Monday, November 10, 2025

ஆரோமலே (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் ட்ராமா )

             

      இந்தப்படத்தை  விரும்பிப்பார்க்க இரண்டு  காரணங்கள் .

 1 வெட்டு , குத்து , ரத்தம் ,வன்முறை இல்லாமல் ஒரு படம் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிடுச்சு  .

2  இதுதாண்டா போலீஸ்  ராஜசேகர் - உறவைக்காத்த கிளி    ஜீவிதா  தம்பதியினரின் மகள்  தான் படத்தின் நாயகி 


விண்ணைத்தாண்டி  வருவாயா? ராஜாராணி   சாயல்  இருந்தாலும்  பார்த்து விடலாம்  என முடிவு செய்தேன்     . காமெடி  நடிகர்  தியாகுவின்  மகன் சாரங்க் தியாகு அறிமுக இயக்குனர் ஆகி  இருக்கும் படம் . 


 ஆராமலே  என்றால்  என் அன்பெ  என்று பொருள் விண்ணைத்தாண்டி  வருவாயா?   படத்தில்   வரும்  பாடல்  வரியில்  வரும்  சொல்  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  சின்ன வயதில்  ஸ்கூலில்  படிக்கும்போது  , காலேஜில் படிக்கும்போது  தலா  ஒரு   ஒரு தலைக்காதல் . இரண்டுமே  தோல்வி .இப்போது  வேலைக்குப்போகலாம் என ஒரு கம்பெனியில் வேலைக்குச்செல்கிறான் 


 நாயகி தான் அந்தக்கம்பெனியில்   நாயகனுக்கு  உயர் அதிகாரி . ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் ஆன நாயகிக்கும், நாயகனுக்கும் ஒத்துப்போவதில்லை .ஒரு கட்டத்தில்  கம்பெனி வேலையில் ஒரு  தோல்வியை சந்தித்த  அவமானத்தில் நாயகி  2 நாட்கள்  கம்பெனிக்கு வராமல் இருக்க   நாயகன் ஆறுதல் சொல்ல நாயகி வீட்டுக்குப்போகிறான் . 


  அவனது  பரிவான சொல்லால் நாயகி  மனம் மகிழ்கிறாள். அது காதல்  ஆக மலர்கிற்து . நாயகன் ஒரு நாள் நாயகியிடம், வெளிப்படையாக ஐ லவ் யூ சொல்ல  நாயகிக்கு ஏதோ ஒரு  விஷயம்  தடங்கல் ஆக  இருக்கிறது. நாயகி  வேலையை ரிசைன் செய்து விட்டு வெளிநாடு போய் விடுகிறாள் 


 இதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை. இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது க்ளைமாக்ஸ் 


நாயகன் ஆக  கிஷன் தாஸ் பக்குவமான நடிப்பு . ஸ்கூல்  மாணவன் ஆக  அவரது  கெட்டப் அருமை . இரு காதல்  தோல்விகளை சொன்ன விதத்தில் அவரது கேரக்டர்  மனசுக்கு  நெருக்கம் ஆகி விடுவது பிளஸ் 


நாயகி ஆக   சிவாம்பிகா  அம்மா ஜீவிதா  சாயல்  அதிகம் இல்லை என்றாலும்  அழகான முகம், பாந்தமான நடிப்பு என கொள்ளை கொள்கிறார் . ஜீவிதாவுக்குக்கண்கள்  உயிர்ப்பானவை . ஹலோ  யார் பேசறது படத்தில் அவர் காட்டிய பய உணர்வு  செமயாக இருக்கும் . அந்தக்கண்களோடு அப்பீடு செய்கையில்   சிவாம்பிகா  கண்கள்  சுமார் ரகம் தான் , ஆனால்  கூந்தல் அடர்த்தியில் அம்மாவை மிஞ்சுகிறார்


 வி டி வி கணேஷ்  கல கலப்பான நடிப்பு . நாயகனின் நண்பன் ஆக வரும் ஹர்சத் கான் பேசும்  ஒன் லைனர்கள்  தியேட்டரில் கை தட்டல்களை அள்ளுகின்றன / முயன்றால் சந்தனம் இடத்துக்கு  வரலாம் , நாயகனின் அம்மாவாக வரும் துளசி , நாயகியின் தாத்தாவக வரும் காத்தாடி ராமமூர்த்தி  நடிப்பு கச்சிதம் 


சித்து  குமாரின்  இசையில் பாடல்கள்  ஓக்கே ரகம் , பின்னணி இசை குட் கவுதம் ராஜேந்திரனின்  ஒளிப்பதிவு  அருமை . ப்ரவீன் ஆண்ட்டனியின்    எடிட்டிங்கில்  படம் 2 மணி நேரம் ஓடுகிறது 


நாயகன்  ஆக  நடித்த  கிஷன் தாஸ் , அறிமுக இயக்குனர் சாரங்க் தியாகு  ஆகிய இருவருடன் இணைந்து இன்னமும் மூவர்   ஆக மொத்தம் ஐவர் திரைக்கதை  அமைத்து  இருக்கிறார்கள் 


சபாஷ்  டைரக்டர்


1   ஜாதிகள்  இல்லையடி   பாப்பா  என்ற  வாசக பனியன்    அணிந்த சுசீலாவின் அப்பா  எங்க ஆளு தான் மாப்பிள்ளையா வரனும் என்பது டைரக்சன் டச் 


2  நாயகியின்  அம்மா  காதல்  என்றால் என்ன  என்பதை  தன் மகனிட ம்  விளக்கும் சீன் அருமை . என் முன்னால்  காதல்  பற்றி  ஒரு நாள்  கூட அவர் என்னிடம் பேசியதில்லை, அதுதான்  எங்களுக்குள் இருக்கும் லவ் என்றி அவர் சொல்லும்போது நெகிழ்ச்சி 


3   நாயகியின் பெயர் அஞ்சலி  என வைத்து விட்டு  டூயட் படத்தில் வரும் அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி  பாட்டையும் , மணிரத்னம் இயக்கிய  அஞ்சலி படத்தில் வரும் டைட்டில்  ஸாங்கையும்  சாமார்த்தியமான இடங்களில் புகுத்திய விதம் 

4 நாயகியை  கண்ணியமான  உடையில் காட்டியதும்  அவரது  ஃபிளாஸ்பேக் என்ன? என்பதை சொல்லாமல் வலியைக்கடத்தியதும் அருமை 



  ரசித்த  வசனங்கள் 


1   முதல்  காதல் புட்டுக்கிச்சாம், சார் ஃபீல்  பண்றார், என்னதான்  ஊரே சிரிச்சாலும் வலி வலி தானே? 


2   மிஸ், நீ காலேஜ்ல முதல் வருசமா?


 நீ?

நான்  2 வது வருசம் 


 நான்   3 வது வருசம்  


3   அம்மா  அடிச்சதுக்கா  இவ்ளோ ஃபீல்  பண்றே? எங்கம்மா எல்லாம் தோசைக்கரண்டியை தோசைக்கல்லில் வைத்ஹதை விட என் தொடையில் சூடு வெச்சதுதான் அதிகம் 


4    என்னது ? மேட்டருக்கு மணியா? 

  அய்யோ  ராமா,  மேட்ரிமோனியல்  டா 


5     வேலை  பிடிக்கலைன்னு  வந்துட்டேன் 


 வெரிகுட். நமக்கு  வேலை  பிடிக்கலைன்னா அப்படித்தான் வந்துடனும் 

 ஐ  மீன்  என்  வேலை  அவங்களுக்குப்பிடிக்கலைன்னு என்னை அனுப்பிட்டாங்க 

6  முதல் தடவையா  ஒரு பெண்ணைப்பார்த்து லவ் வராம பயம் வந்திருக்குங்கற  எவ்ளவ் பெரிய முன்னேற்றம்  தெரியுமா?  


7  இங்கே  யாருமே  அவங்களுக்குப்பிடிச்ச வேலையைப்பார்க்கறது இல்லை, கிடைச்ச வேலையைப்பிடிச்ச மாதிரி  பார்த்துக்கறாங்க 


8   எனக்கு  தோல்வி புதுசு இல்லை , சின்ன   வயசில இருந்து  பல தோல்விகளைப்பார்த்து இருக்கேன் 


9   என்   வாழ்க்கைல நடந்த ஒரு விஷயத்தை உன் கிட்டே  சொல்லலைன்னா அதைப்பற்றிப்பேச எனக்கு விருப்பம் இல்லைன்னு அர்த்தம் 


10    மேலே  தெரியுது நிலா , நாம் இருவரும்   போலாம்  இன்ப உலா  என ரைமிங்கா எதுனா பேசு 


 இன்னைக்கு அமாவாசை 


11   இது  லவ்வா? இல்லையா?ன்னு தெரியலை , முதல்ல  எனக்கு  லவ்வுன்னா என்ன?ன்னே தெரியலை 


12   புரியாதபோது வர்றதும் , புரிஞ்ச பின் நம்மை விட்டுப்போவதும்தான் லவ் 


13   அவங்க  ரெண்டு  பேரும்  ஒருவரை ஒருவர் பார்த்துக்கிட்டாப்போதும் , மத்ததை  லவ் பார்த்துக்கும் 


14  நல்ல  காம்பினேஷன் , கெட்ட காம்பினேஷன்   என எதுவும் இல்லை , எல்லாம் நம்ம மனசு தான் காரணம் 


15  காதலைத்தேடிட்டுப்போக முடியாது , கொடுக்கத்தான் முடியும், எப்போ நீ கொடுக்கத்தயாரா  இருக்கியோ  அப்போ  காதலே உன்னைத்தேடி வரும், 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    முதல்  பாதியில்  கம்பெனியில்   ஒரு கேஸ்  விஷயம் , பின் பாதியில் இன்னொரு கேஸ்  விஷயம்  ஆகியவையே  திரைக்கதையை ஆக்ரமிக்க நாயகன் நாயகி நெருக்கத்துக்கு இடம் இல்லை . அது  ஆடியன்சுக்கு  கனெக்ட் ஆகுமா? 


2   ஒரு   அம்மா  தன் மகனிடமே  தன்னுடைய  மோசமான பக்கத்தை சொல்வாரா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன் யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   காதலர்களுக்கும் , தம்பதிகளுக்கும் பிடிக்கும் ஒரு ஃபீல் குட் மூவி  தான் . பார்க்கலம் . விகடன் மார்க் யூகம் 42 , குமுதம் ரேங்க்கிங்க்   நன்று  . ரேட்டிங்க் 2.75 / 5 


Aaromaley
Theatrical Release Poster
Directed bySarang Thiagu
Written bySarang Thiagu
Screenplay bySarang Thiagu
Kishen Das
Kaushik Sampath
Ashameera Aiyappan (additional)
Bipin R. (additional)
Produced byS. Vinod Kumar
Starring
CinematographyGowtham Rajendran
Edited byPraveen Antony
Music bySiddhu Kumar
Production
company
Mini Studio LLP
Release date
  • 7 November 2025
Running time
127 minutes[citation needed]
CountryIndia
LanguageTamil

Friday, November 07, 2025

கம்பி கட்ன கதை (2025)-தமிழ் - சினிமா விமர்சனம் (மொக்கைக்காமெடி ட்ராமா)

                             



ஸ்பாய்லர்  அலெர்ட்

உலகப்புகழ் பெற்ற கோகினூர் வைரம் ஒரு இடத்தில் இருக்கு.அதை ஆட்டையைப்போட ஒரு அரசியல்வாதி விரும்புகிறான்.அந்த வேலையை செய்ய உகந்த ஆள் நம்ம நாயகன் தான் என ஒரு போலீஸ் ஆபீசர் சிபாரிசு செய்யறார்


நாயகன் ஒரு டுபாக்கூர்   பேர்வழி.வெளிநாடு கூட்டிட்டுப்போறேன் என ஏமாற்றிப்பணம் பறிப்பவர்.அவரிடம் இந்த வேலையை ஒப்படைத்ததும் அவர் வைரத்தைத்திருடி தானே வைத்துக்கொள்ளத்தீர்மானிக்கிறார்


போலீஸ் நாயகனைக்கைது செய்கிறது.பல மாதஙகள் கழித்து ரிலீஸ் ஆகும் நாயகன் தான் வைரத்தை ஒளித்து வைத்த இடத்துக்கு வந்தால் அங்கே ஒரு கோயில் கம் ஆசிரமம் உருவாகி இருக்கிறது


நாயகன் தானும் ஒரு சாமியார் போல் உள்ளே நுழைந்து அந்த ஆசிரமத்தில் செய்யும் கூத்துக்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆக நட்டி என்கிற நடராஜ்.அசால்ட் ஆக நடித்திருக்கிறார்.

நித்யானந்தாவாக அவர் உருமாறிய பின் கலகலப்பு அதிகம் இல்லை.நடிகை ஜிஞ்ஜிதா ஆக ஸ்ரீ ரஞ்சனி.அதிக வேலை இல்லை. 


நாயகனின் பி ஏ ஆக சிங்கம்புலி கலகலப்பு ஊட்டுகிறார்.

 ஆசிரமத்தில் உலா வரும் இளம் ஜோடி ஆக முகேஷ் ரவி - ஷாலினி   

பூனை சுல்தான் ஆக வரும் கோதண்டம்,அவரது பி ஏ ஆக வரும் சாம்ஸ் ,முருகானந்தம் ஆகியோர் நடிக்க அதிக சான்ஸ் இல்லை


கதை திரைக்கதை வசனன் தா முருகானந்தம்.

இயக்கம் அறிமுக இயக்குனர் ராஜநாதன் பெரியசாமி


சபாஷ்  டைரக்டர்


1 நித்யானந்தா வை வைத்து ஒரு கதை பண்ணலாம் என்ற ஐடியா குட்.

2 சதுரங்க  வேட்டை மாதிரி ஒரு படம் என சொல்லி நட்டியிடம் கால்ஷீட் வாங்கிய லாவகம்

3 தீபாவளி ரேசில் ஓட விட்ட தில்


  ரசித்த  வசனங்கள் 


1 குயின் பர்ஸ் ல பென்குயின்?

2 அவன் ஒர்ஸ்ட்லயே பெஸ்ட்

3 நல்லா மூச்சை  உள்ளே இழுத்து. வெளியே விடுங்க


அய்யோ,என்னால முடியல


உங்களால முடியும்.வயசு கம்மிதானே?


4 போலீஸ்காரர் சகவாசம் என்பது ஆசிட்ல ஆயில் பாத் எடுப்பது போல


5 சுதந்திரக்காத்து சுத்தமாவே இல்லையே?


6 பெரிய இடங்களில் டிரைவர்,சமையற்காரன் இவஙகளுக்குத்தான் மொத்த ரகசியமும் தெரியும்


7  என் ஆள் எனக்கு உசுரு ,ஆனா அவஙகப்பன் ஒரு பிசிறு

8 பெண்களைக்குறு குறு என்று பார்ப்பவர் தான் குருநாதர்

9  சூரியகாந்தி சூரியனுக்குக்கட்டளை இடலாமா?

10 வாழ்க்கைல பணம் இருந்தும் பொண்ணுங்க இல்லைன்னாலும் வேஸ்ட்டு ,பொண்ணுங்க இருந்து பணம் இல்லைன்னாலும் வேஸ்ட்டு

11 பூஜைக்கு கன்று மட்டும் இருந்தாப்போதுமே?எதுக்கு பசுவும் வந்திருக்கு?


குருவே! நான் வேணா பசுவை ஓட்டிட்டுப்போகட்டுமா?


12 இது என்ன பிக்பாசா? எதுக்கு  இவ்ளோ சத்தம்?


13  யாழினி ரூம்க்கு நீ ஏன் வந்தே?


நீ ஏன் வந்தே?


 நீ கத்தறதைக்கேட்டு வந்தேன்


நான் கத்தறதுக்காக வந்தேன்

14 சுவாமி ,உங்களைத்தான் நம்பி இருக்கேன்


நம்பிக்கை வீண் ஆகாது.மோர் தேன் ஆகாது


15  சுவாமி! அம்மாக்கிளியை மட்டும் என் கிட்டே விட்டுடுங்க.

உன் கிளி இன்னமும் உயிரோடவா இருக்கு?


அப்பப்ப பறக்கும்

16  விஷத்தைக்குடிச்சுட்டேன்

ஏன்?


வாழப்பிடிக்கலை


வாழை பிடிக்கலைன்னா என்ன? இங்கே எத்தனை வேற வகைப்பழங்கள் இருக்கு ?


17  மன்னா! 81 மனைவிகளை எப்படி சமாளிச்சீஙக?


ஆளுஙகளை வெச்சுத்தான்


18  என்னது? அவஙக ராணி இல்லையா?


 ஆம்,ராஜாராணி


19  இருக்கும் வரை அமெரிக்க டாலர்.அதுக்கும் மேல முருகன்அலெர்ட்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 திரைக்கதையில் சரக்கு இல்லை

2  சுந்தர் சி படஙகளைப்பார்த்து இன்ஸ்பயர் ஆனது.

3 மொத்தமா 2 மணி நேரம் 12 நிமிடஙகள் ஓடும் படத்தில் 10 நிமிடஙகள் கூட சிரிப்பு இல்லை 



 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  டி வி ல போட்டா ஆண்கள் மட்டும் பார்க்கலாம்.எதையும் தாங்கும் இதயம் அவஙகளுக்குத்தான் உண்டு.ரேட்டிங்க் 1.5 /5. விகடன் மார்க் யூகம் 30

Thursday, November 06, 2025

ஆண் பாவம் பொல்லாதது (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா)

                        


    தலைவன் தலைவி படத்தின் கான்செப்ட் தான்,ஆனால் அதை விட ரசிக்கும் விதத்தில் திரைக்கதையில் விளையாடி இருக்கிறார்கள். அனைத்துத்தம்பதியினரும் பார்க்க வேண்டிய இப்படம் 31/10/2025 முதல் திரை அரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப்பெற்று  இருக்கிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ,நாயகி இருவரும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.


நாயகன் அம்மா ,அப்பா போல பழமையான ,பாரம்பரியமான வாழ்க்கையைப்பார்த்து வளர்ந்தவன்,நாயகி முற்போக்கு எண்ணம் கொண்ட பெண்.இருவருக்கும் கருத்து மோதல் எழுகிறது.


டைவர்ஸ் வரை போகிறது.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை


நாயகி ஆக மாளவிகா மனோஜ் குடும்பப்பாங்கான கண்ணியமான தோற்றத்தில் அழகாக வருவதுடன் பிரமாதமாக நடித்திருக்கிறார்.படத்தில் வரும் 5 முக்கியக்கேரக்டர்களில் இவர் தான் நெ 1.

ரீல்ஸ் போடுவது ,தம் அடிப்பது ,புருசனை  எதிர்த்துப்பேசுவது  என இக்காலப்பெண்களைக்கண் முன் நிறுத்துகிறார்ம்


நாயகன் ஆக ரியோ ராஜ்.இதற்கு முன் சில படஙகளில் நடித்திருந்தாலும் இதில் மெச்சூர்டான நடிப்பு. 


நாயகனுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல் ஆக விக்னேஷ் காந்த் ,நாயகிக்கு ஆதரவாக வாதாடும்  லேடி வக்கீல் ஆக ஷீலா இருவரும்ப்கதைப்படி டைவர்ஸ் ஆன ஜோடி என்பது மெயின் கதைக்கு வலு  சேர்க்கிறது


நாயகனின் வக்கீலுக்கு அசிஸ்டெண்ட் ஆக வரும் ஜென்சன் திவாகர் நல்ல காமெடி கவுண்ட்டர்ஸ் தருகிறார்.நாயகியின் வக்கீலுக்கும் ஒரு லேடி ஜூனியர் வக்கில் இருந்திருந்தால் இன்னமும் ஜாலியாக இருந்திருக்கும்


இசை சிந்து குமார்.ஒரே ஒரு பாடல் அருமை.ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம்.நாயகி ,லேடி வக்கீல், லேடி ஜட்ஜ் என பெண்களை கண்ணியமாக ,அழகாகக்காட்டி இருக்கிறது கேமரா.


சிவகுமார் முருகேசன் வசனங்களில் தியேட்டரில் ஆண்களின் கை தட்டல்களை அள்ளுகிறது


எடிட்டிங் கச்சிதம்.2 மணி நேரம் ஓடுகிறது

அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்

1 நாயகனின் வக்கீல் ,நாயகியின் வக்கீல் இருவரும் டைவர்ஸ் ஆன தம்பதிகள் என்பது சுவராஸ்யமான முடிச்சு.

2 நாயகியை நாயகனின் வக்கீல் தூண்டி விட்டு போலீஸ் ஸ்டேசன் ல நோஸ் கட் கொடுக்கும் இடம் செம

3 நாயகனின் வக்கீல்,வக்கீலின் அசிஸ்டெண்ட் இருவரது கேரக்டர் டிசைன் சுஜாதா கதைகளில் வரும் கணேஷ வசந்த் மாதிரி இருப்பது சுவராஸ்யம்

4 படம் முழுக்க நகைச்சுவை இழையோடக்காட்சிகளை தொகுத்த விதம் அருமை

5 போலி பெண்ணியவாதிகளை வாரிய விதம்


  ரசித்த  வசனங்கள் 


1 இந்த ஆம்பளைப்பசங்க தான் எந்த போட்டோவில் அழகா இருக்கறதா நினைக்கறாங்களோ அதே போட்டோவைத்தான் பேஸ்புக் ,இன்ஸ்டா ,வாட்சப் டி பி யா வைப்பானுங்க


2 உடை என்பது நம் வசதிக்குத்தான் ( சவுகர்யத்துக்குத்தான்).கிளாமராப்போடனும்னு அவசியம் இல்லை 


3  நான் தம் அடிப்பேன்,உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே?


எனக்கும் ஒரு சிகரெட் கொடுத்தாப்பிரச்சனை இல்லை


4 என்ன? உன் பொண்டாட்டி அரைகுறை டிரஸ்ல வந்திருக்கா?


பாட்டி,எனக்கு விபரம் தெரிஞ்ச நாளில் இருந்து நீ ஜாக்கெட்டே போட்டதில்லை.அவ ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் தானே போட்டிருக்கா?

5 என்னை ராணி மாதிரி பார்த்துக்குவேன்னு சொன்னே?வேலை எல்லாம் செய்ய சொல்றே?


ராணின்னா  ராஜாவோட பொண்டாட்டின்னு அர்த்தம்


ராணின்னா ராணி தான்


6. மத்ததுக்கெல்லாம் மை சாய்ஸ் ,ஆனா காசு வேணும்னா மட்டும் புருசன் வேணும்?

7 பொண்ணுங்களைப்புரிந்துகொள்வதற்குள் ஆண்களோட ஆயுசே முடிஞ்சிடும்


8 வீட்டுக்குள்ளே  சிசி டி வி கேமரா வெச்சுக்கிட்டா ஒரு பொண்ணு குடித்தனம் பண்ண முடியும்?

9 புருசன் சிரிச்சுப்பேசுனா செக்ஸ் டார்ச்சர்,சிரிக்காம பேசுனா ஆம்பளையே இல்ல என போலீஸ்ல புகார் கொடுக்கறவஙகதான் இந்தக்காலப்பொண்ணுஙக


10  காதலிலும் ,போரிலும் எல்லாமே சரி தான்.நாம ஜெயிக்கனும்னா என்ன வேணா செய்யலாம்

11 உங்க பொண்டாட்டியாவது புத்திசாலியா இருப்பாஙகனு நினைச்சேன்

ம்ஹூம்

12 இவன் நம்மைக்கண்காணிக்க நியமிக்கப்பட்ட டிடெக்டிவ் என எப்படிக்கண்டுபிடிச்சீஙக?


அவன் தான் இன்ஸ்டா ல  டேக் பண்ணி டீட்டெய்ல் சொல்லி போஸ்ட் போட்டிருந்தான்


13 இந்த லஞ்சம்

என்ன? ரிப்போர்ட் ல பொய் சொல்லனுமா?

