2025 பிப்ரவரி மாதம் திரை அரங்கு களில் வெளியான இந்தப்படம் 20/10/2025 முதல் ஓ டி டி ரிலீஸ் ஆக வெளிவந்திருக்கிறது.105 நிமிடங்கள் டைம் ட்யூரேசன்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் தனது புது மனைவி ,கைக்குழந்தையுடன் பாரெஸ்ட்டில் வசித்து வருகிறான்.நாயகனின் மனைவி தனிமையில் இருக்கும்போது வில்லன் அவளை அடைய முயற்சிக்கிறான்.அந்த துரத்தலில் அவள் தலையில் அடிபட்டு இறந்து விடுகிறாள்
18 வருடங்கள் கழித்து வில்லனின் மகன் அதே பாரெஸ்ட் ஏரியாவில் ஒரு டீன் ஏஜ் பெண்ணை வன் புணர்வு செய்து கொலை செய்து விடுகிறான்.
தன் மகனைக்காணவில்லை என வில்லன் போலீசில் புகார் கொடுக்க ,தனது பெண்ணைக்காணவில்லை என பெண்ணின் அம்மா போலீசில் புகார் கொடுக்க இறுதியில் என்ன நடந்தது என்பது க்ளைமாக்ஸ்
நாயகன் ஆக ஜாபர் இடுக்கி நன்றாக நடித்து இருக்கிறார்.அவரது மனைவி ஆக ஸ்ருதி ஜெயன் நடித்திருக்கிறார்.கொஞ்ச நேரமே வந்தாலும் வசீகரிக்கும் அழகு.
வில்லன் ஆக கலாபவன் ஷாஜோன் மிரட்டி இருக்கிறார்.போலீஸ் ஆபீசர் ஆக ஷைன் டாம் சாக்கோ அலட்டலான நடிப்பை வழஙகி இருக்கிறார்
வில்லனின் மகனாக கார்த்திக் விஷ்ணு .இவர் செய்த உருப்படியான வேலை டீன் ஏஜ் பெண்ணை ரேப் செய்ததுதான்
லதா தாஸ்,வர்ஷா ப்ரசாத் ஆகியோரும் உண்டு
ஜெயேஷ் மைனாகப்பள்ளி தான் திரைக்கதை.
இயக்கி இருப்பவர் பாபு ராஜ்
சபாஷ் டைரக்டர்
1. ஆங்கிகப்பத்திரிக்கைகளில் இது ஒரு நல்ல பாரெஸ்ட் க்ரைம் திரில்லர் என பொய்யான பாசிட்டிவ் விமர்சனஙகள் வர வைத்தது
2. கானகத்தின் அழகை அருவியின் அழகை கண் குளிரப்படம் பிடித்தது
3 இந்த வில்லன் கேரக்டரில் அசத்திவிடுவீர்கள் என பொய் சொல்லி சைன் டாம் சாக்கோ விடம் கால்ஷீட் வாங்கியது
4 காசி விக்ரம் மாதிரி உங்க கேரக்டர் என பொய் சொல்லி ஜாபர் இடுக்கியிடம் கால்ஷீட் வாங்கியது
ரசித்த வசனங்கள்
1 சார்,நீங்க போலீசா? திருடனா?
எல்லாத்திருட்டுத்தனமும் தெரிஞ்சு வெச்சிருக்கறவன் தான் போலீஸ்
2 அப்பா அயோக்கியனா இருந்தா பையனும் அதே மாதிரி தான் இருப்பான்.
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. 20 நிமிடஙகளில் எடுக்க வேண்டிய குறும்படத்துக்கான கதையை ஒன்றே முக்கால் மணி நேரம் ஜவ்வாக இழுத்தது
2. பத்து வருடங்கள் அனுபவம் உள்ள போலீஸ் ஆபீசரை 18 வயது பொடிப்பையன் வீழ்த்துவது
3 கைக்குழந்தையுடன் ஓடும் பெண்ணை 2 கிமீ தூரம் துரத்திக்கொண்டே ஓடும் பாடாவதி வில்லன்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - மலையாளப்படங்கள் எல்லாமே பிரமாதமாக இருக்கும் என்ற மூடநம்பிக்கையை உடைத்து எறியும் டப்பாப்படம்.ரேட்டிங்க் 1/5
