இயக்குனர் மாரி செல்வராஜ் தனது முதல் படமான பரிஏறும் பெருமாள் (2018) மூலம் அனைவரையும் கவனிக்க வைத்தார் . கர்ணன் (2021) கமர்ஷியலாகவும் வெற்றி கண்டது மாமன்னன் (2023) விமர்சகர்களால் பாராட்டு மழையில் நனைந்த படம் , வாழை (2024) விமர்சகர்களாலும் , மக்களாலும் கொண்டாடப்பட் ட படம் .இது இவரது 5 வது படம்
சீயான் விக்ரம் -ன் மகன் ஆன த்ருவ் விக்ரம் பாலாவின் இயக்கத்தில் நடித்த முதல் படம் ஆதித்ய வர்மா(2019) வெளியாகவே இல்லை .இரண்டாம் படம் வர்மா (2020) ஓடவில்லை , 3ம் படம் மகான் (2022) டப்பாப்படம் .இது அவருக்கு 4 ம் படம்
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் ஒரு கிராமத்தில் அப்பா,அக்காவுடன் வசித்து வருகிறான்.சின்ன வயசில் இருந்தே கபடி விளையாட்டில் அபரித ஆர்வம் கொண்டவன்.காரணம் அப்பா,தாத்தா எல்லோரும் கபடி வீரர்கள்
ஸ்கூல் படிக்கும்போது பி டி மாஸ்டர் நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்துகிறார்.ஊர்ப்பெரிய மனிதர்களுக்குள் நடக்கும் மோதல் ,கலவரம் ,தகறாரு இவை எல்லாவற்றையும் மீறி நாயகன் எப்படி இந்தியக்கபடி டீமில் சேர்ந்து ஜெயிக்கிறான் என்பதே மீதிக்கதை
நாயகன் ஆக துருவ் விக்ரம் நான்கு ஆண்டுகள் உழைப்பில் உருவான படமாம்.அப்பாவைப்போலவே கேரக்டருக்காகப்பிரமாதமாக உழைத்திருக்கிறார்.ஆனால் நடிப்பில் இன்னமும் மெருகு ஏற வேண்டும்.முந்தைய படமான வர்மா வை விட இதில் நல்ல முன்னேற்றம்
நாயகனின் அப்பாவாக பசுபதி.உணர்ச்சிப்பிழம்பான நடிப்பு.போலீசாரிடம் கெஞ்சும் காட்சியில் சிக்சர் அடிக்கிறார்
நாயகனின் அக்காவாக ரஜிசா விஜயன்,நாயகியாக வரும் அனுபமா பரமேஸ்வரன் இருவரும் சம அளவில் நடித்திருக்கிறார்கள்.
பி டி மாஸ்ட்ராக வரும் அருவி மதன் கேரக்டர் டிசைன் அருமை.அவருக்குப்பல இடஙகளில் கை தட்டல் கிடைத்தது.
ஊர்ப்பெரிய மனிதர்களாக வரும் அமீர் ,லால் இருவரும் பண்பட்ட நடிப்பு.
கெஸ்ட் ரோலில் வரும் அழகம் பெருமாள் , ரேகா நாயர் இருவரும் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையில் 5 பாடல்கள்.3 ஹிட் ஆகி விடும்.பின்னணி இசையிலும் முத்திரை பதிக்கிறார்.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு அபாரம்.கபடி மேட்ச்களில் கேமரா விளையாடுகிறது
சக்தி திருவின் எடிட்டிஙகில் படம். 168 நிமிடஙகள் ஓடுகிறது.இன்னமும் 15 நிமிடஙகள் ட்ரிம் பண்ணி இருக்கலாம்.
திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கி இருப்பவர் மாரி செல்வராஜ்
சபாஷ் டைரக்டர்
1 படம் போட்ட முதல் 20 நிமிடஙகளில் நம்மைக்கதையில் ஒன்ற வைத்து விடுகிறார்
2 1990 களில் நடந்த உண்மை சம்பவம் தான் கதை என்பதால் உண்மைக்கு நெருக்கமாக இருப்பது பெரிய பிளஸ்
3. கபடி மேட்ச்கள் படமாக்கப்பட்ட விதம் அருமை.
4 ஆர்ட் டைரக்சன் அபாரம் .1990 காலகட்டத்தைக்கண் முன் நிறுத்துகிறது
5 அமீருக்கு நடக்கும் இரண்டாம் கண்டம் பதை பதைக்க வைக்கும் காட்சி அமைப்பு
6 பி டி வாத்தியார் ,அமீர்,லால் மூவரின் கேரக்டர் டிசைனும்,அவர்களது நடிப்பும்
7 துருவ் விக்ரமின் அபார உழைப்பு,பசுபதியின் பண்பட்ட நடிப்பு
ரசித்த வசனங்கள்
1 இங்கே கத்தியை நாம எடுக்கிறோமா?காலம் நம்ம கைல எடுத்துத்தருதா? யாருக்கும் தெரியாது
2. சத்தியம் பண்றது என்பதே பிடிச்ச விஷயத்தைப்பண்ணியே ஆகணும்கறதுதான்
3. வாழ்க்கை பூரா பயத்தையும்,ஏக்கத்தையுமா கொடுப்பீங்க உங்க பையனுக்கு?
4 ஏதோ ஒரு நாள் தான் உங்களை அடிச்சாஙக.என்னை விரட்டி விரட்டி அடிச்சுட்டே இருக்காஙக
5. இங்கே என்ன பிரச்சனை என்பது முக்கியம் இல்லை,யாருக்கும் ,யாருக்கும் பிரச்சனை என்பது தான் முக்கியம்
6 கபடி என்பது மத்தவங்க கையைத்தட்டி விடற விளையாட்டு இல்லை.சக வீரர்கள் கையைப்பிடிச்சு ஆடற விளையாட்டு
7 நான் எப்போதுமே என் பகையை ஊர்ப்பகையா நினைச்சதில்லை
8 நாம பிறக்கறதுக்கு முன்னாடியே நம்ம அப்பா,தாத்தா பிறக்கும் முன்னாடியே நமக்காக ஒரு பழியும் ,பகையும் காத்துட்டு இருக்கும் என்பதை எப்படி புரிஞ்சுக்கறது?
9 வேலியை உடைச்சுட்டு ஓடறது ஒரு போராட்டம்னா நம்மைச்சுத்தி வேலியே போட முடியாதபடி இருப்பதும் ஒரு போராட்டம் தான்
10 வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு மரியாதையைக்கொடுத்திருக்கு.என் மரியாதையைக்காப்பாத்திக்கத்தான் சண்டை போட்டுட்டு இருக்கேன்
11. யார் மூலம் மேலே போனா என்ன? திறமையாலதான் மேலே வந்தான்
12. நான் எதுக்காகக்கத்தியைத்தூக்கினேன் என்பதையே மறந்துட்டு இவனுங்க வேற ஒண்ணு பண்ணிட்டு இருக்காஙக
13. குடும்பப்பெருமை,ஜாதிப்பெருமை பேசறவஙகளை முதல்ல அடிச்சு விரட்டனும்
14 எனக்கு எல்லாமே சீக்கிரமா கிடைச்சுடாதுனு தெரியாமலேயே
15 வீட்டுக்குத்தானே வந்திருக்கேன்? சுடுகாட்டுக்கு வர்லையே? எதுக்கு வந்தே?னு கேட்டா?
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1. நான் லீனியர் கட்டில் கதை சொன்ன விதம் தவறு.முதல் சீனிலேயே க்ளைமாக்சுக்கு முந்தின சீனில் ஓப்பன் செய்வதால் பல காட்சிகளை யூகிக்க முடிவது திரைக்கதையின் பலவீனம்
2 ஓவர் வன்முறைக்காட்சிகள்
3 படம் முழுக்க நாயகன் ஓடிக்கொண்டே இருப்பது அயர்ச்சியைத்தருகிறது.அவரை ரன்னிங ரேஸ் ஓடலையே?
4 துருவ் விக்ரம் சில காட்சிகளில் தேமே என்று இருப்பதைப்போல் தோன்றுகிறது.உடன் இருப்போர் (தங்கை,காதலி,அப்பா) ஆகியோர் உணர்ச்சிப்பிழம்பாக மாறும்போதும் இவர் அண்டர்ப்ளே ஆக்ட் செய்வது ஏன்?
5 பைசன் என ஆங்கிலத்தில் டைட்டில் வைத்து விட்டு எதிர்ப்பு வந்த பின் காளை மாடன் என்பதை சேர்த்தது
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங்-18+ வன்முறைக்காட்சிகள் அதிகம்
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஸ்போர்ட்ஸ் டிராமா ரசிகர்கள் ,மாரி செல்வராஜ் ரசிகர்கள் பார்க்கலாம்.அனைத்துத்தரப்பினரும் விரும்பிப்பார்க்கும் ஜனரஞசகப்படம் அல்ல.வன்முறை அதீதமாக இருக்கிறது.விகடன் மார்க் யூகம் 50.ரேட்டிங் 3/5
| Bison Kaalamaadan | |
|---|---|
![]() Theatrical release poster | |
| Directed by | Mari Selvaraj |
| Written by | Mari Selvaraj |
| Produced by | Sameer Nair Deepak Seigal Pa. Ranjith Aditi Anand |
| Starring | |
| Cinematography | Ezhil Arasu K. |
| Edited by | Sakthi Thiru |
| Music by | Nivas K. Prasanna |
Production companies | |
| Distributed by | Five Star Creations |
Release date |
|
Running time | 168 minutes[1] |
| Country | India |
| Language | Tamil |
| Box office | ₹36 crore[2] |
