Showing posts with label நையாண்டி. Show all posts
Showing posts with label நையாண்டி. Show all posts

Wednesday, October 27, 2010

கவுண்டமணி - கலைஞர் சந்திப்பு காமெடி கலாட்டா


  கவுண்டமணி - (பம்மிக்கொண்டே வருகிறார்).- ஐயா வணக்கமுங்க,எனக்கு 2 டவுட்டுங்க ,உங்க கிட்ட கேக்கலாமுங்களா?

கலைஞர் - வா தம்பி வா,சரித்திரம் திரும்புகிறதா?வழக்கமா செந்தில்தானே உங்க கிட்ட சந்தேகம் கேட்பாரு,சரி கேள்! (மனசுக்குள்) என்ன குண்டை தூக்கிபோடப்போறானோ?)

கவுண்டமணி - ஐயா,ஒச்சாயி என்பது தமிழ்ப்பெயரா,இல்லையா?

கலைஞர் - தமிழ் அகராதியில் தேடிப்பார்த்தோம் தம்பி,அப்படி ஒரு வார்த்தையே அகராதியில் இல்லை.

 கவுண்டமணி - ஐயா,அந்தப்பேரில் கோடம்பாக்கத்தை சேர்ந்த பலரின் குல தெய்வ சாமி பேரே ஒச்சாயி அம்மன்னு சொல்றாங்க.

கலைஞர்- சாமியே இல்லைனு சொல்றேன்,நீ சாமி பேர்க்கு வாதிட வந்துள்ளாயே தம்பி.

 கவுண்டமணி - ஐயா,ஒண்ணுமில்லைங்க,தமிழ்ப்படம்னு நினச்சுதான் டைட்டில் வெச்சிருக்காங்க,இப்போ திடீர்னு தமிழ்ப்பட டைட்டில் இல்லைன்னா அவங்க எங்கே போவாங்கஏதோ வரி விலக்கு இருந்தாலாவது
4 காசு பாப்பாங்க.

கலைஞர் - தம்பி,யாருக்காகவும்,எதுக்காகவும் கழகமும் சரி,சட்டமும் சரி வளைந்து கொடுக்காது..இது பற்றி நான் முரசொலியில் எழுதிய கவிதை ஒன்று வந்ததே,படிக்கவில்லையா?

 கவுண்டமணி  (நல்ல வேளை,எனக்கு படிக்க தெரியாது,தப்பிச்சேன்) அது போகட்டுங்கய்யா,என் 2வது டவுட்...

கலைஞர்  - ஐயம் என தமிழிலேயே கேள்



 கவுண்டமணி  - (இந்த வெட்டி தமிழ்ப்பற்றுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) ஐயா,குவாட்டர்,கட்டிங்க் இந்த 2 வார்த்தைகளும் தமிழ்ப்பெயரா?அதுக்கு மட்டும் வரி விலக்கு அளிச்சது எப்படி?உங்க குடும்ப படம்கறதாலயா அப்படினு நான் கேட்கலைங்க,சில பன்னாடை பரதேசிப்பசங்க கேட்கறாஙக,உங்க ரேஞ்ச் தெரியாம விளையாடறாங்க,உங்க ஸ்டைல்ல அதுக்கு ஒரு பதில் சொல்லிட்டா எல்லாரும் மூடிட்டு அவங்கவங்க வேலையை பார்ப்பாங்க.


கலைஞர் - அது ... அது வந்து... ஒரு னிதை  , அதன் குழந்தை பால் வேண்டி குவா குவா என கத்துகிறது.அதைக்கேட்டு பெற்ற மனம் ட்டர் என கிழிகிறது.என் கட்டித்தங்கமே என அதை கொஞ்சுகிறாள்,அது பால் கிடைத்த மகிழ்ச்சியில் ங்கா ங்காஎன்கிறது,இதன் சுருக்கம்தான் அந்த டைட்டில்.இப்போது டார்க்கில் உள்ள எழுத்துக்களை படித்துப்பார்,வ குவாட்டர் கட்டிங்க் ,இப்போ சமாதானமாகி விட்டதா?

 கவுண்டமணி  - ஐயா,நிஜமாலுமே நீங்க பேரறிஞர்தானுங்க.இல்லாத ஒண்ணுக்கு எப்படி எல்லாம் விளக்கம் அளீச்சு தப்பிக்கிறீங்க?விபரம் தெரியாத யாரோ பன்னாடைப்பரதேசிப்பசங்க என்னை உசுப்பி விட்டுட்டாங்கய்யா,ஐயா என்னை மன்னிக்கனும்,அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிட்டுங்களா?

கலைஞர் - ம் ம் போகும்போது முரசொலி வாங்கிட்டு போங்க.

 கவுண்டமணி  - மன்னிச்சுக்குங்க ஐயா,அதுல வர்ற கடிதத்தை எல்லாம் உங்க கட்சிக்காரங்களே படிக்க முடியறதில்லையாம்,சாரி அட்ஜஸ் பிளீஸ்.

கலைஞர் - ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை அட்ஜஸ்.ஸ்டாலின்  நான்கு எழுத்து,அழகிரி நான்கு எழுத்து,கனிமொழி நான்கு எழுத்து,கழகம் நான்கு எழுத்து ,கலைஞர் நான்கு எழுத்து,எங்களில் யாராவது ஒருவர் தொடர்ந்து அரியணையில் இருப்பது தமிழனின் தலை எழுத்து.


கலைஞர் செல்கிறார்.பிறகு கவுண்டமணி கோடம்பாக்கம் போகிறார்.

 கவுண்டமணி  - யோவ்,யாருய்யா அது என்னைப்போய் நியாயம் கேக்க சொன்னது?டே வீங்குன வாயா,ஓடிப்போயிடு,என்னய்யா டைட்டில் வைக்கிறீங்க?ஒச்சாயி மச்சாயின்னு ,வேற பேரே கிடைக்கலியா?ஆயி போயின்னு ,இதுல நியாயம் வேற கேக்கனுமோ,அவரே பாவம் குடும்பத்தை பாப்பாரா,உங்க நியாயத்தை பாப்பாரா?இனி எவனாவது தூது போங்கண்ணேனு என் கிட்டே வந்தீங்க அந்த டூத்பேஸ்ட் தலையனை (செந்தில்)விட்டு கடிக்க வெச்சுடுவேன் ஆமா

Tuesday, October 26, 2010

கோடம்பாக்கமும்,தீபாவளிக்கொண்டாட்டமும் (ஜோக்ஸ்)




1. மைனா  வெடி-னு  சொல்றீங்களே,  இதனோட  ஸ்பெஷாலிட்டி  என்ன?

பட்டாசுக்கடைல இருந்து முதுகுல சுமந்துக்கிட்டே வீட்டுக்கு கொண்டு வந்து வெடிக்கனும்.


2.   ‘சாமி’  புஷ்வாணமா?  இதுல  என்ன  ஸ்பெஷல்?

மாமனார்  பத்த  வெச்சார்ணா,  புஷ்வாண  மத்தாப்பூ  மருமக  மேல  பூ  சொரியும்.

3.  நிருபர்:  மேடம்,  வருஷா  வருஷம்  தலை  தீபாவளி கொண்டாடறீங்களே,    எப்படி?

நடிகை:  இது  என்ன  பிரமாதம்?  வருஷா  வருஷம்  புது  புருஷனை  கல்யாணம் பண்ணுனா  போச்சு.

4.  பழநில  போய்  தலைவர்  பட்டாசு  வாங்கறாரே?  ஏன்?

குருவி  வெடி  அங்கே  சிட்டுக்  குருவி  லேகிய  வெடியா  விற்கறாங்களாம்.

5.  கல்யாணமாகி  2  மாசம்தானே  ஆகுது.  அப்போ  இது  தலை  தீபாவளிதானே  உங்களுக்கு?

எங்க  ‘தல’  படம்  மங்காத்தா  ரிலீஸ்  ஆனாத்தான்  எனக்கு  தல  தீபாவளி.

6.  பாரதியார்  -  வைரமுத்து  என்ன  வித்தியாசம்?

அவரு  முட்டாசுக்  கவிஞர்.  இவரு  பட்டாசுக்  கவிஞர்.


7.  கதையல்ல  நிஜம்  வெடி-னு  சொல்றீக்களே!  இப்படிக்  கூடவா  பேரு  வைக்கறாங்க?

அட!  பழைய  லட்சுமி  வெடிதாங்க.  பேரை  மட்டும்  மாடர்னா  வெச்சிருக்காங்க.


8.  லட்சுமி  வெடி  ஒரு  பாக்கெட்  குடுங்க.

அது  பழைய  வெடிங்க.  லட்சுமிராய்  வெடி  வாங்கிட்டுப்போங்க.  பற்ற  வெச்சு  10  செகண்ட்ல  டான் -னு  டோனி-னு  வெடிக்கும்.


 

9.  த்ரிஷா  வெடிங்களா?  இதுல  என்ன  புதுசு?

இங்கே  பற்ற  வெச்சா  மும்பைல  போய்  வெடிக்கும்.  செம  கிக்கா  இருக்கும்.



10.  தலைவரு  டைரக்டர்  ஷங்கரோட  தீவிர  ரசிகராம்.

இருக்கட்டும்,  அதுக்காக  பிரம்மாண்டமா  வெடிக்கறேன் -னு  கேஸ்  சிலிண்டரை  வெடிக்க வைக்கறது  ஓவர்.



11.  இந்த  ராக்கெட்ல  கமல் - த்ரிஷா  படம்  ஒட்டி  இருக்கே?

 ‘மன்மதன்  அம்பு’  ராக்கெட்டுங்க.  பற்ற  வெச்சீங்கன்னா  கப்பல்  தளத்துல  விழுந்து  வெடிக்கும்.


12.  ‘கேப்டன்  வெடி’  இருக்கு  வேணுங்களா?

வேணாம்ங்க.  பற்ற  வெச்சா  திரி  முதல்ல  சீறும்.  அப்புறம்  புஸ்ஸு-னு  போயிடும்.  வெடிக்காது.  டம்மி  பட்டாசு.



13.  எதுக்கு  பட்டாசை  பற்ற  வெச்சு  தண்ணீர்த்  தொட்டில  போடறே?

இது  நீர்யானை  வெடி  ஆச்சே?



14.  தலைவரு  ரொம்ப  முசுடு  பிடிச்சவர்-னு  எப்படி  சொல்றே?

அவரு  கிராமத்துக்காரர்ங்கறதுக்காக  கட்டு  விரியன்  பாம்பு  மாத்திரை,  சாரை  பாம்பு  மாத்திரை-னு  வித  விதமா  கேட்டா  எப்படி?


15.  அமைச்சரே!  நான்  ராஜ  வம்சத்தில்  பிறந்தவன்.

இருக்கட்டும்  மன்னா!  அதற்காக  ராஜ நாகபாம்பு  மாத்திரை  வேணும்-னு  கேட்டா  எப்படி?


16.  அந்த  பட்டாசுக்  கடைக்காரர்  ரொம்ப  ஸ்ட்ரிக்ட்  ஆனவர்-னு  எப்படி  சொல்றே?

பாம்பு  மாத்திரை  கேட்டாக்கூட  பிரிஸ்கிரிப்ஷன்  ஷீட்  இருந்தாத்தான்  தருவேன் -கறேரே?

 டிஸ்கி 1 :  முதல் பட ஸ்டில் மைனா படத்தோடது,இந்தப்பட டைரக்டர் இந்த சீனை படத்துக்கு பெரிய டர்னிங்க் பாயிண்ட்டா நினைச்சிருப்பாரு போல,எல்லா தியேட்டர்லயும்,விளம்பரங்கள்லயும் இதுதான்,உப்பு மூட்டை தூக்கற ஹீரோ கிட்டா மூட்டையை திருப்பி போட்டு தூக்கி இருக்கலாமே என நக்கலாக கேட்டதுக்கு (நன்றி -ஆராரோ ஆரிராரோ வசனக்ர்த்தா கே பி)
ஹீரோ சொன்னாரு “ஹூம் ரெண்டும் ஒண்ணுதான்,எந்த சேஞ்சும் தெரியலன்னுட்டாரு,

டிஸ்கி 2- 2வது ஸ்டில் காதலைக்காதலிக்கிறேன் படத்தோடது (என்னமா கற்பனை பண்றாங்கப்பா டைட்டிலுக்கு)18 வயசுக்கு கம்மியா இருக்கறவங்க அதை பாக்க வேணாம்.அம்மணி கிட்ட டர்க்கி டவல் உள்ளே, எதுக்கு கறுப்புக்கலர்ல எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்க்? னு கேட்டதுக்கு,கவர்ச்சிக்கு ஒரு எல்லை வெச்சிர்க்காராம்,ஷூட் பண்றப்ப அவரையும் மிறி எதும் தெரிஞ்சுடக்கூடாதாம்(அவரது எச்சரிக்கை உணர்வுக்கு ஒரு ஓ போடுவோம்)

Monday, October 25, 2010

தலைவரோட வீட்லயும் மைனாரிட்டி ஆட்சியா?



1.  பெண்கள்  ஏன்  அதிகமா  அரசியலுக்கு  வர்றதில்லை?

அவங்களுக்கு  ஆண்களை  ஆட்டி  வெச்சுதான்  பழக்கம்.  ஓட்டு  கேட்டு  பழக்கமில்லை.

2.  தலைவருக்குத்தான்  படிக்கவே  தெரியாதே,  எதுக்கு  லைப்ரரி  போறாரு?

கன்னி  மாரா  லைப்ரரி-னா  ஏகப்பட்ட  கன்னிங்க  வருவாங்க-னு  நினைச்சுட்டார்.

3.  மக்களுக்கு  விழிப்புணர்வை  ஊட்டுவதில்  எங்கள்  கட்சிக்கே  முதலிடம்-னு தலைவர்  சொல்றாரே?

ஆமா...  நைட்  டைம்ல  கரண்ட்டே  இருக்கறதில்லை.  எவனும்  தூங்க  முடியறதில்லை.


4.  தலைவரே!  நம்ம  கட்சில  இருக்கற  16  எம்.எல்.ஏ. க்களுக்கும்  மகளிர்  அணித்தலைவியோட  ஃபேஸ்கட்  பிடிக்கலையாம்.

ஓஹோ...  அதிருப்தி  எம்.எல்.ஏ. க்கள்  இந்த  ரூபத்திலும்  உருவாகறாங்களா?


5.  தலைவருக்கு  எப்பவும்  கட்சி  ஞாபகம்தான் -னு  எப்படி  சொல்றே?

தலைவரோட  சம்சாரம்  ஒரு  குழந்தை  வேணும்-னு  கேட்டதுக்குக்கூட  அதைப்பத்தி  நான்  எதுவும்  கருத்துக்கூற  முடியாது,  கட்சி  மேலிடம்தான் முடிவு  பண்ணனும்கறாரே?


6.  “அத்தான்...  உங்க  மேல  எனக்கு  நம்பிக்கையே  போயிடுச்சு...”

 “வேணும்னா  நம்பிக்கை  ஓட்டெடுப்பு  நடத்தலாமா?  உன்  3  தங்கைகளும் எனக்கு  ஆதராவாதான்  ஓட்டு  போடுவாங்க.


7.  தலைவரே!  கடல்  படைக்கு  நடத்தற  எக்ஸாம்ல  கொஸ்டீன்  பேப்பர்  அவுட்  ஆகிடுச்சாமே?

இதுக்கு  ஏன்  பதட்டப்படறீங்க?  ஆன்சர்  பேப்பர்  அவுட்  ஆகலையே?


8.  தலைவர்  ஏன்  மூடு  அவுட்டா  இருக்காரு?

அகில  உலக  அரசியல்  பேதை  விருது  அவருக்கு  தந்துட்டாங்களாம்.




9.  தலைவருக்கும்,  மகளிர்  அணித்தலைவிக்கும்  இடையே  கோல்டுவார்  நடக்குதாமே?

ஆமா,  உடனடியா  10  பவுன்ல  செயின்  பண்ணிப்போட்டே  ஆகனுமாம்.  GOLD WAR.


10.  இந்தில  கவர்ச்சியா  நடிக்கத்  தயார்-னு  அந்த  நடிகை  சொல்றாங்களே?

இதுலயும்  தமிழன்  ஏமாற்றப்படுகிறானா?  அய்யகோ!


11.  எதெதுக்குத்தான்  விசாரணைக்  கமிஷன்  வைக்கறதுன்னு  ஒரு  விவஸ்தை  இல்லாம  போச்சு.

ஏன்?

எனக்கு  ஏன்  எந்த  கொலைமிரட்டலும்  லெட்டரும்  வர்லை?-னு  கேட்டு  விசாரணை  கோரியிருக்காரு  தலைவரு.


12.  பவித்ரன்  சிட்டிசப்ஜெக்ட்  பண்ணுனா  என்ன  டைட்டில்  வைப்பாரு?

மாட்டு  மிடி.


13.  தலைவரோட  வீட்ல  மைனாரிட்டி  ஆட்சி  நடக்குதுனு  எப்படி  சொல்றே?

தலைவரோட  சின்ன  விட்டுக்கு  16  வயசுதான்  ஆகுதாம்.


14.  தலைவருக்கு  குழந்தை  மனசு.

 அதுக்காக,  எனக்கு  ஓட்டு  போட்டா  எல்லாருக்கும்  ஒரு  பலூன்  வாங்கித்தருவேன்னு  வாக்கு  தர்றதா?


15.  தீபாவளிப்  படங்கள்  எதுவும்  அசத்தல-னு  எப்படி  சொல்றே?

அசல்  தல  படம்  மங்காத்தா  ரிலீஸ்  இல்லையே?


16.  தலைவர்  தீபாவளிக்கு  பட்டாசு  வெடிச்சு  நான்  பார்த்ததே  இல்லையே?

அவருக்கு  மத்தவங்க  பதவிக்கு  வேட்டு  வெச்சுத்தான்  பழக்கமாம்.


டிஸ்கி 1 - முதல் ஸ்டில் ஊலலலா படம்,ஹீரோயின் சிரிப்பு வராமல் சிரிக்கிறார்,அநேகமாக இந்தப்படத்துக்கு சம்பளம் இன்னும் தந்திருக்க மாட்டார் டைரக்டர்.

டிஸ்கி 2 :-ரெண்டாவது ஸ்டில்லும் அதே படம்.பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டு விடும் என நினைக்குமாம்,காதலர்கள் கண்ணை மூடினால்...? (உடம்பையும் நல்லா கவர் பண்ணி மூடினா தேவலை)
இப்பவெல்லாம் ஹீரோக்கள் நாய் மாதிரி ஹீரோயினை மோப்பம் பிடிக்கறாங்க,ஏன்னு தெரியல.

தலைவர்கிட்டயே தகராறா?


1.  தலைவரே! சி.பி.ஐ  மத்திய அரசின்  கைப்பாவையா  செயல்படுதுனு சொன்னீங்களாமே?

பொய்...  கோயில்களில்  திருப்பாவை  பாடப்  பட வேண்டும்னுதான் சொன்னேன்.


2.  தலைவர் கட்சில  இருக்கற  மகளிர்  அணித்தலைவிக்கு  நூல்  விடறாரே?

நடமாடும்  நூலகம்-னு  இந்த அர்த்தத்துலதான்  பாராட்னாங்களா?




3.  காஷ்மீர்  இந்தியாவுடன்  இணையவில்லை  அப்டி-னு  ஏன்  தலைவரே சொன்னீங்க?  பெரிய  பிரச்சனை ஆகிடுச்சு.

நயன்தாரா காஷ்மீர்  ஆப்பிள்  மாதிரி  இருக்காங்க.  இந்தியாவின்  மைக்கேல் ஜாக்‌ஷன்  பிரபுதேவா,  இவங்க  இரண்டு பேரும்  இணையலை-னுதான் சொன்னேன்-னு  பிளேட்டை திருப்பிபோட்ரலாம்!

4.  வாரிசு  இல்லை-னு  தலைவர்  வருத்தப்படறாரே?

அதுவும்  நல்லதுக்குத்தான்.  2, 3 வாரிசு இருந்தா வாரிசு  உரிமைப்  பிரச்சனையும்  வரும்.

5.  ஊழல்  கடவுள்  மாதிரி-னு  எப்படி  சொல்றீங்க  தலைவரே?

தூணிலும்  இருக்கும்,  துரும்பிலும்  இருக்கும்;   கண்ணுக்குத்  தெரியாது,  நீக்கமற  நிறைந்திருக்கும்.


6.  இதுதான்  என்  கடைசி  தேர்தல்,  மறக்காம  எனக்கு  ஓட்டுப்  போடுங்க.

போங்க  தலைவரே!  25  வருஷமா  இதையேதான்  சொல்றீங்க?  எங்கே  ரிடையர்  ஆகறீங்க?


7.  டான்ஸ்  போட்டில  வெற்றியும்,  தோல்வியும்  ஒண்ணுதான்.

எப்படி  சொல்றே?

டான்ஸ்  போட்டில  கலந்துக்கிட்றவங்க  ஜெய்ச்சாலும்,  தோத்தாலும்  அழறாங்களே?


8.  தமிழ்-ல  டைட்டில்  வெச்சாதான்  வரிவிலக்கு-னு  சொல்லியிருக்காங்க.  ஆனா  நீங்க  ஆங்கில  வார்த்தைல  டைட்டில்  வெச்சிருக்கீங்களே?

அதையும்  தமிழ்  எழுத்துல  தானே  வெச்சிருக்கோம்-னு  சொல்லி  குழப்பி  விட்ரலாம்.  டோண்ட்  ஒர்ரி.


9.  தலைவரே!  மத்திய  அரசின்  திட்டங்களை  எல்லாம்  மாநில  அரசின்  திட்டங்கள்-னு  விளம்பரம்  பண்றீங்களாமே?

“அவங்களுது, எங்களுது-னு  பிரிச்சுப்  பேசறது  எனக்குப்  பிடிக்காது”


10.  தலைவரே!  உங்க  பண்ணை  வீட்ல  ரெய்டு  வரப்போவுதாம்.

சரி, சரி,  மகளிர்  அணித்தலைவியை  கிளம்பச்  சொல்லு.


11.  டைரக்டர்:  மேடம், எங்க  படத்துல  கௌரவத்  தோற்றத்துல  ஒரு  சீன்ல  நடிக்கனும்.

நடிகை:  ஓ.கே.  என்ன  கேரக்டர்?

டைரக்டர்:  கேபரே  டான்சர்.


12.  தலைவருக்கு  நீலம்தான்  ராசியான  நிறமாம்.

ஓஹோ...  அதான்  அடிக்கடி  புளூஃபிலிம்  பார்க்கறாரா?


13.  தலைவர்  புளூகிராஸ்  மெம்பராம்.

அதுக்காக  வெட்னரி  டாக்டர்  பட்டம்தான்  வேணும்னு  அடம்  பிடிச்சா  எப்படி?


14.  டாக்டர்  ஆபரேஷன்  தியேட்டருக்குள்ளே  போறதை  இரண்டு  பேர்  தடுக்கறாங்களே,  யாரு?

பேஷண்ட்  போட்ட  இன்சூரன்ஸ்  கம்பெனி  ஆஃபீசர்ஸாம்.


15.  தலைவரே!  எங்க  கட்சிக்கு  இன்னும்  3  சீட்  வேணும்.

இன்னும்  வேணுமா?  இலங்கைல  போட்டி  இடறீங்களா?


16.  இலைங்கை  அகதிகளுக்கு  இங்கே  ஓட்டுரிமை  இருக்கா?-னு  தலைவர்  விசாரிக்கராரே,  ஏன்?

அவங்களுக்கு  ஆதரவா  பேசலாமா?-னு  முடிவு  பண்ணத்தான்.

Sunday, October 24, 2010

குண்டக்க மண்டக்க குறுஞ்சிரிப்ஸ்


1.உலகத்துலயே சோகமான விஷயம் லவ் ஃபெய்லியர்னு நினைச்சுட்டு இருக்கோம்,அதை விட சோகமான விஷயம் எது தெரியுமா?

நண்பனுக்காக எக்ஸாம் ஹால் வெளியே நின்று கொண்டு காத்திருப்பது ,மேலும் மனசுக்குள் “ஒரு வேளை அவன் மட்டும் பாஸ் ஆகிடுவானோ?”என்று நினைப்பது.


2. காதல்னா என்ன?

யாரோ ஒருத்தன் கட்டிக்கப்போற பொண்ணுக்காக  ஐஸ் கிரீம்,சாக்லேட், எல்லாம் வாங்கிக்குடுத்து உடம்பை தேத்தி விட்டு சுடிதார்,வாட்ச்,செப்பல் எல்லாம் கிஃப்ட்டா குடுத்து (இவன் போட்டிருப்பது  10 ரூபா செப்பல்தான் )அட்டு ஃபிகரை லட்டு ஃபிகர் ஆக்கிஎவனுக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.


3. தெரிஞ்ச ஃபிகரை விட்டவனும் கெட்டான்,தெரியாத ஃபிகரை தொட்டவனும் கெட்டான்.


4. பெண்கள் ஸ்பெஷல் - 

1.கேரளா - அட்ராக்ட்டிவ் கண்கள் +அடர்த்தியான கருங்கூந்தல்

2.ஆந்திரா - கூர்மையான மூக்கு

3.பஞ்சாப் - கலர்ஃபுல் லிப்ஸ் (வண்ண மயமான உதடுகள் )

4.மத்தியப்பிரதேசம் - சிம்ரன்,இலியானாக்களூக்கு சவால் விடும் இடை அழகிகள்.

5.மஹாராஷ்ட்ரா - அழகிய உடல் அமைப்பு (BEAUTIFUL STRUCTURE)

6.மேற்கு வங்காளம் - அழகிய கால்கள்

7. தமிழ்நாடு - ஒரு வெங்காயமும் இல்லைன்னாலும் ஓவரா சீன் போடறது.


5.  பணக்காரன் - என் கிட்ட இன்னைக்கு 34 காரு,26 ஹோட்டல்,8 பண்ணை வீடுகள்,கோடிக்கணக்குல பேங்க் பெலன்ஸ் இருக்கு,உன் கிட்ட என்ன இருக்கு?

ஏழை - என் கிட்டே ஒரே ஒரு பையன் தான் இருக்கான்,அவனோட பையன் உங்க பொண்ணு வயிற்றுல 5 மாசமா வளந்துட்டு இருக்கான்.


6.  வேலைக்காரி குளிக்கறப்ப எட்டி பாத்தீங்களா அத்தான்?

நீ போடற சோப்பை அவ போடறாளான்னு பார்த்தேன்,ஆனா அவ  ஒண்ணுமே போடலை.



7.உலகின் மிகச்சிறிய காதல் கதை - அவன் காதலை அவளிடம் தெரிவித்தான்,அவள் சிரித்தாள்,அய்யகோ பார்ட்டிக்கு பல் நஹி,(அப்போ பார்ட்டி பாட்டியா?),அவன் அதிர்ச்சியில் மயக்கமானான்.

8. CRAZY LETTER TO PRINCIPAL

RESPECTED SIR,

I AM SUFFERING FROM LOVE.BUT I AM UNABLE TO CORRECT THE FIGURE.SO KINDLY I REQUESTING YOU TO ARRENGE A GOOD HOMELY GIRL IN YOUR RELATION OR NEIGHBOUR WITHIN 2 DAYS.


தமிழில்

உயர் திரு ஐயா,

நான் காதலால் பாதிக்கப்பட்டு இருக்கேன்,(நீ மட்டுமா?உலகமேதான்)
ஆனா என்னால எந்த ஃபிகரையும் கரெக்ட் பண்ண முடியல (சரியா கனெக்ட் பண்ணி இருக்க மாட்டே)அதனால் தயை கூர்ந்து உங்களிடம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது உங்கள் உறவிலோ அல்லது தெரிந்தவர்களிடமோ,பக்கத்து வீட்டிலோ நல்ல ஃபிகர் இருந்தால் தெரியப்படுத்தவும்,இன்னும் 2 நாட்களுக்குள்.நன்றி

பி கு - நீங்க எனக்கு மாமா மாதிரி

இப்படிக்கு

உங்கள் அன்புள்ள மாப்ளே.


9. ஒரு சர்தார்ஜி தற்கொலை செய்ய ஆத்துல குதிச்சார்,அப்புறம் அவர் சட்டை பாக்கெட்டிலிருந்து ஒரு மீனை எடுத்து வெளில போட்டு சொன்னார்,நாந்தான் சாகப்போறேன்நீயாவது பிழைச்சுக்கோ.



10.காதல் நிலைகள் (பெண்கள்)

1980 - என்னை லவ் பண்ணு,  ஆனா தொடாதே

1990 - தொடு,ஆனா கிஸ் மட்டும் வேணாம்.

2000 - கிஸ் பன்னிக்கோ,ஆனா வேற எதுவும் வேணாம்.

2005 - என்ன வேணாலும் பண்ணிக்கோ,ஆனா யார் கிட்டயும் எதையும்
           சொல்லிடாதே.

2010 -எல்லாத்தையும் செய்,ஆனா செய்யாம விட்டா எல்லார்கிட்டயும் இவனால எதுவும் செய்ய கையாலாகலைனு பரப்பி விட்டுடுவேன் (மிரட்டல்)

டிஸ்கி -1  ; முதல் பட ஸ்டில் மழைக்காலம் ,2 பார்டிகளுக்கும் உள்ள பொதுவான அம்சம் 2 பேருக்கும் தலை சீவும் பழக்கம் இல்லை,அண்ணன் ஃபுல் ஹேண்ட் சர்ட் போட்டு மடிச்சு விட்ட மாதிரி அண்ணி துப்பட்டாவை கழுத்துக்கு ஒண்ட (என்ன ,இது தமிழ் வார்த்தை தானா?)  போட்டிருக்கிறார்.அண்ணீ அண்ணனை விட ஹைட் ஜாஸ்தி.

டிஸ்கி -2 : 2வது ஸ்டில் மீனாட்சி,அம்மணி போட்டிருக்கற பவுடர் படலத்தை கூர்ந்து கவனிங்க,மேலே த்லை ,நெற்றி பக்கத்துல பவுடர் சரியா கவர் ஆகாம ஒரு லேயர் மாதிரி நிக்கும்,ஓவர் மேக்கப்,அம்மணி பல் டாக்டர்ட்ட போறது நல்லது,பல்லை பாத்தா பயமா இருக்கு,அவங்களுக்கு ஃபோன் பண்ணி ஆலோசனை சொன்னா நடிகைட்ட பல்லை யார் சார் பாக்குறா அப்படிம்பார்,எதுக்கு வம்பு?

Saturday, October 23, 2010

பிரபல பதிவர் மீது மான நஷ்ட வழக்குப்போட்ட பெண் பதிவர்



சமீப காலமாக பதிவுலகில் அடிதடி,இவர்கள் அவர்களைத்தாக்குவதும்,அவர்கள் இவர்களைத்தாக்குவதும் ஒரே ரகளை ,தெலுங்கு டப்பிங்க் படம் போல் ஆகி விட்டது.

கோர்ட்டில்

ஜட்ஜ் - கேசோட டீட்டெயிலை சொல்லுங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -(பெயர்க்காரணம்,இவர் எப்போதும் கூட ஒரு குட்டியுடனோ,கன்னிப்பெண்ணுடனோதான் இருப்பார்.உயிர்,சிந்துசமவெளி,மிருகம் போன்ற காலத்தால் அழிக்க முடியாத காவியப்படைப்புக்களை அளித்த இயக்குநர் சாமியின் தீவிர ரசிகர்)

யுவர் ஆனர்,அந்த கேஸ்க்கு வயசு 28, பாடி சைஸ் 36,28,38.டைவர்ஸ் கேஸ்,ரூட் போட்டா சீக்கிரம் மடங்கிடும்.

ஜட்ஜ் - யோவ்,வாசல்ல பராக்கு பார்த்துட்டு நிக்குதே அந்த கேஸ் பற்றி கேட்கலை,கோர்ட்ல நடக்கற கேஸ் டீட்டெயிலு பற்றி கேட்டேன்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - யுவர் ஆனர்,அதை என் கட்சிக்காரரே சொல்வார்,டேய் நாயே,என்ன வேடிக்கை,வாயைத்திறந்து பேசுய்யா.


சி பி - ஐயா,சிரிப்புப்போலீஸ் ரமேஷ் என்னை அவமானப்படுத்திட்டாரு,அவர் மேல நான் மான நஷ்ட வழக்குபோடனும்.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - டேய்,அதெல்லாம் மானம் இருக்கறவன் போட வேண்டியது,நீ மேட்டரை மட்டும் சொல்லு.


சி பி - ஒரு வாரத்துக்கு முன்ன நான் ஒரு பதிவு போட்டேன்,அது கலைவாணர் கிருஷ்ணன் வாழ்க்கைல நடந்த சம்பவம்.அதை நான் லைப்ரரில இருந்து சுட்டுட்டு வந்த புக்ல இருந்து எடுத்தது.நான் சுட்ட மேட்டரை ஏற்கனவே 5 வருஷத்துக்கு முன்பே தான் பதிவு போட்டுட்டதா என் பிளாக்லயே ஒரு கமெண்ட் போட்டு என்னை சந்தி சிரிக்க வெச்சுட்டார்.


வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை,வழக்கமா நீ டப்பா படத்துக்கு விமர்சனம் போடுவே,இல்லைன்னா ஜோக்குங்கற பேர்ல கடிப்பே,அதையே செய்யவேண்டியதுதானே,ஏன் ரூட் மாறுனே?

சி பி - 2 ரீசன்ங்க,1. சரக்கு இல்லை,தீந்துடுச்சு .2.எப்பவும் டைம் பாஸ் மேட்டர் தான் போடறே,ஏதாவது சமூக சீர்திருத்தக்கருத்து போடலாமேனு எல்லாரும் சொன்னாங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - உன்னைத்திருத்தவே ஒரு ஊர் வேணும்,நீ ஊரைத்திருத்தறியா?

 ஜட்ஜ் - நிறுத்துங்க,நீங்க 2 பேருமே பேசிட்டு இருந்தா எப்படி?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - சரி நீங்க கொஞ்ச நேரம் பேசுங்க.


ஜட்ஜ் - பிரதிவாதி ரமேஷ் கிட்ட விசாரிப்போம்,அவரை வரச்சொல்லுங்க.

டவாலி - ரமேஷ்,ரமேஷ்,ரமேஷ்

ஜட்ஜ் - என்ன ஆளைக்காணோம்?

சி பி - அவர் சிரிப்புப்போலீசுங்க,அதனால மாமூல் குடுத்தாதான் வருவார்.

ரமேஷ் - வணக்கம் ஜட்ஜ் ஐயா.

ஜட்ஜ் - வனக்கம் எல்லாம் நல்லாத்தான் போடறீங்க.

ரமேஷ் - கமெண்ட்டும் நலா போடுவேங்க.யார் எந்த டைம் ல பதிவு போட்டாலும் சரி ,அது மிட் நைட்டோ ,கட் நைட்டோ சரியா முத ஆளா மீ த ஃபர்ஸ்ட் அப்படினு கமெண்ட் போட்டுடுவேன்.

ஜட்ஜ் - நீங்க எதுக்காக சி பி மேல,இம்சை அரசன் பாபு மேல அப்படி ஒரு குற்றச்சாட்டு வெச்சீங்க?

ரமேஷ் - யுவர் ஆனர்,அவங்க எந்தப்பதிவு போட்டாலும் உடனே நான் ஓட்டு போட்டு கமெண்ட்டும் போட்டுடறேன்,ஆனா அவஙக  ரொம்ப லேட்டாதான் என் பிளாக்குக்கே வர்றங்க,என்னை அவமானப்படுத்துன அவங்களை நான் அவமானப்படுத்த வேண்டாமா?

வக்கீல் கன்னி குட்டி காமசாமி -யோவ்,நீ கம்பெனி மேனேஜரு,உன்சவுகரியத்துக்கு கம்பெனி டியூட்டி டைம்லயே எல்லா பர்சனல் ஒர்க்கையும் பாத்துக்குவே,அவங்க அப்படியா? ,சம்பளத்துக்கு வேலை செய்யற பன்னாடை பையன் அந்த சி பி ,ஒரு நாளுக்கு 1 மணி நேரம்தான் கிடைக்கு்தாம்,அதுல பதிவு போடவும்,பதிவுக்கு வர்ற பின்னூட்டத்துக்கு நன்றி சொல்லவுமே நேரம் சரியா இருக்குதாம்,கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்குய்யா.

ரமேஷ் - ஓக்கே,இனிமே யார் எந்தப்பதிவு போடறதா இருந்தாலும் என் கிட்டே காட்டி அப்ரூவல் வாங்கிக்குங்க,அப்ப நான் உங்க வழிக்கே வரமாட்டேன்.

ஜட்ஜ்  - எப்படியோ பிரச்சனை சுமூகமா தீந்தது,கோர்ட் கலைகிறது.



வக்கீல் கன்னி குட்டி காமசாமி -கோர்ட் என்ன அபார்ஷன் ஆன நடிகையோட கர்ப்பமா?கலைய?டேய் சி பி ஃபீஸை எடு.

சி பி  - ஃபீஸா?ஆளை விடுங்க எஸ்கேப்,என் கிட்ட காசு இல்ல ,வேணும்னா என் கிட்ட இருக்கற 870 டி வி டிக்கள்ல ஏதாவது ஒண்ணு எடுத்துக்குங்க.

வக்கீல் கன்னி குட்டி காமசாமி - இதையே நீ எத்தனை வருஷமா சொல்லீட்டு அலைவே,கொண்டா ,அந்த 870 டி வி டியையும் தீ வெச்சு கொளுத்திடறேன்,அப்பத்தான் அடங்குவே.

டிஸ்கி 1 - நான் பதிவுலகத்துக்கு வந்து 99 நாட்கள் முடிந்தது,இன்று 100வது நாள்.என் அனைத்து பதிவுகளுக்கும் கமெண்ட் போட்டு கவுரவித்த சிரிப்புப்போலீஸ் ரமேஷ்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவே இந்த இடுகை,மற்றபடி எந்த மனத்தாங்கலும் எங்களுக்குள் இல்லை

டிஸ்கி 2 - டைட்டிலில் பெண் பதிவர் என இருக்கே எனகேட்பவர்களூக்கு நான் எப்போதும் பேனாவும் கையுடனுமே இருப்பேன்,ஏதாவது ஜோக் ஸ்ட்ரைக் ஆச்சுன்னா உடனே டைரியில் குறித்து வைத்துக்கொள்வேன்,ஏன் எனில் எனக்கு ஞாபக மறதி ஜாஸ்தி,எனவே PEN பதிவர் என எல்லோரும் என்னை கிண்டல் அடிப்பர்,பென் பதிவர் என போட்டிருக்க வேண்டியது தமிழ் அறிவு குறைவு என்பதால் பெண் பதிவர் என போட்டு விட்டேன்.

டிஸ்கி 3 - பன்னிக்குட்டி ராமசாமிக்கும் ,கன்னிக்குட்டி காமசாமிக்கும் யாதொரு தொடர்பும் இல்லை.

டிஸ்கி 4 - மேலே உள்ள சுமாரான ஃபிகர் பட்டாப்பட்டி 50 -50 படத்து ஸ்டில்,இதற்கும்,பட்டா பட்டி எனும் பதிவருக்கும் எந்தத்தொடர்பும் இல்லை.

டிஸ்கி 5 - ஆளாளுக்கு பிரபல பதிவர்னு போட்டுக்கறாங்களெ ,அப்போ சாதா பதிவர் யாரு?

Friday, October 22, 2010

ஓ,தமிழர்களே,தமிழர்களே !

1. மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேச்சு: இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்த முடியாத திட்டங்களையெல்லாம் கருணாநிதி செயல்படுத்தி வருவதுடன், சொல்லாத திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். திட்டங்களின் பயன்களை மக்கள் அனுபவிக்கின்றனர். இந்த சாதனைகளே தமிழகத்தில் மீண்டும் தி.மு.க.,வை ஆட்சியில் அமர வைக்கும்.


நையாண்டி நாரதர் - அப்போ தமிழ்நாட்டை யாராலும் காப்பாத்த முடியாதுன்னு சொல்றீங்களா?


2. மத்திய நிதித்துறை செயலர் கோபாலன் பேட்டி: கடன் திட்டங்கள் கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். கூட்டுறவு வங்கிகள் போன்ற சிறிய வங்கிகளில் கடன் வழங்க விதிமுறைகள் வகுக்கப்பட உள்ளன. வங்கிகளும் ஏமாறக் கூடாது. வங்கிச் சேவைக்காக மக்களும் அலையக் கூடாது.

 நையாண்டி நாரதர் - எங்கே? லோன் தர்றதுக்கு பேங்க் மேனேஜர் லோ லோனு அலைய வைக்கிறார்,லோன் வாங்கின பிறகு அதைக்கட்டாம பொதுஜனம் அலைவைக்குது,பதிலுக்கு பதில்.

3.  பத்திரிகை செய்தி: விரைவில் நடக்கவுள்ள வி.ஏ.ஓ.,க்களுக்கான தேர்வு எழுதுவதற்காக, டாஸ்மாக் கடையில் பணிபுரியும் 70 சதவீத ஊழியர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதனால், தேர்வு நாளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


நையாண்டி நாரதர்  - டாஸ்மாக்லயே தினம் ரூ 2000 சம்பாதிக்கலாமே,தண்ணீர் கலந்து சரக்கு விக்கலாமே,அதுக்கும் மேலயா வி ஏ ஓ ல வருமானம் வந்துடப்போவுது?


4.  மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: பெங்களூரு மற்றும் மும்பை போன்ற நகரங்களில் எட்டு மணி நேரம் மின் வெட்டு நிலவுகிறது. தலைநகர் டில்லியில் அதற்கும் அதிகமாக மின் வெட்டு உள்ளது. மற்ற நகரங்களில் நிலவும் மின்வெட்டை விட, தமிழகத்தில் மின்வெட்டு குறைவு தான்.


நையாண்டி நாரதர் - ஆம்,மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மக்களுக்கு சொரணை கம்மிதான்,இல்லாவிட்டால் திருப்பி திருப்பி தி மு க, அ ,தி மு க என 2 கட்சிக்கும் மாற்றி மாற்றி சான்ஸ் குடுக்குமா?அது இருக்கட்டும் குஜராத் மாநிலத்தில் மின் வெட்டே கிடையாது,அதை  உதாரணமா சொல்ல்லாமே?





5. பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: பணக்காரர்களுக்கு கிடைக்கும் கல்வி, ஏழை மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பது தான் என் லட்சியம். கட்டாயக் கல்வி, கட்டணம் இல்லா கல்வி, சுமை இல்லா கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது என் ஆசை.

 நையாண்டி நாரதர் -உங்க லட்சியம் அதுதான்னா ஏன் கட்சி நடத்தறீங்க? அதை கலைச்சுட்டு சமூக சேவை அல்லது தொண்டு நிறுவனம் நடத்தலாமே?


6. அ.தி.மு.க., அவைத் தலைவர் மதுசூதனன் பேச்சு : அரிசி கடத்தல், கொலை, கொள்ளை அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. ஜெயலலிதா ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டு போலீசிற்கு நிகராக இருந்த தமிழக போலீஸ், கருணாநிதி ஆட்சியில் கட்டப் பஞ்சாயத்து போலீசாக மாறிவிட்டது.

  நையாண்டி நாரதர் - மணல் கடத்தல் பற்றி சொல்லவே இல்லையே,உங்களுக்கும் பங்கு வந்துடுதா?





7. முதல்வர் கருணாநிதி: ஜனநாயகத்தில் யாரும், எந்தப் பொருள் பற்றியும் பேசலாம்; எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பவர்களைப் பற்றியும் குறை கூறலாம்; குற்றஞ்சாட்டலாம்; அதுதான் ஜனநாயகம். அந்த ஜனநாயகத்தை இன்று நேற்றல்ல, அண்ணா காலத்திலிருந்தே நாம் பின்பற்றி வருகிறோம்.

 நையாண்டி நாரதர் - தலைவரே,இந்த காமெடிதானே வேணாம்கறது,ஆ ராசா பற்றியோ,அழகிரி பற்றியோ பேசுனா உங்களுக்கே கோபம் வந்துடுது.

 8.




Manthira punnagai audio launch
பொது விழாக்களுக்கு கவர்ச்சி உடையணிந்து வருவதையே எழுதப்படாத பாலிஸியாக வைத்துக் கொண்டு செயல்படும் நடிகைகளில் முக்கியமானவர் மீனாட்சி. கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் பாவாடை தாவணியில் தோன்றி அசத்திய மீனாட்சியா இது? என்று முகம் சுழித்து கேட்கும் அளவுக்கு திரையில் தோன்றும் மீனாட்சி, அதைவிட மோசமான ஆடைகளையே பொது விழாக்களுக்கும் அணிந்து வருவார். அப்படி வரும் நடிகைகள் கண்ணை திறக்க முடியாத அளவுக்கு பிளாஷ் மழை பொழியும்.



அப்படியொரு பிளாஷ் மழை நடிகை மீனாட்சியின் மீது பொழிந்தது. அவர் நாயகியாக நடித்திருக்கும் மந்திர புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அத்த‌னை ‌பேரையுமே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் சிக்கென்ற ஆடையுடன் வந்திருந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன் தனக்கே உரிய நையாண்டியுடன் மீனாட்சியைப் பற்றி ஏ‌டாகூடமான கமெண்ட் அடித்தார். பார்த்திபன் பேசுகையில், போட்டோகிராபர்களுக்கு மீனாட்சியின் கால் ஷீட் கிடைச்சிருச்சு, என்ற கமெண்ட் அடித்தபோது ஒட்டுமொத்த கூட்டமும் சிரிக்க, அவர்கள் சிரிப்பது தன்னைப் பார்த்துதான் என்பதுகூட புரியாமல் கன்னத்தில் கை வைத்திருந்தார் மீனாட்சி.

 நையாண்டி நாரதர் - மீனாட்சி மீனாட்சி தமிழ்க்கலாச்சாரம் என்னாச்சி?

9.
Poorna turns out as Glamour babe
பூர்ணா இப்போது ரொம்ப பிசி. அவரது மார்க்கெட் சூடு பிடித்துள்ளது. டைட்டாக இருக்கிறதாம் கால்ஷீட். கை நிறைய படங்களுடன் நடித்துக் கொண்டிருக்கும் பூர்ணா, கவர்ச்சிப் பாதையிலும் படு க்ளாமரமாக இறங்கி விட்டார். நரன் படத்தில் மிதமிஞ்சிய கவர்ச்சிக்கு பச்சைக் கொடி காட்டியுள்ள பூர்ணா, மலையாளத்தில் எடுக்கப்படும் மகரு மன்னே என்ற படத்திலும் கவர்ச்சிகரமாக கலக்கியுள்ளாராம்.இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் சிவன். ஒளிப்பதிவாளரான இவர் இயக்குநராக மாறி உருமி என்ற படத்தை தமிழ், மலையாளத்தில் இயக்கியுள்ளார்.
நையாண்டி நாரதர் - இதுல தமிழ் ரசிகர்களுக்கு பரி பூரண சம்மதமாம்,மிஸ் பூர்ணா


10 . இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தயார்  - த்ரிஷா

 நையாண்டி நாரதர் - ஓஹோ,தமிழர்கள் இளிச்சவாயர்கள்னு அரசியல்வாதிகள்தான் முடிவு கட்டீட்டாங்கன்னா நீங்களுமா?

கோர்ட்டில் நயன்தாரா - காமெடி கும்மி



1.டவாலி - நயன் தாரா, நயன் தாரா ,நயன் தாரா .

நயன் தாரா - ஸாரி,நான் பிரபுதேவா கூப்பிட்டாதான் வருவேன்,டவாலி கூப்பிட்டா வரமாட்டேன்.

2.  ஜட்ஜ் - ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை லவ் பண்றீங்களே?இது தப்பில்லை?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நெக்ஸ்ட் டைம் நீங்க சொன்ன மாதிரி ட்ரை (TRY) பண்றேன்.

3.  ஜட்ஜ் - பிரபுதேவா வீட்டுக்கு போனப்ப ரம்லத்தை அக்கான்னு பாசமா கூப்பிட்டு இருக்கீங்க,நல்லா பழகி இருக்கீங்க,இப்படி நம்பிக்கைத்துரோகம் பண்ணீட்டீங்களே?

நயன் தாரா - யுவர்ஆனர்,பொதுவா சக்களத்தியா வரப்போறவ மூத்த தாரத்தை அக்கான்னுதான் கூப்பிடுவா,அப்பவே அவங்க உஷார் ஆகி இருக்கனும்.

4. ஜட்ஜ் - உங்க  காதலர் பிரபுதேவாவை உடனடியா நீங்க மறந்துடனும், அதுக்கு என்ன சொல்றீங்க?

நயன் தாரா - ஸாரி யுவர் ஆனர்,நான் யாரை லவ் பண்ணுனாலும் குறைஞ்சது 2 வருஷம் அவங்க கூட சுத்துவேன்,என் பாலிஸியை என்னால மாத்திக்க முடியாது.


5. ஜட்ஜ் - கேட்கும் கேள்விகளுக்கு கரெக்ட்டா பதில சொல்லனும்,வக்கீல்கிட்டே எதையும் மறைக்கக்கூடாது.


நயன் தாரா - யுவர் ஆனர்,நான் நடிச்ச பில்லா,ஆட்டோ ராணி படமெல்லாம் பாக்கலையா?எதையும் யார் கிட்டயும், மறைச்சு எனக்கு பழக்கமே இல்லை.


6.ஜட்ஜ் - பிரபுதேவாவை நீங்க ரம்லத்துக்கு விட்டுக்குடுத்துடனும்,இதுக்கு என்ன செட்டில்மெண்ட் எதிர்பாக்கறீங்க?

நயன் தாரா - நான் என்ன 60 வருஷமா அவர் கூட குடித்தனம் பண்ணப்போறேன்?மீறிப்போனா 6 மாசம்,அதுவரைக்கும் அவரால பொறுத்துக்க முடியாதா?




7.  வக்கீல் - திடீர்னு அவர் ஆசைப்பட்டார்னு மூக்குத்தி குத்திக்கிட்டீங்களே,எப்படி?

நயன் தாரா - அவர் காதையே குத்திட்டேன்,இது என்ன பெரிய பிரமாதம்?


8. சிறந்த தம்பதியர் விருது வாங்குன நீங்க தமிழ் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?

நல்ல காதல் ஜோடியை எவனும் மதிக்க மாட்டான்,கள்ளக்காதல் ஜோடி,அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்படறவன் தான் மீடியா லைம் லைட்டுக்கு வர முடியும்.

9.பிரபுதேவாவுக்காக உயிரையும் கொடுப்பேன்னு சொல்றீங்களே,அதே மாதிரி அவரும் உங்களுக்காக உயிரை கொடுப்பாரா?

அவர் எப்பவோ என் வயிற்றுல உயிர் குடுக்க ரெடியாத்தான் இருக்கார்,நாந்தான் காலம் கடத்திட்டு இருக்கேன்.

10. ஜட்ஜ் - சமபவம் நடந்த அன்னைக்கு நீங்களும் ,பிரபுதேவாவும் எங்கே இருந்தீங்க?என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?

நயன் தாரா - சம்பவம் சம்பவம்னு சொல்றீங்களே அந்த சம்பவம்தாங்க நடந்துட்டு இருந்தது,இந்தாங்க டி வி டி,வீட்ல தனியா இருக்கறப்ப போட்டு பாத்துக்குங்க.



11.நயன் தாரா - யுவர் ஆனர்,எதுக்காக எனக்கு 5 வருஷ கடுங்காவல் தண்டனை தர்றீங்க?

ஜட்ஜ் -  என் மனசுக்கு எது சரின்னு படுதோ அதைதான் நான் செஞ்சேன்னு உங்க தப்புக்கு விளக்கம் குடுத்தீங்களே,அதே போல் என் மனசுக்கு எது சரின்னு பட்டுதோ அந்த தண்டனை தான் தருவேன்.

டிஸ்கி -1 : காமெடி டிராக்கில் கூட சிலர் லாஜிக் பர்ப்பார்கள்,அவர்கள் ஜோக் 8 & 9 ரெண்டும் கோர்ட்டில் நடந்த மாதிரி தெரியலையே என கேக்க கூடும்,அவர்களுக்கு மட்டும் சொல்வது அது கோர்ட் கேஸ் முடிந்து வெளியே வரும்போது நிருபர்கள்  கேட்டது.

டிஸ்கி 2 :  நயன் தாரா சம்பந்தப்பட்ட பதிவுகளில் ஏன் பிரபுதேவா படம் போடுவதில்லை என கேட்பவர்களுக்கு நயனின்  வாழ்க்கையில் எதுவும் ,யாரும் நிரந்தரம் இல்லை,அதான்

Thursday, October 21, 2010

சினிமா,சிரிமா,கில்மா - ஜோக்ஸ்



1.சாந்தி அப்புறம் நித்யா படம் ஏன் இன்னும் ரிலீஸ் ஆகலை?

எல்லாம் சென்சார் பிராப்ளம்தான்.


ஓஹோ,சென்சார்ல யூ சர்ட்டிஃபிகேட் தர்லைனு சொல்லிட்டாங்களா?

அட நீ வேற,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஏ சர்ட்டிஃபிகேட்தான் வேணும்னு அடம் பிடிக்கறாங்களாம்,அப்பதான் 4 காசு பாக்க முடியுமாம்.


2.காவலன்,வேலாயுதம் - எது முதல்ல வரும்?

இது என்ன கேள்வி? ஒற்றைத்தலைவலி,ரெட்டைத்தலைவலி ரெண்டுல எது முதல்ல வந்தா என்ன?

3. சூர்யா மலையாளப்படத்துல நடிச்சா ராம்கோபால் வர்மா என்ன டைட்டில் வைப்பாரு?

அத்த சரித்திரம் (அத்த =அத்தை என பொருள் கொள்க)


4. ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவுல விஜய் ஏன் வெளிநடப்பு பண்ணீட்டாரு?

அவருக்கு பெஸ்ட் காமெடி ஆக்டர் அவார்டு குடுத்துட்டாங்களாம்.



5.மைனா படம் கலைஞர் குடும்ப படம்தானே,ஏன் வரி விலக்கு தர்லை?


மைனாரிட்டி அரசுன்னு நக்கல் பண்ற மாதிரி இருக்குன்னு கலைஞர் கடுப்பாகிட்டாராம்.




6. உங்காளு அடுத்த படத்துக்கு மங்காத்தானு டைட்டில் வெச்சிருக்காரே,?அந்த படத்துல சீட்டாடறவரா வர்றாரா?

சீட்டாடுனா தப்பில்லை,உங்காளு மாதிரி மொக்கை படத்தை சூப்பர் படம்னு சீட்டிங்க் பண்ணுனாத்தான் தப்பு.


7.தீபாவளிக்கு ரிலீஸ் ஆகற பிரசாந்த்தோட மம்பட்டியான் படம் அப்படியே தியாகராஜனோட மலையூர் மம்பட்டியானோட டிட்டோவாமே?

கதை,திரைக்கதை அதே மாதிரி இருந்தாக்கூட சமாளிச்சு பார்த்துடலாம்,ஜோடியும் அதே மாதிரி சரிதாவா இருந்துட்டா...?



8.டி ராஜேந்த்ரின் அடுத்த படம் அஜித் - ஷாலினியோட லவ் ஸ்டோரியாமே?

என்ன உளர்றே?

படத்தோட டைட்டில் ஒரு தலைக்காதல்னு சொன்னாங்க.அதான் கேட்டேன்.

9.இந்த வருஷ தீபாவளியை தலைவலி இல்லாம கொண்டாடலாம்னு எப்படி சொல்றே?

இளைய தளபதி படமோ,கேப்டன் படமோ ரிலீஸ் ஆகலையே?

10. ஆனந்த விகடன்ல விஜய் பேட்டி பாத்தியா?ஜெயலலிதாவை நான் சந்தித்த நிமிடங்கள்  பரவசமடைந்தேன் அப்படின்னு சொல்லி இருக்கிறாரே?
இவரு பரவசமடைஞ்சாரு,ஓக்கே,அந்தம்மா என்ன ஃபீல் பண்ணாங்கன்னு நீ கேக்கலையே?(மச்சி நீ கேளேன்,மாம்ஸ் நீ கேளேன்)


டிஸ்கி -1   : முதல் ஸ்டில் மைனா படத்தில் வரும் மைனா (பார்ட்டியின் நெற்றியில்,கன்னத்தில் ஓவர் பருக்கள் இருப்பதை பார்த்தால் டீச்சராக குப்பை கொட்டி இருப்பார் போல.ஏன்னா டீச்சருங்க சாக்பீஸ்ல போர்டுல எழுதறப்ப நெற்றில,முகத்துல சாக் தூள் விழுந்து அலர்ஜி ஆகி அப்படி ஆகுமாம்.)

டிஸ்கி - 2  :  ரெண்டாவது ஸ்டில் ஆண்மை தவறேல்.படத்தோட டைரக்டரை நான் கேக்கறேன்,பட டைட்டில்ல ஆண்மை இருக்கு ஓகே ,படத்தோட ஹீரோவுக்கு ஆண்மையின் அடையாளமா மீசை இல்லையே ஏன்?


Wednesday, October 20, 2010

எடக்கு மடக்கு எஸ் எம் எஸ் ஜோக்ஸ்



1.மிஸ்,நீங்க பாக்க என் மனைவி மாதிரியே இருக்கீங்க,

அப்படியா,உங்க மனைவி பேரென்ன?

அதை நீங்கதான் சொல்லனும்.

(காதலை புதிய அணுகு முறையில் சொல்வது இப்படித்தான்.)


2. கவிதை என்பது வார்த்தை தொகுப்பு

    காதல் என்பது வயசு கொழுப்பு


3. ஒரு கடை வாசலில் போர்டு வசனம்

பனாரஸ் சேலை - ரூ 10,  நைலான் சேலை ரூ8,  காட்டன் சேலை ரூ 5.

மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.

கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.


4. சிங்கம் ரீ மிக்ஸ் டயலாக் - என்னை ரோட்ல பாத்திருப்பே,காலேஜ்ல பாத்திருப்பே,ஆனா ஒயின் ஷாப்ல உக்காந்து தண்ணி அடிச்சு பாத்திருக்கியா?வெறித்தனமா சரக்கு அடிப்பேண்டா,உக்காந்து அடிச்சா ஒரே டைம்ல ஒன்றரை ஃபுல்டா,பாக்கறியா?


5.வாழ்க்கையில் மறக்க முடியாத 3 விஷயங்கள் 

1.காலை சாப்பாடு 2. மதிய சாப்பாடு  3.இரவு சாப்பாடு.


6.மாப்ளே,புது படம் ஒன்று எடுக்கறேன்,நீதான் ஹீரோ,நான் வில்லன்,நான் ஹீரோயினை ரேப் பண்றேன்,நீ அவளை மேரேஜ் பண்றே,அவளுக்கு வாழ்க்கை தர்றே,ஏன்னா நீதான் ஹீரோவாச்சே,படத்தோட டைட்டில் “இனிஷியல் உன்னுது,பேபி என்னுது.”





7. காதல் ஒரு மழை மாதிரி,நனையும்போது சந்தோஷம்,
     நனைந்தபின்பு ஜலதோஷம்.


8. அன்பர்களே,100 கோவில்கள் கட்டுவதை விட ஒரு காலேஜ் கட்டுவது சிறந்தது,ஏன் தெரியுமா? கோவிலை விட காலேஜ்லதான் நிறைய ஃபிகரை பாக்க முடியும்.


9.என்னோடு அவள் இருந்திருந்தால் இளவரசியாக இருந்திருப்பாள்,பாவம் இப்போது யாருக்கோ இல்லத்தரசியாக இருக்கிறாள்.


10.என்னோட அட்ரஸ் வேணும்னு நிறைய பேர் கேட்டுக்கிட்டே இருக்காங்க,இதோ,  ஜே.நெப்போலியன்,சன் ஆஃப் மார்க்கோபோலோ,எம் சி இல்லம்,மானிட்டர் நகர்,ஓல்டு மங்க் முதல் கட்டிங்க்,கிங் ஃபிஷர் ஏரியா,விஸ்கி தாலுகா, ரம் டிஸ்டிரிக்ட்,பின்கோடு -60005000.


11.தீபாவளிக்கு டாஸ்மாக் கடைல பட்டாசு விக்கப்போறாங்களாம்.

அப்போ   பட்டாஸ்மாக் கடைனு சொல்லுங்க.


12.காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?

ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?

இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.

(கடவுளே ,என்னை ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ?)

13.நட்புக்கும்,காதலுக்கும்  என்ன வித்யாசம்?

வீட்ல இருக்கறவனை ஒயின்ஷாப்புக்கு போக வைக்கறது காதல்,ஒயின்ஷாப்ல இருக்கறவனை வீட்டுக்கு கூட்டிடு வர்றது நட்பு.

Tuesday, October 19, 2010

ஆயுத பூஜையை முன்னிட்டு வேலாயுத பூஜை- ஜோக்ஸ்

 
 
1. தலைவரை வாழும் விக்கிரமாதித்தன்-னு புகழ்றாங்களே?
 
தலைவருக்கு ஏகப்பட்ட லேடீஸ் சகவாசம் உண்டு-னு பூடகமா சொல்றாங்க.
 
 
2. தலைவரு தன் வாயாலயே மாட்டிக்கிட்டாரு.
எப்படி?
ஓட்டுக்குப் பணம் தருவதில் தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது அப்டினு அறிக்கை விட்டிருக்காரே?
 
 
3. பொண்ணு ரொம்ப முற்போக்குவாதியா இருக்குது.
 
இருக்கட்டும். அதுக்காக மாப்ளை கழுத்துல அவதான் தாலி கட்டனும்-னு அடம் பிடிக்கனுமா?
 
 
4. தைரியம் புருஷ லட்சணம்-னு சொல்லுவாக்களே. உன் புருஷன் எப்படி?
 
என் புருஷன் லட்சணமாதான் இருப்பாரு.
 
 
5. தலைவர் ஏன் ஃபாரீன்(FOREIGN) சரக்கு அடிக்கறது இல்லை?
 
  “இந்தியனாக இரு; இந்தியப் பொருள்களையே வாங்கு”-இதுதான் அவர் கொள்கை.
 
 
6. தலைவரு எதுக்கு டாஸ் போடறாரு?
 
டாஸ்மாக் போலாமா வேணாமா?-னு டிசைட்(DECIDE) பண்ண.
 
 
7. அவரு விஜய் ரசிகர்-னு எப்படி எப்படி கண்டுபிடிச்சே?
 
ஆயுத பூஜை கொண்டாடாம வேலாயுத பூஜை கொண்டாடுனாரே?
 
 
 
 
8. தலைவர் ஏன் சலிச்சுக்கறாரு?
 
அவரையும் ஒரு தலைவர்னு மதிச்சு யாரும் இன்னும் கொலை மிரட்டல் விடலையாம்.
 
 
9. சார்... கதைப்படி நீங்க...
 
“முதல்ல கதையை சொல்லுங்க. அப்புறம் சீ்னை சொல்லலாம்.
 
 
10. குன்னூர் TO ஊட்டி பைக்ல போறப்ப நடக்கற சம்பவங்கள்தான் படத்தோட knot. [கதை முடிச்சு]
 
“ஓஹோ... ஏகப்பட்ட டர்னிங் பாயிண்ட்ஸ் இருக்கும்-னு சொல்லுங்க.
 
 
11. உன் லவ்வரோட அழகைப் புகழ்ந்ததுக்கு கோவிச்சிட்டாளா?
 
“ஆமா, இது வரைக்கும் நான் லவ் பண்ணுன ஃபிகர்லயே டாப் நீ தான்-னு
உளறிட்டேன்”
 
 
12. தலைவருக்கு ஏகப்பட்ட கெட்ட வார்த்தை பரிச்சயமாம்.
 
விளையாடாதீங்க. ஒரு வார்த்தை ஒரு லட்சம் போட்டியை (விஜய் டிவி)தப்பா புரிஞ்சுட்டீங்க போல.
 
 
13. நயன்தாரா புடவை விளம்பரத்துல நடிச்சிருக்காங்களே?
 
புடவை கட்டி படத்துல நடிச்சிருந்தா தான் அதிசயம்; புடவை விளம்பரப் படத்துல நடிச்சது என்ன பெரிய அதிசயம்?
 
 
14. இந்திரன் கெட்டதும் பெண்ணாலே அந்த சந்திரன் கெட்டதும் பெண்ணாலே!
 
அதெல்லாம் பழசுடா மாப்ளே; எந்திரன் கெட்டதும் பெண்ணாலே!
 
 
15. தலைவர் சரியான சரக்குப் பைத்தியமா இருக்காரே?
 
“எப்படி சொல்றே?”
 
மேடை ஏறி 10 நிமிஷம் கூட இல்லை, பி.ஏ.வைப் பார்த்து “தம்பி! சரக்கு(குவாட்டர்) இன்னும் வர்லை” அப்டீன்னாரே?
 
 
16. அவர் அஜித் ரசிகர்னு எப்படி சொல்றே?
விஜய் டி வி கூட பாக்க மாட்டேங்கறாரே?
 


Monday, October 18, 2010

நாட்டு நடப்பும் நையாண்டி சிரிப்பும்

அட
1.முதல்வர் கருணாநிதி: "மக்களுக்கு சிறப்பான வகையில் சேவை செய்ய ஒவ்வொரு எம்.எல்.ஏ.,விற்கும் பிரத்யேகமான மின் அஞ்சல் முகவரி ஏற்படுத்தித் தரப்படும்' என 2010-11ல் தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.,க்களுக்கும் தனி மின் அஞ்சல் முகவரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
 நையாண்டி நாரதர் - தலைவரே,பாதிப்பேருக்கு எழுதப்படிக்கவே தெரியாது,கைநாட்டுக்கெல்லாம் எதுக்கு மெயில் ஐ டி?

2. பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி: கர்நாடகா எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் அமைச்சராக ஆசைப்படக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து, பா.ஜ., ஆட்சி தொடர ஒத்துழைக்க வேண்டும்.
 நையாண்டி நாரதர்  - எல்லாருக்கும் சம்பாதிக்கற ஆசை இருக்காதா?கூடி வாழ்ந்தால் கோடி நன்மைனு வெறும் வாயில் சொன்னா எப்படி?கோடி ரூபா குடுத்தா ஓகே.



3. மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: காற்றாலை மின் உற்பத்தி மூலம் கடந்த மாதம் 2,200 மெகாவாட்டும், இந்த மாதம் 2,000 மெகாவாட்டும் கிடைத்துள்ளது. காற்றாலை மின்சாரத்தை நம்ப முடியாது. 2011ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் மின் வெட்டு குறையும்.

நையாண்டி நாரதர் - காற்றாலை மின்சாரம்கறது தி மு க ஆட்சி மாதிரி,கவுத்துடும்னு சொல்றீங்களா?2011 மேக்கு பிறகு ஆட்சி மாற்றமே ஏற்படபோவுது.


4.  தி.மு.க., எம்.பி., கனிமொழி: தஞ்சை பெரியகோவில் ஒரு தொழில்நுட்ப அதிசயம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இவ்வளவு தொழில்நுட்பம் வாய்ந்த கோவிலைக் கட்டினார்கள் என்பதை எண்ணும்போது, ஆச்சர்யமாக இருக்கிறது.

நையாண்டி நாரதர் - அதை விட ஆச்சரியம் நாத்த்iகம் பேசும் கலைஞர் தஞ்சை பெரியகோயில் வாசல் வழி நுழைந்தால் ஆட்சி போகும் என்ற செண்டிமென்ட்டை நம்பியதுதான்.



5.  பத்திரிக்கை செய்தி: விற்பனையாகாத வீட்டுவசதி வாரிய மனைகள், வீடுகளை விற்கும் வழிமுறைகளை ஆராய கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அக்குழு ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அறிக்கை தரும்.

நையாண்டி நாரதர் - அரசு அந்த லிஸ்ட்டை மதுரைக்கு ஃபேக்ஸ் செய்யுமா?


6.  தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேட்டி: காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு நீண்ட பாரம்பரியம் உண்டு. அதன் தனித்தன்மையை என்றும் இழந்ததில்லை.

நையாண்டி நாரதர் - ஆமா,எப்பவும் அடிச்சுக்கறதும்,கோஷ்டி சண்டை போடறதும்தானே அதன் தனித்தன்மை?



7. தமிழக பா.ஜ., தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அறிக்கை : சிமென்ட் தயாரிப்பிற்கான மூலப்பொருட்களின் எந்த விலையும் ஏறவில்லை. அரசு வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், சிமென்டின் விலையை ஏறக்குறைய இருமடங்காக உயர்த்தி உள்ளனர். இந்த விலை உயர்வு ஆலை முதலாளிகளுக்கு மட்டுமே லாபம் தருகிறது. எனவே, தமிழக அரசு, ஆலை முதலாளிகளுக்கு பக்க பலமாக இருப்பதை உணர முடிகிறது.

நையாண்டி நாரதர் - ஆலை முதலாளிகளுக்கு மட்டும்தான் லாபம்னு யார் சொன்னது?ஆட்சில இருக்கற முதலாளிகளுக்குத்தானே அதிக லாபம்?



8.  முன்னாள் எம்.பி., திருநாவுக்கரசர் பேச்சு : மக்கள் அமைதி தான் நாட்டுக்கு முக்கியம். அங்கும் இங்குமாக நடக்கும் சில அசம்பாவித சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று கூற முடியாது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது.

நையாண்டி நாரதர் - 2011 ல உங்களுக்கு தி மு க சீட் உண்டு கவலைப்படாதீங்க.




9. முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேச்சு: தமிழகத்தில் மட்டும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் இல்லை... நாடு முழுவதும் 108 ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது, நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர உத்தரவிட்டேன்.

நையாண்டி நாரதர் - தம்பி டீ இன்னும் வர்லை,அண்ணே எலக்‌ஷன் இன்னும் வர்லை.



10 . பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: நாம் ஓட்டுக்கு விலை போகிறவர்கள் என்று யாரும் கூறிவிடக் கூடாது. உறுதியான தொண்டர்களை, லட்சியம் நிறைந்த செயல்வீரர்களை பெற்று இருக்கிற ஒரே கட்சி பா.ம.க., மட்டும் தான். நாம் யாரை அடையாளம் காட்டுகிறோமோ அவர் தான் தமிழகத்தின் முதல்வராக முடியும்.

நையாண்டி நாரதர் - ஓட்டுக்கு விலை போக மாட்டீங்களா? அப்போ நல்ல ரேட்டுக்கு விலை போவீங்களா?


11. முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேட்டி: காங்கிரஸ் கட்சியை கறிவேப்பிலையாக தூக்கி எறிய நினைப்பது இனி நடக்காது. எங்களை பொறுத்தவரை, கூட்டணிக்கு மரியாதை செய்வோம். அதே நேரத்தில் எங்களை கொத்தடிமைகளாக அடக்க நினைத்தால் அது நடக்காது. தமிழகத்தில், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவது காலத்தின் கட்டாயம்.

நையாண்டி நாரதர் - கட்சில ஒருத்தருக்கு மட்டும் ரோஷம் இருந்தா போதுமா?


12 . ட்விட்டரில் நான் கணக்கு தொடங்கவில்லை?என் பேரில் யாரோ மோசடி செய்கிறார்கள்  - அசின் பேட்டி

நையாண்டி நாரதர் - காவலன்ல கமிட் ஆனதும் காலை வாரிடுச்சு பாத்தீங்களா?


Sunday, October 17, 2010

தல -உங்களைக்கலாய்க்கல (ஜோக்ஸ்)

 

1. தலைவரே! ஊழலை ஒழிக்க என்ன வழி?

ஏய்யா! உனக்கு எவ்ளவ் தைரியம் இருந்தா என்னை அழிக்க
என்கிட்டயே ஐடியா கேப்பே?




2. மாப்ளை அக்ரிகல்ச்சர் ஆஃபீஸரா?

எப்டி தெரியும்?

பொண்ணோட தோழிகள்கிட்டே செம கடலை போடறாரே?




3. கேப்டனோட விருதகிரி ஹிட் ஆகனும்னு தலைவர்வேண்டிக்கறாரே! ஏன்?

அப்படியாவது அவரு சினிமால கான்செண்ட்ரேட் பண்றாரா?-னுபார்க்கத்தான்.




4. தலைவரே! போலி ரேஷன் கார்டுகள் எவ்வளவு புழங்குதுனு
எப்படி துல்லியமா சொன்னீங்க?

பிரம்மாவுக்குத் தெரியாத படைப்பு ரகசியமா?




5. தலைவர் பஞ்சத்துல அடிபட்டு இருக்கார்-னு எப்படி சொல்றே?

பாதுகாப்புக்கு எந்த போலீஸும் வேண்டாம். என் பாதுகாப்புக்கு
ஆகற செலவை மட்டும் எனக்கே குடுத்துடுங்க அப்டிங்கறாரே?




6. பஞ்ச சீலக் கொள்கை பற்றி தலைவரை பேசச் சொன்னது
தப்பா போச்சா? ஏன்?

என்னதான் மகளிர் அணித்தலைவி பல கலர்ல சேலை
கட்னாலும் வாராவாரம் வெள்ளிக்கிழமை மஞ்சள் கலர்ல
சேலை கட்ற அவங்களோட மஞ்ச சீலைக் கொள்கை
ரொம்ப பிடிச்சிருக்குங்கறாரே?




7. ஆட்சிக்கு வந்ததும் முத வேலையா டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பக்கம் தலைவர் போறாரே? ஏன்?

ஏழைகளின் கண்ணீரைத் துடைக்க ஆவண செய்வோம்-னு
சொன்னாரே? கர்ச்சீப் ரெடி பண்ண ஏற்பாடு பண்றாரு.




8. முதல் இரவு அறைல பொண்ணு தைரியமா இருக்கு. தலைவர்
படபடப்பா, டென்ஷனா இருக்காரே?

லஞ்சம்னா கலக்கிடுவாரு. மஞ்சம்னா கலங்கிடுவாரு.




9. கோர்ட்டுல ஃபிகருங்க நிறைய பேர் இருப்பாங்களா?-னு
தலைவர் கேட்கறாரே?

நீதிமன்றங்கள் கணினிமயம் ஆக்கப்படும்-னு நியூஸ்ல சொன்னதை
கன்னிமயம் ஆக்கப்படும்னு தப்பா புரிஞ்சுட்டாராம்.




10. அந்த டி.வி. ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு எப்படி சொல்றே?

டான்ஸ் போட்டிக்கு ஜட்ஜா வர்றவங்களுக்கு கூட இனி கணினி
அறிவு வேணும்னு சொல்லிடுச்சு.




11. தலைவரே! நம்பிக்கை வாக்கெடுப்புல தொடர்ந்துஜெயிக்கறீங்களே,எப்படி?

ஹி... ஹி... ஜெயிச்சா ஓட்டு போட்டவங்களை செமத்தியா
கவனிப்பேன்னு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி வெச்சிருக்கேன்.




12. ராமநாராயணன் அஜித்தை ஹீரோவாபோட்டா என்ன டைட்டில்?

மங்க்கிஆத்தா


13. தலைவர் இவ்ளவ் அப்பாவியா இருப்பார்னு யாரும் எதிர்பார்க்கலை.

ஏன்?

விஜயதசமி அன்னைக்கு விஜய் படம் ஏன் ரிலீஸ் ஆகலை-னு கேட்கறாரே?



14. தலைவரே! மற்ற மாநிலத்துக்கு போனா ரோமிங் கட்டணம்உண்டு.

ஓஹோ... அப்போ ரோம் ரோம் நகருக்கு போனா...?




15. சினிமாவுக்கு பாட்டு எழுதற கவிஞர்கள் ஏன் ஸ்ட்ரைக்பண்றாங்க?

ரோமிங் சார்ஜ்
இனி கிடையாது-னு வந்த அறிவிப்பை ரைமிங்சார்ஜ் இனி கிடையாது-னு தப்பா புரிஞ்சுக்கிட்டாங்களாம்.


16. ஜட்ஜைப் பார்த்து அறிவிருக்கா?-னு ஏன் கேட்டீங்க?

கணினி அறிவு இருக்கா?-னு கேட்டேன்.

Thursday, October 14, 2010

விஜய் யின் வேலாயுதம் - காமெடி கும்மி

அட



1.வேலாயுதம் படத்துக்கு நோபல் பரிசு கன்ஃபர்ம்னு எப்படி சொல்றே?

வேல் ஒரு ஆயுதம்னு கருத்து சொல்லி இருக்காங்களே?


2.விஜய் படம்னா டான்ஸ் களை கட்டுதே?

  டான்ஸ் களை கட்டுது,வசூல் கல்லா கட்டுது,எல்லாம் ஓக்கே,ஆனா படம் பாக்க முடியாம கண்ணைக்கட்டுதே?


3. விஜய் -     டைரக்டர் சார்,இது ஒரு ஃபேமிலி ஸ்டோரியா?

                               நோ,பேமானி ஸ்டோரி. 


4. இந்தப்படத்துல விஜய்க்கு 2 ஜோடியாம்.இடைவேளை வரை ஒரு ஜோடி,அதுக்கு அப்புறம் ஒரு ஜோடி.

சரி ,இடைவேளை வரை ஜோடியா வர்றவர் இடைவேளைக்கு பிறகு யாருக்கு ஜோடி?


5.இந்தப்படத்துல டைட்டில் சாங்கிற்கு செம ஆட்டம் போட்டிருக்காராம் விஜய்.

ஆடாத ஆட்டமெல்லம் ஆடியவன் (படம்) மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா? 



 
 6.இந்த ஸ்டில்லைப்பார்த்ததும் உனக்கு என்ன தோணுது?தாய்க்குலத்தோட ஆதரவு அவருக்கு அதிகம்னு தெரியுதா?

நோ நோ,வயசுப்பசங்க யாரும் அவர் படம் பாக்க மாட்டாங்க,வயசான கிழங்கட்டைங்கதான் அவர் படம் பாக்க வருவாங்கனு தோணுது.


7.இந்தப்படம் பழி வாங்குற கதையாம்.

ஓஹோ,புரொடியூசரை ஹீரோ பலி வாங்குற கதையா?



8.வேலாயுதம் படம் ரிலீஸ்ல சிக்கலா? ஏன்?

ஈரோடு வேலா புக் ஸ்டால் ஓனர் கேஸ் போட்டிருக்காராம்,அவர் கடை பேரை டைட்டிலா வெச்சு கேவலப்படுத்தீட்டாராம் விஜய் . 



9.வேலாயுதம் படம் எத்த்னை ரீல்?

படம் பூரா ரீல்தான்.


10. க்ளைமாக்ஸ்ல வன்முறை கிடையாது,எப்படி வில்லனை பழி வாங்குவாரு ஹீரோ?

வில்லனை விஜய் 30 நிமிஷம் பேசியே கொல்ற மாதிரி வெச்சுடலாமா?நேச்சுரலா இருக்கும்.


11. விஜய் படம் பார்த்தா நேரம் போறதே தெரியாதா,எப்படி?


படம் போட்ட 2வது ரீல்லயே தூக்கம் வந்துடுமே?



12. த்ரிஷா  -  தூள் திவ்யா இப்போ டல் திவ்யா ஆகிட்டாளா,ஏன்? 

விஜய் படம் பார்த்தாளாம்.


13. மலையாள சீன் படத்துக்கும்,விஜய் படத்துக்கும் என்ன வித்தியாசம்?

அதுல ஷகிலா இருக்கற சீன் இருக்கும்,இதுல விஜய் வந்தாலே திகிலா இருக்கும்.