நோ,உண்மை சொல்லனும்

அப்போ அதுக்கு இன்னமும் செலவு ஆகும்


14 பாஸ்,எப்பவாவது குடிச்சா அது பழக்கம்,டெய்லி பழக்கம்னா அது கெட்ட பழக்கம்.உங்களுக்கு இருப்பது பழக்கமா? கெட்ட பழக்கமா?

தோணும்போதெல்லாம் குடிப்பேன்

அப்போ இவரை ஒரு குடிகார நாய் தான்


15 சட்டம் பொண்ணுங்க சொல்றதைத்தான் நம்பும்

16  ஜீவனாம்சம் வாங்கவே இப்போ எல்லாம் நிறைய போலி டைவர்ஸ் கேஸ் வருது

17 காபி வேணுமா?ந்னு உங்க கிட்டே கேட்டது விருந்தோம்பல்.என் புருசன் கிட்டேக்கேட்டது லவ்.புருசன் பணத்துல தானே எல்லா செலவும் பண்றோம்?காபி போட்டுக்கொடுத்தா தப்பா?


18. இந்தக்காலத்துல அம்மிக்கல்,ஆட்டாஙகல் எதுவும் இல்லை.மிக்சி ,கிரைண்டர் தான்.ஸ்விட்ச் போட்டாப்போதும்


அந்த சுவிட்சைக்கூட பொண்ணுங்க தானே போட வேண்டி இருக்கு ?

19 பெமினிசம் என்பது புருசன் கூட சந்தோசமா வாழக்கூடாது என்பது அல்ல

20 வீட்டில் இருக்கும் ஆண்கள் என்ன சொல்வாங்கன்னு தெரியாம பிரஷர் இல்லாத  வாழ்க்கை வேண்டும்

21  இங்கே எல்லாருமே நான் ஏன் விட்டுக்கொடுக்கனும்? என நினைக்கறாங்க.கல்யாண வாழ்க்கைல அழகே விட்டுக்கொடுத்தல் தான்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 ஹனிமூன்க்கு எங்கே போகலாம் என நாயகன் கேட்டபோதே நாயகி அம்பேத்கார் பிறந்த ஊருக்குப்போலாம் என்கிறார்.அப்போதே பார்ட்டி பா ரஞ்சித் ரசிகை போல என நாயகன்  உஷார் ஆகி இருக்க வேண்டாமா?

2 இந்தக்காலத்தில் 75% பெண்கள் தாலியை மதிப்பதில்லை.நாயகி தாலியை கழட்டி நகைப்பெட்டியில் வைத்திருக்கிறார் என்பதற்கு நாயகன் ஏன் அவ்ளோ ஜெர்க் ஆகிறார்?

3 மாடர்ன் கேர்ள் என்றால் தம் அடித்தே ஆக வேண்டுமா?ஆணோ ,பெண்ணோ கேன்சர் பேஷண்ட் தானே?

4 இந்தக்காலப்பெண்கள் புருசனை வாடா,போடா என வேலைக்காரனைப்போல் அழைப்பது சகஜம் தான்,அதற்காக வீட்டில் பணிப்பெண் முன்னால் கூட அப்படித்தான் அழைக்கனுமா?அதைப்பற்றி நாயகன் கேட்கவே இல்லையே?

5 க்ளைமாக்சில் நாயகனின் வக்கீல் வாதத்தை முன் வைக்கும்போது ஜட்ஜைப்பார்த்துப்பேசாமல் கோர்ட்டில் இருக்கும் மக்களைப்பார்த்துப்பேசுவது ஓவர் டிராமா

6 முதல் பாதியில் புரட்சிப்பெண்ணாக வரும் நாயகி கேரக்டரை பின் பாதியில் டம்மி ஆக்கி விட்டது ஏனோ?


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - அனைவரும் காண வேண்டிய கல கலப்பான குடும்பப்படம்.விகடன் மார்க் யூகம் 44 ( ஆனால் ரியலா 40 தான்.ஏன் குறைத்தார்கள் எனத்தெரியவில்லை.அனைத்து மீடியாக்களும் கொண்டாடுகின்றன.ஒரு வேளை ரெட்  ஜெயண்ட்ஸ் ரிலீஸ் ஆக இருந்திருந்தால் தந்திருக்குமோ?)


குமுதம் ரேன்க்கிங்க் நன்று


ரேட்டிங்க் 3/5

Wednesday, November 05, 2025

BAD GIRL(2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( மெலொ ட்ராமா) @ஜியோ ஹாட் ஸ்டார்

       

        5/9/2025 அன்று திரை அரங்குகளில் வெளியான இந்தப்படம் சில சர்ச்சைகளால் தடை விதிக்கப்பட்டது.இப்போது        4/11/2025 முதல் ஜியோ ஹாட் ஸ்டார் ஓ டி டி யில் வெளியாகி உள்ளது.


வெற்றிமாறன் தயாரிப்பு என்பதாலும்,7/2/2025 ல் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு  சில விருதுகளை வென்ற படம் என்பதாலும் இது முக்கியத்துவம் பெறுகிறது


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி 15 வயது டீன் ஏஜ்  மாணவிம்+1 படிக்கிறார்.அம்மா ஸ்கூல் டீச்சர்.அதே ஸ்கூலில் நாயகி படிப்பதால் அம்மாவின் கண்டிப்பும்,கண்காணிப்பும் அதிகம்.அம்மா,அப்பா,பாட்டி உடன் கூட்டுக்குடும்பத்தில் வளர்ந்தாலும் நாயகி  சுதந்திரமாக இருக்க விரும்புபவர்.


நாயகி சக மாணவன் ஒருவனைக்காதலிப்பது அம்மாவுக்குத்தெரிந்து விட காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள்.அவனை அவனது பெற்றோர் சிங்கப்பூர் அனுப்பி விடுகின்றனர்.


பின் ஒரு நாளில் நாயகி காலேஜ் போகிறார்.ஹாஸ்டலில் தங்கிப்படிக்கிறார்.அருகில் பெற்றோர் இல்லாததால் லிவ்விங் டுகெதர் ஆக  ஒரு புதுக்காதலனுடன் வாழ்கிறார்.


அவனுடன் ஒரு கட்டத்தில் பிரேக்கப் ஆக நாயகி வேறு ஒருவனைக்காதலித்தாரா? என்ன செய்தார்? என்பது மீதித்திரைக்கதை


நாயகி ஆக அஞ்சலி சிவராமன் இதில் அறிமுகம்.ஆல்ரெடி இவர் சில ஓடிடி படைப்புகளில் நடித்திருந்தாலும் சினிமாவுக்கு புதுமுகம்.


பிரமாதமான முக வெட்டு ,அழகிய கண்கள் , வசீகரிக்கும் ஹேர் ஸ்டைல், அபாரமான நடிப்பு இவரது பிளஸ்.இப்படி எல்லாம் ஒரு கேரக்டரா? என வெறுக்க வைக்கும் கேரக்டர் டிசைனில் கூட பாவம் எனப்பரிதாபத்தைப்பெறும் லாவகமான நடிப்பு.


நாயகியின் அம்மாவாக சாந்திப்ரியா கலக்கி இருக்கிறார்.சரண்யா பொன் வண்ணனுக்கு இணையான பாந்தமான நடிப்பு.

நாயகியின் முதல் காதலன் ஆக ஹிருது ஹாரூன் ( ட்யூட் படத்தில் நாயகியின் காதலன்) கச்சிதமான நடிப்பு.


நாயகியின் தோழி ஆக சரண்யா ரவிச்சந்திரன் அருமையான நடிப்பு.


நான்கு பேர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள்.அபாரம்.பல காட்சிகளில் நாயகி,அம்மா இருவருக்குமான க்ளோசப் ஷாட்கள் செம.


அமித் திரிவேதி தான் இசை.பாடல்கள் ஓக்கே ரகம்.பின்னணி இசை கச்சிதம்.


