Tuesday, December 19, 2023

பார்ட்னர் (2023) -தமிழ்- சினிமா விமர்சனம் (சயின்ஸ் ஃபிக்சன் , க்ரைம் காமெடி டிராமா ) @ அமேசான் பிரைம், ஆஹா தமிழ்

 


அண்டர்  ரேட்டட்  காமெடி  மூவி  ஆஃப்  2023  என  சொல்லலாம். பலரும்  இப்படத்தை  கழுவிக்கழுவி ஊற்றி  இருந்ததால்  தியேட்டர்களில்  ரிலீஸ் ஆன  டைமில்  அதாவது  ஆகஸ்ட் 25 . 2023ல்  பார்க்கவில்லை . இப்போது  அமேசான்  பிரைம்  ஓடிடி  யில்  பார்க்கும்போது  எனக்கு  நல்ல  காமெடிப்படமாகத்தான்  தோன்றியது . அறிமுக    இயக்குநர்  மனோஜ்  தாமோதரன்  இயக்கத்தில்  காமெடியன்கள்  பட்டாளத்துடன் நடித்துக்கொடுத்த  படம் . இரண்டு  மணி  நேரத்தில்  முடிந்து விடும்  என்பதால்  ஒரு  குயிக் வாட்ச்  ஆகவே  பார்த்து  விடலாம்


ஸ்பாய்லர்  அலெர்ட்


நாயகனுக்கு  ரூ 25  லட்சம்  கடன்  இருக்கிறது , கடன்  கொடுத்தவன்  ஒரு  மாசம்  டைம்  கொடுக்கிறான். கடனை  அடை அல்லது  உன்  தங்கையைக்கட்டிக்கிறேன்  என்கிறான். உடனே  நாயகன்  பட்டணத்தில்  இருக்கும்  தன்  நண்பனைப்பார்க்க  வருகிறான்


நண்பன்  ஒரு  டுபாக்கூர்  திருடன். ஐ டி  கம்பெனியில்  வேலை  பார்ப்பதாக  பீலா  விட்டு  அவன்  செய்வதெல்லாம்  திருட்டு  வேலை  தான் 


வில்லன்   நெ1  ஒரு  அரசியல்வாதி . அவன்  ஒரு  பெண்ணிடம்  ஏடாகூடமாக  இருப்பதை  வீடியோ  எடுத்து  வைத்துக்கொண்டு ஒருவன்  மிரட்டுகிறான். அவனைப்பிடித்து  அந்த  வீடியோ  க்ளிப்பைக்  கைப்பற்றி  அழிக்க  வேண்டும்,  செய்தால்  50  லட்சம்  ரூபாய்  பணம்  தருவதாக  சொல்கிறான்


வில்லன்  நெ 2 ஒரு சயிண்ட்டிஸ்ட்  வைத்துள்ள  ஆராய்ச்சி  சிப்பைக்கைப்பற்ற  முயற்சிக்கிறான்


நாயகன்  தன்  நண்பனுடன்  அந்த  சயிண்ட்டிஸ்ட்டின்  லேப்க்குப்போகும்போது  எதிர்பாராத  விதமாக  நாயகனின் நண்பன்  அந்த  லேப்பில்  ஒரு  பெண்ணாக  மாறி  விடுகிறான்

  நாயகனின்  நண்பனுக்கு  ஊரில்  ஒரு  காதலி  உண்டு. நாயகனுக்கும்  இங்கே  ஒரு காதலி  உண்டு ., அவர்கள்  இருவரும்  இவர்கள்  இருவரையும்  பார்த்து  தவறாகப்புரிந்து  கொள்கிறார்கள் . இந்த  ஆள்  மாறாட்டக்குழப்பத்தால்  ஏற்படும்  காமெடி  கலாட்டாக்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஆதி.  காமெடி  திரைக்கதையில்  இவருக்கு  ஆக்சன், நடிப்புக்கு  அதிக  வேலை  இல்லை , ஆனாலும் சமாளித்து  இருக்கிறார். நண்பன்  ஆக  யோகி பாபு , வழக்கமாக  சிரிப்பே  வராத  மொக்கைக்காமெடி  செய்யும்  இவர்  ஒரு  ஷாக்  சர்ப்பரைசாக  ஒன்லைனர்  காமெடி  பஞ்ச்களால்  சிரிப்பூட்டுகிறார்


நாயகி  ஆக  பல்லக் லால்  வாணி  அழகிய முகம்,நடிக்க  அதிக  வாய்ப்பில்லை , சும்மா  அழகாக  வந்து  போகிறார்.


  ஹன்சிகா  மோத்வானி  இடைவேளைக்குப்பின்  வருகிறார், யோகிபாபு  பெண்ணாக  மாறியது  இவர்  உருவத்தில்  தான்  என்பதால்  ஆம்பளை  போல  உடல்  மொழி  காட்ட  வேண்டிய  கட்டாயத்தில்   அவரை  பெண்ணாக  ரசிக்க  முடியவில்லை 


 வில்லன்  நெ 1  ஆக ரவி  மரியா  காமெடி  நடிப்பில்  களை  கட்டுகிறார். பெட்டில்  மனைவி , துணைவி  இருவருடனும்  படுத்து  தூங்கும் காட்சி  கலகல 


 வில்லன்  நெ  2  ஆக  ஜான்  விஜய். வில்லத்தனமும்  எடுபட  வில்லை , காமெடியும்  ஒர்க்  அவுட்  ஆகவில்லை 


 ரோபோ  சங்கர் , பழைய  ஜோக்  தங்கதுரை  ஆங்காங்கே  டபுள்  மீனிங் டயலாஸ்  வைத்து  ஒப்பேற்றுகிறார்கள் 

முனீஷ்  காந்த் , மகாநதி  சங்கர் , லொள்ளு  சபா மனோகர் ,லொள்ளு  சபா  சுவாமிநாதன்  ஆகியோர்  ஒரு  சில  காட்சிகளே  வந்தாலும்  சிரிக்க  வைக்கிறார்கள் .


 ஆர்  பாண்டிய  ராஜன்  சயிண்ட்டிஸ்ட்  ஆக  வருகிறார்., கெட்டப்  சகிக்கவில்லை 


சந்தோஷ்  தயாநிதி  இசையில்  இரண்டு பாடல்கள்  ஹிட் , மூன்று  பாடல்கள்  சுமார்  ரகம்,  பிஜிஎம்  ஓக்கே  லெவல் 


ஒளிப்பதிவு  ஷபீர்  க்ளோசப்  காட்சிகளில் ஒரு  நாயகியை  மட்டும்  அழகாகக்காட்டி  இன்னொரு  நாயகியை  சுமாராகக்காட்டி  இருக்கிறார். 


பிரதீப்  ராகவ்  எடிட்டிங்கில்  ஷார்ப்  ஆஅ  2  மணி  நேரத்தில்  ட்ரிம்  செய்து  இருக்கிறார்..க்ளைமாக்ஸ்  ஃபைட்  சீனில்  சுந்தர்  சி  பாதிப்பு  தெரிந்தாலும்  இயக்குநர்    களவாணி  சற்குணத்தின்  அசிஸ்டெண்ட்


திரைக்கதை , வசனம்  எழுதி  இயக்கி  இருப்பவர் மனோஜ்  தாமோதரன் 


சபாஷ்  டைரக்டர் (மனோஜ்  தாமோதரன் )


1  நாயகன்  வில்லனின்  வீட்டு  பீரோவைத்திறக்கனும்  அதுக்கு  வில்லனின்  கை  ரேகை  வேண்டும்,  வில்லனின்  மனைவியின்  இடுப்பில்  பவுடர்  போட்டு  செலோ  டேப்  ஒட்டி  அந்த  கை  ரெகையை  எடுக்கும்  ஐடியா  செம 


2   ரோபோ  சங்க்ர்  அண்ட்  டீம்  செய்யும்  காமெடிகள்  எல்லாம்  அலப்பறை  ரகம்


3  லொள்ளூ  சபா  சுவாமிநாதன்  காமெடியும் சின்ன  காட்சி  தான்  என்றாலும்  ரசிக்க  வைத்தது


செம  ஹிட்  சாங்க்ஸ்


1  அட  எதுக்கு  உன்னைப்பார்த்தேன்னு  நினைக்க  வைக்கறியே?

2  ஆளான  வத்திக்குச்சி  ஆனாலும்  பத்திக்கிச்சு 


  ரசித்த  வசனங்கள் 


1  எனக்கு  மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகிடுச்சுடா

 யாரு  பொண்ணு?

நம்ம  மேஸ்திரி பொண்ணுதான்

யாரு? அந்த  பஞ்சு  மெத்தையா?

டேய்


2   டேய் , என்னடா? ஐ டி  டிபார்ட்மெண்ட் ல  இத்தனை  பொண்ணுங்க ?


டாஸ்மாக்ல  கூடதான்  பொண்ணுங்க  இதே  அளவு இருப்பாங்க 


3  ஹாய் , ராஷிகா , சிகரெட்  பாக்கெட்  வெளில  தெரியுது  பார் , மறை


4  டி சி எஸ்  கம்ப்பெனி  ஐ டி  டிபார்ட்மெண்ட்னு  சொன்னே?


 அது  வந்து.. திருட்டு   கன்ஸ்ட்ரக்சன்  சர்வீஸ் =  டி சி எஸ்


5  திருட்டு  வேலை  செய்யற  நீ  கருத்து  எதுவும்  சொல்லக்கூடாது 


 அப்படிப்பார்த்தா  தமிழ்  நாட்டில்  யாருமே  கருத்து  சொல்ல  முடியாது 


6  மினிஸ்டர்  அக்னிக்குஞ்சு . பொம்பளைப்பொறுக்கியைப்பார்த்திருப்பீங்க, ஆனா  பொம்பளைனு  எழுதுன பேப்பரைக்கண்டாலே  பொறுக்கி  வாய்ல  போட்டுக்குவான்


7 அதெப்பிடிடா  உங்களுக்கெல்லாம்  ஹீரோயினைப்பார்த்த  ஃபர்ஸ்ட்  சீன்ல யே  லவ் வருது ?8  திருடப்போறவன்  அயர்ன்  பண்ணிட்டு  நீட்டாவா  போவான் ? 


9   அது  வெடிச்சுதுன்னா  ஸ்ருதிஹாசன் பரவிடும்


 அது  சிட்ரிக்  ஆசிட்


10   ஃபோன்  பண்ணினா  கட்  பண்றான் ? எனக்கு  என்னமோ  அவன்  வேணும்னே  தான்  கட்  பண்றான்னு  தோணுது 


 இல்லை , வேணாம்னு  தான்  கட்  பண்றான்


11   அவன்  இங்கே  தான்  வீட்டில்  எங்காவது  இருக்கனும், சர்ச்  பண்ணுங்க 


-----


 டேய்  என்னடா  பண்றே?


 கூகுள்  ல  சர்ச்  பண்றேன்


12  இவங்க  மேல  சந்தேகமா  இருக்கு , கீப்  ஏன்  ஐ  ஆன்  தெம்


 கீப்பா? அப்டின்னா?


அவங்க  மெல  ஒரு  கண்  வைங்கங்கறார்

 ஒரு  கண்  என்ன? ரெண்டு  கண்ணையும்  வைக்கறேன்


13   பாப்பா  யாரு ?


 கல்யாணோட  தங்கச்சி 


 என்னது ? தவக்களை  வாயனுக்கு  இப்படி  ஒரு  தரமான தங்கச்சியா?


14   அண்ணே, பாப்பா  பவளப்பாறை  மாதிரி  பள  பளனு இருக்குனு  சொன்னீங்க?


 ஆனா  ஆவ  ஆம்பளை  மாதிரி  தோல்  சொர  சொரனு  இருக்கு, குரல்  கரகரனு  இருக்கு. டவுட்டா  இருக்கே?


15    போதும்டா , நீ  என்னை  நல்லா  பண்ணிட்டே 


 நீ தான் அதுக்கு  வாய்ப்பே  தர்லியெ?


 என்னை  ஏமாத்திட்டேனு  சொல்ல  வந்தேன் 


16   எதா  இருந்தாலும்  வாயைத்திறக்காம  பேசுங்கடா , வாயைத்திறந்தா  சத்தம்  வரும். விழிச்சுக்குவாங்க  எல்லாரும் 


17  ஆளைப்பார்த்தா  ஆம்பளைங்களுக்கு  அளவு  ஜாக்கெட்  தைக்கற  மாதிரி  இருக்கான் , இவன்  சயிண்ட்டிஸ்ட்டா? 


18  ஆளைப்பார்த்தா  பாவமா  இருக்கு ?


 அதுவும்  இவரு  “: ஆண்  பாவம் “: 


19 சோழர்  காலத்து  சோட்டா  பீம்  மாதிரி  இருக்கான் 


20  இவனைப்பார்த்தா  குழந்தை  மாதிரி  இருக்கான் , உண்மையைச்சொல்லுனு  ஏன்  கொடுமைப்படுத்தனும் > சும்மா  கிச்சு  கிச்சு  மூட்டினாலே  எல்லாம் சொல்லிடுவான்  போல 


21  ஜானி  ஜானி  எஸ்  பாப்பா


சரக்கு  வேணுமா  நோ  பாப்பா 


22   ஏண்டா  டேய் , வழி  தான்  அங்கே  இருக்கில்ல? அது  ஏண்டா  சுவத்தை  உடைச்சுட்டு  வந்தே? க்ளைமாக்ஸ்  வந்தா  போதும்


23  என்னது ?  வான்  கோழிக்கு  வழுக்கை  விழுந்த  மாதிரி  இருக்கான் ?


24 இவனைப்பார்த்தா  கீழ்  திருப்பதில   மொட்டை  அடிச்சுட்டு  மேல்  திருப்பதில  லட்டு  வாங்கிறவன்  மாதிரி  இருக்கான் ?

லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


1  ரவிமரியா  ஒரு  வேலையை  முடிக்க  20 லட்சம்  தர்றேன்கறார். பின்  30  லட்சம்  பேரம்  பேசப்பட்டு  ஒத்து  வராம  பிராஜக்ட்  கேன்சல்  ஆகிடுது . யோகிபாபு  போய்  50 லட்சம்  கொடுத்தா  அந்த  வேலையை  முடிச்சுடறேன்கறார். உடனே  ஹாட்  கேசா  50  லட்சம்  ரூபா  தந்துடறார். பொதுவா  பாதிப்பணம்  அட்வான்ஸ்  , மீதிப்பணம்  வேலை  முடிஞ்ச  பின்  தானே  தருவாங்க ? 


2  மைக்ரோ  சிப்பைத்தேடி  லேப்  வந்த  நாயகன் , காமெடியன்  இருவரும்  லூஸ்க  மாதிரி  எங்கெங்கோ  தேடிட்டு  இருக்காங்களே? காமெடிக்கா? சகிக்கலை 


3  ரோபோ சங்கர்  அண்ட்  டீம்  ஜான்  விஜய்  சொன்ன  வேலையை  செய்ய  வந்தவர்கள், அதை  செய்ய  முடியவில்லை. அதற்குப்பின்  அவர்  அடியாட்கள்  போல  அவர்  கூடவே  சுத்திட்டு  இருப்பது  ஏன் ? 


4  ஜான்  விஜய்  50  லட்சம்  ரூபாய்  தந்தது  யோகி  பாபு  கிட்டே . ஆனா  பேக்கு  வில்லன்  நாயகன்  கிட்டே  போய்  அந்த  பணம்  என்ன  ஆச்சு?னு  கேட்டு  மிரட்டிட்டு  இருக்கார்? 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  வசனங்களில்  டபுள்  மீனிங்  உண்டு , காட்சிகளில்  யூசி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -  மொக்கைக்காமெடி  ரசிகர்கள்  அவசியம்  பார்க்க  வேண்டிய  கிரேசி  மோகன்  டைப் காமெடி  டிராமா . ரேட்டிங்  2.75 / 5


பங்குதாரர்
தியேட்டர் ரிலீஸ் போஸ்டர்
இயக்கம்மனோஜ் தாமோதரன்
எழுதியவர்மனோஜ் தாமோதரன்
உற்பத்திகோலி சூர்ய பிரகாஷ்
நடிக்கிறார்கள்
ஒளிப்பதிவுஷபீர் அகமது
திருத்தியவர்பிரதீப் இ.ராகவ்
இசைசந்தோஷ் தயாநிதி
தயாரிப்பு
நிறுவனம்
ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ்
வெளிவரும் தேதி
  • 25 ஆகஸ்ட் 2023
நாடுஇந்தியா
மொழிதமிழ்

0 comments: