Showing posts with label முஷாபிர் கபே வெப் சீரிசில் பிரமாதமான வசனங்கள். Show all posts
Showing posts with label முஷாபிர் கபே வெப் சீரிசில் பிரமாதமான வசனங்கள். Show all posts

Wednesday, September 02, 2026

இணையத்தைக்கலக்கி வரும் முஷாபிர் கபே வெப் சீரிசில் ஹிட் அடித்த ,பேசு பொருளான பிரமாதமான வசனங்கள்

 


முசாபிர் கபே என்ற ஹிந்தி வெப் சீரிசில் பிரமாதமான வசனங்கள் ரசித்தேன்.நெட் பிளிக்சில் 18+ படங்களை ரசிக்க ஒரு கூட்டம் இருப்பது போல சைக்கலாஜிக்கல் டாக்டர் எழுதியது போல வசனங்கள் பிரமாதம்.சாம்ப்பிளுக்கு சில.





1 எப்போ ஒரு பயணி தன் துணையைக்கண்டுபிடிக்கிறாரோ,அப்போதான் அவரது பயணமே ஆரம்பிக்குது.

2. ஒரு வக்கீலோட பிளஸ் பாய்ண்ட்டே  அடுத்தவங்க முகத்தைப்பார்த்தே  எடை போடுவது,அதுதான் உண்மையான திறமை.

3. வாழ்க்கைல என்ன நடந்தாலும் நம் வேர்களை மறந்துடக்கூடாது.

4. உன்னை நீ என்னோட பார்வைல எப்போப்பார்க்கிறாயோ அப்போ இந்தப்பரிசைத்திறந்து பார்.

5. சரியான நபரைத்தவறான நேரத்தில் சந்தித்தால் நேரத்தைக்குறை சொல்லக்கூடாது.

6 கொஞ்சமாவது பைத்தியக்காரத்தனம் இல்லைன்னா இந்த உலகத்தில் குப்பை கொட்ட முடியாது.

7. அம்மாவைப்பெண்கள் நல்லாப்பார்த்துக்குவாங்க என்ற எண்ணம் ,நம்பிக்கை இந்த சமூகத்துக்கு இன்னமும் வர்லை.

8. வாழ்க்கைல  உன்னை மாதிரி ஆளைப்பார்ப்பது அபூர்வம்.

உன்னை மாதிரி ஆட்கள் நின்னு பார்த்தால் தானே?

9. வாழ்க்கைல திட்டங்கள் மிக சாதாரணமா இருந்தாலே போதும்.திட்டம் ரொம்பப்பெருசா இருந்தா வாழ்க்கைல நமக்கு இடமே இருக்காது.

10. Flirt பண்ற ஸ்டைல் வேணா வயசுக்குத்தகுந்தபடி மாறலாம்.ஆனா நோக்கம் ஒண்ணுதான்.

11 புதுப்பாதைல போகும்போது பயமாத்தான் இருக்கும்,ஆனா ஏதோ புதுசாப்பண்றோம்னு திரில்லிங்கா இருக்கும்.


12 நீ தான் என்னோட ரியாலிட்டி.அதனால் உன்னைக்கண்டு பொறாமை இல்லை.

13 ஒரு பொண்ணு மனசை ஜெயிக்க அவ பிரண்டையும் இம்ப்ரெஸ் செய்யனும்.

14 மிடில் கிளாஸ் கனவு கூட இ எம் ஐ ல தான் வரும் ( தவணையில் தான் வரும்)

15. தனிமைக்கான மருந்தை நட்பு தரும்
.
16 நம்மைப்பற்றி எதுவுமே தெரியாத புது ஆட்களிடம் பேசுவது  மிக எளிது.

17 காதலோட இயக்கம் வினோதமானது.அது திரும்பத்திரும்ப வரும்.

18 இழந்த காதலை நோக்கிப்பயணிப்பது அர்த்தமுள்ளதா வாழ்க்கையை மாற்றும்.

19.ரைட்டரா இருப்பதில் ஒரு பிரச்சனை ,என் நாவலை நானே படிக்க முடியாது.

அதுக்கு நீ இண்ட் ரெஸ்ட்டா எழுதனுமே?

20  வாழ்க்கைல வெவ்வேற கால கட்டத்துல  இரண்டு பேரை லவ் பண்ணக்கூடாதா?

21 ஆழமா நேசிச்சா ஒருத்தரை மனசில் இருந்து அழிக்க முடியாது.

22. மனிதனோட உடம்பில் ஏழு வருசத்துக்கு ஒரு முறை எல்லா செல்களும்  தன்னை புதுப்பித்துக்கொள்ளும்.அதனால் ஒவ்வொரு ஏழாவது வருடத்திலும் மனிதனின் குணம் மாறும்.

23  நீ எனக்கு யார்?

மறக்கவே முடியாத வாழ்க்கை அனுபவம்.

24.  எல்லாமே உனக்கு விளையாட்டுதான்?

வாழ்க்கையே ஒரு விளையாட்டுதான்.அதை எவ்ளோ சீரியசா எடுத்துக்கறியோ  அவ்ளோ சீரியசா அதுவும் உன்னை எடுத்துக்கும்.


25  என்னை மாதிரி ரைட்டர் அத்தண்டிக்கான கேரக்டர்சைத்தேடிட்டே இருப்பான்.

26  நீங்க தேடறது எல்லாமே கிடைக்கனும்.

எதைத்தேடியும் ஓடறவன் இல்லை.இருக்கறதை வைத்து சந்தோஷப்படுபவன்.

27  பயணிகளில் இரு வகை. 1 உலகைத்தேடும் பயணி 2 தன் வீட்டைத்தேடும் பயணி

28. சில சமயம் ரிஸ்க் எடுக்காம இருப்பதே பெரிய ரிஸ்க் தான்.

29.  ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் நல்ல துணை கிடைப்பது கஷ்டம்.அன்பைப்பெறுவது அதை விடக்கஷ்டம்.

30. நாம் வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நம் லட்சியத்தை நோக்கி இருக்கனும்.

31 நம்ம சந்தோஷத்தை இன்னொருத்தர் தடை செய்யக்கூடாது.

32வாழும்போது ஒருவரால் நமக்கு ஏற்படும் தாக்கம் அவர் இல்லாதபோதும் உணர முடியனும்.

33. பல காரணங்களுக்காக பலர் நம் வாழ்வில் வந்து போவாங்க .ஆனா நம்ம கூடவே தங்கி விடுவார்களே அவர்களுடன் சேர்ந்து வாழ்வது சுகம்.

34  புதுசா ஒண்ணை ஆரம்பிக்கும்போது நெர்வசா இருப்பதும் நல்லதுதான்.

35.  எனக்காக உன் கனவுகளைக்காம்ப்ரமைஸ் பண்ணிக்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ணு.

36. கனவுகள் மாறலாம் ,வேற வடிவத்துக்கும் மாறலாம்.

37. என் முதல் மேரேஜில் நான் கத்துக்கிட்டது லீகல் டாக்குமெண்ட்ஸ் ,சமூகம் எதுவும் நம்மை சேர்த்து வைக்காது.எது நம்மை சேர்த்து வைக்குதோ அதுதான் காதல்.

38  எது சரி?என்பது நம் மனசுக்கு எப்பவும் தெரியும்,ஆனா மூளை தான் குழப்பி விட்டுடும்.

39 மலைகள் எதையும் மாத்தறது இல்லை.நாம யாரு?ந்னு நமக்கே சொல்லித்தரும்.

40 ரெண்டு பேரோட கனவு  ஒன்றாகக்கூடாது.உனக்கான கனவு உனக்கு,எனக்கான கனவு எனக்கு 

41 உன்னை ரீப்ளேஸ் பண்ண என்றுமே நான் முயற்சித்தது இல்லை.

42. எல்லாப்பிரச்சனைகளுக்கும் மேரேஜ் ஒரு சொல்யூஷன் கிடையாது.

43. காதல் நம்மை மாத்திடுது.அதில் அப்படியே நான் மூழ்கிடறேன்.

44. மலைகளில் ஏதோ ஒரு மாயாஜாலம் இருக்கு

45 என்ன பேசறது?ந்னு தெரியலைன்னா எல்லாரும் வெதர் பத்திப்பேச ஆரம்பிப்பாங்க.

,46. காதலில் சரி ,தவறு என எதுவும் கிடையாது.

47.  நகரத்தில் கிடைக்காத ஏதோ ஒரு மாயாஜாலம் இந்த மலைகளுக்கு நடுவே மறைஞ்சு கிடக்கு.

48. எதுவும் மாற வேண்டிய அவசியம்  இல்லை.

49 வாழ்க்கைல நாம எந்த நிலைக்குப்போனாலும் வந்த ரூட்டை மறக்கக்கூடாது

50 வார்த்தைகளால் சொல்லித்தான் காதலை உணர வைக்கனும்னு இல்லை.