Saturday, December 16, 2023

ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் (2023) - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஆக்சன் காமெடி மசாலா) @ நெட் ஃபிளிக்ஸ்

 


ஆலை இல்லா  ஊருக்கு  இலுப்பைப்பூ  சர்க்கரை , நயன் தாராக்கு கல்யாணம்  ஆனதால  த்ரிஷாதான்  தமிழ்  சினிமாவின்  கனவுக்கன்னினு  இருக்கற  மாதிரி  தீபாவளிக்கு  ரிலீஸ்  ஆன  ஜப்பான்  டப்பா  ஆனதால்  இந்தப்படம்  பிக்கப்  ஆகிடுச்சுனு  தோணுது . கூடவே  எஸ்  ஜே  சூர்யாவின்  மெகா  ஹிட்  படமான மார்க் ஆண்ட்டனி  ரிலீஸ்க்குப்பின்  ரிலீஸ்  ஆகும்  படம்  என்பதால்  ஒரு  எதிர்பார்ப்பு. மற்றபடி  ஆன்லைன்  விமர்சனங்கள்  சிலாகித்த  அளவு  படம்  இல்லை  என்றாலும்  மோசம்  இல்லை 


கார்த்திக்  சுப்புராஜின்  ஜிகிர்தண்டா  முதல்  பாகம்  திகில், விறுவிறுப்பு  கலந்து  கட்டிய  படமாக  இருந்தது. இதன்  இரண்டாம்  பாகம்  தூக்கம்  வர  வைக்கும்  திரைக்கதை  அமைப்பு, நம்ப  முடியாத  காட்சி  அமைப்புகள் , வலிய  திணிக்கப்பட்ட  செண்ட்டிமெண்ட்  காட்சிகளுடன்  இருந்தது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


வில்லன்  பயந்த  சுபாவம்  கொண்ட  போலீஸ்  ஆஃபீசர் . அவர்  செய்யாத  ஒரு குற்றத்துக்காக  ஜெயில்  தண்டனை  அனுபவிக்கிறார். ஜெயிலில்  இருக்கும்போது  அவருக்கு ஒரு  டாஸ்க்  கொடுக்கப்படுகிறது . ஒரு  ரவுடி  அரசியல்  பின்  புலம்  மிக்கவன், அவனைப்போட்டுத்தள்ளிட்டா   வில்லன்  ஜெயில்  தணடனையிலிருந்து  ரிலீஸூம்  ஆகிடலாம்,  போலீஸ்  வேலையும்  பழையபடி  பார்க்கலாம். வில்லன்  ஓக்கே  சொல்லிடறான்



அந்த  ரவுடி  தான்  நாயகன் .தமிழ்  சினிமாவின்  முதல்  கறுப்பு  ஹீரோ  ஆக  வேண்டும்  என்ற  லட்சியத்துடன் இருப்பவர். நாயகனின்  லட்சியத்தை  அறிந்த  வில்லன்  ஒரு  சினிமா  டைரக்டர்  போல  நடித்து  நாயகனிடம்  கால்ஷீட்  வாங்கி  ஷூட்டிங்  டைமில்  போட்டுத்தள்ளலாம்  என  திட்டம்  போடுகிறான். வில்லனின்  திட்டம்  நிறைவேறியதா? இல்லையா? என்பதுதான்  மீதி  திரைக்கதை 


  வில்லன்  ஆக  எஸ்  ஜே  சூர்யா . இவரது  கேரக்டர்  டிசைன்  ஓக்கே , ஆனால்  மார்க் ஆண்ட்டனி  அளவுக்கு  வலுவாக  இல்லை . போகப்போக  அவர்  ஒரு  எடுபுடி  போல  தான்  காட்டப்படுகிறார். அவரது  ரசிகர்களுக்கு  ஏமாற்றம் தான்


 நாயகன்  ஆக   ராகவா  லாரன்ஸ் . காஞ்சனா  மாதிரி  பேய்ப்படங்களை  கொடுப்பதில்  ஆர்வமாக  இருந்தவர்  இந்தப்படத்தில்  ரஜினி  ரெஃப்ரன்ஸ்  உடன்  பல  காட்சிகளில்  ரவுடி  ஆக  கச்சிதமாக  நடித்திருக்கிறார். பின்  பாதியில்  திடீர்  என  அவர்  நல்லவன்  ஆக  மாறுவது . ஒரு  இனத்தையே  காக்கும்  தலைவனாக  மாறுவது  எல்லாம்  நம்பும்படி  இல்லை 


நாயகி  ஆக  நிமிஷா சஞ்சயன். படம்  முழுக்க  நிறை மாத  கர்ப்பிணி ஆக  வருகிறார்.அவரது  கெட்டப்பும், நடிப்பும்  ஓக்கே  ரகம் . பிரபல  சினிமா  ஹீரோவாக  சைன்  டாம்  சாக்கோ  நன்றாக  நடித்திருக்கிறார். எம் ஜி  ஆரை  கிண்டல்  பண்ணுவது  போல  அவரது  கேரக்டர்  டிசைன்  வடிவமைக்கப்பட்டிருக்கிறது 


 முதல்வர்  ஜெ  போல  வடிவமைக்கப்ப்ட்ட  பெண்  கதாபாத்திரம்  தோற்றத்தில்  கம்பீரம்  இல்லை . அவரது  நடையில்  ஆணவம்  இல்லை . முகத்தில்  திமிர்  இல்லை . இருவர்  படத்தில்  ஐஸ்வர்யா  ராய்  நடிப்பை  விடவே  மிக குறைவான  அளவில்  தான்  இருக்கிறது 


நவீன் சந்திரா , இளவரசு  ஆகியோர்  வில்லத்தனமான  பாத்திரத்தில்  முத்திரை  பதிக்கிறார்கள் . சத்யன்  காமெடியன்  ரோல்  பண்ணி  இருக்கிறார். 


ச்ந்தோஷ்  நாராயணன்  இசையில்  மூன்று  பாடல்கள்  பிரமாதமாக  இருக்கின்றன. கொண்டாட்டப்பாடல்களாக  அமைந்தது  செம. பிஜிஎம்  கூட   நல்ல  விறுவிறுப்பு 


ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு கானக  அழகைக்கண்  முன்  கொண்டு  வருகிறார். வீரப்பன்  , யானை  சம்பந்தப்பட்ட  காட்சிகள்  எல்லாம்  செம 


ஆர்ட்  டைரக்சன் , எடிட்டிங்  போன்ற  தொழில்  நுட்பங்கள்  கச்சிதம்.  பின்  பாதி  காட்சிகள்  இழுவை .172  நிமிடங்கள்  படம்  ஓடுகிறது. இன்னும்  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கலாம்


சபாஷ்  டைரக்டர் (கார்த்திக்  சுப்புராஜ்) 


1    எஸ்  ஜே  சூர்யாவின்  ஓப்பனிங்  சீன் , கொலைக்கேசில்  அவர்  மாட்டுவது  போன்ற  காட்சிகளில்  த்ரில்லர்  படத்துக்கே  உரிய  சுவராஸ்யம்

2  படத்தில்  ரஜினி  ரெஃப்ரன்ஸ் , எம்ஜிஆர் , ஜெ  ரெஃப்ரன்ஸ்  எங்கெல்லாம்  தேவையோ  அங்கெல்லாம் சாமார்த்தியமாகப்புகுத்திய  விதம்

3  நாயகனுக்கு  கதைசொல்ல  இயக்குநர்கள்  லைன்  கட்டி  நிற்கும்  காட்சியும், வில்லன்  கதை  சொல்லி  ஓக்கே  வாங்கும்  இடமும்  நல்ல  காமெடி 



செம  ஹிட்  சாங்க்ஸ்


1  தீக்குச்சிப்பட்டாசா

2 மாமதுரை  அன்னக்கொடி 

3 ஒய்யாரம் ஒய்யாரம் பொண்ணுங்க  எல்லாம் 


  ரசித்த  வசனங்கள் 


1  கலையை  நீ  துரத்த  முடியாது , கலை தான்  உன்னை  துரத்தும் 


2  கட் , ஒன் மோர்  ஆக்சன் ,  நாலு  பேரு  தலைல  குட்டனும், ஓக்கே , டைரக்சன்  கத்துக்கிட்டேன் 


3  ஒரு  நல்ல  படம்  தன்னைத்தானே  உயிர்ப்பித்துக்க்கொள்ளும்னு  சத்யஜித்ரே  சொல்லி  இருக்காரு


4   நல்லவங்களைப்பற்றிப்படம்  எடுத்தா  யாரும்  பார்க்க  வர  மாட்டேங்கறாங்க 


5 எதிரியை  பொசுக்குனு  சுட்டுக்கொல்வது  வீரம்  இல்லை , அவனுக்கும்  ஒரு  வாய்ப்பு  கொடுத்து  நேருக்கு  நேரா வீரமா  கொல்லனும்


6  காட்  ஃபாதர் =  தெய்வத்தகப்பன் . ஆஸ்கார்  வாங்கி  இருக்கு 


7   வில்லனுக்கு  வில்லன்  வில்லாதி  வில்லனா  இருப்பான், இருக்கான் 


8   அவங்க  நினைச்சபடி  காரியம்  நடக்கும், ஆனா  அவங்க  நினைச்ச  மாதிரி  நடக்காது 


9  யானை  இல்லா  காடும் , காடு  இல்லா  ஊரும்  விளங்காது 


10 எவனும்  எதையும்  புதுசா  எழுதிட  முடியாது . பேனாவை  கெட்டியாப்பிடிச்சாபோதும், எழுதப்படவேண்டியது  எழுதப்படும் 


11 போர்ல  ஜெயிச்சவங்கனு  யாரும் இல்லை 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  ஒரு  பொறுக்கி , ரவுடி , குடிகாரன். ஆனால்  பின்  பாதியில்  திடீர்  என  அநியாயத்துக்கு  நல்லவன்  ஆவது  நம்பும்படி  இல்லை 

2  நிறைமாத  கர்ப்பிணி  ஆன  தன்  மனைவியை  நாயகன்  கை  நீட்டி  அடிக்கிறான்.  அந்த  பேக்கு  அதற்குப்பின்பும்  நாயக்னை  சீராட்டி  பாராட்டி  சோறு  போட்டுட்டு  இருக்கு (  இந்தக்காலத்துல  பொண்டாட்டிங்க பேச்சை  நாம  கேட்கலைன்னாலே  அம்மா  வீட்டுக்கு  போய்டறாங்க . அடிச்சா  போலீஸ்  ஸ்டேஷன்  தான்  நாம  போகனும் ) 

3   நாயகன்  மிக்ப்பெரிய  சினிமா  ஆர்வலன், ரசிகன் , ஆனால்  வில்லன்  ஒரு  டுபாக்கூர்  டைரக்டர்  என்பதை  அவரால்  கண்டு  பிடிக்க  முடியவில்லை 


4  ஜெயல்லிதாதான்  வீரப்பனை  வளர்த்து  விட்டவர்  என்பது  எல்லாம்  ஓவரோ  ஓவர்


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ / ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  காதில்  பூ  சுற்றும்  சுவராஸ்யமான  கதை  தான், தூக்கம்  வராதவர்கள்  பார்க்கலாம். ரேட்டிங்  2.25 / 5



Jigarthanda DoubleX
Theatrical release poster
Directed byKarthik Subbaraj
Written byKarthik Subbaraj
Produced byKarthik Subbaraj
Kaarthekeyen Santhanam
S. Kathiresan
Alankar Pandian
Starring
CinematographyTirru
Edited byShafique Mohamed Ali
Music bySanthosh Narayanan
Production
companies
Stone Bench Films
Five Star Creations
Invenio Origin
Distributed byRed Giant Movies
Release date
  • 10 November 2023
Running time
172 minutes
CountryIndia
LanguageTamil

0 comments: