Showing posts with label ஆர்யன் (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts
Showing posts with label ஆர்யன் (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ). Show all posts

Saturday, November 01, 2025

ஆர்யன் (2025)- தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

         

                   


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஒரு ரைட்டர்.சில நாவல்களை எழுதி வெளியிட்டு இருக்கிறார்.ஆனால் பெரிய அளவில் ஹிட் ஆக வில்லை.மக்கள் யாரும் அவரைக்கொண்டாடவில்லை.


ஒரு டி வி புரோக்ராமில் நீயா?நானா? மாதிரி ஒரு டாக் ஷோ வில் ஆடியன்ஸில் ஒருவராக வரும் வில்லன் திடீர் என துப்பாக்கி முனையில் அனைவரையும் மிரட்டுகிறார்..தான் 5 கொலைகள்  செய்ய இருப்பதாகவும் ,ஒவ்வொரு கொலை நடக்க ஒரு மணி நேரம் முன்பே யாரைக்கொல்லப்போகிறேனோ அவர் பெயரை வெளியிடுவேன் எனவும் ,முடிந்தால் போலீஸ் அதைத்தடுக்கட்டும் என சவால்  விட்டு பின் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்கிறார்


நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர்.இந்தக்கேசை விசாரிக்கிறார்.இறந்து போன ஒரு ஆள் எப்படி 5 கொலைகள் செய்ய முடியும்? என யோசிக்கிறார்.


ஆனால் வில்லன் அறிவித்தபடி வரிசையாகக்கொலைகள் நடக்கின்றன.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.


வில்லன் ஆக இயக்குனர் செல்வராகவன் கச்சிதமாக நடித்திருக்கிறார்.


நாயகன் ஆக விஷ்ணு விஷால் போலீஸ் ஆபீசர் ரோலில் கம்பீரம் காட்டி இருக்கிறார்.அவரது மனைவி ஆக  மானசா சவுத்ரி அதிக வேலை இல்லை.நல்ல அழகு.


நாயகி ஆக ,டி வி தொகுப்பாளினியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் பாந்தமான பங்களிப்பு.அவரது ஆடை வடிவமைப்பு அருமை.


கருணாகரன் கெஸ்ட் ரோலில் வருகிறார்.


ஜிப்ரான் தான் இசை.2 பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை அருமை.ஒளிப்பதிவு ஹரீஷ கண்ணன்.கச்சிதம்.டி வி ஷோ செட்,வில்லனின் வீட்டின் நிலவறை செட்டிங் இரண்டும் ஆர்ட் டைரக்சனின் முத்திரைகள்.


திரைக்கதை  எழுதி இயக்கி இருப்பவர் கே பிரவீன்.2 மணி நேரம் 16 நிமிடஙகள் டைம் ட்யூரேசன்.


படத்தின் நாயகன் தான் தயாரிப்பாளர்



சபாஷ்  டைரக்டர்


1. வில்லன் ஓப்பனிங சீனிலேயே தற்கொலை செய்வதும் அதற்குப்பின் 5 கொலைகள் செய்வதும் எப்படி? என்ற குழப்பம் தான் திரைக்கதையின் பலம்

2  முதல் 30 நிமிடஙகள் நல்ல பரபரப்பு.

3 நாயகன் தான் தயாரிப்பாளர் என்றாலும் படம் போட்டு 30 நிமிடஙகள் கழித்துத்தான் வருகிறார்


  ரசித்த  வசனங்கள் 


1 காண்ட் ரவர்சியைத்தான் எல்லாரும் விரும்பறாங்க,மக்களும் அதைத்தான் விரும்பறாங்க


2.  காசைத்தூக்கி அடிச்சா எந்தக்கழுதையுமே அவார்டு வாங்கலாம்


3 எப்பவுமே எல்லாமே உன் கட்டுப்பாட்டில் தான் இருக்கனும்னு நினைக்கறே,குறிப்பா உன் மனைவி...


4. ஆக்சிஜன் என்பது நைட்ரஜனும் மிக்ஸ் ஆனது.100% ஆக்சிஜன் நல்லதல்ல


5 என் வாழ்க்கையின் நிறைய நல்ல வெர்சன்களை  நீ தான் தந்த.

6 நமக்குப்பிடிக்கலைன்னாக்கூட சில விஷயஙகளை நாம் செய்தே ஆகனும்

7 கெட்ட விஷயம் நடந்தாதான் நல்ல விஷயஙகளை நாம் பின்பற்றுவோமா?

8 உண்மையான கலைஞர்களை அவஙக மரணத்துக்குப்பின் தான் இந்த சமூகம் அவஙகளை அடையாளம் காணும்


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 எஸ் டி டி பூத் என்பதே இப்போது வழக்கொழிந்து விட்டதே? முதல் கொலை அப்படி ஒரு பூத்தில் நடப்பது எப்படி?


2 நாயகன் வாழ்வில் நடந்த காதல்,கல்யாணம் ,டைவர்ஸ் எல்லாம் மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதவை


3, பரத நாட்டியப்பெண்ணான ரஷிதா முஸ்லீம் ஆக இருந்தும் எதற்காக இந்துப்பெண் போல் பொட்டு வைத்துக்கொண்டு நடனம் ஆடுகிறார்?


4 இன்வெஸ்டிகேஷன் திரில்லரில் ஹீரோயிச பைட் எதுக்கு? திணித்தது நல்லாவே தெரியுது.அதே போல் க்ளைமாக்ஸ் பைட் சீனும் தேவை இல்லாதது.


5 பொதுவாகக்கிளைமாக்சில் கொலைக்கான காரணம் தெரிய வரும்போது ஆடியன்ஸ் அதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இருக்க வேண்டும்.அது இதில் இல்லை.

6 வில்லன் நல்லவன்,அவன் டார்கெட் செய்யும் கொலைக்கு உள்ளாகப்போகிறவர்களும் நல்லவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  வித்தியாசமான ஒரு க்ரைம் திரில்லர் தான்.பார்க்கலாம்.விகடன் மார்க் யூகம் 41 ,குமுதம் ரேங்க்கிங் ஓகே .ரேட்டிங் 2.5 /5