அமரர் ஆர்.பி சவுத்ரி தான் சூப்பர் குட் பிலிம்சை உருவாக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும்.குட் நைட் கொசுவர்த்தி கம்பெனி எம் டி ஆர் மோகனுடன் இணைந்து இந்த சினிமாக்கம்பெனியை ஆரம்பித்தார்.குட் நைட்டில் இருந்து குட் என்பதை எடுத்துக்கொண்டு முன்னால் சூப்பர் பின்னால் பிலிம்ஸ் என்பதை சேர்த்தார்.தமிழ் சினி பீல்டுக்கு சூப்பர் குட் பிலிம்ஸ்.தெலுங்கு ,மற்றும் ஹிந்திப்பட உலகுக்கு மெகா சூப்பர் குட் பிலிம்ஸ்.
1988ல்
சூப்பர் குட் பிலிம்சின் முதல் தயாரிப்பு மலையாளப்படம் தான் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.அபிலாசா நாயகியாக நடித்த Adipapam(ஆதி பாபம்).இது தமிழில் டப் செய்யப்பட்டு முதல் பாவம் என்ற டைட்டிலில் வெளியாகி மெகா ஹிட் ஆனது.7 லட்சம் ரூபாய் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் இரண்டரைக்கோடி ரூபாய் வசூலித்தது.கிட்டத்தட்ட 34 மடங்கு லாபம்.
1989ல் சில்க் சுமிதா நாயகியாக நடித்த லயனம் .இந்தப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்.அதே ஆண்டில் கல்பனா ஹவுஸ் என்ற திகில் படம் எடுத்தார்கள்.அது தமிழில் அமாவாசை இரவில் என்ற டைட்டிலில் வெளியாகி சுமாராக ஓடியது
முதல் மூன்று படங்களை கிளாமரை நம்பி எடுத்த ஆர் பி சவுத் ரி மூன்று படஙகளிலும் செண்ட்டிமெண்ட் ஆக அபிலாசாவை நடிக்க வைத்தார்.
சூப்பர் குட் பிலிம்சின் நான்காவது படம் தான் தமிழ்ப்படம்.இயக்குநர் விக்ரமனின் முதல் படம்.சித்தாரா நாயகியாக நடிக்க முரளி ,ஆனந்த் பாபு மற்றும் பலர் நடிக்க எஸ் ஏ ராஜ் குமார் இசையில் பட்டி தொட்டி எல்லாம் பாடல்கள் மெகா ஹிட் ஆக ஒரு பெண்ணுடன் நான்கு ஆண்களுக்கு ஏற்படும் தூய்மையான நட்பைப்பற்றிய படம் ரிலீஸ் ஆகி ஆல் செண்ட்டர் ஹிட்.
இதற்குப்பின் தமிழ் சினிமாவை ஆரோக்யமான பாதையில் அழைத்துச்சென்ற பெருமை சூப்பர் குட் பிலிம்சை சேரும்.பல புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார்.
கே எஸ் ரவிக்குமார் (புரியாத புதிர் (1990) க்ரைம் திரில்லர் வகையில் புதுமையான திரைக்கதையில் கோலோச்சினார்.
இயக்குனர் சசி + லிவிங்க்ஸ்டன் காம்போவில். சொல்லாமலே (1998) செம ஹிட். எஸ் எழில் அறிமுக இயக்குநர் ஆக அறிமுகமான விஜய்+ சிம்ரன் காம்போவில் வந்த துள்ளாத மனமும் துள்ளும் சூப்பர் டூப்பர் ஹிட். விஜய்க்கு லேடீஸ் ஆடியன்சைபெற்றுத்தந்த முக்கியமான படம். என் லிங்குசாமி மம்முட்டி நடிப்பில் ஆனந்தம் என்ற குடும்பப்படத்தைத்தந்தார்.குடு ம்பங்கள் கொண்டாடும் வெற்றியைப்பெற்றது.
சரத் குமாரின் கேரியரில் நாட்டாமை (1994) மெகா ஹிட் ஆனது.விஜய்க்கு மீண்டும் ஒரு கண்ணியமான வெற்றிப்படமாக. பூவே உனக்காக (1996) லிவிங்க்ஸ்டனுக்கு சுந்தர புருசன் (1996) மெகா ஹிட் ஆக அமைந்தது.
கே எஸ் ரவிக்குமார் + சரத் குமார் காம்போவில் வந்த சூரிய வம்சம் (1998) தாறுமாறான வெற்றிப்படம்.
ஆர் பி சவுத் ரிக்கு இரு மகன்கள் ,ஒருவர் ஜீவா,இன்னொருவர் ஜித்தன் ரமேஷ்.
ஜீவாவை நாயகனாக வைத்து ஆசை ஆசையாய் (2003) படம் எடுத்தார்.ஆனால் அது ஓடவில்லை.
சூப்பர் குட் பிலிம்சின் 98 வது படம் பகத்பாசில் + வடிவேல் காம்போ வில் வந்த மாரிசன் ஹிட் படம்.
99 வது படம் விஷால் நடிப்பில் வர இருக்கும் மகுடம்
விஜய் நடிப்பில் சூப்பர் குட் பிலிம்சின் 100 படம் வந்தால் நன்றாக இருக்கும் என ஆர் பி சவுத் ரி நினைத்தார்.ஆனால் அவர் ஆசை நிராசை ஆனது.விஜய் தமிழக முதல்வர் ஆகி விட்டார்.ஆர் பி சவுத் ரி அமரர் ஆகி விட்டார்.
எனவே ஜீவா நடிப்பில் லேட்டஸ்ட்டாக ரிலீஸ் ஆகி எதிர்பாராத வெற்றிப்படம் ஆன தலைவர் தம்பி தலைமையில் படத்தின் பாகம் 2 அதே யூனிட் எடுக்க இருக்கிறது.ஜீவாவுக்கு முதல் பாகத்தில் ஜோடி இல்லை.இரண்டாம் பாகத்தில் ஜோடி உண்டு.இயக்கம் நிதிஷ் சகதேவ்