
1.கவிதை எழுதுபவர்கள் அனைவருமே காதலிப்பவர்கள் அல்ல, ஆனால் காதலிப்பவர்கள் அனைவருமே கவிதைக்காரர்களே!
--------------------------
2. பொதுவான கவிதை கவனிக்கப்படுகிறது, காதல் கவிதைகள் ரசிக்கப்படுகிறது,காதலில் ஈடுபட்டவன் எழுதிய கவிதை நேசிக்கப்படுகிறது
-------------------------
3. தனது காதலை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்தியபோது நிராகரிக்கப்பட்ட பலர் கவிதைகளாக வடித்து காதலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்
--------------------------
4. ஜெயா டிவியில் சிம்ரன் மட்டுமல்ல மதன், யூகி சேது மற்றும் பலரும்...!! # அய்யய்யோ,அவங்களும் சட்டையை சட்டை பண்ண மாட்டாங்களா? டாப்லெஸ்?அவ்வ்
-------------------------
5. வரைமுறைகளை தாண்டி நடித்திருக்கிறேன்! சில்க் வேடம் பற்றி வித்யாபாலன்!! # சென்சார் விதிமுறைகளை தாண்டி வந்தா சரிதான் மேடம்
--------------------------

-----------------------
6. வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் உரித்தாகும்,ஆனால் கூட அவன் அன்புக்குரியவள் இருக்கும்போது மட்டும் வெளிப்படும்----------------------------
7. நேரத்தை பணயம் வைத்து இணையம் எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்கவே இல்லை, உன் மவுன மொழிக்கான அர்த்தங்களை
----------------------
8. காரணமே இல்லாமல் சும்மானாச்சுக்கும் ஒரு குழந்தை அழும்போது அதன் அம்மாவைத்தவிர சுலபமாக யாராலும் அழுகையை நிறுத்தி விட முடியாது
-----------------------
9. காகிதத்தில் காதல் கடிதம் எழுதும்போது அதில் உயிர் ஓட்டம் இருந்தது, மெயிலில் லவ் மெசேஜ் அனுப்புகையில் வெறும் எண்ண ஓட்டம் மட்டுமே!
--------------------------
10. . இப்போது நமது தலைவர் அவர்கள் கால்வாயை திறந்து வைத்து நம்மிடையே உரை ஆற்றுவார்.
ஏன் முழு வாயை திறந்து பேசுனா குறைஞ்சிடுவாரா?
--------------------------
..and he never returned

11. பாலகுமாரன் எப்போது ஆன்மீகக்கதைகள் எழுத ஆரம்பித்தாரோ அப்போதிருந்து அவர் ஒரிஜினாலிட்டியை இழந்தார், கூடவே வாசகர்களையும்
----------------------
12. வரலாற்றுப்புதினங்களில் சாண்டில்யனின் நடை ரஜினியின் ஜனரஞ்சகம், கல்கியின்நடை கமலின்மதிநுட்பம்.ஆனால் பி சி ரசிகர்களை சாண்டில்யனே கவர்ந்தார்
----------------------------
13. வெற்றிக்கு 2 வழிகள் உள்ளன. 1. உங்களுக்குத்தெரிந்த எல்லாவற்றையும் எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்காதீங்க 2. முதல் வழியை இன்னொருக்கா படிங்க
------------------------
14. பிரிவோம் சந்திப்போம் ஆனந்த தாண்டவம் ஆக. ரத்னா கேரக்டரில் ருக்மணி 80 % பொருந்தியும், மதுமிதா கேரக்டரில் தமனா 50% கூட பொருந்தவில்லை
----------------------------
15. ஜீவா-சமந்தா நடிப்பில் நீதானே என் பொன்வசந்தம் - கௌதம் புதிய பட அறிவிப்பு.# விண்ணைத்தாண்டி வெற்றி வர வாழ்த்துக்கள்
------------------------
Landscape Art - An Oil paint depicting a painters pride...


16. பழக்கமான நண்பர்களுடன் ஏற்பட்ட கோபத்தை வெளிப்படுத்த சிறந்த வழி அவர்களை புறக்கணிப்பதே
-----------------------------
17. டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.
நிஜமாவா?
ஆமா எந்தகேள்வியைக்கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்
-----------------------
18. அப்பா,எனக்கொரு பேய்க்கதை சொல்லுங்கப்பா..
ஒரு காலத்துல பவர் ஸ்டார்னு ஒரு நடிகர் இருந்தாரு..
அய்யய்யோ ,பயமா இருக்கு, போதும் நிறுத்துங்க
-----------------------------
19. பல தவறுகளுக்குப்பிறகு எடிசன் பல்பு கண்டு பிடிச்சார்,ஒரே ஒரு தவறு செஞ்சாக்கூட நாம் பல்பு வாங்கியவ்ர் என்றே அழைக்கப்படறோம்
----------------------------
20. தலைவரே! எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாதுன்னு எந்த தைரியத்துல சொல்றீங்க?
2016 வரை எலக்ஷன் வராதுங்கற தைரியத்துல # DR ராம்தாஸ்
------------------------


21. எக்சாம்ல பாஸ் ஆனாலும், ஃபெயில் ஆனாலும் ஃபிரண்ட் மட்டும் மாறுவதே இல்லை - மச்சி ட்ரீட் எப்போ?
--------------------------
22. சைடு எஃபக்ட்டே இல்லாத சிறந்த மருந்து புன்னகையே!
-----------------------------
23. யார் கூட இருந்தா நல்லா இருப்போம்? என ஆராய்வது பெண்ணின் மனது, யார்கூட இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என வாழ்த்துவது ஆணின் மனது
--------------------
24. இது என்ன காதல் உதிர் காலமா? என் மீதான உன் காதல் குறைந்து கொண்டே வருகிறதே?
--------------------------
25. நான் வெற்றியில் திளைக்கும்போது உன் உள்ளங்கை பற்றவும், தோல்வி என்னை துளைக்கும்போது உன் மடியினில் என் தலை சாய்க்கவும் உன்னை தேடுவேன்
------------------------------
Wild Animals

Wild Animals
