Friday, March 18, 2016

புகழ் - சினிமா விமர்சனம்

ஹீரோ பூக்கடை வெச்சிருக்காரு. சமூக சேவகர். கிரிக்கெட் பிளேயர். ஹீரோவோட ஃபிரண்ட் நம்ம விஜய் மல்லைய்யா மாதிரி  ஊரெல்லாம் கடன் வாங்கிட்டு ஊரை விட்டு ஓடிப்போய்டறார்.ஹீரோ வை கோ மாதிரி சமாதானப்பேச்சு பேசி அவரை  ஊருக்குக்கூட்டிட்டு வர்றாரு அவர் தான் தனக்கு வில்லன் ஆகப்போறார்னு தெரியாம... 


ஹீரோ அண்ட் கோ கிரிக்கெட் ஆடும் கிரவுண்டை அரசியல்வாதிங்க வளைச்சுப்போட ஐடியா பண்றாங்க, பொதுவா அரசியல்வாதிங்கன்னா அவங்க கண்ணில் படும் சொப்பன சுந்தரியை வளைச்சுப்போடுவானுங்க. இல்லைன்னா பொறம்போக்கு நிலத்தை வளைச்சுப்போடும் பொறம்போக்குப்பசங்க தானே?


 ஹீரோவுக்கு ஊர்ல அவர் இருக்கும் ஏரியாவில்  இருக்கும் செல்வாக்கு பார்த்து அவரை வளைச்சுப்போட லோக்கல் அரசியல்வாதி ஐடியா பண்றாரு. எப்படி தானைத்தலைவர் கேவலம் 8% வாக்கு வங்கிக்காக தன்னை  தன் கட்சியை கேவலமாப்பேசிய கேப்டன் பின்னால கூச்சமே இல்லாம பிச்சை எடுத்தாரோ அப்படி


 ஆனா ஹீரோ வுக்கு அரசியலுக்கு வர  ஐடியா இல்லை. அவர் சார்பா அந்த கடன் கார நாய் விஜய் மல்லைய்யா மாதிரி உருப்படாம போன நண்பனை வளைச்சுப்போட்டு  பாலிடிக்ஸ் பண்றார்.

அந்த  கிரிக்கெட் கிரவுண்டை வளைச்சுப்போட்டாங்களா? இல்லையா? என்பதுதான் மிச்ச மீதிக்கதை


 ஹீரோவா ஜெய். அவரது  குரல் முதல் பிளஸ் பாயிண்ட்.இயல்பான நடிப்பு , டயலாக் டெலிவரி மற்ற  பிளஸ்கள். நல்லா பண்ணி  இருக்கார்.ஹீரோயினுடனான காதல் போர்சனில் அண்டர்ப்ளே பண்ணி இருந்தாலும்   ஆக்சன் பேக்கேஜில் தூள் கிளப்பி இருக்கார் 



ஹீரோயினா சுரபி . ஃபிகரைப்பார்த்ததுமே ஜொள் சுரக்கும் அளவு பக்கா ஃபிகர் இல்லை என்றாலும் 60 வயசு ஆளையும் மயக்கும் 60 மார்க்  ஃபிகர் தான்.ஏற்கனவே சன்னமாக இருக்கும் அவரது புருவத்தை  பியூட்டி பார்லர் போய் மேலும் சன்னமாக ட்ரிம் பண்ணி இருப்பது பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது ( தமிழன் எதெதுக்குதான்  ஜெர்க் ஆவான்னு விவஸ்தை  இல்லாம போச்சு)


காமெடிக்கு ரேடியோ ஜாக்கி பாலாஜி. ஒன் லைனர்களில் இன்னும் காமெடி சென்ஸ் தேவை. ஆனால் டயலாக் டெலிவரி எல்லாம் பக்கா டெவலப். தொடர்ந்து முயற்சித்தால் சந்தானம் ரேஞ்சுக்கு வரலாம்


பாடல் காட்சிகளில்  ஒளிப்பதிவு  இசை  எல்லாம் கன கச்சிதம்.ஓப்பனிங்  சாங் ,டூயட் சாங்  என மாறுபட்ட இரு பாடல்களிலும்  ஹிட் கொடுத்திருக்கார்  இசை அமைப்பாளர்/



வில்லனாக  வரும் இருவரும் கனக்ச்சிதம். அதுவும்  லோக்கல்  சேர்மேன் நடிப்பி பக்கா. அப்படியே சுயநல  அரசியல் வாதியை கண் முன் நிறுத்துகிறார்


கருணாஸ்  கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்.  அந்த  சேர்மேன் வில்லனின் மனைவியாக வரும் ஆண்ட்டி கூட கவனிக்க வைக்கிறார் ( நாம யாரைத்தான் கவனிக்காம விட்டோம்?)


கதை  திரைக்கதை இயக்கம் மணிமாறன். நல்ல கிரிஸ்ப் ஆன  திரைக்கதை.மிக எளிமையா சொல்லப்பட்ட விதம்  குட்


மனதைக் கவர்ந்த  வசனங்கள்

மச்சி.மாப்பிக்கு போன் போட்டு பாண்டிச்சேரி போறோம்னு சொல்லு.சரக்குன்னா உடனே வந்துடுவான்

2  அரசியல்வாதிக கூட்டம் போடறதே ஒயின்.ஷாப் போகத்தான்


அவ கிட்டே வம்பு வெச்சுக்காத.நம்ம ஏரியா கலா மாஸ்டரே அவதான் # புகழ்

4 பொதுப்பிரச்சனையைப்பத்தி பேசுனா ,அநியாயத்தை தட்டிக்கேட்டா நம்மை பைத்தியக்காரன் பட்டம் தந்து உட்கார வெச்சுடறாங்க

5  அரசியல்வாதி ஆகிட்டா நல்லதோ கெட்டதோ நம்மைப்பத்தி எதுனா நியூஸ் வந்துட்டே இருக்கனும்


6  எப்போப்பாரு எம் ஜி ஆர் பாட்டையே கேட்டுட்டு இருந்தா எப்டி? ஜெமினி கணேசன் பாட்டையும் கேளு அப்பப்போ

7  எல்லாப்பொண்ணுங்களும்  தைரியமான ஆம்பளையத்தான்  விரும்புவாங்க.நானும் அதுக்கு விதிவிலக்கு இல்ல

8 மண்ணுக்குள்ளே இருக்கும் கரி கூட வைரமா வெளிப்படுது. இந்த மண்ணுலயே பிறந்து வளர்ந்த நாம சோரம் போனா எப்டி?



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

வள்ளுவர் வாக்குப்படிதான் கட் அடிச்ட்டு சினிமாக்குப்போனியா?எப்டி?

தோன்றின் புகழோடு தோன்றுக ன்னாரு # புகழ் த பொலிடிக்கல் ஆக்சன் த்ரில்லர்


2 புகழ் =126 நிமிடங்கள் @ திருவனந்தபுரம் தேவிப்ரியா 11 am ஷோ



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஹீரோ ஹீரோயின் இடையே ஆன  கெமிஸ்ட்ரி  குட். நெருக்கமே காட்டாத நெருக்கம் அடடே

2  ஹீரோவின் அண்ணனாக வரும் கருணாஸ் படம் பூரா ஹீரோவுக்கு எதிராக வசனம் பேசிட்டு ஒரு  தருணத்தில் ஹீரோவுக்கு ஆதர்வாக வில்லனுக்கு எதிராக வசனம் பேசும்  இடம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 சொந்த ஊரில் ரெகுலராக கிரிக்கெட் விளையாண்டும்  கிரவுண்டில்  அரசியல்வாதி ஆக்ரமிப்பு செய்து கட்டிடம் கட்டியது ஹீரோவுக்கு தெரியாம எப்ப்டி இருக்கும்?


2 ஹீரோவின் ஃபிரண்ட் வட்டிக்கு வாங்கின கடன் பற்றிய பஞ்சாயத்தில் 2 லட்சம் ரூபா வட்டியா? அதெல்லாம் கட்ட முடியாது என ஹீரோ எப்படி சொல்ல முடியும்? அதிக வட்டி கூடாது குறைச்சுக்கொன்னு சொல்லலாம். சுத்தமா வட்டியே கட்ட மாட்டேன்னா எப்டி?பேங்க்லயே 0.80 % வட்டி வாங்கறாங்க


3 ஒரு சாதாரண வார்டு மெம்பரை பெரிய பெரிய ஆட்கள் வந்து  மிரட்டுவது நம்பும்படி  இல்லை




சி  பி  கமெண்ட் -புகழ் - யதார்த்தம்  மீறாத , ஹீரோயிசம் காட்டாத பொலிடிகல் ஆக்சன் ஃபிலிம் , ஹீரோயின் சுரபி சைட்டோதெரபி -விகடன் -41 , ரேட்டிங் = 2.75/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங் =  2.75 / 5



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18/3/16 ) 11 படங்கள் முன்னோட்ட பார்வை

1   புகழ்

2 விடாயுதம்

3 சவாரி

4  ஆகம்

5  என்று தணியும்


மலையாளம்

Darvinte Parinamam


Mohavalayam

Mohavalayam

Ithu Thaanda Police 

தெலுங்கு

10 Memu


ஹிந்தி

11 Kapoor & Sons

1   புகழ்

ஜெய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘புகழ்’. இதில் ஜெய்க்கு ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இப்படத்தை ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையில் அனிருத் பாடிய பாடல் ஒன்று ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் படமாக உருவாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடமே முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பி இருந்தனர். படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி இருந்தது. இதையடுத்து இப்படம் கடந்த வருடமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் மணிமாறன் தனது ஊரில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.


2 விடாயுதம்

கொடிய விஷம் கொண்ட பாம்பை முக்கிய கதாபாத்திரமாக வைத்து, ‘விடாயுதம்’ என்ற படம் தயாராகி இருக்கிறது. இதில் ராம் சரவணன் கதாநாயகனாகவும், ஆஸ்கார் விருது பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லினர்’ பட புகழ் தன்வி லங்கோர் கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். நாகமானிசி டைரக்டு செய்து இருக்கிறார். 

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- 

‘‘சாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் திரைப்பட கலையுலகம்தான். இந்த சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டு படங்களால்தான். சினிமா உயிருடன் நன்றாக இருக்க குறைந்த பட்ஜெட்டில் தயாராகும் படங்கள் நிறைய வரவேண்டும். ‘விடாயுதம்’ படத்தை சிறு முதலீட்டு படமாக எடுத்து இருக்கிறார்கள். 

சிறு முதலீட்டு படங்கள்தான் தியேட்டர்களில் அதிகமாக வெளியாகின்றன. அந்த படங்கள்தான் சினிமாவை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன. சினிமாவை நம்பி 10 லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டு படங்கள் வரவேண்டும்.’’ 

இவ்வாறு அபிராமி ராமநாதன் பேசினார். 

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க கில்டு அமைப்பின் செயலாளர் ஜாக்குவார் தங்கம், டைரக்டர்கள் ராஜ்கபூர், ஏ.வெங்கடேஷ், பாலசேகரன், நடிகர்கள் செந்தில், பிரஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், தயாரிப்பாளர்கள் ஜே.கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டார்கள். 

‘விடாயுதம்’ என்பது பாம்பை குறிப்பது என்பதால் அதற்கு பொருந்துகிற மாதிரி படக்குழுவினர், ஒரு நல்ல பாம்பை மேடைக்கு கொண்டு வந்தார்கள். அது, படம் எடுத்து ஆடியது. இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பாம்பை பிடித்துக் கொண்டு போக பக்கத்திலேயே ஒரு பாம்பாட்டி நின்று கொண்டிருந்தார். தமிழ்நாடு வன இலாகா, வனவிலங்கு நல வாரியம் ஆகியவற்றின் அனுமதியுடன் அந்த பாம்பு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது.

savari (N)


3 சவாரி

அறிமுக இயக்குனர் குகன் சென்னியப்பன்  கூறும் போது ' இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு எதிலும் வேகம் , எல்லாவற்றிலும் வேகம். படம் பார்க்கும் ரசிகர்கள் கூட வேகமான தட தட என   ஓடும் திரைக் கதை உள்ளப் படங்களைத் தான் ரசிக்கின்றனர்.ரோடு  த்ரில்லர்  என்ற புதிய பாணியில் இந்தக் கதை  எழுதப் பட்டு இருக்கிறது. புதிய தொழில் நுட்பக் கலைகளுடன் ஜொலிக்கும் இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் நாற்காலியின் நுனியில் உட்கார வைக்கும' என்றார்.
அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி'  உரிமையை பெற்று உள்ள புதிய பட நிறுவனமான Entertainment brothers நிறுவனத்தினர்  ' இணைய தளங்களில் சவாரி படத்தின்  போஸ்டர்களை கண்டதில் இருந்தே எனக்கு படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடுதலாய் இருந்தது.எதேச்சையாக எனது நண்பர் ஒருவர் மூலம் இந்தப் படத்தின் பிரத்தியேக காட்சி ஒன்றை பார்க்க நேர்ந்தது. படம் தொடங்கிய வினாடி முதல் பரப்பான இடைவேளை வரை எனக்கு  பிரமிப்புதான்.
இடைவேளையின் போதே எப்படியாவது இந்தப் படத்தை வாங்கி விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தேன். படம் முடியும் போது என் முடிவு தீர்மானமாய் மாறிப் போனது.இந்தப் படத்தில் உள்ள வேகம், படத்தில் பணியாற்றி உள்ள இளைஞர்களின் உத்வேகம் என்பது அவர்களை சந்தித்த பிறகுதான் தெரிந்துக் கொண்டேன்.
இயக்குனர் குகன் சென்னியப்பனின் இயக்கமாக  இருக்கட்டும்,ஒளிப்பதிவாளர்  செழியனின் நேர்த்தியான ஒளிப்பதிவாக இருக்கட்டும், மறைந்த கிஷோரின் படத்தொகுப்பில், ஜில் ஜங் ஜக்  படத்தின் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஆகட்டும்,படத்தின் தொழில்  நுட்பக் கலைஞர்கள் அனைவரும் படத்தின்  வெற்றிக்கு உறுதுணையாக  இருப்பார்கள் என்பது நிச்சயம். படத்தை  பார்த்த வினாடியே புரிந்துக் கொண்டேன் . அடுத்த மாதம் வெளி வர உள்ள 'சவாரி 'ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் மிக மிக நம்பிக்கை உள்ளது'  என்றனர்.

4  ஆகம்

சரவணன் மீனாட்சி தொடர் இர்ஃபான் நடிக்கும் ஆகம்!

irfhanதனது முந்தையப் படங்களில் இலகுவான வேடங்களை ஏற்று நம் மனதில் இடம்பித்த இளம் கதாநாயகன் இர்ஃபான், ‘ஆகம்’ திரைப்படத்தின் மூலம் முற்றிலும் புதியதொரு வேடத்தில் தோன்ற உள்ளார்.
இப்படத்தை அறிமுக இயக்குனர் முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்குகிறார். ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பிரேம், ரவி ராஜா மற்றும் அறிமுக நாயகி தீக்ஷிதா என ‘ஆகம்’ தேர்ந்த நதிகளை பெற்றுள்ளது. RV சரண் ஒளிப்பதிவில், விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஜோஸ்டார் என்டெர்ப்ரைசஸ் சார்பில் கோட்டீஸ்வர ராஜூ தயாரிக்கிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் விஜய் ஆனந்த் கூறுயைல், “‘ஆகம்’ திரைப்படம் வேலை வாய்ப்பு சந்தையில் நடக்கும் பல கோடி மதிப்பிலான உழலை பற்றிய படம். சோஷியல் த்ரில்லர் பாணியில் வரும் இப்படத்தின் கதை பல வருடத்தின் ஆய்வுக்கு பின் எழுதப்பட்டுள்ளது.
இப்படத்தில் நடிக்கவுள்ள அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கதாப்பாத்திரத்திற்காகவும், படத்தில் உள்ள அழ்ந்த சமுதாய கருத்துக்காகவும் ஒப்புகொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் முதல் கட்ட படப்பதிவு தொடங்க உள்ளோம்.
இப்படத்தில் பிரபல பிரஞ்சு நடிகை அலியோன முண்டேனு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.” எனக் கூறினார் இயக்குனரும், மாணவர்கள் மத்தியில் பிரபலமான கல்வியாளருமான முனைவர். விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.


5  என்று தணியும்

பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடித்துள்ள படம் ‘என்று தணியும்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பாரதிராஜா, பி.வாசு, ஜெயம் ரவி, சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் கருணாஸ் பேசும்போது, ‘பாரதி ராஜாவின் உதவியாளர் பாரதி கிருஷ்ணகுமார் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் சினிமா துறை அழிந்து வருகிறது. அதை நாம் காப்பாற்றியே ஆக வேண்டும். பெரிய தியேட்டர்களில் சிறு படங்கள் அதிகமாக திரையிடப்படுவதில்லை. இதை சரிசெய்ய வேண்டும். வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. அவை அனைத்தும் விரைவில் திருட்டி விசிடியாக கடைகளில் கிடைக்கிறது. நான் தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தரராகவும் இருந்திருக்கிறேன். இப்படி விசிடிகள் வெளியானால், தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தரர்களின் நிலைமை என்ன ஆவது.

பெங்களூர் நாட்கள் என்ற படம் வெளியானது. அன்றே ஒரு இணைய தளத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது. இதை யார் கேட்பது. யார் தடுப்பது. படக்குழுவினரின் உழைப்பு வீணாகிறது. இப்படியே போனால், சினிமா அழிந்து விடும். நிச்சயம் சினிமா துறையை காப்பாற்ற வேண்டும்.

மயில்சாமி நல்ல மனிதர் என்பதை நான் பெருமையாக சொல்வேன். தன்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு பல உதவிகளை செய்வார். அவரின் மகன் நடித்துள்ள இப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்’ என்றார்.






நன்றி - தினமலர்  தினமணி மாலைமலர்

ஹேமமாலினியின் புதிய படம் - தாரே கோ ஜமீன் சஹாய ரேட் பர்

1  லாபம் இல்லையென்றால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடையாது-BSNLஅதிரடி முடிவு # லாபம் வரும்போது கமுக்கமா அமுக்கிக்கிட்டு நட்டம் வந்தா இப்டி



============




சமகவில் என்னை நீக்கும் உரிமை சரத்க்கு இல்லை- MLA நாராயணன்

# ஒரு கட்சியின் தலைவருக்கு இருக்கும் அதிகாரம் பற்றி நாலெட்ஜ் உங்களுக்கு இல்லை


===========

3 சமக வை விரைவில் கைப்பற்றுவோம்-எர்ணாவூர் நாராயணன்# சமாதானம் ஆகி சரத் கை பற்ற வாழ்த்து.


==============

4 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற தொண்டர்கள் பாடுபடவேண்டும் -ஜெ # போனாப்போகுது.ஒரு 10 சீட் எதிர்க்கட்சிக்கு விட்டுக்கொடுங்க.பாவமில்ல?

-=============

5 40 லட்சம் போலி வாக்காளர்கள் கருணாநிதி குற்றச்சாட்டை அலட்சியப்படுத்தக்கூடாது-இல.கணேசன்# ஆமா அதுல 20 லட்சம் திமுக 20 லட்சம் அதிமுக வாம்


===============

6 திமுக ஆட்சி அமைந்தால் 90லட்சம் பேருக்கு வேலை: ஸ்டாலின் # நமக்கு நாமே திட்டப்படி சுய தொழில் தொடங்கச்சொல்லிடுவாரோ?


================

7 பா.ஜனதா – தே.மு.தி.க. கூட்டணி பேச்சு தொடரும்: தமிழிசை சவுந்தரராஜன் # மழை விட்டாலும் தூவானம் ("தூ"றல்) விடாது என்பது போலவா?


=============


8 மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு: அன்புமணி ராமதாஸ் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்..# (ஏ)மாற்றம் ,பின்னேற்றம்


===========

9 ஜெ சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
# எதிரிக்கு எப்பவும் அவகாசம் தரனும் - மோடி மைன்ட் வாய்ஸ்


=============


10 சிப்ஸ், பீட்சா, கோலா பானங்களில் எச்சரிக்கை படங்கள்- மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தல் # அப்டி எச்சரிச்சு எதுக்கு விக்கனும்?தடை போடலாமே?

=============


11 தலைக்கு சாயம் பூச ரூ.55 லட்சம் செலவு செய்து தயாரிப்பாளரை தலைசுற்ற வைத்த கத்ரீனா
# ஊரான் வீட்டு நெய்யா என் பொண்டாட்டி கையா?கடைத்தேங்காய் எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைச்ச கதை


==========


12 பிப்.20ல் தேமுதிக சார்பில் ‘தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு’: விஜயகாந்த் அறிவிப்பு! # கார்த்திக் நடிச்ச திருப்புமுனை எடுபடலை.அரசியலில் கேப்டனின் திருப்பு முனை எடுபடுதா?ன்னு பார்ப்போம்



=========

13 கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த பகுதியும் வளர்ச்சி அடையவில்லை: பொன்.ராதா # இல்லையே?குற்றங்கள் அதிகரிச்சிருக்கே?அது வளர்ச்சிதானே?


==============


14 அரசு நிர்வாகம்-எல்லா துறையிலும் ஊழல் புற்றுநோய் போல் பரவியுள்ளது : ராமதாஸ் # புற்றுநோயை குணப்படுத்திடலாம்.ஊழலை எந்த டாக்டராலும் ம்ஹூம்


===========


15 பழ. கருப்பையாவின் குற்றச்சாட்டுகளுக்கு 'திராணியோடு' பதில் சொல்லுங்க-ஜெ க்கு விஜயகாந்த் சவால் # தி ராணி ஆப் அதிமுக.பேர்லயே திராணி இருக்கே?


=============

16 குஷ்பு எங்க அக்கா மாதிரி...- முத்தம் கொடுத்த மாதவன் விளக்கம் # அடங்கொக்கா மக்கா! தமிழர்கள்னா தொக்கா? இதை நம்பறவங்க மக்கா


============

17 அறிக்கைகளை மட்டும் அறிவிப்பதில் ஜெ ஹீரோ,அதை செயல்படுத்துவதில் ஜீரோ - மு .க.ஸ்டாலின் குட் த்ரோ.மேடம்,த பால் ஈஸ்.ஆன் யுவர் கோர்ட்


==========


18 அ.தி.மு.க நடிகர் விசு பா.ஜனதாவில் சேர்ந்தார்; ‘மாற்றத்தை தருபவர் மோடி’ என்று புகழாரம் # மாற்றம் முன்னேற்றம் னு கட்சி மாறிட்டாரா?சபாஷ்


================


19 ஹேமமாலினிக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கியதாக சர்ச்சை: விதிமுறை மீறல் இல்லை என பாஜக # தாரே கோ ஜமீன் சஹாய ரேட் பர்


============


20 அழகிரி பிறந்தநாள்: ஆதரவாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் # கலைஞருக்கு, ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்தார்களா?


====================

Thursday, March 17, 2016

யோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லுய்யா நம்ம புதுப்படத்துக்கு

1  நான் மற்ற கட்சிகள் போல் அடுத்தவர்கள் மீது குறை கூற மாட்டேன்


தலைவரே! இப்போ நீங்க கூறுனதும் ஒரு குறை தானே?


===============


2 சக்சஸ்! நானும் தோசை சுட்டுப்பழகிட்டேன்


ஏம்மா மணிமேகலை! தோசை சரியா வேகலை, ஏம்மா இப்டி ரகளை?


===============



3 இன்ஸ்பெக்டர்! என் படத்தை கிண்டல் பண்றவங்களை அரெஸ்ட் பண்ணனும்

உங்க படத்தைத்தான் ஊரே கூடி நக்கல் அடிக்குதே, என்ன பண்ண?

==============

4  சினிமா விமர்சகர்கள் எல்லாரையும் வெள்ளிக்கிழமை காலைல அரெஸ்ட் பண்றாங்களே? ஏன்?


எதுனா நெகடிவ்வா உளறி கூட்டம் வராம பண்ணிடறாங்களாம்


================


5 தலைவரே!பிஏபிஎல் படிச்ச நீங்க ஏன் அரசியலுக்கு வந்தீங்க?

 கிரிமினல்கள் வக்கீல் ஆகக்கூடாது-னு சட்டம் வந்துடுச்சாமே?


================

6  கள்ளுக்குள் ஈரம் உண்டுன்னு எப்படி சொல்றீங்க?

 கள் ஒரு திரவப்பொருள் தானே?ஈரம் இல்லாம எப்டி இருக்கும்?


==============


7 தலைவரே! பிரச்சார மேடைல எதுக்கு சிரசாசனம் பண்றீங்க?


தலைகீழா நின்னாவது ஆட்சியைப்பிடிச்சுடுவோம்னு சிம்பாலிக்கா சொல்றோம்


===============

8  கட்சியின் ஸ்டார் பேச்சாளர் இப்போது பேசுவார்

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி, அல்டிமேட் ஸ்டார் அஜித், சுப்ரீம் ஸ்டார் சரத்,பவர் ஸ்டார் சீனி


===============

9  டியர், நான் ஒரு சின்ன வீட்டு வெச்சுக்கலாம்னு இருக்கேன், அட்ஜஸ் பண்ணிக்க

 சாரி, எனக்கு ச”கீப்”புத்தன்மை கிடையாது


================

10  தலைவரே! மேடைல கூட்டணிக்கட்சித்தலைவர்களுக்கு ஏன் நாமம் போட்டு விடறீங்க?

 நமக்கு நாமே நாமம் திட்டம், யாருக்கும் சீட் கிடையாது

==============


11  தலைவரே! இந்த தேர்தல்ல எப்பாடுபட்டாவது 1000 வாக்கு வாங்கிடுங்க

 எதுக்கு?

 1000 வாக்கு வாங்கிய அபூர்வ சிகாமணி-னு பட்டப்பேர் வெச்சுக்கலாம்


===============

12  தலைவரே! இந்தத்தேர்தலில் புதுக்கூட்டணி மாறப்போறீங்களா?

ஆமா, எப்டி தெரியும்?

 மாற்றம், முன்னேற்றம்னு பேனர் வெச்சிருக்கீங்களே?


===============


13  தலைவரே! பகுத்தறிவுப்பகலவரான நீங்க எதுக்கு 9 கட்சி  கூட கூட்டணி அமைக்கறீங்க?

2016=2+0+1+6 = 9 வருது கூட்டுத்தொகை, அதான் 9 கட்சிக்கூட்டணி


==============


14 தலைவரே! உங்க வாட்ச் வேல்யூ 75 லட்சம் இல்லை, 75,000 தான்னு தானே சொன்னீங்க?

 ஆமா,

 அப்போ இந்தாங்க 75,001 ரூபா, அதை குடுங்க பார்ப்போம்


==============


15 மேடம், நீங்க கதை எழுதும்போது ஒவ்வொரு வரிக்கும்  ஸ்கெட்ச் ல அண்டர்லைன் பண்றீங்களே எதுக்கு?


அலங்காரமான எழுத்துக்கு சொந்தக்காரின்னு பேர் எடுக்க


=============


16   தலைவரே! என் குடும்பத்துல யாராவது தேர்தல்ல நின்னா  சாட்டையால் அடிங்கன்னு சொன்னீங்களே?

யாரை அடிக்கனும்னு சொல்லவே இல்லையே, எப்பூடி?

===============


17 மிஸ்! உங்க கிட்டே மட்டும் ஒரு ரகசியம் சொல்லறேன், யார்கிட்டயும் சொல்லிடமாட்டீங்களே?

பிராமிஸ், சொல்ல மாட்டேன், சொல்லுங்க

 ஐ லவ் யூ

ஆ!


=================


18 டைரக்டர் சார்! உங்க படம் ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு

 சரி சரி, ஒரிஜினல் டைட்டிலை வெளில யார் கிட்டேயும் சொல்லிடாத


============

19   தலைவரே! பிச்சைக்கார்களை எப்பவும் கேவலமா பேசக்கூடாதுன்னு ஏன் அறிக்கை விடறீங்க?

 தேர்தல் வந்துட்டா நாமும் ஓட்டுப்பிச்சை கேட்கறோமில்ல?


================


20 யோவ், அசிஸ்டெண்ட் டைரக்டரு, நல்லதா ஒரு சீன் சொல்லுய்யா நம்ம புதுப்படத்துக்கு

 ஓப்பனிங்க் சீன்ல ஹீரோயின்  குளிக்குது, எப்டி? செம சீன் இல்ல?


=================

தலைவரே! நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்கு பேட்டி குடுத்தீங்க?

1 டியர்! பற்று வைக்க, பற்றிக்கொள்ள  ஏன் யோசிக்கறீங்க?

பற்று வைச்சா வரவும் வைக்கனும், எனக்கு மேத்ஸ் தெரியாது, பற்றிக்கொண்டால் பத்திக்கும் 

==============

2 டியர், மச்சத்தை வெளிக் காட்டிக் கொள்ளாம இருக்க ரொம்போ கஷ்ட ப்பட வேண்டி இருக்கு

ஃபுல் ஸ்லீவ் சுடி போடு, ஃபுல்லா கவர் ஆகிக்கும்


==============


3 தலைவரே! விளம்பரத்துக்கு மட்டும் 40 கோடி செலவு பண்ணி இருக்கீங்களாமே?


அதில் என்னய்யா  தப்பு? 4000 கோடி சம்பாதிக்கறோம், 40  கோடி செலவானா என்ன?


================




4 கெட்டப்புக்காக எதை வேணாலும் செய்யத்தயாரா இருக்கும் ஒருவர், எது செஞ்சாலும் கெட்டப்பே மாற்றாத ஒருவர் இணையபோறாங்களாம்

டைட்டில்?

கிலி


=================

5 லேடி இன்ஸ்பெக்டர் கிட்டே 'Catch u backனு சொன்னியா? பெரிய ஜில்லா  ரவுடி / ஹீரோன்னு நினைப்பா?

 அய்யோ சார், அப்புறமா கால் பண்றேன்னு அர்த்தம் அதுக்கு

===============


6  தலைவருக்கு 2 நாக பாம்பை கிஃப்ட் பேக் ல அனுப்பி இருக்கேன்
அதை அவர் ஓப்பன் பண்ணலைன்னா?
DO NOT OPEN-னு எழுதி வெச்சிருக்கேன்,நிச்சயம் திறப்பார்


================

==============


7 யுவர் ஆனர் , எனக்கு சொந்த பந்தம் யாருமே இல்ல

 ஓஹோ, அப்போ உங்களை ஜாமீன்ல எடுக்க மட்டும் இத்தனை பேர் எப்டி வந்தாங்க?


===============

8 தலைவரே!25 வருசமா ஜெயில்ல வாழ்நாளைக்கழிச்சவங்களுக்கு நீங்க என்ன உதவி செஞ்சீங்க?

 அவங்க கூட செல்ஃபி 1 எடுத்துக்கிட்டேன், ஓட்டு கூடுமில்ல?


===============


9 தலைவருக்கு 96 வயசு ஆகுது, கொள்ளுப்பேரனுக்கு 16 வயசு ஆகுது

 அப்போ 2 பேரும் என்ன தப்பு பண்ணாலும் ஜெயில்ல போட முடியாது?



===============

10  இன்னமும் ஆண், பெண் பேசுனா காதல்ன்னு சொல்லுற முட்டாள் உலகம் இது

எஸ் மிஸ்! அவக கிடக்காக, உங்க ph.no  சொல்ங்க, நாம வாட்சப்ல  கடலை போடுவோம்


=================

11 தலைவரே! நிகில் கல்ராணியை நான் ஆதரிக்கிறேன்னு எதுக்கு பேட்டி குடுத்தீங்க?

சாரி, ஸ்மிருதிராணியை ஆதரிக்கிறேன்னு சொல்றதுக்குப்பதிலா மாத்திட்டேன்


================


12 டியர், நீ என் பக்கத்தில் இருந்தால்.பக்கம் பக்கமாக கவிதைகள் எழுதுவேன்

அட பக்கி, அப்போக்கூட கிஸ் தராம எழுதிட்டுதான் இருப்பியா?


=================


13 மேடம், எங்கே  உங்களைப்பார்க்கவே முடியலை  ஃபேஸ்புக் பக்கம்

ஃபோன் ரிப்பேர்ங்க

ஓ, நான் கூட படிப்பு வராதோனு நினைச்ட்ட்டேன்


===============

14  சார், உங்க சம்சாரம் அடிக்கடி ஃபோன் ரிப்பேர்னு சொல்லுதே எப்டி?

அடிக்கடி நான் தான் ஃபோனை வாங்கி உடைப்பேன்,சமைக்காம ஸ்டேட்டஸ் போட்டா


============


15 எனக்கெல்லாம் ட்விட்டர்-ங்கறது ஊறுகாய் மாதிரிதான்


 ஓஹோ, அப்போ ஃபேஸ்புக்  தயிர் சாதம்  மாதிரியா?வாட்சப் புளி சாதமா?


=============


16 என் பையன் கணிதன் ஆகனும்னு ஆசைப்படறான்

கணக்குல புலியா?

ஒரு ஃபிகரைப்பார்த்ததுமே இது செட் ஆகுமா? ஆகாதா?னு கணக்கு பண்ணிடுவான்


=================

17   பொதுவா நைட் ஷிப்டுக்கு பெண்கள் தோது படமாட்டாங்க. அவர்களும் விரும்புவதில்லை

ஏன் அப்டி?

கம்பெனி வேலை நடக்காது, கடலை வியாபாரம் தான் ஆகும்


===============

18  மிஸ்! புத்தம் புதிய புத்தகம் நீ!

ஓஹோ, உங்க டைரியை காட்டுங்க, ஒரு புத்தகத்திருவிழாவே நடத்தலாம்னு நினைக்கேன், எத்தனை பேர்ட்ட இதே டயலாக்?


==============\\


19  என் கூட நானே  அடிக்கடி சண்டைபோட்டுக்குவேன்

 ஏன் மிஸ்! உங்க கிட்டே சண்டை போடக்கூட யாரும் வர மாட்டாங்களா? அ டக்கடவுளே!


==================

20 டெய்லி நிம்மதியா தூங்கி எந்திரிக்கனும், இதான் என் குறைஞ்ச பட்ச ஆசை

வெரிகுட் மிஸ்! அப்போ அதிக பட்ச ஆசை?


வாய்க்கு ருசியா சாப்பிடனும்


================

Wednesday, March 16, 2016

சார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க?

1  மேடம், உங்க குழந்தைக்கு என்ன வயசு ஆகுது?


2 வயசு
உங்க கடைசி குழந்தைக்கு கேட்கலை, முதல் குழந்தைக்கு?


============


2 தென் இந்தியாவின்  Brad Pitt  சிம்புன்னு  எப்டி சொல்றே?

தென் இந்தியாவின்  ஏஞ்சலினா ஜூலி ஹன்சிகான்னு ஜெயம் ரவி சொன்னாரே?


==================


3  தலைவரே! பசுமைத்தமிழகம் அமைப்போம்னீங்களே? விவசாயம் செழிக்க பாடுபடுவீங்களா?

 ச்சே ச்சே, தொண்டர்கள் கைல நெஞ்சுல பச்சை குத்த வைப்போம்


===============

4  என் பொண்ணு  எப்பவும்  சின்னதா டிரவுசர், டி சர்ட் போடுட்டு சுத்துது

 உங்களுக்கு மந்த புத்தி, உங்க பொண்ணுக்கு சமந்தா புத்தி 


===================

எங்கண்ணன்  மேல  கை வெச்சுப்பாருங்க

 ஏன்? உங்கண்ணன்  காங்கிரஸ்ல சேர்ந்துட்டாரா?



==============


6  தலைவரே! எதுக்காக அதிகாலை 5 க்கு அலாரம் வைக்கச்சொல்றீங்க?

 நமக்கு நாமே விடியல் மீட்புத்திட்டத்தின் முதல் படி அதிகாலையில் துயில் எழல்


==============


7  தலைவரே! எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணி உங்க வீட்டு அட்ரஸ் விசாரிக்கறீங்க?

தமிழ் நாடு பூரா பயணம் செஞ்சதுல என் வீட்டு அட்ரஸை மறந்துட்டேன்



===============

8  முதன் முதலா படம் டைரக்ட் பண்றீங்க, பிளாக் பஸ்டர் ஹிட்னு டைட்டில் வெச்சிருக்கீங்க?
 என் முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட்னு  சொல்லிக்கலாமே?


=============


9  தலைவரே! உ ங்க பயணக்கட்டுரை புரியலையே?

 பஸ்ல பயணம் பண்ணிக்கிட்டே  எழுதுனது, எழுத்து கோணல் மாணல் ஆகிடுச்சு


===============


10 மிஸ்!தூரத்துல இருந்து பாத்தா உங்க  டிபி கிளியரா இருக்கு !

 பக்கத்துல வந்து பாரு, கிளி மாதிரி இருக்கும்


=============


11  டியர், எதுக்கு பாம்புப்புத்துல இருந்து ஒரு பாம்பை எடுத்து கட்டிப்பிடிக்கறீங்க?

 உங்க அரவணைப்பு எப்படி இருக்கனும்னு பார்க்கனும்னியே?


=============


12  நான் டாக்டர் இல்லையே  எதுக்கு என்னை dr -னு  சொல்றீங்க?

 லூசு, உன்னை டியர்னு கூப்ட்டேன், டியரின் ஷார்ட் ஃபார்மும் அதுதான்




================


13 தலைவரே! இந்த ஆட்சில மின்சாரக்கட்டணக்கொள்ளைனு சொல்லி மாட்டிக்கிட்டீங்க

எப்டி?

நம்ம ஆட்சில தான் மின்சாரமே இல்லையே -னு கேட்கறாங்க


===============


14 டியர்!  ரஃப்  நோட்டின்  கடைசிப்பக்கத்தில்  எதையாவது  கிறுக்குவேன்


 ஓஹோ, 1வது , 2 வது பக்கங்களில் காவியப்படைப்பு எழுதுவியா?காட்டு பார்ப்போம்


=================


15 டியர், நான் கஷ்டப்படும்போது நீங்க ஏன் என் பக்கம் இருக்கறதே இல்ல?

சாரி, எனக்கு இஷ்டப்படும்போதுதான் உன் பக்கம் வருவேன்


===============

16 டாக்டர்! பப்பாளிப்பழத்தை  முகத்துல  தேய்ச்சுக்கிட்டா முகம் ஷைனிங் ஆகுமா?

அப்டியே தேய்ச்சா பிக்கும், அரிஞ்சு தேய்க்கனும்


================


17 நான்  எல்லாரையும்  பேர்சொல்லிதான்கூப்பிடுவேன், ஆனா அவரை மட்டும் தான் சார்னு கூப்பிடுவேன்

ஓஹோ, அப்போ சார்மிளாவை சுருக்கமா எப்டி கூப்பிடுவீங்க?


================


18 யோவ், எதுக்குய்யா ஜெயிலுக்குள்ளே பொம்பளை மாதிரி நாணிக்கோணி நடக்கறே??


 நன்னடத்தை-ன்னு  ஏமாந்து ரிலீஸ் பண்ணிடுவாங்கனு ஒரு நப்பாசைதான்


===================

19 டியர், நீ வைரம் மாதிரி

 நிஜமாவா?

 ஆமா, நேச்சுரலா நாம 2 பேரும் கரி போல் கறுப்பா இருந்தாலும் நீ மட்டும் பவுடர் போட்டே கலர்  ஆகிட்டியே?


================


20 டியர், நான் என் இரு கண்களாலேயே பேசுறது உங்களுக்குப்புரியலையே? ஏன்?

 தெரில, நீ வாயால பேசறதே புரிய மாட்டேங்குது


================