Showing posts with label குப்பை. Show all posts
Showing posts with label குப்பை. Show all posts

Tuesday, April 10, 2012

அஸ்த்தமனம் - டைரக்டருக்கா? புரொடியூசருக்கா? - சினிமா விமர்சனம்


http://a5.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/558035_285405198201803_156082301134094_625404_17530697_n.jpg 

வெண்ணிலா கபாடிக்குழு படத்துல கபடி கோச்சா நடிச்ச கிஷோரை ஹீரோவா போட்டு போர்க்களம்னு ஒரு படம் எடுத்த டைரக்டரோட அடுத்த படம்.. அந்தப்படத்துல மேக்கிங்க் ஸ்டைல் நல்லாருந்தது.. படம் பெரிய அளவில் ஹிட் ஆகலைன்னாலும் நாளைய வெற்றி இயக்குநரா வருவார்னு ஒரு நம்பிக்கையை கொடுத்த படம் அது.. அந்த நம்பிக்கையை  தவிடு பொடி ஆக்கும் படம் இது..

3 பசங்க, 2 பொண்ணுங்க ஒரு கார்ல  கிளம்பறாங்க.. ட்ரெக்கிங்க் போறதா பேசிக்கறாங்க.. ஆனா ட்ரெக்கிங்க் குரூப்க்கு சம்பந்தமே இல்லாம ஒரு ஜிகிடி கார்லயே எப்போ பாரு கண்ணாடியை பார்த்து பார்த்து லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டே இருக்கு. ( இட் ஈஸ் எ கடிக்கல் மிராக்கிள் யூ  நோ ..?). மேக்கப் மேனகா?

இன்னொரு  ஜிகிடி என்னமோ நாவல் படிக்கவே பிறந்த மாதிரி இங்கிலீஷ் நாவலை படிச்சுக்கிட்டே வருது..   உடம்பு தடிப்பாளினி ஆன படிப்பாளினி ( படிப்பாளீ நீ? கவித கவித !!)உண்மையிலேயே ட்ரெக்கிங்க்ல ஆர்வம் உள்ள ஆளுங்கன்னா ஜன்னல் ஓரம்  வெளீல வேடிக்கை பார்த்துட்டு தானே வரனும்.. 5 பேர்ல ஒரு ஆள் கூட அப்படி வர்லை.

மத்த 3 பசங்களும் தீவிரவாதி ரேஞ்ச்ல இருக்காங்க.. தலை முடி கட் பண்ற வேலையோ, தாடியை ஷேவிங்க் பண்ற பழக்கமோ இல்லாதவங்க போல. டி ஆர் ஃபேனோ? ஓவர் பில்டப் உலக நாதன்.. ஒரு அழுக்கு மூட்டை.. . அவ்வ்வ்வ்.. நான் கூட ஓப்பனிங்க்ல  ஏதோ டெரரிஸ்ட் படம்.. தேசிய கீதம் படத்துல வர்ற மாதிரி ஒரு தலைவரை கிட் நாப் பண்ணப்போராங்க.. பாலம் படம் மாதிரி  வித்தியாசமான சப்ஜெக்ட்னு நினைச்சேன்.. அடங்கோ.. 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEij8rfHFB9poUQuNap8ut-dueGFcqU2BcqMHz9sNf2pSA10iJW3_1n32_T1WtL4qmOcadiJjcPY1KWFSGdQwDeFH5GAY3y9_fzipq827PWyNNBE-Ux4fDriLcT6f2luByZD2BmjQRIm7EA/s1600/asthamanam200111_4%255B1%255D.jpg


ட்ரெக்கிங்க்னா கொடைக்கானல், அல்லது மூணாறு மாதிரி ஏரியாவுல மலை ஏறுனும் தானே.. ஆனா இவங்க ஆள் அரவம் இல்லாத ஒரு காட்டுக்குள்ள போறாங்க.. அங்கே ஒரு கைடு.. அவனையும் கூட்டிக்கிட்டு  காட்டுக்குள்ள போறாங்க.. செம காமெடி என்னான்னா அந்த கைடு திடீர்னு யாராலோ தாக்கப்பட்டு செத்துடறாரு.. அதுக்குள்ள இடைவேளை..

உலக சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா 40 நிமிஷத்துல இடைவேளை  விட்ட தமிழ்ப்படம் இது தான்னு நினைக்கேன் ( நினைக்கறேன் என்பதன் சுருக் ஹி ஹி ( ம்க்கும்,.. இதுக்கு நினைக்கறேன்னு முழுசாவே போட்டிருக்கலாம்.. மனசுக்குள்ள சுஜாதான்னு நினப்பு.. )0

ஒரு ஆள் செத்ததும் டக்னு நாம ரிட்டர்ன் போயிடலாம்னு எல்லாரும் பேக் அடிக்கறாங்க.. ஆனா ஒரு காட்டு வாசி குரூப்ல மாட்டிக்கறாங்க .. 5 பேருல 2 ஆளுங்க அவுட்.. மீதி 3 பேரும் எஸ் ஆகிடறாங்க.. அவ்ளவ் தான் கதை.. இடைவேளைக்குப்பிறகு  30 நிமிஷம் தான்..

இவ்லவ் மொக்கைப்படத்துலயும் டைரக்டர் ஒரு சேதி சொல்றார்.. அது இன்னான்னா பொம்பளைங்களுக்கு ஆயுள் ஜாஸ்தி.. எப்படியும் எஸ் ஆகிடுவாங்க.. ஆம்பளைங்க தான் முட்டாப்பசங்க .. ஆபத்துல மாட்டிக்குவாங்க.. இதான் அந்த மெசேஜ்.. அய்யோ பாவம் ( வேற யாரு.. படம் பார்த்த அந்த 19 ஆடியன்ஸும் தான்.. )

படத்துல பாராட்டியே ஆகனும்னா 3 பேரை பாராட்டலாம்.. இவ்ளவ் மொக்கையான படத்தை தைரியமா படம் ஆக்கத்துணிந்த  தயாரிப்பாளர்,  2 வது படத்துலயே சம்பாதிச்சு வெச்ச பேரை கெடுத்துக்கிட்ட ட்டைரக்டர்.. சும்மா ஹேண்டி கேமராவை வெச்சே நல்ல குவாலிட்டி குடுக்க முயற்சித்த ஒளிப்பதிவாளர்.. 


http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/asthamanam/wmarks/asthamanam01.jpg

மொத்த ஸ்கிரிப்ட்டில் 2 ஏ 4 சீட்டில் தான் மொத்த வசனமே.. அதில் தேறியவை 


1.  இப்போ நீ யாருக்கு கிஸ் தரப்போறே? லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டே இருக்கே? ( லிப்ஸ்டிக் சும்மா அழகுக்கு.. கிஸ் அடிச்சா கசக்கும் யுவர் ஆனர்..  எல்லாம் ஒரு ? ஞானம் ஒன்லி ஹி ஹி )


2.  எதுக்குடா துப்பாக்கியை கையில் எடுக்கறே..?

 அவன் ஓவரா பேசினா போட்றலாம்னு தான்.. 

 ஆல்ரெடி அவன் ஓவராத்தான் பேசிட்டு இருக்கான்.. சும்மா சீனைப்போடாத,.. 


3.  கைடுன்னா ஏதோ காட் ஃபாதர் மாதிரி இருப்பார்னு பார்த்தா ஆள் கஞ்சா கறுப்பு மாதிரி இருக்காரே.. 

4.  கைடு - எதுக்காக காட்டுக்குள்ள போகனும்னு நினைக்கறே?

டிரெக்கிங்க்

 அடடா.. டிரக் எல்லாம் அங்கே போகாதே.. ( இது ஜோக்காம் ஹி ஹி )

5.  எதுக்கும் பயப்படாதீங்க.. நம்ம கிட்டே ( அதாவது அவன் கிட்டே) கன் இருக்கு,. 

 கைடு - லைசன்ஸ் இருக்கா? ( மடக்கிட்டாராம். ஹய்யோ அய்யோ )


6.  பைனாகுலரை குடு.. 

 இந்தா 

 ரொம்ப தூரமாத்தெரியுதே.. 

 பைனாகுலரை திருப்பிப்பிடிடா.. 

இப்போ ரொம்ப பக்கமா தெரியுது... 

7.  கைடு - காசு வேணா முன்னே பின்னே  கொடுங்க.. ஆனா ஒரே ஒரு வாட்டி......

( இந்த டைம்ல அந்த 2 ஜிகிடிங்களும் பம்முது)

24 மணி நேரமும் ஹெல்மட்டோட அலையறானே இவன் முகத்தை ஒருக்கா பார்க்கனும்.. 


8. இந்தப்பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலையே.. 

 அப்போ ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. எல்லாம் புரிஞ்சுடும்

 ம்.. அதான் தேடிட்டு இருக்கேன்.. 

 9.  ஜிகிடி - என்ன? அட்வாண்டேஜ் எடுக்கப்பார்க்கிறியா? 


ஆமா.. இவ பெரிய விண்ட்டேஜ் விமலா ( இந்த டயலாக் நான் எழுதுனது.. ஹி ஹி .. படத்துல இல்லை)

10. அந்த காட்டுவாசிக்கு தமிழே  தெரியாது.. இவ இங்கிலீஷ்ல பேசறா


11. அந்த காட்டுவசிப்பொண்ணு என்னடா பண்றா?,

 உன்னை லவ் பண்றான்னு நினைக்கறேன்.. உன்னையே முறைச்சு முறைச்சு பார்க்கறா.. 

 டேய் டேய் எப்படியாவது அவ கிட்டே பேசி எங்களை இந்த காட்டுல இருந்து எஸ் ஆக வைடா.. 


12.  ஆண்டவன் செஞ்ச ஒரே நல்ல காரியம் எது தெரியுமா?.. கெஞ்சிக்கேட்டா குடுக்கற மனோபாவத்தை பொண்ணுக்கு குடுத்ததுதான்..  பாவம்.. ஆல் லேடீஸ்.. நல்லா ஏமாந்துடறாங்க.. 


http://the70mm.com/wp-content/uploads/2011/08/director-BANDI-SAROJ-KUMAR.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. இந்தப்படத்துக்கு மொத்த செலவே அதிக பட்சம் 5 லட்சம் தான் ஆகி இருக்கும்.. ஆனா புரொடியூசர்ட்ட எவ்ளவ் தேத்துனாரோ..? பாராட்டுக்கள்

2. சமீபத்தில் ரிலீஸ் ஆன ஹிந்தி டப்பிங்க் படமான காட்டுப்புலியில் அர்ஜீன் இருந்தும் அந்தப்படம் டப்பா ஆனது தெரிந்தும் அதே வித கதையை தைரியமாக எடுத்தது.. 

3. ஒரு காடு.. அதுக்குள்ள போற ஒரு குரூப், அதுல 2 லேடீஸ், 3 ஜெண்ட்ஸ் என்ற ஃபார்முலாவில் ஆங்கிலத்தில் ஏகப்பட்ட படங்கள் வந்து அடிவாங்கியும்  தில்லா அந்த சப்ஜெக்டை கையில் எடுத்தது...



 இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  ஓப்பனிங்க் ஷாட்ல அந்த அழுக்கு மூட்டை கடற்கரை ஓரமா கடல் அலைல கால் வெச்சு ரன்னிங்க்ல வர்றாரே.. எதுக்கு? கொஞ்சம் தள்ளி மணல்ல சாதாரணமா வரக்கூடாதா? ( பில்டப்?)

2. டைட்டில் போடறப்ப ரொம்ப வித்தியாசமா பண்றதா நினைச்சுக்கிட்டு  அந்தந்த கேரக்டர் பேரு, விலாசம் எல்லாம் பிளாக் லெட்டர்ஸ்ல போட்டீங்களே, மனசுக்குள்ள மணி ரத்னம்னு நினைப்பா? ஒண்ணும் புரியல. ஒரு எழுத்தும் தெரியல..


3. அந்த 2 ஃபிகர்கள்ல யாராவது ஒரு ஆள் கூட லவ்வ வெச்சிருக்கலாம். கிளாமராவது தேறி இருக்கும். அதையும் பண்ணலை.. 


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 30


எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - ம்ஹூம்

 சி.பி கமெண்ட் -   அய்யய்யோ. சல் தா நஹி..  ஹி ஹி 





 இந்த குப்பையை அண்ணா தியேட்டர்ல பார்த்தேன் .. மொத்தம் 14 பேர் படம் பார்த்தோம்

Tuesday, March 27, 2012

நந்தா நந்திதா - கோவிந்தா கோவிந்தா - சினிமா விமர்சனம்

http://incinema-images.s3.amazonaws.com/indiancinema/wp-content/uploads/2012/03/nandha_hme.jpgஹீரோ ஒரு பொறுக்கி.. ஹீரோயின் ஒரு கிறுக்கி.. பின்னே பொறுக்கியை லவ் பண்ற சிறுக்கியை எப்படி கூப்பிட? ஹீரோவை ஹீரோயின் எதனால லவ் பண்றா-ன்னு டைரக்டர் காட்டறப்ப  ஆல் ஆடியன்ஸ் கிளாப்ஸ்.. அது இன்னான்னா ஹீரோ பல் துலக்கறப்ப பிரஷ் யூஸ் பண்ணாம கை விரலாலயே பல் துலக்கறாரு.. ஈரோடு மாவட்டத்துல பாதிப்பேரு அப்படித்தான் துலக்கறாங்க.. ஆனா பாருங்க பாப்பா அதை பார்த்து எஸ் வி சேகர் நாடகம் பார்த்த எஃபக்ட்ல சிரியோ சிரின்னு சிரிக்குது.. லவ் ஸ்டார்ட் ஆகுது.. 

எங்க ஏரியாவுல விடியாமுகரைன்னு சொல்வாங்க. அதாவது எப்போ பாரு முகத்தை உம்முன்னு வெச்சிருப்பான்.. குளிக்கவே மாட்டான்.. தாடியோட இருப்பான்.. அவனை பார்த்துட்டு போனா எந்த காரியமும் விளங்காது.. அந்த விடியா முகரை மாதிரி தான் ஹீரோ இருக்காரு .. ஹி ஹி 

ஹீரோ லோக்கல் ரவுடி.. 2 தாதாக்கள் மோதல்ல ஒரு தாதாவை போட்டுத்தள்ள நியமிக்கப்படறாரு.. அவர் எஸ் ஆகி எதிராளியை போட்டு தள்ள வர்றப்ப ஹீரோயின், அவங்கம்மா, அவங்க தம்பி... எல்லாரையும் க்ளோஸ்... 

 கடைசில எண்ணிப்பார்த்தா படத்துல மொத்தம் 89 கொலைகள்.. 113 வெட்டு குத்து

 ஹீரோ பேரு ஹேமச்சந்திரனாம்.. நாமச்சந்திரன்னு வைக்கலாம்.. தேறவே மாட்டார். 

 ஹீரோயின்  மேக்னா. ஆல்ரெடி பாணா காத்தாடில நடிச்சவர் தான்.. மெழுகு பொம்மை மாதிரி  மொழு மொழுன்னு இருக்கார். ஒரு சீன்ல ஹீரோ துரத்தும்போது ஸ்லோ மோஷன்ல ஓடி வர்றப்ப ஹி ஹி ஹி 

http://mimg.sulekha.com/tamil/nanda-nanditha/images/stills/nanda-nanditha-images-045.jpg

. மனதில் நின்ற வசனங்கள்


1.  எவ்ளவ் படிச்சிருக்கீங்க?

எம் பி ஏ படிக்கனும்னு நினைச்சேன்.. ஆனா அஞ்சாங்கிளாஸ் தான் படிச்சேன்.. நீங்க? 

மீ சிக்ஸ்த். 

 பேக் எல்லாம் வெச்சிருக்கீங்க.. பெரிய படிப்பு படிச்சு இருப்பிங்கன்னு நினைச்சேன். 

2. புனித யாத்திரை போறீங்களா?

 அது பொழப்பத்தவங்க செய்யறது


3.  காட்டிக்கொடுக்கிறவன்களுக்கும், கூட்டிக்கொடுக்கிறவங்களுக்கும்  ஒரு மைனஸ் பாயிண்ட் கண்டிப்பா இருக்கும்.. அவன் மைனஸ் என்ன?

 சரக்கு அடிக்கும்போதும், பொண்ணோட இருக்கறப்பவும் தனியா தான் இருப்பான். 


4. பொண்ணுங்க தலை வாரி பூச்சூடி இருக்க 1000 காரணங்கள் இருக்கலாம்.. ஆனா ஆம்பளை தலை சீவி பவுடர் அடிச்சு அலங்காரம் பண்ண ஆரம்பிச்சா அதுக்கு ஒரே அர்த்தம் தான்..


5.  பசங்க புது டிரஸ் போடறதே பொண்ணுங்க பார்க்கத்தானே?

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjjWVjSLjZHelxI7NddMArdgTthhbmfraZgZqwKmMDnWnuZ-fggNorLrvjCMSqwPMxUMpFxYLwgUTg-Pjt6vXfzqEDojyNiIIadofs2nk3s7IM8UCXWJTOIYfMt3ApUVjEeUnX1EeJSYVE/s1600/nanda-nanditha-high-resolution10.jpg

6. கடவுள் எனக்காக என்னங்க செஞ்சாரு?அம்மா இறந்தாச்சு.. அப்பா என்னை துரத்தி விட்டாரு.. 

 செய்வார் செய்வார்.. வெயிட்

 முதல்ல அவர் செய்யட்டும். அப்புறமா கோயில்க்கு வர்றேன்.. 


7. நம்மளை மாதிரி அரசியல் வாதிங்க சினிமா, ரசிகர் மன்றம் இதை எல்லாம் கைக்குள்ள போட்டு வெச்சுக்கனும்.. யூஸ் ஆகும்.. 


8. லவ் பண்ற எல்லாரும் ஒரு நாள் சரக்கு அடிச்சு மட்டை ஆகியே தீரனும்.. 

9. அரசியல் பண்றது ஈசி.. ரவுடியிசம் பண்றது தான் கஷ்டம்.. எப்போ எங்கே இருந்து எதிரிங்க வருவாங்கன்னு தெரியாது..  யார் எதிரியா மாறுவாங்கன்னும் தெரியாது
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgL47jWS3P-56gkQmhb1LPOozLdYW2K_zxFv0kgvnZikzvVW4U30or9udN29JKACWBksgoRtOKeHJuh5SZGRYhdz0QFIbyXJo7sIDf2Gy0QsNqvA4xLOFwrDmpJ9ONffpOQyl-KmuT8Rk0/s1600/Nanda+Nanditha+Tamil+Movie+Songs+3.jpg

இயக்குநரிடம் சில கேள்விகள் ரிலேட்டிங்க் லாஜிக் சொதப்பல்கள்


1. ஹீரோ தன் அப்பாவைப்பற்றி குறை சொல்றப்ப< “  எங்கம்மாவை நீ தான் கொன்னேன்னு எனக்கு தெரியும்கறாரு.. சித்தி கிட்டே நீ எங்கப்பாவை மயக்கி எங்கம்மாவை துரத்துனே அப்டிங்கறார்.. ஆனா ஃபிளாஸ் பேக் சீன்ல ஹீரோவோட அப்பாவுக்கும், அம்மாவுக்கும் குடிப்பழக்கம் பற்றி சண்டை வருது.. அதுல மண்ணெண்ணெய் ஊற்றி அம்மா தற்கொலை.. அதுக்குப்பின் தான் சித்தி வருகை.. 


2. ஹீரோயின் சரவ சாதாரணமா வர்றாங்க. ஹீரோயின் கூட வர்ற தோழி ( கல்லூரி படத்துல தமனா கூட தோழியா வருமே அந்த ஃபிகரு) படத்துல வர்ற 19 சீன்ல  13 சீன்ல மல்லிகைப்பூ சரம் சரமா வெச்சுட்டு வருது.. 


3. ஹீரோ வில்லனை ஒரு சேரி ஏரியாவுக்கு கூட்டிட்டு வர்றான்.. அங்கே 2 கிமீ நடக்கறாங்க.. ஏன் கார்ல போகலை? வில்லனோட ஆளுங்களை விலைக்கு வாங்குன ஹீரோ ஏன் வில்லன் இடத்துல போடலை? மெனக்கெட்டு அவ்ளவ் தூரம் ஏன் வரனும்?

4. ஹீரோயின் எங்கே குடி இருக்காளோ அதே இடத்துல எந்த மாங்கா மடையனாவது வந்து கொலை செஞ்சு  ஹீரோயின் கிட்டே மாட்டுவானா? இத்தனைக்கும் அது ஆத்திரமா செய்யற கொலை அல்ல. பிளான் பண்ணி பண்ற கொலை.. 

5. காலேஜ்ல டிகிரி படிச்ச ஹீரோயின் தம்பி அடிக்கடி “ நான் கூலி வேலை செஞ்சாவது.... அப்டினு ஏன் டயலாக் பேசனும்? படிக்காதவங்க தான் அப்படி பேசுவாங்க.. 

http://www.thedipaar.com/pictures/resize_20110925042213.jpg

6.  ஹீரோ - ஹீரோயின் ஊடல் டைம்ல தோழி கிட்டே ஹீரோ ஹீரோயின் ஏன் ஊறுகாய் கம்பெனிக்கு வேலைக்கு வர்லை?ன்னு கேட்கறார்.. அதுக்கு தோழி தெரியாதுங்கறா.. அப்புறம் ஒரு சீன்ல ஹீரோயின்  அந்த தோழி கிட்டே ஹீரோவை பார்த்தியா?ன்னு கேட்கறப்ப “ உன்னைத்தான் கேட்டாரு”ன்னு சொல்லலை.. நான் அவரைப்பார்க்க;லைன்னு சொல்றாரு  ( ஒரு வேளை அந்த தோழி.. ஹீரோவை கரெக்ட் பண்ண பிளான் போட்டு அந்த கிளைக்கதை எடிட்டிங்க்ல கட்டோ?)

7. வில்லன் அடியாளுங்க மண்டபத்துல  ரகளை பண்றப்ப அவனவன் கதறிட்டு ஓட வேணாம்? அவனவன் கைல வெச்சிருந்த பார்சலை பத்திரமா எடுத்திட்டு ஓடிட்டிருக்காங்க.. அவ்வ்வ்வ் 

8.ஹீரோ கேரக்டர் சரியா சித்தரிக்கப்படலை ... அதே போல் ஹீரோயின் ஒரு டைம் ஹீரோ ரவுடி என்பதால் வெறுக்கறார்.. இன்னொரு டைம் அது பற்றி எல்லாம் கவலையே படலை..

9. ஹீரோயின் நைட் ஓ டி முடிச்சுட்டு கம்பெனில இருந்து வர்றப்ப என்னை ரவுடிங்க தூக்கிட்டு வந்துட்டாங்க அப்டிங்கறார்.. அப்போ எப்பவும் கூடவே வரும் தோழி எங்கே? 5 ரவுடிங்க சேர்ந்து 2 பேரை தூக்கிட்டு வர முடியாதா? ஏன் தோழியை விட்டுட்டு வந்துட்டாங்க?


10. இந்தப்படத்து மூலமா நீங்க சொல்ல வர்ற கருத்து வன்முறை கூடாது என்பதா? அதுக்கு ஏன் இத்தனை வன்முறை படத்துல?

http://gallery.oneindia.in/viewimage.php?module=ph&size=big&path=2011/11/&file=1320923871662184.jpg


 எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 35 ( இது ஒரு தெலுங்கு டப்பிங்க் என்பதால் நோ விமர்சனம் இன் விகடன் .. ஒரிஜினல் டைட்டில் நந்தா லவ்ஸ் நந்திதா)

 எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் -  டி வி ல போட்டா க்ளிப்பிங்க்ஸை கூட பார்த்துடாதீங்க 

 இந்த குப்பையை ஸ்ரீ கிருஷ்ணாவில் கூட்டினேன்.. அடச்சே பார்த்தேன்.


http://4.bp.blogspot.com/-w6MCYughKBY/TwWZITLrOQI/AAAAAAAAcoc/LRd0VoU9Yx0/s1600/Meghana+Actress+hot+stills.jpg.