Sunday, January 24, 2016

விஜய் ரசிகை VS அஜித் ரசிகர் - ஒரு பழி வாங்கல் படலம்

1  டியர்.உங்க மேல நான் வெச்சிருக்கற காதல் தானே பெருசு?
இல்ல.என் காதல் தான் பெருசு.நீ என்னை மட்டும் தானே லவ் பண்றே? நான் உன்னையும் , உன் தங்கையையும் லவ்வறேன்.1 பெருசா?2 பெருசா?

=============

2 டாக்டர்.சிவப்புக்கலர் டூத்பேஸ்ட்ல பல் துலக்கும்போது ரத்தம் வருதோ ன்னு பயமா இருக்கு.
மேடம்.இனிமே கண்ணாடி முன்னாடி நின்னு பல் துலக்காதீங்க


=============


3 தலைவரே! நம்ம கட்சில மட்டும் கோஷ்டிப்பூசலே வர்றதில்லையே எப்டி? அதுக்கு கட்சில 10 பேராவது இருக்கனுமில்ல?


==============

4 டியர்!என் போன்ல உன் நேம் -மை லைஃப்னு சேவ் பண்ணிக்கவா😍

தாராளமா பண்ணிக்கோ, ஆனா பதிலுக்கு உன் பேரை ஒயிஃப்னு சேவ் பண்ணுவேன்னு எதிர்பார்க்காதே


==================

5  தலைவரே!5 வருசத்துக்கு ஒரு தடவை ஏன் கூட்டணி யை மாத்திக்கறீங்க?
மாற்றம் முன்னேற்றம்

============


6 டியர்.நான் நான்-வெஜ் சாப்பிடமாட்டேன்.
இது என்ன பிரமாதம்?நான் வெஜ் ,நான்-வெஜ் எதுவுமே சாப்பிடமாட்டேன்


============

7 பிரேமம் படத்தை கே பாக்யராஜ் ரீமேக்கினா அதில் பாட்டு எப்டி வரும்? டீச்சர்.டீச்சர்.ஓ மை மலர் டீச்சர்.உன்னைக்கண்டாலே ஆனந்தமேஏஏஏஏ

=============

8 டேய்.மாடு மாதிரி வளர்ந்திருக்கே.குறும்பு பண்றே. உன்னை அடிக்கக்கூடாதா?

டாடி! மாட்டையே துன்புறுத்தக்கூடாதுனு தடை விதிச்ட்டாங்க.மனுசனை மட்டும் அடிக்கலாமா?

===============

9 ஜல்லிக்கட்டு பிரச்னையைப்பத்தி என்ன நினைக்கறீங்க? தலைவரே? ஜல்லி அடிக்கறாங்க.



=================

10 இண்டர்வ்யூவில்

 உங்க ஐ க்யூ வை செக் பண்ணனும்


 தாராளமா, இதோ இது தான் I ,  இதுதான் Q.  எப்பூடி?

===================

11 கோர்ட் உத்தரவை மீறக்கூடாது.
அம்மா அப்பா வாத்தியார் சொன்னாலே சொல் பேச்சு கேட்க மாட்டான் தமிழன்.ஜட்ஜ் சொல்றதை மட்டும் கேட்டுடப்போறானா?

=============

12 காலையில் கழுதையின் குரல் கேட்டா அதிர்ஷ்டமாமே...நிஜமா டாக்டர்?
அப்டியாவது தமிழன் காலைல வெள்ளனே எந்திரிக்கட்டும்னு சொல்லி இருப்பாங்க

=============

13  இத்தனை நாள் லூசுத்தனமா எழுதி உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டேன்




ச்சே ச்சே, யார் படிச்சாங்க? நீங்களே எழுதி நீங்களே படிச்சுக்க வேண்டியதுதான்


==================





14  மிஸ் இலக்கியாவுக்கு எதுக்கு கிஸ் கொடுத்தே?


யுவர் ஆனர், என்னால இலக்கியத்துக்காகத்தான் எதுவும் செய்ய முடியல, அட்லீஸ்ட் இலக்கியாவுக்காவது.


===================


15 மேனேஜர் சார்.உங்க பேங்க்ல.1 லட்சம் ரூபா லோன் வேணும்.
ஓ.தொழில் முனைவோர்க்கான லோனா? நோ.அபிமான ஹீரோக்கு கட் அவுட் வைக்கனும்


===============

16 மிஸ்! விஜய் ரசிகையான நீங்க ஒரு அஜித் ரசிகரைத்தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு ஒத்தைக்கால்ல நிக்கறீங்களே ஏன்?
பழி வாங்கத்தான்.


==============
\17 ஒரு முழு கரும்பை பல்லால் கடித்து சாப்பிட முடியுமா?
தேவையில்ல.கவர்மென்ட்டே.2,துண்டு தானே குடுத்திருக்கு?


=============

18 தலைவரே! நீதித்துறைக்கே வாழ்க்கை கொடுத்தது நாம தான் -னு எப்படி சொல்றீங்க?



இன்று வரை 219 அவதூறு வழக்குகள் கோர்ட்ல தொடுத்திருக்கோம், ரெகார்டு


==================

19  மிஸ்டர்! எனக்கு  வாழ்க்கை கொடுப்பீங்களா?


அடடா, அது ரொம்ப பழைய படம் ஆச்சே?லேட்டஸ்ட் பட டிவிடி தரட்டா?

====================

20   டியர்!நீ பக்கத்து வீட்டு பெண் லுக் தான்

 நிஜமாவா? அவ்ளோவ் அழகா?

 ஆமா , லாங்க் ஷாட்ல , பக்கத்துல வந்து பார்க்க முடியாது, பயமா இருக்கும்


=========================

அன்பே ஆயிஷா! உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா?

1  நா ட்விட்டர் /FB / வாட்சப் விட்டு போறேன் 
எனக்கு பொறுப்பு வந்துடுச்சு


 ஒரு பருப்பு-க்கு
பொறுப்பு வந்துடுச்சே அடடே!


==================

பெண்களைப்பற்றித்தவறாகப்பேசுபவர்கள் நம் வீட்டிலும் பெண்கள் உண்டு என்பதை மனதில் கொண்டு பேசினால் நலம்


================


ரஜினி முருகன் கெத்து  தாரை தப்பட்டையுடன் கதகளி ஆடி பொங்கலைக்கொண்டாடுவோம்- சினிப்ரியன் டைரியிலிருந்து..


==================


4   காதலியுடனான போரில் வெற்றி பெற சண்டையில் விட்டுக்கொடுக்காதே! காதலியை விடாதே! இறுக்க கட்டிக்கொள்!


========================



உண்மையான போகி என்பது நம்மிடையே உள்ள சோம்பலை எரிப்பதே!அதிகாலையில் தினம் துயில் எழுவதே!சுறுசுறுப்பு உடை தரிப்பதே!




=================




6  வாழ்க்கை எனும் கால்பந்தாட்டத்தில் கிடைக்கும் அரிய வாய்ப்பான பெனால்டி கோல் சான்ஸ் என்பது அதிகாலையில் துயில் எழுவது




===============




மாடர்ன் வோர்ல்டில் மேரேஜ் ஹாலில்



 மாப்பிளை இவர் தான், ஆனா இவர் தாலி கட்டி இருக்கும் பொண்ணு என்னுது, என் ஆளு

================

கோலம் போடும் பெண்களை கோலப்போட்டி நடத்தறேன் டி எம் வாங்கன்னு நைசா கூப்பிடறான் பார்த்தீங்களா? அங்கே தான் நிக்கறான் நெட் தமிழன்


===============



ரஜினி முருகன் பொட்டி வர்ல.கேரளாவில். அடுத்த ரஜினி ஆவார்னு பார்த்தா அடுத்த விஜய் ஆகிட்டாரே



===========



10 கேரள கதகளி போஸ்டர்களில் விஷால் ,த ரியல் ஆக்சன் ஹீரோன்னு விளம்பரம்.அப்போ மத்தவங்க எல்லாம் டூப்ளிகெட்டா?



============




11 மனதாரக்காதலித்த துணை நமக்குத்துணைவி ஆகாவிட்டால் கூடத்தாங்கிக்கொள்ளலாம்..காதலியின் திருமணத்தில் பார்வையாளராய் இருப்பதுதான் கொடுமை



===============



12 ரஜினி ,விஜய் வரிசையில் குடும்பத்துடன் தியேட்டருக்கு வர வைக்கும் ஹீரோ பட்டியலில் சிவகார்த்திகேயன் மிக வேகமான முன்னேற்றம்



==========



13 குடும்பத்தோட கோயில் போய் பொங்கல் கொண்டாடுனது அந்தக்காலம்.டிவி ்பாத்துக்கிட்டே நெட் ல கமெண்ட்.போடுவது இந்தக்காலம்



==============

14 பொங்கல் அன்னைக்கு ஊரே வேட்டி சட்டைல இருக்கும்போது கோட் சூட் மாட்டிக்கிட்டு கெத்து காட்டுவார் டிவி மாடர்ன் தமிழன்


===============

15 கீதாச்சாரம் படிச்சிருக்கியா?
இல்லை.
மகாபாரதம் ,ராமாயணம் ?
நோ. என்னதான் செஞ்சே?
புதிய கீதை 27 டைம் பார்த்தேன் சார்

============


16 படம் சரி இல்லைன்னா வீட்ல தனி ரூம்ல உக்காந்து அழுவேன்.
ஏன் ?ஹால்ல குடும்பத்தோட உக்காந்து அழலாமே?

=============

17 வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிசமும் சுவராஸ்யமா இருக்கனும்னா மனசுக்குப்பிடிச்ச துணை ,வேலை அமையனும்

===============


18 அன்பே! ட்விட்டர் வந்த முதல் நாள் ல இருந்து ட்விட்டரை விட்டுப்போறேன், போறேன்னு  சொல்கிறாய்! மத்தவங்க தான் போறாங்க,நீ இங்கனதான் இருக்க


==================

19 அன்பே ஆயிஷா!
உன் வீடுதான் எனக்கு ஆஃபீசா?


==================


20 ஆஃபீஸ்ல ஆம்பளைங்க எல்லாம் சாப்ட்டதும் டிஃபன் பாக்சை கழுவுவதில் கவுரவம் பார்க்க மாட்டாங்க , பொண்ணுங்க  4 நாள் கழிச்சு வீட்ல போய் தான் எல்லாம்


==================



Saturday, January 23, 2016

மனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்.. எப்படின்னா

காதலியின் விழி ஈர்ப்பு விசை ஆன் லைனில் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசை ஆஃப் லைனில் இருக்கும் # நான் போகிறேன் மேலே மேலே



=================



விடியல் காலையில் தினம் எழ பழகிக்கொண்டால் வாழ்வில் விடிவு காலம் வெகு சீக்கிரம்



=============



3 சான்றோர் சொல்

ஆன்றோர் சொல் கேளும் முன்னர் நம் பெற்றோர் சொல் கேட்டு நடந்தால் வாழ்வில் எல்லா நலனும் கிட்டும்

=============

4 நடைப்பயிற்சி

மூச்சுப்பயிற்சி

பயிற்சிகளில் எல்லாம் தலை



============

5 எல்லா நதிகளுக்கும் பெண்்களின் பெயர் வைத்ததால்தான் எந்த நதியையும் இணைக்க முடியவில்லை

=============

6 கீழ்ப்படிந்து நடத்தல் ,பணிவுடன் இருத்தல் இவற்றை நம் பெற்றோரிடம் இருந்து துவங்குவதே வாழ்வு துலங்குவதற்கு வழி!


==============

7 FB ல ஒரு பொண்ணு

என் கை பிடித்து...

வழி நடத்து..💕💕"னு ஸ்டேட்டஸ்.போட்டதுக்கு 976 பேர் வாங்க வழி நடத்தறேன்னு கூப்பிடறாங்க



============


8 டிஎம் ல பேசற ஆம்பளைங்க என் பேரைத்தான் முதல்ல கேட்கறாங்க.


அது ஒரு ஆரம்பம் தான். அதுக்கப்புறமா PHநெம்பர் அட்ரஸ் வயசு கேட்டு தெறி க்க விடுவாங்க

===============


9 குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
ஈரோடு வஉசி பார்க் கில் பிகர்கள் இல்லை


==============

10 இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தை ரோஜா விலிருந்து ஆக்ரமித்து சர்வதேச மார்க்கெட் பிடித்த ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து

==============


11 கடவுள் கருணைல நல்லாருகேன் னு சொன்னா சாதா தமிழன்.

கடவுளின் கருணை மலரால் நான் வாசமுற்றேன் னா அது நெட் தமிழன்"


==========


12 டபுள் ் ஹீரா படம் பார்த்திருக்கேன்.

டபுள் ் வில்லன் படம் பார்த்ததே இல்லை.

சத்யராஜ் ன் வில்லாதி வில்லன் பாருங்க.3 ரோல்.2 வில்லன் 1 ஹீரோ"
அஜித்-ன் வரலாறு


==============


13 ஆர்ட்டில் லேக் ல வர்ற மாதிரி செந்நிற.அரோரா வை நம்ம நாட்ல பார்க்க முடியாதா?


ஏன் முடியாது? மலைக்கா அரோரா பிகரு சிவப்பு தானே?

===============


14 மனைவி என்பவள் பூரிக்கு சமமானவள்..

திருமணம் எனும் எண்ணெய் பட்டதும் உப்பி விடுகிறாள்

=============

15 ப்ரியத்துடன் நீட்டும்

பூங்கொத்திலும்
முட்கள் இருக்கா?னு ஏன் பார்க்கறீங்க?

கடிகாரம்,பூ 2 ம்.வாங்கும்போது முள் இருக்கா?னு செக் பண்ணனும்


================

16 பொண்ணுங்க வீட்டு வாசல்ல கோலம் போடறாங்களோ இல்லையோ FB ல டெய்லி கோல.ஸ்டெட்டஸ் போடறாங்க #,மார்கழித்திங்கள் அல்லவா?


==============

17 ஃபேஸ்புக்ல ஒரு ஆண்ட்டி குட்ஈவ்னிங்  சொல்லுது, ஒரு நெட் தமிழன் “ கவிதை பிரமாதம்”கறான், டேய் , படிச்சுப்பார்த்துட்டு கமெண்ட் போடுங்கடா;-)

=============


18 டி எம்- னா என்ன?ன்னு ஒரு  பொண்ணு சந்தேகம் கேட்டுச்சு, இதுதான் சாக்குன்னு 108 கவிதையை டி எம் ல அனுப்பிட்டேன் # யாரு கிட்டே


==================


19  இங்கிலீஸ்காரன் எதுக்கு நம்மள பாலோ பண்றான்?னு குழம்பாதீங்க பெண்களே! உங்களால் பிளாக் செய்யப்பட்ட  ஒரு தமிழன்தான் கெட்டப் சேஞ்ச்ல வந்திருப்பான்


====================

20 
கருத்துக்கணிப்பு என்பது மக்கள் மனதை சலவை செய்ய அரசியல்வாதி கண்டுபிடித்த குறுக்கு வழி - இது என் கருத்து (கணிப்பு)


===================

KYA KOOL HAIN HUM- 3 (HINDI) - சினிமா விமர்சனம்



ஹீரோ ஒரு தொழில் அதிபரோட பையன். ஒரு ஆஃபீஸ் மீட்டிங்க் ல லேப்டாப்ல ஒரு பிராஜக்ட் விளக்கும்போது பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் கூடி இருக்கும்போது தவறுதலா அவர் தன் பி ஏ கூட இருக்கும் சில ஃபோட்டோஸ் ஒளிபரப்பாகிடுது. அப்பா செம கடுப்பாகி ஜெ கார் பார்ட்டிநாஞ்சில் சம்பத்தை துரத்துன மாதிரி கெட்டவுட் சொல்லிடறார்.

ஹீரோ தன் ஃபிரண்ட் கூட போய் ஜாயிண்ட் பண்ணிக்கறார். ஃபிரண்ட் சன்னி லியோன் டைப் போர்ன் ஸ்டார் நடிகைங்க 2 பேரை வெச்சு ஹிட் ஆன ஹிந்திப்படங்களை கலாய்க்கும் லோ கிளாஸ் காமெடிப்படம் எடுப்பவர்.


ஹீரோயினை ஒரு இடத்துல ஹீரோ மீட் பண்றார். பார்த்ததும் லவ். ஹீரோயின் தன் அப்பாவைக்கூட்டிட்டு ஹீரோ விட்டுக்கு மாப்ளை நிச்சயம் பண்ண வரனும்கறார். இப்போ இருக்கும் சிச்சுவேஷன்ல அப்பா கிட்டே மேரேஜ் சம்பந்தமா பேச முடியாது. அதனால கிரேசி மோகன் , எஸ் வி சேகர் டிராமாக்களில் வருவது போல் ஆள் மாறாட்ட காமெடி டிராமா செட் பண்றார்.

அதாவது ஹீரோவோட ஃபிரண்டை அப்பாவாகவும் , அந்த பிட்டுப்பட நடிகைங்க 2 பேரை ஹீரோவோட அக்கா, தங்கையாவும் நடிக்க வைக்க ரெடி பண்றார்

முதல்ல ஹீரோவோட அப்பாவா நடிக்க மறுத்த வர் பின் திடீர்னு எண்ட்ரி ஆகறார். ஹீரோ ரெடி பண்ணிய இன்னொரு டிராமா அப்பா , ஹீரோவின் ஃபிரண்ட் 2 பேரும் அப்பா கேர்கடர்ல வந்துடறாங்க, போதாததுக்கு உண்மையான அப்பாவும் ஆஜர் ஆகிடறார். 3 அப்பாக்களையும் ஹீரோ அந்த டிராமாவில் எப்படி சமாளிச்சார் என்பதே இந்தக்காமெடிப்படத்தின் மிச்ச மீதிதிரைக்கதை


ஹீரோவா துஸ்ஸார் . நல்ல நடிப்பு . சிவப்பு நிறத்தைப்பார்த்தா இவர் கண்கள் நாலா புறமும் சுழலும் என்ற நாட்டில் ( KNOT) ஜிம் கேரி யின் பாணியில் இவர் செய்யும் சேஷ்டைகள் ஓக்கே ரகம்.காதலியைக்கவர ஏதோ செய்யப்போய் எதுவாகவோ எசகுபிசகா ஆகும் காமெடிக்காட்சிகளில் பாடி லேங்குவேஜ் பக்கா


ஹீரோயினுக்கு பெரிசா வேலை இல்லை, பெருசா சொல்லிக்கும்படி எதுவும் இல்லை


போர்ன் ஸ்டாரா வரும் அந்த எக்ஸ்ட்ரா நடிகைகள் 2 பேரும் களை கட்டும் காமெடி பண்றாங்க

பின் பாதி திரைக்கதை பூரா கிட்டத்தட்ட கிரேசி மோகன் டிராமா தான் .

போஸ்டர்களில் ஒட்டி இருந்த அளவு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் பெருசா ஏதும் இல்லை , பெண்களும் பார்க்கும் தரத்தில் தான் இருக்கு



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

மேடம்.டி பி ன்னா என்ன?


டர்ட்டி பிக்சர் ?, # KYA KOOL HAI HUM 3


2 மேடம்.உங்களுக்கு எத்தனை லவ்வர்ஸ் இருக்காங்க?


தெரில.50 க்கு மேல எனக்கு எண்ண வராது. # KYA KOOL HAI HUM 3




3 தூங்கும்போது கூட அழகான பொண்ணுங்க இருக்கும் இடத்துல துங்கனும்னு நினைக்கறவங்க தான் ஆண்கள்  



4  மேகி , பீப் 2க்கும்  தடை பண்ணிட்டாங்க 



5  அந்தப்பொண்ணு ஏன் சாதா விஷயத்துக்கு எல்லாம் ம்ம்ம் ஹாஅ ஏய்னு முணகுது?

 கில்மா கேரக்டர்ல நடிச்சு பாத்திரமாவே மாறிடுச்சு



6  முதல்ல ஐஸ்க்ரீமை சாப்பிடு , அப்புறமா அவளை சாப்பிடு




7  என்  டைமண்ட்  கிஃப்ட் எப்டி?


 ரொம்ப சிறுசா இருக்கே?

 ஏன் ? சிறுசுன்னா பிடிக்காதா?


8  கதைப்படி நான்  உனக்கு சின்ன தம்பி

 என்னது? சின்னத்தம்பியா?

 ஐ மீன் ஸ்மால் பிரதர்


9  என்  லைஃப் ல இத்தனை டிரஸ் நான் போட்டதே இல்லை


10    சாப்பிடுவதற்கு முன்  எல்லாரும் கை  தான் கழுவுவாங்க , அவர் ஏன்  காலைக்கழுவறார் 

 அவர்  குடும்பத்துல எல்லாத்தையும் கழுவுவாங்களாம்




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

இந்தியாவின் முதல் அடல்ட்ஸ் ஒன்லி முழு நீள காமெடிப்படம் என்ற விளம்பரத்துடன் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது KYA KOOL HAIN HUM 3 (HINDI)







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஃபிளைட்ல லேடீசுக்கு தலையணை கொடுத்ததும் அவங்க  தலைக்கு வெச்சு சாய்ஞ்சு படுக்க  ஹீரோ  தலையணையை  தன் மடியில் வைத்து  மறைக்கும்  சீன்



2    லேப்டாப் பார்த்துட்டே   HMT  பண்ணும்போது  பாட்டி வரும் சீன்



3  ஹீரோயின்  ஓப்பனிங்  சின்ல  ஹீரோ பேண்டில்   எலி  புகுந்து  விட அதை எடுக்க  ஹீரோ பேண்ட்டுக்குள்  கை விடும் சீனை ஹீரோயின்  தப்பா நினைக்கும் அந்த  10  நிமிச காமெடி டிராக்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


  எல்லாமே  மொக்கை  சீன்கள்  தான் , இதுல  கேட்டு ஆகப்போறதென்னா/





சி  பி  கமெண்ட் - KYA KOOL HAIN HUM -3 (hindi)ஸி சென்ட்டர் ரசிகர்களுக்கான "ஏ" கிளாஸ் காமெடி மெலொ டிராமா.கிரேசிமோகன் டிராமா டைப் ஆள்மாறாட்ட காமெடி -2.5/ 5





திருவனந்த புரம் ஏரிஸ் காம்ப்ளெக்ஸில் பார்த்தேன்


மூன்றாம் உலகப் போர் (2016) - சினிமா விமர்சனம்

நடிகர் : சுனில் குமார்
நடிகை :அகிலா கிஷோர்
இயக்குனர் :சுகன் கார்த்தி
இசை :வேத் சங்கர்
ஓளிப்பதிவு :ஷெரிப்
இந்திய ராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருக்கும் சுனில்குமார், விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருக்கும்போது, அவரது பெற்றோர்கள் நாயகி அகிலா கிஷோரை அவருக்கு திருமணம் செய்துவைக்கின்றனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மனைவியை விட்டு பிரிந்து ராணுவத்துக்கு சென்றுவிடுகிறார் சுனில்குமார். 

அந்த நேரத்தில் சீன ராணுவத் தளபதியான வில்சன், இந்தியாவில் நாசவேலைகளை ஏற்படுத்தி அமைதியை குலைப்பதற்காக தனது மகனுடன் 100 வீரர்களை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் கண்காணிப்பதற்காக ஒவ்வொருவர் உடம்பிலும் கம்யூட்டர் சிப் வைத்து அனுப்புகின்றனர். 

ஆனால், இந்தியாவுக்குள் நுழைந்த 100 வீரர்களும் திடீரென தொடர்புகொள்ள முடியாமல் காணாமல் போகிறார்கள். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது சீனா தளபதிகளுக்கு மர்மமாகவே இருக்கிறது. 

இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் மேஜர் சுனில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு இதுபற்றி தெரிந்திருக்கக்கூடம் என்று நினைத்து அவர்களை சீன ராணுவத்தினர் கடத்தி கொண்டுபோய் சிறை வைக்கின்றனர். 

அப்போது சுனில்குமாரை மட்டும் தங்களது கஸ்டடியில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை கொன்றுவிடுகிறார்கள். சுனில்குமாரிடம் 100 வீரர்கள் பற்றிய விவரங்களை கேட்டு அவரை பலவிதமாக டார்ச்சர் செய்து விசாரிக்கிறார்கள். 

இறுதியில், அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரம் சுனில் குமாருக்கு தெரிந்ததா? அந்த 100 வீரர்கள் என்ன ஆனார்கள்? சீன ராணுவத்தினரிடம் இருந்து சுனில்குமார் எப்படி தப்பித்தார்? என்பதே மீதிக்கதை. 

நாயகன் சுனில்குமார் இந்திய ராணுவ மேஜருக்குண்டான மிடுக்குடனும், தைரியத்துடனும் அழகாக நடித்திருக்கிறார். படத்தில் இவருக்கு ஜோடி இருந்தாலும், அவருடனான காதல் காட்சிகள் மிகவும் குறைவு. போர் சம்பந்தப்பட்ட படம் என்பதால், பெரும்பாலும் துப்பாக்கி கையுமாகவே அலைந்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ரொம்பவும் தெளிவு இல்லாமலே நடித்திருக்கிறார். 

அகிலா கிஷோர் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சீனா தளபதியாக வரும் வில்சன் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். படத்தில் இவர் பேசும் வசனங்கள் இந்தியனாக நம்மையெல்லாம் சிந்திக்க வைக்கிறது. இவருக்கும் ஹீரோவுக்கும் உண்டான காட்சிகளே படத்தில் பிரதானமாக இருப்பதால் மற்ற கதாபாத்திரங்கள் யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 

2025-ல் இந்தியாவுக்கும்-சீனாவுக்கும் இடையே உலகப்போர் நடப்பதாக இயக்குனர் சுகன் கார்த்தி இப்படத்தை படமாக்கியிருக்கிறார். ஆனால், 2025-ம் ஆண்டின் வளர்ந்த தொழில்நுட்பம் எதுவும் நம் கண்ணுக்கு தெரியவில்லை. மேலும், கிராபிக்ஸில் வரும் போர் காட்சிகள் எல்லாம் வீடியோ கேமை பார்ப்பதுபோன்ற உணர்வை கொடுத்திருக்கிறது. 

படத்திற்கு பெரிய பலம் வசனங்கள்தான். நாயகனாகட்டும், வில்லனாகட்டும் இருவரும் பேசும் வசனங்கள் எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது. வேத் சங்கரின் இசை காதுகளுக்கு இரைச்சலாக விழுந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். தேவாவின் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்தான். 

மொத்தத்தில் ‘மூன்றாம் உலகப் போர்’ வெறும் கற்பனைதான்.

நன்றி - மாலை மலர்