Thursday, January 21, 2016

பா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத பெண் ட்வீட்டர் யார்? ஒரு அலசல்

எம் சசிக்குமார் படத்தில் விஜய் நடித்தால் டைட்டில் சாங்


புலியும் புலிக்குட்டியும் ஒண்ணா சேர்ந்தா மாஸ்டா
எவனும் இங்கே எதிர்த்து வந்தா தூசுடா


===============

2 இயக்குநர் ஆர் கே செல்வமணிக்குப்பிடிக்காத ட்வீட்டர் யார்?


ரோஜா ப்பூ தையல்காரன்



===========

3 ஒடி விளையாடு பாப்பா னு பாரதியார் அப்போ சொன்னாரு.இப்போ ட்விட்டர்ல இருந்தா?


ஓடி விளையாடு பன் பேபி
நீ ஓய்ந்திருக்கலாகாது தெறி பேபி


============


4 நான் exam re-correction கு

போடவா???
வேணாமா???"
வேணாம்.மிஸ்.வாங்குன 30 மார்க்கும் 25 ஆகிடும்


==============

5 மது விலக்கு பற்றி உண்மையான அக்கறை உள்ள ஒரே கட்சி தமிழகத்தில் பாமக மட்டுமே.

============

6 ஜல்லிக்கட்டில் காளைய அடக்கறவங்க புலிய அடக்குங்களேன்.


மேடம்.புலிக்கு கொம்பு இல்லை .உங்க கிட்டே பேச தெம்பு இல்லை.தமிழ் நாடு பூரா தேடியும் சிம்பு இல்ல



==============


7 டியர்!என்னிடம்  நீங்கள் கோபம் கொண்டால் எங்கு நான் போவது?

மாடிலதானே உங்க அம்மா வீடு?போய்க்கோ போய்க்கோ


==================


8  உங்க  சொந்த சம்சாரம் கோவிச்ட்டு குப்புறக்கா படுத்திருக்கா?எழுப்பி விட ஒரு எளிய வழி. வாங்க அத்தை  எப்போ வந்தீங்க? என வாசல் பார்த்து சொல்க


==================


9  அன்பே! உன்னிடமி௫ந்து மெசேஜ் வர தாமதமானால்  உன் சார்பாக  செல்லில் டைப் அடித்துத்தரும் உன் தங்கைக்கு உடம்பு சரி இல்லை போல் என நினைப்பேன்


====================


10 என் ஆட்சியில் என் ஆணைப்படி  சபரிமலை யில் பெண்கள் அனுமதின்னு  அறிக்கை யாரும் விட்றாதீங்க, கோர்ட் அவமதிப்பு கேஸ் போட்டுடுவாங்க


==================


11 எப்போதும் வாக்கு தவறாதீர்!

தேர்தலில் வாக்கு அளிக்க மறவாதீர்!
அதிகாலையில் தினசரி WALK போகாமல் இராதீர்!

=========

12 டாக்டர்! காலைலயும் தூக்கம் வருது.. மதியமும் தூக்கம் வருது.. இரவும் சீக்கிரம் தூங்கறேன்.


ஏம்மா பூங்கா வனம்.இப்டி தூங்காதே தினம்.


=============

13 எல்லா டெய்லர்களுக்கும் எல்லா நாளும் "தைத்திரு" நாளே!


=============

14 திடீர் என கலா உங்கள் எதிரே வந்தால்


அடடே! நீங்"கலா!?" என ஆச்சரியப்படுங்கள்


====================

15 ஃபிகரோட ஃபோன் நெம்பரும் , அட்ரசும் பிறர் தர வாரா. ஃபிகர்ட்டயே கேட்டு வாங்குனாத்தான் உண்டு.100 கேர்ள் ஃபிரண்ட்ஸ் வெச்சிருந்தாலும் தரமாட்டானுக


=================

16 நடப்பன, ஊர்வன , பறப்பன எல்லாத்தையும் கட்டுக்கட்டும் கட்டழகி இன்னிலருந்து வெஜிடேரியனா மாறுவோம்னா கோயில் அருகே குடி போய் இருக்குனு அர்த்தம்


==================


17  பூ வைக்க தெரில னு எந்தப்பொண்ணையும் திட்டாதீர்! இப்டித்தான் வைக்கனும்னு வெச்சு விடுங்க!ஒரே டிக்கெட்ல 2 சினிமா


==================


18 உங்க சொந்த ஊர்ப்பெருமையைப்பேச சொந்த ஊரில்தான் குடி இருக்கனும்னு அவசியம் இல்லை.எந்த ஊரில் இருந்தாலும் சொந்த ஊர்ப்பெருமை பேசலாம்


===============

19 பா ம க தொண்டர்களுக்குப்பிடிக்காத ட்வீட்டர் மது ப்ரியா ":


==============

20 திமுக,அதிமுக 2 கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி வைத்து இப்போ ட்ராமா போடுவதால் ட்ராமாதாஸ் DRRAMDAS


=================

Wednesday, January 20, 2016

கல்யாணம் ஆன ஆம்பளைகள் யுவர் அட்டென்சன் ப்ளீஸ்

சார்.உங்க எழுத்து சூப்பர்.

துளிகூட திமிர் இல்லை எழுத்துல...
_
கல்யாணம் ஆன ஆம்பளைக்கு திமிர் எப்டிங்க இருக்கும்?அடங்கிக்கிடப்பானில்ல?



==========

2 டாக்டர்!டிபி ரொம்ப மோசமா இருக்கா? எல்லா ரிப்போர்ட்சையும் நல்லா செக் பண்ணீட்டீங்களா?


அய்யோ ராமா, ஃபேஸ்புக்ல  உங்க ப்ரொஃபைல் டிபி யைச்சொன்னேன்


===================


என் சம்சாரம் அசைவம் தான்.ஆனா டெய்லி என்னை திட்டி அர்ச்சனை பண்ணுவா.


அதனால என்ன?
ஆகமவிதியின்படி பரிபூர்ண சைவர்தானே அர்ச்சனை செய்யனும்?

=============

4 மாப்ளை.செய்யாத குற்றத்திற்கு தண்டனை அனுபவிச்சதா என் பொண்ணு சொல்றா?


மாமா. அவ சமையல் செய்யல.என் கையால சமைச்சுப்போட்டேன்


=============

5 தலைவரே! ஃபேஸ்புக்ல , ட்விட்டர்ல 11,300 பேர்.உங்களை பாலோ பண்ணியும் ஒருத்தரைக்கூட நீங்க பாலோபேக் பண்ணலையே?



அதுல என் ஜாதிக்காரங்க யாரு?ன்னு பார்த்து பாலோ பண்ணனும்.அதுக்கு டைம் ஆகும்


====================


6 டியர்.என் கூட ஹோட்டல்ல சாப்பிட வரும்போது மட்டும் எச்சில் கையோடயே சுத்தறியே ஏன்?


கை கழுவிட்டேன் னு ஊரெல்லாம் அபாண்டமா பழி சுமத்துவ



===========

7 ஜல்லிக்கட்டுல காளைய அடக்கறவங்க புலிய அடக்குங்களேன்.


மேடம்.புலிக்கு கொம்பு இல்லை .உங்க கிட்டே பேச தெம்பு இல்லை.தமிழ் நாடு பூரா தேடியும் சிம்பு இல்ல

==============

8 சார்.நீங்க பத்திரிக்கைகள் ல நிறைய எழுதி இருக்கீங்களாமே?


ஆமா.கல்யாணப்பத்திரிக்கைல டூ அட்ரஸ் எழுதி இருக்கேன்



=============

9 ஜாதகப்படி சனீஸ்வரன் உங்க சம்சாரத்தை 4 வருசம் கொடுமைப்படுத்துவான்.

ஓஹோ.இதுக்கு்பரிகாரமா சனீஸ்வரனோட சம்சாரத்தை நான் கொடுமைப்படுத்தனுமா?

============


10 ஏழரை நாட்டுச்சனி  நாளைல இருந்து உங்க சம்சாரத்தை ஆட்டுவிக்கப்போகுது

 அப்டியா? ஜோசியரே! எதுக்கும் சனீஸ்வரரை ஜாக்ரதையா இருக்கச்சொல்லுங்க பாவம்


==================


11 டாக்டர். பலாப்பழத்தை  தேன்ல ஊற வெச்சு சாப்ட்டா  என்னாகும்? 

தேன் வேஸ்ட் ஆகிடும், பலாச்சுளையை மட்டும்  ஊற வெச்சு சாப்ட்டா போதும்


====================


12 மேனேஜர் சார்,வீட்டுக்கு போக இன்னும் 30 min இருக்கு இப்போ தூக்கம் வருது

 காலைல வந்ததில் இருந்தே தூங்கிட்டுதானே இருந்தீங்க மிஸ்?


=================


13 லவ் லெட்டரை எதுக்கு  விகடன் -ன் டைம் பாஸ் புக் ல வெச்சுத்தர்றீங்க?



நாளைக்கு மேரேஜ் பண்ணிக்கச்சொன்னாக்கூட இது ஜஸ்ட் டைம் பாஸ் லவ்னு தப்பலாம்


==================


14 சுப்ரமணியம் சுவாமியை மூன்றால் வகுத்தால் விக்ரம்னு எப்படி சொல்றே?

 ஆறுமுகன் /3 = இரு முகன் ( விக்ரம் புதுப்பட டைட்டில்)


================

15  பக்தா! உன் தவத்தை மெச்சினேன், என்ன வரம் வேண்டும் கேள்! 

 அது அப்பாலிக்கா.இப்போ முதல்ல உன் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்கறேன், FB ல லைக்ஸ் அள்ள


=================


16 சார், உங்க பையன் உங்க பேச்சைக்கேட்பானா?

எங்கே சார்? அவன் பேச்சை அவனே கேட்க மாட்டானாம், விஜய் ரசிகனாம்


===================

17 டியர்!உன்னை இப்ப பார்க்கனும் 
ஒன்னு பேசனும்
உன் ஃபோனுக்கு ரீசார்ஜ் பண்ணி விடனும் அதானே?என்னமோ ரொமாண்டிக்கா பேசற மாதிரி பில்டப் கொடுக்கறே?


=======================


18 என்னங்க இது? உங்க பொண்ணுக்கு தெரியல லட்சுமின்னு பேர் வெச்சிருக்கீங்க?



அட, தைரிய லட்சுமின்னுதான் வெச்சோம், விஜய் ரசிகை தெறி லட்சுமி ஆகிட்டா, அது மருவி அப்டி அகிடுச்சு


===============



19  மாமா, முதல் இரவுக்கு பொண்ணை அனுப்பாம பொண்ணோட செல்ஃபோனை கொடுத்து விட்டிருக்கீங்க?


செல் ரிங்க்டோன் தரும் கிளுகிளுப்பு வேற ஏதும் தராதுன்னியே?


==================
20   கவிதைனா மடக்கி மடக்கி எழுதுறது நினைச்சிட்டுஇருக்காங்க
 வேற எப்படி?
2 , 3   ஃபிகரை மடக்கி அப்புறம் கழட்டி விட்டுட்டு சோகமா எழுதி 4 வதை மடக்கி


======================

AALROOPANGAL - சினிமா விமர்சனம் 38+ ( மலையாளம்)

ஓப்பனிங்  சீன்ல பாலாவின் நான் கடவுள் ரேஞ்சுக்கு  ஒரு பிச்சைக்காரனைக்காட்றாங்க.ஒரு வயசான ஆளு கம்யூனிசம் பேசறாரு.நாட்டில் நடக்கும் தேவை அற்ற வேலை நிறுத்தங்கள் பொது மக்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதிக்குது? என்பது மாதிரி புரட்சிகரமான வசனங்கள் ஒரு பக்கம் ஓடிட்டு இருக்கு.அப்புறம் பார்த்தா அந்த வயசான பிச்சைக்காரன் தான் ஹீரோவாம், எண்டே பகவதி  அம்மே,எண்டே மதுர அம்மே , எண்டே தெறி அம்மே.இதுல அந்த பிச்சைக்காரனுக்கு ஒரு ஃபிளாஸ்பேக். வேற.ஃபிளாஸ்பேக்ல ஒரு கில்மாக்கதை.


இதுவரைக்கும் ஏனோ தானோனு படிச்ட்டு இருந்த நெட் தமிழன் எப்படி நிமிர்ந்து உட்கார்ந்தானோ அதே மாதிரி தியேட்டர்ல ஆடியன்ஸ் வெச்ச கண் வாங்காம திரையைப்பார்க்கறான். இந்த லட்சணத்துல  இதுக்கு லேடீஸ் ஆடியன்ஸ் வேற.


கையேந்திபவன் வெச்சு காலத்தை ஓட்டிட்டு இருக்காரு ஹீரோ ( அந்த பிச்சைக்காரன் தான் )அவருக்கு ஒரு சம்சாரம் , 2 குழந்தைங்க. 2 பேரும்  ஸ்கூலுக்குப்போறவங்க. சம்சாரம்  விட்ல தனியாதான் இருக்கு. ஹீரோ கிட்டே கேட்குது. நானும் உங்க கூட கடைக்கு வந்து கூட மாட உதவி செய்யட்டுமா?ன்னு


அதுக்கு ஹீரோ ஆரம்பத்துல ஒத்துக்கலை. கண்ட நாய் எல்லாம் உன்னை ரசிப்பான். நீ வீட்டோடயே இருங்கறார். ஒரு நாள் எதேச்சையா சம்சாரத்த கடைக்குக்கூட்டிட்டுப்போறாரு. அன்னைக்குன்னு பார்த்து செம சேல்ஸ்.ரோட்டுல 4 கையேந்தி பவன் இருந்தா எதுல  லேடி இருக்கோ அதுல போய் சாப்டற கேடிங்க தானே நாட்ல அதிகம்?




 அன்னைக்கு நல்ல சேல்ஸ்னு அடுத்த நாளும் சம்சாரம் கடைக்கு வருது. அப்போ பார்த்து கடை வேலை நிறுத்தம் ஏதோ காலணாப்பொறாத காரணத்துக்காக ஸ்ட்ரைக். சம்சாரம் முதல்ல ஆட்டோல ஏறிப்போய்டுது. கடையை எடுத்து வெச்ட்டு வர்றதுக்குள் ஹீரோவை கட்சி ஆளுங்க அடிச்சு கடையை நொறுக்கிடறாங்க


 ஹீரோ ஹாஸ்பிடல்ல. சம்பாத்யத்துக்கு வழி இல்லை. ஹீரோவோட ஃபிரண்ட் தான் வீட்டுக்குத்தேவையான சாமானங்கள் எல்லாம் வாங்கிட்டு வர்றாரு. இப்டி  ரெண்டு மூணு வாரம் ஓடிடுது. ஒரு நாள் எதார்த்தமா ஹீரோயின் சாயங்காலம் பாத்ரூம்ல குளிச்ட்டு ( பாத்ரூம்ல குளிக்காம நடு ஹால்லயா குளிப்பாங்கம் வார்த்தை விரயம் எதுக்கு?) ஹாலுக்கு வரும்போது ஹீரோவோட  ஃபிரண்ட் கரெக்டா வர்றாரு


ஹீரோயினுக்கும், வில்லனுக்கும் கசமுசா ஆகிடுது. சரி ஒரு டைம் தெரியாம ஆகிடுச்சுன்னு விட்டிருக்கலாம். என்னமோ தியேட்ட்ர்ல படம் ஓட்ற மாதிரி டெய்லி வில்லன் ஹீரோ வீட்டுக்கே வந்து ஹீரோயின் கூட  பல்லாங்குழி விளையாடிட்டுப்போறாரு


 ஹீரோவுக்கு இது தெரிஞ்சதும் என்ன நடக்குது  என்பதே மிச்ச மீதிக்கதை

 ஹீரோவா, வில்லனா வர்றவங்களைப்பத்தி யார் கவலைப்பட்டா? நாம ஹீரோயினைப்பார்ப்போம்


ஹீரோயின் மாயா விஸ்வநாத்.  செம கட்டைன்னு சொல்ல முடியாட்டாலும்  மீடியம் கட்டைன்னு சொல்லலாம். அந்த  குளியல் சீன் முடிச்ட்டு வெளில வர்ற சீன்ல நல்லா திறமை காட்டி நடிச்சிருக்காப்ல ...

ஹீரோவுக்கு 2 பொண்ணுங்கள்ல ஒரு பொண்ணு  நல்லாருக்கு

மற்றபடி மனசுல யாரும் நிக்கலை, உக்காரலை


இயக்குநர் சரியான தத்தி போல, ஏகப்பட்ட லாஜிக் மிஸ்டேக்ஸ்



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1  போராட்டம் நடத்தறது  எப்பவும் சாதா ஜனங்களுக்காகத்தான், ஆனா அந்த மக்களுக்கே அந்தப்போராட்டம் இடைஞ்சலா இருந்தா என்ன பண்ண? 



ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்ததும் முதல் வேலையா நட்டக்கணக்கு தான் காட்டும்  



3  தமிழன் டூ கேரளன்=எங்க  நாட்டில் எப்போதும் வேலை பாட்டுக்கு நடந்துட்டே இருக்கும், உங்க நாட்டில் அர்த்தால்தான் அனுதினமும் நடக்கு  


உடல்நிலை சரிஇல்லாமல் , கவனிக்கஆளில்லாமல் படுக்கையில் வீழ்ந்து கிடக்கும்போதுதான் மனிதனுக்கு மிதமிஞ்சிய மனோபலம் தேவைப்படுது  


காசு சம்பாதிப்பதுதான் இன்றைய மனிதனின் முக்கியமான சந்தோஷம் 


அம்மிக்கல்லில் அரைச்ச பதார்த்தம் சமையலுக்கு தனி ருசி கூட்டும், அரைச்சது அழகிய பெண் எனில் இன்னும் விசேஷம் 


7  வாழ்வதற்காக நாம் எல்லாரும் பல வேஷங்கள் போட வேண்டியதிருக்கு ,நெருக்கமானவங்க கிட்டேக்கூட 


சமையல் ருசி நல்லாருந்தாப்போதும் , ஹோட்டல், மெஸ் எங்கே இருந்தாலும் ஜனங்க தேடி வருவாங்க 



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  கில்மாப்படம்னு கேவலமா யாரும் சொல்லிடக்குடாதுன்னு கம்யூனிச வசனங்கள் எல்லாம் சேர்த்து இது ஒரு நல்ல படம்கற மாதிரி முலாம் பூசுனது



2  ஹீரோயினை எதார்த்தமா பதார்த்தமா படத்துல யூஸ் பண்ணிகிட்டது




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 பிச்சைக்காரனை நாங்க பார்த்ததே இல்லையா? எதுக்கு க்ளோசப்ல அந்த தாடி மூஞ்சியை 10 நிமிசம் காட்டிட்டே இருக்கீங்க? பரிதாபம்  வர்லை ., லைட்டா வாமிட்டிங்  ஃபீலிங்



2  ஓப்பனிங்ல ஹீரோ ஒரு கடை வாசல்ல நைட் படுத்து இருக்காரு. அடுத்த நாள் காலைல  கடை  ஓனர் வரும்வரை தூங்கிட்டே இருக்காரு. காலைல 8 மணிக்குக்கூடவா ஒருத்தன் எந்திரிக்க மாட்டான்?கடை ஓனர் வந்து  ஹீரோவைத்திட்டுவது , அடிப்பது  இதெல்லாம் அனுதாப  ஓட்டு வாங்கவா?


3  கதைப்படி  ஹீரோயின்  தூரமா ஆனதால  சம்பவம் நடந்த அன்னைக்கு குளிச்ட்டு வருது. அப்போ  வில்லன் வந்ததும் எப்டி சம்பவம் நடக்கும்? அதான் ஹீரோயின் தூரமா இருக்கே?


4 எந்த  சம்சாரமாவது  வீட்ல  ஹால்ல புருசனை வெச்ட்டே    கொல்லைப்பக்கம் கள்ளக்காதலன் கூட  கில்மா பண்ணுமா? இதுல 2 பெண் குழந்தைகள் வேற. திடீர்னு யாராவது வந்துட்டா கேவலம்னு  நினைக்காதா?



5 ஹீரோயின் வில்ல்ன் கூட கில்மாப்பண்றதை ஹீரோ பார்த்துடறாரு. அப்பவே ஏதாவது  முடிவு எடுக்கனும், அதை விட்டுட்டு அடுத்த நாள் கண்ணை மூடிக்கிட்டு தூங்குனா  மாதிரி நடிப்பாராம்,  2வது  டைம் ஹீரோயின் வில்லன் கூட தப்பு பண்றதையும்  வேடிக்கை பார்ப்பாரம். என்ன கேவலமான ஃபேமிலியா இருக்கு ?


6 எந்தப்பொண்ணும்  குழந்தைகளை அம்போன்னு விட்டுட்டு கள்ளக்காதலன் கூட ஓடாது. அப்டீயே ஓடுனாலும் 10 நாள் கழிச்சு வந்து குழந்தையை நான் கூட்டிட்டுப்போறேன்னு ஊர் முன் சத்தம் போடாது. அதுக்குத்தானே  கேவலம்?




சி  பி  கமெண்ட் = AALROOPANGAL - கம்யூனிச போர்வையில் ஒரு கிளுகிளு மலையாளப்படம்,மாயா விஸ்வநாத் ரசிகர்கள் பார்க்கலாம்- ரேட்டிங் = 1.5 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - இந்தப்படத்துக்கு எல்லாம் விகடன் மார்க் போட்டா அவ்ளவ் தான். ஒரு பேச்சுக்கு வெச்சுக்க்கிட்டா வேணா 35



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)  = சுமார்



 ரேட்டிங் = 1.5 / 5




இளைய தளபதி விஜய் + நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் = !!!

பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த எஸ்ஐ சுப்பாக்கியால் சுட்டு தற்கொலை !# கடைசில சிவலோகப்பதவி தான் கிடைச்சுது



============



2 விஜயகாந்த் முடிவு.பா.ஜனதா அணியில் சேர வாய்ப்பு..# திமுக ,அதிமுக காங்கிரஸ் தவிர எதுல சேர்ந்தாலும் கேப்டன் எதிர்காலத்துக்கு நல்லது




=========




3 சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதியை மாற்றியது குழப்பமாக இருக்கிறது-கருணாநிதி... வழக்கில் நாமும் இதே பார்முலாவை பாலோ பண்ணலாமா?வேணாமா?ன்னா



==============




4 ரூ.45 ஆயிரம் கோடி சுருட்டல்: தனியார் நிறுவன தலைவர் உள்பட 4 பேருக்கு சி.பி.ஐ. காவல் # கவனமா பார்த்துக்குங்க.கட்சி ஆரம்பிச்சிடப்போறாரு.



==============



5 துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற சென்னை மாணவருக்குரூ4 லட்சம் ஊக்கத்தொகை-ஜெ # நேரடியா பேங்க் அக்கவுண்ட்ல போடுங்க, அரசியல்வாதிகசுட்டுடப்போறாக




=================



திருமலை நாயக்கரின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்: முதல்வர் ஜெ # இதை முன்னிட்டு திருமலை படத்துக்கு வரிவிலக்கு தருவீங்களா?




==================



7  திமுக தலைமை வாய்ப்பளித்தால் மீண்டும் கொளத்தூரில் போட்டியிடுவேன்-ஸ்டாலின்# சூரியவம்சம் சரத் மாதிரி ஏன் பம்மறீங்க?நேரடியா அப்பாட்ட கேட்கறது?




=================




ஜல்லிக்கட்டு மனிதாபமானமற்ற செயல் -சசிதரூர். கட்ன  சம்சாரத்தை கொலை பண்ணிட்டு பாரம்பர்ய விளையாட்டை கமெண்ட் அடிக்கறாரு





=====================




அம்மா டிரயின் விட பாராளுமன்றத்தில் கோரிக்கை வைத்த அதிமுக MP. # அதுல உட்காரும் சீட்டே கிடையாது, பெட்தான், குப்புறக்கா படுத்துட்டேபோகனும்




==============



10  தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மாவட்டந்தோறும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்; மு.க.ஸ்டாலின் # ஏற்கனவே இருந்த போது ஏன் செய்யலை?



=============


11 கரும்பு விவசாயிகளை தமிழக அரசு வஞ்சித்து வருகிறது; கருணாநிதி# கரும்பு மன்மதன் பாணம்.மன்மதன் னா சிம்பு . சிம்பு ன்னா பீப் பாடல்.அதனாலயோ?


===============

12 வக்கீல்கள் தங்கள் மதிப்பை உயர்த்த வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சி.எஸ்.தாக்குர் கருத்து.#.FEES வேணா உயர்த்துவாக


===============


13 காளைக்கு 2க்கு மேல்... வீரர்களுக்கு 18க்கு மேல் வயது வரம்பு- மதுரை கலெக்டர் உத்தரவு#2 வருச ஜூனியரை 18 வயசு சீனியர் ராகிங் பண்ணலாமா?


===============


14 தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வாய்ப்பு அதிகம்- EVKS # முதல்ல டெபாசிட் கிடைக்குதான்னு பாருங்க

==============

15 தினம்

11மணி நேரம் உழைப்பவர்களுக்கு 67% அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்பு உள்ளது# இதுக்குதான் நாங்க 1 மணி நேரம் கூட வேலையே செய்யறதில்லை



==========


16 இளைய தளபதி விஜய்யை வைத்து விரைவில் ஒரு படத்தை இயக்குவேன் , - நாடோடிகள் புகழ் எம் சசிகுமார் # டைட்டில் ஓடோடிகள்?

==============


17 காங்கிரஸ் தனித்து நின்றால் EVKS இளங்கோவன் கண்டிப்பாக முதல்வர் ஆவார் - குஷ்பூ இளங்கோவனுக்கே ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்.


===============


18 திமுகவுடன் தேமுதிக கைகோர்த்தால் நாம அதிமுக போயிடலாம்-தா பா டூ வைகோ# கார்த்திகாவை அன்னக்கொடியும் கொடி வீரனும்ல பாரதிராஜா புக் பண்ணிட்டா துளசியை மணிரத்னம் கடல்ல புக் பண்ணினது போல்?

=================


19 பொங்கல் படங்களின் ரன்னிங் டைம்.. ரஜினிமுருகன் நீளம் அதிகம்# ஆண் மயிலை எல்லோரும் ரசிக்கறோம்னா அதோட தோகை நீளம்கறதாலதானே?

===========

20 மதுவிலக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம்... கனிமொழி தலைமையில்.. 30ம் தேதி கோவையில்! # திமுக ல தானே இருந்தாங்க.எப்பொ பாமக வந்தாங்க?


==============

Tuesday, January 19, 2016

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா ..........

அன்பே! உன் ஹேண்டில் பக்கத்தில் துக்ளியூண்டு சைசில் ன்னு போட்டிருக்கே?அப்டின்னா நீ சி சென்ட்டர் பிகரா?ஏ சென்ட்டர்னு நினைச்சு ஏமாந்துட்டன்


================



2 தான் என்னமோ செவ்விந்தியர் வம்சாவழி வந்த செவத்த செவலைக்காளை மாதிரி நினைச்சுக்கிட்டு பொண்ணுங்களை போடி கருவாச்சி"னு எள்ளல்.செய்வான் நெட் தமிழன்



==============



3 பாரீன் டூர் போறப்பக்கூட வீட்ல சொல்லிட்டுப்போகாத நெட் தமிழச்சிங்க சாப்பிடப்போறப்பக்கூட டாட்டா ஸி யூ பை பை ஸ்டேட்டஸ் போட்டுட்டுப்போறாக



==============



4 மிஸ்! உங்க மோதிர விரல்ல மட்டும் பூ விழுந்துடுச்சு போல, நகச்சுத்தி வந்துடப்போகுது, டாக்டரைப்பாருங்க


 யோவ், அது நெயில் பாலிஸ் டிசைன்


===============

5  டியர், உந்தன் கண்களில் என்னையே பார்க்கிறேன்


சண்டே இல்லையா? தலைக்கு எண்ணெய் தேய்ச்சுக்குளிக்கும்போது கண்ல தங்கிடுச்சு


===================

6 செஸ்ல ஜெயிச்சுட்டேன்


 சபாஷ் மிஸ்! யார் கூட விளையாண்டீங்க?


