Thursday, December 21, 2023

SOMANTE KRITHAVU (2023) - மலையாளம் - சினிமா விமர்சனம் ( காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம்


  மீண்டும் மலையாளப்பட  உலகில்  இருந்து ஒரு  வித்தியாசமான  கதை . இயற்கை  ஆர்வலர் + டீ டோட்டலர் + இயற்கை  மருத்துவம்  ஆகியவற்றில்  நம்பிக்கை + ஆர்வம்  உளள  நாயகன்  சந்திக்கும்  காமெடி கலாட்டாக்கள் , பிரச்சனைகள்  தான்  கதை . மாமூல்  மசாலாப்படம்  பார்ப்பவர்களுக்கு  இந்தக்கதை  பிடிக்காது .ரொம்ப  ஸ்லோவாகப்போகும் மெலோ  டிராமா


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகன்   கிராமத்தில்  அக்ரிகல்ச்சர்  ஆஃபீசர்  ஆக  அரசுப்பணியில்  இருப்பவர் . இவர்  ஒரு  அட்வைஸ்  அம்புஜம்  ஆக  ஊரில்  செயல்படுவதால்  பலரும்  அவரை  கிண்டல்  செய்வார்கள் . ஆளைக்கண்டாலே  அட்வைஸ்க்கு  பயந்து  தலை  தெறிக்க  ஓடுவார்கள் 


 ஆங்கில  மருத்துவத்துக்கு  நாயகன்  தீவிர  எதிரி. சின்ன வயதில்  நாயகனின்  அப்பா  ஐந்து  வருடங்கள்  தொடர்ந்து  மாத்திரைகள்  சாப்பிட்டதால்  கிட்னி  பிராப்ளம்  வந்து  இறந்ததால்  ஊரில்  யாரும்  அது  போல்  கஷ்டங்கள்  அனுபவிக்கக்கூடாது  என  நினைப்பவர்  

 அவருக்கு  அடிக்கடி  ஒரு   ஃபோன்  கால்  வருகிறது . அந்தப்பெண்  குரல்  நாயகனுக்கு  முதலில்  நட்பை  ஏற்படுத்தி  பின்  காதல்  ஆகி  திருமணம்  வரை  போகிறது 


குடும்ப  ஜோசியர்  இவர்களுக்குக்குழந்தை  பிறந்தால்   குழ்ந்தைக்குப்பத்து  வயது  ஆகும்போது  நாயகனுக்கு  ஒரு  கண்டம் இருக்கிறது  என்று  சொல்கிறார். இதற்குப்பின்  நிகழும்  சம்பவங்கள்  தான்  மீதித்திரைக்கதை 


நாயகன்  ஆக வினய்  ஃபோர்ட்  பிரமாதமாக  நடித்திருக்கிறார். அவரது  உடல் மொழி ,  டயலாக்  டெலிவரி , அண்டர் ப்ளே  ஆக்டிங்  எல்லாம்  அருமை 


நாயகி  ஆக நடித்திருப்பவர்  நம்ம  ஊர்  ஊர்வ்சியின்  அக்கா  கல்பனாவை  நினைவுபடுத்துகிறார். ஆர்ப்பாட்டம்  இல்லாத  பாந்தமான  நடிப்பு 


நாயகனின்  அம்மாவாக  வருபவர்  படம்  முழுக்க  உயிரோட்டமான  நடிப்பை  வழங்கி  இருக்கிறார் 


ஒளிப்பதிவு , லொக்கேஷன்  அனைத்தும்  அருமை , கேரளா- ஆலப்புழா  மாவட்டத்தில்  படப்பிடிப்பு  நடந்திருக்கிறது , கண்ணுக்குக்குளுமை . சஜித்  புருசன்  தான்  ஒளிப்பதிவு . சஜித்தின்  புருசன்  அல்ல , பெயரே  அதுதான் 


இசை , பின்னணி இசை   ஓக்கே  ரகம்  பி எஸ்  ஜெயஹரிக்கு  பாராட்டுக்கள் 


2   மணி  நேரம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர்    


ரஞ்சித்  கே  ஹரிதாஸ்  எழுதிய  திரைக்கதைக்கு  உயிர்  ஊட்டி  இயக்கி  இருக்கிறார்  ரோஹித்  நாராயணன் 


சபாஷ்  டைரக்டர்


1  நாயகனுக்குப்பெண்  பார்க்கும்  தரகர்  பல  பெண்களின்  ஃபோட்டோக்களைக்காட்டும்போது  நாயகன்  தரகரின்  அருகில்  இருக்கும்  அவரது  சொந்த  மகளைக்காட்டும்  காட்சி 


2  கல்யாணம்  நடக்கும்போது  தாலியைக்காணாமல்  மண்டபத்தில்  எல்லோரும்  தாலியைத்தேடும்  காமெடிக்காட்சி 


3  இயற்கை வழியில்  சுகப்பிரசவம்  காண்பது  எப்படி  என  கிளாஸ்  எடுப்பது  போல  அமைக்கபப்ட்ட  டீட்டெய்லான  காட்சிகள்  அழகு 


4 முதல்  பாதி  திரைக்கதையை  காமெடி   கலந்த  ஃபேமிலி  செண்ட்டிமெண்ட்  பெக் டிராப்பில்  தந்து  விட்டு  பின்  பாதியில் சீரியசாக  கதை  சொன்ன  விதம் 


  ரசித்த  வசனங்கள்


 1 இதுக்குத்தான்  வீடு பூரா  டைல்ஸ்  ஒட்டிடலாம்னு  சொன்னேன், நீ  கேட்கலை 


 ஆமா,  பெரிய  தாஜ்மகாலா  கட்டப்போறே? 


2  எப்போபாரு  தம்  அடிச்சுக்கிட்டே  இருக்கே? அதோ  சோமன்  வர்றாரு, தம்மை  மறை


 சோமன்  தானே  வர்றாரு? பெட்ரோல்  பங்க்  இல்லையே? ஏன்  பயப்டனும் ?


3  ஹலோ , நாங்க  காலைல  இருந்து  அஃபீசரைப்பார்க்க  லைன்ல  நிக்கறோம், நீ  வ்ந்ததும் நேரா  உள்ளே  போகப்பார்க்கறே?

 அய்யோ  மேடம், அவர்  தான்  அந்த  ஆஃபீசர்


4  ஹலோ


 என்  ஃபோனை எதிர்பார்த்துக்காத்திருந்தீங்களா?


 இல்லை , இல்லைனு  சொன்னா  அத் பொய்  ஆகிடும், உங்க  பேர்  கூட  எனக்குத்தெரியாது . என்ன  பேரு ?


 ஷாலினி 


பேபி  ஷாலினியா?


 இல்லை ,பேபி  இல்லாத  ஷாலினி 


5  அம்மா , அர்ஜெண்ட்டா  நான்  ஒரு  கல்யாணம்  பண்ணனும் 

ஏண்டா, உன் வாழ்க்கை வேஸ்டா  போகுது  ஓக்கே , எதுக்கு  ஒரு  பெண்ணோட  வாழ்க்கையையும் வேஸ்ட்  ஆக்க  நினைக்கறே? 


6  காதல்  என்பது  ஆட்டோவில்  போற  மாதிரி , எப்போ  வேணா  இறங்கிக்கலாம், ஆனா  கல்யாணம்  என்பது  ஃபிளைட்ல  பயணிப்பது  போல,  வழில  உன்  இஷ்டத்துக்கு  இறங்க  முடியாது 

7  என்னது ?இவனுக்குக்கல்யாணமா? அப்போ  சீக்கிரமே  டைவர்ஸ்  எதிர்பார்க்கலாம்? 

8  இந்தக்காலப்பொண்ணுங்க  எந்த  வேலையுமே  செய்யறதில்லை , அப்புறம்  எப்படி  சுகப்பிரசவம் ஆகும் ?


9  என்னது ? உன்  பொண்ணுக்கு  இந்தியானு  பேர்  வெச்சிருக்கிறாயா?


 அவரு முதல்ல  க்ரிமுஹி  அப்டினு  வைக்கலாம்னு  இருந்தாரு (கிறிஸ்டியன்+ முஸ்லீம் + ஹிந்து = க்ரிமுஹி) 


10 அநியாயம்  எங்கே  நடந்தாலும்  அரசியல்  பலம், பணபலம்  பார்க்காமல்  நாம்  குரல் கொடுக்க  வேண்டும்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  புரோக்தர் தாலி  எங்கே ? எனக்கேட்கும்போது  நாயகன்  தன்  சர்ட்  பாக்கெட்டைப்பார்த்து  காணோமே? என்கிறார். மாப்பிள்ளையின்  சர்ட்  பாக்கெட்டிலா  தாலி  இருக்கும் ?  ஆல்ரெடி  ஆசீர்வதிக்கப்பட்டு  தட்டில்  தானே  வைத்திருப்பார்கள்? 


2  வில்லன்  திடீர்  என  டாக்டர்  ஆவது  எபப்டி ? என்ற  விளக்கம்  இல்லை 


3  நாயகன்  தன்  அரசுப்பணியைத்துறந்து  சொந்தத்தொழில்  தொடங்க  சரியான  காரணம்  சொல்லப்படவில்லை 


4  பின்  பாதியில்  கடைசிப்பாதி  கதை  ரொம்பவே  ஸ்லோ



அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - க்ளீன்  யூ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பரபரப்பான  த்ரில்லர்  பட  ரசிகர்கள் , ஆக்சன்  மசாலா  பிரியர்கள்  தவிர்க்கவும், ஸ்லோ  மூவி . ரெட்டிங்  2.5 / 5 

0 comments: