இயக்குனர் சுசி கணேசன் இயக்கிய பைவ் ஸ்டார் படத்தில் கனிகாவின் முதல் கணவனாக வரும் நடிகர் கிருஷ்ணா தான் அறிமுக இயக்குனர் ஆன கிருஷ்ணகுமார் ராம் குமார் . நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ஆன ருத்ரா இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இடம் உதவி இயக்குனர் ஆகப் பல படங்களில் பணி புரிந்தவர் .இந்தப் படத்தில் நாயகன் ஆக நடித்து இருக்கிறார் . மராத்திய நடிகை ஆன மிதிலா பால்கர் தான் இந்தப்படத்தில் அறிமுக நாயகி .11/7/2025 முதல் திரை அரங்குகளில் வெளியான இந்தப் படம் பாசிட்டிவ் விமர்சனங்களைப்பெற்று வருகிறது
ஸ்பாய்லர் அலெர்ட்
நாயகன் சினி இண்டஸ்ட்ரியில் அஸிஸ் டெண்ட் டைரக்டர் ஆகப்பணிபுரிபவர் . புது இயக்குனர் அவதாரம் எடுக்க தன்னிடம் உள்ள இரு கதைகளை ஒரு ஹீரோவிடம் சொல்லப்போகிறார் . அவரது இரு கதைகளும் ஹீரோவுக்குப் பிடிக்கவில்லை . வேறு காதல் கதை இருந்தால் சொல்லுங்கள் என்கிறார்
நாயகனின் வாழ்க்கையில் 3 காதல்கள் நடந்து இருந்தன ,. முதல் காதல் தன்னை விட சீனியர் ஆன பக்கத்து வீட்டுப்பெண் உடனான காதல் . அவளுக்கு இன்னொரு காதலன் உண்டு . நாயகனை ஸ்பேர் ஆக வைத்து இருக்கிறாள் . ஒரு கட்டத்தில் நாயகனைக்கழட்டி விட்டு விடுகிறாள் .. இது நாயகனின் பள்ளிப்பருவத்தில் நடந்த சம்பவம்
காலேஜ் படிக்கும்போது நாயகன் ஒரு பெண்ணை லவ்வுகிறான் . அது ஒரு ஒன் சைடு லவ் . அதுவும் புட்டுக்கொள்கிறது
3வதாக நாயகன் - நாயகி காதல் கதை .
நாயகன் ஆக ருத்ரா கச்சிதமாக நடித்து இருக்கிறார் . தனுஷ் போல , சிவகார்த்திகேயன் போல , சித்தார்த் போல இவரும் ஸ்கூல் ஸ்டூடன்ட் , காலேஜ் ஸ்டூடன்ட் , இளைஞன் என 3 கெட் டப்களில் வருகிறார் .நல்ல நடிப்பு .நல்ல எதிர் காலம் உண்டு
நாயகி ஆக மிதிலா பாலகர் பால்கோவா மாதிரி இருக்கிறார் . நடிப்பும் நன்றாக வருகிறது . கிளாமர் உடைகளுடன் வலம் வருகிறார் .இவரது ஹேர் ஸ் டைல் , டிரஸ்ஸிங்க் சென்ஸ் அருமை
நாயகனின் ஸ்கூல் லவ்வர் ஆக திவ்யா திவ்யமாக இருக்கிறார் .அடக்கம், பவ்யம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் போல
கதை கேட்கும் ஹீரோவாக விஷ்ணு விஷால் வருகிறார் . தேவைக்கும் அதிகமாகவே அவரது கேரக்ட்டர் டெவலப் செய்யப்பட்டு இருக்கிறது . அவரது பி ஏ ஆக ரெடின் கிங்க்ஸ்லி வழக்கம் போல ஓவர் ஆக்டிங்க் .ஓவர் சவுண்ட்
நாயகனின் சித்தப்பா ஆக கருணாகரன் கச்சிதமான குணச்சித்திர நடிப்பு
நாயகனின் அம்மா,அப்பா ஆக விஜயசாரதி , கஸ்தூரி நடித்து இருக்கிறார்கள் , அதிக வாய்ப்பு இல்லை
இயக்குனர் மிஷ்கின் அவராகவே வருகிறார் . ஷூட்டிங்க் ஸ்பாட்டில் அவரது நடவடிக்கைகள், நடிப்பு கை தட்டலை அள்ளுகிறது
ஜென் மார்ட்டின் இசையில் இரண்டு பாடல்கள் ஹிட் . பின்னணி இசை அருமை ஒளிப்பதிவு கலக்கல் ரகம் . எடிட்டிங்க் கனகச்சிதம் .இரண்டே கால் மணி நேரம் படம் ஓடுகிறது .முதல் பாதி செம ஜாலி , நல்ல ஸ்பீடு ., பின் பாதி கொஞ்ச்ம ஸ்லோ
சபாஷ் டைரக்டர்
1 ஸ்கூல் லவ் போர்ஸனில் துள்ளுவதோ இளமை பட பாணியில் ஓவர் கிளாமர் புகுத்தியது
2 நாயகியின் நடிப்பு அழகு , இளமை
3 இயக்குனர் மிஷ்கின் போர்சன்
4 மனதைக்கவரும் தத்துவ வசனங்கள்
ரசித்த வசனங்கள்
1 காதலைப் புரிந்து கொள்ள சிலருக்கு ஒரே ஒரு காதல் கதை இருந்தாலே ( அமைந்தால் ) போதும் , சிலருக்குப் பல காதல் கதைகள் இருந்தாலும் போதாது , புரியாது
2 எந்த ஹீரோவும் டயட் விஷயத்தில் சொல்வதைக்கேட்பதில்லை ,அப்புறம் வயிறு வந்திடுச்சு ,ம யிறு வந்திடுச்சு என புலம்புவது
3 ரசனையே இல்லாதவன் தான் ஒயிட் டிசைன்ல ஸ்ட்ரைப்ஸ் சர்ட் போடுவான்
4 பொண்ணுங்க லவ் பண்ணிய பசங்களைக்கழட்டி விடுவதுதான் இப்போ ட்ரெண்ட்
5 இவன் என்ன கதை ரெடி பண்ணுவதில் அட்லியை விட வேகமா இருக்கான் ?
