Monday, June 03, 2024

THALAVAN (2024) - CHIEF- மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

                     


பை சைக்கிள்  தீவ்ஸ் (2013) என்ற  காமெடி  த்ரில்லர்  படம்  மூலம் இயக்குநர் ஆக  அறிமுகம் ஆன  ஜிஸ் ஜோய்  பிறகு  சண்டே ஹாலி டே ( 2017) , விஜய் சூப்பரும், பவுர்ணமியும் (2019)  , மோகன் குமார் ஃபேன்ஸ் (2021) , இன்னலே  வர (2022)  ஆகிய  ஐந்து  படங்களை  இயக்கியவருக்கு  ஆறாவது  படம்  தரமான  க்ரைம்  த்ரில்லர்  ஆக  அமைந்து  விட்டது


 மலையாள  மனோரமா, த  ஹிந்து ,  த  நியூ  இண்டியன்  எக்ஸ்பிரஸ் , உட்பட  13  பத்திரிக்கைகளில்  பாசிட்டிவ்  விமர்சனங்களைப்பெற்ற  இப்படம்   த  இண்டியன்  எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில்  மட்டும்  நெகடிவ்  விமர்சனத்தைப்பெற்றது . பொது  மக்களிடையே  அமோக  வரவேற்பைப்பெற்று கமர்ஷியல் ஹிட்  ஆகி  விட்டது  இப்படம்,  24/5/2024  முதல்  திரை  அரங்குகளில்  ரிலீஸ்  ஆன  இப்படம்  ஓடி டி யில் ஜூன் 27  முதல்  வெளி  வர  இருக்கிறது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்   கேரளாவில்  ஒரு  போலீஸ்  ஸ்டேஷனில் சர்க்கிள்  இன்ஸ்பெக்டர்  ஆகப்பணிபுரிகிறார். இவர்  ரஃப்  அண்ட்  டஃப்  கேரக்டர் , ஸ்ட்ரைட்  ஃபார்வார்டு  ஆக  டீல்  செய்பவர், மிகவும்  நேர்மையானவர், கண்டிப்பானவர் ,அதனால்  ஸ்டேஷனுக்கு  உள்ளேயும், வெளியேயும்  இவருக்கு  எதிரிகள்  அதிகம்


இவரது  எதிரிகளில்  ஒருவன்  இவரைப்பழி  வாங்க  இவரது  மனைவியை  தாக்குகிறான்.பிறகு  ஸ்டேட்மெண்ட்டில் ஆள்  மாறி விட்டது , தவறுதலாக  இவர்  மனைவியைத்தாக்கி  விட்டேன் என  வாக்குமூலம்  தருகிறான்.இவனை  இந்தக்கேசில்  இருந்து  விடுவிக்க  அடிக்கடி  இவனது  மனைவி  நாயகனை  சந்திக்க  நாயகனின்  வீட்டுக்கும் , ஸ்டேஷனுக்கும்  நடையாய்  நடக்கிறாள், ஆனால்  நாயகன்  அவளை  விரட்டி  விடுகிறார்


ஒரு  நாள்  அந்தப்பெண்  நாயகனின்  வீட்டில் மாடியில்  கொலை  செய்யப்பட்டுக்கிடக்கிறாள் . சந்தர்ப்பமும், சாட்சிகளும்  நாயகனுக்கு  எதிராக  இருக்கிறது 


 நாயகன் பணி  செய்யும்  அதே  போலீஸ்  ஸ்டேஷனில்  புதிதாகப்பொறுப்பேற்க  வந்திருக்கும்  சப்  இன்ஸ்பெக்டர்   நாயகனைப்போலவே  ஸ்ட்ரைட்  ஃபார்வார்டு , முன் கோபி ,. நாயகனுக்கும்  , இவருக்கும்  ஆகவில்லை , அடிக்கடி  முட்டிக்கொள்கிறார்கள் 


 நாயகன்  மேல்;  இந்த  கொலைப்பழி  விழுந்ததும்  இந்தக்கேசை  விசாரிக்கும்  பொறுப்பு  அந்த  சப்  இன்ஸ்பெக்டர்  கைக்குப்போகிற்து


 அவர்  கரெக்ட்  ஆக  அந்தக்கேசை  டீல்  செய்தாரா?  அல்லது  இதுதான்  சாக்கு  என  நாயகனை  மாட்டி  விட்டாரா? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  பிஜூ  மேனன்  அட்டகாசமான  நடிப்பில்  மனம்  கவர்கிறார்.ஜெயிலில்  வைக்கப்படும்  சாப்பாட்டை  சாப்பிடாமல்  அதையே  வெறித்துப்பார்ப்பது , மகளிடம் வருத்தப்படுவது,  மகளைக்கண்டிக்கும்  மனைவியிடம்  கோபப்படுவது  என  எல்லா  இடங்களிலும்  ஸ்கோர்  செய்கிறார்


 இன்னொரு  நாயகன்  ஆக  ஆசிஃப்  அலி. நாயகனை  விட  அதிக  காட்சிகள்  இவருக்குத்தான். காரணம்  பட  இயக்குநர்  எடுத்த  ஆறு  படங்களில்  ஐந்து  படங்களில்  ஆடிஃப்  தான்  ஹீரோ .  நாயகனுடன்  மல்லுக்கட்டுவது , நாயகன்  கேசில்  மாட்டியபோதும்  சந்தோஷ்ப்படாமல்  நியாயத்தின்  பக்கம்  நிற்பது   என  கவனம்  ஈர்க்கிறார்


நாயகனின்  மனைவியாக  மியா  ஜார்ஜ், ஈர்க்கும்  அழகு , கவனிக்க  வைக்கும்  எளிமை , ஆனால்  அவருக்கு  அதிக  காட்சிகள்  இல்லை 


 கொலை  செய்யப்படும் பெண்ணாக  அனுஸ்ரீ  கனகச்சிதம் 


 உயர்  அதிகாரியாக  திலீஷ்  போத்தன்  கம்பீரமான  நடிப்பு 


 மாறுபட்ட  கதாபாத்திரத்தில்  ஜாபர்  இடுக்கியின்  நடிப்பு  செம 


தீபக்  தேவின்  பின்னணி  இசை  பரபரப்பு


சரண் ம், வேலாயுதன்  ஆகியோரின்  ஒளிப்பதிவு  கனகச்சிதம் 


சூரஜ்  எடிட்டிங்கில்  இரண்டு   மணி  நேர,ம்  10  நிமிடங்கள்  ஓடுகிறது . எங்கும்  தொய்வில்லை 


தேவர்கட்  ஆனந்த  , பெரும்பாவூர்  சரத்  ஆகிய  இருவரும்  திரைக்கதை  எழுத , வசனம்  எழுதி  இயக்கி  இருக்கிறார்  ஜிஸ்  ஜாய்  


சபாஷ்  டைரக்டர்


1  அக்னி நட்சத்திரம் (1988) , டிரைவிங்  லைசென்ஸ் ( 2019) , அய்யப்பனும்  கோஷியும் (2020)   ஆகிய  படங்களைப்போல  இரு  நாயகர்களுக்கு  இடையே  ஆன  ஈகோ  கிளாஸ்  என்பதாக  திரைக்கதை  பயணப்பட்டாலும் , ஒரு  கட்டத்தில்   க்ரைம்  இன்வெஸ்டிகேஷன்  த்ரில்லர் ஜனருக்கு  திரும்புவது  அருமை 


2   ஜாபர்  இடுக்கி  மூலம்  கொலையாளி   நாயகனின்  நண்பனாக  இருக்கலாம்,  அல்லது  நாயகனின்  மனைவியாக  இருக்கலாம்  என்ற  சந்தேகங்களை  எழுப்பும்  விதம்  அருமை 


3 வில்லன்  நாயகன்  மேல்  உள்ள  முன்  பகையில்  பழி  தீர்க்க  இத்தனையையும்  செய்தான்  என்ற  காரண  காரியங்கள்  நம்பும்படி  சொல்லப்பட்டிருக்கின்றன


4  திரைக்கதை  ஒரு  இடம்  கூட  போர்  அடிக்கவில்லை , அடுத்து  என்ன  என்று எதிர்பார்ப்பில்  வேகமாக  ஓடிக்கொண்டே  இருக்கிறது 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  புல்லட்  பைக்கை  பெட்ரோல்  ஊற்றி  அருகில்  இருந்தே  ஒரு  ஆள்  பற்ற  வைப்பதாக , எரியும்போது  அருகில்  நிற்பது  போல  ஒரு  காட்சி  பல  படங்களில்  வருகின்றன. இப்படத்திலும்  டிட்டோ . வெடிக்கும்  அபாயம்  உண்டு  என்பதால்  நம்ப  முடியவில்லை 


2   நாயகனின்  மனைவியை  தவறுதலாக  அட்டாக்  பண்ணிட்டேன்  என  ஒரு  ஆள்  சொல்லும்போது  அப்போதே தீர  விசாரித்து  ராங்கா  அட்டாக்  பண்ணியது இவர்  என்றால்  நீ ஆக்சுவலா  யாரை  அட்டாக்  பண்ண  நினைச்சே?  எனக்கேட்டிருந்தால்  அப்போதே  கேஸ்  முடிந்திருக்கும்


3  நாயகர்கள்  இருவரும்  துடிப்பான, ஆஜானுபாவமான , பலசாலிகள் , போலீஸ்  ஹையர்  ஆஃபீசர்ஸ், ஆனால்  வில்லன்  வயதான  ஆள் . பலசாலி  இல்லை , க்ளைமாக்சில்  நாயகர்கள்  இருவரையும்  அசால்ட்  ஆக  டீல்  செய்வதும் , ஃபைட்டில்  டஃப்  ஃபைட் கொடுப்பதும்  நம்ப  முடியவில்லை 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -யு



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மலையாளப்பட  ரசிகர்கள் , க்ரைம்  த்ரில்லர்கள்  ரசிகர்கள்  அவசியம் பார்க்க  வேண்டிய  படம் , ரேட்டிங் 3 / 5 


Thalavan
Theatrical release poster
Directed byJis Joy
Written byAnand Thevarkkat
Sarath Perumbavoor
Dialogues
Jis Joy
Produced byArun Narayan
Sijo Sebastian
StarringBiju Menon
Asif Ali
Miya George
Anusree
Anand Bbal
CinematographySharan Velayudhan
Edited bySooraj ES
Music byDeepak Dev
Production
companies
Arun Narayan Productions
London Studios
Distributed byCentral Pictures
Release date
  • 24 May 2024
CountryIndia
LanguageMalayalam

Sunday, June 02, 2024

பகடி ஆட்டம் (2017) - தமிழ் - BURIED (2010) -ஸ்பானிஷ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

         


     தமிழ்  ஒரு  நுணுக்கமான  மொழி . பகடி  என்றால்  கிண்டல்  , கேலி  என்றும்  பொருள்  உண்டு . சதுரங்கம்  என்ற  பொருளும்  உண்டு . படத்தின்  டைட்டிலுக்கு   சதுரங்க  ஆட்டம்  என்று  பொருள். 2010 ஆம்  ஆண்டில்  வெளியான ஒரு  ஸ்பானிஷ்  படத்தின் கருவை  இன்ஸ்பிரேஷன்  ஆகக்கொண்டு  உருவான  படம். துருவங்கள்  16  படம்  ஹிட்  ஆனதும்  அதே  ரகுமான்  நடிக்க  க்ரைம்  த்ரில்லர்  எடுத்தால்  கல்லா கட்டி  விடலாம்  என்ற  எண்ணத்தில்  உருவான  படம் 


இயக்குநர்  மகேந்திரனிடம் உதவி  இயக்குநர்  ஆக  இருந்த ராம்  கே  சந்திரன்  தான்  இப்படத்தை  இயக்கி  இருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்

நாயகி  ஒரு  மிடில்  கிளாஸ்  பெண். காலேஜில்  படிக்கிறாள். அக்கா  ஒரு  ஆட்டோ  டிரைவர். அம்மா  ஹவுஸ்  ஒயிஃப், அப்பா  இல்லை , அக்கா  தான்  அப்பாவாக  இருந்து  நாயகியைக்கவனித்துக்கொள்கிராள் 


  வில்லன் ஒரு  பொம்பளைப்பொறுக்கி. காலேஜ்  மாணவிகளைக்காதலிப்பதாக  ஆசை  வார்த்தை  கூறி  அவர்களை  உபயோகப்படுத்திக்கொள்பவன். நாயகியுடன்  வில்லன்  அந்தரங்கமாக  இருந்ததை  வீடியோ  எடுத்து  வைத்து  நாயகியை  மிரட்டுகிறான்



நாயகி  வில்லனின்  பட்டியலில்  பத்தோடு  பதினொன்று , அத்தோடு  இதுவும்  ஒன்று. ஆனால்  நாயகிக்கு  அப்படி  அல்ல . அவமானத்துக்குப்பயந்து  தற்கொலை  செய்து கொள்கிறாள் . நாயகியின்  அக்கா  வில்லனைப்பழி  வாங்க  அவனைக்கடத்தி  ஒரு  பெட்டியில்  அடைத்து  வைக்கிறாள் 


  நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபிசர். வில்லன்  காணாமல்  போன  தகவலைப்புகாராக  வில்லனின்  பெற்றோர்  போலீஸ்  ஸ்டேஷனில்  பதிவு  செய்ய  விசாரிக்கிறார்


 இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்களே  மீதி  திரைக்கதை 



நாயகி  ஆக  கவுரி நாந்தா  கண்ணியம்  ஆன  கிராமத்துப்பெண்ணாக  வலம்  வருகிறார். வில்லன்  ஆக   சுரேந்தர்  கச்சிதம் . 


 நாயகன்  ஆக  ரகுமான்  இளமைப்பொலிவுடன்  நடித்திருக்கிறார்


 நிழல்கள்  ரவி  வில்லனின்  அப்பாவாக  வருகிறார்


கார்த்திக்  ராஜா  வின்  பின்னணி  இசை  குட் . ஒரே  ஒரு  பாட்டு  சுமாராக  இருக்கிறது 


 ஒளிப்பதிவு ,  எடிட்டிங்  போன்ற  டெக்னிக்கல்  அம்சங்கள்  ஓக்கே  ரகம். 2  மணி  நேரம்  படம்  ஓடுகிறது 


சபாஷ்  டைரக்டர்


1    என்  பையன்  எப்போதும்  மொபைல்  ஃபோனை  சைலண்ட்  மோடுல  வைப்ரேஷன்  மோடு  லதான்  வெச்சிருப்பான்  அதுல 360  டிகிரி  செக்யூரிட்டி  ஆப்  டவுன் லோடு  பண்ணி  வெச்சிருப்பான்  என்று  நிழல்கள்  ரவி  சொன்னதும்  நாயகன்  ஓ  360  டிகிரி  ஆப்பா? என்று  கேட்டு   அலெர்ட்#150821  என்று  டைப்  பண்ணி  அந்த  ஃபோனை  டிராக்  பண்ணும்  ஐடியா  பார்க்க  நன்றாக  இருந்தது 


2  வில்லனின்  போர்ஷன்  முதல்  பாதி  நாயகன்  துப்பறியும்  போர்சன் பின் பாதி  என  சரியாகப்பிரித்து  தெளிவாகக்கதை  சொன்ன  விதம் 


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  வெட்ட  வெளியிலே  பட்டாம்பூச்சி  பறக்குதே


ரசித்த  வசனங்கள் 


1   இந்தப்பொம்பளைப்புள்ளைங்களைப்பெத்துட்டு  வயித்துல  நெருப்பைக்கட்டி  வெச்ச  மாதிரி  இருக்கு 


  ஏம்மா,  பையனைப்பெத்திருக்கலாமில்ல?  ஐஸ்  கட்டியை  வயித்துல  கட்டுன  மாதிரி  இருக்கும்


2   அவனை  என்  டெம்ப்ரவரி  டிரைவரா   வெச்சிருக்கேன்


3  எனக்கு  ஆளும்  கட்சியையும்  தெரியாது , எதிர்க்கட்சியையும்  தெரியாது , எனக்கு  அக்யூஸ்ட்டை  மட்டும் தான்  தெரியும் 


4  என்ன  பொண்ணுங்கம்மா  நீங்க  எல்லாம், உங்க  அம்மா  , அப்பாவையும்  ஏமாத்தி இருக்கீங்க . உங்க  பாய்  ஃபிரண்ட்ஸையும்  ஏமாத்தி  இருக்கீங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  நாயகன்  ஒரு  போலீஸ்  ஆஃபிசர். மஃப்டியில்  ஒரு  ஏரியாவுக்கு  அவரும்  அவர்  ஆட்கள்  ஐந்து  பேரும்  போறாங்க , நாம  போலீஸ்  என்பது  யாருக்கும்   தெரியக்கூடாது , ஜாக்கிரதையா  நடந்துக்கனும்  என்கிறார். ஆனால்  எல்லோரும்  போலீஸ்  பூட்ஸ்  , காக்கி  சாக்ஸ்  போட்டிருக்காங்க . இதான்  அந்த  ரகசிய  நடவடிக்கையா? 


2  பொதுவாக  நெட்  யூஸ்  பண்ணும்  ஆண்ட்ராய்டு  ஃபோன்  அதிக  பட்சம் 24  மணி  நேரம்  தான் பேட்டரி  நிற்கும், ஆனால்  வில்லனின்  ஃபோன் 36  மணி  நேரம்  தாண்டி  ஆன் லயே  இருக்கு . பவர்  பேங்க்  கோடு  ஆல்வேஸ்  கனெக்டில்  இருக்கும்  ஃபோன்  தான்  அபப்டி  இருக்கும் 


3  வில்லனின்  ஃபோனில்  இருந்து  நாயகன்  ஒரு  நெம்பருக்குக்கால்  பண்ணியதும்  காலை  அட்டெண்ட்  பண்ணிய  பெண்  எதிர்  முனையில்  குரல்  கேட்காமல்  அவர்  பாட்டுக்கு  தியேட்டருக்குப்போலாமா? என  கேட்டுக்கொண்டே  இருக்கிறார். யார்  பேசறாங்கனு  குரல்  கேட்க  மாட்டாரா? 


4  வேறு  ஒரு  பாய்  ஃபிரண்டுடன்  பேசிக்கொண்டிருக்கும்  பெண்  வில்லனின்  கால்  வந்ததும்  கட்  பண்ணாமல்  அவனைப்பக்கத்தில்  வைத்துக்கொண்டே  கொஞ்சம்  தள்ளி  வந்து  தியேட்டருக்குப்போலாமா? என  கேட்கிறாரே? பெண்கள்  அவ்ளோ   அசால்ட்  ஆகவா  மாட்டிக்கொள்வார்கள் ? 


5  வில்லன்  தன்  கேர்ள்  ஃபிரண்ட்சின்  ஃபோன்  நெம்பர்சை  நூடுல்ஸ் , சாக்லெட் , ஐஸ் க்ரீம் ,டைம்  பாஸ்  , லெமன்  இந்த  மாதிரி  பெயரில்  சேவ்  பண்ணி  வெச்சிருக்கான், அவன்  கூடவே  சுத்தும்  பெண்களுக்கு  தங்கள்  நெம்பரை  என்ன  பெயரில்  சேவ்  பண்ணி   இருந்தான்  என்பதே  தெரியாதா?  பார்க்க  மாட்டார்களா? நாயகன்  சொல்லித்தான்  தெரிகிறது 


6  வில்லனை  பெட்டியில்  அடைத்து  வைக்கும்  ஆள்  எதற்காக  ஒரு  ஃபோனை விட்டுச்செல்ல  வேண்டும் ? அதை  வைத்து  100ம்  எண்ணுக்கு  கால்  பண்ணி  போலீசை  வரவழைக்க  வாய்ப்பு  இருக்கே? அது  ரிஸ்க்  ஆச்சே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -   யூ/ ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ரகுமான் ரசிகர்கள்  யாராவது  இருந்தால்  அவருக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்  2.25 / 5 


Pagadi Aattam
Release poster
Directed byRam K. Chandran
Produced byT. S. Kumar
K. Ramaraj
D. Subas Chandrabose
A. Gunasekar
StarringRahman
Gowri Nandha
Surendar
Monica
Akhil
CinematographyKrishnasamy
Edited byK. Sreenivas
Music byKarthik Raja
Production
companies
Marram Movies
Bharani Movies
Release date
  • 17 February 2017
CountryIndia
LanguageTamil

Saturday, June 01, 2024

சாமான்யன் (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஹெய்ஸ்ட் டிராமா )

   

 மண்ணுக்கேத்த  பொண்ணு , மருதாணி , ஹலோ  யார்  பேசறது  ஆகிய  மூன்று  படங்களை  ஒரே  ஆண்டில்  (1985)           இயக்கிய  ராம ராஜன்  1986. ல்  நம்ம  ஊரு  நல்ல  ஊரு  என்ற  படத்தில்  நாயகனாக  ,புதுமுகமாக  அறிமுகம்  ஆகி  மக்களிடையே  பெரும்  வரவேற்பைப்பெற்றார். அவரது  லைஃப்  டைம்  அச்சீவ்மெண்ட்  ஆக  கரகாட்டக்காரன் (1989)  அமைந்தது . மொத்தம்  44  படங்களில்  நாயகனாக  நடித்த  அவர்  கடைசியாக  நாயகனாக  நடித்த  படம்  மேதை (2012)   சரியாகப்போகவில்லை.அவரது  கடைசி  வெற்றிப்படம்  தெம்மாங்குப்பாட்டுக்காரன் (1997)


பூ  மனமே  வா  (1999) , அண்ணன்  (1999) , பொன்னான  நேரம் (2001)  , சீறி வரும்  காளை ( 2001)  என  அவரது  கடைசிப்படங்கள்  தோல்விகளாகவே  முடிந்தன பலருக்கும்  தெரியாத  ஒரு  தகவல்  கிராமராஜன்  என  அறியபப்ட்ட  அவர் ஹலோ  யார்  பேசறது  (1985)  , மறக்க  மாட்டேன்   (1985)    ஆகிய  இரு  க்ரைம்  த்ரில்லர்  படங்களை  இயக்கினார்  என்பது.


ஈரோடு  ஸ்டார்  தியேட்டரில்  கரகாட்டக்காரன்  185  நாட்கள்  ஓடியது . மதுரையில்  ஒரு  வருடம்  ஓடியது . ரஜினி  படங்களுக்கு  நிகரான  வசூல்  சாதனைகளை  லோ  பட்ஜெட்  படங்களான  இவரது  வில்லேஜ்  சப்ஜெக்ட்  படங்கள்  செய்தன 


12  வருடங்களுக்குப்பின் , ஒரு  நீண்ட  இடைவெளிக்குப்பின்  மீண்டும்  நாயகன் ஆக  வந்திருக்கிறார், வங்கிக்கொள்ளையை  அடிப்படையாகக்கொண்டு  தமிழில்  வந்த  முக்கியமான  படங்கள்  கே  பாக்யராஜ்  நடித்த  ருத்ரா (1991)  அஜித்  நடித்த  துணிவு (2023) . அந்த  வரிசையில்  இதுவும்  ஒரு  வெற்றிப்படமாக  அமைந்ததா? என்பதைப்பார்ப்போம் 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன், அவருடைய  சம்பந்தி  கம்  நண்பன் , இன்னொரு  நண்பன்  என  மூன்று  பேர்   ஒரே  சமயத்தில்   மூன்று  வெவ்வேறு  இடங்களை  அட்டாக்  செய்கிறார்கள் . நாயகன்  ஒரு  வங்கியில்  புகுந்து  கையில்  உள்ள  சூட்கேசில்  உள்ள  வெடிகுண்டைக்காட்டி   பயமுறுத்துகிறார். வங்கியில்  பணி  ஆற்றும்  மேனேஜர்  , அசிஸ்டெண்ட்  மேனேஜர்  வீடுகளில்  மீதி  இருவரும்  நுழைந்து  துப்பாக்கி  முனையில்  குடும்பத்தினரை  மிரட்டுகின்றனர் . இவர்கள்  நோக்கம்  என்ன? டிமாண்ட்  என்ன? என்பதை  அறிய  போலீஸ்  அதிகாரி  தன்  படையுடன்  களத்தில்  இறங்குகிறார்/


முதல் பாதி இப்படி  பரபரப்புடன்  செல்ல  பின்  பாதியில்  ஃபிளாஸ்பேக் . நாயகனின்  மகளுக்கு  நாயகனின்  நண்பனின்  மகனுடன்  திருமணம்  செய்து  வைக்கிறார்  நாயகன். இருவருக்கும்  ஒரு  குழந்தை  பிறக்கிறது . நகரில்  வாடகை    வீட்டில்  வசிக்கும்  அவர்கள்  ஹவுஸ்  ஓனர்  தொல்லை  தாங்காமல்  ஒரு  சொந்த  வீடு  வாங்க  முடிவு  எடுக்கிறார்கள் 


  அகலக்கால்  வைத்து  விடுகிறார்கள்  . 90 லட்சம்  ரூபாய்  மதிப்பில்  ஒரு வீட்டை  வங்கிக்கடன் மற்றும்  பில்டர்ஸ்  கடன்  மூலம்   வாங்க  நினைக்கிறார்கள் .பில்டர்ஸ்  தரமற்ற  முறையில்  வீட்டைக்கட்டிக்கொடுக்க  கரை இடிந்து  விழுந்து  குழந்தைக்கு  மருத்துவச்செலவே  20  லட்சம்  ஆகி  விடுகிறது .சுற்றியும்  கடன். க்ரெடிட் கார்டு  கடன் , ஹவுசிங்  லோன்  கடன் , ஹாஸ்பிடல்  செலவு  கடன்  என  அவங்க  மிகவும்  சிரமப்படுகிறார்கள்  ஒரு கட்டத்தில்  வங்கியின்  கடன்  வசூல்  டார்ச்சர்  தாங்க   முடியாமல்  தற்கொலை  செய்து  கொள்கிறார்கள் .


  இதற்கு  மேல்  சாமான்ய  மக்கள்  இது  போல  கஷ்டப்படக்கூடாது  என  முடிவு  எடுக்கும்  நாயகன்  பின்  வங்கிக்கொள்ளை  சம்பவத்தை  அரங்கேற்றுகிறான். இறுதியில்  என்ன  நடந்தது  என்பதே  க்ளைமாக்ஸ் 


நாயகன்  ஆக  ராமராஜன் . கம்  பேக்  படம்  என  பாராட்டுவதா?  அல்லது  அவரது  உருவத்தைப்பார்த்து  பரிதாபப்படுவதா? தெரியவில்லை .  தொப்பை  ஓவராகப்பாட்டு  பார்க்கவே  பாவமாக  இருக்கிறது .  இவர்  மனம்  ஒத்துழைத்த  அளவு  உடல்  ஒத்துழைக்கவில்லை என்பது  தெரிகிறது . இவரால்  ஓடி ஆடி  நடிக்க  முடியவில்லை ,  பெரும்பாலான  காட்சிகளை  சேரில்  உட்கார்ந்த  நிலையில்  தான்  ஷூட்  செய்து  இருக்கிறார்கள் . ஆனாலும்  அவரது  தன்னம்பிக்கைக்கு    ஒரு சபாஷ் 


நாயகனின்  மகளாக  நக்‌ஷா   சரண்  மற்றும்  மாப்பிள்ளையாக  லியோ  சிவக்குமார்  நடித்திருக்கிறார்கள் 


  நண்பர்கள்  ஆக  எம்  எஸ்  பாஸ்கர் , ராதாரவி  இருவரும்  நிறைவான  நடிப்பு . போலீஸ்  ஆஃபீசர்  ஆக  கே  எஸ்  ரவிக்குமார்  , பேங்க்  மேனேஜர்  ஆக  போஸ்  வெங்கட்  ஆகியோர்  கச்சிதமாக  நடித்திருக்கிறார்கள் 


இசை  இளையராஜா . பின்னணி  இசைக்கு  மட்டும்  புக்  செய்தால்  அவராக  முன்  வந்து  ஒரு  பாட்டுக்கான  சிச்சுவேஷனை  உருவாக்கி  இசை  அமைத்தாராம், அந்தப்பாட்டு  ஹிட்டு 


இயக்குநர்  ராகேஷ்   திரைக்கதை  எழுதி  இயக்கி இருக்கிறார்




சபாஷ்  டைரக்டர்


1  பஸ்  டிரைவர்கள் , கண்டக்டர்கள்  தாங்கள்  ஓசியில்  சாப்பிட  நெடுஞ்சாலையில்  தரமற்ற  ஹோட்டல்  அருகே  வண்டியை  நிறுத்தி  பயணிகளை கடுப்பேற்றுவதை  ஓப்பனிங்  சீனிலேயே  கண்டிக்கும்  விதம் 


2  ராமராஜனின்  மெகா  ஹிட்  படங்களில்  வரும்  பாடல்களை  ஆங்காங்கே  சாமார்த்தியமாக  ஓட  விட்டது  நாஸ்டாலஜிக்  மொமெண்ட்சை  தருகிறது 



  ரசித்த  வசனங்கள் 


1    வீட்டுக்கு  வெளியே  கக்கூஸ்  இருந்த  வரை  இத்தனை  வியாதிகள்  எல்லாம்  இல்லை , எப்போ  வீட்டுக்கு  உள்ளே  கக்கூஸ்  வந்ததோ  அப்பவே  இல்லாத  வியாதிகள்  எல்லாம்  வந்திருச்சு 


2  போலீஸ்  காரங்களுக்கு  எந்த  பேங்க்ல  லோன்  தர்றாங்க ?


 நான்  என்ன  பண்ண  ? ரூல்ஸ்  அப்படி  இருக்கு 


3  பெயரோ  கல்யாண் , ஆனால்  இன்னும்  திருமணம்  ஆகவில்லை 


4  நான்  மட்டும்  அங்கே  வந்தேன் , உன்னை  டவ்சரோட  உக்கார  வெச்சுடுவேன்


  டவுசரோடதான்  என்  வாழ்க்கையே  ஆரம்பிச்சுது , நல்லா  தான்  போய்க்கிட்டு  இருக்கு  


6  அக்கா  , கொஞ்சம்  இஞ்சி  இருந்தா  கொடுங்க 


 ஏம்மா,  நோ  டி வி  நியூஸ்  எல்லாம்  பார்க்கவே  மாட்டியா?


 இல்லக்கா  , நான்  ஃபேஸ்  புக் ,  இன்ஸ்டா  மட்டும்  தான்  பார்ப்பேன்


சரி  உள்ளே  வந்து  எல்லாத்தையும்  பாரு 


7  உலகத்துல  இருக்கும்  மனிதர்களை  ரெண்டே  வகையாப்பிரிச்சுடலாம்,  1  பணம்  கொடுக்கிறவங்க  2  பணம்  வாங்கறவங்க 


8  இன்னைக்கு பாட்டு பாடி பால் கறக்க முடியாது. மிஷினை மாட்டி விடுறேன், நீயே கறந்துக்கோ” 


9   நான்  மீன்  குழம்பு  வெச்சா  அதை  மீனே  சாப்பிடாது


10  ஏம்மா, உங்க  முதுகில் ஒரு  பட்டாம்பூச்சி  உக்காந்திருக்கே  அதை  அனுப்பி  விடுங்க  முதல்ல 

 அது டாட்டூ மேன் 

11  ஜப்தி  பண்ணுன  வீட்டை  நாம  வாங்க  வேணாம், அவங்க  கனவு  உடைஞ்ச  இடத்துல  நம்ம  வாழ்க்கையை  ஆரம்பிக்கனுமா? 


12  எங்கே  கட்டிடங்கள்  அதிகமா  கட்டப்பட்டுக்கொண்டு  இருக்கோ  அங்கே  வளர்ச்சி  அதிகமா  இருக்குனு  அர்த்தம் 


13  குழந்தை  வாய்  விட்டு  அழுதாத்தான்  அம்மாவுக்கே  குழந்தை  பசியா  இருக்குனு  தெரிஞ்சு  பால்  குடுப்பா , ஆனா  குழந்தை  / பொண்ணு  முகத்தைப்பார்த்தே  அவளோட  தேவை  என்னனு  தெரிஞ்சு  அதை  நிறைவேத்தி  வைக்கறவன்  தான்  அப்பா 


14  சின்ன சின்ன கடையில்கூட கடன் அன்பை முறிக்கும், என எழுதி இருக்கு, பேங்கில் கடன் ஆயுளை முறிக்கும் என எழுதி போடணும்.


15  பிறக்கப்போற  குழந்தைக்கு  டாக்டர்  ஆகு  எஞ்சினியர்  ஆகுன்னு  சொல்லிக்கொடுக்காம  கடன்  வாங்காம  வாழ  வழி  பாருனு  சொல்லிக்கொடுங்க 


16  ஏழையாக்கூட  சாகலாம், ஆனா  கடனாளியா  சாகக்கூடாது 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஹீரோ  ஓப்பனிங்  சீனில்  பஸ்சை  விட்டு  இறங்கும்போது  இடது  காலை   முதலில்  வைப்பது  போல்  எடுத்ததைத்தவிர்த்திருக்கலாம், வலது  கால் தானே  ராசியானது ? 


2  ஃபிளாஸ்பேக்  காட்சி  மிக  நீளம். பொதுவாக  ஷங்கர்  படங்களில்  அரை  மணி  நேரத்தில்  சொல்ல  வந்த  ஃபிளாஷ்பேக்கை  வலிமையாக  சொல்லி  விடுவார். 3  மணி  நேரப்படத்தில்  அரை  மணி  நேர  ஃபிளாஸ்பேக்  பெரிதாக  இருக்காது , ஆனால்  இப்படம்  மொத்தமே  இரண்டரை  மணி  நேரம், அதில்  ஒன்றே  கால்  மணி  நேரம்  ஃபிளாஸ்பேக்  தான் 


3    இடைவேளை  ட்விஸ்ட்  இதுவரை  எந்த  தமிழ்  சினிமாவிலும்  வராதது  என  நாயகன்  பேட்டி  அளித்ததைப்போல  பிரமாதமாக  எல்லாம்  இல்லை ,  அவர்  ஒரு  முன்னாள்  ராணுவ  வீரர்  என்ற  ட்விஸ்ட்  தான்  அது ,. ஒர்க்  அவுட்  ஆகவில்லை .  அவரது  உருவம்   பார்த்தால்  அப்படித்தோன்றவில்லை 


4   சும்மா  தள்ளி  விட்டாலே  விழுவது  போன்ற  மூப்புடன்  இருக்கும்  நாயகனை  பேங்க்  மேனேஜர்  கண்டு பயந்து  நடுங்குவது  கேலிக்கூத்து 


5   தேவை  இல்லாமல்  அகலக்கால்  வைத்து  விட்டு  சக்திக்கு  மீறிக்கடன்  வாங்கி  விட்டு  பழியை  எல்லாம்  வங்கி  மேல்  போடுவது  எந்த  வகையில்  நியாயம் ? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ராமராஜன்  முன்னாள்  ரசிகர்கள்   , நைண்ட்டீஸ்  கிட்ஸ்  மட்டுமே  படம்  பார்க்க  முடியும், இக்கால  2 கே  கிட்ஸ்க்குப்படம்  பிடிக்காது .  ரேட்டிங்  2 / 5 , ஆனந்த  விகடன்  மார்க்  மே  பி  35 , குமுதம்  ரேங்க்கிங்  மேபி  சுமார் 


நன்றி - அனிச்சம்  மின்  இதழ்  1/6/2024 

Friday, May 31, 2024

P T SIR -பி டி சார் ( 2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( கோர்ட் ரூம் டிராமா )

                

    இந்தப்படம்  2022 ஆம்  ஆண்டு  நவம்பர்  மாதம்  பூஜை  போடும்போது  ஹிப் ஹாப்  தமிழா  ஆதியின்  17 வது  படம்  என்றார்கள் , ஆனால்  இப்போது  ரிலீஸ்  ஆகும்போது  அவரது  25  வது  படம்  என்கிறார்கள் . இடைப்பட்ட  கேப்பில் 8  படம்  முடிச்சுட்டாரா? என்ன? ( ஒரு  வேளை  இசை  அமைப்பில்  25  வது  படம், நடிப்பில்  17  வது  படமோ ? )

பிரியங்கா (1994) , நேர் கொண்ட  பார்வை   (2019) ,கார்கி (2022) , சித்தா (2023)  ஆகிய  படங்களின்  வரிசையில்  பாலியல்  ரீதியாக  கொடுமைக்கு  உள்ளாகும்  பெண்ணின்  போராட்டங்களை  சொல்லும்  கதையாக  இயக்குநர்  இதை  உருவாக்கி  இருக்கிறார், 


2022  ஆம்  ஆண்டு  கள்ளக்குறிச்சியில்  ஒரு  தனியார்  பள்ளி  மாணவிக்கு  உண்டான  கொடுமைகள்  பற்றிய  உண்மை சம்பவத்தை  அடிப்படையாகக்கொண்டு  இப்படத்தை  உருவாக்கி  இருக்கிறார்


முழுக்க  முழுக்க  ஒரு  கோர்ட்  ரூம்  டிராமாவாக  இதை உருவாக்கி  இருந்தால்  தரமான  படமாக  மாறி  இருக்கும், ஆனால்  கமர்ஷியல்  ஆக  கதை  சொல்லலாம்  என  ஹீரோ , ஹீரோயின் ,  பாடல்கள்  என  எல்லாவற்றையும்  கலந்து  கட்டி  அடித்ததில்  வீரியம்  குறைந்த  சாரைப்பாம்பாகவே  படம்  உருவாகி  இருக்கிறது 

 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  அம்மா  வுக்கு  ஜாதகம் , ஜோதிடம்  இவற்றில்  நல்ல  நம்பிக்கை உண்டு   நாயகனின்  ஜாதகப்படி  திருமணம்  ஆகும்  வரை  அவர்  எந்த  ஒரு  வம்பு  தும்புக்கும்  போகாமல்  இருக்க  வேண்டும். இல்லை  எனில்  அவருக்கு  கண்டம்  ஏற்படும்  என்கிறார்கள்  அதனால்  நாயகனை  அம்மா  புள்ளைப்பூச்சியாகவே  வளர்க்கிறார்.  எங்கே  என்ன  நடந்தாலும்  கண்டுக்காம  இரு , உன்  வேலையைப்பார்  என்றே  அட்வைஸ்  செய்து  வளர்த்து  வருகிறார் 


 நாயகன்  ஒரு     தனியார்  பள்ளியில்  பி டி  மாஸ்டர்  ஆகப்பணி  புரிகிறார். நாயகி  அதே  பள்ளியில்  ஆங்கில  ஆசிரியை, இருவருக்கும்  காதல். திருமணம்  வரை  போகிறது , நிச்சயதார்த்தம்  நடைபெறும்  நாளில்  ஒரு  சம்பவம்  நடக்கிறது 


 நாயகனின்    பக்கத்து  வீட்டில்  ஒரு  மாணவி  நான்கு  இளைஞர்களால்  கிண்டல்  செய்யப்படுகிறார். கிளாமர்  ஆக  டிரஸ்  செய்து  போனதால்  அவர்  அந்த  நிலைக்கு  ஆளாகிறார்.  சமூக  வலை  தளங்களில் அந்த  வீடியோ  வைரல்  ஆகிறது 


 இதனால் அந்த  மாணவி  படிக்கும்  பள்ளியில் அவருக்குக்கெட்ட  பெயர் , அவரை பள்ளியில்  இருந்து  நீக்க  நிர்வாகம்  முடிவு  செய்கிறது . அந்த  மாணவி  பள்ளியின்  நிர்வாகி  ஆன  வில்லனை  சந்தித்து  நியாயம்  கேட்கிறார். ஆனால்  வில்லன்  மாணவி மீதே  கை  வைக்கிறான்


 அந்த  மாணவி  தற்கொலை  செய்து  கொள்கிறாள் . இதனால்  பொங்கி  எழுந்த  நாயகன்  வில்லன்  மேல்  கோர்ட்டில்  கேஸ்  தொடுக்கிறான். அந்த  கேசில்  ஜெயித்தானா? இல்லையா? என்பதே  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஹிப் ஹாப்   தமிழா  ஆதி  காமெடி , காதல் , குறும்பு  கலந்த  கேரக்டர். நன்றாக  செய்திருக்கிறார். பாடல்  காட்சிகளில் , சில  சேஷ்டைகளில்  அவர்  ஏன் பிரபு  தேவா  பாணியில்  நடிக்க  முற்படுகிறார்  எனத்தெரியவில்லை 


நாயகி  ஆக  கஷ்மீரா  பர்தேசி.அழகாக  வந்து  போகிறார். ஆனால்  அதிக  வாய்ப்பு  இல்லை 

  நாயகியை  விட  கனமான  பாத்திரத்தில் , முக்கியத்துவம்  வாய்ந்த  ரோலில்   அனிகா  சுரேந்திரன்  நன்கு  நடித்திருக்கிறார்


நாயகனின்  அம்மாவாக  தேவதர்ஷினி  , அப்பாவாக  பட்டிமன்ற  ராஜா  கலகலப்பாக  படத்தைக்கொண்டு  போகிறார்கள் 


பாதிக்கப்பட்ட  பெண்ணின்  அப்பாவாக  இளவரசு  அட்டகாசமான  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார் 


 வில்லன்  ஆக  தியாகராஜன்  மிரட்டி  இருக்கிறார். அவர்  கண்களும், குரலும்  பெரிய  பிளஸ்  பாயிண்ட் 


 கே  பாக்யராஜ்  ஜட்ஜ்  ஆக  வருகிறார்.  ஓப்பனிங்  சீனில்  அவர்  செய்யும்  காமெடி  அவரது  ஜட்ஜ்  ரோலுக்குப்பொருத்தமாக  இல்லை 


ஆர்  பாண்டிய  ராஜன், முனீஸ்காந்த்  போன்ற  வீணடிக்கப்பட்ட  திறமைசாலிகள்  பட்டியலும்  உண்டு 


நாயகனின்  மாமனார்  கம்  வக்கீல்  ஆக  பிரபு  கச்சிதம் 


இசை  ஹிப் ஹாப்  தமிழா. 2  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


ஓக்கே  பிரசன்னா  வின்  எடிட்டிங்கில்  படம்  2  மணி  நேரம்  10  நிமிடங்கள்  ஓடுகிறது   


 மாதேஷ்  மாணிக்கத்தின்  ஒளிப்பதிவு  குட் 


  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்  கார்த்திக்  வேணுகோபால் 


சபாஷ்  டைரக்டர்


1  மாணவ  மாணவிகள்  யார்  வேண்டுமானாலும்  என்ன  வேண்டுமானாலும் இக்ந்த  சுவரில்  எழுதலாம், எழுதியது  நடக்கும் என்ற  அந்த  மேஜிக்  வால்  ஐடியா  அருமை .  பாத்ரூம் , டாய்லெட்களில்  கிறுக்கல்  எழுத்தாளர்களை பப்ளிக்காக  எழுத  வைக்கும்  ஐடியா  அது 


2   க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்  யாரும்  எதிர்பாராதது 


3  பாட்ஷா  ,  அந்நியன்  பாணியில்  நாயகனின்  கதாபாத்திரத்தை  உருவாக்கிய  விதம் 


4  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  நாயகி  நாயகனிடம்  தன்  காதலை  வெளிப்படுத்தும்  கவித்துவம்  மிக்க  காட்சி 


5 வில்லன்  தியாகராஜன், இளவரசு  ஆகியோரின்  நடிப்பு 


6  நாயகனின் அம்மா, அப்பா  இருவரின்  ஜாதகங்களை  நாயகன் , நாயகி  ஜாதகங்களுக்குப்பதிலாக  ஜோதிடரிடம்  மாற்றிக்கொடுத்து  விட்டு  பலா  பலன்கள்  பார்க்கும்போது  இந்த  ஜோடிக்கு  செட்டே  ஆகாதே  என  ஜோசியர்  சொல்வது  செம  காமெடி  சீன் 


  ரசித்த  வசனங்கள் 


1    யோவ்  , இந்த  வண்டில  நான்  வந்தா  இந்த  வருச  எக்சாமை  எழுத  முடியாது , அடுத்த  வருச  அரியரைத்தான்  எழுத  முடியும் 


2   ஹெல்மெட்  போட்டுக்கோ


  சைக்கிளுக்கு  எதுக்கு  ஹெல்மெட். நீ  சைக்கிள்  வேகத்துல தானே  போறே?


3  வெளில  சொல்ல  முடியாத  சில  விஷயங்களை  அது  பாசிட்டிவோ , நெகடிவ்வோ  ஓப்பனா  சொல்ல  முடிவது  மேஜிக்  வாலின்  ஸ்பெஷாலிட்டி .  நம்ம  மனபாரங்களைக்குறைக்குது 


4   எம்மா  உன்  கண்ல  ஏதாவது  பிராப்ளம் இருக்கா?


 இல்லையே? அங்க்கிள்   , ஏன்  கேட்கறீங்க ?

 போயும்  ;போயும்  இவனை  ஏன்  காதலிச்சே?


5   நான்  எப்படி  வாழனும்?னு  ஒரு  ஜோசியக்காரன்  சொல்ல  வேண்டியதில்லை ‘


‘6  பாதிக்கப்பட்ட  பொண்ணு  செத்துப்போயிட்டா  ஜனங்க  அவளுக்கு  ஆதரவா  கருத்து  சொல்வாங்க , ஆனா  உயிரோட  இருந்தா  அவளைப்பேசியே  சாகடிச்சுடுவாங்க 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   கோர்ட்  ரூம்  காட்சிகள்  அனைத்தும்  ஓவர்  டிராம்டிக். நம்பகத்தன்மையே  இல்லை 


2  இளவரசு  போலீஸ்  ஸ்டேஷனுக்குப்போய்  ஒரு  ஃபுல்  நைட்  அங்கேயே  இருக்கிறார்.  வீட்டுக்கு  தகவல்  சொல்ல  மாட்டாரா?  அவரைக்காணாமல்  குடும்பம்  தவிக்கும்  என்பது  தெரியாதா? 


3  நாயகன்  வில்லனை  அடிக்கும்  காட்சி  நம்பகத்தன்மையே  இல்லை. ஒரு  சாதாரண  ஆசிரியர்  பள்ளி  நிர்வாகியையே  அசால்டாக  அறைவது  எல்லாம்  சாத்தியமே  இல்லை .  அது  போக  வில்லனின்  கேரக்டர்  மிக  பலவீனம்  ஆகி  விடுகிறது . அந்தக்காட்சிக்குப்பின்  வில்லன்  மேல்  எப்படி  பயம்  வரும் ? 


4  பாதிக்கப்பட்ட  மாணவி  வில்லனின்  இடத்திற்கு  ஏன்  தனியாகப்போகிறார்?  அம்மா, அப்பாவை  அழைத்துச்சென்றிருக்கலாம், அல்லது  நாயகனை  அழைத்துச்சென்றிருக்கலாம் 


5 படத்தின்  டைட்டிலுக்கும், மெயின்  கதைக்கும்  என்ன  சம்பந்தம் ?  நாயகன்  கணக்கு  வாத்தியாராக  இருந்தாலும்  இதே  கதை  ஓக்கே  தான். எதுக்கு  பி டி மாஸ்டர் ?  ஸ்போர்ட்ஸ்  டிராமா  கதை  அல்லவே ? 


6  பாதிக்கப்பட்ட  மாணவி  நைட்  டைமில்  கிளாமர்  ஆக  டிரஸ்  பண்ணிட்டுப்போவது  தப்புத்தான். அதை  நியாயப்படுத்தும்  விதமாக  எனக்குப்பிடிச்ச  மாதிரி  நான்  டிரஸ்  பண்ணிட்டுப்போறது  தப்பா? என  டயலாக்  வருது , அதைத்தவிர்த்திருக்கலாம்  



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   ஒரு  நல்ல  கதைக்கரு  சாதாரண  மசாலா  திரைக்கதையால்  சுமாரான  அவுட்  புட்டைக்கொடுத்து  விட்டது .  ஜனரஞ்சகமாய் செல்கிறது  ரேட்டிங்  2.5 / 5 


PT Sir
Theatrical release poster
Directed byKarthik Venugopal
Written byKarthik Venugopal
Produced byIshari K. Ganesh
Starring
CinematographyMadhesh Manickam
Edited byPrasanna GK
Music byHiphop Tamizha
Production
company
Vels Films International
Release date
  • 24 May 2024
CountryIndia
LanguageTamil

Thursday, May 30, 2024

THE LAST STOP IN YUMA COUNTRY (2023) - அமெரிக்கன் மூவி - சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர் )

   

   கனடா , யூ எஸ் ஏ  வில்  ரிலீஸ்  ஆன  முதல்  வாரத்திலேயே  42,000  டாலர்  வசூல்  செய்து  அந்த  ஆண்டின்  வசூல்  படங்களில்  29  வது  இடத்தைப்பிடித்த   கமர்ஷியல்  சக்சஸ்  ஃபிலிம்  இது , மீடியாக்களீன்  ஏகோபித்த  பாராட்டுக்களையும்  பெற்றது              


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  காரில்  பயணம்  செய்து  ஒரு  கேஸ்  ஃபில்லிங்  ஸ்டேஷனுக்கு  வருகிறான் காரில். பெட்ரோல்  , டீசல் க்குப்பதிலாக  கேஸ்  ஃபில்லப்  செய்து  ஓட்டும்  மாடல்  அது . ஆனால் அங்கே  கேஸ்  இருப்பு இல்லை . இன்னும்  10  நிமிடங்கள்  கழித்து கேஸ்  வருமாம், அதுவரை  அட்டாச்டு  ரெஸ்டாரண்ட்டில்  டீ, காஃபி  ஏதாவது  சாப்பிடலாம்  என  வெயிட்  செய்கிறான்


ஒரு  போலீஸ்  காரர்  தன்  மனைவியை  அங்கே  டிராப்  பண்ணீ  விட்டுப்போகிறார். அவர்  தான்  நாயகி . அந்த  ரெஸ்டாரண்ட்டில்  சர்வர்.


அப்போது  அங்கே  ஒரு  காரில்  இருவர்  வருகிறார்கள் . பார்க்கவே  முரட்டு  ஆட்களாக  இருக்கிறார்கள் . அப்போது  தான்  நியூசில்  ஒரு  தகவல்  சொல்கிறார்கள் , அருகில்  உள்ள  வங்கியில்  பணத்தைக்கொள்ளை  அடித்து  விட்டு  காரில் இருவர்  தப்பிச்சென்றார்கள்   என்ற  செய்தி  ஒலிபரப்பாகிறது 


 நாயகன்  நாயகியிடம்  நைசாகப்பேச்சுக்கொடுத்து  உங்க  புருசன்  போலீஸ்  தானே? அவருக்கு  ஃபோன்  பண்ணி  தகவல்  சொல்லுங்கள் . வந்திருக்கும்  இருவரும்  வங்கிக்கொள்ளையர்களாகத்தான்  தெரிகிறது  என்கிறான்


  அதே  சமயம்   ஒரு  லவ்  ஜோடி  காரில்  அங்கே  வந்து  சேர்கிறார்கள் . இதற்குப்பின்  நடக்கும்  பரபரப்பான  சம்பவங்கள்  தான்  மீதிக்கதை 


 ஒரே  ஒரு  ஹோட்டலில்  நடக்கும்  சம்பவங்கள் . மிக  மிக  லோ பட்ஜெட். எந்த  செலவும்  இல்லை . நல்ல  ஐடியா 


கத்தி  வியாபாரியாக , நாயகன்  ஆக  ஜிம்  கம்மிங்க்ஸ்  நடித்திருக்கிறார். முதல்  பாதியில்  அமைதியாக  இருந்து  விட்டு பின்  பாதியில்  ஆக்சனில்  இறங்கும்  கேரக்டர். கச்சிதமாக  செய்திருக்கிறார்


 நாயகி  ஆக  , ஹோட்டல்  சர்வர்  ஆக  ஜாக்லின் பிரமாதப்படுத்தி  இருக்கிறார்


வில்லன்களாக  வருபவர்கள்  தோற்ரம் , கெட்டப் , உடல்  மொழியால்  மிரட்டி  இருக்கிறார்கள் 


 போலீஸ்  ஆஃபீசர்களாக  வரும் இருவர்  நடிப்பும்  நல்ல  சுறுசுறுப்பு 


மிகச்சரியாக  90  நிமிடங்கள்  ஓடும்படி ஷார்ப்  ஆக  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


மாத்யூ  காம்ப்ட்டனின் பின்னணி  இசை  ஒரு  த்ரில்லர்  படத்துக்குத்தேவையான  பணீயைச்செவ்வனே  செய்திருக்கிறது . ஒளிப்பதிவும்  தரம் 


 திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  ஃபிரான்சிஸ்  காலுப்பில்


சபாஷ்  டைரக்டர்


1   தேவை  இல்லாமல்  லொக்கேஷன்  சேஞ்ச் ,  நடிகர்கள் , நடிகைகள்  கூட்டம்  எதுவும் இல்லாமல்  10  பேர் , ஒரே  ஒரு  ஹோட்டல்  என்று  தேர்ந்தெடுத்து  திரைக்கதை  அமைத்த  விதம் . லோ பட்ஜெட்டில் படத்தை  முடித்த  விதம் 


2  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்   அபாரம்,  என  சொல்ல  முடியாவிட்டாலும்  ஓக்கே  ரகம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஒரு  பேங்க்கில்  கொள்ளை  அடிப்பவர்கள்  அவ்ளோ  பணத்துடன்  நேராக  வீட்டுக்கோ , மறைவான  இடத்துக்கோ போய்  பணத்தைப்பத்திரப்படுத்தாமல்  காரில்  டிக்கியில் பணப்பேக்கை  வைத்து  விட்டு  அசால்ட்  ஆக  ஹோட்டலுக்குள்ளே  நுழைவார்களா? 


2    நாயகன்  ரொம்ப  தூரம்  காரில் போக  வேண்டிய  தேவை  இருக்கு . பெட்ரோலை காரிலிருந்து  கேனுக்கு  மாற்றும்போது  அருகில்  இருந்து  கச்சிதமாக  அந்த  வேலையை  செய்யாமல்  பெட்ரோலை  லீக்  செய்து  வேஸ்ட்  செய்வது  ஏன் ?  (  அதனாலேயே  பாதி  வழியில்  கார்  நிற்கிறது ) 



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   தரமான  க்ரைம்  த்ரில்லர் , குடும்பத்துடன்  பார்க்கலாம், கொஞ்சம்  ஸ்லோ  மூவி  . ரேட்டிங்  3/ 5 


The Last Stop in Yuma County
Theatrical release poster
Directed byFrancis Galluppi
Written byFrancis Galluppi
Produced by
  • Matt O'Neill
  • Atif Malik
  • Francis Galluppi
Starring
CinematographyMac Fisken
Edited byFrancis Galluppi
Music byMatthew Compton
Production
companies
Distributed byWell Go USA Entertainment
Release dates
Running time
90 minutes
CountryUnited States
LanguageEnglish
Budget$1 million[2]
Box office$41,520[3][4]

Wednesday, May 29, 2024

CLIMAX (2021) - தெலுங்கு /தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் ) @ அமேசான் பிரைம்

 

         ஒரே  இரவில்  நடக்கும்  கதை  என்ற  விஷயமும், 76 நிமிடங்கள்  தான்  என்ற  டைம்  டியூரேஷனும்  இப்படத்தைப்பார்க்கலாம்  என்று  எண்ண  வைத்தது . தெலுங்குப்படம்  தான்  என்றாலும்  தமிழ்  டப்பிங்கில்  அமேசான் பிரைம் ஓடிடி யில்  காணக்கிடைக்கிறது 


விஜய்  மல்லய்யா  , நீரவ்  மோடி ஆகிய  இரு  தொழில்  அதிபர்களின்  பெயர்களில்  இருந்து  பாதிப்பாதி  உருவி  விஜய்  மோடி  என்ற  கேரக்டரை  உருவாக்கி  தொழில்  அதிபர்களை  டேமேஜ்    செய்வதற்கென்றே  எழுதப்பட்ட  திரைக்கதை  இது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  மிகப்பெரிய  கோடீஸ்வரன். வீட்டில்  சண்டை  போட்டுக்கொண்டு  கோபித்துக்கொண்டு நண்பரின்  ஃபைவ்  ஸ்டார்  ஹோட்டலில்  ரூம்  எடுத்துத்தங்குகிறார். இவர்  ஒரு  எம்  பி  யின்  பினாமியும்  கூட . எம்  பி  யின்  பிளாக்  மணி  ரூ  200   கோடி  ஹாட்  கேஷ்  ஆக  இவருடன்  ரூமில்  இருக்கிறது


 ஹோட்டலில்  ஒரு அழகான  பெண்ணைப்பார்க்கிறார். அவள்  தன்  காதலனுக்காக  காத்திருப்பவள் . பின்  அலைபேசியில்  அவள்  காதலனுடன்  ஏதோ  வாக்கு  வாதம்  செய்கிறாள் இதைக்கண்ட  நாயகன்  என்  கூட  ஒரு  நைட்  தங்கு.  தப்பாக  நினக்க  வேண்டாம்.  மனம்  விட்டு  சில  விஷயங்கள்  பேச  வேண்டும், நான்  சொல்வதை  காது  கொடுத்துக்கேட்க  ஒரு ஆள்  வேண்டும்  , அவ்வளவு  தான். நான்  இந்த  கட்டிலில்  இருப்பேன் , நீ  அந்த  சோபாவில்  இருக்கலாம். தொட  மாட்டேன் ., காலையில்  எழுந்ததும்    நீ  ஒரு  கோடி  ரூபாய்  சன்மானம்  வாங்கிக்கொண்டு  போயிடலாம் . டீலா? என்கிறார்.


இந்த  டீலுக்கு  அந்தப்பெண்  ஒத்துக்கொள்கிறாள். அடுத்த  நாள்  காலை அந்தப்பெண்  எழுந்து  கிளம்பி  விடுகிறாள் . ஒரு  கோடி  வாங்கிக்கொள்ள வில்லை  


அந்த  ரூம்  கதவு  நீண்ட  நேரம்  திறக்காமல்  இருப்பதால்  போலீஸ்க்கு  தகவல்  தெரிவிக்கப்பட்டு  ஓப்பன்  செய்து  பார்த்தால்  கோடீஸ்வரன்  கொடூரமாகக்கொலை  செய்யப்பட்டு  இருக்கிறான்.200  கோடி பணமும்  காணோம்


 எம் பி  தரப்பில்  இருந்து  பயங்கர  பிரஷர் 


போலீஸ்  விசாரிக்கிறது . நாயகனுக்கு  பேங்க்கில்  2500  கோடி  ரூபாய்  அடைக்க  வேண்டிய  கடன்  இருக்கிறது   அவர்  பங்களா , சொத்துக்கள்  எல்லாவற்றையும்  விற்றாலும்   கடனை அ டைக்க  முடியாது 


 ஆனால்  அவர்  பல  இன்சூரன்ஸ்  பாலிசி  எடுத்து  வைத்திருக்கிறார். அதன்  மதிப்பு  ரூ  500  கோடி 


 இப்போது  போலீசின்  சந்தேகம்   அந்த  இன்சூரன்ஸ்  பணத்தை  பெற  கொலை  செய்யப்பட்டாரா?  ரூமில்  இருந்த  எம் பி  யின்  கறுப்புப்பணம்  ஆன  200  கோடியைக்கைப்பற்றக்கொலை  செய்யப்பட்டாரா?   என்பதில் இருக்கிறது 


  இவை  போக  அந்தப்பெண்  ஏன்  ஒரு  கோடி வாங்கிக்கொள்ளாமல்  சென்றாள் ? அந்தப்பெண்  யார்? என்பதையும்  துப்பு  துலக்குகிறது


 இந்தக்கேஸ்  எப்படி  முடிகிறது  என்பது  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  தெலுங்கின்  மூத்த  நடிகர்  ராஜேந்திரப்பிரசாத்  அசால்ட்டாக  நடித்திருக்கிறார். அவரது , கெட்டப் , உடல்  மொழி , வசன உச்சரிப்பு  அனித்தும்  அருமை 


  நாயகி  ஆக  அந்த  ஒன் நைட்  ஸ்டேண்ட்  நைட்டிங்கேல்  ஆக சாஷா  சிங்  கச்சிதமான  நடிப்பு , முக  அழகு , இளமை , சிரிப்பு  அனைத்தும்  அருமை 


 மீதி  பெரும்பாலும்  புதுமுகங்கள் , கொடுத்த  பாத்திரத்தை  கச்சிதமாக  ஏற்று நடித்திருக்கிறார்கள் 


ராஜேஷ்  நித்வானா  இசையில்  ஒரு  த்ரில்லர்  படத்துக்கு  எந்த  மாதிரி  பிஜிஎம்  வேண்டும்  என்பதை  உணர்ந்து  வெளிப்படுத்தி  இருக்கிறார்


ராய்  குமார்  நீலா வின்  எடிட்டிங்க்  ஷார்ப்  ஆக  இருக்கிறது 


திரைக்கதை  எழுதி  இயக்கி  இருப்பவர்  பவானி  சங்கர் 


சபாஷ்  டைரக்டர்


1 நாயகன்    தான்  ஒரு  தனிக்கட்சி  ஆரம்பித்தால்  என்ன  மாதிரி  எல்லாம்  திட்டங்கள்  செயலபடுத்துவேன்   என்று  சொல்லும் காட்சி  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லை  என்றாலும்  ரசிக்கத்தக்க   காட்சி .அடடே. இப்படி  இருந்தாக்கூட  நல்லாதான்  இருக்கும்  என்று  சொல்ல  வைக்கும்  அந்த  8  பாய்ண்ட்ஸ்


2   ஒரு  த்ரில்லர்  படத்தில்  கருத்தாழம்  மிக்க  வசனங்களை  அட்டகாசமாக  எழுதிய  வசனகர்த்தா 


3 க்ளை,மாக்ஸ்  ட்விஸ்ட் 


  ரசித்த  வசனங்கள் 


1   நேர்மை  சினிமாவைத்தவிர   வேறு  எங்கும்  ஜெயித்ததே  இல்லை 


2 அப்பாவியா  வாழ்வது  பெரிய  சாபம் 


3 எனக்கு  வயசாகிடுச்சு , நிம்மதியாப்போய்ச்சேரலாம்னு  யாராவது  நினைக்கிறார்களா? சாவின்  விளிம்பில்  இருப்பவர்கள்  கூட  இன்னும்  கொஞ்சம்  நாள்  வாழத்தான்  ஆசைப்படுகிறார்கள் 


6 பிள்ளைகள்  மேல்  பெற்றவர்கள்  வைக்கும்  அன்பு  போல  பெற்றவர்கள்  மீது  பிள்ளை  கள்  அன்பு  வைப்பதில்லை 


7  உன்னை  பிளான் பண்ணி  பெத்துக்கலை , அது    ஒரு  சைடு  எஃப்ஃபக்ட் 


8   எல்லா  ஆண்களும்  பொசசிவ்னெஸ்  உடன்  தான்  இருப்பார்கள் , அதில்  என்ன  தப்பு ?/ 


9  பிச்சைக்காரன்  ஆக  இருந்தாலும், பில்கேட்ஸ்  ஆக  இருந்தாலும்  சந்தோஷம் , துக்கம்  இரண்டும்  பொது 


10  எந்த  கிரிமினலா  இருந்தாலும்  ஏதாவது  ஒரு  தடயத்தை  விட்டுட்டுத்தான்  போவான் 


11   பாப்புலாரிட்டி  இருப்பவனுக்குப்ப்ணம்  கிடைக்குது , ஆனா  பணம்  வெச்சிருக்கும்  எல்லாருக்கும்  பாப்புலாரிட்டி  கிடைக்காது / அதுக்கு   எந்த  கேரண்டியும்  இல்லை 


12  வேலை  நடக்கனும்னா  நம்ம  கைல  பவர்  இருக்கனும் 


13  சாமான்யன்  பார்வைல  ஐ  க்யூ  அதிகமா  இருப்பவன்  , ஐ  க்யூ  கம்மியா  இருப்பவன்  எல்லாம்  ஒண்ணுதான் 


14   இந்த  உலகத்துல  49 % பேர்  பெஸ்ட் ஆக   இருக்காங்க  51 %  பேர் சராசரி  ஆளுங்களா  இருக்காங்க 


15  வாழ்க்கைல  நம்மைப்பின்  தொடர்பவர்கள்   ரெண்டே  பேரு  தான்  1  நம்ம  வாரிசுகள்  2 நம்மிடம்  பணிபுரிபவர்கள் 

 

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  நாயகன  லாக்கரைத்திறக்கும்போது  ரகசிய  எண்ணை  பிரஸ்  பண்ன  வேண்டும், நாயகியை  அந்தப்பக்கம்  திரும்பு  என்று  சொல்லும்போது  நாயகி  ஃபோனைப்பார்ப்பது  போல  வீடியோ  எடுக்கிறார். அது  கூடவா  நாயகனுக்குத்தெரியாது ?


2  சொந்த  மகன்  பணம்  கேட்கும்போது  அவ்ளோ  பணம் இல்லை  என்று  சொல்லி  ஒரு  லட்சம்  வேணா  தர்றேன்  என்பவர்  முன்  பின் தெரியாத  பெண்ணுக்கு  தண்டமாய்  ஒரு  கோடி  கொடுக்க முன்  வருவது 

3 இவ்ளோ  கடன்கள் , பிரச்சனைகள்  உள்ள  நபரையா  ஒரு  எம் பி  தன்  பினாமியாக  தேர்ந்தெடுப்பார் ? 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - 18+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  ஜாலியான  த்ரில்லர்  பார்க்க  விரும்புபவர்கள்  பார்க்கலாம் , போர்  அடிக்கவில்லை ., ரேட்டிங்  2.5 / 5 

Tuesday, May 28, 2024

நியதி (2024) - தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர் )

     

 ஒரு  படத்தின்  இயக்குநரே  அந்தப்படத்தின்  நாயகனாக  இருப்பதில்  பல  சவுகரியங்கள்  இருக்கின்றன.நாயகனுக்கு  இயக்குநர்  நடித்துக்காட்ட  வேண்டியதில்லை . இந்தப்படத்தின்  இயக்குநர்  நவீன்  சந்திரன்  லோ  பட்ஜெட்டில்  ஒரு  தரமான  க்ரைம்  த்ரில்லர்   படத்தைக்கொடுத்துள்ளார்          


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  ஒரு  பிரைவேட்  டிடெக்டிவ்  ஏஜென்சியில்  துப்பறிவாளர்  ஆகப்பணி  புரிகிறார்.மிக  சாமார்த்தியமாக  கேஸ்களை  டீல்  செய்வதில்  இவர்  விற்பன்னர் 


ஒரு  நாள்  ஒரு  பெரியவர்  ஒரு  ஆணின்  ஃபோட்டோவைக்கொண்டு  வந்து  கொடுத்து  இந்தப்படத்தில்  இருக்கும் நபர்  பற்றிய  தகவல்  வேண்டும். இவர்  ஒரு  காலேஜ்  லைப்ரரியில்  ஒர்க்  பண்ணியவர் , இப்போது  ஆளைப்பிடிக்க  முடியவில்லை  என்கிறார். தன்  மகளுக்கு  பார்த்திருக்கும்  வரன்  இவர் ., இவர்  பற்றிய  தகவல்  வேண்டும்  என்கிறார்


 நாயகன்   அன்று  இரவு  காரில்  போய்க்கொண்டிருக்கும்போது  ஒரு  ஆள்  மீது  மோதி  விடுகிறார்.  ஆள்  ஸ்பாட்  அவுட் . டெட்  பாடியை  காரில்  போட்டு  டிஸ்போஸ்  பண்ண  ஒரு  இடத்துக்கு  எடுத்துச்செல்லும்போதுதான்   அந்தப்பெரியவர்  காட்டிய  லைப்ரரியன்  இவன்  தான்  என்பது  தெரிய  வருகிறது 


 அதே  போல்  அவன்  கார்  மோதி  இறக்கவில்லை , ஏற்கனவே  கத்திக்குத்து  பட்டு  இறக்கும்  தருவாயில்  இருந்தவன்  என்பது  தெரிய  வருகிறது 


  வில்லன்  ஒரு  காலேஜ்  லைப்ரரியில்  பணி  புரிபவன் .இவன்  பெண்  சபலிஸ்ட் .காலேஜ்  மாணவிகளை  பாத்ரூமில்  அந்தரங்க  வீடியோக்கள்  எடுத்து  அவர்களை  மிரட்டி  பணம்  பறிப்பவன் 


நாயகி  தோற்றத்தில்  பெண்  ஆக  இருந்தாலும்  உள்ளத்தில்  ஆணாக  தன்னை  நினைப்பவர் .வில்லன்  செய்த  ஒரு  கொடுமையைத்தடுத்துத்தட்டிக்கேட்டதால்  கடுப்பான  வில்லன்   நாயகியைப்பழி  வாங்கத்துடிக்கிறார்


  நாயகன் ஆன  துப்பறிவாளன்  ,  வில்லன்  ஆன  லைப்ரரியன் ,  நாயகி  ஆன  திருநம்பி ( திருநங்கைக்கு  எதிர் பதம் ) இவர்கள்  மூவர்  வாழ்க்கையிலும்  நடக்கும்  திருப்பங்கள்  தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக  நவீன்  கச்சிதமாக  நடித்திருக்கிறார். ஓப்பனிங்  காட்சியில்  இவர்  டீல்  செய்யும்  இரண்டு  கேஸ்களும்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லையென்றாலும்  சுவராஸ்யம் 


நாயகி  ஆக அஞ்சனா  பாபு  அற்புதமாக  நடித்திருக்கிறார்.இது  போன்ற  கேரக்டரில்  நடிக்கவே  ஒரு  துணிச்சல்  வேண்டும். இன்னும்  சில  காட்சிகள்  வர  மாட்டாரா? என  ஏங்க  வைக்கும்  அளவு  இவரது  அழகு , நடிப்பு  கவர்ந்திழுத்தது


நாயகனின்  அசிஸ்டெண்ட்  ஆக  கோபிகா  சுரேஷ்  கனகச்சிதம் .   கொடுக்கப்பட்ட  வேலையை  சரியாகச்செய்து  இருக்கிறார்


வில்லனாக  நடித்தவர்  பெயர்  தெரியவில்லை .ஓக்கே  ரகம் 


 நாயகியின்  அப்பாவாக  தேனி  முருகன்  சிறந்த  குணச்சித்திர  நடிப்பை  வெளிப்படுத்தி  இருக்கிறார்.  நாயகிக்கும் , இவருக்குமான  உணர்ச்சிகரமான  ஒரு  உரையாடலில்  இருவர்  நடிப்பும்  அதகளம் 


ஜாக்  வாரியர்  தான்  இசை .ஒரு  க்ரைம்  த்ரில்லர்  படத்துக்கு பின்னணி  இசை  எந்த  அளவு  முக்கியம்  என்பதை  உணர்ந்து  பிஜிஎம்  போட்டிருக்கிறார் 


பிரபு  கண்ணனின்  ஒளிப்பதிவு  கச்சிதம் . நாயகிகள்  இருவரையும்  க்ளோசப்பில் , லாங்க்  ஷாட்டில்  அழகாகக்காட்டி  இருக்கிறார்


அஜூ  வில்பரின் எடிட்டிங்  ஷார்ப்  ஆக  இரண்டு  மணி  நேரத்தில்  படத்தை  ட்ரிம்  செய்து  இருக்கிறது 



சபாஷ்  டைரக்டர்


1  ஓப்பனிங்  காட்சியில்  வரும்  கணவன் -  மனைவி  -  மனைவியின்  முன்னாள்  காதலனின்  மிரட்டல் கடிதம்  கேசை  நாயகன்  டீல்  செய்த  விதம்  அருமை 


2  பூட்டிய  வீட்டை  உடைத்துக்கொள்ளை  நடந்ததாக  சொல்லப்படும்  ஸ்பாட்டை  போலீஸ்  ஆஃபீசர்  பார்த்து  கண்டு  பிடிக்காத  ஒரு  விஷயத்தை  நாயகன்  கண்டு  பிடித்து  போலீஸ்  ஆஃபீசரிடமே  சொல்வது  பிரமாதம் 


3  நாயகன் , வில்லன் , நாயகி  இந்த  மூன்று  பேருக்கான  கேரக்டர்  டிசைன்  வடிவமைப்பு  கச்சிதம் 


  ரசித்த  வசனங்கள் 


1   பிரச்சனையை  சால்வ்  பண்றது  மட்டும்  ஒரு  டிடெக்டிவோட  வேலை  இல்லை , அதை  எக்சிக்யூட்  பண்ண  கத்துக்கனும் 


2  பொறுமை  தான்  ஒரு  மனிதனுக்கு  மிக  முக்கியமான  குணம், அதை நீ  உன்  அப்பா  கிட்டே  இருந்து  கத்துக்கோ 


3 நமக்கு  நடக்கும்  எல்லாப்பிரச்சனைகளுக்கும்  தீர்வு  நம்ம  கிட்டே  தான்  இருக்கும் , யோசிச்சா  நாமே  அதைக்கண்டு  பிடிச்சுடலாம் 


4 பயம்  தான்  எல்லாப்பிரச்சனைகளுக்கும்  காரணம் 

5    இப்ப   வர்ற  திருடனுங்க  எல்லாம்  சிசிடிவி  ல  சிக்க  மாட்டானுங்க . அவங்களுக்கும்  டெக்னாலஜி  தெரிஞ்சிருக்கு 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   டெட் பாடியை  கார்  டிக்கியில்  போட்டு  காரில்  போகும் நாயகன்  அந்த  டிக்கி  டோரை  பிராப்பர்  ஆக  ஏன்  சாத்தவில்லை ? 


2   ஆள் அரவம்  இல்லாத  சாலை , சிசிடிவி  கேமரா  இல்லாத  ஏரியா . யாராவது  ஒரு  ஆள்  மீது  மோதினால்  ஆளை  அப்படியே  விட்டுட்டு  எஸ்  ஆகப்பார்ப்பாங்களா? பூனையை  மடியில் கட்டிக்கிட்டே  சகுனம்  பார்ப்பது  போல  அந்த  ஆளை  கார்  டிக்கியில்  எடுத்துப்போட்டுக்கொண்டு புதைக்கப்போவார்களா?ரிஸ்க்  அதிகம்  ஆச்சே? இதே  மாதிரி  காட்சி  படத்தில்  இரண்டு  இடங்களில்  வருகிறது 


3    டெட்  பாடியை  மறைவாகப்போட்டு  விட்டுக்கிளம்பாமல்  எதற்காக  மெனக்கெட்டு  அதை  புதைக்கனும் ?


4   கடப்பாறை  , மண்  வெட்டி  எதுவும் இல்லாமல்  ஒரு  மரக்குச்சியை  வைத்தே  ஆறு  அடி  நீளம் , 3  அடி  அகலம் , ஆறு  அடி ஆழம்  உள்ள குழியைத்தோண்ட  முடியுமா?


5   டெட்  பாடியை  தூக்கி  புதைக்கும்போது  முதுகில்  கத்திக்குத்தால்  வழியும்  ரத்தத்தைப்பார்க்கவில்லையே  நாயகன் , ஏன் ? 


6   நாயகியின்  அப்பா  வெளியே  போகும்போது  கதவை  தாழ்  போட்டுக்கோ  என்கிறார். நாயகி  தாழ்  போடுவதை  க்ளோசப்ல  காட்றாங்க . அப்பா  திரும்பி  வரும்போது  கதவு  தாழ்  இல்லாமல்  இருப்பது  எப்படி ? 


7  அப்பாவுக்குத்தெரியாமல்  வீட்டுக்குள்  தம் அடிக்கும்  நாயகி  புகை  வாசம்  காட்டிக்கொடுக்கும்  என்பதை உணராதவரா?


8 பொதுவாக  தம்  பார்ட்டிகள்  அந்த  தம்  நாற்றம்  வாயில்  அடிக்காமல்  இருக்க  ஏலக்காய் , ஹால்ஸ் , ஏதாவது  மென்று  மறைப்பார்கள் . நாயகி  அப்படி ஏதும்[  செய்யாமல்  அப்பாவிடம்  மாட்டிக்கொள்கிறார் 


9  நாயகியின் சகோதரன்  வில்லனைக்கொன்ற  போதே  அந்த  சிம்  கார்டு ,மெமரிக்கார்டை  ஏன்  கைப்பற்ற வில்லை ?



10 வில்லன்  காலேஜ்  லைப்ரரியில் எடுத்த  ஆபாசப்படத்தை  வைரல்  ஆக்குகிறான் .அதில்  லைப்ரரியும்  காட்டப்படுது . லைப்ரரியன்  ஆன  வில்லன்  மாட்டிக்க  மாட்டானா?லொக்கேஷனை  மறைக்க  மாட்டானா ? 

11  வில்லன்  ஆன  லைப்ரரியன்  ஒரு  அப்பாவிப்பெண்ணின்  கையைப்பிடித்து  தர  தர  என  இழுத்து  வந்து  இன்னைக்கு  லைப்ரரி  க்ளோஸ்  பண்றேன் , எல்லாரும்  கிளம்புங்க  என்றதும்  எல்லாரும்  பேசாமல்  கிளம்புறாங்க .யாரும்  எதுவும்  தட்டிக்கேட்க  மாட்டாங்களா? 


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இது  ஒரு  தரமான  க்ரைம்  த்ரில்லர்  படம், அவசியம்  பார்க்க  வேண்டிய  படம் , ரேட்டிங்  3 / 5