பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றுக்கு முக்கியப்பொருள் ஆக விளஙகும் க்ரூட் ஆயில் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை விலாவாரியாக விளக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது இந்தப்படம்.
நாயகனின் வளர்ப்புத்தந்தை க்ரூட் ஆயில் கடத்தி மும்பைக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்குப்பத்து மக்களுக்கு செலவு செய்கிறார்.வில்லன் நெ 1. இவரிடமிருந்து க்ரூட் ஆயிலைத்திருட்டுத்தனமாக திருடி விற்கிறான்.இவர்களிடம் மாமூல் வாங்கும் போலீஸ் ஆபீசர் வில்லன் நெ 2 . இவர்களுக்கு எல்லாம் பாஸ் மாதிரி செயல்படும் மும்பை தொழில் அதிபர் ஹில்லன் நெ 3
இந்த மூன்று வில்லன்களுக்கும் ,நாயகனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தத்திரைக்கதையும்
நாயகனின் வளர்ப்புத்தந்தை ஆக சாய் குமார் கச்சிதமாக நடித்திருக்கிறார்.இவர் பெரிய அளவில் ஏதோ செய்வார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே.
நாயகன் ஆக ஆக்சன் களத்தில் இறஙகி இருக்கிறார் ஹரீஷ கல்யாண்.விஜய்காந்த் ரேஞ்சுக்கு இவர் பேசிக்கொண்டே இருப்பது அலுப்பு.
நாயகி ஆக அதுல்யா ரவி பால்கோவா போல வருகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.
வில்லன் நெ 1. ஆக விவேக் பிரசன்னா பெரிய அளவில் சோபிக்கவில்லை
வில்லன் நெ 2 ஆக வினய் மிரட்டி இருக்கிறார்.வில்லன் நெ 1 உடன் சாப்பிடும் சீன் அதகளம்
வில்லன் நெ 3 ஆக சச்சின் கெடேகர் பந்தாவாக வருகிறார்.ஆனால் பெரிய வில்லத்தனம் எதுவும் செய்யவில்லை
காளி வெங்கட்,கருணாஸ் ,அனன் யா, நாசர் ,பழைய ஜோக் தங்கதுரை,போஸ் வெங்கட் அனைவரும் சும்மா வந்து போகிறார்கள்
திபு நினன் தாமஸ் தான் இசை.பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்
ஒளிப்பதிவு எம் எஸ் பிரபு +ரிச்சர்ட் எம் நாதன் பாராட்டும்படி இருந்தது.
சான் லோகேஷின் எடிட்டிஙகில் படம் 144 நிமிடஙகள் ஓடுகிறது
திரைக்கதை ,இயக்கம் சண்முகம் முத்துசாமி
சபாஷ் டைரக்டர்
1 க்ரூட் ஆயில் பைப் லைன் மூலம் கடத்துவது என்ற கதைக்கரு இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கரு.
2. பெட்ரோல் பங்க்குகளில் கலப்படம் எப்படி நடக்கிறது? கேசரி பவுடரை எப்படி மிக்ஸ் செய்கிறார்கள் என்ற டீட்டெய்லிங் அருமை
3 க்ரூட் ஆயில் தானே கடத்தறாங்க.எதுக்கு டைட்டில் டீசல் என்று யாரும் கேட்டு விடக்கூடாதே என நாயகனின் பெயரே டீசல் தான்,எல்லோரும் அவரை டீசல் என்றே அழைப்பார்கள் என ஒரே போடாகப்போட்ட விதம்
ரசித்த வசனங்கள்
1. சொல்லிக்காட்டுவதற்கு அல்ல நாம் உதவி செய்வது
அதான்,எழுதி வைக்கிறேன்
2. வரும் முன் காப்போம் திட்டப்படி நமக்கு இடைஞசலா யார் வர இருக்காஙகளோ அவஙகளை. முளையிலேயே கிள்ளி எறிஞசிடனும்
3. ஊருக்குள்ளே எத்தனை திருடஙக இருக்கனும்னு போலீஸ் நான் தான் முடிவு பண்ணனும்
4. ஸ்கெட்ச் என்ன?னு தெரியாம நாம உள்ளே போய் சிக்கிக்கூடாது
5. ஊழல் உன் யூனிபார்ம்ல பாதியை சாப்டுடுச்சு
6. ஒருத்தனை அடிக்கிறதால பிரச்சனை தீரும்னா ஜனத்தொகை இவ்ளோ பெருத்திருக்காது.அடிச்சுக்கிட்டு செத்திருக்கும்
7. நான் தனியா செஞ்ச வேலையைத்தான் நீங்க எல்லாரும் சேர்ந்து செய்யறீங்க
8. போலீஸ்காரன் பகை வேணாம்.அது பாம்பு மாதிரி.பழி வாங்காம விட மாட்டான்
9. ஆம்பளைஙகளைத்தேடனும்னா ஒயின்ஷாப்ல இருப்பான்.இந்தப்பொண்ணுஙகளை கூகுள் ல கூட தேட முடியலையே?
10. ப்ரோ.உன் காதல் கதையை சொல்லுங்க
சொல்றேன்.மிஸ்.ஆனா என்ன ப்ரோன்னு கூப்பிட வேணாம்
11. பிணத்தைப்பார்த்துட்டுப்போனா நல்ல சகுனம்னு சொல்வாங்க,ஆனா நாம ஒரு பிணம் கூடவே பயணம் செய்யறோம்
12 தேவை தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.அந்த தேவையையே தீர்மானிப்பவன் நான்
13 வேலை கொடுக்கறோம்னு சொல்லி இனி மக்களை யாரும் ஏமாத்த முடியாது
14. புதுசா ஒரு பொருளை மக்களிடம் விற்கனும்னா பழைய பொருள் கிடைக்காது என்ற பயம் அவஙகளுக்கு வரனும்
15 ஒரே காட்டில் வாழ்வதால் புலியும் ,நரியும் ஒண்ணாகிடாது
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகனின் அம்மா,அப்பா வின் பிளாஸ்பேக் லவ் ஸ்டோரி மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது
2. நாயகியின் கனவில் வரும் கனவுக்கன்னி நாயகனின் அம்மா முக சாயலில் இருப்பது அதனால் லவ் வருவது சரியாக கனெக்ட் ஆகவில்லை
3. நாயகி காலேஜூக்குக்கட் அடிச்சுட்டு நடுக்கடலில் மாட்டிக்கொள்ள நாயகன் காப்பாற்றி தன் படகில் அடைக்கலம் தருவது ஓக்கே.ஆனால் 2 நாட்களாக நாயகியை அவரது வீட்டில் தேடவே மாட்டார்களா?
4. ஒரு கட்டத்தில் 2 கோடி லிட்டர் க்ரூடு ஆயில் காணாமல் போகிறது.அதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரு டேங்க்கர் லாரியில் 30,000 லிட்டர் கொள்ளவு பிடிக்கும் என்றால். மொத்தம் 650 லாரிகள் தேவை.அதை எப்படிக்கடத்தினார்கள் என்பதைக்காட்சியாகவோ,வசனம் மூலமாகவோ விளக்கவே இல்லை.எப்படி நம்பகத்தன்மை வரும்?
5. வில்லனிடம் மாமூல் வாங்கும் இன்னொரு வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் தான் மாமூல் வாங்கும் வில்லனை அடிமை போல் நடத்துவது எப்படி? அந்த வில்லன் கேரக்டர் மேல் பயமே வராதே?
6 நாயகனை போலீஸ் மும்முரமாகத்தேடுகிறது.அவர் அகப்படவே இல்லை.ஆனால் ஒரு மாறு வேடம் கூடப்போடாமல் தலையில் ஒரு தொப்பி மட்டும் போட்டுக்கொண்டு அவர் ஊர் சுத்திட்டுதான் இருக்கார்
7 படத்தில் 3 வில்லன்கள்.யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் குழப்பம் இயக்குனருக்கு
8 பச்சை குத்திக்கினு என்ற பாடல் கொண்டாட்டமான உணர்வைக்கடத்துகிறது,ஆனால் ஆடியோவில் கேட்கும்போது கிடைத்த உணர்வு விஷூவலாகக்காட்டவில்லை.ஏ ஆர் ரஹ்மான் இசையில் சங்கமம் படத்தில் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடலுக்கு நிகழ்ந்த கதி போல
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - முதல் 40 நிமிடஙகள் ,கடைசி 30 நிமிடஙகள் அருமை,மீதி எல்லாம் இழுவை.டி வி ல போடும்போது பார்த்துக்கொள்ளலாம்.விகடன் மார்க் யூகம் 40 .ரேட்டிங் 2.25 / 5
| Diesel | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Shanmugam Muthusamy |
| Written by | Shanmugam Muthusamy |
| Produced by | Devarajulu Markandeyan SP Sankar Kishore. S |
| Starring | Harish Kalyan Vinay Rai Athulya Ravi P. Sai Kumar |
| Cinematography | M. S. Prabhu Richard M. Nathan |
| Edited by | San Lokesh |
| Music by | Dhibu Ninan Thomas |
Production companies | Third Eye Entertainment SP Cinemas |
| Distributed by | SP Cinemas |
Release date |
|
Running time | 144 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |