ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகனின் அப்பாவும் , நாயகியின் அம்மாவும் முன்னாள் பள்ளித்தோழர்கள் .நீண்ட வருடங்களுக்குப்பிறகு இருவரும் குடும்பத்துடன் ( அவரவர் இணையுடன் ) சந்திக்கிறார்கள் .பிறகு நாயகனின் அம்மாவும்,நாயகியின் அம்மாவும் நெருங்கிய தோழிகள் ஆகி விடுகிறார்கள் . இருவரும் பரஸ்பரம் அவரவர் வாரிசு பற்றிப்பெருமையாகப்பேச நாம் என் சம்பந்தி ஆகக்கூடாது என யோசிக்கிறார்கள் .ஆனால் நம் வாரிசுகளுக்கு நம் திட் டம் தெரியக்கூடாது .அவர்கள் பார்வையில் அது லவ் மேரேஜாகவும் ., உண்மையில் அரேஞ்சுடு மேரேஜாகவும் இருக்க வேண்டும் என திட் டம் போடுகிறார்கள் .
ஆனால் நாயகன் , நாயகி இருவருக்கும் வேறு வேறு காதல் ஆல்ரெடி இருக்கிறது . இதற்குப்பின் நடக்கும் காமெடி கலா ட்டாக்கள் தான் மீதித்திரைக்கதை
நாயகன் ஆக ராஜு ஜெயமோகன் என்ற புதுமு கம் .இவர் பிக் பாஸ் அறிமுகமாம் . பிக் பாஸ் ஒரு சீ ட்டிங்க் புரோகிராம் , ஆல்ரெடி திரைக்கதை எழுதப்பட்டது என்ற கருணாஸின் பேட்டியைப்படித்த பின் நான் பிக் பாஸ் பார்ப்பதில்லை .இவருக்கு நடிப்பு சுமாராக வருகிறது .உடல் மொழியில் கவனம் தேவை
நாயகி ஆக பாவ்யா த்ரிகா நல்ல அழகு , நடிப்பும் ஓகே ரகம் . இன்னொரு நாயகி ஆக ஆதியா பிரசாத் மாடர்ன் கேர்ள் ஆக வருகிறார் . நாயகியை விட இவருக்குத்தான் வாய்ப்பு அதிகம்
நாயகனின் அம்மா, அப்பாவாக சரண்யா பொன்வண்ணன் , சார்லி இருவரும் நல்ல குணச்சித்திர நடிப்பு , அதிலும் சரண்யா பொன்வண்ணன் காமெடியில் கலக்குகிறார் . நாயகியின் அம்மாவாக வரும் தேவதர்ஷினியின் காமெடி நடிப்பும் அருமை
கெஸ்ட் ரோலில் விக்ராந்த் வருகிறார் . அவர் வரும் சீன்களில் ஓவர் பில்டப் , நாயகனின் நண்பர் ஆக மைக்கேல் தங்கதுரை கச்சிதம்
நிவாஸ் கே பிரசன்னா வின் இசையில் 3 பாடல்களுமே அருமை . பின்னணி இசை ஓகே ரகம் .பாபு குமாரின் ஒளிப்பதிவு பரவாயில்லை .ஜான் ஆபிரஹாமின் எடிட்டிங்கில் படம் 160 நிமிடங்கள் ஓடுகிறது திரைக்கதை எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர் ராகவ் மிர்தத்
சபாஷ் டைரக்டர்
1 சரண்யா பொன்வண்ணன் +தேவதர்ஷினி காம்பினேஷன் சீன்ஸ் +காமெடி நடிப்பு அருமை
2 நாயகன் , நாயகி இருவருக்குமான ஆரம்ப மோதல்கள் , நட்பு யதார்த்தம்
3 நாயகனின் காதல் டிராக் ரசனை
4 டச் செய்யும் வசன ங்கள்
ரசித்த வசனங்கள்
1 லேடிஸ் என எழுதி வெச்சாலே அப்படிப்பார்ப்பேன் , கோ எட் வேற கேட்கணுமா?
2 பெண்களைக்கவர நகைச்சுவை உணர்வு ரொம்ப முக்கியம் , இண்ட் டலிஜென்ஸ் + இங்க்லிஷ் போதும்
3 சப்பைக்காமெடிக்கு எல்லாம் சத்தம் போட்டு சிரிக்கறாங்க
4 பொண்ணுங்களைப்பொறுத்தவரை அவங்களை ரெண்டு டைம் சிரிக்க வெச்சுட்டாப்போதும் , அவங்க
மனசில் ஒட்டிக்கலாம்
5 உன்னை அவ லூசுன்னு நி னைச்சுக்கூட சிரிச்சு இருக்கலாம்
6 லவ் ஈஸ் மை ஒன்லி பாலிட்டிக்ஸ்
7 என்ன வேணாலும் கேளு
என்னை வேணாலும் கேளு
8 எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எனக்கு பாணி பூரி சாப்பிட் டா சரி ஆகிடும்
9 உண்மையா அவனை நீ லவ் பண்றியா?
யாராவது பொய்யா லவ் பண்ணுவாங்களா?
10 துரத்துனா காதல் வராது , நின்னா தேடி வரும்
11 எது நம்மைத்தேடி வருதோ அது நம்ம நல்லதுக்குத்தான் என நி னைச்சுக்கணும்
12 தம் விஷயம் அம்மாவுக்குத்தெரியாம பார்த்துக்கோ , கேன்சர் வர்ற வரை விட மாட் டா , வெய்ட் பண்ண மாட் டா , அவளே உன்னைக்கொன்னுடுவா
13 வேஷ்ட்டி தெரியும் , அதென்ன பெஸ்ட்டி ?
14 எந்த ஒரு உறவிலும் அன்பும் , மரியாதையும் சம அளவில் இருக்கணும்
15 லவ்வர் , பெஸ்ட்டி , பெஸ்ட் பிரண்ட் , மனைவி எல்லாமே எனக்கு உங்க அம்மா தான்
16 எங்க வீட்டில் சில்லறை வேலைகள் எல்லாம் நான் தான் செய்வேன்
நீ பண்ற வேலைகள் எல்லாமே சில்லறை வேலைகள் தானே ?
17 டியர் , நீ புரோட்டா மாதிரி இருக்கே , உன்னை கொத்து புரோட்டா ஆக்கிடறேன்
18 நான் சீப் அண்ட் பெஸ்ட் ஆண்ட்டி . கூப்பிட்டாப்போதும், வந்துடுவேன்
19 நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா?
படிப்பைத்தவிர எல்லா வேலையும் பண்ணி இருக்கேன்
20 சில பேர் லவ்வரால முன்னேறுவாங்க , சிலர் லவ்வர் போன பின் முன்னேறுவாங்க
21 லவ் பண்றதுக்கு அவங்க பெஸ்ட் பிரண்ட்ஸா இருக்கணும்கறதைத்தவிர வேற நல்ல ஆப்சன் இல்லை
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1கெஸ்ட் ரோலில் விக்ராந்த் வரும் அந்த சீன்கள் மொத்தமாகத்தூக்கி விட் டாலும் பாதகம் இல்லை . கதைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை
2 நாயகனின் காதலில் அழுத்தம் இல்லை
3 . சரண்யா பொன்வண்ணன் +தேவதர்ஷினி இருவரும் பரஸ்பரம் அவரவர் வாரிசுகளைப்பார்க்காமலேயே ( நேரிலோ அலல்து போட்டோ விலோ)சம்பந்தி ஆக நினைப்பது ?எப்படி ?
4 அப்பா - மகன் இருவரும் இணைந்து தம் அடிக்கும் சீன் கொடுமை
5 ரீல்ஸ் போடும் நாயகியின் காதல் அபத்தம் ,
6 நாயகன் , நாயகனின் நேருங்கிய நண்பன் இருவரும் பிரிவது செயற்கை
7 யார் யார் கூட சேர்த்தா நமக்கு என்ன என்பது போல ஆடியன்ஸுக்கு ஒரு கனெக்ட் ஆகவில்லை
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 16+
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - பன் பட்டர் ஜாம் (2025) - தமிழ் - பட் டி டிங்கரிங்க் அட்லி வெர்சன் ஆப் பிரியாத வரம் வேண்டும் (2001) . கமர்ஷியல் சக்ஸஸ் ஆகிடும் . ஜாலியாப்போகுது . விகடன் மார்க் யூகம் -43 ரேட்டிங்க் 3 / 5 பிரியாத வரம் வேண்டும் (2001) . விகடன் மார்க் 50
|
| Bun Butter Jam | |
|---|---|
Theatrical release poster | |
| Directed by | Raghav Mirdath |
| Written by | Raghav Mirdath |
| Produced by | Suresh Subramanian |
| Starring |
|
| Cinematography | Babu Kumar IE |
| Edited by | John Abraham |
| Music by | Nivas K. Prasanna |
Production company | Rain of Arrows Entertainment |
Release date |
|
| Country | India |
| Language | Tamil |
.jpg)
0 comments:
Post a Comment