ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லனின் தாத்தா ஒரு மகாராஜா . நாயகனின் தாத்தா ஒரு பழங்குடி இனத்தவர் . காந்தாரா என்ற இடத்தில் நாயகனின் பூர்விக மக்கள் வாழ்கிறார்கள் .வில்லனின் தாத்தா காந்தாரா பகுதியைக்கொள்ளை அடித்துக்கைப்பற்ற நினைக்கிறார் .ஆனால் முடியவில்லை .தெய்வீக சக்தியின் துணையுடன் நாயகனின் தாத்தா அவர்களை துரத்தி அடிக்கிறார்
2 தலைமுறைக்குப்பிறகு வில்லன் மீண்டும் காந்தாரா பகுதிக்கு வருகிறான் .நாயகன் அவனை எதிர்க்கிறான் .. இதற்குப்பின் என்ன நடந்தது என்பது மீதி திரைக்கதை
.நாயகன் ஆக ரிஷப் ஷெட்டி ஆக்ரோஷமான நடிப்பு . முதல் பாதியில் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல ஜாலியான ,கலகலப்பான நடிப்பு . பின் பாதியில் ஆக்ரோஷமான வீர நடிப்பு . கை தட்டல் அள்ளுகிறது
நாயகி ஆக வில்லனின் தங்கை ஆக ருக்மினி நளினம் ,அழகு .க்ளைமாக்சில் அவர் வில்லியாக மாறுவதுஅருமை
வில்லன் ஆக குல்ஷன் தேவய்யா மிரட் டலான நடிப்பு . உடல் மொழி அபாரம் .ஆரம்பத்தில் குடிகாரன் , கோமாளி போல சித்தரிக்கப்படுபவர் கொடூரமான வில்லனாக அவதாரம் எடுப்பது செம
வில்லனின் அப்பாவாக ஜெயராம் வில்லன் , வில்லனின் அப்பா இருவரையும் காட்டும் விதம் , அவர்களுக்கு இடையேயான வசனங்கள் டாக்டர் ராமதாஸ் , அன்புமணி மோதல் போலவே இருப்பது எதேச்சை யானதா? திட் டமிட் ட செயலா?தெரியவில்லை
பி அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை அபாரம் அர்விந்த் காஷ்யப்பின் ஒளிப்பதிவு கலக்கல் ரகம் சுரேஷ் மல்லையாவின் எடிட்டிங்கில் படம் 168 நிமிடங்கள் ஓடுகிறது .முதல் பாதியில் 30 நிமிடங்கள் ட்ரிம் பண்ணி இருக்கலாம், போர் அடிக்கிறது விஷுவல் எபெக்ட்ஸ் தான் உயிர் நாடி .பிரம்மிக்க வைக்கிறது
எழுதி இயக்கி இருப்பவர் ரிஷப் ஷெட்டி
சபாஷ் டைரக்டர்
1 ஒவ்வொரு சீனிலும் பிரம்மாண்டம் காட்டி இருப்பது அருமை
2 முதல் பாதியில் ஏனோ தானோ என எழுதப்பட்ட வில்லன் , நாயகி இருவரின் கேரகடர் டிசைன் பின் பாதியில் விஸ்வரூபம் எடுத்து நிற்பது அருமை
3 நாயகனின் க்ளைமாக்ஸ் அவதாரம் அற்புதம் .
4 ஒளிப்பதிவு , பிஜிஎம் ,ஆக்சன் ஸீக்வன்ஸ் , சி ஜி ஒர்க்ஸ் செம
5 தேர் ஓடி வரும் சீன் , புலி வரும் சீன்கள் , க்ளைமாக்ஸ் கலக்கல் ரகம்
ரசித்த வசனங்கள்
1 வெளிச்சமா இருக்கே-னு மின்மினி பின்னால போய்டாதீங்க , தொலைஞ்சு போயிடுவீங்க
2 நாங்க தொட் டதை எல்லாம் உங்களால ஏத்துக்க முடியலைன்னா , நீங்க நிறைய இழக்க வேண்டி வரும்
3 ஏன்னா மூலிகை இது , சிறைக்கதவே திறந்த மாதிரி இருக்கு ?
அய்யா, ஏற்கனவே சிறைக்கதவு திறந்து தான் இருக்கு
4 தேனீக்கு இன்னைக்கு நான் தான் தீனியா?
5 டியர், அங்கே நமக்கு வசதியா இருக்காது
உயிருக்குப்போராடிட்டு இருக்கேன் ,உற்சாகம் கேட்குதோ ?
6 வீட்டுக்குப்போனதும் ஜெயந்தியைப்பார்த்தாப்போதும்
அவங்க தன நம்ம வீட்டம்மாவா?
இல்ல , அவங்க அமாவாசைல வந்த பவுர்ணமி
7 புலி நம்மை எங்கே கூட்டிட்டுப்போகுது ?
அதனோட வீட்டுக்கு நம்மை சாப்பிடக்கூட்டிட்டுப்போகுதுன்னு நினைக்கிறேன்
8 நாம தெய்வத்தை நம்பி வாழ்ந்துட்டு இருக்கோம்னா அவங்க அதே தெய்வத்தைக்கட்டுப்படுத்தி வாழ் ஆசைப் படறாங்க
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 சாண்டில்யன் , நாவல் ஸ்டைல் , அம்புலிமாமா கதை பேட் டர்ன் தான் முதல் பாதி முழுக்க .ஹீரோவின் வீர சாகரசம் எல்லாம் ஓவரா ஓவர்
2 வில்லன் தன தங்கை நாயகனுடன் நெருக்கமாக பழகுவது தெரிந்தும் கண்டு கொள்ளாமல் இருப்பது எப்படி ?
3 நாயகன் வில்லனின் ஏரியாவில் நுழைந்து அசால்ட் ஆக துறைமுகத்தைக்கைப்பற்றுவது நம்பும்படியில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - விஷூவல் ட்ரீட்டுக்காக ஹாலிவுட் ஸ் டைல் மேக்கிங்க்காக ,தொழில் நுட்ப அம்சங்களுக்காகப்பார்க்கலாம் . ரேட்டிங்க் 3.5 .5
0 comments:
Post a Comment