Showing posts with label செப்டம்பர் 4. Show all posts
Showing posts with label செப்டம்பர் 4. Show all posts

Friday, September 04, 2026

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி -செப்டம்பர் 4 ,2026 ரிலீஸ் தமிழ்ப்படங்கள் முன்னோட்டப்பார்வை

 தமிழ்ப்படத்தயாரிப்பாளர் சங்கம் ஸ்ட்ரைக்கை வாபஸ் வாங்கினாலும் வாங்கியது,சினி பீல்டில் ஒரே குஷி.இந்த வாரம் 5 படங்கள் வெளியாகின்றன.ஒரு படம் மட்டும் 3/9/2026 வியாழன் அன்றும்,மீதி 4 படங்கள் 4/9/2026 வெள்ளி அன்றும் ரிலீஸ் ஆகின்றன.


இந்த வாரம் கயாடு லோஹர் வாரம் என்று சொல்லும்படி அவரது இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகின்றன.விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ,பெத்லேகம் குடும்ப யூனிட் என்று தொடர்ந்து இரு ஹிட் படங்களைத்தந்த மமிதா பைஜூவுக்குப்போட்டியாக கயாடு லோகரும் ஹிட் கொடுப்பாரா?என்பதைப்பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மமிதா பைஜூ நடிப்பை நம்புக்களம் இறங்கினார்.கயாடு லோஹர் கிளாமரை நம்பி இருக்கிறார் என்பது அவரது படங்களின் ட்ரெய்லரிலிருந்தே தெரிகிறது.


1  I ,M Game (ஐ,கேம்) மலையாளம்/தமிழ் , பேண்ட்டசி திரில்லர்

2  இம்மார்டல் - தமிழ் - பேண்ட்டசி ஹாரர் திரில்லர்.

3  போர்  (4) இடியட்ஸ்    - காமெடி க்ரைம் டிராமா 

4 பாவை - மோடிவேஷனல் டிராமா


5        7 ஸ்டார் பாய்ஸ்  - மெலோ டிராமா ( சிறுவர் கதை)




1 ஐ ம் கேம் 

மெகா ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானின் சொந்தப்படம் இது.நாயகனாக நடித்து படத்தைத்தயாரித்தும் இருக்கிறார்.இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார்.சம்யுக்தா விஸ்வநாதன்,ஆண்ட்டனி வர்கீஸ்,கதிர்,வினய் போர்ட் போன்றவர்கள் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்கள்.மிஷ்கின் ஒரு வித்தியாசமான கேரக்டரில் வருகிறார்.

மம்முட்டி ,மோகன் லால் இருவரும் ஒரு சீனில் கெஸ்ட் ரோலில் வருகிறார்கள்


சீதாராமம்(2022) ஹிட், கிங்க் ஆப் கோதா(2023) தோல்வி,லக்கி பாஸ்கர் (2024) பிளாக் பஸ்டர் ஹிட் காந்தா(2025) சுமார் என வரிசையாக நான்கு படங்கள் மாறி மாறி வெற்றி தோல்வி என பயணித்த துல்கருக்கு இது வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏனெனில் இவரது சொந்தப்படமான லோகா சேப்டர் 1 (2025) மெகா ஹிட்.


ஆர் டி எக்ஸ் (2023) என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய  நஹாஸ் ஹிதயாத் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

ட்ரெய்லரைப்பார்த்து யூகித்த கதை.

நாயகன் சூதாட்டத்தில் கில்லாடி
அது சீட்டு விளையாட்டாக இருந்தாலும் சரி,கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்காக இருந்தாலும் சரி அதில் பட்டையைக்கிளப்பிப்பணம் சம்பாதிக்கிறான்.எதிர்பாராத விதமாக ஒரு தோல்வியை சந்திக்க மன ரீதியாக பாதிக்கப்படுகிறான்.ட்ரீட்மெண்ட்டுக்கு ஒரு லேடி டாக்டரிடம் சைக்கலாஜிக்கல் ட்ரீட்மெண்ட் எடுக்கிறான்.அவள் தான் நாயகி.நாயகி யை நாயகன் காதலிக்க அவள் அந்தக்காதலை ஏற்கவில்லை.இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை.

ரசித்த வசனங்கள்

1 கடவுளுக்கும்,சாத்தானுக்கும் நடக்கும் சூதாட்டம் தான் நம் வாழ்க்கை.

2  சூதாட்டத்தின் வரலாறு இதுதான்.சிலர் இதில் வாழ்கிறார்கள்,பலர் இதில் வீழ்கிறார்கள்.

3 இருப்பதையும் இழந்த ஏழையிலிருந்து  நாட்டையும் ,அரண்மனையையும் இழந்த அரசன் வரை தோற்பவர்கள்  யாரும் திருந்துவதில்லை.

4  கேம்ப்ளிங்க் என்பது மிகப்பெரிய ரகசியம்.இதில் எல்லோரும் நம்புவது அவங்கவங்க அதிர்ஷடத்தை.

5  ஒவ்வொரு கேம்க்கும் ஒரு பேட்டர்ன் இருக்கும்,அதை க்ரேக் பண்ண முடிஞ்சா ஈசியா பிரெடிக்ட் பண்ணலாம்.

6 என்னைப்பொறுத்தவரை நீ ஒரு பேஷண்ட் மட்டும் தான்.ஜஸ்ட் ஒரு பேஷண்ட்.

7 வாழ்க்கைலயும் சரி ,சூதாட்டத்திலும் சரி ,நாம் மறக்க முடியாத ஒரு தத்துவம் இருக்கு. நெவர் கிவ் அப்.

8 ரொம்பக்குழப்பிக்க வேண்டாம்.இது ஜஸ்ட் ஒரு எண்ட்டர்டெய்ன்மெண்ட் தான்.

9 ஒரு தனி ஆளு வெறி பிடிச்ச மாதிரி பண்ணி இருக்கான்.

10.உண்மை ஜெயிக்க லேட்டாகும்.ஆனா கண்டிப்பா ஜெயிக்கும்.
11 படைலயும் ,பந்தயத்துலயும் தோற்கிற ஆள் நான் இல்லை.



ட்ரெய்லர் 2.5 நிமிடங்கள் ,டீசர் 1.4 நிமிடங்கள் பார்த்ததிலேயே இந்தப்படம் ஓரளவு நல்ல கமர்சியல் எண்ட்டர்டெய்னராக இருக்கும் என்பது தெரிகிறது.அது போக பஞ்ச் டயலாக்ஸ் ப்ளேஸ் செய்யப்பட்ட இடங்கள் தெறிக்கின்றன.விஷிவல்சும் பிரம்மாண்டமாய் இருக்கிறது.

நாயகி போர்சன் சும்மா ஊறுகாய் மாதிரி தான் எனத்தோன்றுகிறது.சதுரங்க வேட்டை + லக்கி பாஸ்கர் + மங்காத்தா போல் ஒரு ஆண்ட்டி ஹீரோ சப்ஜெக்ட் மாதிரி தெரிகிறது.


2 இம்மார்ட்டல்







ஹேப்பிராஜ்,மெண்ட்டல் மனதில் என இரு சுமார் ரக வெற்றிப்படங்களில் நடித்த ஜி வி பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு வித்தியாசமான பேண்ட்டசி ஹாரர் திரில்லர் இது.

முழுக்க முழுக்க நாயகி கயாடு லோஹரின் கிளாமரை மட்டுமே நம்பிப்படம் எடுத்த மாதிரி தெரிகிறது.

ட்ரெய்லரிலிருந்து யூகித்த கதை.

நாயகன் நகரத்தில் தனி வீட்டில் குடி போகும் அளவுக்கு வசதி இல்லை.நான்கைந்து நபர்கள் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கினால் வாடகை மிச்சமாகும் என நினைக்கிறான்.இது தெரிந்து நாயகி நாயகனுக்கு போன் பண்ணி அழைக்கிறாள்.

இருவரும் ஒரே வீட்டில் தங்குகிறார்கள்.அது வீடு இல்லை.பங்களா.நாயகி நாயகனுடன் ரொம்ப நெருக்கமாகப்பழகுகிறாள்.

ஒரு கட்டத்தில் நாயகனுக்கு நாயகி பெண் இல்லை.பேய் என்பது தெரிய வருகிறது.நாயகன் அந்தப்பேயிடமிருந்து தப்பித்தாரா?நாயகியின் நோக்கம் என்ன?என்பதே மீதித்திரைக்கதை.



ட்ரெய்லரில் நம்மை பயப்படைய வைக்கும் தருணங்கள் 20% என்றால் ,கிளுகிளுப்பு ஊட்டும் காட்சிகள் 80%.ஜென் சி இளைஞர்களைக்கவரும் போல் தெரிகிறது.




ரசித்த வசனங்கள்

1.  ஹலோ... சார். ஷேரிங்க் ரூம் பார்க்கறீங்களா?

எஸ்... எத்தனை பசங்க?

நான் மட்டும் தான் (ஹஸ்கி  வாய்சில் நாயகி)

2  எப்போ ஷிப்ட் ஆகப்போறீங்க?

ஆல்ரெடி ஷிப்ட்டெட்.

3 என்னடா?உன் ரூமைக்காட்றேன்னு சொல்லிட்டு பைவ் ஸ்டார்  ஹோட்டலைக்காட்றே?

4  என்ன பொண்ணுடா அவ..தம் கேட்டா தம் தர்றா.பீடி கேட்டா பீடி தர்றா.

5 பார்க்க லட்சணமா இருக்கா-னு சொல்றே.லட்ச லட்சமா பணம் வெச்சிருக்கானு சொல்றே.அவளையே கரெக்ட் பண்ணிக்கல்யாணம் பண்ணிக்கோ.

6 இப்போ உனக்குக்கிடைச்சிருப்பது கோல்டன் டைம்


7  நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே?

எப்படியும் தப்பாதான் கேட்கப்போறே...

8  டேய்...என்னை மாதிரி ஒரு அழகான பையனும்,தேவதை மாதிரி ஒரு பெண்ணும் பக்கத்து பக்கத்து ரூமில் இருந்தா எப்படி இருக்கும் ?

எனக்கு வயித்தெரிச்சலா இருக்கும்.

9 நீ சொல்றது நிஜம்.இந்த ரூமில் கொசு ஜாஸ்தியா இருக்கு.அதான் உன் ரூமுக்கு வந்தேன்.

10 மிஸ்...என் ரூமில் கொசுத்தொல்லை ஜாஸ்தியா இருக்கு

என் ரூமில் வவ்வால் தொல்லை இருக்கும், பரவாயில்லையா?


படத்தில்  மணிரத்னம் இயக்கத்தில் இளையராஜா இசையில் வந்த மவுனராகம் படத்தில் இருந்து பனி விழும் இரவு ,பால் வண்ண நிலவு பாட்டை யூஸ் பண்ணி இருக்கிறார்கள்.எப்படியும் இளையராஜா நஷ்ட ஈடு கேட்டுக்கேஸ் போடுவார்.இலவச விளம்பரம் தான்.

அறிமுக இயக்குநர் மரியப்ப சின்னா  தான் கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்.

சாம் சி எஸ் தான் இசை.

சைரன்,பிளாக் மெயில் ஆகிய படங்களுக்குப்பின் ஜி வி பிரகாஷ் + சாம் சி எஸ் கூட்டணியில் வரும் மூன்றாம் படம் இது.



3

4 இடியட்ஸ்

இயக்குநர் ஷங்கர் விஜயை வைத்து இயக்கிய நண்பன் படம் ஹிந்திப்படமான  3 இடியட்ஸ் படத்தின் அபிஷியல் ரீமேக்.ஆனால் இந்த போர் இடியட்ஸ் படத்தின் கதைக்கும் அந்த 3 இடியட்ஸ் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இலலை.

இதன்  ட்ரெய்லரைப்பார்த்தபோது யூகித்த கதை.

நான்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.திருட்டு தான் இவர்களது தொழில்.ஒரு பெரிய திருட்டாக செய்து வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும்  என நினைக்கிறார்கள்.

20 கோடி ரூபாய் கறுப்புப்பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகக்கூறப்படும் பங்களாவுக்குள் நுழைகிறார்கள்.அங்கே ஒரு கேங்க்ஸ்டரிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் படும் துயரக்காமெடிகள் தான் மொத்தக்கதையுமே.

கேங்க்ஸ்டராக இயக்குனர் ரவி மரியா ,நான்கு இளைஞர்களாக புகழ் ,பிரக்யா,நயன்,கும்கி நடிக்க வில்லனாக வின்சென்ட் அசோகன் நடிக்கிறார்.அஸ்வின் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.



கதை ,திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் சார் சுந்தர்.ஒரே பங்களாவில் மொத்தக்கதையும் நடக்கும் போல் தெரிகிறது.






 ரசித்த வசனங்கள்


1 பெரிய இடத்துல பெருசா சம்பவம் செஞ்சுட்டு செட்டில் ஆகிடனும்.

2. இவ்ளோ பெரிய கதவை எப்படித்திறக்கறது?

நான் வேணா சாவி செஞ்சு தரவா?

3.  இந்த வீட்டில் வாழவா வந்திருக்கோம் ?வாஸ்து பார்த்துட்டு இருக்கே?திருடத்தானே வந்திருக்கோம் ?

4 என்னடா?சீட்டுக்கட்டு ல ரம்மி மாதிரி நீங்க மூணு பேரும்?ஒரு  ஜோக்கர இருந்தா மேட்சிங்கா இருக்கும்

அதான் நீ இருக்கியே?

5 ஒரு சின்ன பேப்பர் தான் கிடைச்சிருக்கு,இது ஓக்கேவா?

கவிதையா எழுதப்போறோம் ?காப்பாத்துங்கனு எழுதப்போறோம்.

6.  நீ என் கூட இருக்கறப்போ 10 ப்ரூஸ்லீ + 1 ஜாக்கிசான் இருப்பதற்கு சமம்


7 இனிமே நாம அவங்க கிட்டே இருந்து தப்பிக்கனும்னு நினைக்கக்கூடாது.அவங்கதான்  நம்ம கிட்டே இருந்து தப்பிக்கனும்னு நினைக்கனும்.

8 சட்டத்தைக்கயில் எடுத்துக்க வேணாம்னு சொன்னதில் ஒரு சுயநலமும் இருக்கு.

9.இவங்களைப்பிடிக்க ஒரு தனிப்படையே  தயாரா இருக்கு.அதுக்குத்தலைவனே நாம் தான்


10. யாரும் உன் விதியைத்தீர்மானிக்க முடியாதுனு சொன்னே.இப்போ நான் தீர்மானிக்கிறேன்



4 பாவை

ராகுல் விக்னேஷ் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க உருவாகும் லோ பட்ஜெட் படம் இது.

16 வயதான ஒரு மாணவி தனது 22 வயது வரையிலான வாழ்க்கைப்பயணத்தில் சந்திக்கும் சவால்களை எப்படி எதிர்கொண்டாள் ?என்பதே கதை.
எதிர்பாராத சில சம்பவங்களால் அவளது முன்னேற்றம் தடைபடும்போது  தன் சுய அடையாளத்தை மீட்க அவள் எப்படிப்போராடினாள் என்பதே திரைக்கதை.

இதன் ட்ரெய்லர் இது வரை வரவில்லை.

முல்லையரசி,நிரஞ்சன் நெய்தியார் ,சிலம்பரசன் பொன்னுசாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இசை செந்தூர் அரசு





,5   செவன் ஸ்டார் பாய்ஸ்


கிராமத்தில் நடக்கும் கபடி விளையாட்டை மையமாக வைத்து வெண்ணிலா கபடிக்குழுவை எடுத்தது போல் வில்லேஜ் புட்பால் மேட்ச் பற்றிய படம் இது.


ஆண்ட்டனி வர்கீஸ் ,பாபு வர்கீஸ் ,லுகான் ,இந்தியக்கால்பந்து வீரர் ஐ எம் விஜயன்  ஆகியோர் நடிக்கும் படம் இது.

நிகில் பிரேம் ராஜ் இயக்கி இருக்கிறார்.

இசை ஜேக்ஸ் பிஜோய்.


கிராமத்தில் இருக்கும் சில லட்சிய இளைஞர்களைத்திரட்டி லகான் ஹிந்திப்படத்தில் வருவது போல் ஒரு டீம் உருவாக்கி  மாநில அளவிலான போட்டிக்கு அவர்களைத்தயார் படுத்துவதுதான் கதை.