Showing posts with label ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (1995)-தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (1995)-தமிழ் - சினிமா விமர்சனம். Show all posts

Sunday, July 05, 2026

ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி (1995)-தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )

 



ஒரு ஆங்கிலப்படத்திலிருந்து கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு கற்பனையாக ஒரு திரைக்கதையை உருவாக்கி கே பாக்யராஜ் இயக்கிய படம் இது.இதே கதை பின்னாளில்  செல்வா இயக்கத்தில் இரா பார்த்திபன் நடிக்க உன்னருகே நான் இருந்தால் (1999) உருவானது.அதிலும் நாயகி மீனா தான்.இரண்டுமே வெற்றிப்படஙகள்


                             


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு அரண்மனையில் ஜமீன் தாரரின் மகளாக செல்வச்செழிப்புடன் இருக்கிறாள்.சமஸ்தானத்துக்கு ராணியே அவர்தான்.ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த பணம் நட்டம் ஆகி விட்டது என்ற தவறான ஒரு போன் கால் வந்ததால் நாயகியின் அப்பா ஹார்ட் அட்டாக்கில்  இறக்கிறார்.சொந்தக்காரர்கள் எல்லாம் விலகிப்போக அதன் பின் தான் போனில் வந்தது தவறான தகவல் எனத்தெரிய வருகிறது.அப்போது நாயகி ஒரு முடிவு எடுக்கிறாள்.என் செல்வத்துக்கு ஆசைப்படாமல் எனக்காக வாழும் ஒருவரைக்கண்டுபிடித்துத்திருமணம் செய்யனும் என உறுதி கொள்கிறாள்.


நாயகன் படித்த வேலையில்லாப்பட்டதாரி.வேலை இல்லாததால் வீட்டில் அவனுக்கு மரியாதை ,மதிப்பு எதுவும் இல்லை.ஆனால் பாட்டி மட்டும் அடிக்கடி நாயகனிடம் சொல்கிறாள்- உன் ஜாதகப்படி ஒரு ராஜகுமாரிதான் உனக்கு மனைவியாக வருவாள்.நாயகனும் கற்பனையில் மிதக்கிறான்.


நாயகனின் உதவும் குணம் கண்டு நாயகி அவளது எஸ்டேட்டில் மேனேஜராக நியமிக்கிறாள்.நாயகி ஒரு பணிப்பெண் போல சாதா உடையில் இருக்கிறாள்.நாயகனை டெஸ்ட் செய்ய இந்த வேஷம்.

நாளடைவில் நாயகிக்கு நாயகனை மிகவும் பிடித்து விடுகிறது.ஆனால் தான் ஒரு ராஜகுமாரி என்பதை அவள் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை.நாயகனோ  வேறு ஒரு ராஜகுமாரி க்கு ரூட் விடுகிறான்.

இதற்குப்பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை.


நாயகனாக கே பாக்யராஜ் அசடு வழியும் வழக்கமான நடிப்பு அசத்தி இருக்கிறார்.தன் மீது பெண்களுக்கு பரிதாபம் ஏற்படும்படி தனது கேரக்டர் டிசைனை வடிவமைப்பதில் கே பாக்யராஜ் ஒரு விற்பன்னர்.

நாயகியாக மீனா கச்சிதமான நடிப்பு..ஆனாலும் ராணியாக வரும்போது ஒரு தோரணை இல்லை.பணிப்பெண் போல் வரும்போது எளிமையாக இருக்கிறார்.

நாயகியின் பணியாளாக ஜனகராஜ் குணச்சித்திரம் கலந்த காமெடி நடிப்பு ஓக்கே ரகம்.

வில்லனாக வரும் லிவிங்க்ஸ்டன் சுமாரான நடிப்பு.சார்லி,குமரிமுத்து, கே பாஜ்யராஜ் ரசிகர் மன்றத்தலைவி சி ஆர் சரஸ்வதி அனைவர் நடிப்பும் ஓக்கே ரகம்.

இளையராஜாவின் இசையில் பாடல்கள்  அனைத்தும் ஹிட்.பின்னணி இசையும் அருமை.

கதை,திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ஜனரஞசக இயக்குநர் கே பாக்யராஜ்.



சபாஷ்  டைரக்டர்


1   மேனேஜராக  பொறுப்பேற்ற  நாயகன் அரன்மனை  ஆடம்பரப்படுக்கையைப்பார்த்ததும்  அதில்  உருண்டு பார்ப்பது , நாயகியையும்  உருண்டு பார்க்க சொல்வது , அதற்கான காரணம் சொல்வது   நல்ல காமெடி 


2   நாயகி  ஜமீன் ராணி என்பது  தெரியாத நாயகன்  அவருக்குக்கிடைக்கும் மக்கள்  வரவேற்பைப்பார்த்து  நெல்லுக்குப்பாயும் நீர்  புல்லுக்குப்பாயுது  என சிலாகிக்கும் சீன்  காமெடிக்கலக்கல்  (அந்த இடத்தில் கதை வசனம் இயக்கம் கே பாக்யராஜ் என டைட்டில் வருவது தியேட்டரில் கை தட்டலை அள்ளியது)

செம  ஹிட்  சாங்க்ஸ்


1  ராஜா  ராஜா தான்  

2 வந்தாள் வந்தாள் ராஜகுமாரி ஒய்யாரி

3 கண்மணி காதல்

4 எத்தனை நாளா

5 ஒரு மைனாக்குஞ்சு மாதுளம்பிஞ்சு வந்தாளாம் டனக்கு டண்டா

6 அழகு நிலா


  ரசித்த  வசனங்கள் 

1  சுரைக்காய்  கூட  குட் டைல  தான்  முளைக்குது , ஆனா  காய் காய்க்கும்போது  பந்தலுக்கு வர்றதில்லையா?

2 மனுஷனுக்கு  மனுசனே  ஜாதி  பார்க்கக்கூடாது , நீங்க நாய்களுக்கு   நடுவே ஜாதி  பார்க்கறீங்க 

3  நாம ஊத்தறது  உப்புத்தண்ணியா  இருந்தாலும்  தென்னை இளநீரை இனிப்பாத்தான் தரும் 

4 மாட்டுக்கு வாய் வழியா புண்ணாக்கு வெச்சா  மடி வழியாப்பால் வந்தே தீரும் 

5  காதல் என்பது மனப்பூர்வமா உணர்வது , ஆதாரம் காட்டி  நிரூபிப்பது காதல் அல்ல 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1   சாமி போட்டோவுக்கு நாயகன்  ரெகுலராக நாலு முழம்  மல்லிகைப்பபூ  வைப்பது  போல  ஒரு சீன்  வருது . சாமி போட்டோவுக்கு   செவ்வந்திப்பூ , அரளிப்பூ  தான்   வைப்பார்கள் , மல்லிகைப்பூவா வைப்பார்கள் ? 


2 நாயகியின்  பிறந்த நாள்  இந்த மாதம் 18,ம்   தேதி  என்றதும்  நாயகன் எம் ஏ  படிச்சவன்  பேனாவில்  மார்க் பண்ணாமல்  கண் மை  யால்  மார்க் பண்ணுவது  நம்பும்படி இல்லை 


3  நாயகன்  வேறு ஒரு சமஸ்தானத்து  ராஜகுமாரியை அரண்மனைக்கு  அழைத்து  வரும்போது  நிஜமான  ராஜகுமாரியான  நாயகி , புது ராணி  இருவருக்கும் பரஸ்பரம்  ஒருவரை  ஒருவர்  அறிமுகம் இல்லையே? எப்படி ? 


4  சார்லி க்காக  மக்கள்  உயிரை விடத்துணிவதும் , அதற்காக சார்லி  பெருமைப்படுவதும்  சென்ட்டிமென்ட்  ஒர்க் அவுட் ஆகாத  செயற்கை சீன் 

5  நாயகன்  நாயகியிடம்  காதலைச்சொல்ல  முடிவெடுத்த்துப்பின்  அவளது பிறந்தநாளன்று சொல்லிக்கொள்ளலாம்  என தள்ளிப்போடுவது  படத்தை இழுப்பதற்கான யுக்தி 


6   நாயகிக்கு வளையல்  செய்ய  நாயகியின்  வளையல்கள்  இரண்டை நாயகன்  திருட்டுத்தனமாக  எடுத்துச் செல்கிறார். வலது  கை  இடது கை  இரண்டுக்கும் ஒரே அளவு தானே? ஒரு வளையல்  எடுத்தால் போதாதா? 

7  நாயகியின்   வேஷம்  கலைந்து  அவர் தான் ராணி என்று நாயகனுக்குத்தெரிந்த  பின்பும் நாயகி வேலைக்காரி போல்  சாதா சேலையில்  இருப்பது ஏன் ?

நாயகனின் பாட்டி க்ளைமாக்சில்  அந்த கல்யாணப்பத்திரிக்கை  மட்டும் நாயகியிடம் காட்டினால்  போதும், எதற் கு  சூட்கேஸ்  எல்லாம் எடுத்துட்டு ஓடறார் ? 

9 ஷேர் மார்க்கெட்டில் ஆப்சன் ட்ரேடிங் தான் அபாயம்.இன்வெஸ்ட்மெண்ட் செய்தால் ஆபத்தில்லை.எதற்கு ஹார்ட் அட்டாக் வர வேண்டும்?நாயகியின் அப்பா ஒரு லாங்க் டெர்ம் இன்வெஸ்ட்டர் தானே?

10 நாயகன் நாயகியைக்காதலித்தாலும் அதை நாயகியிடம் சொல்லாமல் மறைப்பது என்ற கான்செப்ட்டில் வைதேகி காத்திருந்தாள் உட்பட பல படங்களில் வந்த சீன் தான்.


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங். 13+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கலகலப்பான ,ஜாலியான டைம் பாஸ் படம்.பார்க்கலாம்.ரேட்டிங் 2.75/5


Oru Oorla Oru Rajakumari
Poster
Directed byK. Bhagyaraj
Written byK. Bhagyaraj
Produced byC. H. Venu
Starring
CinematographyA. Karthik Raja
Edited byS. M. V. Subbu
Music byIlaiyaraaja
Production
company
Indrani Movies
Distributed byAlbert Release[1]
Release date
  • 15 January 1995
CountryIndia
LanguageTamil