Showing posts with label SEARCH THE NAINA MURDER CASE (2025)-ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts
Showing posts with label SEARCH THE NAINA MURDER CASE (2025)-ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம். Show all posts

Thursday, October 23, 2025

SEARCH THE NAINA MURDER CASE (2025)-ஹிந்தி /தமிழ் - வெப் சீரிஸ் விமர்சனம் (க்ரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லர்) @ ஜியோ ஹாட் ஸ்டார்

       


                    

மொத்தம் 6 எபிசோடுகள்.ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரை,ஆக மொத்தம் மூன்றரை மணி நேரம் இருந்தால் ஒரே சிட்டிங்கில் பார்த்து விடலாம்.

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து கற்பனை கலந்து அமைக்கப்பட்ட திரைக்கதை என்று டைட்டிலில் போடுகிறார்கள்.ஜியோ ஹாட் ஸ்டாரில் தமிழ் டப்பிங்கிலும் கிடைக்கிறது.குடும்பத்துடன் பார்க்கத்தக்க 16+  வெப் சீரிஸ் தான்

ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி ஒரு டீன் ஏஜ் பொண்ணு.காலேஜில் படிக்கிறாள்.இவளுக்கு ஒரு முன்னாள் காதலன் உண்டு.அவனுடன் பிரேக்கப் ஆகி விட்டது.குளிர் பானத்தில் போதை மருந்து கலந்து அத்துமீறப்பார்த்ததால் பிரேக்கப் .


நாயகிக்கு புதியதாக ஒரு பாய் பிரண்டு கிடைத்திருக்கிறான்.அவன் திருமணம் ஆனவன்.


நாயகியை ஒரு தலையாய் காதலித்த ஒரு தறுதலை இருக்கிறான்

இவ்ளோ டிமாண்ட் உள்ள நாயகி கொலை செய்யப்பட்டு  ஒரு பிரபல அரசியல் தலைவருக்கு சொந்தமான காரில் பிணமாக ஒரு  நீர் நிலையில் கண்டெடுக்கப்படுகிறாள்

அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆன ஒரு சீனியர் லேடி ஆபீசர்,ஒரு ஜூனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர் இருவரும் இணைந்து இந்தக்கேசை துப்பு துலக்குவதுதான் மீதி திரைக்கதை

சபாஷ்  டைரக்டர்(ரோஹன் சிப்பி ) 

1. லேடி போலீஸ் ஆபீசர் ஆக வரும் கொன்கொனா சென் சர்மா   நடிப்பு செம கலக்கல்.அவரது காஸ்ட்யூம் கூட அருமை.முழுதாகக்கவர்  செய்யப்பட்ட உடைகள் மரியாதை அளிக்கும்  தோற்றம்.அவரது உடல் மொழியும் அருமை,ஜூனியர் அசிஸ்டெண்ட் கமிஷனர்  ஆக வரும் சூரியா சர்மா  நடிப்பு கன  கச்சிதம் 

2. அரசியல் தலைவர் ஆக வருபவர் லீலை படத்தின் நாயகன் சிவ பண்டிட் .நல்ல நடிப்பு

3 அரசியல் தலைவரின் கீப் ஆக வருபவர் ஷ்ரத்தா  தாஸ் முதல் காட்சியிலேயே இடை அழகு மிளிர "ஹிப்" நாடிசம் செய்கிறார்.க்ளைமாக்சுக்கு கொஞ்சம் முன் கிளாமர் டிரசில் அவர் யோகா செய்வது பிளட் பிரசரை எகிற வைக்கிறது

4. பின்னணி இசை அருமை.பல பரபரப்பான  சீன்களில் பிஜி எம் கலக்கல் ரகம்.ஒளிப்பதிவு ,எடிட்டிங் போன்ற டெக்னிக்கல் அம்சங்கள் பிரமாதம்

5 யூத் சம்பந்தப்பட்ட சீன்கள் அதிகம் இருந்தும் 18+ சீன்கள் வைக்காமல் குடும்பத்துடன் பார்க்க வைக்கும் தரமான ,கண்ணியமான நெறியாள்கை அருமை


திரைக்கதை  - ராதிகா & ஸ்ரேயா 

  ரசித்த  வசனங்கள் (ராதிகா ஆனந்த் )


1. ஆண்கள் தான் இருட்டைப்பார்த்து பயப்படுவாங்க,பெண்களுக்கு ஆண்களைப்பார்த்தால் தான் பயம்


2. இன்வெஷடிகேஷன் ல துப்பாக்கியை விட நான் என் மூளையைத்தான் அதிகம் உபயோகிப்பேன்

3. அரசியல்வாதிகள் எவ்ளோ சுத்தமா இருந்தாலும் மக்கள் அவஙகளை சந்தேகமாத்தான் பார்ப்பாங்க

