ஸ்பாய்லர் அலெர்ட்
வில்லன் ஒரு முரடன் .சொந்தத் தங்கையையே முரட்டுத்தனமாக அடிப்பவன் .அவனது சுபாவம் தெரிந்தும் அவனது தங்கை ஸ்கூலில் சக மாணவனுடன் நெருக்கமாகப் பழகுகிறாள் . அது பிடிக்காத வில்லன் சகட்டுமேனிக்குத்தங்கையை அடித்து விடுகிறான் . வில்லனின் அம்மா, அப்பா வயதானவர்கள் என்பதால் அவனைக்கண்டிக்க முடியாமல் இருக்கிறார்கள் அந்த ஊரில் நாயகன் ஒரு போலீஸ் ஆபீசர் ஆக இருக்கிறார் .
மாணவர்களுக்கு போலீஸ் ஸ்டேஷனிலேயே மாடியில் டியூசன் எல்லாம் எடுக்கிறார் . அவருக்கு வில்லனின் விவகாரம் தெரிய வர அவனை ஸ்டேசன் வரவழைத்து அடித்து மிரட்டி அனுப்புகிறார் . அதற்குப்பின் வில்லனின் தங்கைக்கு பர்த்டே வருகிறது . அன்று வில்லனின் தங்கையை அவளது பாய் பிரெண்ட் வாழ்த்தி கேக் வெட்டி ஊட்டுகிறான் .அப்போது அங்கே வந்த வில்லன் இருவரையும் கண்டபடி தாக்கி விடுகிறான்
இதனால் செம கடுப்பான அந்த பாய் பிரண்ட் வில்லனை பழி வாங்கத்துடிக்கிறான் . வனத்தில் மிருகங்களைப்பிடிக்கப்பயன்படுத்தும் பொறி ஒன்றை வைத்து வில்லனைக்காயப்படுத்தத் திட்டம் போடுகிறான் .. ஆனால் விபரீதமாக வில்லன் கிணற்றில் விழுந்து விடுகிறான்
இதற்குப்பின் நிகழும் சம்பவங்கள் தான் மீதி திரைக்கதை
வில்லனுக்கு ஒரு காதலி உண்டு . அவளது வங்கிக்கணக்கில் 3 கோடி ரூபாய் பணம் வரவு வைக்கப்[பட்டு இருக்கிறது .அந்த ப்ணம் அனுப்பிய பெண் காணவில்லை
இந்த இரண்டு கேஸையும் நாயகன் எப்படி டீல் செய்கிறார் என்பது தான் பின் பாதித்திரைக்கதை
நாயகன் ஆக ஷைன் டாம் சாக்கோ நடித்திருக்கிறார் .முதல் பாதியில் அவர் போலீஸ் ஆபீசர் வேலையைக்கவனிக்காமல் ட்யூசன் எடுப்பது எல்லாம் ஓவரோ ஓவர் . அதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்குமா? அனுமதித்தாலும் அவருக்கு நேரம் இருக்குமா?
வில்லன் ஆக தீபக் பரம்போல் கச்சிதமான நடிப்பு .அவரது காதலியாக வரும் வின்சி ஆலோசியஸ் நடிப்பு ஓகே ரகம் , ஆனால் அவருக்கு நடிக்க அதிக வாய்ப்பில்லை
படத்தில் இரு க்ரைம்கள் நடந்தாலும் இரண்டும் ஆடியன்ஸுக்கு பெரிய கனெக்ட் டைக்கொடுக்கவில்லை .
வில்லனின் காதலிக்கு ஒரு டீன் ஏஜ் பெண் 3 கோடி கடன் கொடுப்பது எல்லாம் காதில் பூச்சுற்றல்
வில்லன் ஓங்கி ஒரே ஒரு அறை தான் கொடுக்கிறான் .அதிலேயே ஆள் அவுட் ஆவதும் நம்பும்படி இல்லை
இந்த படத்தில் பாடல்கள் பொறுமையை சோதிக்கின்றன .பின்னணி இசை பரவாயில்லை
திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் யூஜியன் ஜோஸ் சிரம்மேல்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - U
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - கேரளாவில் மலையாள ஆடியன்ஸ் கை தட் டி ரசித்துப்பார்த்தார்கள் . ஆனால் எனக்குப்பிடிக்கவில்லை . ரேட்டிங்க் 2 / 5
0 comments:
Post a Comment