Thursday, October 02, 2025

இட்லிக்கடை (2025) - தமிழ் - சினிமா விமர்சனம் (பேமிலி டிராமா)

                      

 இதுவரை தனுஷ்  டைரக்ட் செய்த படங்கள்    பவர் பாண்டி (2017)    பேமிலி  ஆடியன்ஸைக்கவர்ந்த ஹிட் , ராயன் (2024)  ஆக்சன்  ரசிகர்களைக்கவர்ந்த  ஹிட் , நிலவுக்கு என் மேல்  என்னடி கோபம் (2025)  ரொமாண்டிக் டிராமா ஓடவில்லை .நான்காவது  படம் தான் இது    


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனின்  , அம்மாவும் அப்பாவும்  ஒரு கிராமத்தில்  இட்லிக்கடை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள் . கேட் டரிங்க் டெக்னாலஜி படித்த நாயகன்  படிப்பை   முடித்த ;பின்  இதே போல்  இட்லிக்கடைகளை பல ஊர்களில் கிளைகள் தொடங்கலாம் என சொல்ல அப்பா அதற்கு ஒத்து க்கொள்ளவில்லை . இதனால்  அப்பாவுடன் கருத்து வேற்றுமை  கொண்ட  நாயகன்  வெளி நாடு போய்   ஒரு கம்பெனியில்  நல்ல வேலை யில்  சேர்கிறான் .அங்கே  கம்பெனி   ஓனர்  பெண்ணையும் கரெக்ட்  பண்ணி  திருமணம்  செய்ய இருக்கும் தருணம்  நாயகனின்  சொந்த ஊருக்கு  வரவேண்டிய தேவை ஏற்படுகிறது . அப்படி   வந்த   பின்   நாயகன்  வாழ்வில் ஏற்படும் திருப்பங்களே மீதி திரைக்கதை 

நாயகன்  ஆக   தனுஷ்  கச்சிதமான   நடிப்பு . அப்பாவை நினைத்து  உருகும் காட்சிகள்  செம . சின்ன வயசு   கெட் டப் ,பாரீன்  கெட் டப்  , மிராமத்து  கெட் டப்  என  அனைத்திலும்  கச்சிதமாகப்பொருந்துகிறார் 


 நாயகி ஆக  நித்யா மேனன் . தலைவன்  தலைவி   யில் புரோ ட்டா   கடை  மாஸ்ட்ரிடம்  விழுந்தவர்  இதில் இட்லிக்கடை  ஓனரிடம்  விழுந்துவிட் டாரா ? என்ற  கமெண்ட்கள்  தியேட் டரில்  எழுந்தது  ரசிக்க வைத்தது .அவரது நடிப்பு   பாந்தம் \


 அப்பாவாக  ராஜ்கிரண் , அம்மாவாக கீதா கைலாசம்  இருவரின் குணச்சித்திர  நடிப்பு  அருமை 


வருங்கால  மாமனார் ஆக சத்யராஜ்  நடிப்பில் கொஞ்சம்   செயற்கைத்தன்மை , அவரது மகளாக  ஷாலினிபாண்டே  கவனம் ஈர்க்கவில்லை . வில்லன் ஆக  அருண்  விஜய் நடிப்பு   நன்றாக   இருந்தாலும் அவரது கேரக்ட்டர்  டிசைன்  எரிச்சல் ஊட்டுகிறது .. இளவரசுவின் நடிப்பு டாப் க்ளாஸ் .சமுத்திரக்கனி யின் வில்லத்தனம் எடுபடவில்லை . இரா பார்த்திபன் தேவை இல்லாத ஆணி 


 இசை  ஜி வி  பிரகாஷ் . 2 பாடல்கள்  சூப்பர் ஹிட் ஆகி இருப்பது  கண்கூடு .பின்னணி    இசை  ஓகே ரகம் 

கிரண்  கவுசிக்கின் ஒளிப்பதிவு  கச்சிதம் பிரசன்னாவின்  எடிட்டிங்கில் படம் இரண்டரை  மணி நேரம் ஓடுகிறது . இரண்டு மணி நேரமாக ட்ரிம் பண்ணி இருக்கலாம் 


சபாஷ்  டைரக்டர்


1   நாயகனே  இயக்குனராக  இருந்தும் ஹீரோ  பில்டப்  சீன்களோ பஞ்ச்   டயலாக்கோ வைக்காதது 


2 கன்றுக்குட்டி  நாயகன் அருகில்  வந்து நிற்கும்போது  ஏற்படும்  பாசப்பிணைப்பு  கிளாசிக் ரகம் 


2  என்ன சுகம்  பாட்டும் பிஜிஎம்மும் செம 


4  பவர்  பாண்டி , படத்துக்குப்பின்  ராஜ்கிரண்  _ தனுஷ்  காம்போ  குட் , தவமாய் தவமிருந்து படத்துக்குப்பின்  ராஜ்கிரணின்  குணச்சித்திர நடிப்பு   அருமை 


5   படத்தில்  இரு  நாயகிகள்  இருந்தும்  இருவரையும்  கண்ணியமான உடையில்  காட்டிய விதம்  குட் 


6   சொந்த ஊரை  விட்டு  வெளியூர்  வந்து  வேலை செய்பவர்கள் தான் இங்கே பலர்  ., அவர்கள் அனைவருக்கும் ஒரு எமோஷனல் கனெக்ட்டைக் கொடுக்கும்  

7  ஜி வி  பிரகாஷின்  பின்னணி  இசை   உயிர்ப்புடன்  இருப்பது  பிளஸ் .பாடல் களுக்கான இசையும் அருமை 


8 இளவரசு  வின் கேரக்ட்டர்  டிசைன் , அவரது  நடிப்பு  இரண்டும் அற்புதம் 

9 என் சாமி   வந்தானே  பாடல் ,நடனம்  அருமை ,என்ன  சுகம்  என்ன  சுகம்   செம ஹிட் மெலோடி 


  ரசித்த  வசனங்கள் 


1  அப்பா,அம்மா  உயிரோட  இருக்கும்போதே  அவங்க கூட சந்தோஷமான தருணங்களை செலவழிச்சு அவங்களை எப்படி பத்திரமா பார்த்துக்கணுமோ அப்படிப்பார்த்துக்குங்க , செத்துப்போனதுக்குப்பின் கொண்டாடி எந்தப்பிரயோஜனமும் கிடையாது 


2   அஹிம்சை  தான்  தலை  சிறந்த ஆயுதம் 


3  ஒரு சண்டை நடக்குதுன்னா கத்தி யைத்தூக்கி வீசுபவன் வீரன் கிடையாது , பொறுத்துக்கிட்டு அந்த இடத்தை விட்டு மூவ் பண்ணிப்போறான் பார்த்தியா அவன் தான்  வீரன்


4  வெளியூர்க்காரனும் என்னை அடிச்சுத்துரத்தறான் , உள்ளூர்க்காரன்  நீயும்  என்னை விரட்டினா நான் எங்கே போக ?

5  எந்த  வேலையா  இருந்தாலும் மனசுக்குப்பிடிச்சு  செய்யணும் 


 6  சண்டை  போடறதால எந்தப்பிரச்சனையும் தீர்ந்துடாது 

7  அப்பா , அம்மாவைப்பார்த்துக்காத   எந்தப்பிள்ளையும்   ஊதாரிதான் 

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 

1   முதல் பாதி அளவு  பின் பாதி   திரைக்கதை  வேகம்  இல்லை 

2  ஒரு மல்ட்டி  மில்லியனர்  பெண்ணை  ஒருவன்  வேண்டாம் என்றால்  அடுத்த   மாப்பிள்ளையைப்பார்த்துக்கட் டி வைக்காமல்  வெளிநாட்டில்  இருந்து  கிராமத்துக்கு ஆள்   அனுப்பி  மாப்பிள்ளையை  மனம் மாற்ற  நினைப்பது சினிமாத்தனம் 

3  நாயகன்   வெளிநாட்டில்  இருந்து  சொந்த ஊர் வந்த பின்  என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதில் யூகிக்க முடிகிற திரைக்கதை  பலவீனம்


4  நாயகனின்  வாழ்க்கைத்த்ட்ராம் உயர்ந்த பின்பும் கிராமத்து வீடடை அவர் புதுப்பிக்கவும் இல்லை, எதுவும் செய்யவும் இல்லை  


5 நாயகனின்  கேரக்ட்டர்  டிசைன் சரி இல்லை . தனது  சுய  நலத்துக்காக  திருமணத்தை  நிறுத்துவது , பெண்ணின் வாழ்க்கை யைக்கேள்விக்குறி ஆக்குவது   எந்த  வகையில் நியாயம் ? 9வது  படிக்கும்போது பழகிய  கேர்ள்  பிரண்டை  அம்போ என விட்டு விட்டு  பாரீன் போய் விடுகிறார் 

6  இட்லிக்கடை  என்பதே  சரி .டைட்டிலில்  நியூமராலஜிபடி  தமிழைக்கொன்று விட் டார்கள் 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -க்ளீன் யு  


சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் - எமோஷனல் கனெக்ட்  தரக்கூடிய  பிரமாதமான   முதல் பாதி ,  நாடகத்தனமான  பின் பாதி  தனுஷ்  ரசிகர்களை மட்டுமல்ல ,பேமிலி ஆடியன்ஸையும்  கவரக்கூடிய  படம் , பி , சி  செண்ட்டர்களில் ஹிட் அடிக்கும் .விகடன் மார்க் யூகம் 43  ., ரேட்டிங்க்  3 / 5 


dly Kadai
Theatrical release poster
Directed byDhanush
Written byDhanush
Produced byAakash Baskaran
Dhanush
Starring
  • Dhanush
CinematographyKiran Koushik
Edited byPrasanna GK
Music byG. V. Prakash Kumar
Production
companies
Wunderbar Films
Dawn Pictures
Distributed byRed Giant Movies
Release date
  • 1 October 2025
Running time
147 minutes[1]
CountryIndia
LanguageTamil

0 comments: