Showing posts with label nameetha. Show all posts
Showing posts with label nameetha. Show all posts

Thursday, February 17, 2011

நமீதா- கேரளா - டிஸ்ஸப்பாயிண்ட்மெண்ட்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbQroVVj6k8LXYAuE_9g2t9a5R6Lj1CLv8cuA1as9mCcG2GGQ2_-3aa3SNZpXcNOiRl6rMj3UL1sAFwR-Yjn-gCewJgpy1NqfBZ9qaBN1Op_dG2gnPOxXObAQcs1ghFv9qCIV_17anpVAx/s400/namitha_hot_11.jpg
1.அரசியல் வானில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகுதுன்னு யாராலும் சொல்ல முடியாது.

ஏன் முடியாது? நீரா ராடியாவுக்கு ஒரு ஃபோன் போட்டு, கேளுங்க.. ஃபுல் டீட்டெயிலும் தெரிஞ்சுடும்.

-----------------------------------
2. என்னது? திருடுனது ஒரு லேடியா? துரத்திப்பிடிச்சீங்களா?

எஸ் ஸார்,  பிடிச்சேன், மெத் மெத்னு இருந்தது... மயக்கத்துல இருந்தப்ப நழுவி ஓடிட்டா...

----------------------------

3.எதுக்காக பைக்ல 120 கிமீ வேகத்துல போனே..?

என்னைத்துரத்திட்டு வந்த பைக்கோட ஓனர் 140 கி  மீ வேகத்துல வந்தாரு.. அதான்.

---------------------------------

4.நேத்து ஒரு ஃபுல் வாங்கி நானும், என் ஆளும் ஆளுக்கு ஒரு ஆஃப் அடிச்சோம்.


ஓஹோ... நீ பாதி , நான் பாதி கான்செப்டா?


-------------------------------------

5. மோஹனா.. காலைல எந்திரிச்சதும் ஒரு குட்மார்னிங்க் மெசேஜ் அனுப்ப இவ்வளவு நேரமா? நீ எல்லாம் ஒரு லவ்வரா?

அது சரி.. நீங்க பாட்டுக்கு ஈசியா சொல்லீட்டீங்க.. நான் 184 பேருக்கும் அனுப்ப வேண்டாமா?நீங்க 185 வது லவ்வர். குரூப் மெசேஜ் செட்டிங்க்ஸ் வேற கிடையாது. தனித் தனியாதான் அனுப்பனும்.

(வாழ்க உத்தம பத்தினி)

------------------------------------
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgz8ggU7CkOLwisrDCz1mDRYgxUdRO_LXOuGoh2hykqE7wNWpTFjO1ZYQ01xaU62WhRpKxzSTLKHoWQi94_ysdLJncGQLnJb3oXsxuecd-ITCk_Tk1XRJZtRpLk1zF40iVorSAfg4gI2URI/s1600/namitha.jpg
6. பழையன கழிதலும் ,புதியன புகுதலும்னு பெரியவங்க சொல்லி இருக்காங்களே...

அதுக்காக நீ வருஷா வருஷம் லவ்வரை மாத்தறது சரி இல்லை.

--------------------------------------

7.டாக்டர்.. நர்ஸ் நமீதாவை நான் லவ் பண்றேன்..

யோவ்.. கஷ்டப்பட்டு கேரளா போய் நல்ல ஃபிகரா கூட்டிட்டு வந்து அப்பாயிண்ட் பண்றது  நான்... ஈசியா செட் பண்ணி கூட்டிட்டு போய் என்னை டிஸ்ஸப்பாயிண்ட் பண்றது நீயா..?

---------------------

8.பணத்துக்காகவும்,பதவிக்காகவும் அலையற ஆள் நான் கிடையாதுன்னு தலைவர் சொல்றாரே...

ஆமா.. அவர் அலையறதே மகளிர் அணித்தலைவி சொப்பன சுந்தரிக்காகத்தானே...

--------------------------------

9. எந்தக்கட்சியை சேர்ந்தவரா இருந்தாலும் தியாகிகளுக்கு பரிசு உறுதின்னு தலைவர் சொல்றாரே...?

அதாவது ... தான் இருக்கறது எந்தக்கட்சியா இருந்தாலும் அதை உதறிட்டு வந்து தலைவர் கட்சில சேர்ற தியாகிகளுக்குன்னு அர்த்தம்.

--------------------------------------------------

10.நம்ம தலைவர் பெண்களுக்கு நிறைய உதவிகள்  பண்ணி இருக்காராமே..?

ஆமா, அவரோட சின்ன வீட்டுக்குபெங்களூர்ல ஒரு பங்களா,அவரோட ஆசை நாயகிக்கு ஆக்ரால ஒரு இடம்னு வாங்கிப்போட்டிருக்காரே..

----------------------------------

டிஸ்கி - 1 உலக பதிவுலக வரலாற்றிலேயே முதன் முறையாக நமீதாவை பாவாடை தாவணியில் ஸ்டில் வைத்தது அட்ரா சக்க என்றுதான் நினைக்கிறேன். இதற்காக டீசண்ட் மேன் ஃபிரம் டீசண்ட் ஃபேமிலி விருதை எனக்கு யாராவது தருவதாக இருந்தால் அதை எந்த பிகுவும் இல்லாமல் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறேன்.

 டிஸ்கி 2 - முதல் ஸ்டில் அவரோட “சின்ன” வயசுல எடுத்தது... 2வது ஸ்டில் அவரோட பெரிய வயசுல எடுத்தது... ஹி ஹி ஹி

Saturday, November 13, 2010

தகதிமிதா மைதா நமீதா

Namitha in Saree


1. “தமிழ்  மொழியை  விட  அழகான  மொழி  எது?”

“உங்க  பொண்ணு  தேன்  மொழி  சார்!”



2. “உங்க  தோட்டத்து  காய்கறிகளுக்கு  மட்டும்  டபுள்ரேட்  சொல்றீக்களே, ஏன்?”

“தண்ணி  பாய்ச்சறது  கூட  வயலுக்கு  மினரல்  வாட்டர்தான்...!”



3. “அமைச்சரே!  நமது  நாட்டின்  ‘குடிமக்கள்’  எப்படி  இருக்கிறார்கள்?”

“போதையில்தான்  மன்னா!”



4. “உன்  கடைசி  ஆசை  என்ன?”

“இந்த  வழக்குல  உண்மைக்  குற்றவாளியை  எப்படியாவது  கண்டுபிடிச்சு  எனக்குக்  காண்பிங்க  எசமான்!”



5. “என்னது,  மன்னருக்கு  மாரடைப்பா?  எதனால்...?”

“சுயம்வரத்துக்குப்  போனவரை  அந்நாட்டு  இளவரசி  ‘மன்னா’  என்று  அழைக்காமல்  ‘அண்ணா’  என்று  அழைத்துவிட்டாளாம்...!”



6. “மன்னா,  ஆபத்து...  ஆபத்து  வந்துவிட்டது...!”

“என்ன  ஆனது,  மாறவர்மன்  நம்  மீது  படையெடுத்து  வருகிறானா?”

“இல்லை  மன்னா,  தாய்  வீட்டுக்கு  போன  மகாராணி  அதற்குள்ளாகவே  திரும்பி  வந்துவிட்டார்...!”



7. “என்ன,  மகாராணிக்கு  திடீரென்று  அலங்காரம்  செய்கிறீர்கள்...?”

“மன்னா, ‘பட்டத்து  யானையை  அலங்கரியுங்கள்’  என்று  நீங்கள்  தானே  ஆணையிட்டீர்கள்...!”



8. “தூங்கிக்கொண்டிருந்த  புலியை  எதிரி  நாட்டு  மன்னன்  ஓலை  அனுப்பி  உசுப்பி  எழுப்பிவிட்டான்...”

“இப்போது  என்ன  செய்யப்  போகிறீர்  மன்னா?”

“சாப்பிட்டுவிட்டு  மறுபடியும்  தூங்க  வேண்டியதுதான்!”



9. “மன்னா!  அரசாங்க  ரகசியத்தை  இந்த  ஒற்றன்  அறிந்து  கொண்டான்...”

“நான்  சமையலறையில்  மகாராணிக்கு  உதவியாக  காய்கறி  அரிந்துகொண்டிருந்ததை  இவன்  பார்த்துவிட்டானா...?”



10. “மன்னா,  எதிரி  நாட்டு  மன்னனிடமிருந்து  போர்ச்  செய்தி  வந்துள்ளது... என்ன  பதில்  அனுப்புவது...?”

“நீங்கள்  அனுப்பிய  ஓலை  எமக்கு  கிடைக்கவில்லை,  என்று  பதில்  ஓலை  அனுப்பிவிடலாமா...?”



11. “மன்னா,  உங்களைப்  பாட  புலவர்  வந்திருக்கிறார்...!”

“இப்போதுதான்  மகாராணியிடம்  பாட்டு  வாங்கி  வந்தேன்!”



12. “டாக்டர்  ஹார்ட்  ஆபரேஷனுக்கு  எதுக்கு  கோடாரி,  கடப்பாரை  எல்லாம்  எடுத்துட்டு  வர்றீங்க...?”

“நீங்க  ஒரு  கல்செஞ்சக்காரர்னு  சொன்னாங்க...”



13. “தலைவர்  ஒரு  துறவி  மாதிரின்னு  எப்படி  சொல்றே?”

“ஆமா...  நேர்மை,  நாணயம்,  மனசாட்சி  எல்லாத்தையும்  துறந்துட்டாரே”



14. “மன்னா!  புலவர்  எழுதிய  பாட்டில்  உங்களைப்   புகழ்ந்து  தானே இருக்கிறது.  ஏன்  கோபப்படுகிறீர்கள்?”

“அமைச்சரே!  ஓலையின்  கீழே  பாருங்கள். ‘மேலே  கூறியவை  முழுக்க, முழுக்க  கற்பனையே!  யாரையும்,  எவரையும்  குறிப்பிடுபவை  அல்ல’னு எழுதியிருக்கே!”



15. “அந்த  பாகவதர்  சினிமா  ரசிகர்னு  எப்படி  சொல்றே...?”

“தகதிமிதா-னு  பாடாம,  ‘தகதகநமீதா’னு  பாடறாரே...!”



16. “நான்  லவ்  பண்றது  தெரிஞ்சா,  அப்பா  என்  கையில  சூடு  வைப்பார்!”

“இப்படி  கூட  செய்வாங்களா?”

“இங்க  பாருங்க...  ஏற்கனவே  அஞ்சு  தடவை  சூடு  வாங்கியிருக்கேன்!”