17/7/2026 முதல் கேரளத்திரையரங்குகளில் வெளியாகி மீடியம் ஹிட்டடித்த இந்த லோ பட்ஜெட் படம் இப்போது தமிழ் டப்பிங்கில் அமேசான் பிரைம் ஓடிடி யில் காணக்கிடைக்கிறது.
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகி கேரளாவில் காசர்கோடு அருகே ஒரு கிராமத்தில் அம்மா,அப்பா,,தம்பி இவர்களுடன் வசித்து வருகிறாள்.
நாயகியின் பக்கத்து வீட்டில் ஒரு பையன் இருக்கிறான்.அவனுடன் நாயகிக்கு நல்ல பாண்டிங்.தம்பி போல் பழகியவள்.அவன் ஒரு நாள் குளத்தங்கரையில் அமர்ந்து அக்காவின் போனில் கேம்ஸ் விளையாடிக்கொண்டிருக்கிறான்.ஏதோ லிங்க் வர தெரியாமல் க்ளிக் செய்து விடுகிறான்.அவ்வளவுதான்.அந்த போன் நெம்பர் இணைக்கப்பட்ட பேங்க் அக்கவுண்ட்டில் இருந்த பணம் எல்லாம் காணாமல் போகிறது.
இந்த மாதிரி சைபர் க்ரைம் மோசடியைத்தடுக்க நாயகி ஒரு ஆப் கண்டுபிடிக்கிறாள்.ஆனால் அதை லாஞ்ச் பண்ண அரசியல் தொடர்பும்,போதிய பணமும் தேவை.
வில்லன் ஒரு அரசியல்வாதி.வில்லனின் மகனும்,நாயகியின் தம்பியும் நண்பர்கள்.நாயகியின் தம்பிக்கு தன் நண்பன் ஒரு வில்லன் என்பது தெரியாது.நாயகியின் ஆப் கண்டுபிடிப்பை டெவலப் செய்ய பேங்க்கில். ரூ 25 லட்சம் ரூபாய் லோன் வாங்கி இருக்கிறாள்.
நாயகியின் தம்பியின் கவனக்குறைவால் அந்த மொத்தப்பணமும் வில்லனின் மகனால் ஆட்டையைப்போடப்படுகிறது.இதற்கு ப்பின் நாயகி எப்படி இந்த பைனான்சியல் க்ரைமை எதிர்த்துப்போராடுகிறாள்?என்பதே கதை
நாயகியாக மாளவிகா நந்தன் சிறப்பாக நடித்திருக்கிறார்.நல்ல கண்ணியமான கிராமத்துத்தோற்றம்.இப்போது வரும் நடிகைகள் எல்லோரும் கிளாமராக நடிப்பதில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.நதியா,ரேவதி, சுஹாசினி மாதிரி குணச்சித்திர நடிகைகளைக்காண்பது அரிதாகி விட்டது.இவர் பாந்தமான நடிப்பில் மனம் கவர்கிறார்.இவர் சோகமாக இருக்கும்போது அது நம்மையும் தொற்றிக்கொள்வது இயக்குநரின் வெற்றி.
நாயகி போக அவினாஷ், சீமாஜி நாயர் ஆகியோர் நடிப்பும் கனகச்சிதம்.
இது ஒரு லோ பட்ஜெட் படம் என்பதால் ஒளிப்பதிவு ,இசை ,சவுண்ட் டிசைனிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் சராசரி தரம் தான்.
கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் புனித.
சபாஷ் டைரக்டர்
1 பொதுவாக மலையாளப்படங்களில் முதல் 40 நிமிஷம் மெயின் கதைக்கே வர மாட்டார்கள்.பாத்திரங்கள் அறிமுகம்,ஊர் பற்றிய தகவல்களில் கவனம் செலுத்துவர்கள்.படத்தின் முதல் காட்சியிலேயே நேராகக்கதைக்கு வந்து விடுவது நல்ல விஷயம்.
2 பேங்க் அக்கவுண்ட் இருக்கும் செல் போன் நெம்பர் உள்ள போன் தனியாக வும் ,வீடியோ கேம்ஸ் விளையாடும் போன் தனியாகவும் வைத்துக்கொள்வது நல்லது என்ற விழிப்புணர்வை ஊட்டிய விதம் அருமை.
3 நாம் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் கூட இருப்பவர் முதுகில் குத்தினால் நம் புத்திசாலித்தனம் வீண் என்பதைக்காட்டிய விதம்.
4 காசர்கோடின் கிராமிய அழகைக்காட்டிய விதம் ,ஒளிப்பதிவு ,லொக்கேஷன் செலக்சன் அருமை
5 காந்தாரா படத்தில் வருவது போல் ஒரு காட்சியை க்ளைமாக்சில் வைத்த விதம்.
லாஜிக் மிஸ்டேக்ஸ்
1 நாயகியின் பக்கத்து வீட்டுப்பையனுக்கும் ,நாயகிக்குமான பாண்டிங்கை விஷூவலாகக்காட்டாமல் அந்தப்பையன் இறந்ததால் நாயகி சோகம் கொள்கிறாள் எனக்காட்டுவது நமக்கு எமோஷனல் கனெக்ட்டைத்தரவில்லை.சும்மா வசனத்தின் மூலம் மட்டும் உணர்த்தினால் போதாது
2 வில்லனின் கேரக்டர் டிசைன் வலிமையாக எழுதப்படவில்லை.வில்லனுக்கான ஸ்க்ரீன் ஸ்பேசும் குறைவு.வில்லனை வலிமையாகக்காட்டினால்தான் வில்லனை நாயகி எப்படி ஜெயிக்கப்போகிறாள்?என்ற பதைபதைப்பு ஆடியன்சுக்கு இருக்கும் .
3. நாயகியின் ஆப் வில்லனால் திருடப்பட்டதும் நாயகி முறைப்படி போலீசில் புகார் செய்து எப் ஐ ஆர் பைல் செய்திருக்க வேண்டாமா?
4 படம் மெதுவாக நகர்வது ஒரு குறை.
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங். க்ளீன் யூ .குடும்பத்துடன் பார்க்கலாம்.
CPS கமெண்ட் .கிராமியக்கதைகளை ரசிப்பவர்கள் ,பைனான்சியல் கிரைம் ட்ராமா பார்க்கும் பொறுமை உள்ளவர்கள் பார்க்கலாம்.பெண்களுக்குப்பிடி க்கும்.ரேட்டிங்க் 2.5/5
