Friday, December 08, 2023

GARUDAN (2023) -கருடன் - மலையாளம் - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்ரில்லர்) @ அமேசான் பிரைம்


தமிழ்  நாட்ல  மட்டும்  தான்  அட்லீ  வகையறாக்கள்  ஜெயிக்கனுமா? நாங்க  மட்டும்  என்ன  தக்காளி  தொக்கா? என கேரளா  பட உலகைச்சேர்ந்த  ஒரு  இயக்குநர்  2017 ஆம்  ஆண்டு  வெளி  வந்த  த  கேர்ள்  இன்  த  ஃபாக் ( THE GIRL  IN THE  FOG)என்னும்  ஹாலிவுட்  படத்தை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  சுவராஸ்யமான  திரைக்கதையை  எழுதி  ஒரு  வெற்றிப்படத்தை  தந்திருக்கிறார் . வெறும்  7  கோடி  ரூபாய்  பட்ஜெட்டில்  உருவான  இப்படம்  பல  மடங்கு  லாபத்தை  தந்திருக்கிறது  


வில்லன்  கேரக்டர்  ஸ்ட்ராங்க்  ஆக  அமைந்தால்  அப்படம்  எப்போதும்  வெற்றி  தான்  என்ற  அளவில்  நாயகன்  ஆன சுரேஷ்  கோபியை  விட நடிக்க  அதிக வாய்ப்பு  வில்லன்  ஆன பிஜூமேனன்க்கு , தியேட்டரில்  அப்ளாசை  அள்ளுவதும்  வில்லனே


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  நேர்மையான  டெபுடிகமிஷனர்  ஆஃப்  போலீஸ்.அவருக்கு  ஒரு  மகன்  உண்டு . ரிட்டையர்  ஆகப்போகிறார்.வில்லன்  ஒரு  காலேஜ்ல  புரொஃபசரா  இருக்கார். வில்லன்  ஒர்க்  பண்ற  காலேஜ்ல  படிக்கும்  மாணவி ஒரு  நாள்  இரவு பாலியல்  பலாத்காரம்  செய்யப்பட்டு  ஒரு  பில்டிங்கில்  ஆபத்தான  நிலையில்  இருக்கிறார்


அந்த மாணவி  கோமா  ஸ்டேஜ்க்குப்போய் விட்டதால்  அவரால்  சாட்சி  சொல்ல முடியாது . ஆனால்  வில்லனை  நேரில்  பார்த்த  சாட்சி  உண்டு . டி என் ஏ  டெஸ்ட் , செமன்  டெஸ்ட்  என எல்லாவற்றிலும்  ஆதாரங்கள்  வில்லனுக்கு  எதிராகவே  இருக்கிறது . கோர்ட்டில்  கேஸ்  நடக்கிறது . வில்லனுக்கு  7  வருட  தண்டனை  கிடைக்கிற்து 


வில்லனுக்கும்  ஒரு  மனைவி ,  ஒரு  குழந்தை  உண்டு . இந்த கேஸ்  விவகாரத்தால்  வில்லனுக்கு  வேலை , பெயர் , மதிப்பு  எல்லாம்  போய்  விடுகிறது . மனைவியு,ம்   வெறுத்து  ஒதுக்கி  விடுகிறாள் 


 வில்லன்  7  வருடங்கள்  ஜெயில்  தண்டனை  அனுபவித்து  விட்டு  வந்து  கோர்ட்டில்  கேஸ்  போடுகிறார். ஜெயிலில்  இருந்த  நாட்களில்  படித்து  வக்கீல்  ஆகி  விடுகிறார். அதனால்  அவர்  கேசை  அவரே  வாதாடுகிறார்


குற்றவாளி  தண்டனை  அனுபவித்து  விட்டு  வந்து  தான்  நிரபராதி  என வாதாடும்  வினோதமான  கேஸ்  நடக்கிறது . அதில்  வில்லன்  வெற்றி  பெறுகிறான். நட்ட  ஈடாக  இந்த கேசை  டீல்  செய்த  நாயகன்  ஆன போலீஸ்  ஆஃபீசர்  48  லட்ச  ரூபாய்   வில்லனுக்குத்தர  வேண்டும்  என  தீர்ப்பு


 நாயகன்  மிரண்டு  போகிறார் .  வில்லன் ஏதோ  டகால்டி  வேலை  செய்தார்  என  தெரிகிறது , ஆனால்  என்ன  என கண்டு பிடிக்க முடியவில்லை . நாயகன்  அதற்குப்பின்  என்ன  செய்தார்?  அந்த  கேஸ்  என்ன ஆனது  என்பது  மீதிக்கதை 


நாயகன்  ஆக  சுரேஷ்  கோபி வயதான  சிங்கம்  போல வருகிறார். , கன்ன  சதை  தொங்கி  விட்டது . தொப்பை  கூடி  விட்டது . ஓவரா பீர்  அடிச்சா  இப்டிதான்  ஆகும். ஆனால்  நடிப்பைப்பொறுத்தவரை  ஓக்கே  ரகம் 


 வில்லன்  ஆக கலக்கல்  நடிப்பை  வழங்கி  இருப்பவர்  பிஜூ மேனன். ஜெயிலில்  அடி வாங்கும்போதும்  அமைதியாக இருக்கும்  நடிப்பிலும்  சரி ,  சைக்கோத்தனமாக  சிரிக்கும் போதும்  சரி   வக்கீல்  ஆக  கோர்ட்டில்  கலக்கும்போதும்  சரி  ஆரவாரமான  நடிப்பு . இவர்  நல்லவரா? கெட்டவரா? என்பது  மாறி  மாறி  கேள்விகளாக  நமக்குள்  எழுவது  சிறப்பு 


 வக்கீல்  ஆக  சித்திக்  கம்பீரமாக  நடித்திருக்கிறார்.    வில்லனை  நேரில்  பார்த்த  சாட்சி  ஆக பில்டிங்க்  காண்ட்ராக்டர்  ஆக  ஜெகதீஷ்  சிறப்பான  நடிப்பு 


நாயகனுக்கு  மனைவியாக  அபிராமி  கச்சிதம் வில்லனுக்கு  மனைவியாக  திவ்யா  பிள்ளை   சிறப்பு 

ரேப்  செய்யபட்ட  பெண்ணின்  அப்பாவாக  தலை வாசல்  விஜய்  சில  இடங்களில்  நல்ல குணச்சித்திர  நடிப்பு, சில இடங்களில்  ஓவர்  ஆக்டிங் 


138  நிமிடங்கள்  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  கட்  செய்திருக்கிறார்  எடிட்டர் 


ஜெக்ஸ்  பெஜோய் தான்  இசை ., மூன்று  பாடல்கள்  ஓக்கே  ரகம், பின்னணி  இசை  நல்ல விறுவிறுப்பு 


அஜய்  டேவிட்டின்  ஒளிப்பதிவு  சிறப்பு . கதை  எம் ஜினோஸ்  என  டைட்டிலில்  போடுகிறார்கள் . இவர்  தான்  ஃபாரீன்  பட  டிவிடியை  தந்தவர்  ஆக  இருக்கும்.திரைக்கதை  மிதுன்  மேனுவல் , தாமஸ். இயக்கம்   அருண்  வர்மா


சபாஷ்  டைரக்டர்


1   முதல்  பாதியில்  வில்லனை  அப்பாவி  போல  சித்தரித்ததும், நம்மை  நம்ப  வைத்ததும்  அருமையான  ஸ்க்ரிப்ட்  ஒர்க்


2  வில்லன்  பிஜூமேனனின்  அட்டகாசமான  பர்ஃபார்மென்ஸ்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ஜட்ஜ்  தன்  தீர்ப்பில்  வில்லனுக்கு  ஆயுள்  தண்டனை  என்கிறார், ஆனால்  7  வருடங்களில்  ரிலீஸ்  ஆவது  எப்படி ? ரேப்  கேஸ்க்கு  7  ஆண்டுகள்  தான்  தண்டனையா? 


2  நாயகன்  ஆன  சுரேஷ்  கோபிக்கு  வலிய  திணிக்கப்பட்ட  ஒரு  ஃபைட்  சீன்  மெயின்  கதைக்கு  சம்பந்தம்  இல்லாதது 


3   வில்லன்  ஆன  பிஜூ மேனன்  க்ளைமாக்சில்  முகத்தில்  கறுப்புத்துணியால்  மூடிய  பெண்ணின்  முகத்திரையை  விலக்கும்போது  அது  அவரது  மனைவி  என  அறிந்து  அதிர்ச்சி  அடைகிறார். 10  வருடங்கள்  குடித்தனம்  நடத்திய புருசனுக்கு  தாலி  கட்டிய  சொந்த  சம்சாரத்தின்  உடல்  அமைப்பு , சேலை , ஜாக்கெட் ,   செயின் , தாலி  செயின், நெக்லஸ் , வளையல்  இதெல்லாம்  அடையாளம்  தெரியாதா? முகம்  பார்த்தால்  தான்  தெரியுமா? 


4  நாயகன்  ரிட்டயர்  ஆகி  ஒரு  நாள்  தான்  ஆகிறது . பிஎஃப்  பணம்  செட்டில்  ஆக  பல  நாட்கள்  ஆகும், ஆனால்  கோர்ட்  தனது  தீர்ப்பில்  நாயகனை  பணம்  செட்டில்  செய்யச்சொல்கிறது , டைரக்டாக  அரசே  பிஎஃப்  பணத்தை  டேக்  ஓவர்  பண்ணி  ஃபைன்  ஆக  கட்டலாமே?  ஆனால்  பிஎஃப்  பணம்  ஆல்ரெடி  செட்டில்  செய்ததாக  சொல்கிறார்கள் 


5  மெயின்  கதையிலேயே  எகப்பட்ட சம்பவங்கள்  , குழப்பங்கள்  இருக்கும்போது  சம்பந்தம்  இல்லாத  அரசியல்வாதி  வில்லன்  ரோல்  எதற்கு ?


6   பல வருடங்கள்  போலீஸ்  ஆஃபீசர்  ஆக  பணி  ஆற்றிய  ஐபிஎஸ்  ஆஃபீசருக்கு  சேவிங்க்ஸ்  பணமே  இருக்காதா?  மகனின்  படிப்புக்கு  செலவு  செய்ய  பணம்  இல்லாமல்  தடுமாறுகிறார்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  -யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   நல்ல  க்ரைம்  த்ரில்லர் , விறுவிறுப்பான  படம் , பார்க்கலாம்  ரேட்டிங்  3 / 5 


Garudan
Theatrical release poster
Directed byArun Varma
Screenplay byMidhun Manuel Thomas
Story byJinesh M
Produced byListin Stephen
Starring
CinematographyAjay David Kachappilly
Edited bySreejith Sarang
Music byJakes Bejoy
Production
company
Magic Frames
Distributed byMagic Frames
Release date
  • 3 November 2023[1]
Running time
138 minutes[2]
CountryIndia
LanguageMalayalam
Budgetest. 7 crore[3]

0 comments: