Monday, December 04, 2023

THEEPPORI BENNY(2023) - தீப்பொறி பெண்ணி -- மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி மெலோ டிராமா ) @ அமேசான் பிரைம்


 ஸ்டார்  வேல்யூ  இல்லாமல் லோ  பட்ஜெட்டில்  எடுக்கும்  படங்களுக்கு  பெரிய  பிளஸ்  பாயிண்ட்  உண்டு . இயக்குநர்  ஹீரோ  பில்டப்  சீன்ஸ்  யோசிக்காமல்  திரைக்கதையை  சுவராஸ்யமாய்  நகர்த்துவது  எப்படி  என  யோசிப்பார்  என்பதால்    இண்ட்ரஸ்ட்  ஆக  சீன்கள் வரும். இதுவும்  அப்படி  ஒரு படம்  தான்.  ஆனால்  பொறுமையாகப்பார்க்க  வேண்டும்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்  படித்து  விட்டு  வேலைக்காக  வெய்ட்டிங். ஊரில்  இருக்கும்  எல்லா  அரசுப்பணிகளுக்கான  எக்சாம்களையும்  லிஸ்ட்  போட்டு  ஒவ்வொன்றாக  எழுதி  வருபவன்


நாயகனின்  அப்பா  ஒரு   கம்யூனிஸ்ட் . தீவிரமாக  அரசியலில்  ஈடுபட்டு  வருபவர் , மிக  நேர்மையானவர் . அவருக்கு  க்ட்சியிலும் , ஊரிலும்  நல்ல    பெயர்  உண்டு


 ஆனால்  நாயகனுக்கும், அப்பாவுக்கும்  பெரிய  அட்டாச்மெண்ட்  இல்லை /. நாயகனுக்கு  அரசியலில்  வர இஷ்டம்  இல்லை .அப்பாவுக்கு  தன்  மகன்  தன்னைப்போலவே  அரசியலில்   ஜொலிக்க  வேண்டும்  என்று  ஆசை 


 நாயகனுக்கு  ஒரு  முறைப்பெண்  உண்டு .இருவரும்  க்ளாஸ்மேட்ஸ்  வெற . ஆனா  பெரிய  அளவில்  இருவருக்கும்  இடையேபெரிய  ரொமான்ஸ்  எதும்  இல்லை 


இப்படி போகும் கதையில்  திடீர்  என  இரு  திருப்பங்கள்  1  ஆளும்  கட்சி  மீட்டிங்கில்  முதல்வருக்கு  எதிராக  நாயகன்  அவனையும்  அறியாமல்  கறுப்புக்கொடி  காட்டி  மீடியா  மூலம்  ஃபேமஸ்  ஆகிறான்.


 அது  த்ந்த  புகழ்  மேலும்  எதிரிகக்ளிடம்  இருந்து  தப்பிக்க  அரசியலில்  இறங்குவதுதான்  வழி  என  நினைக்கிறான். இப்போது  நாயகன்  கம்யூனிஸ்ட்  கட்சியில்  சேர்கிறான்


 ஆனால்  அப்பாவைப்போல  நேர்மையாக  இல்லாமல் குறுக்கு  வழியில்  ஃபேஸ்புக், இன்ஸ்டா  மூலம்  புகழ்  சேர்க்கிறான் . இது  அப்பாவுக்குப்பிடிக்கவில்லை 

 நாயகியை திடீர்   என  காதல்  பார்வை  பார்க்கிறான்


 நாயகனின்  அரசியல்  பிரவேசம்,  காதல் இரண்டிலும்  என்ன  என்ன  மாற்றங்கள்  வந்தன  என்பது  பின்  பாதி  திரைக்கதை 


நாயகன்  ஆக   அர்ஜூன்  அசோகன்  மிக  இயல்பாக  நடித்து  இருக்கிறார். தொப்பையுடன்  வரும்  பெரிய  பெரிய  ஹீரோக்கள்  மத்தியில்  ஃபிட்  ஆன  பாடியுடன்  அவர்  உலா  வருவது  மகிழ்ச்சி 


நாயகனின்  அப்பாவாக   ஜகதீஷ்  யதார்த்தமாக  நடித்திருக்கிறார். அருமையான  குணச்சித்திர  நடிப்பு 


நாயகி  பொன்னிலாவாக  ஃபெமினா   ஜார்ஜ்  அழகாக  வந்து  போகிறார். அதிக  காட்சிகள்  இல்லை 


122   நிமிடங்கள்  மட்டும்  ஓடும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  எடிட்   செய்து  இருக்கிறார்  சூரஜ்,


ஸ்ரீராக்  பாஜி  யின்  இசை  பின்னணி  இசை  இரண்டும்  ஓக்கே  ரகம் அஜய்  ஃபிரான்சிஸ்  ஜார்ஜின்  ஒளிப்பதிவில்  காட்சிகள்  யதார்த்தமாக , உயிரோட்டமாக  கண்  முன்  விரிகின்றன .


ராஜேஷ்   மோகன் ,  ஜோஷி  தாமஸ்  ஆகிய  இருவரும்  திரைக்கதை  எழுதி  இயக்கி  இருக்கிறார்கள் . நல்ல  ஃபேமிலி  டிராமா  பார்த்த  திருப்தி 


சபாஷ்  டைரக்டர்


1  டைட்டிலை  நியாயப்படுத்த  வேண்டும்  என்பதற்காக  ஃபையர்  டான்ஸ்  என்பதை  வலியப்புகுத்தி  இருந்தாலும்  அதில்  நாயகன்  பேண்ட்டுக்குள்  தீப்பந்தம்  சொருகி ஹாஸ்பிடலில்  அட்மிட்  ஆகும் காட்சி  மரணக்காமெடி 


2  ஹாஸ்பிடலில்  படுத்திருக்கும்  நாயகனைப்பார்க்க  வரும்  நாயகி  ஐஸ்கட்டி  கொண்டு  வருவதும் . பெருசா  அடிபடலை , லைட்டா  என  வடிவேலு  பாணியில்  நாயகன்  சமாளிப்பது  வெடிச்சிரிப்பு  


3   நாயகன்  முதல்வருக்குக்க்றுப்புக்கொடி  காட்டும்  சீன் , இண்ட்டர்வல்  பி:ளாக்  சீனில்  துரத்தும்  ரவுடிகள்  முன்  கம்யூனிஸ்ட்  கொடிக்கம்பத்தை  தூக்கும்  காட்சி   எல்லாம்  காமெடி   தான் 


4  அப்பா  -மகன்  புரிந்துணர்வுக்குப்பின்  இருவருக்குமான  பாண்டிங்  அருமை 


  ரசித்த  வசனங்கள் 


1  மலையாளிகளின்  பெரிய  பிரச்ச்னை  என்ன  தெரியுமா? அவங்க  என்ன  நினைப்பாங்க ?இவங்க  என்ன  நினைப்பாங்க    என  பயப்படுவதுதான்.  யார்  வேணா  என்ன  வேணா  நினைக்கட்டுமே? நமக்கு  என்ன? 


2  உன்னோட  உட்கார்ந்து  சாப்பிடும்போது  எனக்கு  10  வயசு குறைந்ததா  உணர்கிறேன்


உன்னோட  உட்கார்ந்து  சாப்பிடும்போது  எனக்கு  10  வயசு  கூடியதா  உணர்கிறேன்


3  அப்பா, மேல  இருக்கும்  கோபத்தை  சாப்பாட்டில்  காட்டாதே!  அப்பா  இல்லாமல்  வாழ  முடியும், ஆனா  சாப்பிடாம  வாழ  முடியுமா?


4  ஃபையர்  டான்ஸ்  ஆட  நாம  பயப்பட  வேண்டியதில்லை , ஏன்னா  ஆல்ரெடி  தம்  அடிக்கும்போது  நெருப்பு  கூட  விளையாண்டு  இருக்கோமே? 


5  பிரச்சனை  வரும்போது  அதை  ஃபேஸ்  பண்ணாம  ஓடிப்போவதால்  நாம்  ஜெயிச்சுட  முடியாது 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  நாயகன்  அரசியலில்  இறங்குவதும்  எதிரிகள்  அவரைக்கண்டு  பயப்படுவதும்  சினிமாத்தனம் 


2   காமெடிக்காக  வைக்கப்பட்டாலும்  காக்கா  உட்காரப்பனம்பழம்  விழுவது  போல  நாயகன்  செய்யும்  சில  வேலைகள்  சிரிப்பை  வர  வைத்தாலும்  செயற்கை 


3  நாயகன்  - நாயகி   கெமிஸ்ட்ரி  ஒர்க்  அவுட்  ஆகாததும் ., இருவ்ருக்கும்  இடையே  காம்பினேசன்  ஷாட்சில்  அக்கறை  காட்டாததும்  பெரிய  பின்னடைவு


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  - க்ளீன்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   மிக  மெதுவாகத்தான் திரைக்கதை  நகரும், மெயின்  கதைக்கு  வரவே  40  நிமிடங்கள்  எடுத்துக்கொள்கிறார்கள் . பொறுமை  அவசியம்  , ரேட்டிங்  2.5 / 5 


Theeppori Benny
Poster
Directed by
  • Rajeesh Mohan
  • Joji Thomas
Written by
  • Rajeesh Mohan
  • Joji Thomas
Produced byShebin Backer
Starring
CinematographyAjay Francis George
Edited bySooraj E. S.
Music bySreerag Saji
Production
company
Shebin Backer Productions
Distributed by
  • Central Pictures
  • Phars Film (Overseas)
Release date
  • 22 September 2023[1]
Running time
122 minutes[2]
CountryIndia
LanguageMalayalam

0 comments: