Skip to content

Sunday, January 03, 2016

மீரா ,புவனா,அப்சரா,கப்சரா-கேப்டன் ரசிகன்

1]தலைவரே!கடவுள் இல்லைன்னு சொன்னீங்க இப்போ மட்டும் கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்றீங்க?


எனக்கு பகுத்தறிவுக்கொள்கையை விட மைனாரிட்டி ஓட்டு முக்கியம்


=============

2]தலைவரே!சிம்புவை அரெஸ்ட் பண்ண ஏன் துடிக்கறீங்க?


என் ஆட்சியில் என் ஆணைப்படி இல்லாமல் சிலம்பரசன் (அரசன்)னு பேர் வெச்சது உறுத்துது


=============

3]அடிமை ,கொத்தடிமை என்ன வித்யாசம்?


ஆளுங்கட்சி எம் எல் ஏ க்கும் எம் பி க்கும் கூடவா உனக்கு வித்யாசம் தெரியல?


==============

4]ஹன்சிகா =இது நம்ம ஆளு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிடுமா?


நயன் தாரா =இருக்கற நிலைமையைப்பார்த்தா நம்ம ஆளு சிம்புவே ரிலீஸ் ஆகறது டவுட்தான்

==============

5]உங்க பேருக்கு முன்னால மேடம் னு போட்டிருக்கீங்களே அது நீங்க படிச்சு வாங்கின பட்டமா மிஸ் பட்டம்மா?


அது மடம்(MADAM),குடி இருக்கும் இடம்


==============

6]நவீன் ஒரு வேஸ்ட் பையன் கறதை சுருக்கமா எப்டி சொல்ல?


ந"வீண்"



==================

7]நான் ஊட்டி போய் இருக்கேன்.ஆனா ஊட்டி வர்க்கி சாப்ட்டதில்லை.ப்ளவர் ஷோ பார்த்ததில்ல.

]
ஓஹோ.குற்றாலம் போனாக்கூட அருவி யைப்பார்த்ததில்லைம்பீங்களா?



===============

8]இன்ஸ்பெக்டர்.இவன் என்னை பாலோ பண்றான்


டேய்!ஏன்?
அவங்களை மட்டுமா பாலோ பண்ணேன்?ஊர்ல இருக்கற எல்லா பொண்ணுங்களையும் தான்


==================

ஜட்ஜ் = சிம்பு குற்றவாளிங்கறதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா?
வக்கீல் = அவர் பட டைட்டில் மன்மதன் ,வாலு ,கெட்டவன்.இதுவே போதுமே யுவர் ஆனர்

===============

10]இன்னைக்கு செஞ்ச மாதிரி சேட்டை நாளைக்கு செய்யக்கூடாது.ஓக்கே?


ஓக்கே மிஸ்! நாளைக்கு புதுசா ஒரு சேட்டை செய்யறேன்



============



11]மிஸ்!,ஜீன்ஸ் பேண்ட்டை கழட்டிட்டு டவுசரோட அஞ்சான் சமந்தா போல் கோயில் வந்திருக்கீங்க?



ஜீன்சுக்கு தடையாம்.செருப்போட அதையும் கழட்டிட்டேன்

==============
12]சார்.காலைலயே ஏன் மொக்க போடறீங்க?


மத்தியானம் மட்டும் மரோசரித்ரா வா படைச்சிடப்போறேன்?எப்போ எழுதுனாலும் இந்த லட்சணம் தான்


=================]\

13]பிடிக்்கலன்னா ஒதுங்கி போங்க தேவை இல்லாத பேச்சு, சண்டை ஏன்"?


மிஸ்! ஒதுங்கிப்போக நான் ஒண்டிப்புலி இல்ல.சண்டிப்புலி.முதல்ல பைட்.பின் சைட்



=================


14]1பொண்ணு பேசுன 10வது நிமிஷம்FOTO
15வது நிமிஷம் PHNO்
30வது நிமிஷம் ப்ளாக்!
20வது நிமிஷம் வாட்சப்
21 டூ29 இடைப்பட்ட நேரத்தில் என்ன செஞ்சீர்?


===============

15]எனக்கு 2 குழந்தைங்க.எல்லோர்க்கும் ஷோபிகா ன்னே பேர் வெச்ட்டேன்.

குழப்பம் வராதா?
நோ.1 மார்னிங் ஷோ பிகா
2 மேட்.னி ஷோ பிகா

===================

16]அன்பே பனி விழும் இரவில் ஒத்தையடிப்பாதையில் உன் கரம் கோர்த்து நடக்கனும்.
டேய்.அப்போக்கூட சும்மா நடந்துட்டுதான் இருப்பியா?ம்ஹூம்.செட் ஆகாது



=======================


17]ஆண்களுக்கு மட்டும் மாதுளைப்பழம் ஏன் ரொம்பப்பிடிக்குது டாக்டர்?
2 காரணம்.1 பேர் லயே மாது இருக்கு.


==================

18[]தாலி கட்ன பின்தான் மாப்ளை அஜித் ரசிகர் பொண்ணு விஜய் ரசிகைனு தெரிஞ்சுது்


முதல் இரவு நடக்குமா?


மாப்ளை நடந்துட்டே இருப்பாரு.பொண்ணு ஆட்டமா ஆடும்


=================


சார். மீரா ,புவனா,அப்சரா,கப்சரா ன்னு 4 பொண்ணுங்க கூடவும் பேச்சு வார்த்தை வெச்சிருக்கீங்க.யாரை மேரேஜ்?



கேப்டன் ரசிகன்=வெயிட் டில் மேரேஜ்




==================


20]மிஸ்!,உங்க டிபி ல மூக்கு சரியாத்தெரியல.

வீட்ல நோஸ்கட் பண்ணிட்டாங்க.

===================

Saturday, January 02, 2016

அழகு குட்டி செல்லம் - சினிமா விமர்சனம்

குழந்தைகளை மையமாகக் கொண்ட இன்னொரு படம், நீயா நானா ஆண்டனி தயாரிப்பில் உருவான படம், அழகு குட்டி செல்லம் பாடல், ட்ரெய்லர் தந்த எதிர்பார்ப்புகள் என்ற இந்த காரணங்களே அழகு குட்டி செல்லம் படத்தைப் பார்க்கத் தூண்டின.



தியேட்டருக்குள் நுழைந்ததும் நிசப்தம் நிலவியது. டைட்டில் கார்டு ஆரம்பித்ததும், தம்பி ராமையாவை ஆசிரமத்துச் சிறுவன் கென் கமென்ட் அடிக்கும்போது தியேட்டர் சிரிப்பில் அதிர்ந்தது.


படம் எப்படி?


ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் இந்த பூமிக்கு புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. ஆனால், அந்த குழந்தை பெரியவர்களின் முடிவால் அடையும் பாதிப்புகளும், அவஸ்தைகளுமே படத்தின் மையக் கரு.



ஆறு குடும்பங்களில் குழந்தையால் ஏற்படும் தடுமாற்றங்கள், இழப்புகள், வலிகள், மாற்றங்கள்தான் படத்தின் கதைக்களம்.


இதை எந்த நெருடலும், உறுத்தலும் இல்லாமல் வலைப்பின்னலாக இருந்தாலும் குழப்பமில்லாமல் அழகாக பார்வையாளர்களுக்குக் கடத்திய விதத்தில் வசீகரிக்கிறார் இயக்குநர் சார்லஸ்.



ஆசிரமத்து சிறுவனாக நடித்திருக்கும் கருணாஸ் மகன் கென் கொடுக்கும் சின்ன சின்ன கவுன்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பலை எழுகிறது. நாடகம் போட திட்டமிடும் கேப்டன் சாணக்யா, அக்கா குழந்தை ஊருக்குப் போய்விட்ட தவிப்பில் குழம்பும் யாழினி, ஜான் விஜய்யிடம் எஸ்கேப் ஆகும் நேஹா பாபு, ''ஊரை விட்டு ஓடிப் போயிடலாம். ஊட்டிக்குப் போய்விடலாம்'' என்று அடிக்கடி சொல்லும் ராஜேஷ் குணசேகர் ஆகியோர் நடிப்பில் பின்னி எடுக்கிறார்கள்.



ஆட்டோ டிரைவராக வரும் கருணாஸ் யதார்த்தமான நடிப்பின் மூலம் கவர்கிறார். ''மூணு பெண் குழந்தைகளுக்கு சோறு போடலையா. நாலாவதும் பெண் குழந்தைன்னா விட்டுருவேனா. அதுவும் என் ரத்தம்தானே'' என மனைவியிடம் வெடித்து கலங்கும்போது தியேட்டரில் அப்ளாஸ் அள்ளிச் செல்கிறார்.


ரித்விகாவின் தவிப்பு, இழப்பு, நடிப்பில் ரசிகர்கள் கலங்கினர். நரேன், தேஜஸ்வினி, வினோதினி, சேத்தன், தம்பி ராமையா, கிரிஷா, மீரா கிருஷ்ணன், அகில், சுரேஷ் ஆகியோர் பொருத்தமான தேர்வு.



விஜய் ஆம்ஸ்ட்ராங் கேமரா குழந்தைகளின் அத்தனை அசைவுகளையும், நெகிழ்ச்சியையும், மகிழ்ச்சியையும் பதிவு செய்துள்ளது. குழந்தைகளைக் கையாண்ட விதத்திலும் விஜய்யின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும் பலம்.



வேத்சங்கர் சுகவனத்தின் இசை படத்தோடு இயல்பாய் பொருந்திப்போகிறது. அழகு குட்டி செல்லம் என்ற ஒற்றைப் பாடலை ஒவ்வொரு குடும்பத்துக்கும் தன் உணர்வுகளால் பிரதிபலிக்கும் வகையில் ஒலிக்க விட்ட விதத்தில் வேத்சங்கர் கவனிக்க வைக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிரவீன் பாஸ்கர் குழந்தையை மறைத்து வைத்தல், மாடிக்கு கொண்டு செல்லுதல் போன்ற இடங்களில் கத்தரி போட்டிருக்கலாம்.



ஆறு கிளைக்கதைகளை நாடகம், போட்டி என்ற இரட்டைப் புள்ளியில் இணைத்த விதம் சுவாரஸ்யம். குழந்தைகளை எந்த மிகைத் தன்மை கொண்ட அதிபுத்திசாலிகளாகக் காட்டாமல், இயல்பாக உலவ விட்ட விதம் ரசிக்க வைக்கிறது. சின்ன சின்ன குறைகள், பிழைகள் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன.



ஆனாலும், குழந்தைகள் குறித்த புரிதலையும், பேரன்பின் அடர்த்தியையும் அனுபவிக்க வைப்பதற்காக இந்த அழகு குட்டி செல்லம் படத்தை கொஞ்சி மகிழலாம்.

நன்றி - த இந்து

3 வருசம் நீங்க 2,வருசம் அவர் சுழற்சி முறை முதல்வர்.டீலா?நோ டீலா?

1]
திமுக கூட்டணியில்

விஜயகாந்த்
இருக்க விரும்புகிறோம்
-கலைஞர்
# 3 வருசம் நீங்க 2,வருசம் அவர் சுழற்சி முறை முதல்வர்.டீலா?நோ டீலா?ன்னா பம்முவாரு

======================

2]
நான் தமிழக மக்களுக்காக கஷ்டப்பட்டு நடித்தேன் -சிம்பு .நயன் தாரா ,ஹன்சிகா வை லவ்வினதெல்லாம் கூட தமிழர்களுக்காகதான்னு சொல்லலை


=======================


3]எம்.பிக்கள் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது!: டெல்லியில்# வேலை செய்யும் நேரம் மட்டும் பாதியாக்குறைச்சிருப்பாகளே?



===============



4]சிம்பு செய்தது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமல்ல - சரத்குமார் # சாணக்யா படத்துல நமீதா வை அலாக்கா தூக்குனமே அதை விடவா?ன்னு நினைச்ட்டார் போல




===============



5]எங்கள் இலக்கு மதுவிலக்கு: சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு குமரி அனந்தன் மதுவிலக்கு பாதயாத்திரை # நீ கலக்கு சித்தப்பு.ராம்தாஸ் பாதை



==============



6]எம்.பி.க்களின் சம்பளத்தை 2 மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவு # உள்ளே உக்காந்து செல் போன் ல பிட்டுப்படம் பார்க்கறதுக்கு எதுக்கு அவ்ளோவ்?



===============



7]ஊழல் வேரோடு அழிக்கப்படும் என்று கூறியவர் மவுனமாக இருக்கிறார்- மோடி மீது ராகுல் காந்தி தாக்கு # வேர் இத்தாலி ல இருக்காம்.அழிக்க லேட் ஆகும்



============



8]ஆபாச பாடல்- சிம்பு–அனிருத்தின் 6 படங்கள் முடங்கின புதுப்படங்களில் இருந்து நீக்கம் # இனி தமிழ் சினிமால சாமியே சரணம் ஐயப்பா பாட்டுதான் வருமா?



===============

இப்போதைக்கு குழந்தை பெறும் எண்ணம் இல்லை’ நடிகை சன்னி லியோன் # முடிவை மறுபரிசீலனை செய்யவும் - சன்னிலியோனின் கணவர்


==============



10]சிம்பு செய்தது தண்டிக்க வேண்டிய குற்றம் அல்ல, மன்னிக்கப்பட வேண்டிய குற்றம்’: சரத்குமார்# நாட்டாமை.தீர்ப்பை மாத்திச்சொல்லுங்க.அம்மாக்கு கோபம்

============

11]ஜல்லிக்கட்டை நடத்த அவசர சட்டம் கொண்டு வர தயக்கம் என்ன? மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி நேசன் பதில் அளிப்பார்

==============

12]உண்மையை கூறுவது குற்றம் என்றால், அக்குற்றத்தில் ஈடுபடுவதை தொடர்வேன் - கீர்த்தி ஆசாத் கீர்த்தி (புகழ்) உலகெங்கும் பரவட்டும்

=================

13]


எந்த நடிகர் கெட்ட வார்த்தை பேசாமல் நடித்திருக்கிறார் ? - ராதிகா கேள்வி #
விசு ,கிஷ்மு ,கிரேசிமோகன் ,முரளி ,அதர்வா இவங்க எல்லாம் இருக்காக



=============



14]மன்மோகன்சிங்கின் கனவை மோடி நிறைவேற்றினார் # ஓஹோ.அப்போ மோடியின் கனவை அடுத்த தேர்தலில் ஜெயிச்சு மன்மோகன் சிங் நிறைவேற்றுவாரா?




==================




15]நவாஸ் ஷெரீப்பின் தாயார் காலை தொட்டு வணங்கிய பிரதமர் மோடி #,அம்மா காலில் விழுந்து வணங்கினார் னு தலைப்புச்செய்தி போடலையா நமது எம்ஜிஆர்?




===========



16]ராமர் கோவில் கட்டும் தேதியை அறிவிக்க வேண்டும்: சிவசேனா வலியுறுத்தல் # பிப்ரவரி 31னு சொல்லிடுங்க.தத்திங்க நம்பிடும்




=============




17]எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் திரிஷா, ஜெனிலியா ஜெயம் ரவி சொல்கிறார் # ரவி 2எழுத்து ஜோடி 2 எழுத்து சபாஷ்




===============



18]நடிகை அசின் திருமணம் ஜனவரி 23ல். சினிமாவை விட்டு விலக முடிவு # அசின் சினி பீல்டுக்கு வாஷ்பேசின் ல கை கழுவினார்னு நியூஸ் வருமா?




================



நவாஸ் ஷெரீப்பின் வரவேற்பு என்னை நெகிழச்செய்தது: பிரதமர் மோடி # ஓப்பனிங் எப்பவும் எல்லாருக்கும் நல்லாதான் இருக்கும்.பினிஷீங் தான் சொதப்பிடுது




===============



20]வெள்ளநிவாரணத்துக்கு திமுக எம்பிக்கள் தலா ரூ.1 கோடி ஒதுக்க கருணாநிதி அறிவுரை=எதிர்க்கட்சி எம்பியே தலா1கோடின்னா ஆளுங்கட்சி?னு செக் வைக்கறாரா?



=====================


பேய்கள் ஜாக்கிரதை - சினிமா விமர்சனம்

ராகவா லாரன்சின் முனி , ஜெயராம்-ன்   நைனா, சூர்யாவின்  மாஸ் , நயன் தாரா வின் மாயா  இந்த 4 படங்களையும் நீங்க பார்க்கலையா? கவலையே படாதீங்க.உங்களுக்கான காக்டெய்ல் மொக்கை காமெடி கோஸ்ட் ஃபிலிம் தான் இந்த பேய்கள் ஜாக்கிரதை . 


தம்பி ராமய்யா , பணக்காரர். ஏகப்பட்ட சொத்து இருந்தும் அவருக்கு பேய்னா பயம் . எப்போப்பாரு பேய் பயத்தால அலறிட்டே இருக்கும் அவரை அவரோட சம்சாரம் விட்டுட்டுப்போய்டுது . ( யார் கூடப்போய்டுதுன்னு கேட்கக்கூடாது ,  இது கில்மாப்படம் இல்லை , காமெடிப்படம், தனியாப்போய்டுது, அவ்ளவ் தான்)


ராமய்யாவோட போட்டி பிஸ்னெஸ்மென்கள்  சிலர் சேர்ந்து அவரது பிஸ்னெசை  முடக்க  பேய் பயத்தை காட்டி டிராமா போட்டுட்டு இருக்காங்க . இது ஒரு டிராக் .


இன்னொரு டிராக் ல ஹீரோ வாழ்க்கைல நினைச்சது எதுவும் நடக்கலை , ஆசைப்பட்ட பொண்ணும்  கிடைக்கலைன்னு தற்கொலை பண்ண பல டைம் முயற்சித்தும் அது பலிக்காம  நடைப்பொணமா வாழ்றார். சாவைப்பத்தின பயமே இல்லாத ஹீரோவை  தன் பாடிகார்டா வெச்சுக்கிட்டா  தான் பேய் பயம் இல்லாம வாழலாம்னு நினைச்சு  தம்பி ராமய்யா ஹீரோவை  தன் கூட வெச்சுக்கறாரு 


 அந்த பங்களா வில் 4 பேய்ங்க உலா வருது. அவங்க ஆசையை நிறைவேத்தி வெச்சாதான் அவங்க கிளம்புவாங்களாம், இல்லைன்னா  டிஎம்கே , ஏடிஎம் கே மாதிரி இங்கனயே டேரா போட்டுடுவாங்களாம். அவங்க ஆசையை  ஹீரோ  நிறைவேத்தி வைக்கறார். 


அப்புறம் பார்த்தா  சின்ன வயசுல ஒரு கார்  விபத்தில் பலி கொடுத்த தன் குடும்பம் தான் அந்த பேய்க்குடும்பம்னு ஹீரோக்கு  தெரிய வருது. அதுக்குப்பின் என்ன நடக்குது ? என்பதுதான் கதை 

 தம்பிராமய்யா தான்  படத்தின்  முதுகெலும்பு . வடிவேலுவின் பாடி லேங்குவேஜை அப்படியே  தேவா ஹாரீஸ்ஜெயராஜ் பண்ணி ( அதாங்க அட்டக்காப்பி ) படத்தின் முன் பாதி முழுக்க மொக்கை காமெடி பண்ணி சி செண்ட்டர் ஆடியன்சை சிரிக்க வைக்கிறார். ஆனா  ஏ , பி செண்ட்டர் ஆடியன்செல்லாம் செம கடுப்பாகிடுவாங்க 

 ஹீரோவா  ஜீவ ரத்னம் . பேய்ப்படத்தில் ஹீரோவா நடிப்பதில் என்ன ஒரு சவுகர்யம்னா எல்லாரும் பேயைத்தான் கவனிப்பாங்க . ஹீரோ வை அதிகம் கவனிக்க மாட்டாங்க . பின் பாதியில்  செண்ட்டிமெண்ட்  சீன்களில் கொஞ்சம் நடிக்கிறார்.


 ஹீரோயினா  ஈஷான்யா மஹேஸ்வரி . அதிக வேலை இல்லை . கிளாமர் இல்லை , அதனால இவரைப்பத்தி  சொல்ல ஒண்ணுமில்ல 


நான் கடவுள் மொட்டை ராஜேந்திரன்  கெஸ்ட் ரோல் . கொஞ்சம் காமெடி பண்றார், ஆனா பத்தாது. இவரும் தம்பி ராமய்யாவும் சேர்ந்து  ஒரு குத்தாட்டாப்பாட்டு ஆட்டம் பாட்டம் உண்டு 



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஏட்டய்யா கேரக்டர் எப்டி?



பேய் னு ஒரு பேப்பர்ல எழுதிக்காட்னாலே பயந்துடுவாரு# பே ஜா


2 சுடுகாட்.ல டிராபிக் ஜாம் எப்டி வரும்?பேய் எல்லாம் பென்ஸ் கார்லயா வரும் ? # பேய்கள் ஜாக்கிரதை

3 பேய் எங்கே இருக்கு தெரியுமா?



எங்கே டாக்டர்?

பயப்படறவன் மூளைல #,பே ஜா



4 செத்துப்போனவங்களால பழி வாங்க முடியும்னா இந்த உலகத்துல யாருமே உயிரோட இருக்க முடியாது #,பே ஜா


5 என் பொண்டாட்டியைப்பேயா நடிக்க வெச்சது நான் தான்



ஏன்டா?தாலி கட்னவளை தாயாக்கற வேலையை பார்க்காம ப்பேயாக்கற வேலைலயா இருக்கே?#,பே ஜா









இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1 மாஸ் படத்தின்  கதையை எடுத்துட்டு திடீர்னு அதை மறைக்க முன் பாதியில்  புதுக்கதையை செருகியது


2  மொக்கை காமெடியா இருந்தாலும் பேய்ப்படம் காமெடி எடுபடும்னு ட்ரெண்ட் புரிஞ்சுக்கிட்டு திரைக்கதை எழுதுனது 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 இது ஃபேமிலி ஆடியன்சுக்காக எடுத்த படம் , ஹீரோயினுக்கு  சீன் சரியா வைக்கலை. வெரிகுட் , ஆனா தம்பி ராமய்யா 4  சீன்ல வல்கர் வசனம் பேசி இருக்காரு. அதுவும் க்ளைமாக்ஸ்  வசனம் பீப் சாங்க் தேவலை . இது எப்படி சென்சார்ல விட்டாங்க ? அவங்க கவனிக்கலையா? நீங்க அவரை கவனிச்ட்டீங்களா?


2 படத்துல எதுக்கு ஏகப்பட்ட கிளைக்கதைகள் ? தலை சுத்துது 





சி  பி  கமெண்ட்=பேய்கள் ஜாக்கிரதை = முன் பாதி மொக்கை காமெடி பின் பாதி முனி .மாஸ் நைனா மாயா மிக்சிங்.விகடன் =38 .ரேட்டிங் = 2 / 5 சி சென்ட்டர் பிலிம்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -38



குமுதம்  ரேங்க் ( கணிப்பு)= சுமார்



 ரேட்டிங் = 2/5

ஈரோடு சண்டிகாவில் படம் பார்த்தேன்


" க்யூட் புஷ்பா லோகம்"

1]செவ்வாய் கிரகத்துக்குப்போகும் சயின்ட்டிஸ்ட் ஹீரோ பஞ்ச்=




நான் இந்த உலகத்தை விட்டே போகப்போறேன்



==============

2]தலைவரே! நீங்க ஏன் தமிழ் நாட்டை.விட்டு ஒரு அடி கூட நகர்றதே இல்லை?


வேற யாராவது சம்பாதிச்ட்டா? மொத்த தமிழ் நாடும் எனக்கே!



================

3]டியர்.டெய்லி 100 உக்கி ( தோப்புக்கரணம்) போடு.உடம்புக்கு நல்லது.


ஹூம்.ஜாக்க்கெட் கொக்கியே போடமுடியறதில்ல.நீங்கதான் போட்டு விடறீங்க



===============


4]தலைவரே! வெள்ள நிவாரணப்பணி யை முடிச்ட்டீங்ளா?

நோ
தீவிரவாதியைப்பிடிச்ட்ட்டீங்ளா?

நோ
என்ன தான் செஞ்சீங்க?
சிம்பு வைத்தேடிட்டிருக்கோம்


==============

5]சார்.குற்றவாளியை கேரளா ,ஆந்திரா ,கர்நாடகா எல்லா.ஸ்டேட்லயும் தேடியாச்.கிடைக்கலை.


யோவ்.தமிழ் நாட் ல சொந்த.வீட்லதான் இருக்காராம்.



============

6]டியர்.தனிமைல இருக்கும்போது என்ன பாட்டு கேட்பீங்க?


நான் ஏன் தனிமைல இருக்கப்போறேன்.நீயோ உன் தங்கச்சியோ என் கூட தானே இருக்கீங்க?



===========

7]நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிம்புவை மட்டுமல்ல ,நயன் தாரா ,ஹன் சிகா எல்லோரையும் கைது செய்வோம்.இப்டி தேடிட்டு இருக்க மாட்டோம்.எனவே..

==============

8]சார்.

"னு ஒரு டேக் ட்ரெண்ட் ஆகிட்டிருக்கு.

ஓ.நாம அதுக்கு போட்டியா பேஸ் புக் கீழ் பெண்ணை னு ஆரம்பிப்போம்


==============

ஜட்ஜ் = பீப் சாங்கை நீங்கதான் பாடுனீங்கனு வாய்ஸ் டெஸ்ட் ல கண்டுபிடிச்ட்டோம்.

சிம்பு = ஓஹோ.அது நான் 15 3/4 வயசா இருக்கும்போது பாடுனது.


===============

10]சிம்புக்கு எத்த.னை கேர்ள் பிரண்ட்ஸ் இருக்காங்கனு இப்போ கண்டுபிடிக்றேன


எப்டி?்

லாக்கப்ல தள்ளுவோம்.யார் யார் பார்க்க வர்றாங்கனு பார்ப்போம்



====================


11]பக்கத்தில் யார் உட்கார்ந்தாலும் அவங்க விரல்ல சொடக்கு (நெட்டை)எடுப்பேன்.நீங்க?

நான் மோதிரத்தை உருவிடுவேன்.


===================


12]கூகுள்ல அதிகம் பேரால் தேடப்பட்டது எங்க ஹீரோ தான்.

கண்ணா! தமிழ் நாடு போலீஸ் பூரா 3,நாளா தேடிட்டே இருக்கே எங்க ஆளை.அப்போ யார் பெரியவர்?

================


13]இனி யாருக்கும் மென்சன் பண்ணவே மாட்டேன்

இப்டி சொல்லி எங்களை டென்சன் பண்ணாதீங்க மிஸ்


================

14]

டாக்டர்.. யாருக்கோ நாளைக்கு பெர்த்டே... ஆனா யாருக்குனு ஞாபகம் வரல.

காலண்டர் பார்த்தா தெரிஞ்சிடும்.கன்சல்டேசன் பீஸ்.500 ரூபா குடுங்க

===============


15\]சார்.பசங்க -2 படத்துக்கு ஏன் நீங்க போகலை?



எனக்கு 1 குழந்தை தான் இருக்கு.இன்னொண்ணை ரெடி பண்ணிட்டு அடுத்த வருசம் போலாம்னு இருக்கேன்


============

16]சார்.உங்க படத்தை நெட் ல ரிலீஸ் பண்றப்ப " க்யூட் புஷ்பா லோகம்"னு டைட்டிலை மாத்தீட்டீங்க?


பூ ன்னாலும் புஷ்பான்னாலும் 1 தானே?


================

17]உங்களுக்கும் அந்த ஹீரோயினுக்கும் தான் பைட் ஆச்சே ? எதுக்கு அடிக்கடி அவங்க வீட்டுக்குப்போறீங்க?


நன்றி.மீண்டும் வருக ன்னு போர்டு இருந்தது



==============

18]என்னை 4ஹிந்தி எம் பி ங்க பாலோ பன்றாங்க.


மிஸ்.சீக்கிரமா வீட்டுக்குப்போய்டுங்க.பொறுக்கிப்பசங்க பாலோ பன்றதை விட இவனுங்க தான் ஆபத்து


=================
இந்தப்படத்துல எனக்கு ஆம்பளைக்கு சமமான ரோல்.அப்டியே கேரக்டராவே மாறிட்டேன்.
ஓஹோ.மேடம்.டூயட் சீன் ல ஹீரோ சிரமப்பட்டிருப்பாரே?


=============

20]
குழந்தைங்க கெட்ட வார்த்தைய பேசமாட்டாங்க
கேட்டவார்த்தைய தான் பேசுவாங்க
சிம்பு =,நானும்தெரு முக்குல கேட்ட வார்த்தையைத்தான் பாடுனேன்.தப்பா?


================