Wednesday, December 20, 2023

KADHA CHITHRA (2023) - கன்னடம் - சினிமா விமர்சனம் ( த்ரில்லர் டிராமா ) @ அமேசான் பிரைம்


 இந்தப்படம்  கின்னசில்  இடம்  பிடிக்க  வாய்ப்புள்ளது. நாயகன்  ஒவ்வொரு  காட்சி  தொடக்கத்திலும்  தம்  அடிப்பார் , சரக்கு  அடிப்பார். படத்தில் வரும்  ஒவ்வொரு  ஆண்  கேரக்டரும்  இதே  வேலையை  செய்யும். கடந்த 28  வருடங்களில்  நான்  பார்த்த 6754  படங்களிலும்  இல்லாத  ஒரு  சாதனை  இது .


அட்லீ  மாதிரி  இந்தப்பட  இயக்குநர்  2  வெவ்வேறு  டிவிடி  பார்த்து  முதல்  பாதி  ஒரு  கதை  , பின்  பாதி  இன்னொரு  கதை  என  பட்டி  டிங்கரிங்  செய்து  இருக்கிறார். படு  டப்பா படமான  இது கர்நாடகாவில்  ஹிட்  ஆகி  இருக்கிறது 


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகி  பாரம்பரியம்  மிக்க  நல்ல  குடும்பத்தில் பிறந்த அழகான  பெண். அவரது  வீட்டின்  மாடிபோர்சனில்  நாயகன்  புதிதாகக்குடி  வருகிறார். இவர்  ஒரு  ரைட்டர்


 நாயகி  நாயகனைப்பார்க்கும்  ஒவ்வொரு  சமயமும்  நாயகன்  கேன்சர்  பேஷண்ட்  மாதிரி  தம்  அடிப்பது , கல்லீரல்  டேமேஜ்  ஆகட்டும்  என  தண்ணி  அடிப்பது  என்றே  இருப்பதால் நாயகிக்கு  அவர்  மீது  செம  கடுப்பு 


ஒரு  நாள்  நாயகன்  எழுதி    வீசிய  பேப்பரைப்பார்த்து படித்து  அவர்  எழுத்தின்  மீது  காதல்  கொள்கிறாள் . தாடி  வெச்சுட்டு  பிச்சைக்காரன்  மாதிரி  இருக்கும்  அவரை  லவ்  பண்ணுகிறாள் . மனசாட்சியே  இல்லாமல் கல்யாணமும்  செய்து  கொள்கிறாள் 


 இருவருக்கும் ஒரு  பெண்  குழந்தை  பிறக்கிறது . வாழ்க்கை  சந்தோசமாகப்போய்க்கொண்டிருக்கும்போது  நாயகன்  மேல்  ஒரு  குற்றச்சாட்டு  வருகிறது. நாயகன்  எழுதிய  ஒரு  புகழ்  பெற்ற  நாவல்  ஆல்ரெடி  வேறு  ஒருவர்  எழுதியது . இவரும்  அட்லீ  போல  ஏஆர்  முருகதாஸ்  போல., ஈரோடு  மகேஷ்  போல , மதுரை  முத்து  போல  அடுத்தவர்  படைப்பை  ஆட்டையைப்போடுபவர்  என  ஊர்  உலகம்  அவரை  கேவலமாகப்பேசுகிறது . இதனால்  மெண்ட்டல்  டிப்ரஷன்  க்கு  உள்ளாகிறார்  நாயகன்.


இந்தக்கேவலமான  கதை  தான்  முதல்  பாதி .


இரண்டாம்  பாதி  அதை  விட  மட்டமான  கதை 


அரசியல்  செல்வாக்கு  மிக்க  3  வில்லன்கள்   பெண்களை  பாலியல்  வன்கொடுமை  செய்வதை  பார்ட்  டைம் ஜாப்  ஆக  வைத்திருக்கின்றனர். அவர்கள்  முகமூடியைக்கிழித்து  சமூகத்துக்கு  அடையாளம்  காட்டுகிறார்  நாயகன்


நாயகன்  ஆக  விஜய்  ராகவேந்திரா  தாடி  வைத்துக்கொண்டு  எப்போப்பாரு  தம் , தண்ணி  என  உலா  வருவதற்கு  தண்டமா  சம்பளம்  வேற .ஜிம்முக்கே  போகாமல்  தொள  தொள  என இருக்கும் பாடியை  வைத்துக்கொண்டு  இவருக்கு கமல், சரத்  குமார்  மாதிரி   அடிக்கடி  ஸ்லீவ்லெஸ்  தோற்றம்  வேற  சகிக்கவில்லை 


 நாயகி  ஆக  நம்ரதா   சுரேந்தர்நாத். அழகாக இருக்கிறார்.  சகிப்புத்தன்மை  மிக்கவர்  போல . சிகரெட், சரக்கு  என  எப்போப்பாரு  பேடு  ஸ்மெல்  வீசும்  ஆள்  பக்கத்தில்  நிற்கனுமே? சமாளித்திருக்கிறார்


மகளாக  பேபி  ஆராத்யா  அழகாக  வந்து  போகிறார்


இந்த  கேவலமான  கதையை  எழுதி  இயக்கி  இருப்பவர்  சுஹாஸ்  கிருஷ்ணா.

108  நிமிடங்கள்  ஓடும்படி  ட்ரிம்  பண்ணி  இருக்கிறார்  எடிட்டர் 


சபாஷ்  டைரக்டர்


1  கதை  கேவலமாக  இருந்தாலும்  லொக்கேஷன், ஒளிப்பதிவு  என  காட்சிகளை  குளுமையாக  படம்  ஆக்கும்  ஒளிப்பதிவாளரை  புக்  செய்தது 


2   படம்  முழுக்க  அழகாக வந்து  போகும்  நாயகி,  பேபி  இருவரையும் புக்  செய்தது 


  ரசித்த  வசனங்கள் 

1  நான்  கெட்டவன்  தான், ஆனா  அதை  நான்  ரசிக்கிறேன். எக்சைட்மெண்ட்  ஆக  உணர்கிறேன்


2  பண  பலம், அரசியல்  பலம்  உள்ளவங்களை  எதிர்ப்பது  மின்சாரத்தில்  நீச்சல்  அடிப்பது  போல, அபாயகரமானது  


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  மூன்று  கிரிமினல்சும்  நாயகன்  வீட்டில்  வந்து  அவர்களுக்கு  எதிரான  எவிடென்ஸ்  எங்கே  என  ரொம்ப  நேரமாகத்தேடுகிறார்கள் . அவர்கள்  தான்  ரவுடிகள் , செல்வாக்கு  மிக்கவர்கள்  ஆச்சே?  வீட்டையே  கொளுத்தி  இருக்கலாமே? 


2   நாயகன் - நாயகி  இருவரும்  பிரிந்தது  உண்மையா? அது  நாயகனின்  மனப்பிரமையா? என்ற  விளக்கம்  இல்லை 


3   நாயகனின்  குழந்தை  பாத்  டப்பில்  ஷாக்  அடித்து  இறக்கும்  காட்சி  நம்பகத்தன்மை  இல்லை 

அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் - யூ/ஏ



சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   இந்தக்கேவலமான  படத்தை  ட்ரெய்லர்  கூட  பார்த்து விட  வேண்டாம், எஸ் ஆகி  விடவும் . ரேட்டிங்  மைனஸ்  1 / 5 

0 comments: