சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கராவிடம் அசிஸ்டெண்ட் டைரக்டர் ஆகப்பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் அறிமுக இயக்குனர் ஆக தன் முதல் வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்
ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஜாதி வெறி பிடித்த பிற்போக்குவாதி.வேறு ஜாதிப்பையனை காதலித்ததற்காக தன் தங்கையையே கொலை செய்த ஆணவக்கொலையாளி.இப்போது ஆளும் கட்சி அமைச்சர்.வில்லனின் மகள் தான் நாயகி.நாயகனின் தாய் மாமா தான் வில்லன்
நாயகி தன் முறை மாமனான நாயகனிடம் தன் காதலை வெளிப்படுத்துகிறார்.அப்போது நாயகன் எனக்கு உன் மேல் காதல் இல்லை என நிராகரித்து விடுகிறார்.விரக்தியில் நாயகி வெளியூர் போய் விடுகிறார்
நாயகியைப்பிரிந்த காலத்தில் தான் நாயகனுக்கு நாயகி மீது இருந்த உள்ளார்ந்த காதல் புரிகிறது.நாயகியின் அப்பாவிடம் திருமணத்துக்கு ஓக்கே சொல்கிறார்
வெளியூரிலிருந்து திரும்பிய நாயகி ஒரு குண்டைத்தூக்கிப்போடுகிறார்.இப்போது நாயகி வேறு ஒரு நபரைக்காதலிக்கிறார்.அவன் வேற ஜாதி
விஷயம் வெளியே தெரிந்தால் நாயகி வில்லனால் கொல்லப்படுவார் என்பதால் நாயகன் ஒரு திட்டம் தீட்டுகிறார்.அது ஒர்க் அவுட் ஆனது என்பதே மீதி திரைக்கதை.
நாயகன் ஆக பிரதீப் ரங்கநாதன் அட்டகாசமாக நடித்திருக்கிறார்.இவர் செய்யும் சேஷ்டைகளுக்கு,மேனரிசஙகளுக்கு தியேட்டரில் அப்படி ஒரு கை தட்டல்.
பிரபுதேவாவின் உடல் மொழி,அங்க சேஷ்டைகள்,தனுஷ பாணி நடிப்பு இந்த இரண்டும் கலந்த கலவைதான் பிரதீப்.தலைமுடியை சீவாத பரட்டைத்தலையில் ஒரு ரஜினியிசம் என பிரதீப் ஒரு புது வித ஸ்டைலை இக்கால இளைஞர்களைக்கவர ஆரம்பித்து விட்டார்.
இவர் ஒரு தியாகி ஆக மாறுவது, பெண்மைக்கு ஆதரவாகப்பேசும் வசனஙகள் யுவதிகளை அதிகம் ஈர்க்கிறது
நாயகி ஆக மம்தா பைஜூ அருமையான நடிப்பு.நாயகன் தன்னை ஏற்கவில்லை என்றதும் அவர் காட்டும் சோகம் அருமை.பல காட்சிகளில் அவரது புன்னகையும் ,கண்களுமே நம்மைக்கவர்ந்து விடுகிறது.இவரது நடன அசைவுகளும் ரசிக்கும்படி இருக்கின்றன
ஷாக் சர்ப்பரைஸ் வில்லனாக நடித்த சரத்குமார்.ஏய்,சாணக்யா படஙகளுக்குப்பின் காமெடி செய்ய நல்ல வாய்ப்பு.வில்லத்தனத்திலும் மிரட்டி விட்டார்.எப்போ காமெடி செய்வார்?எப்போ வில்லத்தனம் செய்வார் என யூகிக்க முடியாத பிரமாதமான கேரக்டர் டிசைன் இவருடையது.
நாயகனின் அம்மாவாக ரோகினி ரகுவரன் கச்சிதம்.நாயகியின் காதலனாக ஹிர்து ஹாருன் ,நாயகனின் நண்பனாக வரும் டிராவிட் செல்வம் ,நாயகனின் முதல் காதலி ஆக வரும் நேகா ஷெட்டி ,மற்ற அனைத்துக்கேரக்டர்களும் அவர்களுக்குத்தந்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்
சாய் அபயஙகர் இசையில் 4 பாடல்கள்.2 செம ஹிட்டு.நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவு கண்களுக்குக்குளிர்ச்சி.பரத் விக்ரமன் எடிட்டிஙகில் படம் 139 நிமிடஙகள் ஓடுகிறது
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் கீர்த்தீஸ்வரன்
சபாஷ் டைரக்டர்
1
ஆணவக்கொலை என்பது கிராமியப்படஙகளில் தான் இதுவரை இருந்தது.முதல் முறையாக நகரக்கதையில் காட்டி இருப்பது புதுசு
2
மெயின் கதையையோ ,திரைக்கதை திருப்பஙகளையோ காட்டாதபடி ட்ரெய்லர் ரிலீஸ் செய்த லாவகம் அருமை
3
சரத் குமாரின் கேரக்டர் டிசைன்,நடிப்பு இரண்டுமே கலக்கல் ரகம்
4 காதலன் ஒரு தியாகி அதுவும் ஓவர்டோஸ் தியாகி என்பதை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சொன்னது
5 நடிகர் சந்திரபாபுவின் சொந்த வாழ்வில் நடந்த சம்பவம் + கே பாக்யராஜின் அந்த 7 நாட்கள்ப்படத்தின் உல்டா வெர்சனை ரெடி செய்த விதம்
6. நாயகன்,நாயகி இருவரின் நடிப்பு ,,கெமிஸ்ட்ரி
ரசித்த வசனங்கள்
1. தாலியைக்கழட்டினது தப்புத்தான்,அதுக்காகப்பொண்ணு மேல கை வைக்கிறது அதை விடப்பெரிய தப்பு
2
தாலியை விட தாலிக்குப்பின்னால் இருக்கும் பொண்ணோட மனசு தான் முக்கியம்
3
ஒரு பொண்ணுக்குப்பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்.அதுக்குக்காரணம் எல்லாம் தேவை இல்லை
4 இந்த உடம்பை வெச்சு அடிதடில இறஙகறே?உன்னால 10 பேரை அடிக்க முடியுமா?
100 பேர் வந்தாலும் அடி வாங்க முடியும்
5 ஜாலியா பண்ணினாதான் அது வேலை,இல்லைன்னா அது சுமை
6 சாகறதுக்கு முன்னால வாழ்க்கையோட பெஸ்ட் தருணங்கள் கண் முன் வந்துட்டுப்போகும்னு சொல்வாங்க,எனக்கு அவ முகம் தான் கண் முன் வந்தது
7 பிரண்டை லவ் பண்றது தப்பில்லையா?
பிரண்ட்சிப் தான் லவ்வு
8
நான் வல்கர் இல்லை.இந்த சொசைட்டி தான் வல்கர்
9 என் மேல பீலிங்க்சே இல்லைன்னு
அன்னைக்கு நீ சொன்னப்ப வலிச்சது.இன்னைக்கு அதுவே சுகமா இருக்குது
ஆனா எனக்கு வலிக்குது
10 நீ வாழ்க்கையை லெப்ட் ஹேண்ட் ல டீல் பண்ணினா வாழ்க்கையும் உன்னை லெப்ட் ஹேண்ட்ல டீல் பண்ணும்
11. அடுத்தவங்க பீலிங்கை கிரிஞ்ச் ஆகப்பார்ப்பதுதான் இப்ப உள்ள ட்ரெண்டே
12. உனக்கு முன்னால 100 பெண்கள் என் வாழ்வில் இருந்திருக்கலாம்.ஆனால் உனக்குப்பின் ஒரு பொண்ணு...ம்ஹூம் நோ
மேன்
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 கதைக்கரு கே பாக்யராஜின் அந்த ஏழு நாட்கள் படத்துடையதுதான்.(அதன் உல்டா வெர்சன்) அதே போல பூவே உனக்காக ,ஷாஜகான்,பிரியாத வரம் வேண்டும் ,குட்டி, போன்ற படஙகளை ஆங்காஙகே நினைவுபடுத்துகிறது
2 முதல் பாதியில் இருந்த ஜனரஞசகமான காட்சிகள் பின் பாதியில் இல்லை
3 சின்ன வயதில் இருந்தே 18 வருடங்களாக காதலித்த மாமன் மகனை அவன் நோ சொன்னதும் 6 மாத கேப்லயே இன்னொருவனை லவ் பண்ணும் நாயகியின் கேரக்டர் டிசைனில் குழப்பம்
4 நாயகன் தன் மாமா பெண் மீது கொண்ட காதலை ஒரு தருணத்தில் உணர்கிறான்.அப்போ வேறு ஒரு பெண்ணை எப்படி காதலித்தான்?
5. வில்லன் மனம் மாறுவது நம்பும்படி இல்லை
6 வெளியூரில் காதலனுடன் இருந்த நாயகி அப்பா அழைத்ததும் இங்கே வந்து ஏன் மாட்டிக்கனும்?
7 நாயகன் தன் அம்மாவிடம் உண்மை சொல்லாதது ஏன்?
8 அமைச்சர் வீட்டு விசேஷத்துக்கு அனைத்து மாநில அமைச்சர்களும் வருகிறார்கள்,ஆனால் போலீஸ் பாதுகாப்பே இல்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்:- 18+ ( டபுள் மீனிங் வசனஙகள்)
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - 30 கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து முதல் 5 நாட்களில் 83 கோடி வசூல் செய்து விட்டது.2 கே கிட்ஸ் கொண்டாடுவார்கள்.90s கிட்ஸ் சால் ஜீரணிக்க முடியாது.இது ஜனரஞசகமான வெற்றிப்படம்.ரேட்டிங்க் 3/5.விகடன் மார்க் யூகம் 45
| Dude | |
|---|---|
![]() Theatrical release poster | |
| Directed by | Keerthiswaran |
| Written by | Keerthiswaran |
| Produced by | Naveen Yerneni Y. Ravi Shankar |
| Starring | |
| Cinematography | Niketh Bommi |
| Edited by | Barath Vikraman |
| Music by | Sai Abhyankkar |
Production company | |
| Distributed by | see below |
Release date |
|
Running time | 139 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
| Budget | ₹30 crore[2] |
| Box office | ₹83 crore[citati |
.jpg)