4. இன்வெஸ்டிகேஷன் ல முதல் விதி யாருக்கும் பொய்யான வாக்குறுதி தரக்கூடாது

5. யாரோட வாழ்க்கைலயும் நாம் ஹீரோ கிடையாது

6. ஒரு இடத்துல  அரசியல் நுழைந்து விட்டால் அங்கே ட்ராஜடி தவிர்க்க முடியாதது ஆகி விடும்

7 அவனை நம்பக்கூடாது.தேவைப்பட்டா அவன் அப்பாவைக்கூட கழுதையா மாத்திடுவான்

8 ஸ்மார்ட்டான பிள்ளைங்க அவஙக அம்மா,அப்பா செஞ்ச தப்பைப்பண்ண மாட்டாங்க

9. லவ் பெய்லியர் ஆனவன் அடிபட்ட பாம்பு மாதிரி,எப்போ கொத்தும்னு சொல்ல முடியாது.

10 லாபம் இல்லாத இடத்தில் இவன் காலே வைக்க மாட்டான்

11.  யூத்சை குறைச்சு எடை போடாதீங்க.சோசியல் மீடியாவில் அவஙக போடும் லைக்சும் ,கமெண்ட்சும்  அவஙக எதை விரும்பறாங்க என்பதைக்குறிக்கும்

12.  பாலிடிக்ஸ்க்கு பவர் முக்கியம்.இன்பர்மேசன் தான் பவர்

13.  எந்த ஸ்கேண்டலாவது ஒரு அரசியல் தலைவரைக்காலி பண்ணி இருக்கா?அப்டி இருந்தா இந்தியாவில் தலைவர்களே இருந்திருக்க மாட்டாங்க

14. என்னை சின்னப்பொண்ணு மாதிரி ட்ரீட் பண்றீஙக

ஆம்,ஏன்னா நீ சின்னப்பொண்ணு தான்

15. மத்தவங்களுக்கு உதவும் முன் நம்மை முதலில் பார்த்துக்கனும்

16.  நாம என்ன பேசறோம்?என்ன பண்றோம்கறதை மனுசன் மறந்துடுவான்.ஆனா இண்ட்டர்நெட் மறக்காது


17 இந்த உலகத்துலயே ஆபத்தானது  ஒன்சைடு லவ் தான்

18 பொண்ணுங்க பாதுகாப்பா இருக்கக்கத்துக்கொடுப்பாஙக ,ஆனா பசஙகளுக்கு?

19 துப்பாக்கிக்குண்டுக்கு இவன் குற்றவாளியா? அப்பாவியா? என்பது தெரியாது

 லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1. மெயின் கதைக்கு சம்பந்தமே இல்லாமல் லேடி போலீஸ் ஆபீசர் டீன் ஏஜ் மகள் சொல் பேச்சுக்கேட்காத சுந்தரி ஆக இருப்பது ,கணவருடன் அடிக்கடி நடக்கும் கான்வெர்சேஷன்,குடும்பப்பிரச்சனைகள் சுவராஸ்யமாக சொல்லப்பட்டிருந்தாலும்  இழுவை.தயவு தாட்சண்யம் இல்லாமல் அதை ட்ரிம் பண்ணி இருந்தால்  1 மணி நேரம் மிச்சம்


2 இரு போலீஸ் ஆபீசருக்கும் இடையே நிகழுன் ஈகோ கிளாஸ் செம இண்ட் ரஸ்ட் தான்.ஆனால் மெயின் கதைக்கு அதுவும் தேவை இல்லை


3.  அரசியல் தலைவரின் கீப் ஆக வருபவர்  நண்பர் முன் அரை குறை உடையுடன் யோகா செய்வதும் ,சகஜமாக உரையாடுவதும் எப்படி,?

4. அரசியல் தலைவர் முதல் சீனிலிருந்தே கடு கடு முகத்துடன் தான் இருக்கிறார்.கீப் முகத்தில் தான் காதல் பொங்கி வழிகிறது.கீப்க்கு டவுட் வராதா?

5. நாயகி கொலை செய்யப்படுகிறார் என்பதைக்காட்டும்போது அவரைப்பற்றிய குறைந்த பட்ச விபரங்களாவது ஆடியன்சுக்கு தெரிய வேண்டாமா?.அவ்வப்போது பிளாஸ்பேக் மூலம் சொல்வது மிகக்குறைவு.இன்னமும் விளக்கம் தேவை


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -16+



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  க்ரைம் த்ரில்லர்  ரசிகர்கள் , க்ரைம்  இன்வெஸ்டிகேஷன் திரில்லர் ரசிகர்களுக்குப்பிடிக்கும்  ,ரேட்டிங்க் 3/5