Showing posts with label I. Show all posts
Showing posts with label I. Show all posts

Wednesday, August 12, 2026

I,Nobody(2026)- மலையாளம்/தமிழ் - சினிமா விமர்சனம் ( க்ரைம் சஸ்பென்ஸ் ஆக்சன் திரில்லர்)

 


பிரிதிவ்ராஜ் சுகுமாரனின் சொந்தப்படம் இது.அசீப் அலி-வீணா நந்தகுமார் நடித்த .Kettiyollaanu Ente Maalakha(2019),ரொமாண்டிக் காமெடி மூவி,மம்முட்டி-கிரேஸ் ஆண்ட்டனி நடித்த Rorschach(2022) ரிவஞ்ச் திரில்லர் மூவி ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கி இருக்கும் படம் இது.ஹெய்ஸ்ட் திரில்லர் என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும் இது சஸ்பென்ஸ் திரில்லர் கேட்டகிரியில் தான் வரும்.


2021 ல் ரிலீஸ் ஆன ஹாலிவுட் படமான நோ படி படத்துக்கும்,இந்தப்படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

9/7/2026 முதல் கேரளாவில் ரிலீஸ் ஆன இந்தப்படம் 10/7/2026  முதல்தமிழகத்தில்  தமிழ் டப்பிங் கில் கிடைக்கிறது

நான் உங்களைப்போல் சாராரணமானவன்,வேறு யாரும் இல்லை என்பதுதான் படத்தின் டைட்டிலுக்கான அர்த்தம்.


ஸ்பாய்லர் அலெர்ட்


நாயகன் தன்னுடைய மனைவி,இரு மகள்களுடன் வாழ்ந்து வருபவன்.நடுத்தரக்குடும்பம்.கணவன் ,மனைவி இருவரும் பணிக்கு  செல்பவர்கள்.

ஒரு நாள் நாயகன் ஒரு வேலையாக வங்கிக்கு செல்கிறான்.ஒரு மூன்று பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் அந்த வங்கியில் 17 கோடி ரூபாய் பணத்தைக்கொள்ளையடிக்கிறது.பணயக்கைதியாக வங்கியில் இருந்த நாயகனை அழைத்துச்செல்கிறது.

கொள்ளையடிக்க வந்த வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாறியதும் நாயகனை விட்டு விடுகிறார்கள்.ஆனால் அவர்கள் பயணித்த வண்டி விபத்துக்குள்ளாகி கொள்ளையர்கள் மூவரும் ஸ்பாட் அவுட்.

ஆனால் கொள்ளையடித்த பணத்தைக்காணவில்லை.போலீஸ் விசாரணை நடக்கிறது.
நாயகனுக்கும் ,இந்தக்கொள்ளை கும்பலுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது என போலீஸ் சந்தேகிக்கிறது.இந்த சமூகமும் நாயகன் மேல்  வெறுப்பை உமிழ்கிறது.

நாயகன் இந்தப்பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்தாரா?அதற்காக என்னென்ன செய்தார்?என்பது மீதித்திரைக்கதை.

நாயகனாக பிரித்விராஜ் பிரமாதமாக நடித்திருக்கிறார்.ஒரு அமைதியான நடுத்தரக்குடும்பஸ்தனைக்கண் முன் நிறுத்துகிறார்.ஒரு கண்ணில் அடிபட்ட பின்  ஒரு மாதிரியாக ஒரு கண்ணால் பார்ப்பதை சிரமப்பட்டு உழைத்திருக்கிறார் காசி படத்தில் விக்ரம் இதே போல் உழைத்திருந்தார்.

நாயகனின் மனைவியாக பூ படப்புகழ் பார்வதி பாந்தமான ரோல்.ஆனால் அதிக வாய்பில்லை.வந்த வரை ஓக்கே.

நாயகனின் பெண் குழந்தைகளாக வரும் நட்சத்திரா ,ஐரா இருவரும்  அழகு செல்லங்கள்.

இவர்கள் போக ஹக்கீம் ஷாஜகான்,அசோகன்,மதுபால்,சந்திரன்,விஜயராகவன்,ரோனி வர்கீஸ் உட்பட அனைவரும் அவரவருக்குக்கொடுக்கப்பட்ட கேரக்டரை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜேக்ஸ்  பிஜோயின் இசையில் ஆங்கிலப்பாடல்கள்,ஹிந்திப்பாடல்கள் அதிகம்.இது எதற்காக என்று தெரியவில்லை.பின்னணி இசை கச்சிதம்.

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு கலக்கல் ரகம். எம்.பி ரமீசின் எடிட்டிங் கில் படம் 168. நிமிடங்கள் ஓடுகிறது.பின் பாதியில் இழுவை.இன்னமும் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

சமீர் அப்துல் திரைக்கதை அமைத்திருக்கிறார்.முதல் பாதி திரைக்கதையை க்ரிஸ்ப் ஆக எழுதியவர் பின் பாதித்திரைக்கதையை நம்ப முடியாத தெலுங்கு ஆக்சன் மசாலா ரேஞ்சுக்கு எழுதி விட்டார்.


நிக்சன் ஜார்ஜின் சவுண்ட் டிசைனிங் ஒர்க் பிரமாதம்.ஆக்சன் கொரியோகிராபியை மூவர்  கொண்ட குழு வடிவமைத்திருக்கிறது.அதகளமான ஆக்சன் சீக்வன்ஸ் .லிப்ட் பைட்,ஸ்ட்ரீட் பைட்,ஓப்பனிங்க் பைட் அனைத்தும் அருமை.


சபாஷ் டைரக்டர்

1 பரபரப்பான ,விறுவிறுப்பான ,கலக்கலான திரைக்கதையுடன் முதல் பாதி அருமை.ஒரு  சீன் கூட போர் அடிக்கவில்லை.

2 இடைவேளை பிளாக் சீனுக்கு முன் வரும் அமளிதுமளியான மூன்று சம்பவங்கள் செம.கவன் என்ற தமிழ்ப்படத்தில் இதே போல் இண்ட்டர்வெல் பிளாக் சீனுக்கு முன் 2 செமயான சம்பவங்கள் வரும்.

3  லிப்டில் நடக்கும் ஆக்சன் பிளாக் செம. கேமரா கோணம் செம.

4 காருக்குள் நடக்கும் ஆக்சன் சீன  கேமராவில் சுழற்றி சுழற்றிக்காட்டுவது இப்போது பேஷனாகி விட்டது.இதிலும் அப்படி ஒரு சம்பவம் எடிட்டர்,ஒளிப்பதிவாளர் இருவரும் இணைந்து கலக்கி இருக்கிறார்கள்.

5 கணவன் ,மனைவிக்குள் நிகழும் கருத்து மோதலை படமாக்கிய விதம்.

6 பேங்க் ஹெய்ஸ்ட் திரில்லரில் ஒரு காதல் விஷயத்தைப்புகுத்திய விதம்.
7 நாயகனுக்கு இளைய மகளுடனான பாண்டிங் அருமை.

8 யூ ட்யூபில் வரும் விஷயத்தை நம்பி மக்கள் எப்படி திசை திரும்புகிறார்கள் என்பதைக்காட்டிய விதம் குட்.

9 ஓப்பனிங்க் சீனில் நாயகன் வங்கிக்கு செல்லும்போது துப்பாக்கியை ஏன் எடுத்துச்செல்கிறார்?என்ற சஸ்பென்சை ஓப்பன் செய்த விதம் குட்.


லாஜிக் மிஸ்டேக்ஸ்

1 பின் பாதி திரைக்கதை யில் சுவராஸ்யமான சம்பவங்கள் எதுவுமே இல்லை.
2 கொள்ளையடிக்கப்பட்ட பணம் எங்கே இருக்கிறது என்பது ஆடியன்சான நமக்குத்தெரிந்து விடுகிறது.ஆனால் படத்தில் யாருக்கும் தெரியவில்லை.இது எடுபடவில்லை.

3 முதல் பாதியில் பிரில்லியண்ட்டாகத்திரைக்கதை அமைத்தவர்கள் பின் பாதியில் தெலுங்கு ஆக்சன் மசாலா போல் தேவை இல்லாத ஹீரோ பில்டப் பைட்ஸ்  இணைத்துத்திணித்து சொதப்பி விட்டார்கள்.
4 நாயகி தன் மகளைக்காணோம்,,பார்த்தீங்களா?எனக்கேட்பது அபத்தமான காட்சி.

5 கடை வீதியில் எல்லோரும் பார்க்கும்படி அவ்ளோ பெரிய பேக்கை நாயகன் தூக்கிக்கொண்டு வருவது ஏற்புடையதே அல்ல.

6 மினிஸ்டரைக்கிண்டல் செய்யும் காட்சி,வசனம் தேவை இல்லாத காட்சி

அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். 16+


 CPS கமெண்ட் - பிரமாதமான முதல் பாதி ,சொதப்பலான பின் பாதி ,சராசரியான சஸ்பென்ஸ் திரில்லர்.பார்க்கலாம்.ரேட்டிங் 2.5/5

Sunday, July 21, 2013

சிம்பு லக் கடி பம்பா - ஹன்சிகா மெத்மெத் வா நீ பர பரப்புபேட்டி

சிம்புவுடன் எப்போது திருமணம்....? ஹன்சிகா எக்ஸ்குளூசிவ் பேட்டி!

After 5 years I will marry simbu says Hansika
 கடந்த சில மாதங்களாகவே மீடியாக்களில் கிசுகிசுக்களாக கசிந்து வந்த சிம்பு-ஹன்சிகா காதல், இப்போது உறுதியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாக, தங்களது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை ஹன்சிகா நமது தினமலர் நிருபருக்கு அவரே போன் செய்து அளித்த எக்ஸ்குளூசிவ் பேட்டி இதோ...

என் தொடர்பான உண்மை செய்திகளை கொடுக்கும் மீடியாக்களில் தினமலர் ரொம்ப முக்கியமானது. அதனால் தான் நானே போன் செய்தேன். தற்போது பிரியாணி படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு மும்பையில் உள்ள என் வீட்டுக்கு வந்துள்ளேன். தற்போது தமிழில் எனக்கு 4 படங்கள் கைவசம் உள்ளன. ரொம்ப பிஸியாக நடித்து வருகிறேன்.
 
 
 
 
 இந்த நேரத்தில் சிம்புவுடன் காதல் பற்றி‌ய செய்திகள் வெளியாகியுள்ளன. ஆமாம், நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால் திருமணம் இப்போது கிடையாது. எனக்கும் பல படங்கள் இருக்கிறது, அதேபோல் சிம்புவுக்கும் பல படங்கள் இருக்கிறது. எங்கள் காதல் செய்திகளால் எங்களை நம்பி படம் எடுக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. மேலும் தற்போது எனக்கு 21 வயது தான் ஆகிறது.
 
 
 
 அதனால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். திருமணம் தொடர்பாக இன்னும் நாங்கள் நிச்சயம் கூட செய்யவில்லை. எங்கள் படவேலைகள், எங்களுக்கான கமிட்மென்ட்டுகளை எல்லாம் முடித்துவிட்டு திருமணம் செய்ய எண்ணியுள்‌ளோம். இன்னும் 5 வருடங்கள் கழித்து சிம்புவை நான் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.


மேலும் சிம்புவை உங்களுக்கு எதனால் பிடித்தது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹன்சிகா, சிம்புவிடம் இதுதான் பிடித்தது என்று என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. சிம்புவின் ஒவ்வொரு செயலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அது அவரது திறமையாக இருக்கலாம், குணமாக இருக்கலாம், பேச்சாக கூட இருக்கலாம் என்று கூறினார்.
 
thanx-dinamalar


Thursday, January 03, 2013

ஷங்கரின் ஐ பட காமெடி டிராக்கில் நான் - பவர் ஸ்டார் பட்டாசு பேட்டி

http://tamil.oneindia.in/img/2012/06/01-powerstar-srini-300.jpg 
"கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நான் அண்ணேன்டா!"

க.ராஜீவ்காந்தி
படங்கள் : ஜெ.தான்யராஜு
ப்பாடா... உலகம் அழியலையே!’ எனப் பெருமூச்சு விடுபவர்களுக்கு... ''அப்படி எல்லாம் உங்களை ரிலாக்ஸ் ஆக விட மாட்டேன்ல!'' என்று துள்ளித் தொடை தட்டி வருகிறார் உங்கள் 'பவர் ஸ்டார்’ கம் அக்குபஞ்சர் டாக்டர் சீனிவாசன். ஜெயலலிதா, ரஜினி, கமல், ஷங்கர், சிம்பு, சந்தானம் என்று நான் கேட்ட கேள்விகளும் சரி, அதற்கு பவர் ஸ்டார் அளித்த பதில்களும் சரி... செம சீரியஸ்தான். ஆனால், அதைப் பேட்டியாகப் படிக்கும்போது, 'இது ஜாலி பேட்டிதானே’ என்று எழும் எண்ணத்தைத் தவிர்க்க முடிகிறதா... பாருங்கள்


http://tamildigitalcinema.com/wp-content/uploads/2011/04/Anandha-Thollai-21-10-2010-0000.jpg



காலர் டியூனா 'அம்மா என்றழைக்காத’ பாட்டு வெச்சிருக்கீங்களே... வழக்குகள்ல இருந்து தப்பிக்கத்தானே?'' 


'எனக்கு அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். என் சொந்த அம்மா மட்டும் இல்ல... 'அம்மா’வும்தான். அவங்களுக்காகத்தான் இந்தப் பாட்டு வெச்சிருக்கேன். இன்னொண்ணு... தாயில்லாமல் நானில்லை!''



''ஆக்ச்சுவலா உங்க வயசு என்ன?''



''என் அருமைத் தம்பி சிம்புவைவிட 10 வயசு... கம்மி!''


''சார், சிம்பு கோச்சுக்கப் போறாரு?''



''அட... நீங்க வேற! என்னைப் பார்த்தாலே அவர் சிரிச்சுடுறாரு! 'எத்தனையோ பேரைச் சிரிக்கவெச்சிருக்கேன். என்னையே சிரிக்கவெச்சது நீங்கதான்’னு என்கிட்டயே சொல்லிஇருக்காப்ல. நம்ம மேல அவருக்கு ரொம்ப மரியாதை!''



''ஸோலோ ஹீரோவா பட்டையக் கிளப்பிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் மூணு ஹீரோ சப்ஜெக்ட்ல நடிச்சு உங்க பேரைக் கெடுத்துக்குறீங்க?''



''என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க... சந்தானம் தம்பிகூட நடிக்கிறதெல்லாம் எவ்ளோ பெரிய வாய்ப்பு. இருந்தாலும், உங்களை மாதிரி தீவிரமான ரசிகர்களுக்காக(!) சோலோவாகவும் நடிப்பேன். அப்பப்போ காம்பினேஷன்லயும் நடிப்பேன்!''



''சந்தானம் ஷூட்டிங் ஸ்பாட்ல உங்களைக் கண்டபடி கலாய்ச்சுட்டே இருந்தாராமே?''



''சந்தானம்கூட எனக்கு கெமிஸ்ட்ரி ரொம்ப நல்லா வந்திருக்கு. எனக்கு ஒரு தம்பி இல்லையேங்கிற ஏக்கத்தைப் பூர்த்தி செஞ்சுட்டாரு சந்தானம் தம்பி. அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா, அந்தத் தம்பியே எனக்குத் தம்பியாப் பொறக்கணும்!''



''நடிக்கிறதுக்கு ஹோம்வொர்க் பண்ணுவாங்களே... நீங்க எந்தப் படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்திக்குவீங்க?''


'' 'பாட்ஷா’தான். அந்தப் படத்தை 30 தடவை பார்த்துட்டுதான் நடிக்கணும்கிற வெறி எனக்குள்ள வந்துச்சு!''


''உங்க ரசிகர்கள் பற்றி..?''


''என்னை நம்பி இருக்கிற கோடிக்கணக்கான ரசிகர்கள்பத்தி நினைச்சாலே, எனக்குக் கண்ணீர் வந்துடும். 'உயிரை விடு’னு சொன்னா, விடுற அளவுக்கு எனக்கு ரசிகர்கள் இருக்காங்க. இவங்கள்லாம் எனக்கு எப்படிக் கிடைச்சாங்கன்னு இப்ப வரை தெரியலை. எல்லாமே பாபா வோட அருள்!''



'' 'ஐ’ படத்துல ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கிற விக்ரமுக்கு நீங்கதான் கோச்சாமே... உண்மையா?''



''ஷ்...ஷ்ஷ்... அப்படிலாம் இல்லை. இந்தப் படத்துலயும் சந்தானம்தான் எனக்கு பார்ட்னர். படம் ஃபுல்லா வருவோம். காமெடி பண்ணுவோம். கதையை வெளியே சொல்லக் கூடாதுனு ஷங்கர் சார் கண்டிச்சுச் சொல்லியிருக்காரு. அதனால கதை வேண்டாம்!''



''உங்க பாடிகார்டு எத்தனை பேர்? அவங்களுக்கு எவ்ளோ சம்பளம் தர்றீங்க?''


''எல்லாருமே பிரியப்பட்டு, 'அண்ணன்’கிற அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்காங்க. யாரும் பணத்துக்கு ஆசைப்பட்டு இல்லை.''



''2013-ல தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன பரிசு கொடுக்கப்போறீங்க?''  



''நான் நடிச்ச நிறையப் படங்கள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு. ஆனா, சந்தானம் தம்பி கேட்டுக் கிட்டதால நிறுத்திவெச்சிருக்கேன். சீக்கிரமே 'மன்னவன்’, 'தேசிய நெடுஞ்சாலை’, 'சீனு எம்.ஏ.பி.எல்’னு வரிசையா படங்கள் வெளிவரும்!''


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbmzmXqjqHN4NBDi1IsW3HRA_7Elk4G50tADDzP0QtnlpEkTPm3BdHti9HTYv0T4GzrS3YynWj5YJ8ZyA5XHPaAcB16eWiiW1SEHYDBVKGK5qUtf44wT01lva1QNc3yc8h0W1peU9d9Q4/s1600/Meenakshi-srinivasan-Hot-In-Lathika-Movie-Stills.jpg


''விக் இல்லாமலேயே அழகாத்தானே இருக்கீங்க... அப்புறம் எதுக்கு டோப்பா எல்லாம்?''



''ஹலோ தம்பி... இது நேச்சுரல் முடி. நம்புங்க! நான் சில படங்களுக்காக, அந்த கேரக்டர் கேட்டுக் கிட்டதால மொட்டை அடிச்சதைப் பார்த்து எனக்கு சொட்டைத் தலைனு நினைச்சுட்டாங்க. ஆனா, இதுதான் ரியல்!''



''நீங்க ரஜினியை ஃபாலோ பண்றீங்கன்னு பார்த்தா, திடீர்னு 'விஸ்வரூபம்’ கமல் மாதிரி ஸ்டெப்ஸ் போடுறீங்களே?''


''உலக நாயகனோட யாரும் போட்டி போட முடியாது. அவர் வேற பாணி. இது பவர் பாணி!''



''நீங்க நடிக்கிற படத்துக்குனு பஞ்ச் டயலாக் யோசிச்சு வெச்சிருப்பீங்களே... அதைக் கொஞ்சம் சொல்லுங்க?''


''ம்ம்ம்... சூப்பர் ஸ்டாருக்குப் போட்டின்னா... அது பவர் ஸ்டார்தான்!''



''ஓ... அப்போ ரஜினி மட்டும்தான் உங்களுக்குப் போட்டியா இங்கே?''


''ஆங்... ஆமாதானே... இல்லையா? அவர்கூட போட்டி இருக்கு. ஆனா, பொறாமை கிடையாது. இதை அவரோட தீவிர ரசிகனா சொல்றேன்!''


''நீங்க நல்லவரா... கெட்டவரா?''


''அது எனக்கே தெரியலையே!'' 


நன்றி - விகடன்


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiqqGnrsG6K2LpReTmUDWKNu7Y5pgD24S81uNtZ6FlsnNP0HC34K4mgVsd0U4ASM3NAY1_XMbYU7d2TpRdIfqDOAyQkqUgaxJbO_nJH4eTsdNmyX1EHlwZEUr5X1DiBBWctpC2R1vCwBZM/s1600/power.jpg