Wednesday, April 11, 2012

ஓ பக்கங்கள் ஞானி கொதிப்பு, மக்களை மடையர்களாக்கும் ஜெ ,சசி, ராணுவ அமைச்சர்

பளிச் 1 :


சசிகலாவை ஜெயலலிதா திரும்ப சேர்த்துகிட்டது பத்தி அரசியல்ல இருக்கற பெரிய தலைங்க யாரும் வாயைத் திறக்கல. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னுதான் எல்லாரும் நினைக்கறப்பல தெரியுது. ஆனா எனக்கு இந்த மேட்டர், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் இந்த ஜெயலலிதாவும் சசிகலாவும் சரியான கேணப் பசங்கன்னு நிஜமாவே நம்பறாங்களோன்னு தோணுது. இல்லாட்டி கட்சியிலயும் ஆட்சியிலயும் ஜெயலலிதா பேரைக் கெடுக்கற வேலைங்களைத் தன் சொந்தக்காரங்க செஞ்சது 24 வருஷமா தனக்குத் தெரியாதுன்னு சசி சொல்றதை யாராவது நம்புவாங்களா? போயஸ் வூட்டை விட்டு வெளியில வந்ததும்தான் தனக்கு எல்லாம் தெரியவந்துச்சுன்னு சசி சொல்றதை ஏத்துக்கறேன்னு ஜெ சொல்றதை நாம ஏத்துக்கிட்டா, நாம எல்லாரும் கேணைங்கன்னுதானே அர்த்தம்?


சி.பி - பெங்களூர் கோர்ட்டில் கேஸ் நடப்பதால் அந்த தீர்ப்பு வருவதற்குள் தன் மேல் எந்த தவறும் இல்லை என நிரூபிக்க ஜெ நடத்திய நாடகம் தான் அது.. கதை வசனம் , டைரக்‌ஷன் ஜெ.. நடிப்பு சசிகலா.. ஏமாளி ஆடியன்ஸ் மக்கள்




இதெல்லாம் ஜெ, சசி சொந்த சமாச்சாரம்னு வுடமுடியாது. 24 வருஷமா ஏன் சசியைக் கூட வெச்சிகிட்டு அவங்க சொந்தக்காரங்கள்லாம் கட்சியிலயும் ஆட்சியிலயும் ஆடவுட்டாங்கன்னு ஜெ சொல்லணும். அவங்க கட்சியிலயும் ஆட்சியிலயும் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னும் சொல்லணும். அதுக்கு என்ன நடவடிக்கைன்னும் சொல்லணும். சசியை இப்ப திரும்ப சேத்துகிட்டது ஏன்னும் சொல்லணும். இனிமே என் சொந்தக்காரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. எல்லாரையும் கட் பண்ணிட்டேன்னு சசி சொல்றாங்க இல்ல, முதல்ல நடராஜனுக்கு டைவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டாங்களான்னு சொல்லணும்.


சி.பி - நடராஜனை டைவர்ஸ் பண்ணினதா நாடகம் போட்டுட்டு  நாங்க சட்டப்படி பிரிஞ்சுட்டோம், ஆனா எங்கள் தார்மீக (!!!??? ) உறவு நீடிக்கிறதுன்னு நாடகம் போட எவ்வளவு நேரம் ஆகும்.. ?



ரெண்டு பேரும் எதுவும் சொல்லமாட்டாங்க. ராவணன், நடராஜன், திவாகரன், சுதாகரன்னு ஒவ்வொருத்தரா அடுத்து பழையபடி கட்சிவேலை, ஆட்சி வேலையிலல்லாம் மூக்கை நுழைக்கத்தான் போறாங்க. நாமும் பாத்துகிட்டு ஞேன்னு நிக்கப்போறோம். ஏன்னா நம்மதான் கேணைங்களாச்சே.


சி.பி - பழைய திருடி கதவைத்திறடி, நாட்டை நாசமாக்கி நாட்டு மக்களின் நம்பிக்கையை நாறடி



பளிச் 2:


ஒண்ணு ரெண்டு டி.வில ஒரு தரம் ரெண்டு தரம் காட்டினதோட சரி. பாதி பேப்பர்லஇந்த நியூசே வரல. பட்டப்பகல்ல நட்ட நடு ரோட்டுல ஒரு போலீஸ் அதிகாரி பொதுமக்களை அடிக்கறான். அவனை என்னான்னு கேக்க ஆளே இல்ல. தர்மபுரில ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விநியோகத்துல குளறுபடி செஞ்சதுனால, வாத்யாருங்க சாலை மறியல் செஞ்சிருக்காங்க. தன் கிட்ட வந்து முறையிட்டு பேசற ஒரு ஆசிரியரை டி.எஸ்.பி சந்தனப் பாண்டியன் அடிக்கறாரு. வேணாங்க அடிக்காதீங்கன்னு கெஞ்சறாங்க அந்த ஆசிரியரோட மனைவி. அவங்களை அப்பிடியே புடிச்சுத் தள்ளறாரு பாண்டியன். அந்தம்மா அப்பிடியே பின்னால் மண்டை தரையில படறாமாதிரி ரோடுல விழறாங்க. 


இப்பிடி செஞ்ச அதிகாரி மேல என்ன நடவடிக்கைன்னு கேட்டா மாவட்ட எஸ்.பி அவர்கிட்ட விளக்கம் கேட்டிருக்குங்கறாரு. இதுல விளக்கம் கேக்க என்னா இருக்குது. டி.வில போட்டதைப் பார்த்தலே அந்த எஸ்.பிக்கு புரிஞ்சுடுமே. கொறைஞ்சபட்சம் டி.எஸ்.பியை சஸ்பெண்ட் பண்ணிட்டுதானே விளக்கம் கேக்கணும்…இதுக்கு நடுவுல, அடிவாங்கின ரெண்டு பேரையும் ஸ்டேஷனுக்குக் கூட்டிகிட்டுப் போய் மிரட்டிக் கையெழுத்து வாங்கியிருக்காங்கன்னு ஒரு செய்தி சொல்லுது. இது என்ன நாடா, இல்ல காடா ? ராஜபக்‌ஷே பண்ணின அக்கிரமத்துக்கு சட்டசபையில தீர்மானம் போடறாங்க. ஐ.நால தீர்மானம் போடறாங்க. உள்ளூர் ராஜபக்‌ஷேங்களைக் கேப்பாரே இல்லியா? சம்பளம் பஞ்சப்படின்னா சத்தம் போடற ஆசிரியர் சங்கமெல்லாம் இதுக்கு குரல் குடுக்க வரமாட்டாங்களா?


சி.பி - தப்பு பண்ற போலீஸ் ஆஃபீசரை டிரான்ச்ஃபர் பண்றது  தண்டனை அல்ல.. அதே தப்பை  வேற ஏரியாவில் இன்னும் ஜாக்கிரதையா செய்ய தரும் வாய்ப்பு..



பளிச் 3:


அண்ணா பல்கலைக்கழகத்துல படிச்சுகிட்டிருந்த மாணவன் மணிவண்னன் தற்கொலை பண்ணிகிட்டது அவனைத் தெரிஞ்ச நண்பர்களுக்கெல்லாம் பெரிய அதிர்ச்சியா இருக்கு. தர்மபுரி மாவட்டத்துல செஙகல் சூளையில சிறுவனா இருந்தப்பவே கொத்தடிமையா இருந்த மணிவண்ணனை அதிகாரிங்க மீட்டு படிக்க உதவி செஞ்சதுல மாநிலத்துலயே 13 வது எடத்துல ப்ளஸ் டூ பாஸ் பண்ணி வந்திருக்கான். 


அவ்வளவு கஷ்டத்தை அவன் தாண்டி வந்து சாதிச்சதோட மட்டும் இல்ல, இப்ப கார்ப்பரேஷன் பள்ளியில படிக்கற ஏழை பசங்ககிட்ட போய் பேசி அவங்களை ஊக்கப்படுத்தற வேலையெல்லாம் செஞ்சுருக்கான்னு கிழக்கு பத்ரி சொல்றாரு. காசு திரட்டி ஏழை மாணவர்களுக்கெலாம் உதவி செஞ்சு வந்திருக்கான். ஐ.ஏ.எஸ் அதிகாரியாகணும், ஊர்ல குடிசைல இருக்கற அம்மாவுக்கும் பிரதருக்கும் நல்ல வீடு கட்டித்தரணும், அடுத்த மாசம் தன்னோட கவிதைத் தொகுப்பை வெளியிடனும்னெல்லாம் பேசிக்கிட்டிருந்தவன், ஏன் திடீர்னு தற்கொலை பண்ணிக்கணும் ?


அஞ்சு செம்ஸ்டர்ல மொத்தமா 26 பேப்பர்ல பாஸாகாம இருந்த்து ஒரு காரணம்கறாங்க. ஏதோ காதல் தோல்வி இன்னொரு காரணம்கறாங்க. மாநிலத்துலயே .13வது எடத்துல வந்த பையன், காலேஜ்ல பேப்பர் அரியர்ஸ் வெக்கறான்னா, ஏன்னு ரெண்டாவது செமஸ்டர்லயே வாத்யாருங்க கவனிக்கமாட்டாங்களா? அவனைக் கூப்பிட்டு என்னாப்பா ப்ராப்ளம்னு பேசிக் கண்டுபிடிக்கமாட்டங்களா? லவ்வுதான் பிரச்சினை, அதுனாலதான் படிப்பை கவனிக்கலேன்னா அத்த எப்பிடி ஹேண்டில் பண்ணணும்னு சொல்லறதுக்கு டாக்டருங்க மாதிரி யாரும் ஆளு காலேஜ்ல இல்லியா? 


மணிவண்ணன் மீதி பசங்களுக்கு உற்சாகம் குடுத்து பண உதவி பண்ணி அவங்களும் தன்னைப் போல நல்லா படிச்சு மேல வரணும்னு சொல்ற அறிவிருக்கற பையன். அவனுக்கு ஒரு பிரசினைன்னா இப்பிடி தீர்த்துக்கலாம்னு சொன்னா அவனால புரிஞ்சுக்கமுடியும். அத்த செய்யவே காலேஜுல ஆள் கெடையாதா? அப்ப, மணிவண்ணன் மாதிரி கூட இல்லாத சாதாரண பசங்க கதி என்னாகும் ? எல்லாரும் சினிமால தனுஷ் திரியறா மாதிரிதானே ஆவாங்க? தனுஷ் படத்தைப் பாத்து பசங்க உருப்பட முடியுமா ? காலேஜுல பாடம் சொல்லித் தந்தா மட்டும் போதாது. மனசை எப்பிடி வெச்சுக்கணும்னு சொல்லித் தர்ற வாத்யாருங்களையும் கூடவே போடணும்


சி.பி - மர்மமான மரணங்கள் பெரும்பாலும் கடைசி வரை மர்மமாகவே முடிஞ்சுடுது.. என்ன நடந்தது?ன்னு மக்களுக்குத்தெரியாமயே போயிடுது

.
பளிச் 4:


எவ்வளவு நல்ல மனுஷன்.. இப்பிடி கொடூரமா கொன்னுட்டாங்களேன்னு நான் பேசின ஒருத்தர் கூட சொல்லல… திருச்சி தி.மு.க பிரமுகர் ராமஜெயம் கொலையைப் பத்தித்தான் சொல்றேன். எல்லாரும் இப்பிடி கொடூரமா கொன்னிருக்கவேணாமேன்னு சொல்றாங்களே தவிர, நல்ல மனுஷன்னு சொல்லமாட்டேங்கறாங்க. இறந்தவரு யாரோ கொஞ்சம் பேருக்காவது நல்லவரா இருந்திருப்பார்ங்கறதுல எனக்கு சந்தேகம் இல்ல. ஆனா பெரும்பாலானவங்க அப்பிடி நினைக்கல. இதுதான் இன்னிக்கு தமிழ்நாட்டுல பெரும்பாலான அரசியல் பிரமுகர்களோட நிலைமை. ஜனங்க யாரும் அவங்களல ஒருத்தரையும் நல்லவங்கன்னு சொல்லக் கூடிய மன நிலையிலயே இல்லை. கொலை செய்யப்பட்டதும் கொலை செய்யப்பட்ட விதமும் பரிதாபத்தை ஏற்படுத்துதே தவிர, இருந்தப்ப இவங்கள்ல்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணாங்கன்னுதான் சாதாரண மக்களே பேசறாங்க.


அரசியல்வாதிகளும் கட்சிகளும் இதைக் கொஞ்சம் தீவிரமா சிந்திக்கணும். மேலயிருந்து கீழ வரைக்கும் ஒவ்வொரு கட்சியிலயும் அதிகாரத்துல இருக்கறவங்கள்ல பெரும்பாலானவங்களுக்கு மக்கள் கிட்ட நல்ல பேரே இல்லை. தங்களுக்கு வேற வழியில்லாமதான் மக்கள் இவங்களை சகிச்சுகிட்டு இருக்காங்க. இப்பிடியே போனா இன்னும் பத்து வருஷத்துல ரெண்டுல ஒண்னுதான் நடக்கும். ஓட்டு போடவே ஜனங்க வரமாட்டாங்க


. இல்லாட்டி, எவன் வந்தாலும் ரவுடித்தனம் பண்ணி காசை சுருட்டப்போறான். எனக்கு இப்பவே எவன் நிறைய குடுக்கறானோ அவனுக்கு ஓட்டு போட்டுத் தொலைக்கறேன்கற நிலைக்கு மக்கள் வந்துடுவாங்க. ரெண்டும் நாட்டுக்கு நல்லது இல்ல. மக்களுக்கும் நல்லது இல்ல, அரசியலுக்கும் நல்லது இல்ல.


சி.பி - இப்பவே கிட்டத்தட்ட அந்த நிலைமை வந்துடுச்சே? எவன் யோக்கியன்? அப்டினு மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்களே? எரியற கொள்ளில எது நல்ல கொள்ளி? அல்லது இந்த தடவை அதிமுக அடுத்த டைம்  திமுக அப்டிங்கற மன நிலைமைக்கு மக்கள் வந்துட்டாங்களே.. 


பளிச் 5 


இந்த பட்ஜெட்ல ராணுவ செலவு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் கோடி ரூபாய்க்கு வந்துடுச்சு. (1,93,407 ! ). ஆனா ராணுவ தளபதி நம்ம கிட்ட இருக்கற ஆயுதம் வெடி மருந்தெல்லாம் போதாது. இன்னும் ரெண்டு நாளைக்குதான் வரும், எல்லா ஆயுதமும் பழசாப் போச்சு, அது இதுன்னு குண்டு போட்டுகிட்டே இருக்காரு. இவ்வளவு பணம் குடுக்கறாங்களே புச்சா வாங்கவேண்டியதுதானேன்னா, ஓட்டை உடைசல்லாம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறாங்கன்னு வேற சொல்றாரு. இதுக்கு முன்ன எந்த ராணுவ தளபதியும் இவ்வளோ ஒப்பனா எல்லாத்தையும் போட்டு உடச்சதே கெடையாது. 


பொதுவா அரசாங்க அதிகாரிங்க, ராணுவ அதிகாரிங்களுக்கெல்லாம் ரிட்டையராயி ரெண்டு மூணு வருஷம் வேற போஸ்ட்டிங் எதுவும் வராதுன்னு தெரிஞ்சப்பறம்தான் மனசாட்சின்னு ஒண்ணு புச்சா வந்து உறுத்த ஆரம்பிக்கும். இவுருக்கு ரிட்டையர் ஆவறதுக்கு முன்னாடியே மனசாட்சி கொஞ்சம் ஒர்க் ஆவுது போல..


மிலிட்டிரிக்கு ஆயுதம் வாங்கறதுக்கு லஞ்சம் குடுக்கறது ரொம்பப் பழைய விஷயம்.. போபர்ஸ் கேசே அதானே…அது வெளியில வந்து ராஜீவ் ஆட்சி அவுட்டானப்பறம் வந்தவரு தேவ கவுடா, அவுரு கிட்ட கூட லஞ்சம் குடுக்க வந்தாங்கன்னு அவரு மகன் குமாரசாமி சொல்லியிருக்காரு. கவுடா என்கிட்ட வரல,அவன்கிட்ட வந்திருப்பாங்கன்னு சமாளிக்கறாரு.

 ஒவ்வொரு ஆட்சியிலயும் வராங்க, குடுக்கராங்க, வாங்கிக்கறாங்கன்னு நமக்குத் தெரியாதா என்ன..மொதல்ல இந்த ராணுவ பட்ஜெட்டை கொறைக்கணும். வெட்டியா அங்கே கொட்டற பணத்தை விவசாயத்துலயும் ஆஸ்பத்திரிலையும் படிப்புலயும் செலவு பண்ணா நாடு நெஜமா ஆரோக்கியமா இருக்கும். 


ஆனா, அப்பிடி செய்ய அதிகாரிங்க வுடமாட்டாங்க. பொய்யாவாச்சும் எல்லையில ஆபத்து. இங்கே ஊடுருவல்னு கதை விட்டுகிட்டு இன்னும் ராணுவ செலவை ஏத்திவிட்டுகிட்டேதான் இருப்பாங்க. அப்பதான் கொள்ளையடிக்க முடியும். அதுல அவங்களும் அரசியல்வாதிகளும் பங்கு போட்டுக்க முடியும்.அதுக்காக பொய்யா தேசபக்தியைக் கெளப்பி விட்டுடுவாங்க.


ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, செலவு எல்லாத்தையும் தனியா கணக்குத் தணிக்கை அதிகாரி மாதிரி ஒரு சுயேச்சையான அமைப்பை வெச்சு நடத்தினாதான் இதையெல்லாம் சரி பண்ண முடியும்.


சி.பி - நாட்ல எந்த ஊழலையும் தாங்கலாம், பாதுகாப்புக்கே பங்கம் விளைவிக்கும் ராணுவத்தில்  ஊழல் வந்தால்?


பளிச் 6


கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தின அரசாங்கம் கேட்டுகிட்டபடி அவங்க சாகும்,வரை உண்ணாவிரதத்தை நிறுத்திகிட்டாங்க. ஆனா, அரசாங்கம் பதிலுக்கு தான் சொன்னபடி எதையும் ஒழுங்கா செய்யல. கைதான் 150 பேரை விடுதலை செய்யாம, வெறுமே ஜாமீன்ல மட்டும்தான் விட்டிருக்காங்க. இன்னும் பத்துப் பதினஞ்சு பேருக்கு ஜாமீனும் கொடுக்காம தொடர்ந்து காவலை நீட்டிச்சுகிட்டே இருக்காங்க. வேணும்னே பல தொண்டு நிறுவனங்கள்ல ரெய்டு நடத்திகிட்டிருக்காங்க.ஒரு எடத்துலயும் ஒண்ணும் உருப்படியா குற்றம் சாட்டறமாதிரி கிடைக்கல.


அடுத்து உதயகுமார் மேல கிரிமினல் கேஸ் இருக்கறதுனால, அவரோட பாஸ்போர்ட்டை சரண்டர் பண்ண சொல்றாங்க. அப்பிடிப் பாத்தா நம்ம பார்லிமென்ட்ல 160 எம்.பிகளோட பாஸ்போர்ட்டை பறிமுதல் பண்ணியிருக்கணும். அவங்க பேர்லயும் கிரிமினல் கேசெல்லாம் இருக்குது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில கோர் ட் உத்தரவுப்படி எஃப்.ஐ.ஆர் போட்டு விசாரிக்கற மாறன் பிரதர்சுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வெச்சுகிட்ட மாதிரி தெரியல.


போபால் விபத்து நடந்த உடனே அதுக்குப் பொறுப்பான கம்பெனி தலைவர் ஆண்டர்சனுக்கு தனி விமானம் ஏற்பாடு செஞ்சு அமெரிக்காவுக்கு தப்பிச்சுகிட்டு போறதுக்கு வேலை பாத்தவனெல்லாம் அதை எதிர்க்கறவங்க பாஸ்போர்ட்டை பிடுங்கப் பார்க்கறாங்க. நாளைக்கு கூடங்குளத்துல விபத்து நடந்தா முத வேலையா தனி விமானத்துல ரஷ்யன்களையெல்லாம் அனுப்பிடுவாங்கங்கறதுல எனக்கு சந்தேகமே இல்லை.


சி.பி - கூடன் குளம் இயங்கட்டும் , சோனியா குடும்பம் அங்கே குடி பெயரட்டும் பார்க்கலாம்.. 


பளிச் 7 


இந்த சினிமா முதலாளிங்க அழும்பு தாங்கவேமுடியல… அவங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் சம்பள விஷயமா பிரச்சினைன்னா, சட்டப்படி அதைப் பேசி முடிக்க உதவி செய்யறதுக்குத்தான் தொழிலாளர் நல ஆணையர் இருக்காரு. இத்தனை நாள் அவர் கிட்ட போய் பேசிகிட்டிருந்தவங்க இப்ப பேச முடியாதுங்கறாங்க. அவுரு தொழிலாளருக்கு ஆதரவா இருக்கறாராம். ஆமா, அதுக்குத்தான் அந்த டிபார்ட்மெண்ட்டே வெச்சிருக்கு.


 ரெண்டு தரப்புக்கும் பாதிப்பு இல்லாம சமரசம் செய்ய முயற்சிக்கறதுதான் அவர் வேலை. தொழில் தகராறுல அரசாங்கத்துகிட்டயே போய் பேச முடியாதுன்னு சொல்ற முதல் ஆளு இந்த சினிமா முதலாளிங்கதான். அவர்கிட்ட பேசி தீர்வு வராட்டி அடுத்த கட்டம் லேபர் கோர்ட்,லேபர் டிரிப்யூனல்தான். நல்ல முதலாளிங்க பொதுவா லேபர் கமிஷனர் மட்டத்துலயே பேசி தீர்வுக்கு வந்துடுவாங்க. பிரச்சினை முடியற சமயத்துல க்ளைமாக்ஸ்ல வந்து சொதப்பாதீங்கப்பா…


சி.பி - இருக்கற பிரச்சனை பத்தாதுன்னு இவங்க வேற வருஷா வருஷம் கொடியை பிடிக்கறாங்க..  ஹீரோவுக்கு கோடிக்கணக்குல சம்பளம் தர யோசிக்காதவங்க அடி மட்ட ஊழியர்களுக்கு 100 ரூபா தர யோசிக்கறாங்க  ஹூம்


பளிச் 8:


படிச்சதுல பிடிச்சதுன்னு இந்த வாரம் ஒண்ணை சொல்லணும்னா, அது ஒரு பழைய விஷயத்தைப் பத்தி புதுசா படிச்சதுதான். மார்ச் கடைசியிலதான் ஷேக்ஸ் பியர் பொறந்த நாளை உலக நாடக தினமா உலகம் முழுக்க கொண்டாடறாங்க. தமிழ்நாட்டுல கொண்டாடற நிலைமை இல்லை. இங்கே நாடகம்னா என்னன்னே குழம்பிப் போச்சு இல்லையா.. 


டி.,வி சீரியலை நாடகம்னு சொல்லிகிட்டிருக்காங்க. தமிழ் நாடகக்காரங்க மறக்கவே கூடாத கலைஞர்கள்ல ஒருத்தரான எம்.ஆர்.ராதா 1954ல திருச்சில ராமாயணம்னு ஒரு நாடகம் போட்டப்ப அடிச்ச் போஸ்டரை ஃபேஸ்புக்ல சந்திரன் வீராசாமி எடுத்துப் போட்டிருக்காரு. படிச்சேன். என் ராமாயணம் நாடகத்தைப் பாத்துட்டு மனசு புண்படறங்க யாரும் என் நாடகத்துக்கு வரவேணாம். அவங்க காசும் எனக்கு வேணாம். மீறி வந்து மனசு புண்பட்டா நான் அதுக்கு ஜவாப்தாரியில்லைன்னு போஸ்டர்லயே அடிச்சிருக்காரு. இன்னிக்கும் எதுக்காவது மனசு புண்படறேன்னு சொல்றவங்களுக்கு இதுல ஒரு அட்வைஸ் ஒளிஞ்சிருக்கு, இல்லியா?


ராதாவுடைய நாடகங்களை ஒடுக்கறதுக்குன்னே அந்த வருஷம் காங்கிரஸ் அரசாங்கம் பிரிட்டிஷ் காலத்து நாடகத் தணிக்கை சட்டத்தை திரும்பக் கொண்டு வந்தாங்க. சட்டத்துலருந்து தப்பிக்க, ராதா தன் நாடகத்தோட பேரை மட்டும் மாத்திகிட்டே இருந்தாரு. பெரிய அவமானம் என்னன்னா, அந்த சட்டம் இன்னும் தமிழ்நாட்டுல நடைமுறையில இருக்கு…! எந்த திராவிடக் கட்சியும் அதை நீக்கலே..


சி.பி - நாடகம் போடறதுல மன்னர் நம்ம கலைஞர் தான்.. என்னமா நடிக்கறாரு எல்லா விஷயத்துலயும்.. அதுவும் ஒத்திகையே இல்லாம?



பளிச் 9


இந்த வாரம் எனக்குப் பார்த்ததுல பிடிச்சது ஒரு சினிமா. விண்மீண்கள். பழைய டைரக்டர் சங்கரோட பேரன் விக்னேஷ் எடுத்திருக்காரு. புது கேமராமேன் ஆனந்த். அவங்க சித்தப்பா பிரபலமான கேமெராமேன் மணிகண்டன். அப்பா சினிமா பற்றின புத்தகத்துக்கு ஜனாதிபதி விருது வாங்கின ஓவியர் ஜீவானந்தன். பொறக்கறப்பவே மூளை வளர்ச்சி குன்றின நிலையில பொறக்கற குழந்தை வாலிபனாகி காதலை சந்திச்சா என்ன ஆகும்னு சொல்ற கதை. சின்னச் சின்ன ஓட்டைங்க இருந்தாலும், மசாலா பண்ணாம, நல்லா சொல்லியிருக்காங்க.


 கேரக்டர் ரோல்ல காமெடியன் பாண்டியராஜனுக்கு வித்யாசமான வாய்ப்பு. கூட நடிச்சவங்க எல்லாரும் பெரும்பாலும் புதுசு. ஆனா நல்லா நடிச்சிருக்காங்க. நல்ல ஒளிப்பதிவு. ஆனா இந்தப் படத்தை படிச்ச, எலைட், ஐ.டி க்ரூப்ஸ் உட்பட இண்ட்டெக்சுவலுங்க யாரும் சரியாவே ஆதரிக்கல. எல்லாரும் கொலை வெறிலதான் அலையறாங்களே தவிர கலைவெறியைக் காணோம். அப்பறம் எப்பிடி நல்ல படம் வரும் ?


பளிச் 10


அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்யற நேரம் வந்துடுச்சு.போன தடவை நான் எழுத்தாளர் மகாஸ்வேத தேவி பேரை ரெகமெண்ட் பண்னேன். யார் கேக்கறாங்க. பிரதிபா வைப் போட்டுட்டாங்க. சரி மொத பெண்மணின்னு ஓகே சொன்னோம். அது தேறல.. சொந்தபந்தங்களோட ஊர் சுத்தறதுக்கே 200 கோடியை அழிச்சுடுச்சாமே. இந்த தடவை பாத்து போடணும். தமிழ்நாட்டுல மாபெரும் ஊழல் அரசியலுக்குப் பிதாமகரா இல்லாம இருந்திருந்தார்ன்னா நிச்சயம் கலைஞர் கருணாநிதியை ஜனாதிபதி ஆக்கணும்னு சொல்லியிருப்பேன். இப்ப ம்ஹூம். என்னோடசாய்ஸ் காந்தியோட பேரன் கோபாலகிருஷ்ண காந்தி. உங்க சாய்ஸ் வேற இருந்தா எழுதி அனுப்புங்க..


 சி.பி - நல்லதோ , கெட்டதோ  வாரிசுகளை ஒழிக்கனும். வேற ஆளே சிக்கலையா?


——————

நன்றி 
கல்கி 7.4.2012

மணிமேகலை கேரக்டர்ல அனுஷ்கா நடிச்சாத்தான் நல்லாருக்குமா, ஏன்? ( ஜோக்ஸ்)

http://assets.fundoofun.com/bollywood/nandita-das.jpg

1. டியர், நான் வரைஞ்ச டிராயிங்க்ஸ் எல்லாம் பாருங்க, எப்படி இருக்கு?


 “சித்திர” வதையா..


-----------------------------------

2. கபாலி, நீ ஏன் இண்ட்டர் நெட் பக்கமே வர்றதில்லை?

போலீஸ் என்னை வலை வீசி தேடிட்டிருக்கே?


---------------------------------------

3. விஜய் படமான துப்பாக்கியில் ஜெயராம் வில்லன் ரோல் # அடடா, வழக்கமா விஜய் படத்துக்கு விஜய் தானே வில்லன்?


-----------------------------------------

4. டாக்டர், என் மனைவி என்னை பயங்கரமா அடிச்சுட்டா.


. நெட்டிலேயே இருக்கும் ரியாஸ் டாக்டர் - அப்டியா? வீடியோ லிங்க் குடுங்க, பார்க்கலாம்

---------------------------------------

5. அமலா பால் கால்ஷீட் கிடைக்கலை, என்ன பண்ன?

மிஸஸ் நாகார்ஜூன் சும்மாதான் இருக்கார், ஒரு டம்ளர் பால் குடிக்க குடுத்து அமலா பால் ஆக்கிடலாமா?

--------------------------------





6. மேடம் ஸ்டார் ஹோட்டல்ல லவ்வர் கூட தனியா இருந்தீங்களாமே? உண்மையா?

 அஞ்சலி - பொய்,கூட அவர் இருந்தார், தனியான்னு எப்படி சொல்ல?


-----------------------------------

7. தலைவரே, அரசியல்வாதிங்க மேல செருப்பை வீசறது இப்போ  ஃபேஷன் ஆகிடுச்சு.. என்ன சொல்ல விரும்பறிங்க?

என் செருப்பு சைஸ் 12 இஞ்ச், ஹி ஹி

----------------------------------

8. ரஞ்சிதா- தென் மண்டலம், வட மண்டலம் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது எது?

 நித்யானந்தா - சாமியார்கள் வெச்சிருக்கும் கமண்டலம், ஹி ஹி

-----------------------------

9. மேடம், நீங்க கவர்ச்சியா நடிப்பீங்களா?

கமலா ஹார்லிக்ஸ் - நடிக்கறது கஷ்டம், வேணும்னா கவர்ச்சியா வந்துட்டுப்போறேன், ஓக்கே?


----------------------------------------

10. கணவனாய் இருப்பது சில சமயங்களில் மிகவும் கஷ்டமனதோ?


 ஆமாங்க, ஒரே சம்சாரத்துக்கு புருஷனா இருக்க போர் அடிக்குது ஹி ஹி


-------------------------------------


http://im.rediff.com/movies/2009/jun/08sd1.jpg

11. சிவா- 121 கோடி பேரை திருப்திப்படுத்த சச்சினை விட்டா வேற யார் இருக்கா?


 பாவா  நித்யானந்தா - ஏன்? நான் ரெடியா தானே இருக்கேன்?


------------------------------------------

12. அத்தான், 10 மாசம் உங்க குழந்தையை நான் தான் சுமந்தேன்?


 அது சரி, 56 கிலோ வெயிட்டை காலம் பூரா சுமக்கறனே, அதை விடவா>?

-----------------------------------

13. மணிமேகலை கேரக்டர்ல அனுஷ்கா நடிச்சாத்தான் நல்லாருக்கும், ஏன்னா அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் வெச்சிருப்பவர் அனுஷ்கா மாத்திரம்


-----------------------------------

14. சச்சின் சார், உங்களால ஏன் 100 வது சதம் அடிக்க முடியலை?

ஏன்னா சமீபத்துல தான் விஜய் நடிச்ச சச்சின் பார்த்தேன், மூடு அவுட் ஹி ஹி

------------------------------

15.  யாருக்கும் செலவுக்கு பணமா தர மாட்டேன், செக் தான் தருவேன், அப்போதான் செக்யூலர்னு பேர் கிடைக்கும்..

 தலைவரே! விபரம் தெரியாம பேசாதீங்க, செக்யூலர்னா மதச்சார்பின்மை..


--------------------------------------------


Child labor in India.


16.  என்னை விட சீனியர் அவரு, அதனால அவரை மேரேஜ் பண்ணிக்க மாட்டேன்..

 ஏன் அதனால என்ன?

 சுகர் பேஷண்ட்டா இருந்தா?

-----------------------------------

17.  பல தேர்தல்கள்ல தொடர் தோல்வி பெற்றதால தலைவர் நொந்துட்டார் போல..

 எப்படி சொல்றே?

அரசியலில் சொதப்புவது எப்படி?ன்னு புக் எழுதறாரே?

-----------------------------------

18.  எனக்குப்பிடிக்காத ஒரே ஸ்மெல் இந்த ஜெயில் ஸ்மெல் தான்..

 ஓஹோ சிறை வாசம் பிடிக்காதவரா நீங்க?

-----------------------------------------

19.  கிரிக்கெட் பிளேயர் சரியான ஜொள் பார்ட்டின்னு எப்படி சொல்றே?

 பேட்டிங்க் பண்றதை நிறுத்தினாலும் சேட்டிங்க் பண்றதை, டேட்டிங்க் போறதை நிறுத்த மாட்டேன்கறாரே?

---------------------------------------

20. . என் மருமகன் ரொம்ப ஸ்மார்ட்! ஹேமமாலினி பெருமிதம்!! # ஓஹோ, சிந்து சமவெளி படத்தை ஹிந்தில ரீமேக்கிங்க்? ஹி ஹி



--------------------------------------

Tuesday, April 10, 2012

அஸ்த்தமனம் - டைரக்டருக்கா? புரொடியூசருக்கா? - சினிமா விமர்சனம்


http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/558035_285405198201803_156082301134094_625404_17530697_n.jpg 

வெண்ணிலா கபாடிக்குழு படத்துல கபடி கோச்சா நடிச்ச கிஷோரை ஹீரோவா போட்டு போர்க்களம்னு ஒரு படம் எடுத்த டைரக்டரோட அடுத்த படம்.. அந்தப்படத்துல மேக்கிங்க் ஸ்டைல் நல்லாருந்தது.. படம் பெரிய அளவில் ஹிட் ஆகலைன்னாலும் நாளைய வெற்றி இயக்குநரா வருவார்னு ஒரு நம்பிக்கையை கொடுத்த படம் அது.. அந்த நம்பிக்கையை  தவிடு பொடி ஆக்கும் படம் இது..

3 பசங்க, 2 பொண்ணுங்க ஒரு கார்ல  கிளம்பறாங்க.. ட்ரெக்கிங்க் போறதா பேசிக்கறாங்க.. ஆனா ட்ரெக்கிங்க் குரூப்க்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஜிகிடி கார்லயே எப்போ பாரு கண்ணாடியை பார்த்து பார்த்து லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டே இருக்கு. ( இட் ஈஸ் எ கடிக்கல் மிராக்கிள் யூ  நோ ..?). மேக்கப் மேனகா?

இன்னொரு  ஜிகிடி என்னமோ நாவல் படிக்கவே பிறந்த மாதிரி இங்கிலீஷ் நாவலை படிச்சுக்கிட்டே வருது..   உடம்பு தடிப்பாளினி ஆன படிப்பாளினி ( படிப்பாளீ நீ? கவித கவித !!)உண்மையிலேயே ட்ரெக்கிங்க்ல ஆர்வம் உள்ள ஆளுங்கன்னா ஜன்னல் ஓரம்  வெளீல வேடிக்கை பார்த்துட்டு தானே வரனும்.. 5 பேர்ல ஒரு ஆள் கூட அப்படி வர்லை.

மத்த 3 பசங்களும் தீவிரவாதி ரேஞ்ச்ல இருக்காங்க.. தலை முடி கட் பண்ற வேலையோ, தாடியை ஷேவிங்க் பண்ற பழக்கமோ இல்லாதவங்க போல. டி ஆர் ஃபேனோ? ஓவர் பில்டப் உலக நாதன்.. ஒரு அழுக்கு மூட்டை.. . அவ்வ்வ்வ்.. நான் கூட ஓப்பனிங்க்ல  ஏதோ டெரரிஸ்ட் படம்.. தேசிய கீதம் படத்துல வர்ற மாதிரி ஒரு தலைவரை கிட் நாப் பண்ணப்போராங்க.. பாலம் படம் மாதிரி  வித்தியாசமான சப்ஜெக்ட்னு நினைச்சேன்.. அடங்கோ.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij8rfHFB9poUQuNap8ut-dueGFcqU2BcqMHz9sNf2pSA10iJW3_1n32_T1WtL4qmOcadiJjcPY1KWFSGdQwDeFH5GAY3y9_fzipq827PWyNNBE-Ux4fDriLcT6f2luByZD2BmjQRIm7EA/s1600/asthamanam200111_4%255B1%255D.jpg


ட்ரெக்கிங்க்னா கொடைக்கானல், அல்லது மூணாறு மாதிரி ஏரியாவுல மலை ஏறுனும் தானே.. ஆனா இவங்க ஆள் அரவம் இல்லாத ஒரு காட்டுக்குள்ள போறாங்க.. அங்கே ஒரு கைடு.. அவனையும் கூட்டிக்கிட்டு  காட்டுக்குள்ள போறாங்க.. செம காமெடி என்னான்னா அந்த கைடு திடீர்னு யாராலோ தாக்கப்பட்டு செத்துடறாரு.. அதுக்குள்ள இடைவேளை..

உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா 40 நிமிஷத்துல இடைவேளை  விட்ட தமிழ்ப்படம் இது தான்னு நினைக்கேன் ( நினைக்கறேன் என்பதன் சுருக் ஹி ஹி ( ம்க்கும்,.. இதுக்கு நினைக்கறேன்னு முழுசாவே போட்டிருக்கலாம்.. மனசுக்குள்ள சுஜாதான்னு நினப்பு.. )0

ஒரு ஆள் செத்ததும் டக்னு நாம ரிட்டர்ன் போயிடலாம்னு எல்லாரும் பேக் அடிக்கறாங்க.. ஆனா ஒரு காட்டு வாசி குரூப்ல மாட்டிக்கறாங்க .. 5 பேருல 2 ஆளுங்க அவுட்.. மீதி 3 பேரும் எஸ் ஆகிடறாங்க.. அவ்ளவ் தான் கதை.. இடைவேளைக்குப்பிறகு  30 நிமிஷம் தான்..

இவ்லவ் மொக்கைப்படத்துலயும் டைரக்டர் ஒரு சேதி சொல்றார்.. அது இன்னான்னா பொம்பளைங்களுக்கு ஆயுள் ஜாஸ்தி.. எப்படியும் எஸ் ஆகிடுவாங்க.. ஆம்பளைங்க தான் முட்டாப்பசங்க .. ஆபத்துல மாட்டிக்குவாங்க.. இதான் அந்த மெசேஜ்.. அய்யோ பாவம் ( வேற யாரு.. படம் பார்த்த அந்த 19 ஆடியன்ஸும் தான்.. )

படத்துல பாராட்டியே ஆகனும்னா 3 பேரை பாராட்டலாம்.. இவ்ளவ் மொக்கையான படத்தை தைரியமா படம் ஆக்கத்துணிந்த  தயாரிப்பாளர்,  2 வது படத்துலயே சம்பாதிச்சு வெச்ச பேரை கெடுத்துக்கிட்ட ட்டைரக்டர்.. சும்மா ஹேண்டி கேமராவை வெச்சே நல்ல குவாலிட்டி குடுக்க முயற்சித்த ஒளிப்பதிவாளர்.. 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/asthamanam/wmarks/asthamanam01.jpg

மொத்த ஸ்கிரிப்ட்டில் 2 ஏ 4 சீட்டில் தான் மொத்த வசனமே.. அதில் தேறியவை 


1.  இப்போ நீ யாருக்கு கிஸ் தரப்போறே? லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டே இருக்கே? ( லிப்ஸ்டிக் சும்மா அழகுக்கு.. கிஸ் அடிச்சா கசக்கும் யுவர் ஆனர்..  எல்லாம் ஒரு ? ஞானம் ஒன்லி ஹி ஹி )


2.  எதுக்குடா துப்பாக்கியை கையில் எடுக்கறே..?

 அவன் ஓவரா பேசினா போட்றலாம்னு தான்.. 

 ஆல்ரெடி அவன் ஓவராத்தான் பேசிட்டு இருக்கான்.. சும்மா சீனைப்போடாத,.. 


3.  கைடுன்னா ஏதோ காட் ஃபாதர் மாதிரி இருப்பார்னு பார்த்தா ஆள் கஞ்சா கறுப்பு மாதிரி இருக்காரே.. 

4.  கைடு - எதுக்காக காட்டுக்குள்ள போகனும்னு நினைக்கறே?

டிரெக்கிங்க்

 அடடா.. டிரக் எல்லாம் அங்கே போகாதே.. ( இது ஜோக்காம் ஹி ஹி )

5.  எதுக்கும் பயப்படாதீங்க.. நம்ம கிட்டே ( அதாவது அவன் கிட்டே) கன் இருக்கு,. 

 கைடு - லைசன்ஸ் இருக்கா? ( மடக்கிட்டாராம். ஹய்யோ அய்யோ )


6.  பைனாகுலரை குடு.. 

 இந்தா 

 ரொம்ப தூரமாத்தெரியுதே.. 

 பைனாகுலரை திருப்பிப்பிடிடா.. 

இப்போ ரொம்ப பக்கமா தெரியுது... 

7.  கைடு - காசு வேணா முன்னே பின்னே  கொடுங்க.. ஆனா ஒரே ஒரு வாட்டி......

( இந்த டைம்ல அந்த 2 ஜிகிடிங்களும் பம்முது)

24 மணி நேரமும் ஹெல்மட்டோட அலையறானே இவன் முகத்தை ஒருக்கா பார்க்கனும்.. 


8. இந்தப்பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே.. 

 அப்போ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. எல்லாம் புரிஞ்சுடும்

 ம்.. அதான் தேடிட்டு இருக்கேன்.. 

 9.  ஜிகிடி - என்ன? அட்வாண்டேஜ் எடுக்கப்பார்க்கிறியா? 


ஆமா.. இவ பெரிய விண்ட்டேஜ் விமலா ( இந்த டயலாக் நான் எழுதுனது.. ஹி ஹி .. படத்துல இல்லை)

10. அந்த காட்டுவாசிக்கு தமிழே  தெரியாது.. இவ இங்கிலீஷ்ல பேசறா


11. அந்த காட்டுவசிப்பொண்ணு என்னடா பண்றா?,

 உன்னை லவ் பண்றான்னு நினைக்கறேன்.. உன்னையே முறைச்சு முறைச்சு பார்க்கறா.. 

 டேய் டேய் எப்படியாவது அவ கிட்டே பேசி எங்களை இந்த காட்டுல இருந்து எஸ் ஆக வைடா.. 


12.  ஆண்டவன் செஞ்ச ஒரே நல்ல காரியம் எது தெரியுமா?.. கெஞ்சிக்கேட்டா குடுக்கற மனோபாவத்தை பொண்ணுக்கு குடுத்ததுதான்..  பாவம்.. ஆல் லேடீஸ்.. நல்லா ஏமாந்துடறாங்க.. 


http://the70mm.com/wp-content/uploads/2011/08/director-BANDI-SAROJ-KUMAR.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இந்தப்படத்துக்கு மொத்த செலவே அதிக பட்சம் 5 லட்சம் தான் ஆகி இருக்கும்.. ஆனா புரொடியூசர்ட்ட எவ்ளவ் தேத்துனாரோ..? பாராட்டுக்கள்

2. சமீபத்தில் ரிலீஸ் ஆன ஹிந்தி டப்பிங்க் படமான காட்டுப்புலியில் அர்ஜீன் இருந்தும் அந்தப்படம் டப்பா ஆனது தெரிந்தும் அதே வித கதையை தைரியமாக எடுத்தது.. 

3. ஒரு காடு.. அதுக்குள்ள போற ஒரு குரூப், அதுல 2 லேடீஸ், 3 ஜெண்ட்ஸ் என்ற ஃபார்முலாவில் ஆங்கிலத்தில் ஏகப்பட்ட படங்கள் வந்து அடிவாங்கியும்  தில்லா அந்த சப்ஜெக்டை கையில் எடுத்தது...



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  ஓப்பனிங்க் ஷாட்ல அந்த அழுக்கு மூட்டை கடற்கரை ஓரமா கடல் அலைல கால் வெச்சு ரன்னிங்க்ல வர்றாரே.. எதுக்கு? கொஞ்சம் தள்ளி மணல்ல சாதாரணமா வரக்கூடாதா? ( பில்டப்?)

2. டைட்டில் போடறப்ப ரொம்ப வித்தியாசமா பண்றதா நினைச்சுக்கிட்டு  அந்தந்த கேரக்டர் பேரு, விலாசம் எல்லாம் பிளாக் லெட்டர்ஸ்ல போட்டீங்களே, மனசுக்குள்ள மணி ரத்னம்னு நினைப்பா? ஒண்ணும் புரியல. ஒரு எழுத்தும் தெரியல..


3. அந்த 2 ஃபிகர்கள்ல யாராவது ஒரு ஆள் கூட லவ்வ வெச்சிருக்கலாம். கிளாமராவது தேறி இருக்கும். அதையும் பண்ணலை.. 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 30


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ம்ஹூம்

 சி.பி கமெண்ட் -   அய்யய்யோ. சல் தா நஹி..  ஹி ஹி 





 இந்த குப்பையை அண்ணா தியேட்டர்ல பார்த்தேன் .. மொத்தம் 14 பேர் படம் பார்த்தோம்

லக்கி லுக் நானா? என் சம்சாரம் குஷ்பூ வா? மசாலா கபே ஓனர் சுந்தர் சி பேட்டி - காமெடி கும்மி

http://i.imgur.com/Qb3nh.jpg


''நான் சினிமாவைச் சந்தோஷமான அனுபவமாத்தான் பார்க்கிறேன். அழவைக்கிறதிலோ, அதிரவைக்கிறதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. ரஜினி, கமல், அஜீத்னு பெரிய ஹீரோக்களோடு படம் பண்ணியாச்சு. கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு 'உள்ளத்தை அள்ளித்தாமாதிரி சிரிக்கவைக்கிறதுக்காகவே ஒரு படம் கொடுக்க ஆசை. அப்படி ஒரு ஸ்கிரிப்ட் 'மசாலா கபே’ -  



சி.பி - அழ வைக்கறதுல உடன் பாடு இல்லையா? அண்ணே.. நீங்க நடிச்ச நகரம் படம் பாருங்கண்ணே. 

 ''விமல் - மிர்ச்சி சிவானு ரெண்டு பேரும் காமெடியில் அப்படி அசத்துறாங்க. அதிலும் சிவா பேசறது, சிரிக்கிறது எல்லாமே காமெடிதான். ஹீரோயின் அஞ்சலி. ஒரு படத்தில் அவங்க எனக்கு ஹீரோயினா நடிச்சிருந்தாங்க. 'களவாணிமூலமா மனசைக் களவாடின ஓவியா. இந்த ஜோடிகளைச் சேர்த்துவெச்சு ஒரு கதை உருவாக்கியாச்சு

சி.பி - நல்ல வேளை. நான் எப்பவும் கதையை உருவாக்குவேன்,. அதுக்குப்பிறகுதான் அதுக்கு ஏத்த கதாநாயக நடிக நடிகைகளை தேடுவேன்னு கதை விடாம உண்மையை சொல்லீட்டீங்க.. 



 பெற்றோர்கள் பாரம்பரியமா நடத்தின மசாலா கபேயைப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி நடத்தறாங்கனு கதை. நம்ம ஜனங்களுக்கு ஏற்கெனவே எவ்வளவோ பிரச்னை.


சி.பி - ஆமாண்ணே. 9 தாராவுக்கு மேரேஜ் நின்னுடுச்சு, அனன்யாவுக்கு ஆஞ்சநேயர் அல்வா அடச்சே  வடை குடுத்துட்டார்.. நாட்டுல தான் எத்தனை பிரச்சனை..  


http://flickmotions.com/addons/albums/images/877878866.jpg


 அதனால, சினிமாவுக்கு வந்து அங்கேயும் மெசேஜ் சொல்லி அவங்களை டயர்ட் ஆக்காம, முழுக்க முழுக்கச் சிரிக்கவைக்கிற மாதிரி வேலை பண்ணி இருக்கோம். இதை இந்திக்கும் கொண்டுபோக வேலை நடக்குது. என்னைப் பொறுத்த வரை ஜனங்களைச் சிரிக்கவைக்கிறதுதாங்க இருக்கிறதிலேயே பெரிய வேலை!''


சி.பி - நீங்க டைரக்டரா ஆடியன்சை சிரிக்க வெச்சீங்க, ஓக்கே ஆனா ஹீரோவா பல புரொடியூசரை அழ வெச்சுட்டீங்களே?

''நீங்களும் வடிவேலுவைக் கைவிட்டுட்டீங்களே?''

''அப்படி இல்லைங்க. எவ்வளவோ படங்களில் நானும் வடிவேலுவும் இணைஞ்சு விளையாடி இருக்கோம். அதே மாதிரியே விவேக், சந்தானம் காமெடியும் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. 'மசாலா கபேகேரக்டருக்கு சந்தானம் ரொம்பப்  பொருத்தமானவரா இருந்தார். என்னோட வெற்றியில் பெரும்பங்கு வடிவேலு, விவேக், சந்தானத்துக்கு உண்டு. எவ்வளவோ காதல், ஆக்ஷன் படங்கள் செஞ்சு இருக்கேன். ஆனால், எல்லோராலும் சொல்லப்படறது, 'சுந்தர் நல்லா காமெடியாப் படம் பண்ணுவார்ங்கிறதுதானே? இதில் 'வெட்டுப்புலிங்கிற கேரக்டர் சந்தானத்துக்கு. அவருக்கு இந்தப் படம் மூலமா இன்னும் பெரிய ரீச் இருக்கும்.''


சி.பி - அண்ணே, எதுக்கு சுத்தி வளைக்கறீங்க? விவேக்குக்கு மார்க்கெட் இல்லை. வடிவேல்க்கு சான்ஸ் குடுத்தா ஆளுங்கட்சியை பகைச்சுக்கிட்ட மாதிரி ஆகிடும். மார்க்கெட்ல இப்போ நல்லா ஓடற குதிரை சந்தானம் தான். அதனால புக் பண்ணீங்கன்னு ஓப்பனா சொல்லுங்க. யாருக்குத்தெரியாம இருக்கு?

''ஏன் நடிகரா இருந்தது போரடிச்சிடுச்சா?''


சி.பி - போர் எல்லாம் அடிக்கலை, மக்களுக்கு போரடிச்சுடுச்சு 

 http://www.rameshcelebs.com/wp-content/uploads/2010/08/oviya.jpg

''தொடர்ந்து மூணு ஹிட்ஸ் கொடுத்தேன். என்னைவெச்சுப் படம் எடுத்தவங்க யாரும் இன்டஸ்ட்ரியைவிட்டுப் போகலை. ஏதாவது சில படங்கள் தோல்வி அடைஞ்சிருந்தால், அதுக்கு என்னோட அஜாக்கிரதைதான் காரணமா இருக்கும். நடிகனா நான் ரொம்ப ஆவரேஜ்தான். ஆனால், டைரக்டரா என்னோட ஹிட்ஸ் பெரிசு. இப்போதைக்கு நடிப்புக்கு சின்ன பிரேக். நல்ல கதை கிடைச்சா கண்டிப்பா அது தொடரும்!''


சி.பி - ஆண்டவா! சுந்தர் சிக்கு நல்ல கதை மட்டும் சிக்கிடக்கூடாது.. ஹீரோவா நடிச்சு கொலையா கொல்லுவாரு.. அதை மட்டும் நீ பார்த்துக்கோ. அவர் டைரக்ட் பண்ற படத்தை நாங்க பார்த்துக்கறோம். 
''குஷ்பு அரசியலில் இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?''


சி.பி - அதுல அவருக்கு என்ன கஷ்டம்? லாபம் தான்./. அரசியல் பின்புலம் உள்ளவரோட கணவர் என்பதில் க்ர்த்து தான். அடிக்கடி சம்சாரம் கூட்டம், பிரச்சாரம்னு வெளீல கிளம்பிடுவார்,.. சல்லை விட்டதுன்னு இவர் ஜாலியா இருக்கலாம்.. 
''அது அவங்க இஷ்டம். அவங்க எதைச் செஞ்சாலும் சிறப்பா செய்வாங்க


சி.பி - ஹி ஹி ஹி.. நீங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.. 



 அவங்க செயல்பாடுகள்ல தலையிடுறது என் வேலை இல்லை. கணவரா இருந்திட்டால் எல்லாத்திலும் தலையிட்டு கருத்துச் சொல்லணும்கிற அவசியம் இல்லையே?''



சி.பி - இந்தக்காலத்துல எந்த சம்சாரம் தான் புருஷன் கருத்தை மதிக்குது? ஹூம்.  

''என்ன இருந்தாலும் குஷ்பு கணவர்னுதானே நீங்க அறியப்படுறீங்க?''


சி.பி - இப்படியா பப்ளிக்கா கேட்கறது? அண்ணன் ரொம்ப யோசிக்கறார் பாருங்க.  


http://i.imgur.com/7oErB.jpg
''நான் டைரக்ட் பண்ற 25-வது படம் 'மசாலா கபே’. 11 படங்களில் ஹீரோவா நடிச்சிட்டேன். ஆனாலும், எங்கே போனாலும் தமிழ் மக்கள் என் கையைப் பிடிச்சிட்டுக் கொண்டாடுறது 'குஷ்பு புருஷன்னு சொல்லித்தான். நான் சினிமாவில் நுழையும்போது, குஷ்பு பெரிய ஹீரோயின். ரஜினி, கமல்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளோடு நடிச்சிட்டாங்க. அப்போ நான் புது டைரக்டர். இவ்வளவு படம் செய்யப்போறேன்னு அன்னைக்குத் தெரியாது. ஆனாலும், என்னைக் காதலிச்சுக் கணவரா ஏத்துக்கிட்டாங்க


சி.பி - ஓஹோ.. வாழ்க்கை கொடுத்துட்டரா? குட் வெரி குட்
குஷ்பு செஞ்சதுதான் பெரிய தியாகம். அதுக்காக என்னைக் 'குஷ்பு புருஷன்னு சொல்றதை அழகா ஏத்துக்கிட்டுப்போறேன். குஷ்புவுக்காக இந்தச் சின்ன தியாகத்தைக்கூட நான் செய்ய மாட்டேனா என்ன?''


சி.பி - நீங்க தியாகியா? அவர் தியாகியா?ன்னு போகப்போகத்தெரியும். இந்த பூவின் வாசம் புரியும்.  



http://123tamilforum.com/imgcache2/2012/04/DSC_0289-1.jpg


டிஸ்கி - சுந்தர் சி பேட்டில அவர் ஃபோட்டோவையும் காணோம்.. அவர் சம்சாரம் ஃபோட்டோவையும் காணோம் என யாரும் அங்கலாய்க்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. பை மசாலா கஃபே ஸ்டில்ஸ் ரசிகர் மன்றம் ஹி ஹி

ஆர்யக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு - என்னா அர்த்தம்? (ஜோக்ஸ்)

http://www.tamilqueens.com/wp-content/uploads/2010/12/Tapsi-panu-1.jpg

1.செக்ஸ் குற்றம் என நினைப்பவர்கள் எக்ஸ்சைல் படிக்க வேண்டாம்_இந்திரா பார்த்தசாரதி!# அண்ணன்  நெகடிவ் விளம்பரம் பண்றார் போல.

----------------------------------

2. அணையை மத்திய அரசே பாதுகாக்க வேண்டும் -மு.க # அன்னை சோனியாவுக்கு , நான் எழுதும் கடிதங்களை வழக்கம் போல் சீரியஸாக எடுத்துக்கவேணாம் - கலைஞர்

-----------------------------------------

3.பிரசவத்தின் போது கூடவே இருந்த 2 கணவர்கள்! # ஒன்றுக்கு மேல் இப்போது வேண்டாம் 2க்கு மேல் எப்போதும் வேண்டாம்கறதை இப்படி புரிஞ்சுட்டாங்க போல

--------------------------------------

4. வீணா நிர்வாணபோஸ் கொடுத்த‌தை நிரூபிக்க ஷூட்டிங்கில் எடுத்த  புகைப்படங்களை வெளியிடுவோம் # நீங்கதான் ”வீணா” போன ஆளுங்களா? ஹய்யோ அய்யோ

-------------------------------------------

5. @iyyanars  - நேத்து உத்தம பாளையம் வரை போயிட்டு வந்தேன்.  

@senthazalravi - அதெல்லாம் உத்தமனுங்க போற ஊரு, நீங்க ஏண்ணே போனீங்க?

-----------------------------

6. ஜட்ஜ் ஒரு சினிமா பைத்தியம்னு எப்படி சொல்றே? 

கூண்டில் நிற்கும் மர்டர் கேஸ் மாடசாமி கிட்டே “ஒய் திஸ் கொலை வெறி?”னு கேட்டாரே?

---------------------------------

7. எல்லை தாண்டியதாக இந்திய குரங்கு பாகிஸ்தானில் சிறைபிடிப்பு # அய்யய்யோ, அப்புறம் எப்படி ஒஸ்தியை ரிலீஸ் பண்ணப்போறாரு?

----------------------------------

8. இன்று ஏற்றத்துடன் தொடங்கியது வர்த்தகம் # காரணம் சாருவின் புத்தக ரிலீஸ் தானாம் ஏத்தத்துடன் அன்னார் அறிக்கை

-----------------------------------

9. என் தொழில் பற்றி எனது கணவருக்கு நன்றாக தெரியும்; அவரது அனுமதியுடன்தான் கவர்ச்சியாக நடிக்கிறேன்- ஸ்வேதா மேனன். # நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்

--------------------------------------

10. பூனை - சிறு குறிப்பு வரைக 

பூனை குறுக்கே போறப்ப பிரேக் அடிச்சா அவன் நல்லவன், பேக் அடிச்சா பயந்தாங்கொள்ளி, பூனையையே அடிச்சுட்டா வண்டி ஓட்டத்தெரியாதவன்

-------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj89FvQ1B7JT8pKrq5JbpqO97cYQCz87q2FGMT48H9JddiXD95JXqiuPUYkdwcIpWkzMuh95swsIEAsCtOJQVqMUl65DXPitWQ3NguGYzk1H3fEKr5UQMjuABcZUNd4JYNFdblgjsYGpzA/s1600/tapsi-photos089.jpg

11. தமிழக ஐயப்ப பக்தர்களுக்கு கேரளத்தில் ஆபத்துன்னா  094474 74009 # போலீஸ்கார் ,போலீஸ்கார் தமிழ்நாட்லயே ஆபத்து ஏற்பட்டாலும் சேம் நெம்பருங்களா?

----------------------------------------

12. பெண்களோட கேள்விகளுக்குத்தான் அதிகம் பதில் வருதே , ஏன்?

ஏன்னா ஆம்பளைங்களுக்கு கேள்வி கேட்க எல்லாம் டைம் இல்ல, வெரி பிசி

------------------------------------

13. எக்ஸைல்  படித்தவர்கள் பாதி/கால் விலைக்குத் தரமுடியுமா?

எதுக்கு காசை வேஸ்ட் பண்றீங்க? லைப்ரரி போனா  ஓசில படிக்கலாமே?

-----------------------------------

14. டிபி-ல குழந்தை ஃபோட்டோ வெச்சா  உங்க குழந்தையானு ஏன் கேட்கறீங்க?

சும்மா ஒரு பிட்டு போடறதுதான், அப்பதான் மேரேஜ் ஆகாத ஃபிகரானு தெரியும்?

---------------------------------

15.மேடம். இந்தப்படத்துல நிறைய அசைவக்காட்சிகள் இருக்கு.

க.நடிகை- நோ பிராப்ளம்.. எனக்கும் மட்டன், சிக்கன்னா உயிரு , ஒரு வெட்டு வெட்டிடுவோம்

---------------------------------

16. ஆர்யக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு - என்னா அர்த்தம்?

ஆர்யா ஷூட்டிங்க் ஸ்பாட்ல பிசியா இருந்தாலும் நைஸா ஆட்டோகிராஃப் வாங்கிடனும்

--------------------------------------

17. எழுதி வச்சிக்கோங்க... "காலையில ஹவுஸ் ஓனர் பொண்ணு முகத்துல விழிச்சா, அன்னக்கி எல்லா  காரியமும் சுபம் # ஹி ஹி எதிர் கிச்சு அல்ல

----------------------------------

18. ஜெயில் வார்டனைப்பார்த்து “ஒரு மணி ஆனா போடனும் சாப்பாடு, இல்லைன்னா போடுவேன் கூப்பாடு”னு சொல்லுங்க..


 இது பஞ்ச் டயலாக்கா? லஞ்ச் டயலாக்கா?

----------------------------------------

19. மறைக்க முயன்றாலும் மனதிலுள்ள கோபத்தை வெளிப்படுத்திவிடுகின்றனவே என்  விழிகள்.என்ன செய்ய?

கூல்.. ஜஸ்ட் யூஸ் கூலிங்க் கிளாஸ் ஹி ஹி

----------------------------------------

20.ரொம்ப கஷ்டம், அண்ணியோட நகை தந்தா ஒரு பிஸ்னெஸ் செஞ்சு பொழச்சுப்பேன்

.அந்நிய முதலீடும் சரி அண்ணியின் முதலீடும் சரி ஆபத்தை விளைவிக்கும், சாரி

-------------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEioWJDBnit0WAHtClKHkSfNYxbpq8PNXWcLg_8m-3gFsksZMtDUq_kJy_IfFQC0ICC_yioAEqVucWHfunNKtXugMVhGWM9AalBr6NhdqDEwAL4wkCQj2-auMRShZzmLFunf4rENsQHN8duR/s1600/tapsee2.jpg