18/7/2025 அன்று தெலுங்கு ,கன்னடம் ஆகிய இரு மொழிகளில் திரை அரஙகுகளில் வெளியான இந்தப்படம் இப்போது 30/9/2025 முதல் அமேசான் ப்ரைம் ,ஆஹா தமிழ்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனோட அம்மா ,அப்பாவுக்கு அவஙக 45 வது வயது வரை குழந்தை பாக்யம் இல்லை.46 வது வயதில் தான் நாயகனின் அம்மா உண்டாகிறார்.
இப்போது நாயகனுக்கு 20 வயது.அப்பாவுக்கு 65 வயது.அப்பா தாத்தா மாதிரி இருப்பதால் நாயகனுக்குக்கூச்சம்.வெளியில் எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்ற பயம்.நாயகன் அப்பாவை விட்டுப்பிரிந்து வாழ்கிறான்
காலேஜில் நாயகன் நாயகியைக்கண்டதும் காதல் கொள்ள அவளை சுற்றி சுற்றி வருகிறான்.
நாயகன் ,நாயகி இருவரும் ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார்கள்.கம்பெனி எம் டி யின் மகள் தான் வில்லி.நாயகனுக்கும் ,வில்லிக்கும் ஆவதில்லை
மன்னன் விஜய சாந்தி மாதிரி கதை போகுதே என யோசிக்கும்போது ஒரு ட்விஸ்ட்.வில்லி தான் நாயகனின் அக்கா என்பது தெரிய வருகிறது.
அதற்குப்பின் நடக்கும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
நாயகன் ஆக கிரீட்டி ரெட்டி நம்ம ஊர் சித்தார்த் மாதிரி இருக்கிறார்.இளமைத்துள்ளலுடன் கூடிய நடிப்பு.ஜிம்னாஸ்டிக் ,யோகா எல்லாம் கற்றவர் போல.வில் போல் வளைகிறது உடல்.
நாயகி ஆக ஸ்ரீ லீலா.பேர் நல்லாருக்கு.ஆள் அந்த அளவு இல்லை.அதிக வாய்ப்பும் இல்லை
வில்லி ஆக ஜெனிலியா டிசவ்சா.படையப்பா நீலாம்பரி மாதிரி கேரக்டர்.ஆனால் குருவி தலையில் பனங்காநடிப்பு.பிரமாதமாக டான்ஸ் ஆடுகிறார்
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.பின்னணி இசை குட்.
கே கே செந்தில் குமாரின் ஒளிப்பதிவு பிரமாதம்.நாயகன்,நாயகி ,வில்லி அனைவரையும் அழகாக்காட்டி இருக்கிறது
கல்யாண் சக்ரவர்த்தியின் வசனஙகள் பரவாயில்லை ரகம். நிரஞசனின் எடிட்டிஙகில் படம் 154 நிமிடஙகள் ஓடுகிறது
திரைக்கதை இயக்கம் ராதா கிருஷ்ண ரெட்டி
அக்கா,தம்பி ,அப்பா பாசக்கதையை காதல் ,கலாட்டா வாக சொல்லி இருக்கிறார்
சபாஷ் டைரக்டர்
1 மைண்ட் யுவர் ஓன் பிஸ்னெஸ் என்ற டைட்டில் உள்ள புக்கை நாயகி நாயகனிடம் காட்ட நாயகன் நாயகியிடம் காட்டும் புக் டைட்டில் பிஸ்னெஸ் ஆப் லவ்
2 நாயகன் நாயகியைத்துரத்தி துரத்தி லவ் பண்ணும் காலேஜ் போர்சன் பல படஙகளில் பார்த்ததுதான் என்றாலும் ரசிக்க வைக்கும் காட்சி அமைப்புகள்
3 படம் முழுக்க நாயகன் அணிந்து வரும் உடைகள் அபாரம்.அவரது ஹேர் ஸ்டைலும் அபாரம்.
4 வைரல் பாட்டில் டான்ஸ் ,ஆர்ட் டைரக்சன் அனைத்தும் அருமை.டி ஆர் ரசிகர். போல
ரசித்த வசனங்கள்
1 சார்.இங்கே ஒர்க் பண்ணினா மேலே வர முடியுமா?
மேலே போகனும்னா நீ லிப்ட் ல தான் வேலை செய்யனும்
2 ஜெயிக்கறதுன்னா புதுசா ஸ்டார்ட் பண்றது இல்லை.புதுசா க்ளோஸ் பண்றது.
3 எந்த ஒரு பகையுமே ,எமோஷனுமே நிலையா இருக்கறதில்லை
4 நம்மை நாம் தான் காப்பாத்திக்கனும்.நம்மைக்காப்பாற்ற வெளில இருந்து யாரும் வர மாட்டாங்க
5 நாம மேலே வரும்போது அதிர்ஷடம் என சொல்வாங்க.தடை வந்தாதான் நம்ம திறமை வெளில வரும்
6 ஒரு அப்பா அம்மாவோட கோபத்துக்குப்பின்னாடி பிள்ளை மேல் இருக்கும் அன்பு மட்டும் தான் காரணமா இருக்கும்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகி யோகா டீச்சர்.நாயகன் அன்று தான் முதன் முதலாக யோகா க்ளாஸ்க்கு வர்றான்.ஆனால் நாயகியை விடப்பிரமாதமாக யோகா செய்வது எப்படி?ஹீரோயிசத்தில் இடி விழ.
2 கம்பெனிக்கு வேலைக்கு வந்த அனைவரும் டீசெண்ட்டாக டிரஸ் பண்ணி இருக்க நாயகி மட்டும் ரம்பா மாதிரி டிராயருடன் வருவது ஏன்? ( எல்லாம் ஒரு கிளாமருக்குத்தான்)
3 நாயகன்,நண்பர்,அப்பா மூவரும் பானிபூரி சாப்பிட்டதும் பில் 100 ரூபா வருது.அது எப்படி? ஒரு பிளேட் 33.33 ?
4 பாசமாக இருக்கும் அப்பா ,மகள் செண்ட்டிமெண்ட் அருமை.ஆனால் தத்துக்கொடுப்பதற்காக மகளை வெறுப்பது போல் நடிப்பது அமெச்சூர் டிராமா
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் -16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பேமிலி டிராமாதான் ,கமர்ஷியல் கலர்புல் ஆக சொல்ல முயன்றதில் கொஞ்சம் ஸ்லிப் ஆகி விட்டது. ரேட்டிங்க் 2.25 /5
| Junior | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Radha Krishna Reddy |
| Written by | Radha Krishna Reddy |
| Dialogues by |
|
| Produced by | Sai Korrapati |
| Starring |
|
| Cinematography | K. K. Senthil Kumar |
| Edited by | Niranjan Devaramane |
| Music by | Devi Sri Prasad |
Production company | |
| Distributed by | Mythri Movie Makers |
Release date |
|
Running time | 154 minutes |
| Country | India |
| Languages |
|
| Budget | ₹25 crore[1] |
| Box office | ₹10–16 crore[2][3] |
