C/O காதல் என்ற தமிழ்ப்படத்தின் ஒரிஜினல் வெர்சனான மெகா ஹிட் படம் C/O Kancharapalem (2018) தெலுங்குப்படத்தின் இயக்குநரான வெங்கடேஷ் மகா டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடிக்க Marmaanuvu (மர்மானுவு-மர்மமானவன்) என்ற டைட்டிலில் 2020 ம் ஆண்டில் ஒரு படத்தை எடுக்க நினைத்தார்.ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக சைக்கலாஜிக்கல் டிராமாவாக உருவாகிய மர்மானுவு கதையைக்கொஞ்சம். மாற்றி சைக்கலாஜிக்கல். காமெடி டிராமாவாக மாற்றி எடுத்த படம் தான் இது.
3/7/2026 அன்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆன இந்தப்படம் இப்போது நெட் பிளிக்சில் தமிழ் டப்பிங்கில் 31
31/7/2026 முதல் காணக்கிடைக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
கதை நடக்கும் கால கட்டம் 1991.
நாயகன் ஒரு அரச குடும்பத்தின் வாரிசு.இப்போது மரணப்படுக்கையில் இருக்கிறான்.பல வருடங்களாக அரண்மனையில் ஒரு தனிமையான அறையில் தனிமைச்சிறையில் இருக்கிறான்.அவனது மனைவியும் அதே போல் பல வருடங்களாக அதே அரண்மனையில் வேறு ஒரு அறையில் தனிமை சிறையில் இருக்கிறாள்.நாயகன் ,நாயகி இருவரும் பல வருடங்களாகப்பார்த்துக்கொள்வது ம் இல்லை,,பேசிக்கொள்வதும் இல்லை.
நாயகன் இப்போது ஓவராக சரக்கு அடித்து லிவர் பெய்லியர் ஆகி மரணப்படுக்கையில் இருக்கிறான்.டாக்டர் நாயகனை செக் செய்து விட்டு மேக்சிமம் ஒரு மாசம் தான் தாங்கும் என்று சொன்ன ஒரு வருடம் கழித்தும் நாயகன் இறக்கவில்லை.காரணம் நாயகனின் மனதில் எழுந்திருக்கும் ஒரு சந்தேக அரக்கன்.
அதாவது நாயகன்,நாயகி இருவருக்கும் இரு குழந்தைகள்.இருவருமே ஆண் வாரிசுகள்.முதல் மகன் இப்போதும் இருக்கிறான்.ஆனால் இரண்டாம் மகன் எட்டு வயதாக இருக்கும்போதே இறந்து விட்டான்.
நாயகன்,நாயகி இருவருமே சிவப்பு நிறம்,ஆனால் இரண்டாவது மகன் கறுப்பு நிறம்.இதனால் நாயகனுக்கு ஒரு சந்தேகம்.இவன் நிஜமா நமக்குத்தான் பிறந்தானா?இல்லையா? என .
அந்த சந்தேகம் மனதில் எழுந்ததால் மன அமைதியின்றி நாயகன் பித்துப்பிடித்தது போல் ஆகி விட்டான்.அவன் உயிர் பிரியாமல் இருக்கக்காராணமும். அதுதான்.
அப்போது ஒரு போலீஸ் ஆபீசர் அங்கே வருகிறார்.பல வருடங்களுக்கு முன் இறந்து போன நாயகனின் இரண்டாவது மகனின் மரணத்தில். ஒரு மர்மம் இருப்பதாகப்புகார் வந்திருக்கிறது.நாயகனை விசாரிக்க வேண்டும்.புதைக்கப்பட்ட மகனது உடலைத்தோண்டி எடுத்து டி என் ஏ டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று போலீஸ் ஆபீசர் கூறுகிறார்.இதற்குப்பின் நிகழும் பர பரப்பான சம்பவங்களே மீதித்திரைக்கதை.
நாயகனாக சத்யதேவ் இரு மாறுபட்ட கெட்டப்பில் நடித்திருக்கிறார்.வயதான ராஜா வேடம்,பிளாஸ்பேக்கில் இளைஞன் வேடம்.இரண்டிலுமே நல்ல நடிப்பு என்றாலும் வயோதிக கெட்டப்பில். கலக்கி இருக்கிறார்.சந்தேகம் என்னும் புயல் அடித்தால் வாழ்வில் சந்தோஷப்பூ உதிரும் என்னும் டி ராஜேந்தரின் ஹிட் பாட்டு வரியை மெய்ப்பிக்கும் விதமாய் மன அமைதியை இழந்த நடிப்பு அருமை.
நாயகியாக தீபா தாமஸ் பாந்தமான நடிப்பு.பிளாஸ்பேக்கில் இளமைத்தோற்றத்தில் அழகாக வருகிறார்.
நாயகனின் நண்பனாக ,டாக்டராக வரும் விகாஸ் முப்பலா காமெடி கலந்த நடிப்பு.நாயகன் தன்னையே சந்தேகப்படுவதைக்கண்டு புலம்புவது காமெடி.
கொலையை விசாரிக்க வரும் போலீஸ் இன்ஸ்பெக்டராக ஆனந்த் கச்சிதம்.
இவர்கள் போக மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவரவர் நடிப்பை கச்சிதமாக வழஙகியுள்ளனர்.
இயக்குனர் வெங்கடேஷ் மகா நாயகனின். முன்னோர் ஆக கெஸ்ட் ரோலில் வருகிறார்.
ஸ்மரன் சாய்+ விஜய் ஏசுதாஸ் +ரெஹமான் மூவரும் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள்.கர்னாடிக் மியூசிக்கில் ஓ சுந்தரி ஹிட் அடித்திருக்கிறது.பின்னணி இசை கச்சிதம்.
கார்த்திக் பர்மார் தான் ஒளிப்பதிவ.அரண்மனை க்காட்சிகளில் பிரம்மாண்டம் காட்டி இருக்கிறார்.வெங்கடேஷ் மகாவின் எடிட்டிங் கில் படம் 170 நிமிடங்கள் ஓடுகிறது
சபாஷ். டைரக்டர்
1 வித்தியாசமான கதைக்கரு ,ராஜ வம்சத்துப்பின்னணியில் சொல்லி இருப்பது சிறப்பு
2 மனிதர்களின் நம்பிக்கைகளை அதாவது சிவப்பா இருப்பவனுக்கு சிவப்பான குழந்தைதான் பிறக்கும் என்பதை கிண்டலடிக்கும் விதமாய்க்காட்சிகளை அமைத்தது அருமை.
3. சைக்காலஜிக்கல் டிராமாவாக முதல் பாதித்திரைக்கதையை செட் செய்து பின் க்ரைம் டிராமாவாக மாற்றும் உத்தி அருமை
4 டி என் ஏ டெஸ்டில் வெளிப்படும் உண்மை
5 க்ளைமாக்சில் நாயகனின் காதில் நாயகி சொல்லும் ரகசியம் செம ட்விஸ்ட்
6. க்ளைமாக்சில் நாயகனின் காதில் இன்னொருவர் சொல்லும் அந்த ராஜ ரகசிய ட்விஸ்ட் எதிர்பாராதது
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 முதல் பாதி மிக மெதுவாக நகர்ந்து பொறுமையை சோதிக்கிறது.
2 இரண்டு கேரக்டர்கள் பேசும்போது கேமராவை லாங்க் ஷாட்டில் வைப்பது ஏனோ?பல இடங்களில் வசனம் புரியவில்லை.
3 ராஜ வம்சத்தில் பிறந்த ஒருவன்
ஏற்கனவே. வேறு ஒருவனைக்காதலித்த பெண்ணை மணப்பது ஏன்?அவருக்குப்பெண் தர பலர் தயாராக இருப்பார்களே?
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்க் 16+
CPS கமெண்ட். - மசாலா மூவிஸ் ,ஆக்சன் மூவிஸ் ரசிகர்களுக்குப்பிடிக்காது.மாறு பட்ட படம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் பிடிக்கும்.ரேட்டிங் 2.5/5
| Rao Bahadur | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Venkatesh Maha |
| Written by | Venkatesh Maha |
| Produced by |
|
| Starring |
|
| Cinematography | Kartik Parmar |
| Edited by | Venkatesh Maha |
| Music by | Smaran Sai Vijay Yesudas Rahaman/Rehman |
Production companies |
|
Release date |
|
Running time | 170 minutes |
| Country | India |
| Language | Telugu |