கண்டவன் கூட விளையாண்டா அம்மா திட்டுவாங்க. நானே 2 சைடுலயும் மூவ் பண்ணி விளையாண்டேன்


================


விஷால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுது,படம் நல்லாருந்தா கதகளி ஆடிட்டார் டைரக்டர்னும் நல்லா இல்லைன்னா கத காலி ( (KADHA KALI)ன்னும் சொல்வாங்களோ


==================


8  நாம பேசாம அமைதியா இருந்தா ட்விட்டரும்/FB யும் அமைதியாதான் இருக்கு.

 மிஸ்! அப்போ நீங்க கண்ணாடிக்கு முன்னால உக்காந்திருக்கீங்கன்னு அர்த்தம்


===================

பொண்ணுங்க  எல்லாம் அடிக்கடி டிபி, ஹேண்டில் நேம் மாற்றிக்கொள்வதால் பலதரப்பட்டோர்க்கு டி எம் அனுப்புவோர் கவனமாக புதுப்புது கவிதையை அனுப்புக


==================

10  மிஸ்! ஐ லவ் யூ!

 எங்கப்பாவுக்குத்தெரிஞ்சா  உனக்கு டின் கட்டுவாரு

ஓஹோ, உன்னைக்கட்டித்தர மாட்டாரா?


==================


11  ஆராதனாவும் , சிம்ம வாகினியும் க்ளோஸ் ஃபிரண்ட்ஸாம், அதனால ஒரே கவிதையை 2 காபி ஜெராக்ஸ் எடுத்து டிஎம் அனுப்பி மாட்டிக்காதீங்க மக்களே!


==================


12 நெட் தமிழன் எக்சலன்ட் அட்மாஸ்பியர்.னு சிலாகிச்சா அந்த அந்த அட்”மாஸ்””பியர்” டாஸ்மாக் என கொள்க


=====================


13  பரந்த மனப்பான்மை கொண்டோர் பெரும்பாலும் மெத்தப்படித்தோராக இல்லாமல் சாதாரணராக சாமான்யராக நம்முடன் உலா.வருவோரே!


=============



14 அதிகாலையில் துயில் எழுந்த படைப்பாளிகள் எல்லோரும் எழுச்சிக்கலைஞர்களே!சமூக வலையாளர்கள் எல்லோரும் எழுச்சி வலைஞர்களே!




===================



15 பக்கத்து வீட்டு ஆண்ட்டிக்கு வைரஸ் காய்ச்சல் வந்தா அதை  ஆண்ட்டி வைரஸ் காய்ச்சல் -னு சொல்லலாமா?




==================





16 பொண்ணுங்க் கேப்டன் மாதிரி  தூன்னு துப்புனாக்கூட

தூரி தூரி  தும்மக்க தூரி
 தூ மேரி ப்யாரி-ன்னு  பாசிட்டிவ்வா டூயட் பாடி கரெக்ட் பண்ணிடறான்


===============

17 பொண்ணுங்க யாராவது பிளாக் பண்ணா  அதை அவமானமா நினைச்சது அந்தக்காலம், அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப்பெருமையாப்போட்டுக்குவது இந்தக்காலம்


==================


18 டைம்லைன்ல எத்தனை பொண்ணுங்க  ஒளிஞ்சுக்கிட்டு இருக்காங்கன்னு செக் பண்ண குறுக்கு வழி- அழகி எங்கிருந்தாலும் ஒரு அட்டெண்டென்ஸ் போடவும் என்பதே


===============

19 அன்பே! ரோஜாவை வரைஞ்சிடலாம்,  ரோஜாவின் வாசத்தை , ஆர் கே செல்வமணியை வரைய முடியாது


=================


20 திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகப்ரீத்தா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும் னு நெட் தமிழன் இன்னும் ரீமிக்ஸ் பாட்டு பாடலையா?

===============