எடிட்டிங் ராதா ஸ்ரீதர்.மாறுபட்ட கட்..டைம் ட்யூரேசன் 112 நிமிடங்கள்


மாறுபட்ட இந்தக்கதையை எழுதி இயக்கி இருப்பவர் பெண் இயக்குனர் வர்சா பரத்

சபாஷ்  டைரக்டர்


1 ஒளிப்பதிவும் ,நாயகியின் அழகும்,நடிப்பும் படத்தின் பெரிய பிளஸ்

2 நாயகியின் அம்மாவாக வரும் டீச்சரின் கேரக்டர் டிசைன்,வெவ்வேறு கட்டங்களில் அவர் நடிப்பு,மகளை டீல் செய்யும் விதம் அருமை

3 தமிழில் வந்த ஆட்டோகிராப்,அட்டக்கத்தி ,மலையாளத்தில் வந்த பிரேமம் ,ஜூன் ஆர் படங்களின் திரைக்கதை சாயல் இருந்தாலும் தமிழில் வெளிவந்திருக்கும் முதல் பெண்ணின் பல காதல்கள் படம் ஆக இது புதுசு.( பூ படத்தில் ஒரே ஒரு காதல் தான்.பின் கணவன் வேறு ஆள்)

4 இயக்குனரின் திரை மொழி புதுசு.


  ரசித்த  வசனங்கள் 


1 சில காயஙகள் பட்ட இடத்தில் மீண்டும் மீண்டும் பட்டுட்டே இருக்கும்

2 கலர் பிரா எதுக்கு? உள்ளேதானே இருக்கு?யார் பார்க்கப்போறாங்க? 

3  ஒருவேளை நம்ம விஷயம் கண்டு பிடிச்சு இருப்பாஙகளோ?

அப்போ இனி பயப்பட வேண்டி இருக்காதுல்ல?

4 பைனான்சியல் ஸ்டெபிலிட்டிதான் நமக்கு முக்கியம்

5 உனக்காக எல்லாம் வாங்குனேன்,ஆல் யுவர் பேவரைட் திங்க்ஸ்

நீ தான் என் பேவரைட்

6  நீ செஞ்ச துரோகத்துக்கு உன் லைப் ல நிச்சயம் ஒரு நாள் அனுபவிப்பே

7 நீங்க உங்க அம்மா அப்பா பேச்சைக்கேட்கலைன்னா உங்க வாரிசுகள் மட்டும் உங்க பேச்சைக்கேட்கவா போகுதுங்க?


8 பாட்டியோ,அம்மாவோ அவஙகளுக்குப்போட்டு விட்ட சங்கிலியை அவஙகளால உடைக்க முடியாட்டியும் அதை நமக்குப்போட்டு விட்டு டுவாங்க

9 வயசுலயும் ,அனுபவத்துலயும் மூத்தவஙகளா இருக்கறதால அவஙக சொல்றது எல்லாம் உண்மை ஆகிடாது

10 நமக்காகத்தான் இந்த மழையே பெய்யுது.


11 ஒருத்தர் கொடுத்த வலியையும் ,வேதனையையும் இன்னொருவர் வந்து சரி பண்ணிட முடியாது.நம்மை நாம் தான் சரி பண்ணனும

12  உண்மையாவே எனக்கு போதை பிடிக்குதா? அல்லது சகவாசம் சரியில்லையா? தெரில.அதான் விட்டுப்பார்க்கலாம்னு தோணுச்சு

13. டேய்,உன் குழந்தைக்கு என் பேரு தானே வெச்சிருக்கனும்?

14  நீ போய்ட்டே ,நானும் விட்டுட்டேன்

15 ஒரு பொண்ணு எப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்பதற்கான மோசமான முன்னுதாரணம் நான் தான்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகியின் முதல் காதலனைப்பல வருடங்களுக்குப்பின் சந்திக்கும் நாயகி வேறு ஒருத்தியைத்திருமணம் செய்த அவனுடன் கூடலுக்குத்தயார் ஆக இருக்கிறாள்.ஆனால் அவன் மறுக்கிறான்.இந்தக்காலத்தில் இந்த மாதிரி ஆண்கள் இருக்காங்களா? என்ன?


2 அம்மா,அப்பா,பாட்டி என எந்த உறவுகளையும் மதிக்காத நாயகி காணாமல் போன பூனைக்குட்டிக்காக உருகுவது நம்ப முடியவில்லை

3 இயக்குனர் ஒரு பெண் என்பதால் ஒரு பெண்ணின் நுண்ணிய உணர்வுகளை எளிதில் கடத்த முடிகிறது.அவரது திரை மொழி அபாரம்.ஆனால் மணிரத்னம் படஙகளில் வரும் கொண்டாட்ட மனநிலை மிஸ்சிங்.ஜாலியான மொமெண்ட்ஸ் குறைவு.

4 படம் பார்க்கும் டீன் ஏஜ் பெண்கள் இது போல் வாழக்கூடாது என முடிவெடுப்பதை விட இப்படி வாழ்ந்து தான் பார்ப்போமே? என நினைக்க வாய்ப்பு அதிகம்.அது பின்னடைவு


5 நாயகி முற்போக்கானவள் என்பதைக்காட்ட அவர் தம் அடிப்பது ,தண்ணி அடிப்பது  எனக்காட்டத்தேவை இல்லை.


6  நாயகி ஒரு பிராமணக்குடும்பத்தில் இருந்து வந்தவர் என ஜாதி அடையாளம் தேவையற்றது

7 நாயகியின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் அவரது நோக்கம் ,லட்சியம் தான் என்ன? என்பதில் தெளிவில்லை.


8 நாயகியின் காதலர்களாக வருபவர்கள் யாரும் மனதில் நிற்கவில்லை.தாடி வைத்து கஞ்சா கேஸ்கள் போல ,பிச்சைக்காரர்கள் போல இருக்கிறார்கள்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  குழந்தைகளை எப்படிக்கண்டிப்புடன்,கண்காணிப்புடன் வளர்த்த வேண்டும் என பெற்றோர்களுக்குப்படிப்பினை ஊட்டும் படம்.ரேட்டிங்க் 3 /5.விகடன் மார்க் யூகம் 43

Bad Girl
Theatrical release poster
Directed byVarsha Bharath
Written byVarsha Bharath
Produced by
Starring
Cinematography
Edited byRadha Sridhar
Music byAmit Trivedi
Production
company
Release dates
Running time
112 minutes[1]
CountryIndia
LanguageTamil

Monday, November 03, 2025

ஜூனியர் (2025)-தெலுங்கு - சினிமா விமர்சனம், (கமர்ஷியல் மசாலா) @அமேசான் ப்ரைம் ,ஆஹா தமிழ்

     

                       

18/7/2025 அன்று தெலுங்கு ,கன்னடம் ஆகிய இரு மொழிகளில் திரை அரஙகுகளில் வெளியான இந்தப்படம்  இப்போது 30/9/2025 முதல் அமேசான் ப்ரைம் ,ஆஹா தமிழ்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனோட அம்மா ,அப்பாவுக்கு அவஙக 45 வது வயது வரை குழந்தை பாக்யம் இல்லை.46 வது வயதில் தான் நாயகனின் அம்மா உண்டாகிறார்.


இப்போது நாயகனுக்கு 20 வயது.அப்பாவுக்கு 65 வயது.அப்பா தாத்தா மாதிரி இருப்பதால் நாயகனுக்குக்கூச்சம்.வெளியில்  எல்லோரும் கிண்டல்  செய்வார்கள் என்ற பயம்.நாயகன் அப்பாவை விட்டுப்பிரிந்து வாழ்கிறான்


காலேஜில் நாயகன் நாயகியைக்கண்டதும் காதல் கொள்ள  அவளை சுற்றி சுற்றி வருகிறான்.


நாயகன் ,நாயகி இருவரும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள்.கம்பெனி எம் டி  யின் மகள் தான் வில்லி.நாயகனுக்கும் ,வில்லிக்கும் ஆவதில்லை


மன்னன் விஜய சாந்தி மாதிரி  கதை போகுதே என யோசிக்கும்போது ஒரு ட்விஸ்ட்.வில்லி தான்  நாயகனின் அக்கா என்பது தெரிய வருகிறது.


அதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை


நாயகன் ஆக கிரீட்டி ரெட்டி நம்ம ஊர் சித்தார்த்  மாதிரி இருக்கிறார்.இளமைத்துள்ளலுடன் கூடிய நடிப்பு.ஜிம்னாஸ்டிக் ,யோகா எல்லாம் கற்றவர் போல.வில் போல் வளைகிறது உடல்.


நாயகி ஆக  ஸ்ரீ லீலா.பேர் நல்லாருக்கு.ஆள் அந்த அளவு இல்லை.அதிக வாய்ப்பும் இல்லை


வில்லி ஆக ஜெனிலியா டிசவ்சா.படையப்பா நீலாம்பரி மாதிரி கேரக்டர்.ஆனால் குருவி தலையில் பனங்காநடிப்பு.பிரமாதமாக டான்ஸ் ஆடுகிறார்

தேவி ஸ்ரீ பிரசாத்தின்  இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.பின்னணி இசை குட்.


கே கே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு பிரமாதம்.நாயகன்,நாயகி ,வில்லி அனைவரையும் அழகாக்காட்டி இருக்கிறது


கல்யாண் சக்ரவர்த்தியின் வசனஙகள் பரவாயில்லை ரகம். நிரஞசனின் எடிட்டிஙகில்  படம் 154 நிமிடஙகள் ஓடுகிறது


திரைக்கதை இயக்கம் ராதா கிருஷ்ண ரெட்டி


அக்கா,தம்பி ,அப்பா பாசக்கதையை காதல் ,கலாட்டா வாக சொல்லி இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1 மைண்ட் யுவர்  ஓன் பிஸ்னெஸ் என்ற டைட்டில் உள்ள புக்கை நாயகி நாயகனிடம் காட்ட நாயகன் நாயகியிடம் காட்டும் புக் டைட்டில் பிஸ்னெஸ் ஆப் லவ்


2 நாயகன் நாயகியைத்துரத்தி துரத்தி லவ் பண்ணும் காலேஜ் போர்சன் பல படஙகளில் பார்த்ததுதான் என்றாலும் ரசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள்


3 படம் முழுக்க நாயகன் அணிந்து வரும் உடைகள் அபாரம்.அவரது ஹேர் ஸ்டைலும் அபாரம்.

4 வைரல் பாட்டில் டான்ஸ் ,ஆர்ட் டைரக்சன் அனைத்தும் அருமை.டி ஆர் ரசிகர். போல 


  ரசித்த  வசனங்கள் 


1 சார்.இங்கே ஒர்க் பண்ணினா மேலே வர முடியுமா?


மேலே போகனும்னா நீ லிப்ட் ல தான் வேலை செய்யனும்


2 ஜெயிக்கறதுன்னா புதுசா ஸ்டார்ட் பண்றது இல்லை.புதுசா க்ளோஸ் பண்றது.


3 எந்த ஒரு பகையுமே ,எமோஷனுமே  நிலையா இருக்கறதில்லை


4 நம்மை நாம் தான் காப்பாத்திக்கனும்.நம்மைக்காப்பாற்ற வெளில இருந்து யாரும் வர மாட்டாங்க

5 நாம மேலே வரும்போது அதிர்ஷடம்  என சொல்வாங்க.தடை வந்தாதான் நம்ம திறமை வெளில வரும்

6 ஒரு அப்பா அம்மாவோட கோபத்துக்குப்பின்னாடி பிள்ளை மேல்  இருக்கும் அன்பு மட்டும் தான் காரணமா இருக்கும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 நாயகி யோகா டீச்சர்.நாயகன் அன்று தான் முதன் முதலாக யோகா க்ளாஸ்க்கு வர்றான்.ஆனால் நாயகியை விடப்பிரமாதமாக யோகா செய்வது எப்படி?ஹீரோயிசத்தில் இடி விழ.


2 கம்பெனிக்கு வேலைக்கு வந்த அனைவரும் டீசெண்ட்டாக டிரஸ் பண்ணி இருக்க நாயகி மட்டும் ரம்பா மாதிரி டிராயருடன் வருவது ஏன்? ( எல்லாம் ஒரு கிளாமருக்குத்தான்)


3 நாயகன்,நண்பர்,அப்பா மூவரும் பானிபூரி சாப்பிட்டதும் பில் 100 ரூபா வருது.அது எப்படி? ஒரு பிளேட் 33.33 ?


4 பாசமாக இருக்கும் அப்பா ,மகள் செண்ட்டிமெண்ட் அருமை.ஆனால் தத்துக்கொடுப்பதற்காக மகளை வெறுப்பது போல் நடிப்பது அமெச்சூர்  டிராமா


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பேமிலி டிராமாதான் ,கமர்ஷியல் கலர்புல் ஆக சொல்ல முயன்றதில் கொஞ்சம் ஸ்லிப் ஆகி விட்டது. ரேட்டிங்க் 2.25 /5


Junior
Theatrical release poster
Directed byRadha Krishna Reddy
Written byRadha Krishna Reddy
Dialogues by
  • Kalyan Chakravarthi
Produced bySai Korrapati
Starring
CinematographyK. K. Senthil Kumar
Edited byNiranjan Devaramane
Music byDevi Sri Prasad
Production
company
Distributed byMythri Movie Makers
Release date
  • 18 July 2025
Running time
154 minutes
CountryIndia
Languages
  • Telugu
  • Kannada
Budget25 crore[1]
Box office10–16 crore[2][3]

Sunday, November 02, 2025

CHATTULI(2025)-மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் ட்ராமா) @மனோரமா மேக்ஸ் ,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

                             

2025 பிப்ரவரி மாதம் திரை அரங்கு களில் வெளியான இந்தப்படம் 20/10/2025 முதல் ஓ டி டி ரிலீஸ் ஆக வெளிவந்திருக்கிறது.105 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் தனது புது மனைவி ,கைக்குழந்தையுடன் பாரெஸ்ட்டில் வசித்து வருகிறான்.நாயகனின் மனைவி தனிமையில் இருக்கும்போது வில்லன் அவளை அடைய முயற்சிக்கிறான்.அந்த துரத்தலில் அவள் தலையில் அடிபட்டு இறந்து விடுகிறாள்


18 வருடங்கள் கழித்து வில்லனின் மகன்  அதே பாரெஸ்ட் ஏரியாவில்  ஒரு டீன் ஏஜ் பெண்ணை வன் புணர்வு செய்து கொலை செய்து விடுகிறான்.


தன் மகனைக்காணவில்லை என வில்லன் போலீசில் புகார் கொடுக்க ,தனது பெண்ணைக்காணவில்லை என  பெண்ணின் அம்மா போலீசில் புகார் கொடுக்க இறுதியில் என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்


நாயகன் ஆக ஜாபர் இடுக்கி நன்றாக நடித்து இருக்கிறார்.அவரது மனைவி ஆக  ஸ்ருதி ஜெயன் நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரமே வந்தாலும் வசீகரிக்கும் அழகு.


வில்லன் ஆக கலாபவன் ஷாஜோன் மிரட்டி இருக்கிறார்.போலீஸ் ஆபீசர் ஆக ஷைன் டாம் சாக்கோ அலட்டலான நடிப்பை வழஙகி இருக்கிறார்


வில்லனின் மகனாக கார்த்திக் விஷ்ணு .இவர் செய்த உருப்படியான வேலை டீன் ஏஜ் பெண்ணை ரேப் செய்ததுதான்


லதா தாஸ்,வர்ஷா ப்ரசாத் ஆகியோரும் உண்டு


ஜெயேஷ் மைனாகப்பள்ளி தான் திரைக்கதை.

இயக்கி இருப்பவர் பாபு ராஜ்




சபாஷ்  டைரக்டர்


1. ஆங்கிகப்பத்திரிக்கைகளில் இது ஒரு நல்ல பாரெஸ்ட் க்ரைம் திரில்லர் என பொய்யான பாசிட்டிவ் விமர்சனஙகள் வர வைத்தது


2. கானகத்தின் அழகை அருவியின் அழகை கண் குளிரப்படம் பிடித்தது


3 இந்த வில்லன் கேரக்டரில் அசத்திவிடுவீர்கள் என பொய் சொல்லி சைன் டாம் சாக்கோ விடம் கால்ஷீட் வாங்கியது


4 காசி விக்ரம் மாதிரி உங்க கேரக்டர் என பொய் சொல்லி ஜாபர் இடுக்கியிடம் கால்ஷீட் வாங்கியது

  ரசித்த  வசனங்கள் 


1 சார்,நீங்க போலீசா? திருடனா?


எல்லாத்திருட்டுத்தனமும் தெரிஞ்சு வெச்சிருக்கறவன் தான் போலீஸ் 


2 அப்பா அயோக்கியனா இருந்தா பையனும் அதே மாதிரி தான் இருப்பான்.


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1. 20 நிமிடஙகளில் எடுக்க வேண்டிய குறும்படத்துக்கான கதையை ஒன்றே முக்கால் மணி நேரம் ஜவ்வாக இழுத்தது

2.  பத்து வருடங்கள் அனுபவம் உள்ள போலீஸ் ஆபீசரை 18 வயது பொடிப்பையன் வீழ்த்துவது

3 கைக்குழந்தையுடன் ஓடும் பெண்ணை 2 கிமீ தூரம் துரத்திக்கொண்டே ஓடும் பாடாவதி வில்லன்


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மலையாளப்படங்கள் எல்லாமே பிரமாதமாக இருக்கும் என்ற மூடநம்பிக்கையை உடைத்து எறியும் டப்பாப்படம்.ரேட்டிங்க் 1/5 

Saturday, November 01, 2025

ஆர்யன் (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

         

                   


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு ரைட்டர்.சில நாவல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.ஆனால் பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை.மக்கள் யாரும் அவரைக்கொண்டாடவில்லை.


ஒரு டி வி புரோக்ராமில் நீயா?நானா? மாதிரி ஒரு டாக் ஷோ வில் ஆடியன்ஸில் ஒருவராக வரும் வில்லன் திடீர் என துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டுகிறார்..தான் 5 கொலைகள்  செய்ய இருப்பதாகவும் ,ஒவ்வொரு கொலை நடக்க ஒரு மணி நேரம் முன்பே யாரைக்கொல்லப்போகிறேனோ அவர் பெயரை வெளியிடுவேன் எனவும் ,முடிந்தால் போலீஸ் அதைத்தடுக்கட்டும் என சவால்  விட்டு பின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.இந்தக்கேசை விசாரிக்கிறார்.இறந்து போன ஒரு ஆள் எப்படி 5 கொலைகள் செய்ய முடியும்? என யோசிக்கிறார்.


ஆனால் வில்லன் அறிவித்தபடி வரிசையாகக்கொலைகள் நடக்கின்றன.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


வில்லன் ஆக இயக்குனர் செல்வராகவன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.


நாயகன் ஆக விஷ்ணு விஷால் போலீஸ் ஆபீசர் ரோலில் கம்பீரம் காட்டி இருக்கிறார்.அவரது மனைவி ஆக  மானசா சவுத்ரி அதிக வேலை இல்லை.நல்ல அழகு.


நாயகி ஆக ,டி வி தொகுப்பாளினியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாந்தமான பங்களிப்பு.அவரது ஆடை வடிவமைப்பு அருமை.


கருணாகரன் கெஸ்ட் ரோலில் வருகிறார்.


ஜிப்ரான் தான் இசை.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை அருமை.ஒளிப்பதிவு ஹரீஷ கண்ணன்.கச்சிதம்.டி வி ஷோ செட்,வில்லனின் வீட்டின் நிலவறை செட்டிங் இரண்டும் ஆர்ட் டைரக்சனின் முத்திரைகள்.


திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர் கே பிரவீன்.2 மணி நேரம் 16 நிமிடஙகள் டைம் ட்யூரேசன்.


படத்தின் நாயகன் தான் தயாரிப்பாளர்



சபாஷ்  டைரக்டர்


1. வில்லன் ஓப்பனிங சீனிலேயே தற்கொலை செய்வதும் அதற்குப்பின் 5 கொலைகள் செய்வதும் எப்படி? என்ற குழப்பம் தான் திரைக்கதையின் பலம்

2  முதல் 30 நிமிடஙகள் நல்ல பரபரப்பு.

3 நாயகன் தான் தயாரிப்பாளர் என்றாலும் படம் போட்டு 30 நிமிடஙகள் கழித்துத்தான் வருகிறார்


  ரசித்த  வசனங்கள் 


1 காண்ட் ரவர்சியைத்தான் எல்லாரும் விரும்பறாங்க,மக்களும் அதைத்தான் விரும்பறாங்க


2.  காசைத்தூக்கி அடிச்சா எந்தக்கழுதையுமே அவார்டு வாங்கலாம்


3 எப்பவுமே எல்லாமே உன் கட்டுப்பாட்டில் தான் இருக்கனும்னு நினைக்கறே,குறிப்பா உன் மனைவி...


4. ஆக்சிஜன் என்பது நைட்ரஜனும் மிக்ஸ் ஆனது.100% ஆக்சிஜன் நல்லதல்ல


5 என் வாழ்க்கையின் நிறைய நல்ல வெர்சன்களை  நீ தான் தந்த.

6 நமக்குப்பிடிக்கலைன்னாக்கூட சில விஷயஙகளை நாம் செய்தே ஆகனும்

7 கெட்ட விஷயம் நடந்தாதான் நல்ல விஷயஙகளை நாம் பின்பற்றுவோமா?

8 உண்மையான கலைஞர்களை அவஙக மரணத்துக்குப்பின் தான் இந்த சமூகம் அவஙகளை அடையாளம் காணும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 எஸ் டி டி பூத் என்பதே இப்போது வழக்கொழிந்து விட்டதே? முதல் கொலை அப்படி ஒரு பூத்தில் நடப்பது எப்படி?


2 நாயகன் வாழ்வில் நடந்த காதல்,கல்யாணம் ,டைவர்ஸ் எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை


3, பரத நாட்டியப்பெண்ணான ரஷிதா முஸ்லீம் ஆக இருந்தும் எதற்காக இந்துப்பெண் போல் பொட்டு வைத்துக்கொண்டு நடனம் ஆடுகிறார்?


4 இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் ஹீரோயிச பைட் எதுக்கு? திணித்தது நல்லாவே தெரியுது.அதே போல் க்ளைமாக்ஸ் பைட் சீனும் தேவை இல்லாதது.


5 பொதுவாகக்கிளைமாக்சில் கொலைக்கான காரணம் தெரிய வரும்போது ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.அது இதில் இல்லை.

6 வில்லன் நல்லவன்,அவன் டார்கெட் செய்யும் கொலைக்கு உள்ளாகப்போகிறவர்களும் நல்லவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான ஒரு க்ரைம் திரில்லர் தான்.பார்க்கலாம்.விகடன் மார்க் யூகம் 41 ,குமுதம் ரேங்க்கிங் ஓகே .ரேட்டிங் 2.5 /5

Friday, October 31, 2025

டீசல் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )

           


                ஸ்பாய்லர்  அலெர்ட்


பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றுக்கு முக்கியப்பொருள் ஆக விளஙகும் க்ரூட் ஆயில் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை விலாவாரியாக விளக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது இந்தப்படம்.


நாயகனின் வளர்ப்புத்தந்தை க்ரூட் ஆயில் கடத்தி மும்பைக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்குப்பத்து மக்களுக்கு செலவு செய்கிறார்.வில்லன் நெ 1. இவரிடமிருந்து க்ரூட் ஆயிலைத்திருட்டுத்தனமாக  திருடி விற்கிறான்.இவர்களிடம் மாமூல் வாங்கும் போலீஸ் ஆபீசர் வில்லன் நெ 2 . இவர்களுக்கு எல்லாம் பாஸ் மாதிரி செயல்படும் மும்பை தொழில் அதிபர் ஹில்லன் நெ 3



இந்த மூன்று வில்லன்களுக்கும் ,நாயகனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தத்திரைக்கதையும்


நாயகனின் வளர்ப்புத்தந்தை    ஆக சாய் குமார் கச்சிதமாக நடித்திருக்கிறார்.இவர் பெரிய அளவில் ஏதோ செய்வார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே.


நாயகன் ஆக ஆக்சன் களத்தில் இறஙகி இருக்கிறார் ஹரீஷ கல்யாண்.விஜய்காந்த் ரேஞ்சுக்கு இவர் பேசிக்கொண்டே இருப்பது அலுப்பு.


நாயகி ஆக அதுல்யா ரவி பால்கோவா போல வருகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.


வில்லன் நெ 1.  ஆக விவேக் பிரசன்னா பெரிய அளவில் சோபிக்கவில்லை

வில்லன் நெ 2  ஆக வினய் மிரட்டி இருக்கிறார்.வில்லன் நெ 1 உடன்  சாப்பிடும் சீன் அதகளம்

வில்லன் நெ 3  ஆக சச்சின் கெடேகர் பந்தாவாக வருகிறார்.ஆனால் பெரிய வில்லத்தனம் எதுவும் செய்யவில்லை


காளி வெங்கட்,கருணாஸ் ,அனன் யா, நாசர் ,பழைய ஜோக் தங்கதுரை,போஸ் வெங்கட்  அனைவரும் சும்மா வந்து போகிறார்கள்


திபு நினன் தாமஸ் தான் இசை.பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்


ஒளிப்பதிவு எம் எஸ் பிரபு +ரிச்சர்ட் எம் நாதன் பாராட்டும்படி இருந்தது.

சான் லோகேஷின் எடிட்டிஙகில் படம் 144 நிமிடஙகள் ஓடுகிறது


திரைக்கதை ,இயக்கம்  சண்முகம் முத்துசாமி


சபாஷ்  டைரக்டர்


1 க்ரூட் ஆயில் பைப் லைன் மூலம் கடத்துவது என்ற கதைக்கரு இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கரு.


2. பெட்ரோல் பங்க்குகளில் கலப்படம் எப்படி நடக்கிறது? கேசரி பவுடரை எப்படி மிக்ஸ் செய்கிறார்கள் என்ற டீட்டெய்லிங் அருமை

3  க்ரூட் ஆயில் தானே கடத்தறாங்க.எதுக்கு டைட்டில் டீசல் என்று யாரும் கேட்டு விடக்கூடாதே என நாயகனின் பெயரே டீசல் தான்,எல்லோரும் அவரை டீசல் என்றே அழைப்பார்கள் என ஒரே போடாகப்போட்ட விதம்


  ரசித்த  வசனங்கள் 


1. சொல்லிக்காட்டுவதற்கு அல்ல நாம் உதவி செய்வது


அதான்,எழுதி வைக்கிறேன்


2. வரும் முன் காப்போம் திட்டப்படி நமக்கு இடைஞசலா யார் வர இருக்காஙகளோ அவஙகளை. முளையிலேயே கிள்ளி எறிஞசிடனும்


3.  ஊருக்குள்ளே எத்தனை திருடஙக இருக்கனும்னு போலீஸ் நான் தான் முடிவு பண்ணனும்


4. ஸ்கெட்ச் என்ன?னு தெரியாம நாம உள்ளே போய் சிக்கிக்கூடாது


5. ஊழல் உன் யூனிபார்ம்ல பாதியை சாப்டுடுச்சு


6. ஒருத்தனை அடிக்கிறதால பிரச்சனை தீரும்னா ஜனத்தொகை இவ்ளோ பெருத்திருக்காது.அடிச்சுக்கிட்டு செத்திருக்கும்


7. நான் தனியா செஞ்ச வேலையைத்தான் நீங்க எல்லாரும் சேர்ந்து செய்யறீங்க


8. போலீஸ்காரன் பகை வேணாம்.அது பாம்பு மாதிரி.பழி வாங்காம விட மாட்டான்


9. ஆம்பளைஙகளைத்தேடனும்னா ஒயின்ஷாப்ல  இருப்பான்.இந்தப்பொண்ணுஙகளை கூகுள் ல கூட தேட முடியலையே?


10. ப்ரோ.உன் காதல் கதையை சொல்லுங்க


சொல்றேன்.மிஸ்.ஆனா என்ன ப்ரோன்னு கூப்பிட வேணாம்

11. பிணத்தைப்பார்த்துட்டுப்போனா நல்ல சகுனம்னு சொல்வாங்க,ஆனா நாம ஒரு பிணம் கூடவே பயணம் செய்யறோம்


12 தேவை தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.அந்த தேவையையே தீர்மானிப்பவன் நான்

13 வேலை கொடுக்கறோம்னு சொல்லி இனி மக்களை யாரும் ஏமாத்த முடியாது

14. புதுசா ஒரு பொருளை மக்களிடம் விற்கனும்னா பழைய பொருள் கிடைக்காது என்ற பயம் அவஙகளுக்கு வரனும்

15 ஒரே காட்டில் வாழ்வதால் புலியும் ,நரியும் ஒண்ணாகிடாது

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின் அம்மா,அப்பா வின் பிளாஸ்பேக் லவ் ஸ்டோரி மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது


2. நாயகியின் கனவில் வரும் கனவுக்கன்னி நாயகனின் அம்மா முக சாயலில் இருப்பது அதனால் லவ் வருவது  சரியாக கனெக்ட் ஆகவில்லை


3. நாயகி காலேஜூக்குக்கட் அடிச்சுட்டு நடுக்கடலில் மாட்டிக்கொள்ள நாயகன் காப்பாற்றி தன் படகில் அடைக்கலம் தருவது  ஓக்கே.ஆனால் 2 நாட்களாக நாயகியை அவரது வீட்டில் தேடவே மாட்டார்களா?


4. ஒரு கட்டத்தில் 2 கோடி லிட்டர் க்ரூடு ஆயில் காணாமல் போகிறது.அதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரு டேங்க்கர் லாரியில் 30,000 லிட்டர் கொள்ளவு பிடிக்கும் என்றால். மொத்தம் 650 லாரிகள் தேவை.அதை எப்படிக்கடத்தினார்கள் என்பதைக்காட்சியாகவோ,வசனம் மூலமாகவோ விளக்கவே இல்லை.எப்படி நம்பகத்தன்மை வரும்?


5. வில்லனிடம் மாமூல் வாங்கும் இன்னொரு வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் தான் மாமூல் வாங்கும் வில்லனை அடிமை போல் நடத்துவது எப்படி? அந்த வில்லன் கேரக்டர் மேல் பயமே வராதே?


6 நாயகனை போலீஸ்  மும்முரமாகத்தேடுகிறது.அவர் அகப்படவே இல்லை.ஆனால் ஒரு மாறு வேடம் கூடப்போடாமல் தலையில் ஒரு தொப்பி மட்டும் போட்டுக்கொண்டு அவர் ஊர் சுத்திட்டுதான் இருக்கார்


7 படத்தில் 3 வில்லன்கள்.யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் குழப்பம் இயக்குனருக்கு


8 பச்சை குத்திக்கினு என்ற பாடல் கொண்டாட்டமான  உணர்வைக்கடத்துகிறது,ஆனால் ஆடியோவில் கேட்கும்போது கிடைத்த உணர்வு விஷூவலாகக்காட்டவில்லை.ஏ ஆர் ரஹ்மான் இசையில் சங்கமம் படத்தில் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடலுக்கு நிகழ்ந்த கதி போல

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் 40 நிமிடஙகள் ,கடைசி 30 நிமிடஙகள் அருமை,மீதி எல்லாம் இழுவை.டி வி ல போடும்போது பார்த்துக்கொள்ளலாம்.விகடன் மார்க் யூகம் 40 .ரேட்டிங் 2.25 / 5


Diesel
Theatrical release poster
Directed byShanmugam Muthusamy
Written byShanmugam Muthusamy
Produced byDevarajulu Markandeyan
SP Sankar
Kishore. S
StarringHarish Kalyan
Vinay Rai
Athulya Ravi
P. Sai Kumar
CinematographyM. S. Prabhu
Richard M. Nathan
Edited bySan Lokesh
Music byDhibu Ninan Thomas
Production
companies
Third Eye Entertainment
SP Cinemas
Distributed bySP Cinemas
Release date
  • 17 October 2025
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageTamil