Skip to content

Friday, January 29, 2016

இறுதிச்சுற்று - சினிமா விமர்சனம்

தமிழ் சினிமா  பெருமைப்படும் அளவுக்கு படங்கள் தருபவர்கள் மிகக்குறைவு, மாமூல் மசாலாப்படங்கள் , கமர்ஷியல் படங்கள் எடுக்கும் இந்த கால கட்டத்தில் ஒரு பெண் இயக்குநர்  இவ்வளவு நீட்டாக ஒரு படம் எடுக்கத்துணிந்ததே பெரிய விஷயம் , அதை மிகச்சரியாக சொல்ல வந்ததை இம்மி குறையாமல் நச் என்று சொன்ன விதம் அபாரம், வார்ம் வெல்கம் டூ கோலிவுட்


ஹீரோ ஒரு பாக்சிங் கோச்சர். அவரது சம்சாரம் இன்னொரு பாக்சரோட ஓடிப்போய்ட்டதால ஏகப்பட்ட வெறுப்பு , கோபம், இயலாமையுடன் ஆனால் திமிர்த்தனம் மாறாமல் இருக்கும்  ஆள்


இவர் எதேச்சையாய் மீன் விற்கும் மீனவக்குடும்பத்துப்பெண்ணிடம் பாக்சிங்க் திறமை இருப்பதைப்பார்க்கிறார். அவருக்கு கோச்சிங்க்   கொடுத்து
 உலக சாம்பியன் ஆக்கத்துடிக்கிறார்.

 வில்லன் 2 ரூபத்தில், முதல்  வில்லி  ஹீரோயினின் அக்கா, அவரும் ஒரு பாக்சர் தான் , தனக்குக்கிடைக்காத வாய்ப்பு தன் தங்கைக்குக்கிடைக்குதே  என பொறாமையில் சதி செய்கிறார்,


இன்னொரு வில்லன் கமிட்டி தலைவர். தனக்கு இணக்கமாக நடக்கவில்லை என்பதால் பழி வாங்கக்காத்திருக்கார்

 எதிர்ப்புகளை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே திரைக்கதை


ஹீரோவா மாதவன்.   சாக்லெட் பாய் இமேஜை ஆல்ரெடி ரன் படத்தில் தகர்த்து எறிந்து  ஆக்சன் ஹீரோ ஆகி தம்பி படத்தில்  இப்போ என்ன செய்ய என மிரட்டியவர்


ஜிம் பாடி ,  சோக தாடி, என ஆளே மாறி  அசத்தல் நடிப்பை அள்ளி வழங்கி இருக்கார்.


ஹீரோயினா ரித்திகா சிங். வரலட்சுமி மாதிரி  நடிப்புச்சூறாவளி,மீன் மார்க்கெட்டில்  வசனம் பேசி கலாய்ப்பதில்  இருந்து  ஹீரோவை நம்பாத  பார்வை பார்ப்பது, பாக்சிங் கோச்சிங் , க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீன்மை  எல்லாம் அருமை

காக்கிச்சட்டை யில் கமல் ஓப்பனிங் சீனில் ஒற்றைக்கையால் தண்டால் எடுப்பாரே அதே சீனை அசால்ட்டாக செய்கிறார். அந்த சீனில் மாதவன்  மிரள்வது பிரமாதம், பிஜிஎம் அந்த சீனில் அடக்கி வாசித்து விட்டது. மிரட்டி இருக்கலாம்



ஹீரோயினின் அக்காவாக வருபவர்  பொறாமை , கோபம், இயலாமை எல்லாவற்றையும் அட்டகாசமாக  வெளிப்படுத்தி இருக்கார்


வில்லன்  ஓகே  ரகம்

சுதா கொங்கரா  தான் திரைக்கதை , இயக்கம்..

 ஒரு சீன் கூட போர் அடிக்காத அளவில்  பின்னி எடுத்து விட்டார்
ஆனால் வசனம் எழுதும்போது ( தமிழில் வசனம் வேறு ஒருவர்)  அதை இன்னும் நாகரீகமா சொல்லி இருக்கலாம்.

 கோபத்தை வெளிப்படுத்த கெட்ட வார்த்தம்னு பேசனும்னு அவசியம் இல்லையே? மவுனம் , முறைப்பு கூட கோபத்தின்  வெளிப்பாடே



இசை  சந்தோஷ் நாராயணன். பாடல் காட்சிகளில் முதல் வகுப்பு, பின்னணி இசையில் டிஸ்டிங்க்சன்


சில காட்சிகளில் கை தட்டல் வர வைக்கும் அளவு பிரமாதப்படுத்த வேண்டிய இசை அடக்கி வாசித்தாற்போல் இருந்தது. இதே தவறை  என்னை அறிந்தால் படத்தில்  கவுதம்  செய்திருந்தார்.


வசனத்தில்  பாலீஷ் , பிஜிஎம்மில் கமர்ஷியல்  என இன்னும் செதுக்கி இருந்தால் படம் வேற லெவல்


ஒளிப்பதிவு  கன கச்சிதம்

மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  150 கோடி மக்கள் தொகை நாட்டில் வருசத்துக்கு.1 சாம்பியன் தான் உருவாகறான் ஏன் ?

பாலிடிக்ஸ் இல்லைன்னா தெருவுக்கு தெரு சாம்பியன் உருவாவான்# இ


2 நம்முடையதைக்கழுவவே.வழியைக்காணோம்.இதுல அடுத்தவங்களுதை எதுக்கு கழுவனும் ?



3  இருக்கறவனுக்கு ஒரு பொண்டாட்டி.
இல்லாதவனுக்கு 1000 பொண்டாட்டி


குத்துச்சண்டைல சாகற வரை அடிக்கனும்.இது நான் சொல்லல.முகமது அலி சொன்னது #,இ சு


5 சரக்கு அடிச்சா லிவர் கெட்டுடும்
தெரியும்.அதான் லிவர் சாப்டுட்டே சரக்கடிக்கறேன்.சாப்பிடற லிவர் கெடும்.நம்ம லிவர் தப்பிடும்.எப்டி ஐடியா?

எதிரியோட மோதும்போது ஆயுதமே இல்லாம முதல்ல பண்ணனும் .ஆயுதத்தை அழிச்ட்டா எதிரி யை ஜெயிச்ச மாதிரி சு



 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

இறுதிச்சுற்று = 112 நிமிடங்கள்.மூர்த்தி சிறுசு கீர்த்தி பெருசு ( கீர்த்தி = புகழ்)


2 விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்ற ,மாதவன் ன் புது கெட்டப்பில் இறுதிச்சுற்று @ திருவனந்த புரம் ஸ்ரீ குமார்


3 ஒரு பெண் இயக்குநர் இயக்கி இருந்தும் வசனங்கள் ரொம்ப போல்டாக அதீத கோபத்துடன் இருப்பது அதிர்ச்சி + ஆச்சர்யம் # இ


4 ஹீரோயின் கேரக்டரைசேசன் பிரமாதம் ,நடிப்பு பின்னுது # இ


5 ஹீரோயின் அபாரமான ந்டிப்பில் இயக்குநரின் கச்சிதமான இயக்கத்தில் இறுதிச்சுற்று இடைவேளை வரை குட்





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 ஹீரோயின் பாத்திரப்படைப்பு , அவர் நடிப்பு  எல்லாம்  செம


2 ஹீரோயின் அக்கா கேரக்டரைசேசன் அழகு. வில்லி போல் காட்டி பின் நார்மல் மனுஷி ஆவது  குட்



3 ஸ்போர்ட்சில் நடக்கும் அவலமான பாலிடிக்சை சொன்ன விதம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  மிக வித்தியாசமான இந்தக்கதையில்  ஹீரோயின்  ஹீரோ  மேல்  காதல்  கொள்வது எதுக்கு? தேவை இல்லாத  திணிப்பு. வயசு வித்தியாசம்  25  வருசம்.

2  ஹீரோயின்  கைகளில்  வில்லி ஏற்படுத்திய காயத்துடன் பாக்சிங் களத்தில்  இறங்குவது எப்படி? டாக்டர் எப்படி அனுமதித்தார்?

3 ஹீரோயின் அக்காவுக்கு ஏற்பட்ட பொறாமை  பாக்சிங் சான்ஸ் தங்கைக்குக்கிடைத்தது என்பதாலா? ஹீரோவின் காதல்  அவளுக்குக்கிடைத்தது என்பதாலா? என்பதில் இன்னும்  தெளிவு காட்டி  இருக்கலாம்

4 க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீனில்  ஹீரோயின்  வெல்வது இன்னும் மாஸ்  சீனாகக்காட்டி  இருக்கனும்




சி  பி  கமெண்ட் = இறுதிச்சுற்று - சர்வதேச தரத்தில் ஒரு தமிழ்சினிமா, நாயகி நடிப்பு, இயக்கம், இசை பிரமாதம், ஏ செண்ட்டர் ஃபிலிம், விகடன் -46 , ரேட்டிங்-3.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  46



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =  நன்று







 ரேட்டிங் =3.5 / 5

திருவனந்த புரம் ஸ்ரீகுமார் ல படம் பார்த்தேன்


Irudhi suttru.jpg
Theatrical release poster
Directed bySudha Kongara
Produced byS. Sashikanth
C. V. Kumar (Tamil)
R. Madhavan (Hindi)
Rajkumar Hirani (Hindi)
Written bySudha Kongara
Sunanda Raghunathan
Arun Matheshwaran(Tamil dialogues)
Screenplay bySudha Kongara
Story bySudha Kongara
StarringR. Madhavan
Ritika Singh
Music bySanthosh Narayanan
CinematographySivakumar Vijayan
Edited bySathish Suriya
Production
company
Distributed byDream Factory (Tamil)
Rajkumar Hirani Films
Tricolour Films (Hindi)
Release dates
  • 29 January 2016
CountryIndia
LanguageTamil
Hindi

அரண்மனை 2 - சினிமா விமர்சனம்

ஊர்லயே பெரிய ஜமீன் தார் ராதாரவி. அவரோட வாரிசு  ஹீரோ. சொந்தத்துலயே  பொண்ணு நிச்சயம் ஆகிடுது. அப்போதான்   அந்த பங்களாவில் அசம்பாவிதமான சம்பவங்கள் நடக்குது

ஹன் சிகா பேய் ஜமீன் தார் ராதாரவியை  தாக்கி கோமா ஸ்டேஜ்க்கு கொண்டு போகுது.ஹீரோயின் டிரஸ் மாத்தும்போது வேடிக்கை பார்த்த பங்களா வேலையாளை ஒரு பேய் கொன்னுடுது. அந்த கொலை நடந்தப்ப அருகில் இருந்த ஆள் நம்ம ஹீரோ என்பதால் போலீஸ்  அரெஸ்ட் பண்ணிடுது.


ஹீரோவோட  வேண்டுகோளின் படி பங்களாவில் நடக்கும் மர்மங்களை துப்பு துலக்க படத்தோட டைரக்டர்  சுந்தர் சி  வர்றார் ( இவரோட  தங்கச்சி தான் த்ரிஷா, இதைத்தான்  ஹீரொ  மேரேஜ் பண்னப்போறார்)

அவர் வந்து பங்களா  ஃபுல்லா  கேமரா பொருத்தறார். பின் தான்  தெரியுது. பேய் வேற  யாரும் இல்லை. ஹீரோவோட தங்கச்சி ஹன் சிகா தான்.


இடை வேளை

 இதுக்குப்பின் ஏன் ஹன்சிகா சொந்த அப்பாவையே அப்டி படு காயப்படுத்துச்சு ? என்பது மிச்ச மீதி திரைக்கதை 


ஹீரோவா சமூக நல ஆர்வலரும் , ஹாலிவுட் பட சான்ஸ் கிடைச்ச தனுஷை ட்விட்டர் ல செம நக்கல் அடிச்சவருமான சித்தார்த். 2  டூயட் அவருக்கு . மற்றபடி பெரிய  வாய்ப்பு இல்லை 


 ஹீரோயினா  த்ரிஷா. செம கிளாமர். டூ பீஸ் டிரஸ் , டாட்டு சகிதமா கண்ணியமான கிளாமர் காட்டறார் ( காட்றது கிளாமர் , இதுல கண்ணிய கிளாமர், அகண்ணிய கிள்மார்னு 2 வெரைட்டி இருக்கா? )


பேயா ஹன்சிகா. பெருசா பயமுறுத்தலைன்னாலும் செண்ட்டிமெண்ட் சீனில்  லேடீஸ் உச் கொட்றாங்க. படத்தில் இவர் இவராகவே வரும் காட்சிகள் குறைவு தான்


ராதாரவி  கேர்கடர் ஆர்ட்டிஸ்ட்டா வந்து  ஃபிளாஸ்பேக்கில்  வில்லனா ஆகறார். அனுபவம் மிக்க நடிப்பு


 ரஜினி முருகனுக்குப்பின் வரும் சூரி படம்.  2 கெட்டப் ல  வர்றாரு ( கெட்டப்பே  மாற்றாத  ஹீரோக்கள் கவனிக்க )

அவரோட காமெடி களை கட்டலைன்னாலும்  தியேட்டர்ல ஆடியன்ஸ் அவங்களாவே சிரிச்சுக்கறாங்க 

 பின் பாதியில்  த்ரிஷா வின் உடம்பில் ஹன்சிகா ஆவி புகுவதால்  த்ரிஷா  பேயா வரும்  சூழ்நிலை. சும்மா மேக்கப்பை கலைச்சு விட்டிருந்தாலே போதும், இதுக்கு மேக்கப் எதுக்கு?

 கோவை சரளா  காமெடி சகிக்க வில்லை.  வழக்கமா காஞ்சனா டைப் படங்களில்  கோவை சரளா பெரிய பிளஸ் , இதில் மைன்ஸ்




மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1  பரம்பரை பரம்பரையா உங்க கிட்டே தான் வைத்தியம் பார்க்கறோம்

ஆனா என் கிட்டே வைத்தியம் பார்த்த யாரும் அவங்க பரம்பரையை பார்க்க மாட்டாக.# அ2


2 வில்லன் = பொண்ணே வெட்கப்படாம காட்டும்போது ஆம்பளை பார்த்தா தப்பா? # அ 2


3 சூரி = தேனே தானா கொட்டும்போது யோசிக்ககூடாது.நக்கிடனும் #,அ 2

4 சூரி = ஜோக் அடிக்கறேன் கற பேர் ல சோத்தில மண் அள்ளிப்போட்றாதீங்க # அ2

5 சூரி = செல்ப் எடுக்காத வண்டி எல்லாம் செல்பி எடுக்குது.#,அ2


6 கோவை சரளா =,வெயிட் & ஸி

சூரி = வெறுமனாவே உன்னைப்பார்க்க முடியாதே.வெயிட் பண்ணி வேற பார்க்கனுமா? # அ 2


7 சூரி= என்னடா மூஞ்சி இது?பப்பாளிப்பழத்துக்கு பவுடர் அடிச்ச மாதிரி # அ2


8 சூரி = இவன்லாம் நலங்கு வெச்சாலே வீட்டை விட்டு வெளில போகமாட்டான்.எதுக்கு விலங்கு போட்டிருக்கீங்க?#,அ 2

9 ஆவிகளின் அகராதியில்  நியாயம், அநியாயம் கிடையாது, ரத்த சம்பந்த பாசம் கிடையாது # அ 2

10  ஏய்யா, எல்லாரும் பேயைப்பார்த்தா தான் ஒண்ணுக்குப்போவாங்க, உன் தங்கச்சி பேய் கூடவே  பாத்ரூம் போகுதே? # அ 2


11  அவ  பக்கத்துல தான் பேய்  இருக்கு, ஜாடைல கூப்பிடு


 எங்கே? ஜாடைல கூப்பிடறதுக்குள்ளே  பாடைல போய்டுவா போல # அ 2






 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1  அரண்மனை 2 @ திருவனந்த புரம் அஜந்தா.1100 சீட்ஸ் க்கு 890 ஸீட் புல்


2 அரண்மனை -130 நிமிசம்.13 ராசி இல்லாத நெம்பர் ஆச்சே?,சரி.சமாளிப்போம்

3 ஓப்பனிங் சீன் ல அம்மன் சிலை படுத்த வாக்கில் இருக்கு.படமும் படுத்துக்குமோ?படுத்தி எடுக்குமோ தெரியலயே


4 ஓப்பனிங் சீன் ல த்ரிஷா டூ பீஸ் ல வருது.பீச்ல. இன்னொரு பீஸ் கர்சீப் கைல கொடுத்தா 3 பீஸ் ஆகி 3 ஷா க்கு மேட்சுக்க்கு மேட்ச் # அ 2

5 அரண்மனை 2 - த்ரிஷா வின் கிளாமர் ,சூரி காமெடி காப்பாத்தி இருக்கு.இதுவரை.இனி பேய் வந்து காப்பாத்துமோ? @ இடை வேளை



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


 1 பேய்ப்படங்கள்  எப்படியும் மக்கள் மனதை கவரும் மினிமம் கியாரண்டி  என்பதால் அதை தேர்ந்தெடுத்து காசு பார்த்தது


2  த்ரிஷா வை  இந்த வயசிலும் கிளாமர் காட்ட வைத்தது

3  மனோபாலா  சூரி  காமெடி காட்சிகள் கன கச்சிதம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 கோவை சரளா ஃபிளாஸ் பேக் சீன்ல  ரயில்ல காதலன் போகும்போது  மனோபாலா சரளா கை பிடிச்சு தடுக்கறார், காதலன் இருந்த ரயில் பெட்டி கிராஸ் ஆனதும் கையை விட்டுடறார், அப்போ ரயில்ல ஏறி போக சரளா முயற்சியே பண்ணலையே  ஏன்? காதலன் இருக்கும் அதே பெட்டில ஏறுனாத்தான் ஒத்துக்குவாங்களா? 3 பெட்டி தள்ளி ஏறி அந்த பெட்டிக்குப்போகக்கூடாதா?


2 ஹீரோ  ஓப்பனிங்  சீன் ல  பீச் , டான்ஸ் ஸ்டெப்  எல்லாமே  செல்லமே படத்தில் வரும் காதலிக்கும் ஆசை இல்லை கண்ணே உன்னைக்காணும் வரை பாட்டின் அப்பட்டமான தழுவல்


3  ஹன் சிகா  அந்த விஷ பாட்டில் ல இருக்கும் விஷத்தை ஏன் அண்ணாந்து குடிக்குது? கவ்விக்குடிச்சா விஷம்  ஏறாதா?


4  சொந்த அப்பா , அண்ணனையே பேய் பழி வாங்குவது  , கர்ப்பமான மகளை அப்பாவே விஷம் வைத்துக்கொல்வது எல்லாம்  ஓவர். டப்பிங்க் படம் பார்ப்பது போன்ற உணர்வு


சி  பி  கமெண்ட் -அரண்மனை -2  - அரதப்பழசான பழி வாங்கும் கதை, தெலுங்கு டப் படம் போல். காமெடி சுமார் , விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.5 / 5 



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) =  சுமார்



 ரேட்டிங் = 2.5 / 5


 திருவனந்த புரம் அஜந்தா தியேட்டரில் படம் பார்த்தேன்

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 29/01/2016 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1'அரண்மனை-2' 


2   

இறுதிச்சுற்று'












'ஆம்பள'படத்தை அடுத்து டைரக்டர் சுந்தர் சி, 'கலகலப்பு'படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டு இருந்தார். இப்போது அந்த திட்டத்தை தள்ளிப்போட்டுவிட்டு, 'அரண்மனை'படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

தமிழ் பட உலகில் ஏற்கனவே சிங்கம், ஜெய்ஹிந்த், புலன் விசாரணை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளிவந்துள்ளன. அடுத்து, 'விஸ்வரூபம்-2'வெளிவர தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 'அரண்மனை'படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. சரத்குமார் நடித்து, ஏ.வெங்கடேஷ் டைரக்டு செய்த 'ஏய்'படத்தின் 2-ம் பாகமும் தயாராக இருக்கிறது. சரத்குமார்- ஏ.வெங்கடேஷ் இருவரும் மீண்டும் அந்த படத்தில் இணைகிறார்கள்!

சுந்தர் சி. நடித்து டைரக்டு செய்த 'அரண்மனை' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை படமாக்குவது பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அடுத்து, இந்தியிலும் இந்த படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அவருக்கு வந்து இருக்கிறது!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கியுள்ள அரண்மனை-2 என்ற படத்துக்கு தடை கேட்டு சிவில் கோர்ட்டில் பிரபல தயாரிப்பாளர் எம்.முத்துராமன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த படத்தின் கதை தொடர்பான பிரச்சினை குறித்து சமரச தீர்வு மையதில் பேசி தீர்க்கவேண்டும் என்று இயக்குனர் சுந்தர்.சி-க்கு சிவில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

‘ஆயிரம் ஜென்மங்கள்’ உள்பட ஏராளமான திரைப்படங்களை தயாரித்தவர் எம்.முத்துராமன். இவர், சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

ஒரே கதை 

ரஜினிகாந்த், லதா உள்பட பலர் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற திரைப்படத்தை கடந்த 1978-ம் ஆண்டு வெளியிட்டேன். இதே கதையை சுந்தர்.சி. இயக்கத்தில், விஷன் ஐ மீடியா என்ற நிறுவனம் ‘அரண்மனை’ என்ற பெயரில் படத்தை தயாரித்துள்ளது.

இதுகுறித்து கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த இந்த கோர்ட்டு, ஆயிரம் ஜென்மங்கள் மற்றும் அரண்மனை படங்களை ஒரே நேரத்தில் பார்த்து அறிக்கை தாக்கல் செய்ய வக்கீல் கமிஷனர் ஒருவரை நியமித்தது. அவரும் இந்த 2 படங்களையும் பார்த்து, இருபடங்களின் கதையும் ஒன்று போல் உள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்துள்ளார். 

அரண்மனை-2

இந்த நிலையில், விஷன் ஐ மீடியா நிறுவனம் தயாரிப்பில், சுந்தர் சி.இயக்கத்தில் ‘அரண்மனை-2’ என்ற திரைப்படம் வருகிற 29-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், திரிஷா, ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே அரண்மனை படத்தின் கதை என்னுடையது என்று வக்கீல் கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அந்த கதையின் தொடர்ச்சியான அடுத்த பாகம் வெளிவந்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அரண்மனை-2 என்ற தலைப்பில் வரும் படத்துக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

பேச்சுவார்த்தை 

இந்த மனு 12-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் ஆஜராகி வாதிட்டார். 

இதையடுத்து நீதிபதி டேனியல் அரிபாபு பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரர் முத்துராமன், எதிர்மனுதாரர் சுந்தர்.சி. ஆகியோர் ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சமரச தீர்வு மையத்தில் தங்களது பிரச்சினை குறித்து பேசி வருகிற 28-ந்தேதிக்குள் தீர்வு காணவேண்டும். இந்த வழக்கை வருகிற 28-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.


'இறுதிச்சுற்று' படத்தில் மாதவன்

'இறுதிச்சுற்று' படத்தில் மாதவன்
மாதவனின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'இறுதிச்சுற்று' படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார்.


'வேட்டை' படத்தைத் தொடர்ந்து நீண்ட மாதங்கள் கழித்து தமிழில் சுதா இயக்கத்தில் நடித்து வந்தார் மாதவன். 'இறுதிச்சுற்று' என்று பெயரிடப்பட்ட அப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்தார். சி.வி.குமார் மற்றும் சசிகாந்த் இருவரும் இணைந்து தயாரித்து வந்தனர்.



இப்படத்துக்காக உடல் அமைப்பை எல்லாம் மாற்றி, குத்துச்சண்டை வீரராக நடித்திருக்கிறார் மாதவன். 'இறுதிச்சுற்று' படத்தின் டீஸர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. படம் எப்போது வெளியீடு, ட்ரெய்லர், இசை உள்ளிட்ட விஷயங்கள் எதுவுமே தெரியாமல் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்தது. தற்போது இப்படத்தின் இசை ஜனவரி 4ம் தேதி வெளியாக இருக்கிறது. சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.



இப்படத்தின் இசையை இயக்குநர் பாலா வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக் கொள்ள இருக்கிறார். மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இந்தி பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி கலந்து கொள்ள இருக்கிறார்.


'இறுதிச்சுற்று' திரைப்படத்தை இந்தியிலும் 'சாலா காதூஸ்(Saala Khadoos)' என்று பெயரிலும் படமாக்கி வந்தார்கள். தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் தயாரான இப்படத்தை ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் மற்றும் யு.டிவி நிறுவனம் இணைந்து வாங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளியாகும் என யு.டிவி நிறுவனம் அறிவித்திருக்கிறது.



நன்றி - த இந்து  , மாலைம்லர், தினத்தந்தி  , தினமணி

நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில்-எஸ் ஜே சூர்யா அதிர்ச்சி

1  தமிழகத்தை காக்க தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்: கலைஞர் # ஹலோ அழகிரி அண்ணே ,ஸ்டாலின் அண்ணே கேட்டுச்சா?உங்க.2 பேருக்கும் தான்



=============




2 பொதுத்துறை வங்கியில் இருப்பு வைக்கப்பட்ட தமிழக அரசு பணம் 20 கோடி சுருட்டல்: # சுருட்டு வியாபாரி யாராவது சுருட்டிட்டுப்போய்ட்ட்னா?




===============



3 பொன்குடத்திற்கு பொட்டு வைத்த அளவுக்கு அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது: ஜெ #,ஸ்டிக்கர் பொட்டு வேணா நிறைய இருக்கு. ஆனா பொன் குடத்தைக்காணோம்!




============



4 நக்மாவுக்குபாட்சாவை தெரிந்தஅளவுக்கு ஜல்லிக்கட்டுபற்றி தெரியவில்லை:இளங்கோவன்- # தமிழர்கள் கிட்டே உங்க பாச்சா எதுவும் பலிக்காது




============



5 என்ன அவதூறு என்று அவர்களுக்கும் தெரியவில்லை; எங்களுக்கும் தெரியவில்லை!

-கலைஞர் # உள்ளே போங்க தலைவரே ! ஜட்ஜ்க்கு தெரியும்னு நினைக்கேன்

=============

6 ஜெ தொடர்ந்த அவதூறு வழக்கில் நானே நேரில் சென்று ஆஜராவதென முடிவு செய்துள்ளேன்- கலைஞர் # பினாமியை அனுப்புனா ஜட்ஜ் கிட்டே மாட்டிக்குவாரு


============

7 நான் விமர்சகர்களுக்காக படம் பண்ணுவதில்லை. ரசிகர்களுக்காக மட்டுமே - உதயநிதி.# ஒரு கல் ஒரு கண்ணாடியை பாராட்னப்ப நன்றி சொன்னீங்களே? அது வாபசா?

============

8 மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது உறுதி: விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தகவல் # தம்பி, வீட்ல பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்


===============

பச்சை தமிழகம் புதிய கட்சியை தொடங்கினார் சு ப. உதயகுமார் #  இந்தக்கட்சிக்கு அழைப்பு விடும் முதல் ஆள் நம்ம தானைத்தலைவராத்தான் இருக்கும் பாரு


==================


10 பெற்றோர்கள் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய சிம்பு ஒப்புதல் . சார்பா 1 அப்பா சார்பா 1 பார்த்து வெச்சிருக்காங்களாம்.ஜமாய்



===========



11 ரஜினியை பார்த்துதான் நான் சினிமாவுக்கு வந்தேன்: சிவகார்த்திகேயன்..# கமல்ஹாசனைப்பாத்த பின்புதான் லவ்மேரேஜ் பண்ணிக்கிட்டேன்னு அடிச்சு விடுங்க



==========



12 பியூட்டி கிரீம் உபயோகித்து அழகாக மாறிய ஒரு பெண்ணைக் கூட நான் பார்த்ததில்லை: கொந்தளிக்கும் பாபா.# சாமியார்க்கு எதுக்கு அழகிகள் முகாம்?




===========




13 கணவனின் கள்ளக்காதலியை அடித்து உதைத்து பாலத்தில் இருந்து தள்ளிவிட்ட பெண்: # ஏம்மா.கையோட புருசனையும் தள்ளி விட்டுஇருக்கலாமில்ல?




===========




14 நீதிக்கு தலைவணங்க நான்எப்போதுமே தயங்கியதில்லை-கருணாநிதி# சும்மா ஒரு வணக்கம் போட்டு வைப்போம்.காசா?பணமா?,மொமெண்ட்




============



15 பாக்குறவங்களோட பார்வைக்கு பதில் சொல்ல ஆரம்பிச்சனா,

என் பார்வையை நான் மறந்துடுவேன்- # பதிலே சொல்ல முடியலைன்னா எப்டி கதை சொல்வீங்க?


===================


16 குஷ்பு வீட்டில் சுங்கத்துறை இலாகா
சோதனை .# மதகஜராஜாவை இன்னும் ரிலீஸ் பண்ணலையேன்னு சுந்தர் சி மேல் விஷால்க்கு கடுப்பு போல

============


17 மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க நடவடிக்கை; ‘அம்மா அழைப்பு மையம்’ திட்டம்-ஜெ # அம்மா என்றழைக்காத உயிரில்லையேன்னு ரஜினியே பாடிட்டாரே?


================

18  சட்டசபையில் மதுவிலக்கு விவகாரத்தை பேசுவோம் -ஸ்டாலின் # எப்டி? உங்களுக்குள்ளேயே ரகசியமாப்பேசிக்குவீங்களா?சத்தமாப்பேசுனா அவைவிலக்கு தான்


==================

19 நிலாவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் பரிசீலனையில் உள்ளது; இஸ்ரோ தலைவர் பேட்டி  # எஸ் ஜே சூர்யாவை முதல்ல அனுப்புவாங்களோ?


==================

20  மதுரை அருகே பாலமேடு கிராமத்துக்கு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தச் சென்ற சீமான் கைது # எல்லாரும் பார்த்துக்குங்க  நானும் ரவுடிதான்


===================

Thursday, January 28, 2016

உலக மகா வாயாடி யார் தெரியுமா?

1  டியர்.பொங்கலுக்கு ஒருவாரம் எங்கம்மா வீட்ல இருந்துட்டு வரவா?


ஒரு மாசம் வேணாலும் இரு.ஆனா கிளம்பும்போது ஒரு மெசேஜ் அனுப்பிடு.


==============

2 எனக்கு கோவை தமிழ் அவ்ளோ பேச வராது.


பாவை தமிழ் எப்டி இருந்தாலும் அவை ரசிக்கப்படும்.டோன்ட் ஒர்ரி


============

3 டியர்.நேத்து நைட் என் கனவில் என் மடில படுத்துத்தூங்கிட்டு இருந்தீங்க.


அப்டியா? தூங்காதே தம்பி தூங்காதேன்னு பாடி எழுப்பி விட்டிருக்கலாமில்ல?


==============

4 டியர்.நீ கட்சி சார்பற்ற ஆள் தானே?,எதுக்கு நெத்தில இரட்டை இலை பொட்டு?


கடைல போய் ஸ்டிக்கர் பொட்டு கேட்டேன்.இதை வெச்சு விட்டுட்டான்



=========


5 டியர்.உங்க மேல் கோவப்படுவது போல் நடிச்சனே ?எப்படி என் நடிப்பு?


நமக்குத்தான் படிப்பும் வர்ல ,நடிப்பும் வர்லயே.எதுக்கு இந்த விஷப்பரீட்சை?

================

6 டாக்டர்! நா நல்லாதான் இருக்கேன்,ஆனா டக்குனு மனசு டவுனாகுது, எதனால?

6 மணி ஆனா லேடீஸ் ஸ்டாஃப்ஸ் எல்லாம் வீட்டுக்கிக்கிளம்பிட்டா அப்டி ஆகும்

================

7 டெய்லி 200 ரூபாய்க்குக்குடிக்கறே,ஆனா உன் தினக்கூலியே அவ்ளவ் தான், ஏன் இப்டி?



சம்பளம் வாங்குனதும் முழுசா அது அம்மா கைக்குப்போய்டனும்னாருடாடி

==================

8  தலைவரே! கூட்டணிக்கு அவர் வரனும்னா 500 கோடி ரூபா வேணுமாம்

அடேங்கப்பா, அதை சம்பாதிக்க கழகம் எவ்ளோ கஷ்டப்பட்டிருக்கும்?கண்டுக்காம விட்ருவோம்


=================

9  சிஷ்யா! ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டால்  விரைவில் கீர்த்தி பெறுவாய்!

 குருவே! அதுக்கு கீர்த்தியோட அப்பா சுரேஷ் ஒத்துக்குவாரா? ( ரஜினி முருகன் நாயகி கீர்த்தி சுரேஷ்)


================




10  டியர், என்னை லவ் பண்ணிட்டு அப்புறம் முதுகில் குத்திட மாட்டீங்களே?

எனக்கென்னவோ உங்கப்பாதான் என் முதுகுல , நெஞ்சுல எல்லாம் குத்துவார்னு தோணுது


================


11  உங்களுக்கு கவிதை பிடிக்கும்னா  என் ஃபேவரைட்ஸ் பாருங்க


 ஓஹோ, அப்போ உங்களையே பிடிச்சிருந்தா உங்க அம்மாவை அப்பாவை வந்து பார்க்கலாமா?


================

12  உலக மகா வாயாடி யார் தெரியுமா?


காதலன் லிப் கிஸ் தரும்போது கூட ஏதாவது பேசிக்கொண்டே இருப்பவரே!



============


13 டாக்டர்,நாய் துரத்தறாப்ல கனவு டெய்லி வருது.இதுக்கு என்ன பலன்?

 பைரவன் கற பெருல எவனோ உங்களை டெய்லி துரத்தப்போறான்னு தோணுது


=================

14   டாக்டர்.ஆபீஸ் ல FILE அடுக்கும்போது கைல அடிபட்டு ரத்தம் கொட்டுது.எதனால?

ஏம்மா.முதல்ல உங்க PROFILE ஸ
செக் பண்ணனும்.அதெப்டி அப்டி வரும்?


===========

15 இன்ஸ்பெக்டர்.என் காதலர் அர்ஜென்ட்டா டொனேசன் வேணும்னு கேட்கறார்.

ஏம்மா.குடுக்க வேண்டியதுதானே?

அவரு டொனேசனா கேட்டது என் கற்பை

=========


16 மாப்ளை.போட்டோவே தேவை இல்லை.பொண்ணு மகா லட்சுமி மாதிரி இருப்பா.

பரவால்லை, எதுக்கும் ஒரு டைம் ஃபோட்டோ
காட்டிடுங்க.வரலட்சுமி ,லட்சுமிமேனன் ,லட்சுமிராய் மாதிரி இருந்துடப்போகுது

==============

17 பொண்ணு ஒல்லியா இருக்கும்னீங்க?குண்டா இருக்கு.?

இவ்ளோவ் பக்கத்துல நின்னு பார்க்கக்கூடாது.2 கிமீ லாங்க் ஷாட் ல பார்த்தா ஒல்லி

=============
18 லிமிடட் மீல்ஸ் =50 ரூபா.அன்லிமிடெட் =70 ரூபா

ஓஹோ.அன் லிமிடெட் மீல்ஸ் பார்சல் கட்டுங்க.ஆனா அன்லிமிட்டெட்க்கு அளவு எவ்ளோவ்? காட்டுங்க


============

19 டியர், நீங்க  என் கிட்டே சேட்டிங் பண்ண  வராததால  காலைல டிஃபன் எதுவும் சாப்பிடலை

ஓஹோ, வெஜ்டபிள் ஃபிரைடு ரைஸ்  சாப்ட்டியா?


===================


20  மிஸ்! உங்க மேரேஜ் எப்போ?

 அவ்வ், அதுக்கு இன்னும் பல வருசம் இருக்கு

 ஹலோ, 60ம் கல்யாணம் எப்போ?ன்னு கேட்கலை.முதல் கல்யாணம் எப்போ?


=========================