6 நம்ம மனசுக்குப்பிடிச்ச விஷயத்தை ,நம்ம மனசுக்குப்பிடிச்ச நபரிடம் ,நம்ம மனசுக்குப்பிடிச்ச டைம்ல சொல்வதை விட வேற எப்போ சொல்வது ?
7 எனக்காக யார் ரெஸ்பான்ஸ்பிலிட்டி எடுத்துக்கொண்டாலும் எனக்கு ஓகே தான் , ஆல்ரெடி ஐ காட் மோர் ரெஸ்பான்ஸ்பிலிட்டிஸ்
8 தண்ணீர் மோருக்கே வழி இல்லையாம், தயிருக்கு ஸீட் எழுதினாளாம் சிறுக்கி
9 இவ்ளோ அழகான பொண்ணை ஒருவன் விட்டுட்டுப்போயிட் டானா? நம்ப முடியலையே?
இதுதான் உன் பிக்கப் லைனா?
10 உன் பிரேக்கப்பை விட கதை சொன்ன விதம் அருமை
11 நான் லவ் பண்ற பொண்ணு எப்படி இருக்கணும்னு நினைச்சனோ அப்படியே இருக்கா
12 ஒரு குழப்பமான விஷயத்தை அனைவருக்கும் புரியும்படி சொல்வது ஒரு இயக்குநரோட வலிமை
13 சண்டை போடும் பொண்ணு வேண்டாம் என நினைச்சேன் , ஆனா உன் கூட இருந்தா தினமும் சண்டை மட்டும் தான் போடுவேன்
14 இது இடைவேளை இல்லை .க்ளைமாக்ஸ்
15 பி ரெடி
என்னது ?காலைலயே பீர் ரெடியா?
16 காதலில் விழுவது என்பது சரண்டர் ஆவது
17 உண்மையான காதலுக்கு தியாகம் செய்யணும் , யூ யூ லூசர்
18 உண்மை க்கதை ஆடியன்ஸ் மனசுக்கு நெருக்கமாக ரிலேட் ஆகும்
19 நடிக்கும்போது தப்பு பண்ணினா ஒன மோர் டேக் இருக்கு , வாழ்க்கைல தப்பு பண்ணினா ?
20 நம்ம பசங்க ஒரு இடத்துல தப்பு பண்ணிட் டா வாழ்க்கை பூரா அங்கே தலை வெச்சுப் படுக்க மாட்டாங்க
21 கோபம் ஒரு உணர்வு அல்ல , அது ஒரு நோய் , அதைப் புரிஞ்ச்சுக்க எனக்கு இத்தனை வருசம் ஆச்சு
22 எந்த ஒரு விஷயம் உனக்கு சந்தோசம் தருதோ அதுதான் உனக்கு கஷ்டத்தையும் தரும்
23 எந்த ஒரு விஷயமும் ஒரு எக்ஸ்ட்ரீம் லெவலுக்கு மேல் போனா மனது ஏத்துக்காது
24 காதலில் மட்டும் நம்பிக்கையை விட்றாத
25 உன் வாழ்க்கைல இல்லாத ஒரு பெண்ணுக்காக நீ செய்த தியாகம் இருக்கே ,...
லாஜிக் மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில் சில நெருடல்கள்
1 நாயகிக்கு வேறு ஒருவருடன் மேரேஜ் பிக்ஸ் ஆகி இருக்கு என காட்டி இருக்கலாம் . வேறு ஒரு ஆளுடன் பல வருடங்கள் வாழ்க்கையே நடத்தி விடடாள் எனும்போது நாயகனுடன் நாயகி சேர்வாரா? என்ற எண்ணம் எப்படி ஆடியன்ஸுக்கு வரும் ?
2 நாயகன் - நாயகி பிரேக்கப் ஆகும் தருணம் செயற்கை
3 நாயகியின் மாமா நாயகியின் குடும்பத்தை டாமினேட் செய்கிறார் என்பது நம்ப முடியவில்லை
4 நாயகனின் அம்மா,அப்பா இருவரும் அடிக்கடி அடித்துக்கொள்வது மனதில் ஒட்டவில்லை
5 விஷ்ணு விஷாலபோர்சன் தேவை இல்லாத நீளம்
அடல்ட் கண்ட்டெண்ட் வார்னிங் - 18+ 5 லிப் லாக் சீன் இருக்கு
சி பி எஸ் ஃபைனல் கமெண்ட் - ஒரு ஜாலியான கமர்ஷியலான காதல் கதை . ரசிக்கலாம் , ரேட்டிங்க் 3 / 5 விகடன் மார்க் யூகம் 42

0 comments:
Post a Comment