Friday, January 01, 2016

இனி எந்த பொண்ணையும் கொஞ்சமாட்டேன்னு நெட் தமிழன் சொன்னா

1]மிலாடி நபி ஆடி மாசத்துலதானே கொண்டாடனும்னு யாரும் இன்னும் கிளம்பலையா?


=============



2]ஸ்டாம்ப் கலெக்சன் எல்லாம் அந்தக்காலம்.பொண்ணுங்க இதுவரை என்னென்ன டிபி வெச்சிருந்தாங்க என்னென்ன நாள் ல னு டேட்டாஸ் வெச்சிருப்பதே நவீன காலம்




=============

3\]பிகரோட டூயட் பாடி பார்க் பீச் னு சுத்திட்டு கடைசில தங்கச்சி னு கூப்பிட்டு கழட்டி விட உகந்த நாள்.இன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவுநாள்


============




4]கேரளாவில் விஜய் க்கும் சூர்யாக்கும் தான் அதிக FANS.ஏதாவது சிறப்புக்காரணம் இருக்கா?நடு நிலையாளர்கள் சொல்லவும்



===============



5]கீச்சர்களில் யாரையும் நேரில் சந்தித்ததில்லைனு நெட் தமிழன் சொன்னா டி எம் ல எந்த பொண்ணு கிட்டயோ அப்பாய்ன்ட்மென்ட் கேட்டிருக்கார்னு அர்த்தம்



===============



6]ஏதாவது தப்பு பண்ணிட வேண்டியது.தாய் நாடு.வேண்டாம்.நாட்டை விட்டுப்போறேன்னு புலம்பறது.ஆனா இங்கனயே டேரா போடறது.#,கமல் ,அமீர் கான் ,சிம்பு




=============



7]தமிழ் நாட்டில் பாடகர்க்கு பாடல் ஆசிரியர்க்கு பாதுக்காப்பில்லை.சுப்ரமணிய பாரதியாரை யானை மிதிச்சுது.இப்போ கோவன் சிம்பு அனிரூத்



==============



8\நல்லவேளை.சிம்பு இருக்கும் இடம் பற்றி துப்புக்கொடுத்தால் 10 லட்சம் ரூபா பரிசுன்னு போலீஸ் இன்னும் அறிவிக்கலை



===============


சீதா வீட்டுக்குப்போனா சீதாப்பழ ஜூஸ்

ஆர்த்தி வீட்டுக்குப்போனா ஆரத்தி எடுப்பாங்க


கீர்த்தனா வீட்டுக்குப்போனா பாயாசம் தருவாங்க என எதிர்பாரேல்




==================



10]இனி எந்த பொண்ணையும் கொஞ்சமாட்டேன்னு நெட் தமிழன் சொன்னா எல்லாருக்கும் தெரியற மாதிரி டி எல் ல வெச்சுக்க மாட்டேன்னு அர்த்தம்# உஷார்பார்ட்டி




=======================



11]அன்பே!,எப்போதும் குழந்தைக்கே உன் இடையில் அமர இடம் தருகிறாயே? எனக்கும் 50%,இடை ஒதுக்கீடு தந்தால் என்ன?



================



12]தாரை தப்பட்டை படத்துல 9 பாட்டு இருந்தா நயன் தாரா(ரை)தப்பட்டைனு சொல்லலாமா?


==============

13]

ஹேர் பின் குத்தி இருக்கும் எல்லா பெண் ட்வீட்டர்கள் போடும் ஒவ்வொரு ட்வீட்டும் PINனுடு ட்வீட்டே

==============

14]தமிழ் நாட்லயே அம்மா மேல பாசம் பக்தி யும் சித்தி மேல பாசமும் கொண்ட ஒரே நபர் நம்ம நாட்டாமை சித்தப்பா சரத் குமார் சார் தான்


=============

15]டீக்கடை வெச்சிருந்தாக்கூட நெட் தமிழன் பெரிய தொழில் அதிபர் மாதிரி முதல் போட்டேன் செம லாபம்னு ஸ்டேட்டஸ் போடுவான்

=============

16]அம்மா ,சித்தி 2 பேருக்கும் எப்பவும் ஒத்து வராது என முந்தானை முடிச்சு காலத்துல இருந்தே நமக்குத்தெரியும்

==============

17]தாரை தப்பட்டை எல்லாம் கிழிய வேண்டாமா?னு வடிவேல் டயலாக் பேசி இருக்காரே?அவர் இளையராஜா /பாலா எதிர்ப்பாளரா?

=============

18]அபூர்வா வை செல்லமா சுருக்கி வா ன்னு கூப்பிடலாமா?


==============



அன்பே சிறுக்கி!

உன் தங்கச்சி ஒரு கிறுக்கி!
என்னை விட்டுட்டு 2 பேரும் சாப்பிடறீங்களே ஊட்டி வரிக்கி ! # பொறுக்கியின் காதல் கவித



===============

20]மாணிக்க.வாசகர் லவ் லெட்டர் எழுதி இருந்தாக்கூட அதை மாணிக்க "வாசகர் கடிதம்"னு தான் ஊர் உலகம் சொல்லும்


===============

மாலை நேரத்து மயக்கம் - சினிமா விமர்சனம்

பெரிய பெரிய அரசியல் தலைவர்கள்  எல்லாம்  தான் சம்பாதிக்கும் எல்லா சொத்தையும் அவங்க பேர்ல எழுதி வெச்சுக்க மாட்டாங்க . பினாமி பேர்ல , தன் முத சம்சாரம், 2, 3  , அப்புறம் மகன் க , மகள் , மச்சினி  இப்டி  எல்லார் பேர்லயும் சொத்து வாங்கி வெச்சுக்குவாங்க , எல்லாம் ஒரு சேஃப்டிக்கு.



அது போலத்தான் ஆல்ரெடி 2ம் உலகம்னு மொக்கை படம்  கொடுத்த செல்வராகவன் தன் மார்க்கெட்  வேல்யூ டவுன் ஆனதால  தன் மனைவியை பினாமியா போட்டு இயக்கிய படம் தான் இது . ஆனா டைட்டில்ல கதை திரைக்கதை வசனம்  எல்லாம் இவர் தான்னு வருது . இயக்கம் மட்டும் மிசஸ் செல்வராகவன் -னு வருது . நம்பறவங்க நம்பலாம்.


சரி , கதை  என்னான்னு பார்ப்போம். அழகியல் திரைக்கதையால்  மிக கண்ணியமாக  செதுக்கப்பட்ட மணி ரத்னத்தின்  மவுன ராகம் படத்தையே ஷங்கரின் உதவியாளர் அட்லி  ராஜா ராணி-ன்னு உல்டா பண்ணி  ஹிட் அடிச்சார் இல்லையா? அதையே இன்னும் தர லோக்கலா இறங்கி  இண்டீசண்ட்டா எடுத்தா அதுதான்  மா  நே ம


ஹீரோ ஒரு அப்பாவிப்பையன் .இதுவரை யாரையுமே  லவ் பண்ணதவன். ஹீரோயின் ஒரு மாடர்ன் அடங்காப்பிடாரிப்பொண்ணு. ஒரு மொள்ளமாரியை லவ்வுது.அவன் மேட்டர்க்கு கூப்பிடறான். முடியாதுன்னதும் டக்னு கழட்டி விட்றான்.


 ஹீரோயின்  வீட்ல  மாப்ளை  பார்க்கறாங்க. ஹீரோ கூட மேரேஜ்  ஃபிக்ஸ் ஆகுது. ஹீரோயினுக்குப்பிடிக்காம அம்மாவுக்காக சம்மதிக்குது. ஒரு வருசம் ஆகியும்  தம்பதிக்குள் எதுவுமே நடக்கலை . ஐ மீன் பெட்ரூம் ல 2 பேரும் ஒண்ணா படுக்கலை.ஏன்னா  ஹீரோயினுக்கு காதலனை மறக்க முடியாம எல்லாம் இல்லை. மாடர்ன்  பொண்ணுங்க தான் டக் டக்னு காதலனை மறந்துடுவாங்களே? ஹீரோ படு சுமாரு மூஞ்சி குமாரா இருக்காரு. டைஜஸ்ட் பண்ணிக்க  முடியல .

 பொறுத்துப்பொறுத்துப்பார்த்த  ஹீரோ பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரான்னு சரக்கு அடிச்சு  சொந்த சம்சாரத்தையே கதறக்கதற ( நன்றி - தினத்தந்தி , மாலை மலர் , விருந்து ,சரோஜாதேவி , திரைச்சித்ரா)  ரேப்பிடறார்.

இடைவேளை. எப்டி  டைரக்சன் டச்?





உலகத்துல யாருமே  பண்ணாத ஒரு காரியத்தை  தன் புருசன் பண்ணிட்டானேங்கற  கோபத்துல  ஹீரோயின்  ஹீரோவை டைவர்ஸ் பண்ணிடுது.

இப்போ பர பரப்பான கிளுகிளுப்பான  க்ளைமாக்ஸ் . அதாவது  ஹீரோயின்  தன் முன்னாள்   காதலனை  லாட்ஜுக்குப்போலாம் வான்னு  கூப்பிடுது ./ என்னமோ  ராமேஸ்வரம் , திருச்செந்தூர் மாதிர் புண்ணியஸ்தலம் போற மாதிரி 2 பேரும் லாட்ஜ் போறாங்க .

 ஹீரோ அவர்  ஃபேஸ் புக்  ஃபிரண்டை கூட்டிட்டு அதே  லாட்ஜுக்கு  புனித நோக்கத்தோட  வர்றாரு.


 வில்லன்  ஹீரோயினை முடிச்சாரா? ஹீரோ அதை தடுத்தாட்கொண்டாரா? என்பது  தான் க்ளைமாக்ஸ் .


ஹீரோவா புதுமுகம் பாலகிருஷ்ணா . அப்டியே  செல்வராகவன் பிராண்ட் மார்க்  ஹீரோ . தாடி , கழுவாத  மூஞ்சி  இந்த 2 ம்  கேவலமான  குரலும்  இருந்தா போதும்  செல்வராகவன் படத்துக்கு நாயகன்  ரெடி . இதுல யும் வழக்கம் போல . ஹீரோ நண்பர்களுடன்  சேர்ந்து  தண்ணி அடிக்கறார் .  மனைவியை அடிக்கறார், சோகப்பாட்டு பாடறார். ஆனா மனதில் ஒட்டவில்லை .


 ஹீரோயின்  புதுமுகம் வாமிகா. என்ன பேரு இது ? வாமிட்னு சி செண்ட்டர் ஆடியன்ஸ் நக்கல் அடிக்கப்போறாங்க . ஆனா  ஹீரோயின் பொட்டு வைக்காத வட்ட நிலாவா அழகாத்தான்  இருக்கு . ஆனா கதைப்படி  ஹீரோயின் கேரக்டர் அடங்காப்பிடாரி, சிம்ம ராசி  என்பது போல் காட்சிகள் வருவதால் அவர் மேல் எந்த  சீனிலும்  பரிதாபம் வரவில்லை . லொள்ளு பண்ணே இல்ல , அனுபவி என்று தான் தோணுது. இது திரைக்கதையின் மைனஸ்


 வில்லன் சரியான மஞ்ச மாக்கான். சரக்கடிக்கற பொண்ணுக்கு சரக்கில் எதுனா கலந்து  கொடுத்து  ரேப்பாம  ப்ரப்போசல் ரேப் பண்ண டேட்டிங் கேட்டுட்டு இருக்கான் . தேறாது . படமும், வில்லனும்



படத்துக்கு பின்னணி  இசை , ஒளிப்பதிவு  எல்லாம்  சராசரி  ரகம் . குறை சொல்ல  முடியாத  தரம் .. ஆனால்  காட்சி அமைப்புகளில் தான்  ஒரு கண்ணியம் இல்லாமல்  சும்மா சி செண்ட்டர் ஆடியன்சிடம்  கை தட்டல்  வாங்குவதற்காக தர \லோக்கலா இருக்கு





மனதைக் கவர்ந்த  வசனங்கள்

1. ஏன் என் பின்னால சுத்தறான்?அப்டி என் கிட்டே என்னதான் இருக்கு?

சிில ஆம்பளைங்க அப்டித்தான் .முழுசாப்பார்க்கும் வரை பின்னாலயே சுத்துவாங்க

2. என் கிட்டே இல்லாதது அவ கிட்டே என்ன இருக்கு?
கிஸ் கூட இல்ல?
நீ தான் எதுக்கும் ஒத்துக்கமாட்டேங்கற

3. இந்தக்காலத்துப்பசங்களுக்கு காதல்னா என்னன்னே தெரியாது

4. கல்யாணமான புது சம்சாரம்.எப்டிடா அப்ரோச் பண்றது?


டின்னருக்கு போலாமா?ன்னு நாசூக்கா கேளு

5. புருசன்.=,அவன் யாரு?


புது சம்சாரம் =,என்னோட முத பாய் பிரண்ட்
ஆ!


6. எல்லாரும் சாப்ட்டுட்டு மிச்சம் வெச்சதை சாப்பிட நான் ஒண்ணும் முட்டாள் இல்ல

7. எப்போ ஒருத்தன் கூட COMFORTABLE ஆக FEEL பண்றாளோ அப்போ தான் அவன் கூட எல்லாம் னு ஒரு கொள்கை வெச்சிருக்கா

8. வெட்டிங் அனிவர்சரி என்பது பர்சனல்.பிரன்ட்சை எல்லாம் இன்வைட் பண்ணக்கூடாது.சம்சாரம் கூட தனியா இருக்கனும்

9. டைவர்ஸ் பண்ற அளவு உன் புருசன் என்னடி.செஞ்சான்?
ரேப் பண்ணிட்டான் யாரை?
என்னைத்தான்#MNM

10. ஒரு பையனை மேய்க்கறதுக்கு கரெக்டா ஒரு பொண்ணு அமையும்.அமையனும்.அதான் கல்யாண.வாழ்க்கை




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

1. தியேட்டரில் இன்று 3 படம் பார்த்து களப்பணி ஆற்றஇருப்பதால் வாழ்த்துச்சொன்ன,சொல்லப்போகும் ஆண்களுக்கு நாளை நன்றி நவிலப்படும்,லேடிசுக்கு அப்பப்ப

2. தமிழ் சினிமாவிற்குக்கிடைத்த இளமை ததும்பும் இன்னும் ஒரு மணிரத்னம் இயக்குநர் செல்வராகவன் ன் மாலைநேரத்து மயக்கம் @ ஈரோடு அபிராமி 70MM AC DTS

3. பல வெற்றிகள் கொடுத்திருந்தாலும் சமீபத்திய தோல்வி தான் மக்கள் கண்ணுக்குத்தெரியும் # உதா = செல்வராகவன் படத்துக்கு கூட்டம் இல்ல.20% தான்

4. மாலை.நேரத்து மயக்கம்.=123 நிமிடம். 2 மணி நேரம் தானா? அடடா

5. ஹீரோயின் பேரு வாமிகா வாம். வாய்ல யே நுழைய மாட்டேங்குது #,மாநேம

6. ஒரு பேச்சுக்கு மணிரத்னம் மாதிரி னு சொன்னேன்.படக்கதை யும் மவுனராகம் உல்டா போல

7. சம்சாரம் புருசன் கூட சேர்ந்து சரக்கடிக்குது.புதுமைப்பெண் போல

8. ஹீரோயின் அழகா இருக்கு ,பெண் இயக்குநர் என்பதால் மட்டும் ஒரு படத்துக்குப்போக முடிவெடுக்காதீர்

9. கவுதம் மேனன் க்கு டப் காம்ப்பட்டிசன்.நடுநிசி நாய்கள்.படத்தில் வருவது போல் ஒரு ரேப் சீன்.புருசனே சொந்த சம்சாரத்தை .முடியல

10. மவுனராகம் படத்தின் மாடர்ன் இன்டீசன்ட் வெர்சன் தான் மாலை நேரத்து மயக்கம்.பெண்கள் குடும்பத்துடன் போவதை தவிர்க்கவும் .18+


11 டியர்.நீங்க எடுத்த படத்துக்கு டைட்டில்ல எதுக்கு என் பேரு?


எத்தனை டைம் தான் நான் திட்டு வாங்கறது?

12 சோகக்காட்சி என்றால் சரக்கடிக்கும் காட்சியைத்தான் காட்டனும் என்பது சைக்கோக்களின் பழக்கம் போல







இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  போஸ்டர்ல யும் , பிரஸ் மீட்லயும் இது  என் மனைவி இயக்கிய படம் தான்னு நம்ப வெச்சது


2   ஹீரோயின்  செலக்சன்  குட் .


3  தமிழ் சினிமா வரலாற்றிலேயே  முதல்  முறையாக  ரேப்  சீனை  டீட்டெய்லாக  காட்டியது 




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 . புருசன்  பொண்டாட்டியை  ரேப் பண்றது தான் இடைவேளை ட்விஸ்ட். சரி . எனக்கு ஒரு டவுட் . யாரோ ஒரு அறிமுகம் இல்லாதவன்  ரேப்பினா  ஓக்கே. புருசன்  எதுக்கு ரேப்பனும் ? தினமும் மனைவி குடிக்கும் காபி, டீ ல எதுனா கலந்து  கொடுத்து மயக்கம் அடைய  வெச்சு   மென்மையா  ரேப்பி இருக்கலாமே?


2  எந்தப்பொண்ணாவது  தன் அம்மாவுக்கு  ஃபோன் பண்ணி  நான்  என் முன்னாள்  காதலன் கூட லாட்ஜுக்கு  யோகாசனம் செய்யப்போறேன்னு சொல்லுமா? என்னதான்  மாடர்ன்  ஃபிகரா இருக்கட்டும்


3  பொண்ணுக்கு  மேரேஜ் ஆகி அடுத்த நாளே  பொண்ணோட  தோற்றத்தை வெச்சு நடவடிக்கையை வெச்சு மேற்படி சாந்தி முகூர்த்த  மேட்டர் நடந்துச்சா? இல்லையா?ன்னு பொண்ணோட அம்மா கண்டு பிடிச்சுடும் . ஆனா ஒரு வருசம் வரை  மேட்டரே நடக்கலைங்கற மேட்டர்  யாருக்குமே  தெரியல . இது  இடிக்குதே ?

4 க்ளைமாக்ஸ் ல  வில்லன் ஹீரோயினை  கார்ல  லாட்ஜுக்குக்கூட்டிட்டுப்போறான், வழில பெட்ரோல் பேங்க் ல பெட்ரோல் போடும்போது லூஸ்  மாதிரி ஹீரோயின் கிட்டே  மேட்டர்க்கு  ஓக்கே  தானே?ன்னு  நடு  ரோட்ல  ஏன் கேட்கறான் ? கூப்ட்டதே  ஹீரோயின் தானே? அப்டியே  டவுட்னாலும்  காருக்குள்ளேயே வெச்சுக்கேட்டிருக்கலாமே /


5 ஃபேஸ் புக்  காதலி  தில்வாலே  துல்ஹனியா லே ஜாயேங்கே  போல் ஒருன் லவ்  வேணும், அதான் இவர்  கூட டேட்டிங்  வந்தேன் -குது. இதுக்கு முன்னால ஷாருக்கானை பார்த்திருக்கா? இல்லை  ஹீரோ  முகத்தை  ஃபேஸ்புக்ல  டி பி ல  நேர்ல பார்க்கலையா?


6  ஹீரோயின்  தற்கொலை  முயற்சி  சீன்  ஓவர் அலப்பறை.

7  புலி - புள்ளி மான்  ஃபோட்டோவை நாசூக்கா காட்னா  தமிழன் அது ரேப் சீன் தான்னு புரிஞ்சுக்க மாட்டானா? அவ்ளோவ்  டீட்டெய்லாக்காட்டனுமா?





சி  பி  கமெண்ட் =11. மாலை நேரத்து மயக்கம் - திமிர் பிடித்த அடங்காப்பிடாரிப்பெண்ணின் மொக்கை காதல் கதை -,விகடன்=39 ,ரேட்டிங் = 2 / 5 . குடும்பப்பெண்கள் தவிர்க்க்



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 39



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சுமார்



 ரேட்டிங் = 2 / 5


ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன் 78 பேர் ஆடியன்ஸ். விளங்கிடும்



வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி ( 1/01/2016 ) 10 படங்கள் முன்னோட்ட பார்வை

1 மாலை நேரத்து மயக்கம்


புதுமுகம் பாலகிருஷ்ணா, வாமிகா, அழகம்பெருமாள், கல்யாணி நட்ராஜன், பார்வதி நாயர் போன்றோர் நடிப்பில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கியுள்ள படம் 'மாலை நேரத்து மயக்கம்'. கதையை செல்வராகவன் எழுதியுள்ளார்.
இந்தப் படத்தைப் பின்னணியில் இருந்து செல்வராகவன் இயக்கியுள்ளார் என்கிற வதந்திகளுக்கு, இயக்குநரும் செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி செல்வராகவன் ஒரு பேட்டியில் பதில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:


இந்தப் படத்துக்காக எந்தளவுக்கு நான் உழைத்துள்ளேன் என்று எனக்குத்தான் தெரியும். பல இரவுகள் தூங்காமல் நானும் என் குழுவினரும் உழைத்துள்ளோம். இந்நிலையில் அத்தனைப் பெருமையையும் அவருக்கு அளிப்பது எந்தவிதத்திலும் நியாயமில்லை. இந்த வதந்தியினால், நாங்கள் இந்தப் படத்துக்கு எந்தவிதத்திலும் பங்களிப்பு செய்யவில்லை என்றாகிறது. ஆனால், இந்தப் படம் உருவாக நாங்கள் எந்தளவு கஷ்டப்பட்டோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும். இந்தப் படத்துக்கு அவர் கதை அளித்ததற்காக நாங்கள் அவருக்குக் கடமைப்பட்டுள்ளோம். அதற்காக பின்னணியில் இருந்து அவர்தான் இந்தப் படத்தை இயக்கினார் என்று சொல்வது நியாயமேயில்லை என்றார்.
வாலிப ராஜா


சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.
"இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்" என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். 
அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.

சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.
"இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள். அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்" என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.
சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம். 
அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.




‘தற்காப்பு’

புதிய கோணத்தில் போலீஸ் கதை ‘தற்காப்பு’
போலீஸ் பற்றி மாறுபட்ட கோணத்தில் அணுகும் படம்தான் தற்காப்பு. போலீசுக்கும் போலீசுக்கும் மோதல், போலீசுக்குள் போலீஸ் என்று போகிற கதை இது. காக்கிச் சட்டை அணிந்து பணியாற்றும் முன் போலீசுக்குள்ள கடமை பொறுப்புகளைப் பேசுகிற படம்தான் இது.

இதில் நாயகனாக சக்தி வாசுவும், நாயகிகளாக வைஷாலி, அமிதா நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி தோன்றுகிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய எஃப்.எஸ். ஃபைசல் இசை அமைக்கிறார். ஆர்.பி.ரவி இயக்கி உள்ளார். இவர் பல முன்னணி இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். கினெடாஸ் கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரிக்கிறார்கள்.

படம் பற்றி இயக்குநர் ஆர்.பி.ரவி கூறியதாவது:
இன்றைக்கு ஒரு போலீசால் நியாயமாக நேர்மையாக இருக்க முடியாத சூழல் இருக்கிறது . ஏன் போலீஸ் நல்லவனாக இருக்க முடியவில்லை?அவர்கள் இருப்பதில்லையா? இருக்க விடுவதில்லையா? காரணம் அமைப்பா, சமூகமா, மக்களா? எல்லாவற்றையும் அலசுகிறது இப்படம். இந்தப் படத்தில் அரசியல் உள்ளது. அரசியல்வாதிகள். இல்லை. ஏன் கரை வேட்டியுடன் கூட ஒருவர் படத்தில் வரமாட்டார்கள்.ஆனாலும் அரசியல் உள்ளது என்கிறார்.

பேய்கள் ஜாக்கிரதை’. 


தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர்களும் தற்போது பாடகர்களாகவும் உருமாறி வருகின்றனர். சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா உள்ளிட்ட பலரும் பாடகர்களாக களமிறங்கியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் களமிறங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் சரணிடம் இணை இயக்குனராக பணியாற்றி, தெலுங்கில் சில படங்களை இயக்கிய கண்மணி முதன்முறையாக தமிழில் இயக்கும் புதிய படம் ‘பேய்கள் ஜாக்கிரதை’. ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில் தம்பி ராமையா, மொட்டை ராஜேந்திரன், மனோ பாலா, ஜான் விஜய், ‘பிளாக்’ பாண்டி ஆகியோரும் நடிக்கின்றனர்.


இப்படத்தில் இடம்பெறும் ஒரு குத்துப்பாடலை தம்பி ராமையாவும், மொட்டை ராஜேந்திரனும் இணைந்து பாடியிருக்கிறார்கள். பாடியதோடு மட்டுமில்லாமல், இப்படத்தில் அந்த பாடலுக்கு குத்தாட்டமும் போட்டுள்ளனர். போட்டி பாடலாக அமைந்திருக்கும் இந்த பாடலை கவிஞர் விவேகா எழுத, மரிய ஜெரால்டு என்பவர் இசையமைத்திருக்கிறார். மாஸ்டர் அசோக்ராஜா நடனம் அமைத்திருக்கிறார். இப்பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் அமைந்திருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’


எந்த பிரச்சினை பற்றி பேசினாலும், அதில் நான்கு பேருடைய கருத்து என்ன? என்பதை பற்றியும், அவர்கள் என்ன பேசுகிறார்கள்? என்பதை பற்றியும் கவலைப்படும் சமுதாயம் இது. இதே கருத்தை மையமாக வைத்து ஒரு படம் தயாராகிறது. இந்த படத்துக்கு, ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். புதுமுகம் இந்திரஜித் கதாநாயகனாக நடிக்க, இவருக்கு ஜோடியாக புதுமுகம் தேவிகா மாதவன் நடிக்கிறார். இவர்களுடன் நகைச்சுவை நடிகர்–நடிகைகள் பலர் பங்கு பெறுகிறார்கள். மாதவன் டைரக்டு செய்கிறார். இவர், சிதம்பர ரகசியம், பரமபதம் ஆகிய டி.வி. தொடர்களை இயக்கிய நாகாவிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

படத்தை பற்றி இவர் கூறும்போது, ‘‘துன்பங்கள் வருவது இயற்கை. அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான் மனித வாழ்க்கை. சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு இந்த படம் சிறந்த மருந்தாக அமையும்’’ என்றார்.





6  
கோடை மழை-
DPP_1783‘கோடை மழை’ என்னும் பெயரில் புதுப்படம் ஒன்று உருவாகியுள்ளது. இதில் கண்ணன் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். மேலும் களஞ்சியம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கதிரவன் இயக்கியிருக்கிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு சாம்பசிவம் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் இயக்குனர் கதிரவன் பேசும்போது, ‘கோடை மழை’ எனக்கு முதல் படம். நான் பிரபு தேவாவிடம் உதவியாளராக பணிப்புரிந்திருக்கிறேன். நாயகன் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் கோடை விடுமுறையில் தன் ஊருக்கும் வரும்போது, மழை காலத்தில் ஊருக்கு வரும்போது, கதை உருவாக்கப்பட்டிருப்பதால் ‘கோடை மழை’ என்று பெயர் வைத்திருக்கிறோம்.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம். களஞ்சியம் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.
படத்தில் நெகட்டிவ் ரோல் கிடையாது. காதல் இருந்தாலும் திரைக்கதையை வித்தியாசமாக அமைத்திருக்கிறேன். 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. நாளை இப்படத்தின் பாடல்கள் வெளியாக இருக்கிறது. 1ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
நான் சங்கரன் கோவில் ஊரில் பிறந்தவன். இந்த ஊரில் அதிக பேர் ராணுவத்திலும், போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்கள். இங்குள்ள மக்களின் கதையை எடுக்க ஆசைபட்டேன். அதன்படி ‘கோடை மழை’ படத்தை உருவாக்கியிருக்கிறேன்’ என்றார்.



7    கரையோரம்

Nikesha Patel is looking forward to the release of Karaiyoram, directed by JKS. Interestingly, the film is being made in two other languages — Alone (Kannada) and Leela (Telugu). Nikesha says, “In the movie, due to a misunderstanding with my family, I spend a night at a friend’s beach house and realise that I am trapped there without any way of escaping. Things get tougher as I have no means of communicating with the outside world. That’s what makes the film thrilling.” The director says the film is meant to thrill rather than scare. Nikesha, Iniya and Simran (she plays a cop), who are common to all the three languages, play the lead roles.

Karaiyoram a Thriller Tamil Movie Revolves Around a Beach Resort

8  அழகு குட்டி செல்லம்-இயக்குநர் சார்லஸ்


நகைச்சுவை நடிகர்களில் தனக்கு என்று தனிபாணியை கடைபிடிப்பவர் கருணாஸ். நந்தா படத்தில் இவர் நடித்த ‘லொடுக்குபாண்டி’ கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்த கருணாஸ் தற்போது நகைச்சுவை, குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது ‘அழகு குட்டி செல்லம்’ படத்தில் குணச்சித்ர வேடங்களில் நடித்து இருக்கிறார். இதில், கருணாசுடன் அவரது மகன் கென் நடித்திருக்கிறார். இந்த படத்தில் 5 சிறுவர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் செய்யும் குறும்பும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுமே கதை. இவர்களில் ஒருவராக கருணாஸ் மகன் கென் நடித்திருக்கிறார். இதுபற்றி சிறுவன் கென்னிடம் கேட்டபோது, ‘‘இந்த படத்தில் நடிக்கும் 5 சிறுவர்களில் நானும் ஒருவன். டைரக்டர் சார்லஸ் சார் எங்களை மிகவும் சிரமப்பட்டு நடிக்க வைத்தார்.
எங்களிடம் மிகவும் அன்பாக பழகினார். படப்பிடிப்பின் போது நாங்கள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து சிரித்தோம். கலகலப்பாக பழகினோம். படப்பிடிப்புக்கு போனது சுற்றுலா சென்றது போல இருந்தது. எனது அப்பா நடிக்கும் படத்தில் நானும் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும் எங்கள் மீது அக்கறை காட்டினார்கள். இந்த படம் நன்றாக வந்திருப்பதாக சொன்னார்கள். டைரக்டர் சொன்னபடி நடித்தேன். நான் தொடர்ந்து நடிப்பது பற்றி அப்பா தான் முடிவு செய்வார்’’ என்று சொல்லிட்டு கள்ளமில்லாமல் சிரித்தார் கென்.







9   மீனாட்சி காதலன் இளங்கோவன்




தற்கொலை செய்து கொண்ட காதலர்களுக்கு நண்பர்கள் சேர்ந்து திருமணம் செய்து வைக்க முயலும் வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு தயாராகியுள்ளது ஒரு படம்.
காதல் அல்லது பேய், இந்த இரண்டிற்கும் தமிழ் சினிமாவில் எப்போதுமே மவுசு உண்டு. காதலில் பலவகைகளை நம் இயக்குநர்கள் படம் பிடித்து காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், எதிர்ப்புகளால் தற்கொலை செய்து கொள்ளும் காதலர்களுக்கு, சொர்க்கத்தில் அல்ல, பூமியிலேயே திருமணம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்.
காதல் நிறைவேறாத ஜோடிகள் தற்கொலை செய்யும் கதை வந்திருக்கிறது. அப்படி தற்கொலை செய்துகொண்ட ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் ஷாக் கதையுடன் உருவாகி உள்ளது ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்'.



10  பாய்ண்ட் பிரேக் - அச்சம் தாண்டி உச்சம் தொடு



டிஸ்கி - தியேட்டர்கள் கிடைக்காததால் 10 ல் 7 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆகுது