Wednesday, December 13, 2023

MAST MEIN RAHNE KA ( 2023) - ஹிந்தி /தமிழ் -மஸ்த் மே ரஹனே கா - சினிமா விமர்சனம் ( ரொமாண்டிக் டிராமா ) @ அமேசான் பிரைம்

 


 ஜாலியா  இருக்கனும்  என்பதுதான்  டைட்டிலுக்கான  தமிழ்  அர்த்தம்.இந்தக்கதையில்  இரு செட்  காதல் ஜோடிகளைப்பற்றி  சொல்லப்பட்டிருக்கிறது. 25  வயது  நாயகன்  - நாயகி  கதை , பிறகு  60+  வயது  நாயகன்  நாயகி  காதல்  கதை . பெரிய  திருப்பங்கள்  இல்லாத  மென்மையான  காதல்  கதைகள்  இரண்டுமே.  ரசிக்க  வைத்த படம்  ,மஸ்த் மே  ரஹனே  கா 

ஸ்பாய்லர்  அலெர்ட்

 சம்பவம் 1 - நாயகன்  ஒரு  டெய்லர்.  நல்ல  தொழில்  தெரிந்த  திறமை சாலி,  மும்பையில்  ஒரு  டெய்லர்  கடையில்  டெய்லர்  ஆகப்பணி  புரிபவன். கடைக்கு வந்த  லேடி  கஸ்டமர்  தன்  ஜாக்கெட்  ஃபிட்டிங்  சரி  இல்லை  என  புகார்  சொல்ல  அதற்கு  நாயகன்  அளித்த  யதார்த்தமான  விளக்கத்த்தை  தவறாகப்புரிந்துகொண்டு  அந்த  கஸ்டம்ர்  சண்டை  போடுகிறாள் . ஃபேஸ்புக்கில்  கடை பற்றி  எழுதி  மானத்தை  வாங்குவேன், கஸ்டமரே  வர  விடாமல்  செய்வேன்  என்கிறாள். இதனால்  காண்டான  ஓனர்  நாயகனை  துரத்தி  விடுகிறார்


நாயகன்  தனியாக  கடை  போட்டு  ஆர்டர்  பிடிக்கிறான். ஆனால்  கடைக்கு  அட்வான்ஸ் கொடுக்க  கை வசம்  இருந்த  பணம் போதவில்லை . அதனால்  பார்ட்  டைம் ஜாப்  ஆக  திருடுகிறான். அக்கம்  பக்கம்  இருக்கும் தனிமையான  முதியவர்  வீடுதான்  டார்கெட்..ஃபுல்  டைம்  ஜாப்  ஆக  மக்கள்  பணத்தைத்திருடும்  அரசியல்வாதிகள்  மாட்டிக்கொள்வதில்லை , ஆனால்  இவன்  மாட்டிக்கொள்கிறான்


சிரமப்பட்டு  முன்னேறும்போது  பழைய  கடை  ஓனர்  தனது  கஸ்டமரகளை  கவர்  பண்றதாக  குற்றம்  சாட்டி  கடையை காலி  செய்ய  வைக்கிறான். 


நாயகி  டிராஃபிக்  சிக்னல்களில்  நின்று  பிச்சை  எடுப்பவர். அவர்  மீது  நாயகனுக்குக்காதல். இருவருக்கும்  பழக்கம்  உண்டாகிறது ஒரு  க்ட்டத்தில்  நாயகி “ தொழிலில்”  இறங்குகிறாள்.இது  நாயகனுக்குப்பிடிக்கவில்லை . ஊடல் , சண்டை


 நாயகன் - நாயகி  இணைந்தார்களா? நாயகன்  தொழிலில்  முன்னேறினானா? என்பது  மீதி திரைக்கதை 


 சம்பவம்  2 


 முதல்  சம்பவத்தில்  நாயகன்  திருடிய  இரு  வெவ்வேறு  வீடுகளில் இருந்த  வேவ்வேறு  நபர்கள்  தான்  இந்தக்கதையின்  நாயகன்  நாயகி


இந்தக்கதை  நாயகன் 60  வயதானவர். மனைவி  இறந்ததால்  இவருக்கு  வாழ்க்கை  வெறுத்து  விடுகிறது . தற்கொலை  செய்யும்  முடிவில்  கூட  தோற்கிறார். ஏதோ  கடமைக்கு  வாழ்ந்து  கொண்டிருக்கிறார்


  நாயகி   திருமணம்  ஆகி  விதவையானவர். மகன்  கனடாவில்  இருக்கிறான் . மருமகளுடன்  ஒத்துப்போகவில்லை . அதனால்  தனிமையில்  வசிக்கிறார்


 நாயகன் - நாயகி  இருவருக்கும்  பழக்கம்  ஏற்படுகிறது. ஒரு  கட்டத்தில்  நாயகியின்  மகன்  வந்து  தன்  அம்மாவை  கனடாவுக்கு  அழைத்துச்சென்று  விடுகிறான். இதற்குப்பின்  நாயகன் - நாயகி  இணைந்தார்களா? என்பது  மீதி  திரைக்கதை  

முதல்  கதையின்  நாயகன் - நாயகி  ஆக  அபிஷேக் சவ்ஹான் -மோனிகா பன்வர்  அருமையாக  நடித்திருக்கிறார்கள் . அப்பாவியாக  வரும்  நாயகன்  தன்  வெள்ளந்தியான  சிரிப்பு , அப்பாவித்தனமான  பேச்சுக்களால்  அனைவர்  மனதையும்  கொள்ளை  அடிக்கிறார்


 நாயகியின்  கேரக்டர்  டிசைன்  பொதுவாக  நமக்கு  அசூயை  அல்லது  வெறுப்பு  தான்  ஏற்படுத்தி  இருக்க  வேண்டும், ஆனால்  தன்  அபாரமான  ந்டிப்பினால்  இரக்கத்தை  சம்பாதித்து  மனம்  கவர்கிறார்


 இருவரது  காதல்  காட்சிகளிலும்  ஒரு  கண்ணியம் , கவிதைத்தனம்  நிரம்பி  வழிகிறது .


அடுத்த  காதல்  ஜோடி  ஜாக்கி  ஷெராப் - நீனா  குப்தா /. இதில்  ஜாக்கி  செராப் இயக்குநர்  சொன்னபடி  சில  இடங்களில்  அடக்கி  வாசிக்கிறார்,, பல  இடங்களில்  கலக்கலான  நடிப்பை  வெளிப்படுத்தி இருக்கிறார்

  நாயகி  நீனா  குப்தா  நல்ல  நடிகை  தான் . ஆனால்  இந்தப்படத்தில்  ஜோதிகாவுக்கே  அக்கா  போல்  பல  காட்சிகள்  ஓவர்  ஆக்டிங். இயக்குநர்  கவனித்தாரா? இல்லையா? தெரியவில்லை . ஒருவேளை  சீனியர்  ஆர்ட்டிஸ்ட்  என்பதால்  சொல்லத்தயங்கி  இருக்கலாம்


127  நிமிடங்கள்  டைம்  ட்யூரேஷன்  வரும்படி  ஷார்ப்  ஆக  கட்  செய்து  இருக்கிறார்  எடிட்டர்  அண்ட்ரா லஹரி 


பாடல்களுக்கான  இசையை  மூவர்  செய்திருக்கிறார்கள் , பின்னணி  இசையை  வேறு  ஒருவர் கவனித்திருக்கிறார்.  குட்  ஒன் 


நாகராஜ் ரத்தினம்  ஒளிப்பதிவில்  தன்  முத்திரையைப்பதிக்கிறார். நாயகி யின்  க்ளோசப்  காட்சிகள்  கொள்ளை  அழகு 


பயால்  அரோரா  உடன்  இணைந்து  திரைக்கதை  எழுதிய  விஜய்  மவுர்யா  படத்தை  இயக்கி  இருக்கிறார்


சபாஷ்  டைரக்டர்


1   டெய்லர்  ஆன  நாயகன் , பிச்சைக்காரி  ஆன  நாயகி  இருவருக்குமிடையேயான  அறிமுகம், பழக்கம் , காதல்   போன்ற  தங்க  தருணங்களை  சுவராஸ்யமான  காட்சிகளால்  படம்  பிடித்த  விதம் 


2   கொஞ்ச  நேரம்  இளமைக்காதல் , அடுத்த  காட்சிகள்  முதுமைக்காதல்  என  மாற்றி  மாற்றிக்காட்டி  அனைத்துத்தரப்பு  ரசிகர்களையும்  கவர்  செய்த  விதம் 


  ரசித்த  வசனங்கள் 


1  மும்பை  ஒரு  பெரிய  மார்க்கெட் . இங்கே  எல்லாமே  ஃபிரெஷா  இருக்கனும், ஃபிரெஷா  வாழனும், ஃபிரெஷா  சாப்பிடனும், ஃபிரெஷா  இல்லைன்னா  போணி  ஆகாது 


2  வாழ்க்கைல  முன்னேறனும்னா  சொந்தமா  தொழில்  செய்யனும்


3   வணக்கம்  மேடம்..


 அடடே,  நீயா? உனக்கு  நினைவிருக்கா?  எருமை  மாடு  மாதிரி  கன்னங்கரேல்னு  ஒருத்தன்  என்னை  சுத்தி  சுத்தி  வந்தானே? அவன் தான்  என்  புருசன் இப்போ 


4   மருந்து  நல்ல  மருந்தா? கெட்டுப்போனதா?னு  செக்  பண்ற  குவாலிட்டி  கண்ட்ரோலர்  ஆஃபீசரா  இருந்தேன்


 எப்படி? மருந்தை  சாப்பிட்டுப்பார்த்து  சொல்வீங்களா?


5   என்  பேரு  குப்தா  , ஆனா  எல்லாரும்  என்னை  நன்னி  நன்னினு  தான்  கூப்டுவாங்க 


 டபுள்  ஆக்டா?


 இல்லை  ஒரு  நன்னி  தான் 


6  இந்த  உலகத்தில்  எல்லாருக்கும்  ஏதோ  ஒரு  டைம்ல  ஸ்க்ரூ  லூஸ்  ஆகத்தான்  செய்யும், ஆனா  எனக்கு  இப்படியே  இருக்கத்தான்  பிடிச்சிருக்கு 


7  ஒரு  பெண்  கிட்டே  பேசியே  10  வருசம்  ஆகுது . இந்த  ஆம்பளைங்க  கெட்ட  வார்த்தை  பேச, புகார்  செய்யத்தான்  வாயையே  திறக்கறாங்க 


8  அவன்  ஒரு  மொள்ளமாரியா  இருந்தாலும்  கவிதை  நல்லா  சொல்லுவான், வானமோ  நீலம், நீ தான்  என் பாலம்  அப்டினு  சொல்லியே  என்னை  க்ரெக்ட்  பண்ணிட்டான். இந்த  கவிதை  எழுதறவனுங்க  பூரா  கேப்மாரியாதான்  இருக்கானுங்க 


9  இந்த  வாழ்க்கை  எப்பவும்  நமக்கு  ரெண்டு  சான்ஸ்  கொடுக்கும்.  முதலாவது  நமக்கு    அமைந்த   ரெகுலர்  வாழ்க்கை . ரெண்டாவது  அதான்  இப்போ  நமக்கு  கிடைச்சிருக்கு 


10  லேடீசோட  சில  விஷயங்களை  நீங்க  அப்சர்வ்  பண்ணக்கூடாது , குண்டா  இருக்கா , அப்டி  இப்டி இருக்கா , இதெல்லாம்  சொல்லக்கூடாது. நாங்க  சுமாரா இருந்தாலும்  அழகா  இருக்கறதாத்தான்  சொல்லனும்


11   லைஃப்  நமக்கு  இன்னொரு  சான்ஸ்   தரும்போது  அந்த  சான்சை  மிஸ்  பண்ற   சான்சை  தராம  பார்த்துக்குங்க 

12  ஒவ்வொரு மனுசனுக்கு உள்ளேயும்  ஒரு  மிருகம்  இருக்குமாம்,    தூங்கிட்டு  இருக்கும் அது  விழிச்சுக்கிட்டா  பாவம்  பண்ண  ஆரம்பிச்சிடுவோமாம்


13  வாழ்க்கைல  சில  விஷயங்கள்  ஒண்ணு  சீக்கிரமாவே  நடக்குது , அல்லது  லேட்டா  நடக்குது , யாருக்குமே  கரெக்ட்  டைம்க்கு  எதுவும்  நடக்கறதில்லை 


14  யார்  மேல  அட்டாச்மெண்ட்டா  இருந்தாலும்  நமக்கு பாதிப்புதான்  ஏற்படும்


15     நாயகி = என் உடம்புக்கு  நான்  தான்  ஓனர்


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1    நாயகன்  ஒரு  தடவை  தையல்  மிஷின்  வாங்க  ஷோரூம்  போகிறான். டாப்  மட்டும்  வாங்கி  வருகிறான். மீதி  பார்ட்ஸ்  இல்லாமல்  எப்படித்தைக்க  முடியும் ?  பணத்தைக்கடையில்  தந்தால்  அவர்களே  டோர்  டெலிவரி  செய்து  விடுவார்களே? 


2    சீப்பான  பாரத்  இண்ட்டர்நேஷனல்  ஃபிளைட்ல  பயணம்  செய்யப்போறானாம்னு  ஒரு  டயலாக்  வருது , இதை  எப்படி  சென்சார்ல  விட்டாங்க? 


3  மகன்  ஊரில்  இருந்து  வந்திருக்கிறான்.,  அதனால்  ஃபோன்  பண்ண  வேண்டாம்  என  நீனா  குப்தா  ஜாக்கி  ஷெராபிடம்  சொல்லி  இருக்கலாமே? அல்லது மெசேஜ்  செய்திருக்கலாமே? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங்  காட்சி  ரீதியாக  18+ இல்லை , ஆனால்  வசனத்தில்  ஆங்காங்கே  பச்சை  உண்டு 



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  பட  பிரமோஷன்களில்  காமெடி  டிராமா  என  விளம்பரம்  செய்தாலும்  இதில் காமெடி  பெரிய  அளவில்  இல்லை , ஆனால்  ரசிக்க  வைக்கும்  ரொமான்ஸ்  உண்டு . காதலர்கள்  பார்க்கலாம். பெண்களுக்கு  மிகவும்  பிடிக்கும் , ஆம்பளைங்களுக்குத்தான்  பொறுமை  கிடையாதே?  ரேட்டிங்  2.75 / 5 


Mast Mein Rehne Ka
Official release poster
Directed byVijay Maurya
Written byVijay Maurya
Payal Arora
Produced by
  • Payal Arora
  • Vijay Maurya
Starring
CinematographyNagaraj Rathinam
Edited byAntara Lahiri
Music byScore:
Arabinda Neog
Songs:
Anurag Saikia
Shailendra Barve
Kaam Bhaari
Production
company
Made in Maurya
Distributed byAmazon Prime Video
Release date
  • 8 December 2023
Running time
127 minutes
CountryIndia
LanguageHindi

0 comments: