உணர்வு உறுத்தியது. ‘பதினெட்டு ரூபாய் கொடுத்து அலங்கார சாமான் வாங்குகிறாய். எனக்கு நாலணாவுக்குக் கணக்குப் பார்க்கிறாய்!’ என்று அவள் பார்வையே கேட்பது போல் தோன்றியது.

கணவன் கவனிக்காமல் காரை நோக்கி நடந்துகொண்டு இருக்க, ஈஸ்வரி இரண்டாம் முறை தயங்கி யோசித்தாள்.

”பாட்டி, உங்க பேர் என்ன?”

”அலமேலும்மா.”
”எந்த ஊர் நீங்க?”
”வடக்கே திருச்சூர்.”

”ஏன் இப்படிப் பிச்சை எடுத்துப் பிழைக்கும்படியா ஆய்டுச்சு?”

”அதை ஏண்டிம்மா கேக்கறே. எங்க தாத்தா சப்ரிஜிஸ்திராரா இருந்தார். ஆத்துல நாலு சேவகா இருந்தா. தென்னந்தோப்பும் துரவுமா காய் காய்ச்சு தாழ்வாரம் பூரா கொட்டியிருக்கும்.”

”அது சரி… இப்ப ஏன் இப்படி ஆய்டுச்சு?”

”எங்கப்பன் சொத்தையெல்லாம் அழிச்சுட்டு எங்கள நடுத்தெருவில் நிக்கவெச்சுட்டுப் போயிட்டான். சமையல்காரனுக்கு வாக்கப்பட்டேன். அவரும்
போய்ட்டார். நானும் என் பெண்ணும் மட்டும் தனியா.”

”கூடப் பிறந்தவங்க யாரும் இல்லையா?”

”இருக்கான். தம்பிக்காரன் திருச்சூர்ல வாத்தியாரா இருக்கான். ஆம்படையா பேச்சைக் கேட்டுண்டு துரத்திவிட்டுட்டான்.”

”வீட்டு வேலை ஏதாவது செஞ்சு பிழைக்கிறதுதானே?”

”பிழைக்கலாம். யாராவது வேலை குடுத்தாத்தானே? அதுக்குக்கூட சிபாரிசு தேவையா இருக்கு. இல்லைன்னா, திருடிப்பிடுவேனாம். இப்பகூட ஒரு நம்பூதிரி வீட்ல கூப்ட்டிருந்தா. போறதுக்குள்ள வேற பொம்மனாட்டி வந்துட்டா. என் மூஞ்சியப் பார்த்தா திருடற மாதிரியா இருக்கு. சொல்லும்மா. ஒரே ஒரு பொண்ணு. ஸ்கூலுக்குப் போயிண்டிருக்கு. மத்யானச் சாப்பாடு ஒரு சத்திரத்துல கிடைக்கும். இன்னிக்கெல்லாம் என்ன வயசுங்கறே எனக்கு? நாப்பத்திரண்டு. பசிச்சுப் பசிச்சு அறுபது வயசாட்டம் இருக்கேன். ‘பாட்டி’ங்கறே!”


”வீட்டு வேலை எல்லாம் செய்வீங்களா?”

”பேஷா! சமைப்பேன். பத்துப்பாத்திரம் தேய்ப்பேன். மாடு கறப்பேன். இட்லி தோசைக்கு அரைப்பேன். கைக்குழந்தைக்கு எண்ணெய் தேய்ச்சுவிடுவேன். வேண்டப்பட்ட காரியம் செய்வனாக்கம், எட்டூருக்கு வேலை செய்வேன்.”

சோமசுந்தரம் கார் வரை சென்று காத்திருந்து பொறுமையிழந்து திரும்பி வந்தான். ”என்ன ஈஸ்வரி… இங்கேயே நின்னுட்டே? இத பாருங்க அய்யர் வீட்டு அம்மா, காசு கொடுத்தாச்சில்ல? பேசாம போயிட வேண்டியதுதானே?”

ஈஸ்வரி அவனைக் கவனிக்காமல், ”இப்ப எங்ககூட வர்றீங் களாம்மா?” என்றாள்.

”எங்கே?”

”மெட்ராசுக்கு. வீட்டு வேலை செய்யறதுக்கு எனக்கு ஒரு ஆள் தேவையா இருக்கு.”

”வெயிட் எ மினிட், வெயிட் எ மினிட். என்ன ஈஸ்வரி… உடனே அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுத்துர்றதா?”

”சும்மா இருங்க! பாட்டி. பெரியம்மா! உங்களால மெட்ராஸ் வர முடியுமா, சொல்லுங்க!”

அம்மாள் கண்களில் முதல் தடவையாகப் பிரகாசம் ஏற்பட்டது. ”என்னம்மா இப்படிக் கேட்டுட்டே! உடனே புறப்பட்டு வரேம்மா! கடல் தாண்டிவேணும் னாலும் வரேன்!”

”கொஞ்சம் இரு ஈஸ்வரி!”

”இன்னிக்கு மத்யானம் நாங்க கார்ல இந்த ஊரைவிட்டுக் கிளம்பி நாகர்கோவில் போறம்.”

”இன்னிக்கே வந்துர்றேம்மா!” அவள் முகம் பூரா இப்போது அந்தப் பிரகாசம் பரவியிருந்தது. ”ஆனா கோமதி?”

”கோமதி யாரு?”

”எம் பொண்ணு. பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கா.”

”எப்பத் திரும்பி வரும்?”

”ஒரு மணிக்கு.”

”நாங்க ரெண்டு மணிக்குக் கிளம்பறம். உங்க பொண்ணையும் அழைச்சுக்கிட்டு வந்திருங்க. பொட்டி படுக்கையெல்லாம் கொண்டுட்டு வந்துருங்க.”

”பொட்டியுமில்ல… படுக்கையுமில்ல. ஒத்தக் கடையில ஒண்ணு ரெண்டு பை! பிளாட்ஃபாரத்திலாக்கும் படுத்துக்கறது” கண்களைத் துடைத்துக்கொண்டாள். ”மஹாலட்சுமி மாதிரிதாம்மா வந்து சேர்ந்தே நீ! நான் நாயா உழைக்கிறேன்! உடம்பைச் செருப்பா தேய்ச்சுப் போடறேன்

.”
”சரி, சீக்கிரம் போய்ட்டு வாங்க!”

”இதோ…” ஓடினாள்.

சோமசுந்தரம் மௌனமாகத் தன் மனைவியையே பார்த்துக்கொண்டு இருந்தான்.

”என்ன பாக்கறீங்க! வாங்க கோயிலுக்குப் போகலாம்!”

”நீ செய்றது சரிதானா? இது உனக்கே நல்லா இருக்கா? முன்னப்பின்னத் தெரியாத தேசத்துல முன்னப்பின்னத் தெரியாத பொம்பளைய கார்ல கூப்பிட்டு மெட்றாசுக்கு அழைச்சுட்டுப் போறதா?”

”காலைல என்ன சொன்னீங்க?”

”விசாரிக்க வேண்டாமா?”

”காலைல ஓட்டல்ல என்ன சொன்னிங்க?”

”மெட்ராஸ்ல கிடைக்காத பொம்பளைங்களா?”

”காலைல நீ என்ன சொன்னாலும் மறுப்பே தெரிவிக்க மாட்டேன்னு சொல்லல நீங்க?”

”அது சரி, ஆனா இந்த விஷயம்…”
”நடங்க கோயிலுக்கு.”
சட்டையைக் கழற்றி பேன்ட்டை மடக்கி அதன் மேல் வாடகை வேஷ்டி சுற்றிக்கொண்டு சோமசுந்தரம் வர, இருவரும் கோயிலுக்கு
ள் நுழைந்தார்கள்.
”ஆம்பளைங்களுக்கு மட்டும் சட்டையைக் கழட்டணும்னு என்ன ரூல் இது?” என்ற அவன் ஹாஸ்யத்தை அவள் கவனிக்கவில்லை.

”எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம். என்ன பிரயோசனம்? நடைமுறையில் ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்? இந்த ட்ரிப்புக்கு இதுவரை எவ்வளவு ரூபா செலவழிச்சிருக்கம்? எத்தனை பெட்ரோல், எத்தனை சினிமா, எத்தனை ஐஸ்க்ரீம், எத்தனை கண்டாமுண்டா சாமான்கள்? ஓர் ஏழைப் பொம்பளைக்கு நாலணா குடுக்க மூக்கால அழறோம். நாம எல்லாம் மனுசங்க இல்லியா? இரக்கம் கிடையாது. வேற யாராவது பார்த்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா, யார் அந்த வேறு யாராவது? கோயிலுக்குக்கூடப் போக வேண்டாங்க. இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்!”

சோமசுந்தரம் நடந்துகொண்டே கை தட்டினான்.
இருவரும் சந்நிதிக்குள் நுழைந்தார்கள்.
கோயிலைவிட்டு வெளியே சட்டை அணிந்துகொண்டு காசு கொடுத்துவிட்டு வெளியில் இறங்கியபோது, தாடிவைத்த ஆசாமி ஒருவன் சைக்கிளில் வந்து அவர்கள் அருகில் நிறுத்தி இறங்கினான். அவனைச் சமீபத்தில் பார்த்த மாதிரி இருந்தது.

”சார், ஒரு விஷயம்.”

”ஒண்ணும் வேண்டாம்ப்பா.”

”நான் ஏதும் விக்கறதுக்கு வரலையாக்கம். எதுத்தாப்பல கடைக்காரன்தான். அம்மாவும் அந்த அலமேலுவும் கொஞ்ச நேரம் முன்னாடி என் கடை வாசல்ல பேசிட்டிருந்ததைக் கவனிச்சேன். அம்மா அவளை மெட்ராசுக்கு அழைச்சுட்டுப் போறதா சொன்னது.”

”ஆமாம். என்ன இப்ப?”

”கோவிக்க வேண்டாம். அந்தப் பொம்பளைய நீங்க கூட்டிப் போகக் கூடாது.”
”ஏன்?”

”அது செரியில்ல.”

”சரியில்லைன்னா?”

”உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கு. எனக்குச் செரியா காதுல விழல. கேவலமானா பொம்பள. பதினாலு வயசுல ஒரு பொண்ணு. அதைத் தெருவுல அலையவிட்டு அதை வெச்சுச் சம்பாதிக்கிறவளாக்கம் அவ!”

”மை காட்! பொண்ணு ஸ்கூலுக்குப் போறதா சொன்னாளே?”

”பொய்! ஸ்கூலாவது ஒண்ணாவது. சுத்தப் பொய். இவளுக்கு ஏகப்பட்ட கடனாக்கும். திருச்சூர்ல தம்பி இருக்கான். அவன்கூட சரியா இருக்க முடியாம ஓடி வந்தாச்சு. எங்கிட்ட இருந்தே நூத்தம்பது ரூபா கடன் வாங்கியிருக்கு. வீட்டு வேலை ஒண்ணும் தெரியாது. வெறும் கச்சடை. உடம்பெல்லாம் பொய்யி. நான் சொல்றதைச் சொல்லிட்டேன்.”

சோமசுந்தரம் மனைவியைப் பார்த்தான். ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரிந்தது. ”என்னங்க இப்படிச் சொல்றான்?” என்றாள்.

அப்போது அலமேலு அம்மாளும் அவள் பெண் கோமதியும் ஒரு துணி மூட்டை, கோணிப்பை, தகரப் பெட்டி சகிதம் அவர்களை நோக்கி ஆர்வத்துடன் வந்துகொண்டு இருந்தார்கள்.

”இப்ப என்னங்க செய்யறது?” என்றாள் ஈஸ்வரி. சைக்கிள்காரனைப் பார்த்ததும் அம்மாவும் பெண்ணும் பிரேக் போட்டாற்போல் நின்றார்கள்.

”வாங்க அலமேலு அம்மா! வெளியூர் கிளம்பிட்டாப்பல?” என்றான். அவள் பார்வை சரிந்தது.

சோமசுந்தரம் அந்த கோமதியைப் பார்த்தான். வளர்த்தியான பெண். பதினாலு வயசுதான் இருக்கும். குழந்தை முகம். சாயம்போன பாவாடை. சாயம்போன தாவணி. பிளாஸ்டிக் மாலை ஒன்றைக் கடித்துக்கொண்டு இருந்தாள். கன்னங்கரேல் என்று தலைமயிர். கண்கள், கொஞ்சம் கொஞ்சம் தீபா.

”என்னம்மா, இந்த ஆளு உங்களைப் பத்தி வேற மாதிரி இல்ல சொல்றார்?”

”அய்யா! அவர் சொல்றதை நம்பாதீங்க! அவருக்கு நான் பணம் கொடுக்கணும்னு என்ன என்னவோ பொய் சொல்வார். எல்லாம் பொய்! அப்படி எல்லாம் இல்ல!”

”ஏய் மூதேவி! நீ எனக்கு ஒண்ணும் பணத்தை திருப்பித் தர வேண்டாம். வெளியூர்க்காரங்களை ஏமாத்தாதே!”
”அப்ப இவர் சொல்றது நிஜமா பெரியம்மா?”
”பொய்! எல்லாம் பொய்! நான் ஏழை. ஏழை சொல் அம்பலம் ஏறாதும்பா. எல்லாரும் சேர்ந்துண்டு அழிச்சாட்டியம் பண்ணி…”
ஈஸ்வரி, கோமதியைப��� பார்த்துக்கொண்டே இருந்தாள். அந்தப் பெண் பூமியைப் பார்த்துக்கொண்டு கால் கட்டை விரலால் வட்டங்கள் வரைந்துகொண்டு இருந்தது.

ஈஸ்வரி, ”வாங்க போகலாம்” என்றாள்.

”இரு ஈஸ்வரி. இதைச் சரியா விசாரிச்சுரலாம். யார் பொய் சொல்றான்னு பார்த்துறலாம்!” என்றான் சோமசுந்தரம்.

”யார் பொய் சொன்னாலும், யார் நிஜம் சொன்னாலும் இந்த அம்மா நமக்கு வேண்டாம்!” என்றாள் தெளிவாக.

”அப்படி பட்டுனு சொல்லிட்டா எப்படி? உனக்கு உதவிக்கு வேணும்னுட்டுதானே…”

”மெட்ராஸ்லே கிடைக்காத பொம்பளைங்களா?”

”இந்த ஆள் சொல்றது எவ்வளவு தூரம் நிஜம்னு யாருக்குத் தெரியும்?”

ஈஸ்வரி கோபத்தில் வெடித்தாள். ”இப்ப நீங்க கிளம்பறீங்களா இல்லையா?”

சோமசுந்தரம் மௌனமாக காரை ஸ்டார்ட் செய்தான். மெதுவாக நகர்ந்தான். அந்த அம்மாள் அந்தப் பொண்ணுடன் கூட ஓடி வந்தாள். ”அய்யா! அம்மா! அம்மாடி! எனக்கு ஒரு வழி பண்ணிக் குடுப்பேன்னு நினைச்சேன்! ஏதோ பசிக் கொடுமையினால, அடுத்த வேளைச் சாப்பாட்டுக்கு இல்லாத கொடுமையில தவறுதலா நேர்ந்திருக்கலாம். நீங்க மன்னிக்கக் கூடாதா? என்னை உங்காத்துல சேர்த்துக்க வேண்டாம். பட்டணத்தில் அழைச்சுண்டுப் போய் ஏதாவது ஒரு ஆசிரமத்துல ரெண்டு பேரையும் சேர்த்துடுங்கோ. புண்ணியம் உண்டு! இந்த இடத்திலிருந்து எனக்கு விடுதலை கொடுங்கோ.” தாடிக்காரனைக் காட்டி, ”இவாதான் என்னை அந்த மாதிரி பண்ணா! இவாதான் சொல்லிக்கொடுத்தா! இவாதான் சொல்லிக்கொடுத்தா!”


”ஸாரி பெரியம்மா. உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியாத நிலையில் இருக்கேன்!” சோமசுந்தரம் கியர் மாற்ற கார் வேகம் பிடித்தது.

அதன் கண்ணாடி வழியாக மூவரும் நிற்பதைப் பார்த்தாள் ஈஸ்வரி. புடவைத் தலைப்பில் அழுதுகொண்டு அலமேலு; சங்கிலியைக் கடித்துக்கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி; சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி.

கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு!



 நன்றி - சுஜாதா , உயிர் மெய், சிறுகதைகள்

சென்னை -மைசூர் - ஓடும் ரயிலில் அட்டெம்ப்ட் ரேப் , தொடரும் சம்பவங்கள்

மைசூரு : ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற, நான்கு பேர் கொண்ட கும்பல், அதற்கு அந்தப் பெண் மறுத்ததால், ரயிலில் இருந்து கீழே தள்ளியது. அதிர்ஷ்டவசமாக, வறண்ட ஆற்றில் விழுந்ததால், அப்பெண் உயிர் தப்பினார். இருப்பினும், தலை, கால், முதுகில் காயம் ஏற்பட்டது.




 ரயிலில் பயணிக்கும் இளம் பெண்களை, பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுவது, சமீப நாட்களாக அதிக அளவில் நடந்து வருகிறது.





சி.பி - டெயிலி நைட் ஊர்ல போலீஸ் ரோந்து வர்ற மாதிரி ரயில்லயும் ரோந்து வர விடலாம், இதுல என்ன டேஞ்சர்னா ரோந்து வர்ற போலீஸ் ஒழுங்கா இருக்கனும்..அவரே பயிரை மேஞ்சுடக்கூடாது


கடந்த ஞாயிறன்று இரவு, திருவனந்தபுரம் - சென்னை மெயிலில் குடும்பத்துடன் பயணித்த இளம் பெண் ஒருவரை, அதே பெட்டியில் பயணித்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சத்யன் என்பவர், பலாத்காரம் செய்ய முயன்றார். 



சி.பி - மிலிட்ரி, போலீஸ் ஆட்கள்னாலே ஒரு மிதப்பு வந்துடுது.. நம்மை யாரும் ஏதும் கேள்வி கேட்கமாட்ட்டாங்கன்னு தெனாவெட்டு



அவரை, சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இந்நிலையில், கர்நாடக மாநிலத்திலும், ரயிலில் பயணித்த இளம் பெண் ஒருவரை, நான்கு பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 


சி.பி - நல்லா விசாரிங்க, அதே கும்பல்தான் இதே வேலையை செஞ்சிருக்கும், 2 பக்கமும் 4 பேர்..  2 சம்பவமும் ரயிலில்.. 


கர்நாடக தலைநகர் பெங்களூரில் அனாதை விடுதியில் தங்கி, அங்குள்ள தனியார் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் தையல் கலைஞராக பணியாற்றி வருபவர்சுஷ்மிதா, 19. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பாட்டி மைசூரில் வசிக்கிறார். 


அவரை பார்ப்பதற்காக, நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு, சுஷ்மிதா நேற்றுமுன்தினம் பெங்களூரில் இருந்து மைசூருக்கு, யஷ்வந்த்பூர் - மைசூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.  ரயில் மத்தூர் அருகே செல்லும்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் சுஷ்மிதாவை பலாத்காரம் செய்ய முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிக்க, சுஷ்மிதா முயற்சித்தார். அதற்குள் அக்கும்பல் அவளை ஓடும் ரயிலில் இருந்து, கீழே தள்ளியது.


 அப்போது ரயில் ஷிம்சா ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்ததால், சுஷ்மிதா ஆற்றில் விழுந்தார். ஆற்றில் தண்ணீர் எதுவும் ஓடவில்லை, வறண்டிருந்தது. ரயில் சென்ற பாலத்திற்கும், அவர் விழுந்த இடத்திற்கும் இடையே, 25 அடி உயரம் உள்ளது. இதனால், கீழே விழுந்த சுஷ்மிதாவுக்கு தலை, முதுகு மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.



தீவிர சிகிச்சை சம்பவத்தை கவனித்த பயணி ஒருவர், மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், அப்பெண்ணை மீட்டு மாண்டியா மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயமடைந்திருந்த அவர், நடந்த விவரங்களை கூறினார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 



இச்சம்பவம் தொடர்பாக அக்பர், 24, இம்ரான், 21, ஆகியோரை உடனடியாக ரயில்வே போலீசார் கைது செய்தனர். சுபான், ரபீக் ஆகிய இருவரையும் பாண்டவபுரா ரயில் நிலையத்தில் கைது செய்தனர். இவர்கள் அனைவருமே மைசூருவிலுள்ள கல்யாண கிரியை சேர்ந்தவர்கள். 




போலீசாருக்கு தகவல் சம்பவம் நடந்த போது, பார்த்து கொண்டிருந்த மற்ற பயணிகள், அபாய சங்கிலியை இழுத்தால், குற்றவாளிகள் தப்பி விடுவர் என்ற காரணத்தால், மாண்டியா ரயில்வே நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்து, ரயில் பெட்டி எண்ணையும் குறிப்பிட்டதால், குற்றவாளிகளை மாண்டியா போலீசார் கைது செய்ய முடிந்தது என்று கூறப்படுகிறது.





 சம்பவம் 2

தாம்பரம்: தனியார் பள்ளி பஸ் சீட்டில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி இரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை எரித்ததோடு, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் செய்தனர்.

சென்னை, சேலையூர், இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு சொந்தமாக, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் தினமும் மாணவர்களை அழைத்து வருவதும், விடுவதும் நடக்கிறது. இதற்காக, தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல், முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு பஸ் சென்றது.

விழுந்தது: இந்த பஸ்சில், டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஐந்தாவது இருக்கை அருகே பெரிய ஓட்டை இருந்தது. ஆனால், அதை சரி செய்யாமல் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர். நேற்று மாலை முடிச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பிய டிரைவர் சீமான் பஸ்சை நிறுத்தினார். அங்கு சில மாணவர்கள் இறங்கினர். பின், அங்கிருந்து பஸ் புறப்பட்ட சற்று நேரத்தில், ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு மாணவி முடிச்சூர், பி.டி.சி., குடியிருப்பை சேர்ந்த சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 4, என்ற சிறுமி, ஓட்டை வழியாக விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி இறந்தார்.


ஸ்ருதி ஓட்டை வழியாக விழுந்ததை பார்த்து, சக மாணவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையில் பஸ் அரை கி.மீ., தூரம் சென்று விட்டது. மாணவி பலியானதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்று, மடக்கி, டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த ஒரு போலீசும், பொதுமக்களிடம் இருந்து, டிரைவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், பொதுமக்கள் விடவில்லை. ஆத்திரம் குறையாத மக்கள், கம்பி, கல்லால் பஸ்சை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முடிச்சூர் சாலையில் உடனடியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சமாதானம்: இதற்கிடையில், சிறுமி உடல் கிடந்த இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 40 நிமிடம் கழித்து அங்கு வந்த போக்குவரத்து போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்றனர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த பொதுமக்கள், பேருந்துக்கு தீ வைத்தனர். அது கொழுந்து விட்டு எரிந்ததால், பதட்டம் அதிகரித்தது. தாம்பரம், சேலையூர் உதவி கமிஷனர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பஸ்சின் டீசல் டேங்க் வெடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால், அருகே இருந்த வீடுகளையும், கடைகளையும் பூட்டி விட்டு பொதுமக்கள் ஓடினர். முடிச்சூர் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் வேகமாக திரும்பிச் சென்றன. நீண்ட நேரம் கழித்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், போராடி தீயை அணைந்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து நாசமானது. அதன் பின்னும் ஆத்திரம் குறையாக பொதுமக்கள், சீயோன் பள்ளி உரிமையாளரையும், பஸ்சிற்கு தகுதிச் சான்று வழங்கிய தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி சாலை மறியல் செய்தனர்.

போலீஸ் தாமதம்: பொதுமக்கள் பஸ்சை மடக்கி, டிரைவரை தாக்கியவுடனேயே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் ஆகியும் போலீசார் அங்கு வரவில்லை. அதன்பின் வந்த, ஒரு போலீசும் நிலைமை மோசமானதை அடுத்து, பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாததால், சென்று விட்டார்.

பஸ் பராமரிப்பில் அலட்சியம்: புறநகரில் உள்ள தனியார் பள்ளிகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு வாகனத்தையும் தினசரி சோதனை செய்ய வேண்டும். ஆனால், ஒரு பள்ளியில் கூட, வாகனத்தை முறையாக பராமரிப்பதில்லை. தனியார் பஸ்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தகுதிச் சான்று பெறவேண்டும். அதுபோன்ற நேரங்களில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வாகனங்களை முறையாக சோதனை செய்யாமல் சான்றிதழ் கொடுத்து விடுவதாக பொது மக்கள் புகார் கூறினர்.

அது எங்க பஸ் இல்லை: பள்ளி முதல்வர் மறுப்பு: பள்ளி பஸ்சில் ஓட்டை இருந்தது குறித்து சீயோன் பள்ளி முதல்வர் விஜயன் கூறியதாவது: சம்பவத்திற்கு உள்ளான பஸ், சீயோன் பள்ளிக்கு சொந்தமான பஸ் இல்லை. தனியார் டிராவல்ஸ் பஸ். தனியார் டிராவல்ஸ் பஸ்கள், பள்ளி மாணவர்களை அழைத்து வந்து, கொண்டு போய் விடுகின்றன. இதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த பஸ்களை பராமரிக்க வேண்டியது அவர்களுடைய பணி. பத்து நாட்களுக்கு முன்பு தான், தனியார் டிராவல்ஸ் பஸ் டிரைவர்களை அழைத்து, போக்குவரத்து விழிப்புணர்வு நடத்தினோம். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் டிராவல்ஸ் பஸ்களை ரத்து செய்வது குறித்த முடிவு செய்யப்படும். இவ்வாறு விஜயன் கூறினார்.

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பாப்பப்பசாமியிடம் கேட்டபோது, "தனியார் பள்ளி பஸ் ஒன்று, தகுதிச் சான்றிதழ் பெற வந்தால் பிளாட்பார்ம், புட்போர்ட், மர்காட் சரியாக இருக்க வேண்டும். இரண்டு கதவுகள் போடப்பட்டிருக்க வேண்டும். இடது, வலது ஜன்னல்களில் கம்பிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவசர கால வழி, டயர் மற்றும் மெக்கானிக்கல் நிலைமை சரியாக இருக்க வேண்டும். இதில், ஒன்று கூட சரியில்லை எனில் சான்றிதழ் தரப்படாது. குறிப்பிட்ட பஸ் எப்.சி.,க்கு வந்தபோது, ஓட்டை இருந்திருந்தால், கண்டிப்பாக சான்றிதழ் கொடுத்திருக்க மாட்டோம்,' என்றார்.



சி.பி - பள்ளிக்குழந்தைகள், மாணவ, மாணவிகள் அப்பப்ப் தங்கள் ஸ்கூல், காலேஜ், பஸ் இவற்றில் ஏதேனும் குறை இருந்தா பெற்றோரிடம் தெரிவிக்கனும்.. பஸ்ஸை எரிக்கும் மக்கள் பொறுப்பா தங்கள் குழந்தைகள் தினமும் பயணம் செய்யும் பஸ் பாதுகாப்பானதுதானா? என் செக் பண்ணி இருந்திருந்தா இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும்.. நம்ம குழந்தைகளை நாம தான் பார்த்துக்கனும்.. சம்பாதிக்கற நாய்ங்களுக்கு பொறுப்பு இருக்கனும், அவனுங்க ஃபீஸ் எப்படி கறக்கலாம்னு சிந்திக்கவே நேரத்தை செலவு பண்றானுங்க


நன்றி -தினமலர்

ரஜினி ராணாவுல நடிக்கறதுல என்னா பிரச்சனைனா.... ஜோக்ஸ்

1.மாமியாருக்கு உடல்நிலை எப்படி இருக்கு?ங்குறதைப் பற்றி என் எல்லா டவுட்ஸையும் டாக்டர் தீர்த்துட்டார்



சரி, மாமியாரை எப்போ தீர்க்க போறாராம்?
............




2. உங்க படத்துல எல்லா கேரக்டரும் இலக்கண சுத்தமா பேசறாங்களே?


படத்துல கிளாமரும் இல்லை, கிராமரும் இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாதுனுதான்.
.....




3. இன்ஸ்பெக்டர் பழைய கொலைக்கேஸ்ல ஒரு டவுட். தூசு தட்டனும்.


வேணாம் சார், எனக்கு டஸ்ட் அலர்ஜி.
....



4.உங்க பையன் அடிக்கடி செல்ஃபோன்ல பேசிக்கிட்டே இருக்கானே?


நல்ல வேளை ,பொண்ணுங்க கூட பேசலையே?!




....
5.என் படம் ரிலீஸ் ஆனா ஆடியன்ஸிடம் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.


எனக்கென்னவோ புரொடியூஸர்ஸைத்தான் அதிகம் பாதிக்கும்ன்னு தோணுது.


.....





· · · 26 minutes ago ·

6. டைரக்டர் ரொம்ப நீட்டான சுத்தபத்தமான ஆளுன்னு எப்படி சொல்றீங்க?
அவர் படத்துல குளிக்குற சீன் அதிகமா வருதே?!
.....



7.கட்சி கொஞ்சம் கொஞ்சமா வளருதுன்னு எப்படி தலைவரே சொல்றீங்க?


கட்சில தொண்டர்களோட எண்ணிக்கையைவிட கோஷ்டிகளோட எண்ணிக்கை அதிகமா இருக்கே.


....
8. தலைவரே! கட்சில இப்போ வளர்ச்சி எப்படி இருக்கு?



மகளிர் அணித்தலைவி வயத்துல 3 மாச கரு இப்போ 6 மாசமா வளர்ச்சி அடைஞ்சிருக்கு.



...
9. தலைவருக்கு சினிமா நாலெட்ஜ் சுத்தமா இல்லைன்னு எப்படி சொல்றே?


ரஜினி ராணா படத்துல நடிக்கிறார்ன்னு நியூஸ் வந்ததும் ஆனா, ஆவன்னா-ல நடிக்காம திடுதிப்புன்னு ராணால நடிக்கிறாரே ஏன்? அப்படின்னு கேட்குறாரே ஏன்?
....


10. தலைவர் 5ங் கிளாஸ் படிக்குறப்பவே காப்பி அடிச்சு பரிட்சை எழுதுனவராம்.


ஓஹோ... அதுக்காக, தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சார உத்தி எல்லாவற்றையும் காப்பி அடிக்கனுமா?


.....




Kozhi oda Nadatha sari illa :-(


11. கூட்டணி கட்சித் தலைவர்களை அவரு மதிக்கறதில்லையே ஏன்?



ச்சே! ச்சே! அவரைப் பற்றி தப்பா பேசாதே! அவரு  பொதுவாவே யாரையும் மதிக்கறது இல்லையே!



...
12. கூட்டணிக் கட்சினு சொல்றீங்க? அவர்கூட சேர்ந்து பிரச்சாரம் பண்ண மாட்டேன்னுசொல்றீங்களே ஏன்?


எதுக்குங்க வம்பு? திடீர்ன்னு எதாவது சண்டை வந்துட்டா?..., துஷ்டனைக் கண்டால் தூர விலகுனு பழமொழியே இருக்கு.



....


13 உன் கண்கள் அழகாக இருந்தால் மற்றவர்கள் அழகாகத் தெரிவர்கள். உன் மனம்  அழகாக இருந்தால் மற்றவர்களுக்கு நீ  அழகாக தெரிவாய்.
.....



14. இன்பத்திலயும், துன்பத்திலும் மனம் விட்டு பேச துணை இல்லாத போதுதான் தெரிகிறது அன்பின் பெருமை.
........



15. லைஃப்ல கேர்ள் ஃப்ரெண்ட் கிடைச்சா லைஃப் ஜாலி.
அதே கேர்ள் ஃப்ரெண்ட் லவ்வரா கிடைச்சா பாக்கட் காலி,
அதே லவ்வர் மனைவியா கிடைச்சா.., மவனே லைஃபே காலி. ஜாக்கிரதையா இருந்துக்கோ...,
...




வர்ணங்களின் நெரிசலில்
சிக்கித்திணறுகின்றன
அலகும் கண்களும் கால்களும்
கொஞ்சம் உயிரும்
வாய்க்கப்பெற்ற பஞ்சுகள்


16. மனிதன் செய்யும் மிகப்பெரிய தவறு பாதிதான் கேட்கிறான்(கவனிக்கிறான்)
கால்வாசிதான் புரிஞ்சுக்குறான். ஆனா,  டபுள் அளவு பேசறான்.
..............




17. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த தவறுகளை கண்டறிவதில் குருடனாய் இருக்கிறான்.
....



18. உன் அன்புக்குரிய நபரின் மதிப்பு என்ன? என்பதை உணர வேண்டுமா?
அவங்களை மிஸ் பண்ணி பார்... தெரிஞ்சுடும்.
.......



19. ஆடியன்ஸ் ஜோக்கரை(கோமாளி) எப்பவும் ஜோக்கராத்தான் பாக்குது. ஆனா, அந்த ஜோக்கர் தன்னை ஒரு பர்ஃபார்மரா பார்க்குறான்.

நீதி: மத்தவங்க என்ன நினைக்குறங்கன்னு கவலைப்படாதே.., உன் வழியில் நீ போ...




.....
20. உன் விரல் நகம் போல நான்....

நீ வெட்டி எறிந்தாலும் கூட உன் மீது நான் வைத்துள்ள அன்பு வளர்ந்து கொண்டே இருக்கும்.

Like here first -->> இன்று ஒரு தகவல். Today A Message.
ஓர் இடத்தின் சூழ்நிலை உங்களை

கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்காதீர்கள்.

அந்த இடத்தை விட்டு மாறுங்கள்


Wednesday, July 25, 2012

அச்சக்காடு -கிருஷ்ணா டாவின்ஸி-சிறுகதை ( ராஜபக்சேவுக்கு மரண பயத்தை காட்டிய கதை )

கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன. அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை. ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது.


படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில் துப்பாக்கியுடன் பாரா நடந்த காட்சி ‘சில்-அவுட்’ ஆகத் தெரிந்தது. அந்த நள்ளிரவிலும் கொழும்பு நகர வீதிகளில் எங்கோ ஒரு வாகனம் சக்கரங்களைத் தரை யுடன் தேய்த்தபடி செல்லும் ஓசை. ராணுவ வண்டியாக இருக்கக்கூடும். மகிந்தா ஃபிரிஜ் ஜைத் திறந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருகினார்.


இப்போதெல்லாம் தூக்க தேவதை அவரிடம் கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை. அவர் நிம்மதியாகத் தூங்கிப் பல காலம் ஆகிவிட்டது. கண்ணை மூடினால், குண்டடி பட்டுக்கிடக்கும் பிணங்கள் முன்னே எழுந்து வந்து தொந்தரவுபடுத்தும். ராணுவ உடை அணிந்த, வரிசையான பிணங்களும் எழுந்து நின்று, ‘நாங்கள் சாக வேண்டிய பருவமா இது?’ என்று கேள்வி கேட்கும். அதற்காகவே, அவருடைய கண்கள் மூட மறுக்கும். விடியற்காலையில்தான் உடல் அசதியில் கண்கள் மெள்ளச் செருகும். இரவு சரியாகத் தூங்காததன் விளைவு, அடுத்த நாள் முழுக்க எதிரொலிக்கும். எரிச்சல் கலந்த கடுமையான சில முடிவுகளையும் எடுக்கவைக்கும்.


மகிந்தா மீண்டும் படுக்கையறையை நோக்கி நடந்தார். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. ‘மகிந்தா, நாம் கொஞ்சம் கதைப்போமா?’

மகிந்தா திகைத்தார். உண்மையிலேயே அப்படி ஒரு குரல் கேட்டதா? அல்லது மனப்பிரமையா? பல பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி, அந்தக் குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தார். எதுவும் விசேஷமாகத் தென்படவில்லை. அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

‘மகிந்தா, சோபாவில் பார், உனக்காக நான் அமர்ந்து காத்திருக்கிறேன்.’

மகிந்தா சோபாவைப் பார்த்தார். அவர் ரத்தம் உறைந்தது. வெள்ளி நிற மெல்லிய ஒளிப் பின்னணியில் தகதகக்கும் தோற்றத்தில் அந்த உருவம் அமர்ந்திருந்தது. அந்த உடல், முகம், தலைமுடி, எல்லாவற்றுக்கும் மேலாக, என்றுமே மறக்க முடியாத அந்தச் சிரிப்பு. இது… இது… எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

”ஓய மகிந்தா! நான்தான் லசந்த விக்ரமதுங்க… பத்திரிகை ஆசிரியன். உங்களுடைய பழைய நெருங்கிய நண்பன். பிற்காலத்தில் நீக்கப்பட வேண்டிய எதிரியாகவும் மாறியவன். என்னை அதற்குள் மறந்துவிட்டீர்களா? உங்களை ‘ஓய’ என்று நம் சிங்களத்தில் உரிமையுடன் அழைக்கக்கூடிய ஒரு முன்னாள் நண்பனை அதற்குள் மறந்துவிட்டீர்களா மகிந்தா?” என்றது புகையால் செய்யப்பட்ட அந்த உருவம்.

மகிந்தாவுக்கு நா வறண்டது. கால்கள் நடுங்கின. ”லசந்த… நீ… நீயா? இது எப்படிச் சாத்தியம்? நீ இறந்துவிட்டாய் அல்லவா?”

”இறக்கவில்லை மகிந்தா. இறப்பு என்பது இயற்கையில் நிகழ்வது. நான் கொல்லப்பட்டேன். என் அலுவலகத்துக்குக் காலையில் காரில் வரும்போது, இருபுறமும் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த சில கொலையாளிகள் என்னை வழிமறித்து, கத்திகளாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் தாக்கியதால் ரத்தம் பீறிடக் கொல்லப்பட்டேன். அதற்குள்ளாகவா மறந்துவிட்டாய்?”


உயிரற்ற லசந்தவின் உருவம் இந்தக் கேள்வியைப் புன்னகைத்தபடிதான் கேட்டது. அந்தக் கண்களில் கருணையும் ஞானமும் நிரம்பி வழிந்தன. ஆனால், அந்த அமானுஷ்யமான புன்னகையும், அந்தக் குரலில் நிலவிய அன்பும் மகிந்தாவை நிலைகுலையவைத்தன. லசந்த எதற்கு வந்திருக்கிறான்? பழி வாங்கவா? டிராகுலா போல் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சவா? ஏற்கெனவே பல குடைச்சல்களைக் கொடுத்தவன், செத்தும் மீண்டும் வந்திருப்பது எதற்காக?


”பயப்பட வேண்டாம் மகிந்தா… என்னிடம் ஆயுதங்கள் ஏதும் இல்லை. மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் கிளஸ்டர் குண்டுகள் இல்லை. எதிர்க் கருத்து கொண்டவர்களைத் தீர்த்துக்கட்ட என்னிடம் கூலிப் படை களும் இல்லை. முக்கியமாக என்னிடம் கொலை வெறி என்பது இல்லவே இல்லை. நான் வெறுமனே பேச வந்திருக்கும் வலிமையற்ற ஓர் இறந்த கால மனிதன். நான் உயிரோடு இருந்தவரை அமைதியிலும் சமாதானத்திலும் நம்பிக்கை உள்ளவனாக, அதைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தவனாக இருந்தேன். அதற்காகத்தான் கொல்லப்பட்டேன். இப்போது இறந்த பிறகும் என் கொள்கைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் அப்படியேதான் இருக்கிறேன். பயப்படாமல் என் எதிரே வந்து அமருங்கள். அச்சம் என்பதே வாழ்க்கையாகிப் போனால், எல்லாமே பயங்கரமாகத்தான் தெரியும் மகிந்தா… வாருங்கள், பயப்படாதீர்கள்.”


எதிரே இருந்த நாற்காலியில் தயக்கத்துடன் அமர்ந்தார் மகிந்தா. லசந்தவின் கண்களை அவரால் நேருக்கு நேர் சந்திக்க இயலவில்லை. கண்களைத் தாழ்த்திக்கொண்டார்.

”இன்றைய ராணுவச் செய்தி என்ன மகிந்தா, வழக்கம் போல் வெற்றிச் செய்தியா?” என்றார் லசந்த.

அப்போது அந்த முகத்தில் தெரிந்த சிரிப்பில் ஒருவித கேலி இருப்பது போல் மகிந்தாவுக்குத் தோன்றியது. உடனே மனதில் இயல்பான எதிர்ப்பு உணர்ச்சி எழுந்து, பெரிய எரிச்சலைக் கிளப்பியது. அதனால், உயர்ந்த குரலில் வாய் திறந்தார் மகிந்தா.

”வெற்றி… வெற்றி… இதைத் தவிர, வேறெந்தச் செய்தியும் எப்போதும் இல்லை. லசந்த… நீ உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதுதான் செய்தி. புதுக் குடியிருப்புக்குள் புகுந்துவிட்டது ராணுவம். முழு வெற்றி மிகச் சமீபத்தில் இருக்கிறது. நீதான் தோற்றுவிட்டாய். எல்லாப் பத்திரிகைகளும், இங்குள்ளவை மட்டும் அல்ல… இந்தியாவின் பல முன்னணி தினசரிகளும் எங்களால் கொடுக்கப்படும் வெற்றிச் செய்திகளை மட்டுமே பிரசுரிக்கும்போது, உனக்கு மட்டும் என்ன கேடு வந்தது லசந்த? ஏன் தேவைஇல்லாமல் பல விஷயங்களைத் தோண்டினாய்? கொடுமையாகக் கொல்லப்பட்டு இப்படி ஓர் அருவமாக நீ என்னைச் சந்திக்கத்தான் வேண்டுமா?” என்றார் மகிந்தா கோபமாக.

”நான் எப்போது, யாரால் கொல்லப்படுவேன் என்று எனக்கு முன்பே தெரியும் மகிந்தா. அதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. இதோ, இதே அறையில் நீங்களும் நானும் தேநீர் அருந்தியபடி முன்னொரு காலத்தில், பின் இரவுகளில் எத்தனை கதைத் திருக்கிறோம். அப்போது நீங் கள் மனித உரிமைக்காரராக வும், இடதுசாரிச் சிந்தனை யாளராகவும் கதைத்ததெல் லாம் எப்படிப் பொய்யாகிப் போனது மகிந்தா?” என்ற லசந்தவின் குரலில், ஆதங்கமும் வருத்தமும் கலந்து ஒலித்தது.


மகிந்தா எதிரே இருந்தஉரு வத்தை வெறித்துப் பார்த்தார். ”நீ எப்போதுமே பயங்கரவாதிகளின் பக்கமே இருந்திருக்கிறாய் லசந்த. அதனால்தான் இப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாய். உன்னை இப்படிப் புகை வடிவத்தில் பார்ப்பதற்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா? தேநீர் அருந்துகிறாயா?”


”வேண்டாம் மகிந்தா. நான் எதையும் இப்போது உண்பதில்லை. பேய்களும் பிசாசுகளும் ரத்தத்தை உறிஞ்சும் என்றெல்லாம் எத்தனையோ கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதெல்லாம் பொய். உயிரோடு இருக்கும் மனிதர்கள்தான் சக மனிதர்களின் உயிர்களைப் பருகுகிறார்கள். நண்பர்களின் ரத்தத்தைப் பருகும் மனிதர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்.”

மகிந்தாவிடம் சங்கடமான மௌனம் நிலவியது. அதை உடைக்க, தொண்டையைச் செருமிக்கொண்டு, ”கவலைப்படாதே லசந்த… உன்னைக் கொன்ற கொலையாளிகளை எப்படியும் பிடித்து அவர் களுக்குத் தண்டனை வாங்கித் தருவேன். விசாரணை தொடங்கிவிட்டது தெரியுமா?” என்றார்.

லசந்த சிரித்தார். மெலிதாக ஆரம்பித்த அந்தச் சிரிப்பு, அடக்க முடியாமல் பெருஞ்சிரிப்பாக மாறியது. அந்தச் சிரிப்பு மகிந்தாவுக்கு மறுபடியும் எரிச்சலைக் கிளப்பியது. ஏற்கெனவே அமைதியற்றுக்கிடக்கும் அவருடைய மனத்தை அந்தச் சிரிப்பு மேலும் கூறு போடுவது போல் இருந்தது.

”நிறுத்து உன் சிரிப்பை லசந்த. இந்த அருமையான கோடை இரவின் அமைதியைக் கெடுப்பது போல் சிரிக்காதே” என்று எரிந்து விழுந்தார்.

”சிரிக்காமல் எப்படி இருக்க முடியும் மகிந்தா. ‘கொலையாளிகளைப் பிடிப்போம், விசாரணையைத் தொடங்குவோம். நீதி வழங்குவோம்’ போன்ற வார்த்தைகளைக் கேட்டால், முன்பு கோபம் வரும். ஒரு நிலைக்குப் பிறகு இதெல்லாம் அங்கதம் ஆகிவிடுகிறது. என்னைக் கொன்ற கொலையாளிகளை யார் அனுப்பியது என்று எல்லோருக்குமே தெரியும். அவர்கள் இப்போது எப்படிப் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதும் எல்லோரும் அறிந்ததே. என் மரணத்தில் உங்களுடைய அரசாங்கத்துக்குப் பொறுப்பு இல்லையா மகிந்தா?” என்றார் லசந்த.


மகிந்தா அந்தக் கேள்வியைச் சந்திக்க முடியாமல் தலையைக் குனிந்துகொண்டார். அந்த அமைதியான இரவில் லசந்தவின் குரல் கம்பீரமாக ஒலித்தது. ”கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் இருபது பத்திரிகையாளர்கள் நம் நாட்டில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் மகிந்தா. எனக்கு முன்னால் இசைவிழி செம்பியன், தர்மலிங்கம், சுரேஷ், சிவமகாராஜா, சந்திரபோஸ் சுதாகர், ரஜிவர்மன், பரநிருப சிங்கம் என்று எத்தனையோ பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். உயிரோடு இருப்பவர்களில் பாதிப் பேர் உயிருக்குப் பயந்து வெளிநாடுகளுக்குத் தப்பிவிட்டார்கள். பத்திரிகையாளர்கள் வாழப் பாதுகாப்பற்ற நாடுகளில் உலகிலேயே முதல் இடம் இராக்குக்கு. அடுத்த இடம் இலங்கைக்குத்தான். என்ன மகத்தான சாதனை மகிந்தா?” லசந்தவின் குரலில் எள்ளல் இருந்தது.


”சும்மா புள்ளிவிவரங்களை அள்ளி வீசாதே லசந்த. பயங்கரவாதிகளும்தான் எத்தனையோ பத்திரிகையாளர்களைக் கொன்றிருக்கிறார்கள். நான் ஒவ்வொரு வாரமும் கூட்டும் பத்திரிகை ஆசிரியர்கள் கூட்டத்துக்கு நீ வந்ததே இல்லை லசந்த. வந்திருந்தால் உண்மை என்ன என்பது உனக்கும் புரிந்திருக்கும். ‘நீங்கள் யாருடன் இருக்க விரும்புகிறீர்கள்? பயங்கரவாதிகளுடனா அல்லது மக்களுடனா?’ என்கிற கேள்விக்கு, ‘நாங்கள் மக்களுடன்தான்’ என்று பதில் சொல்லியவாறு எத்தனை பத்திரிகையாளர்கள் என் பக்கம் திரண்டு வந்தார்கள் தெரியுமா? திமிர் பிடித்த நீயும் வேறு சிலரும்தான் வரவில்லை” மகிந்தா கோபமாகச் சொன்னார்.


”நான் மட்டுமா, எத்தனையோ நேர்மையானவர்கள் உங்களைப் புறக்கணித்தார்களே… சண்டே டைம்ஸ்கூட நீங்கள் கொடுத்த விருதைத் தூக்கி எறியவில்லையா? உங்கள் ராணுவத் தரப்புச் செய்திகளை மட்டுமே பல காலம் எழுதி வந்த விசுவாசி இக்பால் அத்தாஸ்கூட வெளிநாடு போய் விட்டார். அவர் இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா?”


மகிந்தா ”என்ன சொல்கிறார்?” என்றார் ஆத்திரத்துடன்.

”போரில் தினமும் பலியாகும் ராணுவத்தினரின் எண்ணிக்கை அரசாங்கம் சொல்வதைக் காட்டிலும் மிக அதிகம். ஆனால், உண்மையான எண்ணிக்கையை என்னால் குறிப்பிட்டு எழுத முடியவில்லை. எழுதினால் எனக்கு என்ன கதி நேரும் என்பதை வாசகர்கள் அறிவார்கள்’ என்று அவர் எழுதிய ஒரே காரணத்தால் பயமுறுத்தப்பட்டார் மகிந்தா. ஏற்கெனவே அவர் வீட்டுக்கு, மலர்வளையத்தை அனுப்பிவைத்தார் சந்திரிகா. அது உண்மையாகிவிடுமோ என்று அஞ்சி, இப்போது வெளிநாட்டுக்குப் போய்விட்டார். ‘இவ்வளவு மோசமான ஒரு சூழ்நிலையை நான் எப்போதுமே சந்தித்ததில்லை. இவ்வளவு பயங்கரமான உயிர் அச்சத்துக்கும் நான் ஆட்பட்டதில்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஒரு பத்திரிகையாளனுக்குக் கொழும்பில் உள்ள பாதுகாப்பு இதுதான்.”



மகிந்தா நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டார். இப்போது தன் பழைய நண்பன் லசந்தவுடன் விவாதிப்பது போன்ற உணர்வே ஏற்பட்டது. லசந்தவைக் கண்டு பெருமூச்சுவிட்டார். ”பயங்கரவாதிகளைவிட ஆபத்தானவர்கள் பத்திரிகையாளர்கள். அவர்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை நான் அறிவேன். நீ ஒரு முட்டாள் லசந்த. எப்படிப்பட்ட வாழ்வு உனக்காகக் காத்திருந்தது? நீ படித்த படிப்புக்கு ஒரு புகழ்பெற்ற வக்கீலாகி இருக்கலாம். சிரீமாவோவிடம் உதவியாளனாக இருந்தவன் நீ. பிறகு பத்திரிகை ஆசிரியனாக மாறினாய். உன் தொடர்புகள் எத்தனை பெரிது! உனக்கு மந்திரி பதவிகூட கொடுப்பதற்குத் தயாராக இருந்தது. வெளிநாட்டில் குடும்பத்துடன் வசதியாக வாழ்ந்திருக்கலாம். நீ எல்லாவற்றையும் தூக்கி எறிந்தாய்… இது தேவைதானா?”



”வேறு என்ன செய்வது மகிந்தா? நான் என் மனச்சாட்சிக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்தது. இந்த யுத்தம் தவறு என்று உரக்கக் கத்த வேண்டும் போல் இருந்தது. என் முன்னாள் நண்பன் தன் சொந்த மக்களின் மேலேயே குண்டுகள் வீசிக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை. அதைக் கண்டித்து எழுத எனக்குப் பத்திரிகை தேவைப்பட்டது. அப்பாவி மக்களை, நம் சக குடிமக்களைக் கொல்வது மட்டுமல்லாது, ஆயுதம் வாங்குவதில் இருந்து இந்த ஆட்சியில் ஒவ்வொரு துறையிலும் நடக்கும் ஊழலைப்பற்றி நான் மக்களிடம் சொல்ல விரும்பினேன். அது என் மரணம் மூலம் பாதியில் தடைபட்டதுதான் ஒரே வருத்தம்.”



”ஆனால், என்னிடத்தில் எந்த வருத்தமும் இல்லை லசந்த. வெற்றி, எல்லாத் தவறுகளையும் மறைத்துவிடும். அந்த வெற்றிக்கான விலை, பல உயிர்கள். போரில் அதைத் தவிர்க்க முடியாது. இப்போது பயங்கரவாதிகளை ஒடுக்கிவிட்டோம். அடுத்த யுத்தம் யாருடன் தெரியுமா? உங்களைப் போன்றவர்களுடன்தான். அந்த யுத்தமும் ஆரம்பித்துவிட்டது. அதிலும் நான் வெற்றி பெறுவேன்.”

லசந்த ஏதும் சொல்லாமல் அவரையே பார்த்தார்.

”என்ன லசந்த, மௌனமாகிவிட்டாய்? வாயடைத்துவிட்டதா?” என்றார் மகிந்தா ஏளனமாக.

”இல்லை மகிந்தா, எத்தனை மாயைகளில் நீங்கள் எல்லாம் வாழ்கிறீர்கள் என்பதை நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. குண்டு போட்டு, குண்டு போட்டு மக்களை அழித்தால், புதிய போராளிகளை உருவாக்கத்தான் முடியுமே தவிர, அமைதியைக் கொண்டுவர முடியுமா? நம் வாழ்வில், கலாசாரத்தில் வன்முறை அழிக்கவே முடியாதபடிக்கு அழுத்தமாகப் படிந்துவிட்டதை நீங்கள் இன்னும் உணரவில்லை. பயம்! அதைத்தான் நீங்கள் இங்கே ஒவ்வொரு மனிதனின் மனதிலும் விதைத்திருக்கிறீர்கள். வெள்ளை வேன் வருமோ என்று பயம், குண்டு வெடிக்குமோ என்று பயம், ஆர்மி உள்ளே வருமோ என்று பயம், பாலியல் பலாத்காரம் செய்யுமோ, கழுத்தில் டயரை மாட்டி எரிக்குமோ, நிற்கவைத்துச் சுடுமோ என்று பயம்… சிறைச்சாலை, சித்ரவதைக் கொட்டடிகளைக் கண்டு பயம். இப்படி முழுச் சமூகத்தையும் பயம் என்னும் சாக்கடையில் மூழ்கவைத்த உங்கள் மனதிலும் பயம் இருக்கிறது மகிந்தா. உங்களுடைய வெற்றிச் சிரிப்பு ஒரு முகமூடி… அதற்குப் பின்னால் இருப்பது பயம் தெரியும் முகம்.”

”நீ முதலில் இங்கேயிருந்து வெளியேறு லசந்த. உன் முட்டாள்தனமான பேச்சை இனியும் என்னால் அனுமதிக்க முடியாது. எங்களுக்குப் பயம் என்பதே இல்லை. எங்களுடைய எதிரிகளுக்குத்தான் பயம். உன்னைப் போன்ற புத்திஜீவிக்களுடன் கதைப்பது வீண் வேலை. வெளியே போ லசந்த… என் கண் முன்னால் இருந்து காணாமல் போ!”

உச்சக் குரலில் கத்திய மகிந்தாவைப் பார்த்துப் புன்னகைத்தார் லசந்த. ”நான் போகிறேன் மகிந்தா. ஆனால், நான் சொன்னது உண்மை என்று உங்களுக்குத் தெரியும். நான் கொல்லப்பட்டாலும், மனச்சாட்சி உறுத்தலின்றி, கடைசி வரை நேர்மையாக வாழ்ந்தேன் என்கிற இறுமாப்புடன் இருக்கிறேன் மகிந்தா. என் மூன்று பிள்ளைகளுக்கும் அப்பாவாக நான் இருக்க முடியாவிட்டாலும், அவர்களுக்கு நான் நம்பிக்கைகளையும் கொள்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறேன். ஆனால், நீங்கள் விட்டுச் செல்லப்போவது என்ன? பயம்… ஒவ்வொரு நொடியும் பயம்… எந்த நேரத்தில்… எது நேருமோ என்கிற பயம்தான் நீங்கள் விட்டுச் செல்லப்போவது. அது இன்றைக்குப் பெரும் காடாக வளர்ந்திருக்கிறது மகிந்த. அந்த அச்சக் காட்டில் நீங்கள் எல்லோரும் காணாமல் போவீர்கள்!” லசந்தவின் உருவம் மெதுவாக அங்கிருந்து மறையத் தொடங்கியது.


மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் மகிந்தா அப்படியே நின்றிருந்தார். லசந்தவின் குரல் அவர் தலைக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. எல்லாம் கனவு போல் இருந்தது. மீண்டும் தண்ணீர் குடிக்க வேண்டும் போல் இருந்தது. திரும்பி நடந்தார்.

அப்போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. எரிந்துகொண்டு இருந்த சில விளக்குகளும் அணைந்தன. இருட்டு வேகமாகப் பரவியது. ‘உடனே பதுங்குங்கள்’ என்கிற குறிப்பை உணர்த்தும் ஆபத்துக் கால சைரன் ஒலித்தது. வாசலில் சென்ட்ரிக்கள் ஓடும் சத்தமும், ‘பதுங்கு… பதுங்கு’ என்கிற சத்தமும் கேட்டது.

மகிந்தா சோபாவின் அடியில் போய்ப் பதுங்கிக்கொண்டார். உடலெங்கும் வியர்த்தது. ஜன்னலுக்கு வெளியே வானத்தில் சின்ன வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு விமானம் கடந்து செல்வதைப் பார்த்தார். அப்போது அவர் முகத்தில் தெரிந்த பயத்தை இருட்டு முழுமையாக மறைத்திருந்தது!


நன்றி - அமரர் கிருஷ்ணா டாவின்ஸி , சிறுகதைகள்


அண்மையில் மரணம் அடைந்த அவரைப்பற்றிய ஒரு கட்டுரை 



மைக்கேல் ஜாக்ஸனின் இறுதிச் சடங்குகள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மிகுந்த வேதனையில் இருக்கிறேன்”. 2009 ஜூலையில் ட்விட்டரில் கிருஷ்ணா டாவின்ஸி எழுதினார். அதன்பின் அதிகமாக கிருஷ்ணா டாவின்ஸியின் எழுத்துக்களை நான் பார்த்ததில்லை. அவரது பெயர் கைபேசியின் திரையில் ஒளிரும்போதெல்லாம் உற்சாகமடைந்திருக்கிறேன். உலக இசையைப் பற்றி புரிதலோடு பேசக்கூடிய மிகக்குறைவான இலக்கிய நண்பர்களில் ஒருவராக அவர் இருந்திருக்கிறார். 2008ல் தொடங்கி மூன்று நான்கு முறைதான் நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் பலமுறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம். சிலமுறை மணிக்கணக்காக! அவ்வப்போது இசை சார்ந்த குறுஞ்செய்திகள் அனுப்புவார். சென்ற வாரம் மும்பையில் ஒரு இசைப்பதிவில் இருக்கும்போது கிருஷ்ணா டாவின்ஸியின் கைபேசியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. கிருஷ்ணா டாவின்ஸி நேற்று மாலையில் காலமானார்’. அதிர்ந்துபோனேன். தொடர்ந்து பலமணிநேரம் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை.


 
ஏ ஆர் ரஹ்மான் இசைக்கான உலக விருதுகளை வாங்கி குவித்துகொண்டிருந்த காலத்தில், முன்பு நான் அவரைப்பற்றி எழுதிய ஆர் கே சேகரிலிருந்து ஆஸ்கார் வரைஎன்கிற கட்டுரையை வாசித்து முதலில் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் கிருஷ்ணா டாவின்ஸி. ‘நான் உங்கள் வாசகன்என்று ஆரம்பித்த அந்த உரையாடலே கிட்டத்தட்ட ஒருமணிநேரம் நீண்டது. பின்னர் ஒருமுறை என் வீட்டுக்கு வந்தார். அந்த சந்திப்பு ஆறு மணிநேரத்துக்குமேல் நீண்டு நள்ளிரவையும் தாண்டிச்சென்றது! இசை, இலக்கியம், இதழியல், வரலாறு, அரசியல், சினிமா, தத்துவம், பகுத்தறிவு என எண்ணற்ற விஷயங்களைப்பற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுமளவுக்கு விஷயமுள்ளவராக அவரை நான் கண்டறிந்தேன். எங்களது உரையாடல்கள் எப்போதுமே நிறைவுபெறாமல் முடிந்தது. பலமணிநேரம் பேசிய பின்னரும் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை என்ற உணர்வு தான் அவரிடம் பேசும்போது எப்போதுமே இருந்தது. 



விகடனில் ஒரு கனவின் இசை என்கிற தலைப்பில் ஏ ஆர் ரஹ்மானைப்பற்றி பலவாரங்கள் விரிவாக எழுதினார் கிருஷ்ணா டாவின்ஸி. அக்கட்டுரைகளில் எனது பெயரையும் வரிகளையும் மேற்கோளாக அவ்வப்போது குறிப்பிட்டார். ஆனால் என்னிடம் அதைப்பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேறு யாரெல்லாமோ படித்து சொன்னபோதுதான் நான் அதை அறிந்துகொண்டேன். ஆனால் அவரது வேறுசில கட்டுரைகள் பிரசுரமானபொழுது அதைப்பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். இணையத்தில் பிரசுரமாகியிருந்தால் அதன் சுட்டியை அனுப்பிவைப்பார். அவரது எழுத்துமுறை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. 


அகிலன் சித்தார்த் என்கிற புனைபெயரில் இளையராஜாவின் சகாப்தம் முடிந்து விட்டதா?என்கிற அவரது இசைக் கட்டுரை ஒன்றை எனக்கு அனுப்பி வைத்தார். வலுவான பல அவதானிப்புகள் இருந்த அந்த கட்டுரையின் தொடக்கமே அற்புதமாக அமைந்திருந்தது. சில நாட்களுக்கு முன்னால் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தங்க நேர்ந்தது. மஞ்சப்பரப்பு என்கிற மலைக்கிராமத்தில் முழுவதும் தேக்கு மரத்திலேயான ஒரு காட்டுப் பங்களா. மின்சாரம் அவ்வப்போது வரும். இரவு நேரத்தில் நிச்சயம் வராது. முதல் ஒரு சில நாட்கள் அந்தக் குளிரும் இரவும் பயமாக இருந்தது. ஒரு இரவில் கும்மிருட்டிலும் குளிரிலும் தூக்கம் வராமல் புரண்ட போது எங்கிருந்தோ அந்த இசை கேட்க ஆரம்பித்தது. ஏதோ ஒரு மலைகிராமத்தில் நடக்கும் திருவிழாவில் போடப்படும் பாடல்களாக இருக்க வேண்டும். ஆழமான பல விஷயங்களை சொல்லப்போகும் ஒரு கட்டுரைக்கு எவ்வளவு சுவாரசியமான துவக்கம்!



எனது இசை சார்ந்த கட்டுரைகள் விகடனிலும் குமுதத்திலுமெல்லாம் வரவேண்டும் என்று அடிக்கடி சொல்வார். முதலில் அவரது தூண்டுதலினாலும் பின்னர் அவரது நண்பர் நா கதிர்வேலனின் கோரிக்கையினாலும்தான் நான் விகடனில் சில கட்டுரைகளை எழுதினேன். குமுதத்திற்காகவும் கட்டுரைகளை கேட்டிருக்கிறார் கிருஷ்ணா டாவின்ஸி. பல காரணங்களினால் எழுதமுடியவில்லை. 


கிருஷ்ணா டாவின்ஸியிடம் ஒருபோதும் அவரது தனிமனித வாழ்க்கையைப்பற்றியோ அவரது குடும்பத்தைப்பற்றியோ நான் பேசியதில்லை. இசை, இலக்கியம், சினிமா என நில்லாமல் தொடரும் பேச்சுக்களுக்கிடையில் அதைக்கேட்க சந்தர்பமே கிடைக்கவில்லை. ஆனால் எனது சில கட்டுரைகளின் வழியாக என் குடும்பத்தைப்பற்றியும் மகளைப்பற்றியும் தெரிந்து வைத்திருந்த கிருஷ்ணா ஒவ்வொரு மின்னஞ்சலிலும் என் குடும்பத்தின் நலனைப்பற்றி விசாரிப்பார். கிருஷ்ணா டாவின்ஸி மறைந்து இரண்டு நாட்கள் கழித்து அவரது மனைவியை தொலைபேசியில் அழைத்தேன். என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினேன். 


முடிவற்ற காலம் நம்முன் பரந்து கிடக்கிறது என்றுதான் நமது அசையாத நம்பிக்கை. அன்பு செலுத்த, அக்கறை காட்ட, நலன் விசாரிக்க, கருணையுடன் செயல்பட...எல்லாவற்றுக்கும் இன்னும் காலம் நிறைய இருக்கிறது என்று நாம் கருதுகிறோம். ஒவ்வொருநாளும் செய்துமுடிக்க வேறு ஆயிரம் இருக்கு என்று இதையெல்லாம் முக்கியத்துவமற்றவையாக நாம் தள்ளிவைத்துக் கொண்டேயிருக்கிறோம்! எல்லாவற்றுக்கும் காலமிருக்கிறது என்பது ஒரு விருப்பக்கனவு மட்டுமே என்று சொல்லியவண்ணம் தனது 46ஆவது வயதிலேயே கிருஷ்ணா டாவின்ஸி சென்று விட்டார். ‘மீண்டும் சந்திப்போம்என்கிற சொல்லாடல் எவ்வளவு அர்த்தமற்றது!




நன்றி : புத்தகம் பேசுது மாத இதழ் (ஏப்ரல் ’12)ஷாஜி

THE JACKAL - ஹாலிவுட் த்ரில்லர் சினிமா விமர்சனம்

http://www.moviegoods.com/Assets/product_images/1020/196421.1020.A.jpg 


யுனைட்டட் ஸ்டேட்டோட FBI நிறுவனம்  வில்லனோட தம்பியை போட்டுத்தள்ளிடுது.. உடனே வில்லன் என்ன செய்வாரு? ஆள் வெச்சு பழிக்கு பழி வாங்குவாரு.. எஸ் அதே தான்... உலக அளவில் புகழ் பெற்ற வாடகை கொலையாளி ப்ரூஸ் வில்ஸ் ஸை நியமிக்கறாரு. அண்ணன் ப்ரூஸ் வில்ஸ் இப்போதான் ஹீரோ.. அப்போ ( 1997)  சத்யராஜ் மாதிரி பயங்கர வில்லன் போல ..

 அண்ணன் களம் இறங்குனது FBI நிறுவனத்துக்கு தெரிஞ்சுடுது.. அதை தடுக்கனும்.. இன்னா பிரச்சனைன்னா ப்ரூஸ் வில்ஸ்ஸை நேர்ல பார்த்த ஆள்ங்க யாரும் இல்லை, ஃபோட்டோவும் இல்லை.. எப்படி ஆளை பிடிக்க?குரூப் டிஸ்கஷன் நடக்குது. 

விசாரணைல இஸபெல்லான்னு ஒரு ஃபிகர்.. ப்ரூஸ் வில்ஸ் பற்றி தெரிஞ்ச ஆள்னு கண்டு பிடிக்கறாங்க.. ஆனா அந்த ஃபிகரை எப்படி கண்டு பிடிக்க? கடவுள் ஒரு கதவை மூடுனா இன்னொரு கதவை திறப்பாரு.. ரஞ்சிதா அந்தாண்ட போனா இந்தாண்ட ஆர்த்தி ராவ் வர்ற மாதிரி.. 


அந்த இஸபெல்லா இப்போ கடத்தல், கொலை எல்லாம் விட்டுட்டு  ஃபேமிலி விமன் ஆகிட்டாங்க.. அதாவது பங்களா ஒயிஃப். வீட்டோட இருந்தா அது ஹவுஸ் ஒயிஃப்.. அந்த ஃபிகருக்கு ஒரு முன்னாள் காதலர்.. அவர் தான் படத்தோட ஹீரோ.. அவரு ஜெயில்ல இருக்காரு.. இவரும் கேடிதான்.. ஆனாலும் நல்ல கேடி.. 


 கேடின்னாலே மோசம் தான். அதென்ன? நல்ல கேடி? கெட்ட கேடி? கேடி ஹீரோவா இருந்தா அவன் நல்ல கேடி, வில்லனா இருந்தா அவன் கெட்ட கேடி.. இந்த கேசை டீல் பண்ற ஒரு லேடி இன்ஸ்பெக்டர் தான் ஹீரோயின்.. இசபெல்லாவை சந்திச்சு ப்ரூஸ் வில்ஸ் பற்றி டீட்டெயில் வாங்கற பிராசஸ்ல ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் லவ் பிராசஸ் ஆகிடுது..

வில்லன் ஒரு பக்கம் கொலை செய்ய செம பிரில்லியண்ட்டான ஐடியாவோட களம் இறங்கறார்.. ஹீரோ, ஹீரோயின் , போலீஸ் குரூப் இன்னொரு பக்கம் அந்த வில்லனை தேடி களம் இறங்கறாங்க.. க்ளைமக்ஸ்ல ஒரு ட்விஸ்ட்.. என்ன நடக்குதுன்னு படத்துல பாருங்க.. பர பர ஆக்‌ஷன் த்ரில்லர்.. ஒரு சீன் கூட போர் அடிக்கலை.. 





படத்துல முத பாராட்டு ஹீரோவுக்கு.. ஆ. சாரி வில்லன் ப்ரூஸ் வில்ஸ்க்கு.. என்னா தெனாவெட்டு..  நடிப்பு, ஆக்‌ஷன், பாடி லேங்குவேஜ் எல்லாம் அசத்தல்.. 


ஹீரோ அவ்வளவா எடுபடலை.. ஹீரோயின் 65 மார்க் ஃபிகர்.. ஓக்கே.... அந்த இசபெல்லா ஒரு மொக்கை ஃபிகர்.. வேற ஆளை போட்டிருக்கலாம்.. 



இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
http://i296.photobucket.com/albums/mm191/ekuerste/CarlostheJackal.jpg


1. ஒரு ஆக்‌ஷன் படம் ஹிட் ஆகனும்னா எப்பவும் பவர் ஃபுல் ரோல்ல வில்லன் இருக்கனும்.. அந்த வில்லனை ஹீரோ ஜெயிச்சா தான் கெத்து.. நம்ம ஊர்ல கேப்டன் பிரபாகரன் மன்சூர் அலிகான் ஏற்று நடிச்ச வீரபத்ரன் கேரக்டர் மாதிரி.. அந்த வகைல இந்தப்படத்துல வில்லன் கேரக்டரைசேஷன் செம.. அதுக்கு ப்ரூஸ் வில்ஸ் உயிர் கொடுக்கும் நடிப்பு.. அம்சம்.. 



2. போலீஸ் ஆஃபீசரா வர்ற ஹீரோயின் , ஹீரோ இருவருக்குமான காதல் அரும்பும் இடங்கள்  ஏ ஆர் முருக தாஸ் படமான தீனா - அஜித் -லைலா மாதிரி ஒரு அழகிய கவிதை.. ரொம்ப நுணுக்கமா சொல்லபப்ட்டிருக்கு.. 



3. வில்லன் கொலை பண்ண யூஸ் பண்ணும்  மெகா பீரங்கி ஷேப் கன்னை வடிவமைக்கும் ஆள் அதிக தொகைக்கு ஆசைப்படுவதும் டெஸ்ட் ஷூட் ல வில்லன் அவனை போட்டுத்தள்ளும் பரபரப்பான பத்து நிமிடங்கள் சபாஷ் டைரக்சன்


4. வில்லன் ஆயுதக்கிடங்கில் பார்வையிடும்போது பல துப்பாக்கிகளைப்பட்ட விபரங்களை ஃபிங்கர் டிப்ஸில் வைத்திருந்து துல்லியமாக அது பற்றி விவரிப்பது..


5. கதைக்கு தேவை இல்லாத கேரக்டர் என தீர்மானித்து இசபெல்லா கேரக்டரின் கணவரை கடைசி வரை சீன்க்கு கொண்டுவராதது.. 



http://www.magweb.com/picts/actor/47439/diane_venora.jpg


 இயக்குநரிடம் சில கேள்விகள்



1. மாறுவேஷத்தில் வரும்போது வில்லன் ஜஸ்ட் ஒரு ஒட்டு மீசைதான் வெச்சிருக்கார்? எங்க ஊர்ல கமல், சூர்யா எல்லாம் டோட்டலா முகத்தையே மாத்திக்கறாங்க.. இன்னும் எம் ஜி ஆர் காலத்துல இருந்தா எப்படி?


2. ஸ்பெஷல் கன்னை வடிவமைச்சுக்கொடுத்தவன் எதுக்காக திடீர்னு அதிக பணத்துக்கு ஆசைபப்டறான்.. இந்த மாதிரி சட்டத்துக்கு புறம்பான வேலைகளில்  இந்த மாதிரி பேச்சு மாறுவது டேஞ்சர்னு தெரியாதா? அப்படியே கேட்டாலும் வில்லன் டெஸ்ட் ஷூட்க்கு தனி இடத்துக்கு கூப்பிட்டதும் பலி ஆடு மாதிரி யாராவது தனியா போய் மாட்டுவாங்களா? 


3. வில்லன் தன்னை கொலை பண்ணப்போறான்னு தெரிஞ்சுடுச்சு.. முடிஞ்ச வரை எதிர்த்து போராடாம ஏன் அவன் அப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி நடுங்கறான்? பல துப்பாக்கிகளை வடிவமைப்பவன் தன் பாதுகப்புக்கு ஒரு கன் கூட வெச்சிருக்க மாட்டானா? ஏன் வில்லன் சொல்ற படி எல்லாம் ஆடறான்?



4. ஒரு சீன்ல ஹீரோ வில்லனை பார்பர்ல அடச்சே ஹார்பர்ல பார்க்கறான்.. அப்போ ஹீரோ நிராயுத பாணி.. வில்லன் கிட்டே கன் இருக்கு.. டக்னு சுட்டிருந்தா மேட்டர் ஓவர். வில்லன் ஸ்டைலா எதுக்கு டாட்டா எல்லாம் காட்டி டைம் குடுக்கறாரு?



5. பங்களாவுல நுழைஞ்ச போலீஸ் குரூப்பை டைவர்ட் பண்ண வில்லன் டேப் ரெக்கார்டரை தோட்டத்துல வெச்சு கவனத்தை திசை திருப்பறார்.. போலீஸ்ல பாதிப்பேரு திசை மாறுனா ஓக்கே./.  டோட்டல் குரூப்பும் பேக்கு மாதிரி அங்கே வந்து மாட்டுமா.?


6. படத்துல ஹீரோவோட முன்னாள் காதலிதான் இசபெல்லா.. இந்நாள் காதலி போலீஸ் ஆஃபீசர்.. அதனால வில்லன் இசபெல்லாவை ஷூட் பண்ற மாதிரி காட்டி இருக்கலாம்.. போலீஸ் ஆஃபீசரை அவன் ஏன் ஷூட் பண்ணனும்? அவனுக்கும், அந்தம்மாவுக்கும் என்ன பகை? சும்மா ஆடியன்ஸிடம் இரக்கத்தை சம்பாதிக்கவா? தன் இருப்பிடத்தை, தன்னைப்பற்றிய தகவலை தந்த இசபெல்லாவை சுட்டா அதுல ஒரு லாஜிக் இருக்கு.. 


7. க்ளைமாக்ஸ்ல ஹீரோ வில்லன் காரை பார்த்துடறார்.. அதுல தான் ஆட்டோமெடிக் ஷீட்டிங்க் கன்  ஃபிட் பண்ணி இருக்கு. பார்த்த உடனே அதை ஷூட் பண்ணி இருந்தா மேட்டர் ஓவர்.. ஆனா ஹீரோ நல்ல நேரம் பார்த்து டைம் வேஸ்ட் பண்றாரே? ஏன்?


http://files.mymovies.dk/Photos/965b54a7-20e7-439c-9085-453850c0698b.jpg
மனம் கவர்ந்த வசனங்கள்



1.  என் நண்பனுக்கே இந்த கதின்னா என் எதிரிக்கு என்ன ஆகும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிப்பாரு. 


2.  ஒரு ஆர்ட் என்பது எங்கே வேணாலும் இருக்கலாம்.. போலி ஐ டி கிரியேட்டிங்க்ல கூட ஆர்ட் ஒளிஞ்சிருக்கும்



3. எதுக்காக கனடா போறே?


 மீன் பிடிக்க 



4. இசபெல்லா எங்களுக்கு  உதவி செஞ்சா  ஸ்பெயினுக்கு எந்த மேட்டரும் தெரியாம நாங்க பார்த்துக்கறோம்.. 


 ஹா ஹா அப்போ மொத்தத்துல உங்களுக்கு இசபெல்லா,ஜாக்கல் 2 பேர் பற்றியும் எதுவும் தெரியாது..?


5. உங்க ஆஃபரை குப்பைல போடுங்க .. ரஷ்யாவுல எல்லாம் சரண்டர் ஆனா  யாரா இருந்தாலும் பெயில் குடுப்பாங்க 



6. அழகான பெண்ணைப்பார்த்தா எல்லாம் மறந்துடுது


7. என் பழைய விஷயம் எதையும் என் கணவர் தெரிஞ்சுக்க விரும்ப மாட்டார்.  அவரை நான் லவ் பண்ணாலே அவருக்கு போதும்



8. சாரி.. உங்களால அந்த நிம்மதியை தர முடியாது.. நைட் நான் கண்ணை மூடினா நிம்மதியா இப்போ தூங்கறேன்.. உங்க கூட இருந்தா அது முடியாது. 

 ( ஹலோ மேடம் தூங்க விடறவனை விட தூங்க விடாம அன்புத்தொல்லை தருபவன் தான் நல்ல புருஷன் ஹி ஹி )


9. பாஸ்கியோ இனத்தவர் கொடூரமானவர்கள், யாராவது பிடிகலைன்னா உடனே அவங்களை மர்டர் பண்ணிடுவாங்க ( ஜெயா டி வி பாஸ்கிக்கும் இதுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?)


10. யாரையாவது கொல்றதை யே பெருமைன்னு அவன் நினைக்கறவன்.. ஒரு பெரிய  மனுஷனை, வி ஐ பியை கொல்றோம்கறது அவனுக்கு ஒரு திருப்தி, ஈகோ 



11.  தப்பு பண்ணுனா மன்னிப்பே கிடையாதுங்கற தொழில்ல அவன் இருக்கான். அவன் தப்பு பண்ணுவான்னு நீ எப்படி எதிர்பார்க்கறே?


12. தைரியசாலிங்க எப்பவும் ஓடி ஒளிய மாட்டாங்க


13. ரஷ்யன் கவர்மெண்ட் கிட்டே உளவாளியா ஒர்க் பண்றது சாதாரண விஷயம் இல்லை



14. வாழ்க்கைல யாரையாவது நம்பனும்...... 




http://i54.photobucket.com/albums/g103/Barrington_Bond/Babes/lifeforce095.jpg

சி.பி கமென்ட் - படம் விறு விறுப்பான ஆக்‌ஷன் த்ரில்லர்.. பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் கண்ணியமாக நெறியாள்கை செய்யப்பட்டிருக்கு. 



Cast






Directed by Michael Caton-Jones
Produced by James Jacks
Sean Daniel

Michael Caton-Jones

Kevin Jarre
Written by Chuck Pfarrer
Based on screenplay The Day of the Jackal by
Kenneth Ross
Starring Bruce Willis
Richard Gere

Sidney Poitier

Diane Venora
Music by Carter Burwell
Cinematography Karl Walter Lindenlaub
Editing by Jim Clark
Distributed by Universal Pictures
Release date(s)
  • November 14, 1997
Running time 124 min.
Language English
Russian
Budget $60 million[1]
Box office $159,330,280[1]a