Friday, October 31, 2025

டீசல் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் த்ரில்லர் )

           


                ஸ்பாய்லர்  அலெர்ட்


பெட்ரோல் ,டீசல் ஆகியவற்றுக்கு முக்கியப்பொருள் ஆக விளஙகும் க்ரூட் ஆயில் கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை விலாவாரியாக விளக்கும் முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையைப்பெறுகிறது இந்தப்படம்.


நாயகனின் வளர்ப்புத்தந்தை க்ரூட் ஆயில் கடத்தி மும்பைக்கு அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்குப்பத்து மக்களுக்கு செலவு செய்கிறார்.வில்லன் நெ 1. இவரிடமிருந்து க்ரூட் ஆயிலைத்திருட்டுத்தனமாக  திருடி விற்கிறான்.இவர்களிடம் மாமூல் வாங்கும் போலீஸ் ஆபீசர் வில்லன் நெ 2 . இவர்களுக்கு எல்லாம் பாஸ் மாதிரி செயல்படும் மும்பை தொழில் அதிபர் ஹில்லன் நெ 3



இந்த மூன்று வில்லன்களுக்கும் ,நாயகனுக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம் தான் மொத்தத்திரைக்கதையும்


நாயகனின் வளர்ப்புத்தந்தை    ஆக சாய் குமார் கச்சிதமாக நடித்திருக்கிறார்.இவர் பெரிய அளவில் ஏதோ செய்வார் என எதிர்பார்த்தால் ஏமாற்றமே.


நாயகன் ஆக ஆக்சன் களத்தில் இறஙகி இருக்கிறார் ஹரீஷ கல்யாண்.விஜய்காந்த் ரேஞ்சுக்கு இவர் பேசிக்கொண்டே இருப்பது அலுப்பு.


நாயகி ஆக அதுல்யா ரவி பால்கோவா போல வருகிறார்.நடிக்க அதிக வாய்ப்பில்லை.


வில்லன் நெ 1.  ஆக விவேக் பிரசன்னா பெரிய அளவில் சோபிக்கவில்லை

வில்லன் நெ 2  ஆக வினய் மிரட்டி இருக்கிறார்.வில்லன் நெ 1 உடன்  சாப்பிடும் சீன் அதகளம்

வில்லன் நெ 3  ஆக சச்சின் கெடேகர் பந்தாவாக வருகிறார்.ஆனால் பெரிய வில்லத்தனம் எதுவும் செய்யவில்லை


காளி வெங்கட்,கருணாஸ் ,அனன் யா, நாசர் ,பழைய ஜோக் தங்கதுரை,போஸ் வெங்கட்  அனைவரும் சும்மா வந்து போகிறார்கள்


திபு நினன் தாமஸ் தான் இசை.பாடல்கள் சுமார் ரகம்.பின்னணி இசை பரவாயில்லை ரகம்


ஒளிப்பதிவு எம் எஸ் பிரபு +ரிச்சர்ட் எம் நாதன் பாராட்டும்படி இருந்தது.

சான் லோகேஷின் எடிட்டிஙகில் படம் 144 நிமிடஙகள் ஓடுகிறது


திரைக்கதை ,இயக்கம்  சண்முகம் முத்துசாமி


சபாஷ்  டைரக்டர்


1 க்ரூட் ஆயில் பைப் லைன் மூலம் கடத்துவது என்ற கதைக்கரு இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத கரு.


2. பெட்ரோல் பங்க்குகளில் கலப்படம் எப்படி நடக்கிறது? கேசரி பவுடரை எப்படி மிக்ஸ் செய்கிறார்கள் என்ற டீட்டெய்லிங் அருமை

3  க்ரூட் ஆயில் தானே கடத்தறாங்க.எதுக்கு டைட்டில் டீசல் என்று யாரும் கேட்டு விடக்கூடாதே என நாயகனின் பெயரே டீசல் தான்,எல்லோரும் அவரை டீசல் என்றே அழைப்பார்கள் என ஒரே போடாகப்போட்ட விதம்


  ரசித்த  வசனங்கள் 


1. சொல்லிக்காட்டுவதற்கு அல்ல நாம் உதவி செய்வது


அதான்,எழுதி வைக்கிறேன்


2. வரும் முன் காப்போம் திட்டப்படி நமக்கு இடைஞசலா யார் வர இருக்காஙகளோ அவஙகளை. முளையிலேயே கிள்ளி எறிஞசிடனும்


3.  ஊருக்குள்ளே எத்தனை திருடஙக இருக்கனும்னு போலீஸ் நான் தான் முடிவு பண்ணனும்


4. ஸ்கெட்ச் என்ன?னு தெரியாம நாம உள்ளே போய் சிக்கிக்கூடாது


5. ஊழல் உன் யூனிபார்ம்ல பாதியை சாப்டுடுச்சு


6. ஒருத்தனை அடிக்கிறதால பிரச்சனை தீரும்னா ஜனத்தொகை இவ்ளோ பெருத்திருக்காது.அடிச்சுக்கிட்டு செத்திருக்கும்


7. நான் தனியா செஞ்ச வேலையைத்தான் நீங்க எல்லாரும் சேர்ந்து செய்யறீங்க


8. போலீஸ்காரன் பகை வேணாம்.அது பாம்பு மாதிரி.பழி வாங்காம விட மாட்டான்


9. ஆம்பளைஙகளைத்தேடனும்னா ஒயின்ஷாப்ல  இருப்பான்.இந்தப்பொண்ணுஙகளை கூகுள் ல கூட தேட முடியலையே?


10. ப்ரோ.உன் காதல் கதையை சொல்லுங்க


சொல்றேன்.மிஸ்.ஆனா என்ன ப்ரோன்னு கூப்பிட வேணாம்

11. பிணத்தைப்பார்த்துட்டுப்போனா நல்ல சகுனம்னு சொல்வாங்க,ஆனா நாம ஒரு பிணம் கூடவே பயணம் செய்யறோம்


12 தேவை தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது.அந்த தேவையையே தீர்மானிப்பவன் நான்

13 வேலை கொடுக்கறோம்னு சொல்லி இனி மக்களை யாரும் ஏமாத்த முடியாது

14. புதுசா ஒரு பொருளை மக்களிடம் விற்கனும்னா பழைய பொருள் கிடைக்காது என்ற பயம் அவஙகளுக்கு வரனும்

15 ஒரே காட்டில் வாழ்வதால் புலியும் ,நரியும் ஒண்ணாகிடாது

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1 நாயகனின் அம்மா,அப்பா வின் பிளாஸ்பேக் லவ் ஸ்டோரி மெயின் கதைக்கு சம்பந்தம் இல்லாதது


2. நாயகியின் கனவில் வரும் கனவுக்கன்னி நாயகனின் அம்மா முக சாயலில் இருப்பது அதனால் லவ் வருவது  சரியாக கனெக்ட் ஆகவில்லை


3. நாயகி காலேஜூக்குக்கட் அடிச்சுட்டு நடுக்கடலில் மாட்டிக்கொள்ள நாயகன் காப்பாற்றி தன் படகில் அடைக்கலம் தருவது  ஓக்கே.ஆனால் 2 நாட்களாக நாயகியை அவரது வீட்டில் தேடவே மாட்டார்களா?


4. ஒரு கட்டத்தில் 2 கோடி லிட்டர் க்ரூடு ஆயில் காணாமல் போகிறது.அதை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.ஒரு டேங்க்கர் லாரியில் 30,000 லிட்டர் கொள்ளவு பிடிக்கும் என்றால். மொத்தம் 650 லாரிகள் தேவை.அதை எப்படிக்கடத்தினார்கள் என்பதைக்காட்சியாகவோ,வசனம் மூலமாகவோ விளக்கவே இல்லை.எப்படி நம்பகத்தன்மை வரும்?


5. வில்லனிடம் மாமூல் வாங்கும் இன்னொரு வில்லன் ஆன போலீஸ் ஆபீசர் தான் மாமூல் வாங்கும் வில்லனை அடிமை போல் நடத்துவது எப்படி? அந்த வில்லன் கேரக்டர் மேல் பயமே வராதே?


6 நாயகனை போலீஸ்  மும்முரமாகத்தேடுகிறது.அவர் அகப்படவே இல்லை.ஆனால் ஒரு மாறு வேடம் கூடப்போடாமல் தலையில் ஒரு தொப்பி மட்டும் போட்டுக்கொண்டு அவர் ஊர் சுத்திட்டுதான் இருக்கார்


7 படத்தில் 3 வில்லன்கள்.யாருக்கு முக்கியத்துவம் தருவது என்பதில் குழப்பம் இயக்குனருக்கு


8 பச்சை குத்திக்கினு என்ற பாடல் கொண்டாட்டமான  உணர்வைக்கடத்துகிறது,ஆனால் ஆடியோவில் கேட்கும்போது கிடைத்த உணர்வு விஷூவலாகக்காட்டவில்லை.ஏ ஆர் ரஹ்மான் இசையில் சங்கமம் படத்தில் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடலுக்கு நிகழ்ந்த கதி போல

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - முதல் 40 நிமிடஙகள் ,கடைசி 30 நிமிடஙகள் அருமை,மீதி எல்லாம் இழுவை.டி வி ல போடும்போது பார்த்துக்கொள்ளலாம்.விகடன் மார்க் யூகம் 40 .ரேட்டிங் 2.25 / 5


Diesel
Theatrical release poster
Directed byShanmugam Muthusamy
Written byShanmugam Muthusamy
Produced byDevarajulu Markandeyan
SP Sankar
Kishore. S
StarringHarish Kalyan
Vinay Rai
Athulya Ravi
P. Sai Kumar
CinematographyM. S. Prabhu
Richard M. Nathan
Edited bySan Lokesh
Music byDhibu Ninan Thomas
Production
companies
Third Eye Entertainment
SP Cinemas
Distributed bySP Cinemas
Release date
  • 17 October 2025
Running time
144 minutes[1]
CountryIndia
LanguageTamil




Thursday, October 30, 2025

ட்யூட் (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் காமெடி டிராமா )

             




              ப்ரதீப் ரங்கனாதனின் முதல் முயற்சி இயக்குனர் ஆக கோமாளி (2019) படத்தில் வெற்றிகரமாக நடந்தது.நாயகனாக அவர் நடித்த ,இயக்கிய லவ் டுடே(2022),நாயகன் ஆக மட்டும் நடித்த டிராகன் (2025)இரண்டுமே மெகா ஹிட்.இப்போது ஹாட்ரிக் வெற்றி யுடன் வந்திருக்கிறார்


சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கராவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகப்பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் அறிமுக இயக்குனர் ஆக தன் முதல் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன் ஜாதி வெறி பிடித்த பிற்போக்குவாதி.வேறு ஜாதிப்பையனை காதலித்ததற்காக தன் தங்கையையே கொலை செய்த ஆணவக்கொலையாளி.இப்போது ஆளும் கட்சி அமைச்சர்.வில்லனின் மகள் தான் நாயகி.நாயகனின் தாய் மாமா தான் வில்லன்


நாயகி தன் முறை மாமனான நாயகனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.அப்போது நாயகன் எனக்கு உன் மேல் காதல் இல்லை என நிராகரித்து விடுகிறார்.விரக்தியில் நாயகி வெளியூர் போய் விடுகிறார்


நாயகியைப்பிரிந்த காலத்தில் தான் நாயகனுக்கு நாயகி மீது இருந்த உள்ளார்ந்த காதல் புரிகிறது.நாயகியின் அப்பாவிடம் திருமணத்துக்கு ஓக்கே சொல்கிறார்


வெளியூரிலிருந்து திரும்பிய நாயகி ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.இப்போது நாயகி வேறு ஒரு நபரைக்காதலிக்கிறார்.அவன் வேற ஜாதி


விஷயம் வெளியே தெரிந்தால் நாயகி வில்லனால் கொல்லப்படுவார் என்பதால் நாயகன் ஒரு திட்டம் தீட்டுகிறார்.அது ஒர்க் அவுட் ஆனது என்பதே மீதி திரைக்கதை.


நாயகன் ஆக பிரதீப் ரங்கநாதன் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.இவர் செய்யும்  சேஷ்டைகளுக்கு,மேனரிசஙகளுக்கு தியேட்டரில் அப்படி ஒரு கை தட்டல்.


பிரபுதேவாவின் உடல் மொழி,அங்க சேஷ்டைகள்,தனுஷ பாணி நடிப்பு இந்த இரண்டும் கலந்த கலவைதான் பிரதீப்.தலைமுடியை சீவாத பரட்டைத்தலையில் ஒரு ரஜினியிசம் என பிரதீப் ஒரு புது வித ஸ்டைலை இக்கால இளைஞர்களைக்கவர ஆரம்பித்து விட்டார்.


இவர் ஒரு தியாகி ஆக மாறுவது, பெண்மைக்கு ஆதரவாகப்பேசும் வசனஙகள் யுவதிகளை அதிகம் ஈர்க்கிறது


நாயகி ஆக மம்தா பைஜூ அருமையான நடிப்பு.நாயகன் தன்னை ஏற்கவில்லை என்றதும் அவர் காட்டும் சோகம் அருமை.பல காட்சிகளில் அவரது புன்னகையும் ,கண்களுமே நம்மைக்கவர்ந்து விடுகிறது.இவரது நடன அசைவுகளும் ரசிக்கும்படி இருக்கின்றன


ஷாக் சர்ப்பரைஸ் வில்லனாக நடித்த சரத்குமார்.ஏய்,சாணக்யா படஙகளுக்குப்பின் காமெடி செய்ய நல்ல வாய்ப்பு.வில்லத்தனத்திலும் மிரட்டி விட்டார்.எப்போ காமெடி செய்வார்?எப்போ வில்லத்தனம் செய்வார் என யூகிக்க முடியாத பிரமாதமான கேரக்டர் டிசைன் இவருடையது.


நாயகனின் அம்மாவாக ரோகினி ரகுவரன் கச்சிதம்.நாயகியின் காதலனாக ஹிர்து ஹாருன் ,நாயகனின் நண்பனாக வரும் டிராவிட் செல்வம் ,நாயகனின் முதல் காதலி ஆக வரும் நேகா ஷெட்டி ,மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவர்களுக்குத்தந்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்


சாய் அபயஙகர் இசையில்  4 பாடல்கள்.2 செம ஹிட்டு.நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்குக்குளிர்ச்சி.பரத் விக்ரமன் எடிட்டிஙகில் படம் 139 நிமிடஙகள் ஓடுகிறது


திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கீர்த்தீஸ்வரன்


சபாஷ்  டைரக்டர்

1

ஆணவக்கொலை என்பது கிராமியப்படஙகளில் தான் இதுவரை இருந்தது.முதல் முறையாக நகரக்கதையில் காட்டி இருப்பது புதுசு

2

மெயின் கதையையோ ,திரைக்கதை திருப்பஙகளையோ காட்டாதபடி ட்ரெய்லர் ரிலீஸ் செய்த லாவகம் அருமை

3

சரத் குமாரின் கேரக்டர் டிசைன்,நடிப்பு இரண்டுமே கலக்கல் ரகம்


4  காதலன் ஒரு தியாகி அதுவும் ஓவர்டோஸ் தியாகி என்பதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொன்னது


5 நடிகர்  சந்திரபாபுவின் சொந்த வாழ்வில் நடந்த சம்பவம் + கே பாக்யராஜின் அந்த 7 நாட்கள்ப்படத்தின் உல்டா வெர்சனை ரெடி செய்த விதம்


6. நாயகன்,நாயகி இருவரின் நடிப்பு ,,கெமிஸ்ட்ரி


  ரசித்த  வசனங்கள் 


1. தாலியைக்கழட்டினது தப்புத்தான்,அதுக்காகப்பொண்ணு மேல கை வைக்கிறது அதை விடப்பெரிய தப்பு

2

தாலியை விட தாலிக்குப்பின்னால் இருக்கும் பொண்ணோட மனசு தான் முக்கியம்

3

ஒரு பொண்ணுக்குப்பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்.அதுக்குக்காரணம் எல்லாம் தேவை இல்லை


4 இந்த உடம்பை வெச்சு அடிதடில இறஙகறே?உன்னால 10 பேரை அடிக்க முடியுமா?


100 பேர் வந்தாலும் அடி வாங்க முடியும்


5 ஜாலியா பண்ணினாதான் அது வேலை,இல்லைன்னா அது சுமை

6  சாகறதுக்கு முன்னால வாழ்க்கையோட பெஸ்ட் தருணங்கள் கண் முன் வந்துட்டுப்போகும்னு சொல்வாங்க,எனக்கு அவ முகம் தான் கண் முன் வந்தது


7 பிரண்டை லவ் பண்றது தப்பில்லையா?

பிரண்ட்சிப் தான் லவ்வு

8

நான் வல்கர் இல்லை.இந்த சொசைட்டி தான் வல்கர் 

9 என் மேல பீலிங்க்சே இல்லைன்னு

அன்னைக்கு நீ சொன்னப்ப வலிச்சது.இன்னைக்கு  அதுவே சுகமா இருக்குது

ஆனா எனக்கு வலிக்குது


10  நீ வாழ்க்கையை லெப்ட் ஹேண்ட் ல டீல் பண்ணினா வாழ்க்கையும் உன்னை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணும்

11. அடுத்தவங்க பீலிங்கை கிரிஞ்ச் ஆகப்பார்ப்பதுதான் இப்ப உள்ள ட்ரெண்டே


12. உனக்கு முன்னால 100 பெண்கள் என் வாழ்வில் இருந்திருக்கலாம்.ஆனால் உனக்குப்பின் ஒரு பொண்ணு...ம்ஹூம் நோ

மேன்

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1 கதைக்கரு கே பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்துடையதுதான்.(அதன் உல்டா வெர்சன்) அதே போல பூவே உனக்காக ,ஷாஜகான்,பிரியாத வரம் வேண்டும் ,குட்டி, போன்ற படஙகளை ஆங்காஙகே நினைவுபடுத்துகிறது


2 முதல் பாதியில் இருந்த ஜனரஞசகமான காட்சிகள் பின் பாதியில் இல்லை


3 சின்ன வயதில் இருந்தே  18 வருடங்களாக காதலித்த மாமன் மகனை அவன் நோ சொன்னதும் 6 மாத கேப்லயே இன்னொருவனை லவ் பண்ணும் நாயகியின் கேரக்டர்  டிசைனில் குழப்பம்


4  நாயகன் தன் மாமா பெண் மீது கொண்ட காதலை ஒரு தருணத்தில் உணர்கிறான்.அப்போ வேறு ஒரு பெண்ணை எப்படி காதலித்தான்?

5. வில்லன் மனம் மாறுவது நம்பும்படி இல்லை

6 வெளியூரில் காதலனுடன் இருந்த நாயகி அப்பா அழைத்ததும் இங்கே வந்து ஏன் மாட்டிக்கனும்?

7 நாயகன் தன் அம்மாவிடம் உண்மை சொல்லாதது ஏன்?


8 அமைச்சர் வீட்டு விசேஷத்துக்கு அனைத்து மாநில அமைச்சர்களும் வருகிறார்கள்,ஆனால் போலீஸ் பாதுகாப்பே இல்லை


 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்:- 18+ ( டபுள் மீனிங் வசனஙகள்)



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  30 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து முதல்  5 நாட்களில் 83 கோடி வசூல் செய்து விட்டது.2 கே கிட்ஸ் கொண்டாடுவார்கள்.90s கிட்ஸ் சால் ஜீரணிக்க முடியாது.இது ஜனரஞசகமான வெற்றிப்படம்.ரேட்டிங்க் 3/5.விகடன் மார்க் யூகம் 45


Dude
Theatrical release poster
Directed byKeerthiswaran
Written byKeerthiswaran
Produced byNaveen Yerneni
Y. Ravi Shankar
Starring
CinematographyNiketh Bommi
Edited byBarath Vikraman
Music bySai Abhyankkar
Production
company
Distributed bysee below
Release date
  • 17 October 2025
Running time
139 minutes[1]
CountryIndia
LanguageTamil
Budget30 crore[2]
Box office83 crore[citati

Wednesday, October 29, 2025

பைசன் (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (ஸ் போர்ட்ஸ் டிராமா )

                       

    
இயக்குனர்  மாரி  செல்வராஜ் தனது முதல்  படமான பரிஏறும் பெருமாள் (2018)  மூலம்  அனைவரையும் கவனிக்க வைத்தார் . கர்ணன் (2021) கமர்ஷியலாகவும் வெற்றி கண்டது  மாமன்னன் (2023) விமர்சகர்களால் பாராட்டு மழையில் நனைந்த படம் , வாழை (2024)  விமர்சகர்களாலும் , மக்களாலும்  கொண்டாடப்பட் ட  படம் .இது இவரது 5 வது படம் 


  சீயான்  விக்ரம் -ன்   மகன் ஆன த்ருவ் விக்ரம் பாலாவின்  இயக்கத்தில் நடித்த முதல் படம்   ஆதித்ய வர்மா(2019)   வெளியாகவே இல்லை .இரண்டாம் படம்  வர்மா (2020)  ஓடவில்லை , 3ம் படம்  மகான் (2022)  டப்பாப்படம் .இது அவருக்கு 4 ம் படம் 

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன் ஒரு கிராமத்தில் அப்பா,அக்காவுடன் வசித்து வருகிறான்.சின்ன வயசில் இருந்தே கபடி விளையாட்டில் அபரித ஆர்வம் கொண்டவன்.காரணம் அப்பா,தாத்தா எல்லோரும் கபடி வீரர்கள்


ஸ்கூல் படிக்கும்போது பி டி மாஸ்டர் நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்துகிறார்.ஊர்ப்பெரிய மனிதர்களுக்குள் நடக்கும் மோதல் ,கலவரம் ,தகறாரு இவை  எல்லாவற்றையும் மீறி நாயகன் எப்படி இந்தியக்கபடி  டீமில் சேர்ந்து ஜெயிக்கிறான் என்பதே மீதிக்கதை


நாயகன் ஆக துருவ் விக்ரம் நான்கு ஆண்டுகள் உழைப்பில் உருவான படமாம்.அப்பாவைப்போலவே கேரக்டருக்காகப்பிரமாதமாக உழைத்திருக்கிறார்.ஆனால் நடிப்பில் இன்னமும் மெருகு ஏற வேண்டும்.முந்தைய படமான வர்மா வை விட இதில் நல்ல முன்னேற்றம்


நாயகனின் அப்பாவாக பசுபதி.உணர்ச்சிப்பிழம்பான நடிப்பு.போலீசாரிடம் கெஞ்சும் காட்சியில் சிக்சர் அடிக்கிறார்


நாயகனின் அக்காவாக ரஜிசா விஜயன்,நாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் சம அளவில் நடித்திருக்கிறார்கள்.


பி டி மாஸ்ட்ராக வரும் அருவி  மதன் கேரக்டர் டிசைன் அருமை.அவருக்குப்பல இடஙகளில் கை தட்டல் கிடைத்தது.


ஊர்ப்பெரிய மனிதர்களாக வரும் அமீர் ,லால் இருவரும் பண்பட்ட நடிப்பு.


கெஸ்ட் ரோலில் வரும் அழகம் பெருமாள் , ரேகா நாயர் இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் 5 பாடல்கள்.3 ஹிட் ஆகி விடும்.பின்னணி இசையிலும் முத்திரை பதிக்கிறார்.


எழில் அரசுவின் ஒளிப்பதிவு அபாரம்.கபடி மேட்ச்களில் கேமரா விளையாடுகிறது


சக்தி திருவின்  எடிட்டிஙகில் படம். 168 நிமிடஙகள் ஓடுகிறது.இன்னமும் 15 நிமிடஙகள் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.

திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கி இருப்பவர் மாரி செல்வராஜ்


சபாஷ்  டைரக்டர்


1 படம் போட்ட முதல் 20 நிமிடஙகளில் நம்மைக்கதையில் ஒன்ற வைத்து விடுகிறார்


2  1990 களில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை என்பதால் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது பெரிய பிளஸ்


3. கபடி மேட்ச்கள் படமாக்கப்பட்ட விதம் அருமை.


4 ஆர்ட் டைரக்சன் அபாரம் .1990 காலகட்டத்தைக்கண் முன் நிறுத்துகிறது


5 அமீருக்கு நடக்கும் இரண்டாம் கண்டம் பதை பதைக்க வைக்கும் காட்சி அமைப்பு


6 பி டி வாத்தியார்  ,அமீர்,லால் மூவரின் கேரக்டர் டிசைனும்,அவர்களது நடிப்பும்


7 துருவ் விக்ரமின் அபார உழைப்பு,பசுபதியின் பண்பட்ட நடிப்பு


  ரசித்த  வசனங்கள் 


1 இங்கே கத்தியை நாம எடுக்கிறோமா?காலம் நம்ம கைல எடுத்துத்தருதா? யாருக்கும் தெரியாது

2. சத்தியம் பண்றது என்பதே பிடிச்ச விஷயத்தைப்பண்ணியே ஆகணும்கறதுதான்


3. வாழ்க்கை பூரா பயத்தையும்,ஏக்கத்தையுமா கொடுப்பீங்க உங்க பையனுக்கு?

4 ஏதோ ஒரு நாள் தான் உங்களை அடிச்சாஙக.என்னை விரட்டி விரட்டி அடிச்சுட்டே இருக்காஙக

5. இங்கே என்ன பிரச்சனை என்பது முக்கியம் இல்லை,யாருக்கும் ,யாருக்கும் பிரச்சனை என்பது தான் முக்கியம்

6 கபடி என்பது மத்தவங்க கையைத்தட்டி விடற விளையாட்டு இல்லை.சக வீரர்கள் கையைப்பிடிச்சு ஆடற விளையாட்டு

7  நான் எப்போதுமே என் பகையை ஊர்ப்பகையா நினைச்சதில்லை


8  நாம பிறக்கறதுக்கு முன்னாடியே நம்ம அப்பா,தாத்தா பிறக்கும் முன்னாடியே நமக்காக ஒரு பழியும் ,பகையும் காத்துட்டு இருக்கும் என்பதை எப்படி புரிஞ்சுக்கறது?

9 வேலியை உடைச்சுட்டு ஓடறது ஒரு போராட்டம்னா நம்மைச்சுத்தி வேலியே போட முடியாதபடி இருப்பதும் ஒரு போராட்டம் தான்


10 வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு மரியாதையைக்கொடுத்திருக்கு.என் மரியாதையைக்காப்பாத்திக்கத்தான் சண்டை போட்டுட்டு இருக்கேன்


11. யார் மூலம் மேலே போனா என்ன? திறமையாலதான் மேலே வந்தான்

12. நான் எதுக்காகக்கத்தியைத்தூக்கினேன் என்பதையே மறந்துட்டு இவனுங்க வேற ஒண்ணு பண்ணிட்டு இருக்காஙக


13. குடும்பப்பெருமை,ஜாதிப்பெருமை பேசறவஙகளை முதல்ல அடிச்சு விரட்டனும்


14 எனக்கு எல்லாமே சீக்கிரமா கிடைச்சுடாதுனு தெரியாமலேயே

15 வீட்டுக்குத்தானே வந்திருக்கேன்? சுடுகாட்டுக்கு வர்லையே? எதுக்கு வந்தே?னு கேட்டா?


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம் தவறு.முதல் சீனிலேயே க்ளைமாக்சுக்கு முந்தின சீனில் ஓப்பன் செய்வதால் பல காட்சிகளை யூகிக்க முடிவது திரைக்கதையின் பலவீனம்

2  ஓவர் வன்முறைக்காட்சிகள் 

3 படம் முழுக்க நாயகன் ஓடிக்கொண்டே இருப்பது அயர்ச்சியைத்தருகிறது.அவரை ரன்னிங ரேஸ் ஓடலையே?

4 துருவ் விக்ரம் சில காட்சிகளில்  தேமே என்று இருப்பதைப்போல் தோன்றுகிறது.உடன் இருப்போர் (தங்கை,காதலி,அப்பா) ஆகியோர் உணர்ச்சிப்பிழம்பாக மாறும்போதும் இவர் அண்டர்ப்ளே  ஆக்ட் செய்வது ஏன்?

5 பைசன் என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்து விட்டு எதிர்ப்பு வந்த பின் காளை மாடன் என்பதை சேர்த்தது

 அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்-18+ வன்முறைக்காட்சிகள் அதிகம்



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - ஸ்போர்ட்ஸ் டிராமா ரசிகர்கள் ,மாரி செல்வராஜ் ரசிகர்கள் பார்க்கலாம்.அனைத்துத்தரப்பினரும் விரும்பிப்பார்க்கும் ஜனரஞசகப்படம் அல்ல.வன்முறை அதீதமாக இருக்கிறது.விகடன் மார்க் யூகம் 50.ரேட்டிங் 3/5


Bison Kaalamaadan
Theatrical release poster
Directed byMari Selvaraj
Written byMari Selvaraj
Produced bySameer Nair
Deepak Seigal
Pa. Ranjith
Aditi Anand
Starring
CinematographyEzhil Arasu K.
Edited bySakthi Thiru
Music byNivas K. Prasanna
Production
companies
Distributed byFive Star Creations
Release date
  • 17 October 2025
Running time
168 minutes[1]
CountryIndia
LanguageTamil
Box office₹36 crore[2]

Friday, October 24, 2025

THE WOMAN IN CABIN 10 (2025) - ஆங்கிலம் /தமிழ் - சினிமா விமர்சனம் ( சைக்கலாஜிக்கல் மிஸ்ட்ரி த்ரில்லர் ) @ நெட் பிளிக்ஸ்

               

    10/10/2025 முதல் நெட் பிளிக்ஸ்  ஓ டி டி  யில்  நேரடியாக ரிலீஸ் ஆகி இருக்கும் இந்தப்படம்  தமிழ்  டப்பிங்கில் கிடைக்கிறது . அனைவரும் பார்க்கக் கூடிய  யு  படம் தான் ரூத்  வேர்  என்ற  பெண் எழுத்தாளர்  2016ல் எழுதிய  ஏ விமன்  இன் த சேம்பர் 10  என்ற  நாவலைத்தழுவி திரைக்கதை அமைக்கப்பட் ட படம் இது  ஜோ ஸ்ரெப்னில் ,   அன்னா  வாட்டர்  ஹவுஸ்  ஆகிய  இருவருடன் இணைந்து திரைக்கதை  எழுதிய சைமன் ஸ்டோன்  தனியாக  இயக்கிய படம் இது      


ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகி  ஒரு இன்வெஸ்ட்டிகேட்டிவ்  ஜர்னலிஸ்ட் . ஒரு  மிகப்பெரிய உல்லாச க்கப்பலில்  3 நாட்கள்  பயணம் செய்ய  வேண்டிய  பணி அவருக்குத் தரப்படுகிறது . ஒரு பெரிய  கோடீஸ்வரியும் , அவளது  கணவனும் தான்  அந்தக்கப்பலில்  விருந்தினர்களை அழைத்து செல்பவர்கள் . பார்ட்டி கொடுப்பவர்களும் அவர்களே !அந்த பயணத்தின் முடிவில் ஒரு பெரிய அறிவிப்பை அந்தக்கோடீஸ்வரி வெளியிட இருக்கிறாள் 


முதல் நாள்   இரவு நாயகி தனக்குக்கொடுக்கப்பட் ட அறையில் தங்கிய போது  பக்கத்து  அறையான 10ம் எண் அறை  யில்   இருந்து  ஒரு பெண் கப்பலில்  இருந்து  கடலில்  தள்ளிக்கொலை செய்யப்படுவதைப்பார்க்கிறாள் . அறையில்  ரத்தக்கறையும்  இருக்கிறது 


 உடனே  கப்பலில் அனைவரையும்  எழுப்பி  விஷயத்தை   சொல்கிறாள் . ஆனால்  கப்பல்  சிப்பந்திகள் ரொமபக்கூல்  ஆக   10ம் எண் அறை  யில் யாரும்  தங்கவே இல்லை , அங்கே  வர வேண்டிய விருந்தினர் வரவே இல்லை  என்கின்றனர் ,,ரத்தக்கறை  இப்போது  இல்லை . எனவே   அனைவரும்   நாயகி  கண்டது பிரமை , அல்லது   கற்பனை  என நினைக்கின்றனர் 


 ஆனால் நாயகி இதில் எதோ மர்மம் இருக்கிறது  என நினைக்கிறாள் .இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதித்திரைக்கதை 

நாயகி  ஆக கெய்ரா  நைட்லி  பிரமாதமாக நடித்து இருக்கிறார் .  அவரது   கண்கள்  , ஹேர் ஸ்டைல் இரண்டும் கொள்ளை அழகு .நாயகியின்   முன்னாள்   காதலன் ஆக வருபவர் டேவிட்  அஜாலா  பிளேபாய்  ஆக வந்து கலகலப்பு ஊட்டுகிறார் கோடீஸ்வரி  ஆக வரும் லிசா  நடிப்பு  உருக்கம் . நோயால்  பலவீனம்  அடைந்த தளர்ந்த நடையை அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்   வில்லன்   ஆக கை  பியர்ஸ்  மிரட்டி இருக்கிறார் 


 பென்  டேவிஸ்   ஒளிப்பதிவு அபாரம் . படம் முழுக்க  ஒரே  ஒரு கப்பலில்  நடக்கும் கதை என்பதால்  கடலின் ரம்மியத்தை பல ஷாட்களில் அள்ளி  வழங்கி  இருக்கிறார் .இசை பெஞ்ச்மின் . பின்னணி  இசையில்  இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம் . மார்க்  டே  தான்   எடிட்டிங்க் . 90 நிமிடங்களில்  ஷார்ப் ஆக ட்ரிம் பண்ணி இருக்கிறார் 

சபாஷ்  டைரக்டர்

1    வில்லன்  ஆள் மாறாட்டம்  செய்கிறான்   என்ற   ட்விஸ்ட் டை  யூகிக்க   முடியாதபடி  திரைக்கதை அமைத்த விதம் அபாரம் 


2 நாயகி சந்திக்கும்  பிரச்சனைகள்   நிஜமா?கற்பனையா?  என்ற  சஸ்பென்ஸ்   கச்சிதம் 


3  நாயகியின்   முன்னாள்   காதலன்  கேரக்ட்டர்  மெயின் கதைக்கு சம்பந்தம்  இல்லையே  என நாம் யோசிக்கும் பொது இயக்குனர்  அதில்   வைத்த டிவிஸ்ட்  குட் 

ரசித்த  வசனங்கள் 


1 மனிதன் என்பவன் மிருகமா மாறக்கூடியவன் தான் 


ஆமா ,சில சமயங்களில் அப்படி மிருகமா மாறாம இருந்தா நல்லாருக்கும்னு நினைக்கிறேன் 


2  உங்க  ரெண்டு போரையும் பார்த்தா ஏற்கனவே அறிமுகம் ஆனவங்க மாதிரி தெரியுதே ? 


எங்க ரெண்டு பெருக்குள்ளே  எல்லாமே  முடிஞ்சிடுச்சு 


3  நோயாளியாக இருப்பது வாழ்வின் பெரிய போராட்டம் 


4   சாக இருக்கும் நேரத்தில்  யாருக்கும் ஈகோ இருக்காது 


5   நான்  ஒரே  தப்பைத்திரும்பப்பண்ணக்கூடாதுன்னு நினைக்கிறேன் 


6 நான் செய்த  தவறுகளில் ஒரு நல்ல தவறு நீ தான் 

7  அமைதி  கிடைக்குபோது நாம்  அதை அனுபவிக்கனும் 

8  மனித  நேயமே  இல்லாத காலக்கட்டத்துல நீங்க செய்ததுமனித  நேயத்துக்கு உதாரணம் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   மொத்தமே  90 நிமிடங்கள் ஓடக்கூடிய  இந்தப்படத்தில் மெயின் கதைக்குள் வரவே 20 நிமிடங்களாகிறது . இன்னமும் க்ரிஸ்ப் ஆக கட் பண்ணி இருக்கலாம் 

2  ஒரு மிகப்பெரிய  கோடீஸ்வரி ஒரு செக்யூரிட்டி  போலீஸ்  கூட  உடன் இல்லாமலா இருப்பாள்

3   கோடீஸ்வரியின்  குடும்ப   வக்கீல்  கப்பலில்  , பின் எப்படி உயிலை மாற்ற  முடியும் ?

4   க்ளைமாக்சில்  எல்லோருக்கும் உண்மை  தெரிந்த   பின் வில்லன் செய்வது மடத்தனம் 

 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன் யு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  த்ரில்லர்  ரசிகர்கள் ,க்ரைம்  ஆக்சன்  த்ரில்லர்  ரசிகர்கள்  அவசியம்  காண வேண்டிய தரமான  படம் . ரேட்டிங்க் 3 / 5


The Woman in Cabin 10
Promotional poster
Directed bySimon Stone
Screenplay by
  • Joe Shrapnel
  • Anna Waterhouse
  • Simon Stone
Based onThe Woman in Cabin 10
by Ruth Ware
Produced by
Starring
CinematographyBen Davis
Edited by
Music byBenjamin Wallfisch
Production
company
Sister
Distributed byNetflix
Release date
  • October 10, 2025
Running time
95 minutes[1]
Countries
  • United Kingdom
  • United States
LanguageEnglish

 .

Thursday, October 23, 2025

SEARCH THE NAINA MURDER CASE (2025)-ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்) @ ஜியோ ஹாட் ஸ்டார்

       


                    

மொத்தம் 6 எபிசோடுகள்.ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை,ஆக மொத்தம் மூன்றரை மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதை என்று டைட்டிலில் போடுகிறார்கள்.ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தக்க 16+  வெப் சீரிஸ் தான்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு டீன் ஏஜ் பொண்ணு.காலேஜில் படிக்கிறாள்.இவளுக்கு ஒரு முன்னாள் காதலன் உண்டு.அவனுடன் பிரேக்கப் ஆகி விட்டது.குளிர் பானத்தில் போதை மருந்து கலந்து அத்துமீறப்பார்த்ததால் பிரேக்கப் .


நாயகிக்கு புதியதாக ஒரு பாய் பிரண்டு கிடைத்திருக்கிறான்.அவன் திருமணம் ஆனவன்.


நாயகியை ஒரு தலையாய் காதலித்த ஒரு தறுதலை இருக்கிறான்

இவ்ளோ டிமாண்ட் உள்ள நாயகி கொலை செய்யப்பட்டு  ஒரு பிரபல அரசியல் தலைவருக்கு சொந்தமான காரில் பிணமாக ஒரு  நீர் நிலையில் கண்டெடுக்கப்படுகிறாள்

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆன ஒரு சீனியர் லேடி ஆபீசர்,ஒரு ஜூனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் இருவரும் இணைந்து இந்தக்கேசை துப்பு துலக்குவதுதான் மீதி திரைக்கதை

சபாஷ்  டைரக்டர்(ரோஹன் சிப்பி ) 

1. லேடி போலீஸ் ஆபீசர் ஆக வரும் கொன்கொனா சென் சர்மா   நடிப்பு செம கலக்கல்.அவரது காஸ்ட்யூம் கூட அருமை.முழுதாகக்கவர்  செய்யப்பட்ட உடைகள் மரியாதை அளிக்கும்  தோற்றம்.அவரது உடல் மொழியும் அருமை,ஜூனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஆக வரும் சூரியா சர்மா  நடிப்பு கன  கச்சிதம் 

2. அரசியல் தலைவர் ஆக வருபவர் லீலை படத்தின் நாயகன் சிவ பண்டிட் .நல்ல நடிப்பு

3 அரசியல் தலைவரின் கீப் ஆக வருபவர் ஷ்ரத்தா  தாஸ் முதல் காட்சியிலேயே இடை அழகு மிளிர "ஹிப்" நாடிசம் செய்கிறார்.க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன் கிளாமர் டிரசில் அவர் யோகா செய்வது பிளட் பிரசரை எகிற வைக்கிறது

4. பின்னணி இசை அருமை.பல பரபரப்பான  சீன்களில் பிஜி எம் கலக்கல் ரகம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்

5 யூத் சம்பந்தப்பட்ட சீன்கள் அதிகம் இருந்தும் 18+ சீன்கள் வைக்காமல் குடும்பத்துடன் பார்க்க வைக்கும் தரமான ,கண்ணியமான நெறியாள்கை அருமை


திரைக்கதை  - ராதிகா & ஸ்ரேயா 

  ரசித்த  வசனங்கள் (ராதிகா ஆனந்த் )


1. ஆண்கள் தான் இருட்டைப்பார்த்து பயப்படுவாங்க,பெண்களுக்கு ஆண்களைப்பார்த்தால் தான் பயம்


2. இன்வெஷடிகேஷன் ல துப்பாக்கியை விட நான் என் மூளையைத்தான் அதிகம் உபயோகிப்பேன்

3. அரசியல்வாதிகள் எவ்ளோ சுத்தமா இருந்தாலும் மக்கள் அவஙகளை சந்தேகமாத்தான் பார்ப்பாங்க

4. இன்வெஸ்டிகேஷன் ல முதல் விதி யாருக்கும் பொய்யான வாக்குறுதி தரக்கூடாது

5. யாரோட வாழ்க்கைலயும் நாம் ஹீரோ கிடையாது

6. ஒரு இடத்துல  அரசியல் நுழைந்து விட்டால் அங்கே ட்ராஜடி தவிர்க்க முடியாதது ஆகி விடும்

7 அவனை நம்பக்கூடாது.தேவைப்பட்டா அவன் அப்பாவைக்கூட கழுதையா மாத்திடுவான்

8 ஸ்மார்ட்டான பிள்ளைங்க அவஙக அம்மா,அப்பா செஞ்ச தப்பைப்பண்ண மாட்டாங்க

9. லவ் பெய்லியர் ஆனவன் அடிபட்ட பாம்பு மாதிரி,எப்போ கொத்தும்னு சொல்ல முடியாது.

10 லாபம் இல்லாத இடத்தில் இவன் காலே வைக்க மாட்டான்

11.  யூத்சை குறைச்சு எடை போடாதீங்க.சோசியல் மீடியாவில் அவஙக போடும் லைக்சும் ,கமெண்ட்சும்  அவஙக எதை விரும்பறாங்க என்பதைக்குறிக்கும்

12.  பாலிடிக்ஸ்க்கு பவர் முக்கியம்.இன்பர்மேசன் தான் பவர்

13.  எந்த ஸ்கேண்டலாவது ஒரு அரசியல் தலைவரைக்காலி பண்ணி இருக்கா?அப்டி இருந்தா இந்தியாவில் தலைவர்களே இருந்திருக்க மாட்டாங்க

14. என்னை சின்னப்பொண்ணு மாதிரி ட்ரீட் பண்றீஙக

ஆம்,ஏன்னா நீ சின்னப்பொண்ணு தான்

15. மத்தவங்களுக்கு உதவும் முன் நம்மை முதலில் பார்த்துக்கனும்

16.  நாம என்ன பேசறோம்?என்ன பண்றோம்கறதை மனுசன் மறந்துடுவான்.ஆனா இண்ட்டர்நெட் மறக்காது


17 இந்த உலகத்துலயே ஆபத்தானது  ஒன்சைடு லவ் தான்

18 பொண்ணுங்க பாதுகாப்பா இருக்கக்கத்துக்கொடுப்பாஙக ,ஆனா பசஙகளுக்கு?

19 துப்பாக்கிக்குண்டுக்கு இவன் குற்றவாளியா? அப்பாவியா? என்பது தெரியாது

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் லேடி போலீஸ் ஆபீசர் டீன் ஏஜ் மகள் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரி ஆக இருப்பது ,கணவருடன் அடிக்கடி நடக்கும் கான்வெர்சேஷன்,குடும்பப்பிரச்சனைகள் சுவராஸ்யமாக சொல்லப்பட்டிருந்தாலும்  இழுவை.தயவு தாட்சண்யம் இல்லாமல் அதை ட்ரிம் பண்ணி இருந்தால்  1 மணி நேரம் மிச்சம்


2 இரு போலீஸ் ஆபீசருக்கும் இடையே நிகழுன் ஈகோ கிளாஸ் செம இண்ட் ரஸ்ட் தான்.ஆனால் மெயின் கதைக்கு அதுவும் தேவை இல்லை


3.  அரசியல் தலைவரின் கீப் ஆக வருபவர்  நண்பர் முன் அரை குறை உடையுடன் யோகா செய்வதும் ,சகஜமாக உரையாடுவதும் எப்படி,?

4. அரசியல் தலைவர் முதல் சீனிலிருந்தே கடு கடு முகத்துடன் தான் இருக்கிறார்.கீப் முகத்தில் தான் காதல் பொங்கி வழிகிறது.கீப்க்கு டவுட் வராதா?

5. நாயகி கொலை செய்யப்படுகிறார் என்பதைக்காட்டும்போது அவரைப்பற்றிய குறைந்த பட்ச விபரங்களாவது ஆடியன்சுக்கு தெரிய வேண்டாமா?.அவ்வப்போது பிளாஸ்பேக் மூலம் சொல்வது மிகக்குறைவு.இன்னமும் விளக்கம் தேவை


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள் , க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்களுக்குப்பிடிக்கும்  ,ரேட்டிங்க் 3/5 

Wednesday, October 22, 2025

ராம்போ (2025) -தமிழ் - சினிமா விமர்சனம் @ சன் நெக்ஸ்ட்,ஏர்டெல் எக்ஸ்ட்ரீம்

           



          இயக்குனர்  முத்தையா  எடுத்த எல்லாப்படங்களிலுமே  சாதி இருக்கும் . ஒரு மாறுதலுக்கு  இது  மாமூல்  மசாலாப்படம் .நடிகர்  அருள்  நிதி  படங்களில்  எப்போதும்  மாறுபட் ட  திரைக்கதை   இருக்கும் , ஹீரோயிசம் இருக்காது . ஆனால்  இதில்  மாமூல   கதை . ஓவர் ஹீரோயிசம்    .

இவர்கள்  இருவரின் காம்போவில் வந்த ராம்போ எப்படி இருக்கு எனப்பார்ப்போம்   


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  சின்னப்பையனா இருக்கும்போது   அவன் தான் க்ளாசில்   மார்க்கில் நெம்பர் 2 . உடனே  வில்லனின் அப்பா நெம்பர் 1  மாணவனைக்கொலை பண்ணிடறார் .. வில்லன் பெரியவன் ஆகி  ஒரு பெரிய கல்வி நிறுவனம் நடத்தறான் . அது  தான்  நெம்பர் 2 , ஆல்ரெடி நெம்பர் 1 ஆக  இருக்கும்  ஒரு பெரிய கல்வி நிறுவனம் ஓனர்   கூட  தொழில்  முறை  போட்டி  நடக்கிறது .  இரு தரப்பும்  மாறி மாறி செய்யும் சதி வேலைகளில்  வில்லன்  ஒரு கட்டத்தில்  தன சொந்த  அப்பாவையே  கொலை செய்கிறான் .அதைப்பார்த்த சாட்சி   வில்லனின் தங்கையான நாயகி . தன அண்ணனுக்கு  எதிராக  கோர்ட்டில்  சாட்சி    சொல்ல   இருக்கும்  நாயகியை  வில்லன்  கொலை   செய்யத்துடிக்கிறான் . நாயகன்  அதை எப்படித்த்தடுக்கிறான் என்பதே மீதித்திரைக்கதை 


நாயகன் ஆக   அருள் நிதி .பேராண்மை  படத்தில்  வரும் ஜெயம் ரவி மாதிரி  ஹேர் ஸ் டைல் . நடிக்க   வாய்ப்பு அதிகம் இல்லை , அடிக்க வேணா  நிறைய வாய்ப்பு 


 நாயகி ஆக   தான்யா ரவிச்சந்திரன்  அழகுப்பதுமையாக வருகிறார் .


 வில்லன் ஆக ரஞ்சித் சஜீவ்  ,அவருக்கு ஜோடியாக வில்லி ஆக ஆயிஷா , இருவரின் வில்லத்தனங்கள் கன  கச்சிதம் 


வீணடிக்கப்படட நல்ல நடிகர்கள் சரண் ராஜும், அபிராமியும் 


 வி டி வி கணேஷ்  இருக்கிறார் , ஆனால் காமெடி இல்லை 

 ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமை. ஆக்சன்  ஸீக்வன்சில்  பொறி பறக்கிறது  வெங்கட்  ராஜனின் எடிட்டிங்கில்  படம் 105 நிமிடங்கள்  ஓடுகிறது , ஜிப்ரானின்  இசை சுமார் ரகம் , பின்னணி இசை பரவாயில்லை ரகம் 


சபாஷ்  டைரக்டர்


1   சாதி அடையாளங்கள் இல்லாமல் ஒரு படம் இயக்கிய சாதனை 


2  நாயகனை  விட வில்லனை  நல்லவனாகக்காட்டியது . செய்த தப்புக்கு அப்பாவுக்கே தண்டனை தருகிறான் வில்லன் 


3   நாயகன் - நாயகி  கெமிஸ்ட்ரியை விட வில்லன் - வில்லி கெமிஸ்ட்ரி  நன்கு   ஒர்க் அவுட் ஆகி இருப்பது 



  ரசித்த  வசனங்கள்



1 நாம  எப்பவும்  மேலே  தான்  இருக்கணும்  , நமக்கு மேலே  யாரையும் வர விடக்கூடாது 


2 ரல்லாருக்கும் எல்லாம் கிடைக்காது , நமக்கு என்ன கிடைக்குதோ அதை வைத்து மகிழ்ச்சியா இருந்துக்கணும் 


3  வாழ்க்கைல நமக்கு மேலே  இருக்கறவங்களைப்பார்க்கக்கூடாது ,நமக்கு கீழே இருக்கறவங்களைப்பார்க்கனும் , அப்போதான்  கொஞ்சமாவது  சந்தோஷமா இருக்க முடியும் 


4 உன்னை வெச்சு   நான் தான் சம்பாதிப்பேன் ,எ ன்னை வெச்சு     நீ  சம்பாதிக்க நினைக்கிறே 


5  நல்லவங்க  தப்புப்பண்ணக்கூடாது , நல்லவங்களை   தப்புப்பண்ண  விடவும் கூடாது 


6 தப்புப்பண்ணி   வர்ற   பணத்துக்கு  ஆயுசு  கம்மி , நல்லது வர்ற   பணத்துக்கு  ஆயுசு  அதிகம் 

7    நம்ம மேல  நம்பிக்கை வைத்திருப்பவங்க தான் தெய்வம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1  அப்பாவைக்கொன்னதைக்கூட மன்னிச்சுடுவேன்,ஆனா அப்பாவிக்குழந்தைகளைக்கொன்னதை எப்படி மன்னிப்பேன்னு நாயகி தன அண்ணனான வில்லனிடம் கேட்பது  லாஜிக்கே  இல்லை .அப்பாவைக்கொன்னதை எப்படி மன்னிக்க முடியும் ? 


2   நாயகன் அனாதைக்குழந்தைகள்  200  பேருக்கு  சாப்பாடு , தங்கும் இடம் தருவதெ ல்லாம் சரி , அனைவரையும் தனியார் பள்ளியில் படிக்க வைக்க சிரமப்படுவது எதனால் ?  அரசுப்பள்ளியில்,  படிக்க வைக்கலாமே? 


3  10 கோடி ரூபாய் பணத்தை சின்ன பேக்கில்  போட்டு எடுத்து வருவது எப்படி ? அதில் 3 செட் டிரஸ் செட் கூட வைக்க முடியாது .500   ரூபாய் நோட்டு  என்றாலும் 200  கட்டு   வைக்க  வேண்டாமா? 


4   நாயகி இருக்கும் இடமே தெரியலை என வில்லன் தேடுவது சிரிப்பு .அவர் என்ன   மாறு வேடத்திலா இருக்கிறார் ? 


5  நாயகன்  சண்டையில்  அடி  வாங்கி  முகம் எல்லாம் காயம் , அடுத்த   ஷாட்டில்   க்ளீன்  முகம், அதற்கு  அடுத்த    சீனில்  ஆறிய வடு .எதுக்கு இவ்ளோ  குழப்பம் ?  கண்ட்டினியுட்டி  பார்க்க மாட் டார்களா? 


6 1985 1990 களில்  வந்திருக்க வேண்டிய அரதப்பழசான கதை 

7  மெயின் கதைக்கு சம்பந்தம்  இல்லாத க்ளைமாக்ஸ் பைட் சீன் . ஹீரோ  , வில்லன் சோலோ பைட்  தேவையே இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  கொஞ்ச்ம  கூட சுவராஸ்யம் இல்லாத பழைய கதை , டி வி ல     போடும்போது  பார்க்கலாம் . ரேட்டிங்க் 1.75 / 5 

Friday, October 03, 2025

காந்தாரா அத்தியாயம் 1 (2025)- கன்னடம் /தமிழ் - சினிமா விமர்சனம் (பேண்ட்டசி ஆக்சன் த்ரில்லர் )

               

         125  கோடி ரூபாய் செலவில் உருவான  இந்தப்படம்  முதல் நாள்  மட்டும் உலக  அளவில் 90 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது . ஏற்கனவே  வெளியான காந்தாரா  படத்தின் கதைக்கு  முந்தைய  காலத்தில் நடக்கும் கதை  இது 

ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லனின்  தாத்தா  ஒரு மகாராஜா . நாயகனின் தாத்தா ஒரு பழங்குடி இனத்தவர் . காந்தாரா  என்ற  இடத்தில்  நாயகனின்  பூர்விக  மக்கள்  வாழ்கிறார்கள் .வில்லனின்  தாத்தா  காந்தாரா  பகுதியைக்கொள்ளை  அடித்துக்கைப்பற்ற  நினைக்கிறார் .ஆனால் முடியவில்லை .தெய்வீக சக்தியின் துணையுடன் நாயகனின் தாத்தா அவர்களை துரத்தி   அடிக்கிறார் 


 2 தலைமுறைக்குப்பிறகு  வில்லன் மீண்டும்   காந்தாரா  பகுதிக்கு வருகிறான் .நாயகன் அவனை எதிர்க்கிறான் .. இதற்குப்பின் என்ன நடந்தது என்பது மீதி திரைக்கதை 

.நாயகன்   ஆக  ரிஷப்  ஷெட்டி ஆக்ரோஷமான நடிப்பு . முதல் பாதியில் பொன்னியின் செல்வன்  வந்தியத்தேவன் போல  ஜாலியான ,கலகலப்பான நடிப்பு . பின் பாதியில் ஆக்ரோஷமான  வீர நடிப்பு . கை தட்டல்  அள்ளுகிறது 


 நாயகி  ஆக வில்லனின்  தங்கை ஆக  ருக்மினி   நளினம் ,அழகு .க்ளைமாக்சில்  அவர்  வில்லியாக மாறுவதுஅருமை 


வில்லன் ஆக குல்ஷன்  தேவய்யா  மிரட் டலான  நடிப்பு . உடல் மொழி அபாரம் .ஆரம்பத்தில் குடிகாரன் , கோமாளி போல சித்தரிக்கப்படுபவர் கொடூரமான வில்லனாக அவதாரம் எடுப்பது செம 


 வில்லனின் அப்பாவாக ஜெயராம் வில்லன் , வில்லனின் அப்பா இருவரையும் காட்டும்  விதம்  , அவர்களுக்கு இடையேயான வசனங்கள் டாக்டர்  ராமதாஸ் , அன்புமணி  மோதல்  போலவே  இருப்பது   எதேச்சை யானதா? திட் டமிட் ட செயலா?தெரியவில்லை

பி அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை அபாரம் அர்விந்த் காஷ்யப்பின்  ஒளிப்பதிவு கலக்கல்  ரகம் சுரேஷ்  மல்லையாவின் எடிட்டிங்கில் படம் 168 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதியில்  30 நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம், போர் அடிக்கிறது விஷுவல்   எபெக்ட்ஸ்  தான் உயிர் நாடி .பிரம்மிக்க வைக்கிறது 

 எழுதி  இயக்கி  இருப்பவர்  ரிஷப்  ஷெட்டி 


சபாஷ்  டைரக்டர்


1 ஒவ்வொரு சீனிலும்  பிரம்மாண்டம்  காட்டி இருப்பது  அருமை 


2 முதல்  பாதியில்      ஏனோ  தானோ  என எழுதப்பட்ட   வில்லன் , நாயகி  இருவரின்  கேரகடர்  டிசைன் பின் பாதியில்  விஸ்வரூபம் எடுத்து நிற்பது அருமை 


3  நாயகனின்  க்ளைமாக்ஸ்  அவதாரம் அற்புதம் . 


4   ஒளிப்பதிவு  , பிஜிஎம் ,ஆக்சன் ஸீக்வன்ஸ் , சி ஜி   ஒர்க்ஸ்  செம 


5   தேர்  ஓடி வரும்  சீன்  , புலி  வரும் சீன்கள் , க்ளைமாக்ஸ்  கலக்கல் ரகம்      


  ரசித்த  வசனங்கள் 


1  வெளிச்சமா  இருக்கே-னு  மின்மினி பின்னால  போய்டாதீங்க , தொலைஞ்சு போயிடுவீங்க 


2  நாங்க  தொட் டதை  எல்லாம் உங்களால  ஏத்துக்க முடியலைன்னா , நீங்க நிறைய இழக்க வேண்டி வரும் 


3 ஏன்னா மூலிகை இது , சிறைக்கதவே திறந்த மாதிரி இருக்கு ? 


அய்யா, ஏற்கனவே சிறைக்கதவு  திறந்து தான்  இருக்கு


4  தேனீக்கு இன்னைக்கு நான் தான் தீனியா? 


5  டியர், அங்கே  நமக்கு வசதியா இருக்காது 


 உயிருக்குப்போராடிட்டு இருக்கேன் ,உற்சாகம் கேட்குதோ ?


6  வீட்டுக்குப்போனதும் ஜெயந்தியைப்பார்த்தாப்போதும் 


அவங்க தன நம்ம வீட்டம்மாவா? 


இல்ல , அவங்க அமாவாசைல வந்த பவுர்ணமி 


7  புலி நம்மை எங்கே கூட்டிட்டுப்போகுது ?

அதனோட வீட்டுக்கு நம்மை சாப்பிடக்கூட்டிட்டுப்போகுதுன்னு நினைக்கிறேன் 

8 நாம  தெய்வத்தை நம்பி  வாழ்ந்துட்டு  இருக்கோம்னா அவங்க அதே தெய்வத்தைக்கட்டுப்படுத்தி  வாழ்   ஆசைப் படறாங்க 

9   பதவி  ஏற்க  வைத்தது  மட்டும் தான் உங்க வேலை , பதவியை விட்டு இறங்கணும்னா நான் தான் முடிவு பண்ணனும் 


 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

 1  சாண்டில்யன் , நாவல் ஸ்டைல் ,   அம்புலிமாமா  கதை  பேட் டர்ன்  தான் முதல் பாதி முழுக்க .ஹீரோவின் வீர சாகரசம் எல்லாம்  ஓவரா ஓவர் 


2   வில்லன்  தன தங்கை  நாயகனுடன்  நெருக்கமாக பழகுவது  தெரிந்தும் கண்டு கொள்ளாமல்  இருப்பது எப்படி ?


3   நாயகன்   வில்லனின்  ஏரியாவில்  நுழைந்து  அசால்ட் ஆக துறைமுகத்தைக்கைப்பற்றுவது நம்பும்படியில்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - 16+ 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - விஷூவல்  ட்ரீட்டுக்காக    ஹாலிவுட் ஸ் டைல்  மேக்கிங்க்காக ,தொழில்   நுட்ப  அம்சங்களுக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்க்  3.5 .5 


Kantara: Chapter 1
Theatrical release poster
Directed byRishab Shetty
Written byRishab Shetty
Produced byVijay Kiragandur
Chaluve Gowda
Starring
CinematographyArvind S. Kashyap
Edited bySuresh Mallaiah
Music byB. Ajaneesh Loknath
Production
company
Distributed bysee below
Release date
  • 2 October 2025
Running time
186 minutes[1][2]
CountryIndia
LanguageKannada
Budget₹125 crore[3][4]
Box office₹90 crores[5]